பின்பற்றுபவர்கள்

12 பிப்ரவரி, 2008

வட்டம் : காயா ?... இது கனியா ? கண்களுக்கு மட்டும் தொடுவதற்கு அல்ல !

இலைமறை காயாக நிறைய இரட்டை பொருள் பாடல்கள் எம்ஜிஆரின் திரைப்படப் பாடல்களில் இருந்ததால் தான் என்னவே அவர் 'இரட்டை' இலையை சின்னமாக வைத்தார் என்று நினைக்கிறேன் :)

அப்படித்தான் ஒரு பாடல் 'காயா ? இது பழமா ? கொஞ்சம் தொட்டுப் பார்க்கட்டுமா ?' விவரம் தெரியாத வயசில கேட்டபோது விரசமாக தெரியவில்லை. 'சோளிக்கே பீச்சே க்யாகே...' என்ற ஒரே ஒரு இந்தி பாடலே பெரும் சர்சையை கிளப்பிவிட்டது. தமிழில் ? ஆபாச பாடல்களுக்கும் தமிழ் திரைக்கும் என்ன தொடர்போ, தற்பொழுதும் காதல் / குத்தாட்டப் பாடல்களில் 50க்கு 50 இருபொருள் பாடல்களாக இருக்கிறது. எதையுமே இன்சுவையாக சொல்வதைவிட இருசுவையாக சொன்னால் இனிமை கூடும் என்று நினைப்பார்களோ என்னவோ. "கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்ததம்மா " இந்த பாடல் கோவில் பின்னனியில் சாயாசிங் - விஜய் குத்தாட்டத்தில் எடுக்கப்பட்டது,வரிக்கு வரி பாதி ஆபாசமாக இருக்கும். எனக்கு மட்டும் தான் 'அப்படி புரிகிறதா?' ஒருவேளை எனது மனசு தான் அழுக்கா ? இந்தப்பாடலை அம்மன் பாடல் போல காட்டும் போது காதல் / குத்தாட்டப் பாடல்களில் உள்ள இருபொருள்களை குறைச் சொல்ல ஒன்றும் இல்லை.

இடுகைக்கும் மேற்கண்ட கருத்துக்கும் தொடர்பு இல்லை. தலைப்பை தொடர்பு படுத்தி இடுகைக்கு வருகிறேன்.

நிழல்படப் (PIT) போட்டிக்கு ஒரு பிட்டை போடலாம் என்று நினைத்தேன். இந்த படம்... கண்ணில் சிக்கியது, நல்ல வேளை குத்தவில்லை. இது ஒருவகை கள்ளிச் செடி, அலங்காரத்துக்காக அலுவலகங்கள், இல்லங்களில் வைத்திருப்பார்கள், பச்சை வண்ணத்தில் இருந்து முற்றும் போது பழுத்தது போல் சிகப்பாகி இருக்கும். காயாகவும்(பச்சை) கனியாகவும் (சிவப்பு) பார்க்கும் போது இருந்தாலும்... கவனக் குறைவாக தொட்டுவிட்டால் விரலில் சிகப்புதான். தலைப்புக்கு வந்தாச்சு. அப்பாடா !
இந்தவகை வட்டக் கள்ளியை ( Barrel cactus) மேலும் பார்க்க வேண்டுமா ? கூகுள் காட்டுகிறது


15 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

படங்கள் இரண்டும் கலக்கல்....
:))

வடுவூர் குமார் சொன்னது…

அந்த பாட்டு..
சென்னை தண்ணீர் நிலவரத்தை கூட சாமிக்கு சொல்லுவதாக வரும்,மீதி வரிகளில் எனக்கு ஒன்றும் தோன்றவில்லை!!
பிடித்த பாடல்களில் அதுவும் ஒன்று.கடவுளோடு ஆடுகிற தகுதி விஜய்க்கு கிடைத்திருக்கு. :-)

மங்களூர் சிவா சொன்னது…

படங்கள் ரெண்டும் அருமை.

மங்களூர் சிவா சொன்னது…

PIT புகைப்பட போட்டிக்கு முன்னுரையோட பதிவிட்ட பதிவர் என்கிற பெருமை உங்களுக்கே சாரும்!!

மங்களூர் சிவா சொன்னது…

மத்தபடி அந்த 'காலம்' இந்த 'காலம்' ஒரு வித்தியாசமும் இல்லை எல்லா 'காலம்'உம் ஆபாச விரசம்தான்







பாடல்களில்

கோவி.கண்ணன் சொன்னது…

//மத்தபடி அந்த 'காலம்' இந்த 'காலம்' ஒரு வித்தியாசமும் இல்லை எல்லா 'காலம்'உம் ஆபாச விரசம்தான்



பாடல்களில்//


சிவா,

உங்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். கவர்ச்சி வேறு ஆபாசம் வேறு. (நடிகையர் பேட்டியில் அப்படித்தான் சொல்லுவாங்க) அந்த காலம் கவர்ச்சி இந்த காலம் ஆபாசம்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//

ஜெகதீசன் said...
படங்கள் இரண்டும் கலக்கல்....
:))
//

நன்றி !
படத்தை கண்ணுல ஒத்திக்காதிங்க :)

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
அந்த பாட்டு..
சென்னை தண்ணீர் நிலவரத்தை கூட சாமிக்கு சொல்லுவதாக வரும்,மீதி வரிகளில் எனக்கு ஒன்றும் தோன்றவில்லை!!
பிடித்த பாடல்களில் அதுவும் ஒன்று.கடவுளோடு ஆடுகிற தகுதி விஜய்க்கு கிடைத்திருக்கு. :-)
//

குமார்,
சாயாசிங் தான் உங்களுக்கு கடவுளா ? தெரியாமல் போச்சே !!!
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//மங்களூர் சிவா said...
PIT புகைப்பட போட்டிக்கு முன்னுரையோட பதிவிட்ட பதிவர் என்கிற பெருமை உங்களுக்கே சாரும்!!
//

சிவா,
கை அரிக்குமே,
நாலு சொற்கள் இடுகையில் எழுதவில்லை என்றால் அப்பறம் எப்படி ?

கோவி.கண்ணன் சொன்னது…

//மங்களூர் சிவா said...
படங்கள் ரெண்டும் அருமை.
//

நன்றி ! நீங்க யாரையும் 'அடி கள்ளி...' ன்னு சொல்லி இருக்கிங்களா ?
:)

குசும்பன் சொன்னது…

சூப்பர்! படம்

RATHNESH சொன்னது…

புகைப்படங்கள் என்றால் அட, நல்லா இருக்கே என்பதைத் தவிர வேறு ஏதும் சொல்லும் அளவுக்கு அறிவோ அனுபவமோ கிடையாது. (பள்ளிநாட்களில் மூடுபனி படத்தில் காமெரா பேசுகிறது என்று குமுதத்தில் விமர்சனம் படித்து விட்டு படத்துக்கூப் போய் படத்தில் காமெராவே காணோமே என்று நிஜமாகவே கேட்ட அளவுக்கு அப்பாவி நான்).

இந்தப்படங்களும் 'பேசுகின்றன'. கமெண்ட் வரிகளில் கோவியை ஒட்ட வைக்க முடியாமல் மனம் தவிக்கிறது.

ஸயீத் சொன்னது…

கொஞ்ச நேரம் அடிப்புட்டு போயிடுவே தாயி, மத்த நேரம் போரடிக்கும் என்ன பண்ண தாயி.

இந்த வரிகளில்தான் பொருட்குற்ற‌ம் கண்டு பிடித்தீர்களா?

உட் குத்து இல்லாத படம் சூப்பர்.

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
புகைப்படங்கள் என்றால் அட, நல்லா இருக்கே என்பதைத் தவிர வேறு ஏதும் சொல்லும் அளவுக்கு அறிவோ அனுபவமோ கிடையாது. (பள்ளிநாட்களில் மூடுபனி படத்தில் காமெரா பேசுகிறது என்று குமுதத்தில் விமர்சனம் படித்து விட்டு படத்துக்கூப் போய் படத்தில் காமெராவே காணோமே என்று நிஜமாகவே கேட்ட அளவுக்கு அப்பாவி நான்).

இந்தப்படங்களும் 'பேசுகின்றன'. கமெண்ட் வரிகளில் கோவியை ஒட்ட வைக்க முடியாமல் மனம் தவிக்கிறது.
//

நிழல்படம் எடுக்கத் தெரியும் ஆனால் எனக்கும் தொழில் நுட்பம் எதுவும் தெரியாது, இங்கிருத்து பார்த்தால் நன்றாக இருக்கும் என்று சில கோணங்களில் விருப்பத்திற்கு எடுப்பேன். :)

for your eyes only என்பதை மொழிப்பெயற்பாக தலைப்புக்கு ஆக்கலாம் என்று நினைத்து இந்த தலைப்பை வைத்தேன். ஆனால் அந்த தலைப்பைப் பார்த்தால் 'அந்த' பாடல்கள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது. வெறும் ஈர்ப்புக்கு தலைப்பு என்றாலும் அதில் இருக்கும் ஆபாசத்தை மறைக்க முடியாதே. அதனால் கொஞ்சம் முன்னோட்டம் எழுத வேண்டியதாகிவிட்டது. தமிழில் உள்ள இருபொருள் பாடல்கள் பற்றி தனி இடுகையே எழுத முடியும். நமக்கு இருபொருள் புரிவதைவிட விசிலடித்து படம் பார்பவர்களுக்கு நன்றாகவே புரியும். எனக்கு எல்லாம் நல்லதாகவே தான் தெரிகிறது என்று என்னால் சொல்ல முடியாது.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸயீத் said...
கொஞ்ச நேரம் அடிப்புட்டு போயிடுவே தாயி, மத்த நேரம் போரடிக்கும் என்ன பண்ண தாயி.

இந்த வரிகளில்தான் பொருட்குற்ற‌ம் கண்டு பிடித்தீர்களா?

உட் குத்து இல்லாத படம் சூப்பர்.
//

இன்னொருத்தர் அதே பாடலில் உள்ள,

'வெட்டி வச்ச தேங்காயில பூஜை பண்ணவா?' இதில் என்ன ஆபாசம் என்று கேட்கிறார். எனக்கொன்னும் புரியல.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்