பின்பற்றுபவர்கள்

16 பிப்ரவரி, 2008

நடிகை ஸ்ரீதேவியின் கணவர்(கள்) !

தலைப்பைப் பார்த்து ஒரு பெண்ணை தவறாக சித்தரிக்கிறேன் என்று கருதவேண்டம். இது உளவியல் பற்றியது. எனது வயதை ஒத்தவர்களுக்கு ஒரு காலத்தில் ஸ்ரீதேவி என்றால் செம கிரேஸ். பதினைந்து ஆண்டுக்கு முன்பு எனது நண்பர் ஒருவர் சொன்னார், 'என்னோட சித்தப்பா பையன், கட்டுனா ஸ்ரீதேவியைத்தான் கட்டுவேன் என்று சொல்லிக் கொண்டிருந்தான், இப்ப அவனுக்கு கல்யாணம் ஆகி 10 வயசுல பொண்ணு இருக்கு, ஆனால் இன்னும் ஸ்ரீதேவிக்கு கல்யாணம் ஆகல" என்று சொல்லிச் சிரித்தார். அது போல் ஸ்ரீதேவிக்காக ஏங்கியவர்கள் பலர் காத்திருந்து பார்த்துவிட்டு திருமணம் செய்து கொண்டார்கள்.

ஸ்ரீதேவிக்கும் எனக்கும் ரகசிய திருமணம் நடந்தது, நாங்கள் இருவரும் மயிலாப்பூரில் இந்த முகவரியில் ஓர் ஆண்டாக குடித்தனம் நடத்தினோம். ஸ்ரீதேவியின் மனதை கலைத்து அனில் கபூரின் அண்ணன் போனிகபூர் திருமணம் செய்து கொண்டார், என்னையும் ஸ்ரீதேவியையும் சேர்த்து வையுங்கள் என்று ஒருவர் வழக்கு தொடர்த்தாராம், வழக்கில் உண்மையில்லை, வேண்டுமென்றே பரபரப்புக்காக தொடுக்கப்பட்டது என்று கூறி அவருக்கு அபராதம் போட்டு எச்சரிக்கை செய்தனராம் நீதிபதிகள். மேலும் அதே நபர் தெலுங்கு நடிகை ஜெயப்ரதாவும் எனது மனைவியாக வாழ்ந்தவர் அவரை என்னுடன் சேர்த்து வையுங்கள் என்று ஏற்கனவே ஒரு வழக்கு தொடர்ந்து அதே போன்று கண்டனம் செய்யப்பட்டவர்.

இன்னும் ஒருவர் பிரபலங்கள் போட்டியிடும் தொகுதியில் தனக்கு வெற்றி வாய்ப்பு பலமாக இருப்பதாகக் கூறிக் கொண்டு அங்கு வேட்பாளராக களம் இறங்குபவர் வாஜ்பாய், சோனியா காந்தி ஆகியோரை எதிர்த்தும் பல்வேறு மாநில முதல்வர்களை எதிர்த்தும் நின்றாராம். விருத்தாச்சலத்தில் மூன்று விஜயகாந்த் போட்டியிட்டதாகக் கூட செய்திகள் வந்தது.

ஆங்கிலத்தில் 'நொட்டோரியஸ் பெலொ' என்ற சொல் உண்டு அதன் பொருள் இழிவின் மூலம் பலரால் அறியப்பட்டவர்கள், அவர்களை பலருக்கும் தெரிந்தாலும் அவர்களைப் பற்றி பெருமைபட ஒன்றும் இருக்காது. பரபரப்புக்காக நோக்கத்துடன் இயங்குபவர்களுக்கு இப்படித்தான் பெயர். 'இழிவால் பிரபலமானவர்கள்', ஒருவர் விபச்சாரம் செய்ததற்காக கைது செய்யப்பட்டு அவரின் புகைப்படம் பலர் அறிய வெளியில் வந்து அதற்கும் அவர் 'தன்னை பலர் அறிந்து கொண்டார்கள் என்று மகிழ்ந்தால் அது இழிவால் அவருக்கு கிடைக்கும் புகழ்(?).

தன்னைப் பற்றி பலர் பேசவேண்டும் என்பதற்காக நன்கு அறியப்பட்டவர்கள் மீது அவதூறு செய்து அதன் மூலம் புகழ்பெறலாம் அல்லது நம்மை திரும்பி பார்க்க வைக்கலாம் என்று நினைப்பவர்கள் ஒருவிதத்தில் மனநோயாளிகள். இவர்கள் எவரும் திருந்தியதே இல்லை. மாறாக மனநோய் முற்றிக் கொண்டே இருக்குமாம். இவர்களால் அவதூறு செய்யப்பட்டவர்கள் இவர்களை சட்டை செய்யவதில்லை. அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் அடுத்த்து அசினுக்கும் எனக்கும் திருமணம் நடந்தது என்று புது கதைவசனத்துக்கு மாறிவிடுவார்களாம்.

பின்குறிப்பு : இதுக்கும் ஜெமோவுக்கு தொடர்பு இருக்கிறாதா என்று கேட்காதிங்க.

20 கருத்துகள்:

Radha Sriram சொன்னது…

//ஸ்ரீதேவியின் மனதை கலைத்து அனில் கபூரின் அண்ணன் ரிஷிகபூர் திருமணம் செய்து கொண்டார்,//

Boney Kapoor/!

கோவி.கண்ணன் சொன்னது…

//Radha Sriram said... ஸ்ரீதேவியின் மனதை கலைத்து அனில் கபூரின் அண்ணன் ரிஷிகபூர் திருமணம் செய்து கொண்டார்,//

Boney Kapoor/!//

Radha Sriram,

சாரி, ஸ்ரீதேவி மனதில் நிற்கும் அளவுக்கு அவருடைய பயோடேட்டா நினைவு இல்லை, இடுகையில் திருத்திவிட்டேன். சுட்டியதற்கு மிக்க நன்றி !

:)

வவ்வால் சொன்னது…

கோவி,

ஸ்ரீதேவி பத்தி இப்போ என்னாத்துக்கு டைமிங்க் சென்ஸ் இல்லாம பதிவுனு வந்தா, இது கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைப்போல பாயுதே!

ஒன்றும் தெரியாதது போல அப்படியா என்ன சமாச்சாரம் என்று கேட்க மாட்டேன்! ஆனால் இதனை எல்லாம் ரெண்டுப்பக்கமும் பேசாமல் இருப்பதன் மூலமே தவிர்க்க முடியும் என்று நினைக்கிறேன்.

எல்லாருமே கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை தானே, அவருக்குள் தூங்கிட்டு இருக்க மிருகம் எழுந்து விட்டதோ என்னமோ? எனவே மீண்டும் மிருகம் தூங்க வைத்து மனிதம் வளர்ப்போம்!

யெப்பா நல்லவங்களா , ஏதா இருந்தாலும் பேச்சு பேச்சோடத்தான் இருக்கணும் , அனானி, அதர் ஆப்சனில் வந்து திட்டப்படாது!

இந்த கோட்ட தாண்டி நானும் வர மாட்டேன்,, நீயும் வரப்படாது சொல்லிட்டேன் :-))

Nilofer Anbarasu சொன்னது…

//'என்னோட சித்தப்பா பையன், கட்டுனா ஸ்ரீதேவியைத்தான் கட்டுவேன் என்று சொல்லிக் கொண்டிருந்தான்//

Kattunaa ivala kattanumda,
illa katunavan kaala thotu-kumbudanumda....

சின்னப் பையன் சொன்னது…

பிரபலமானவர்களைப் பற்றி கனவில் நினைப்பதால், கணவர்-க்கு பதில் கனவர் என்று தலைப்பு வைத்திருக்கிறீர்களா?

Unknown சொன்னது…

நீங்களே ரிஷிகபூருக்கும் சிரீதேவிக்கும் கல்யாணம் பண்ணிவச்சுட்டீங்க போல? :)

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

கனவு கண்டதால், கனவர்கள் ஆனார்களா??
நல்ல தலைப்பு...
சமீபத்தில் ஆனந்த விகடனில் எம்ஜிஆர்,சிவாஜி பற்றி எழுதிய ஜெயமோகனுக்கும் இவ்வியாதிதானே?

கோவி.கண்ணன் சொன்னது…

//வவ்வால் said...
கோவி,

ஸ்ரீதேவி பத்தி இப்போ என்னாத்துக்கு டைமிங்க் சென்ஸ் இல்லாம பதிவுனு வந்தா, இது கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைப்போல பாயுதே!

ஒன்றும் தெரியாதது போல அப்படியா என்ன சமாச்சாரம் என்று கேட்க மாட்டேன்! ஆனால் இதனை எல்லாம் ரெண்டுப்பக்கமும் பேசாமல் இருப்பதன் மூலமே தவிர்க்க முடியும் என்று நினைக்கிறேன்.

எல்லாருமே கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை தானே, அவருக்குள் தூங்கிட்டு இருக்க மிருகம் எழுந்து விட்டதோ என்னமோ? எனவே மீண்டும் மிருகம் தூங்க வைத்து மனிதம் வளர்ப்போம்!

யெப்பா நல்லவங்களா , ஏதா இருந்தாலும் பேச்சு பேச்சோடத்தான் இருக்கணும் , அனானி, அதர் ஆப்சனில் வந்து திட்டப்படாது!

இந்த கோட்ட தாண்டி நானும் வர மாட்டேன்,, நீயும் வரப்படாது சொல்லிட்டேன் :-))
//

வவ்ஸ்,

எல்லோரும் ஜெமோ வைப் பத்தி பதிவிட்டு இருக்காங்க, ஜெமோ தன்னை அறிவாளியாகக் காட்டிக் கொள்ளவதற்கு புழுதிவாரி தூற்றுகிறார். எதிர்பின் மூலம் புகழடைய நினைப்பவர். அதுபோன்றவர்களைப் பற்றி குறித்தேன். ஜெமோவை எல்லோரும் மறந்துவிட்டார்கள் என்று பரபரப்பைக் கிளப்புறார் போல.

கிழே யோகன் பாரிஸ் ஐயா சரியாக சொல்லி இருக்கார் பாருங்க !

கோவி.கண்ணன் சொன்னது…

//யெப்பா நல்லவங்களா , ஏதா இருந்தாலும் பேச்சு பேச்சோடத்தான் இருக்கணும் , அனானி, அதர் ஆப்சனில் வந்து திட்டப்படாது!//

அனானி கமெண்ட் அனுமதிப்பதில்லை. எனக்கு கமெண்ட் போடுவதற்காக பலர் புரொபைல் இல்லாதா ப்ளாக் வச்சிருக்காங்க. வம்படியாக வந்து கமெண்ட் போடுவாங்க. மட்டுறுத்தல் இருக்கே.

கோவி.கண்ணன் சொன்னது…

//Raja said...


Kattunaa ivala kattanumda,
illa katunavan kaala thotu-kumbudanumda....
//

ராஜா,
இதை கொஞ்சம் ஆபாசமாகவே பசங்க சொல்வாங்க. அதை இடுகையில் எழுதமுடியாது.

கோவி.கண்ணன் சொன்னது…

// ச்சின்னப் பையன் said...
பிரபலமானவர்களைப் பற்றி கனவில் நினைப்பதால், கணவர்-க்கு பதில் கனவர் என்று தலைப்பு வைத்திருக்கிறீர்களா?
//

சின்னப் பையன் ஐயா,

எழுத்துப் பிழைதான். நீங்கள் சொல்லி இருக்கும் விளக்கமும் பொறுத்தமாக இருக்கு

கோவி.கண்ணன் சொன்னது…

//தஞ்சாவூரான் said...
நீங்களே ரிஷிகபூருக்கும் சிரீதேவிக்கும் கல்யாணம் பண்ணிவச்சுட்டீங்க போல? :)
//

தஞ்சாவூரான் சார்,
தமிழர்களுக்கு ஸ்ரீதேவி தெரிந்த அளவுக்கு அவரது கணவர் பெயர் தெரியாதே. தவறை திறுத்திவிட்டேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
கனவு கண்டதால், கனவர்கள் ஆனார்களா??
நல்ல தலைப்பு...
சமீபத்தில் ஆனந்த விகடனில் எம்ஜிஆர்,சிவாஜி பற்றி எழுதிய ஜெயமோகனுக்கும் இவ்வியாதிதானே?
//

யோகன் ஐயா,
மிகச் சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள், நானும் ஜெமோவைப் பற்றி என்று சொல்லி இருந்தால் பலர் ஓடி இருப்பாங்க.
:)

ஜமாலன் சொன்னது…

மனோவியாதி என்றாலும் அந்த அழகியல் தேர்வை கவனியுங்கள். சிறிதேவி மற்றும் ஜெயப்பிரதா? பிரபல வியாதி மட்டுமல்ல.. இது அதையும் தாண்டி புணிதமானது. :)

லட்மனக்கொட போன்று இது அனானிகளுக்கு போடப்பட்ட வவ்வால்கோடு ஒரு அடி நகட்டப்படாது ஆமா சொல்லிட்டேன்.
:)))

Subbiah Veerappan சொன்னது…

/////எனது வயதை ஒத்தவர்களுக்கு ஒரு காலத்தில் ஸ்ரீதேவி என்றால் செம கிரேஸ்.////

எங்கள் காலத்தில் அபிநய சரஸ்வதி!

யாரைச் சொல்கிறேன் என்று கண்டுபிடியுங்கள்
முடியவில்லை என்றால் க்ளூ தருகிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH said...


எங்கள் காலத்தில் அபிநய சரஸ்வதி!

யாரைச் சொல்கிறேன் என்று கண்டுபிடியுங்கள்
முடியவில்லை என்றால் க்ளூ தருகிறேன்
//

நதியாவிடம் கேட்டுச் சொல்கிறேன். " பாட்டியம்மா வைத்தியம் கேட்டுச் சொன்னேன் பைங்கிளி" என்று நதியாதான் பாடினார்கள்.

Subbiah Veerappan சொன்னது…

////நதியாவிடம் கேட்டுச் சொல்கிறேன். " பாட்டியம்மா வைத்தியம் கேட்டுச் சொன்னேன் பைங்கிளி" என்று நதியாதான் பாடினார்கள்./////

நோ யூஸ்!
கண்டுபிடிக்க முடியாமல் எதையோ எழுதி குழப்பியிருக்கிறீர் கோவியாரே!

சரி க்ளூ தருகிறேன்: சிட்டுக்குருவிக்கு முத்தம் கொடுத்தவர். யார் அவர்?

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

சுப்பையா ஐயா,
பால சரஸ்வதியையும் சொல்வார்கள்,
சரோஜா தேவியையும் சொல்வார்கள்..ஆனாலும் நாங்கல்லாம் சிறுவர்கள்,ஸ்ரேயா பத்திக் கேளுங்க சொல்வோம் !!!!!!(அதுக்காக கேட்றாதீங்க ...)

வால்பையன் சொன்னது…

ஜெமொவுக்கு மட்டுமா இந்த பழக்கம் இருக்கிறது. தமிழ்நாட்டில் நிறைய பேருக்கு!!

வால்பையன்

வல்லிசிம்ஹன் சொன்னது…

இருக்கிற வழக்குப் போறாதுனு இந்த வழக்கு வேறயா ஸ்ரீதேவிக்கு:))

விளம்பரம் தேடும் உத்திகள் தான் இவைஎல்லாம் கண்ணன்.!!
சரியான நேரத்தில் சரியான விஷயத்தைதான் சொல்லி
இருக்கிறீர்கள்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்