பின்பற்றுபவர்கள்

3 நவம்பர், 2008

பாவ புண்ணிய கணக்கு புண்ணாக்கு !

ஆன்மிகம் என்ற பெயரில் உளறிக் கொட்டுபவர்கள் பலர், அதில் நான் முதன்மையாக நினைப்பது தினமலரில் 'ஞானனந்தமாக' எழுதும் வைரம் இராஜகோபால், இவர் மனதில் தோன்றுவது எல்லாவற்றையும் ஆன்மிகம் என்றப் பெயரில் எழுதி, ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை உடையவர்களை குழப்பி வருவதே வாடிக்கை. இதற்கு தக்கப் 'பரிசை' இறைவன் கொடுப்பான் என்றே நம்புகிறேன். அவர் உதிர்த்த தத்துவார்த்தங்களில் இருந்து சிலவரிகள்,

"தெய்தெய்வ பக்தி, மகான்களிடம் பக்தி, பெரியோரிடமும் மரியாதை... இப்படி உள்ளவர்கள் பலர்; இதெல்லாம் இல்லாதவர்கள் சிலர். தெய்வ பக்தியும், மகான்களிடம் பக்தியும் உள்ளவர்களை ஆத்திகர் என்றும், அது இல்லாதவர்களை நாத்திகர் என்றும் சொல்கின்றனர். - வைரம் இராஜகோபால்"

ஆத்திகர் / நாத்திகருக்கு இவர் கொடுக்கும் விளக்கம் புல்லரிக்கை வைக்கிறது, மெய்ஞான சித்தாந்ததில் பக்தி என்பதே கிழான நிலை என்றுதான் ஆன்மிகவாதிகளே சொல்கிறார்கள், வெறும் தெய்வபக்தி மட்டுமே ஆன்மிகமா ? எஜமானிடம் வேலைக்காரன் காட்டும் விசுவாசத்திற்கு ஒப்பான ஒன்றை ஆன்மீகம், அவர்கள் தான் ஆத்திகர் என்றெல்லாம் சொல்லும் இவர், பெரியோர்களிடம் மரியாதை இல்லாதவர்களை நாத்திகர் என்று மறைமுகமாகச் சொல்கிறார்கள், எந்த நாத்திகன் பெரியோர்களை மதிக்காமல் இருக்கிறான் ? அல்லது எந்த நாத்திகன் சகமனிதனை மனிதனாக மதிக்காமல் இருக்கிறான், இவர் கொடுக்கும் விளக்கப்படி நடக்காதவர்கள் பெரும்பாலும் ஆத்திகராகவே இருக்கிறார்கள், 'மதத்தை வைத்து பிறரைத் தூற்றுவதும், பிறப்பை வைத்து தூற்றுவதும்', 'பாவம் செய்ததாலேயே உனக்கு இத்தகைய கொடிய நோய் வந்தது என்று பழிப்பதையும்,எந்த நாத்திகனும் செய்வது கிடையாது. ஆன்மிகம், ஆத்திகம் என்பது சக மனிதனை ஒரு ஆன்மாவாகக் கருதி, ஆன்மாக்களுக்குள் உயர்வு தாழ்வோ, பால் பேதாமோ இல்லை என்று உணர்ந்தவனே ஆன்மிகவாதி, ஆத்திகன். தன்னால் உணரப்படாத இறையை மறுத்துவிட்டால் தனக்கு தண்டனைக் கிடைத்துவிடும் என்ற பயத்தில் இறைவன் உண்டு என்பவர்களெல்லாம் ஆத்திகர்களா ? மகான் புத்தர் வாழ்ந்த காலத்தில் அவருக்கு மிகுந்த தொல்லை கொடுத்தவர்கள், நிந்தித்தவர்கள் அனைவரும் வேத வழி வழிபாடு செய்த ஆத்திகர்களே.

"முக்தி பெற வேண்டுமானால் பாவம், புண்ணியம் இரண்டுமில்லாமலும் அல்லது சமமாகவும் இருக்க வேண்டும். பாவமோ, புண்ணியமோ அதிகமாக இருந்தால், அது குறைய வேண்டும். முக்திஅடையும் பக்குவத்தில் உள்ள இவர், இனிமேல் எந்த புண்ணிய காரியமும் செய்து, புண்ணியத்தையோ அல்லது தவறான காரியம் செய்து, பாவத்தையோ கூட்டவோ, குறைக்கவோ மாட்டார். அப்படியானால் இதற்கு என்ன வழி? பக்தி உள்ளம் கொண்டவர்கள் மகான்களை தரிசிக்க போகின்றனர். அவரை தரிசித்தால் புண்ணியம் என்பது நம்பிக்கை. அவரை தரிசனம் செய்து, ஆசி பெற்று வந்தால், இவர்களுக்கு ஒரு காரியானுகூலம் ஏற்படுகிறது. - வைரம் இராஜகோபால்"

முக்தி என்பதே புண்ணாக்கு கான்செப்ட், எவரோ ஒரு சிலர் அவருடைய தனிப்பட்ட வழியில் அடைந்ததாகச் சொல்லப்படுவதை, அப்படி ஒன்று இருக்கிறதா ? என்று யாதொரு முயற்சியுமே எடுக்காமல், புகழ்பெற்ற நடிகனின் ஹிட் படங்களை புகழும் ஒரு நடிகனின் ரசிகன் போன்று அவை சிலாகிக்கப் படுகின்றன. முக்தி என்னும் புண்ணாக்கு தத்துவத்தை உணராதவர்களை கீழானதாக சித்தரிக்கும் பித்தர்களில் (முக்தி, பரம் ப்ராமம், பிரம்மம் பற்றி அறிந்தவன் பிராமணன், மற்றவர்கள் பிரமணன் அல்லாதவர்கள் என்ற கான்சப்டும் அப்படித்தான் வந்தது) எத்தனை பேர் முக்தி அடைந்தார்கள் என்று பார்த்தால் ஒருவருமே இல்லை. பாவ புண்ணியம் இல்லா நிலை இருந்தால் தான் முக்தி கிடைக்குமா ? அப்படிப்பட்ட முக்தி முயற்சியில் இருக்கும் ஒருவருக்கு முன் தாகத்தால் மரணபயத்தால் சிக்குண்டவன் இருந்தால் கூட என்னவென்று எட்டிபார்க்கவே மாட்டார்கள், காரணம் அவனுக்கு தண்ணீர் கொடுத்துவிட்டால் புண்ணியம் பெற்றும் பிறப்பென்னும் சக்கரத்தில் சிக்கிக்கொள்வோம் என்ற பயம்(!) சிந்தையில் இருக்கும், இப்படி செய்வதால் புண்ணியம் பெறாவிட்டாலும் கண்டிப்பாக பாவம் பெற்று பிறவி அடைந்தே தீறுவர் என்றே நினைக்கிறேன்.

எனக்கு இன்னொன்றும் புரியவில்லை, பிறப்பறுத்தல் உயர்வு என்று நம்பிக்கொண்டிருப்பவர்கள் அனைவருமே பாவிகள் என்றே நினைக்கிறேன். மானிடராய் பிறத்தல் அரிது என்ற கூற்றையெல்லாம் இவர்கள் கேலிக்கூத்து ஆக்கிவிடுகிறார்கள். ஒன்று தெரியுமா ? பிறப்பற்ற நிலையில் எந்த கடவுளையும் உணரவே முடியாது, பிறவியினால் தான் இறைவன் இருப்பையே அறிந்து கொள்ளும் 'அறிதல்' என்ற அறிவு நிலை கிடைக்கிறது. குழந்தையாய் பிறந்தவர்களுக்குத் தானே தாய்பாசம் என்றால் என்ன வென்றே தெரியும். பிறவியில் இவர்கள் என்னதான் கசந்தார்கள் என்றே தெரியவில்லை. உறவுகளை, நண்பர்களை பிறவி அறுப்பவர்கள் நேசிக்கிறார்கள் என்பதெல்லாம் வெறும் நடிப்பா ? உறவுகளை நண்பர்களை பெற்றதெல்லாம் பிறவிப் பயன் இல்லையா ? இது போன்று 'பிறப்பதை' இழிவாகக் கருதும் இவர்களை 'இழி பிறப்புகள்' என்று சொல்லலாமா ? கூடாதா ?

சிசுபாலர்கள் என்ற பார்பன சிறார்களிடம் சாபம் பெற்றவுடன், நல்லவனாக பத்து பிறவிகள், நாத்திகனாக மூன்று பிறவிகள் எதைத் தேர்ந்தெடுக்கிறாய் என்று கேட்ட கிருஷ்ணனிடம், நல்லவனாய் பத்து பிறவிகள் பெற்று உன்னை அடைவதை விட நாத்திகனாய் உன்னை நிந்தித்து பாவம் செய்து மூன்று பிறவியிலேயே உன்னை அடைவதைத் தான் நான் புண்ணியமாகக் கருதுகிறேன் என்று சொன்ன ஹிரன்ய ஹசிபு தேவர்களைவிட உயர்ந்தவன் என்றே கிருஷ்ணனாலும் போற்றப்பட்டான், அப்படிபட்ட நாத்திக நிலை வைரம் இராஜகோபால் போன்றவர்களுக்கு எகத்தாளமாக தெரிகிறது, இவர்கள் ஆன்மிகவாதிகள், ஆத்திகர்கள் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்.

தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுத்தால் கூட புண்ணியம் பெற்று பிறவி அடைந்துவிடுவோ என்று நினைத்து மனித வாழ்கையையும், பிறவியையும் சந்திக்க திராணியற்ற ஆத்திகவாதிகளைவிட, தண்ணீர் கொடுத்து புண்ணியம் பெறும் நாத்திகர்களும், அவர்கள் பெரும் பிறவிகளும் மேலானது. பிறவி எடுத்தால் தான் மனிதனோடு மனிதனாகவும், சேவை ஆற்றமுடியும் என்ற தெய்வ அவதாரக் கதைகளெல்லாம் இவர்களின் 'முக்தி' என்னும் பேராசையால் பழிக்கப்படுவதாகவே நினைக்கிறேன்.

இவருடைய உச்சக்கட்ட உளரலாக "நாத்திகன் மகான்களை நிந்திக்க நிந்திக்க அவர்களுடைய பாவம் நாத்திகர்களுக்கு சேர்ந்து மகான்களின் பாவக்கணக்கு குறைந்து முக்தி அடைகிறார்களாம்" என்ன ஒரு லாஜிக். ஒருவரின் நோயைக் குணப்படுத்துபவனுக்கு புண்ணியமா பாவமா ? மாகன்களின் பாவத்தை தான் வாங்கிக் கொள்பவர்கள் பாவிகளா ? புண்ணியம் பெற்றவர்களா ?

இங்கே ஒரு கதையையும் சொல்கிறேன். கிருஷ்ணனின் தீராத் தலைவலிக்கு மருந்தாக கிருஷ்ணனின் தீவிர பக்தரின் பாதங்களைக் கழுவிய நீர் தேவைப்பட்டது, அதை நாரதர் உட்பட பலரிடம் கிருஷ்ணன் கேட்ட போது, எல்லோரும் அந்த பாவத்தை தான் செய்ய விரும்பவில்லை என்று சொல்லி நழுவி விட்டனர். ஒரே ஒரு பக்தன், பகவான் தலைவலி தீர, தான் பாவம் பெற்றாலும் பரவாயில்லை என்று பாதத்தை கழுவிய நீரைக் கொடுத்தான், அவனே சிறந்த பக்தன் என்று கிருஷ்ணன் போற்றினான். இப்பொழுது சொல்லுங்கள், பாவம் என்பது என்ன புண்ணியம் என்பது என்ன ?

பிறர் நன்மையின் பொருட்டு செய்யப்படும் தன்னை தாக்கும் பாவங்கள் அனைத்தும் புண்ணியங்களே, தன் நன்மையைக் கருதி செய்யப்படும் புண்ணியங்கள் யாவும் பாவங்களே.

தொடர்புடைய மற்றோரு இடுகை:
விதிப்பயன் என்ற புண்ணாக்கு கான்செப்ட் !

15 கருத்துகள்:

தங்க முகுந்தன் சொன்னது…

அருமையான பதிவு!
எமது சமயம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமே நாம் தான்!
தமது கருத்துக்களைத் தாராளமாக எழுதுவதன் மூலமும் தெரிவிப்பதன் மூலமும் எமது சநாதன நெறி ஒன்றும் அழிந்து விடாது. ஆனால் ஏகப்பட்ட குழப்பங்களுக்கு காரணமே இப்படிப்பட்ட தவறான கருத்துக்கள் தான்.

சாதாரண மக்கள் இப்படிப்பட்ட குழப்பங்களாலேயே வேறு சமயத்திற்கு மாறுகிறார்கள். இதைத் தடுக்க நாம் ஏதேனும் செய்ய வேண்டும் தங்கள் கருத்தை நான் முழுமையாக வரவேற்கிறேன்.

Sanjai Gandhi சொன்னது…

//ஒரு பதிவுக்கு 4 பின்னூட்டம் வந்து வந்து போட வைக்கும் டெக்னிக் கற்றுக் கொண்டீர்களா ? இல்லையா ? (நான்காவது கிடைக்கப் போகுது)

:) :) //

அட அப்டியா மேட்டர்.. நல்லா இருங்க.. :))

...இப்போ என்ன செய்விங்க.. இப்போ என்ன செய்விங்க.. :))

Sanjai Gandhi சொன்னது…

நாட்ல இந்த ஆன்மிகவாதிகள் தொல்லை தாங்கலடா ”நாராயணா” :)

முக்தி மட்டும் இல்லை கோவியாரே.. ஆன்மிகவாதிகள் விடும் பெரும்பாலான புருடாக்கள் புண்ணாக்குகள் தான்.. ஆடி மாசம் நல்ல காரியம் எதும் பண்ணாதிங்கன்னு சொன்னா தலையாட்டி பொம்மைகளாட்டம் கேப்பாங்க.. அதே மாசம் ”புத்திசாலிகள்” வீட்டு விஷேஷத்துக்கு போய் மொய் எழுதுவாங்க. அட எல்லோருக்கும் நேரம் காலம் ஒன்னு தானங்க.. :(

சரி விடுங்க.. இந்த மேட்டரை பேசிப் பேசி செமத்தியா போர் அடிக்கிது.. நீங்களே அடிச்சி ஆடுங்க.. நான் வரலை.. நான் வரலை.. :(

கோவி.கண்ணன் சொன்னது…

//பொடியன்-|-SanJai said...
//ஒரு பதிவுக்கு 4 பின்னூட்டம் வந்து வந்து போட வைக்கும் டெக்னிக் கற்றுக் கொண்டீர்களா ? இல்லையா ? (நான்காவது கிடைக்கப் போகுது)

:) :) //

அட அப்டியா மேட்டர்.. நல்லா இருங்க.. :))

...இப்போ என்ன செய்விங்க.. இப்போ என்ன செய்விங்க.. :))
//

இதற்கும் சேர்த்து முந்தைய பதிவில் மறுமொழி போட்டுவிட்டேன் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//பொடியன்-|-SanJai said...
நாட்ல இந்த ஆன்மிகவாதிகள் தொல்லை தாங்கலடா ”நாராயணா” :)
//

நம்புங்கள் நாரயணனா ? :)

//முக்தி மட்டும் இல்லை கோவியாரே.. ஆன்மிகவாதிகள் விடும் பெரும்பாலான புருடாக்கள் புண்ணாக்குகள் தான்.. ஆடி மாசம் நல்ல காரியம் எதும் பண்ணாதிங்கன்னு சொன்னா தலையாட்டி பொம்மைகளாட்டம் கேப்பாங்க.. அதே மாசம் ”புத்திசாலிகள்” வீட்டு விஷேஷத்துக்கு போய் மொய் எழுதுவாங்க. அட எல்லோருக்கும் நேரம் காலம் ஒன்னு தானங்க.. :(//

ஆடிமாசம் கான்சப்டை ஒரு உறை உபகரணத்தை வைத்து ஒரு படத்தில் பாக்கியராஜ் உடைத்திருப்பார். :)

//சரி விடுங்க.. இந்த மேட்டரை பேசிப் பேசி செமத்தியா போர் அடிக்கிது.. நீங்களே அடிச்சி ஆடுங்க.. நான் வரலை.. நான் வரலை.. :(
//

பிக்பாக்கெட் திருடர்களை பிடிப்பது போலிசாருக்கு போரடித்துவிட்டால் என்ன ஆகும் ? :)

கோவி.கண்ணன் சொன்னது…

//தங்க முகுந்தன் said...
அருமையான பதிவு!
எமது சமயம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமே நாம் தான்!
தமது கருத்துக்களைத் தாராளமாக எழுதுவதன் மூலமும் தெரிவிப்பதன் மூலமும் எமது சநாதன நெறி ஒன்றும் அழிந்து விடாது. ஆனால் ஏகப்பட்ட குழப்பங்களுக்கு காரணமே இப்படிப்பட்ட தவறான கருத்துக்கள் தான்.

சாதாரண மக்கள் இப்படிப்பட்ட குழப்பங்களாலேயே வேறு சமயத்திற்கு மாறுகிறார்கள். இதைத் தடுக்க நாம் ஏதேனும் செய்ய வேண்டும் தங்கள் கருத்தை நான் முழுமையாக வரவேற்கிறேன்.
//

பாராட்டுக்கு நன்றி முகுந்தன் ஐயா.

Sanjai Gandhi சொன்னது…

//பிக்பாக்கெட் திருடர்களை பிடிப்பது போலிசாருக்கு போரடித்துவிட்டால் என்ன ஆகும் ? :) //

சமூகத்தின் பலத்த கரகோஷத்துடன் பிக்பாக்கெட் அடிப்பவர்கள் அதிகரித்துக் கொண்டே போனால் சிறுபான்மையாய் காட்சியளிக்கும் போலிசால் என்ன செய்ய முடியும்? :(

தவிரவும் இந்த பிக்பாக்கெட் பறிகொடுப்பவனின் சம்மததுடன் அன்பளிபாக தானே நடக்கிறது.. அன்பளிப்புகளுக்கு வரிவிலக்கு மட்டும் இல்லாமல்.. நடவடிக்கையும் எடுக்க முடியாது கோவியாரே.. :))

எல்லா மதத்துலையுமே இந்த பிக்பாக்கெட் பேர்வழிகள் நிறைந்து கிடக்கிறார்கள்.

பிக்காஸ் திஸ் இஸ் எ டெமாக்ரடிக் கண்ட்ரி யு நோ? :))

நவநீதன் சொன்னது…

முக்தி, பாவம், புண்ணியம், சொர்கம், நரகம் எல்லாமே புண்ணாக்குத்தான்....

நானும் நீங்களும் மட்டும் தான் நிஜம்.... மற்றவைகளுக்கு உதவி செய்தால் புண்ணியமும் இல்ல பாவமும் இல்ல...

உங்கள் கேள்விகளுக்கெல்லாம் பதில் தேட ஆரம்பிச்சா... நான் நாத்திகன் ஆகிடுவேன் போல இருக்கே... (சும்மா காமெடி...)

கலக்கிடீங்க... கோவிஜி....

பி.கு.
ஒரு எச்சரிக்கை....
ரொம்ப ஓவரா புண்ணாக்க பத்தி எழுதாதீங்க அண்ணே... அப்புறம் புண்ணாக்கு பதிவர்-ன்னு சொன்னாலும் சொல்லீருவாய்ங்க.....
இதுவும் சும்மா காமெடி தாண்ணே....

கோவி.கண்ணன் சொன்னது…

//பொடியன்-|-SanJai said...

சமூகத்தின் பலத்த கரகோஷத்துடன் பிக்பாக்கெட் அடிப்பவர்கள் அதிகரித்துக் கொண்டே போனால் சிறுபான்மையாய் காட்சியளிக்கும் போலிசால் என்ன செய்ய முடியும்? :(
//
:) ஒண்ணும் செய்யமுடியாது என்று நல்ல போலிசார் நினைப்பது இல்லை. முடிந்த அளவுக்கு அள்ளிவருவார்கள்..

//தவிரவும் இந்த பிக்பாக்கெட் பறிகொடுப்பவனின் சம்மததுடன் அன்பளிபாக தானே நடக்கிறது..
அன்பளிப்புகளுக்கு வரிவிலக்கு மட்டும் இல்லாமல்.. நடவடிக்கையும் எடுக்க முடியாது கோவியாரே.. :))
//

ஆமாம், ஆனால் பிக்பாக்கெட் திருடன் என்று தெரியாமல் நடக்கிறது என்று சொல்லி இருக்க வேண்டும். பிரேமானந்தா ரிலிஸ் ஆனால் செல்வார்களா ? ஒரு சிலர் மட்டுமே செல்வார்கள். முன்பு சென்றவர்கள் எல்லோரும் அல்ல

//எல்லா மதத்துலையுமே இந்த பிக்பாக்கெட் பேர்வழிகள் நிறைந்து கிடக்கிறார்கள்.///

ரிப்பீட்டேய்...கண்ணாபின்னாவென்று கண்டபடி வழிமொழிகிறேன். யோக்யவான்கள் கல்லெரியட்டம் என்று அவர்களுக்குள்ளும் சொல்லிக் கொள்வார்கள்.

//பிக்காஸ் திஸ் இஸ் எ டெமாக்ரடிக் கண்ட்ரி யு நோ? :))//

பிகாஸ் தீஸ் இஸ் ரிலிஜன் பேஸ்ட் வேர்ல்ட் யு நோ !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//நவநீதன் said...
முக்தி, பாவம், புண்ணியம், சொர்கம், நரகம் எல்லாமே புண்ணாக்குத்தான்.... //

நவநீதன்,
அது ! நன்றி !

//நானும் நீங்களும் மட்டும் தான் நிஜம்.... மற்றவைகளுக்கு உதவி செய்தால் புண்ணியமும் இல்ல பாவமும் இல்ல...
//
கரெக்ட் ஒரு சின்ன திருத்தம், பிறருக்கு உதவி செய்தல் பிறர் உயிர்களிடமும் அன்பு செலுத்துதல் என்பது கருணை, பாவ புண்ணையத்தை அங்கு ஒட்டவைத்தால் கருணை என்னும் நல்லுணர்வின் செயல் கொச்சைப்பட்டுவிடும், சரியாகச் சொல்லி இருக்கிங்க

//உங்கள் கேள்விகளுக்கெல்லாம் பதில் தேட ஆரம்பிச்சா... நான் நாத்திகன் ஆகிடுவேன் போல இருக்கே... (சும்மா காமெடி...)//

நானே நாத்திகன் இல்லை, அப்போ ஆத்திகனா ? அதுவும் இல்லை. :)
தெளிவாக குழப்புவது எப்படி ? :))))

கலக்கிடீங்க... கோவிஜி....

//பி.கு.
ஒரு எச்சரிக்கை....
ரொம்ப ஓவரா புண்ணாக்க பத்தி எழுதாதீங்க அண்ணே... அப்புறம் புண்ணாக்கு பதிவர்-ன்னு சொன்னாலும் சொல்லீருவாய்ங்க.....
//

நான் தவறாக எதையும், எந்த மோசமான நம்பிக்கையையும் விதைக்கவில்லை என்றே நினைக்கிறேன். மீறியும் புண்ணாக்கு பட்டம் கொடுத்தால், அதை ஏற்றுக் கொள்வேன் :)

நையாண்டி நைனா சொன்னது…

பிறப்பை அறுக்கணும், பிறப்பை அறுக்கணும் என்று சொல்லியே.. இப்போ பிறந்திருக்கிற பல பேரை அறுத்து கொல்கிறார்களே... இது தான் பிறப்பை அறுக்கிறதா...????

வாழ்க ஆத்திகம்.....

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
பிறப்பை அறுக்கணும், பிறப்பை அறுக்கணும் என்று சொல்லியே.. இப்போ பிறந்திருக்கிற பல பேரை அறுத்து கொல்கிறார்களே... இது தான் பிறப்பை அறுக்கிறதா...????

வாழ்க ஆத்திகம்.....
//

பிறப்பது பாவம், அந்த தண்டனையை ஒரு ஆன்மாவுக்குக் கொடுக்கக் கூடாது என்று தானோ குஜராத்தில் ஒரு இஸ்லாம் பெண்ணின் கருவையும் கீறி வெளியே எறிந்தார்கள் போலும் ! :(

Mahesh சொன்னது…

நல்ல பதிவு... வைரம் ராஜகோபாலின் கருத்துக்கள் ரொம்பவே சிறுபிள்ளைத்த்னமாகத்தான் இருக்கு.. ஏற்கெனவே ஆத்திக, நாத்திகத்துக்கு 1000 விதமான விளக்கங்கள் புளி, சபீனா பௌடர் எல்லாம் போட்டு விளக்கு விளக்குன்னு விளக்கியிருக்காங்க. இவுரு வேற தன் பங்குக்கு....

அது போக... என்னுடைய தாழ்மையான எண்ணத்தில்... நான் படித்த வரையில், படித்து புரிந்து கொண்ட வரையில்... பாவ புண்ணிய க்ரெடிட், டெபிட் எல்லாம் ஜல்லி.... கீதையில் சொல்லியிருக்கிற படி "கர்ம யோகம்" சிறந்த்தாக படுகிறது. பிறப்பை அறுக்கவும் வேண்டாம் வெட்டவும் வேண்டாம். இமய மலை மேல ஏறி ஒக்காந்து சமூகத்தயும், அதிலுள்ள அவலங்களையும் கண்டுக்காம தப்பிச்சுப் போய் தவம் பண்ணினாத்தான் முக்தின்னா... யாருக்கு வேணும் அந்த முக்தி?

என்னைப் பொறுத்த வரை தனி மனித முக்திங்கறது சாத்தியமான்னே தெரியல... சமுதாயத்துக்கும், ஒட்டு மொத்த உயிரினங்களுக்கும் சேந்து ஒரு சமநிலை இருந்தா அது ஒருவேளை முக்தியா இருக்கலாம்..

இது என்னோட தனிப்பட்ட கருத்துங்... இத மறுக்க எல்லாருக்கும் உரிமை இருக்குங்... :)))

வால்பையன் சொன்னது…

இப்படியும் பேசிக்கிறாங்க
கழகத்தை கேள்வி கேட்டால் ஆத்தீகன்
ஆதரித்தால் நாத்தீகன்/பகுத்தறிவுவாதி

கிருஷ்ணா சொன்னது…

//ஆன்மிகம், ஆத்திகம் என்பது சக மனிதனை ஒரு ஆன்மாவாகக் கருதி, ஆன்மாக்களுக்குள் உயர்வு தாழ்வோ, பால் பேதாமோ இல்லை என்று உணர்ந்தவனே ஆன்மிகவாதி, ஆத்திகன். தன்னால் உணரப்படாத இறையை மறுத்துவிட்டால் தனக்கு தண்டனைக் கிடைத்துவிடும் என்ற பயத்தில் இறைவன் உண்டு என்பவர்களெல்லாம் ஆத்திகர்களா ?

முக்தி என்பதே புண்ணாக்கு கான்செப்ட், எவரோ ஒரு சிலர் அவருடைய தனிப்பட்ட வழியில் அடைந்ததாகச் சொல்லப்படுவதை, அப்படி ஒன்று இருக்கிறதா ?

தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுத்தால் கூட புண்ணியம் பெற்று பிறவி அடைந்துவிடுவோ என்று நினைத்து மனித வாழ்கையையும், பிறவியையும் சந்திக்க திராணியற்ற ஆத்திகவாதிகளைவிட, தண்ணீர் கொடுத்து புண்ணியம் பெறும் நாத்திகர்களும், அவர்கள் பெரும் பிறவிகளும் மேலானது
//


அருமை..

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்