பின்பற்றுபவர்கள்

17 அக்டோபர், 2007

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தன்னிச்சை செயல்பாடுகளுக்கு எதிரான கண்டன குரல்கள் !

நீதிபதிகள் அதிகார மையத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல, சட்டவழி தீர்ப்பு சொல்லும் அலுவலர்களே ... என்று நீதிபதிகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா ? என்று ஒரு இடுகையை சென்ற வாரத்தில் எழுதி இருந்தேன். அந்த கருத்தைப் போன்றே தினமணியிலும் ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது.



உயரத்தை உணர்ந்து செயல்படுவதே உசிதம்!

உ .ரா. வரதராசன்

உங்களது பிஎஸ்என்எல் செல்பேசியில் நாளைய பஞ்சாங்க குறிப்புகளை இன்றே பெற தினம் ஒரு ரூபாய் மட்டுமே!


ஐக்கிய முன்னணி ஆட்சியில் பிரதமராக இருந்த தேவ கௌடா பதவி விலக நேரிட்டபோது, அடுத்த பிரதமர் யாரென்ற கேள்வி எழுந்தது; திமுக தலைவர் கருணாநிதியிடம், பத்திரிகையாளர்கள், "நீங்கள் ஏன் பிரதமராக முயற்சி செய்யக்கூடாது' என்று கேட்டனர். கருணாநிதியோ "என்னுடைய உயரம் எனக்குத் தெரியும்' என்று அர்த்தமுள்ள பதிலைச் சொன்னார்.

உயர் பதவிக்கு ஆசைப்படுபவர்கள் மட்டுமல்ல, உயர் பதவியில் அமர்பவர்களும், தங்களின் - தங்கள் பதவியின் உயரத்தை உணர்ந்து செயல்படுவது என்பது மிகமிக அவசியம். உச்ச நீதிமன்றத்தின் அண்மைக்காலச் செயல்பாடுகள் இதை மிகத் தெளிவாக உணர்த்துகின்றன.

பொதுப் பதவி எதுவாக இருப்பினும் அது மக்களின் நம்பிக்கைக்குரியதாக அமைய வேண்டும்; நீதித்துறைப் பதவிகளும் இந்தப் பொறுப்பாண்மைக்கு உட்பட்டவையே. இந்திய அரசியல் சட்டத்தின்படி, அரசு நிர்வாகம், சட்டமன்றம், நீதித்துறை இவை மூன்றுமே அவற்றுக்கான பொறுப்புகளைச் சுதந்திரமாக வகிக்க உரிமையுள்ளவை. ஆனால் இவை எல்லாமே அரசியல் சட்டத்துக்கு உட்பட்டவை. அந்த வகையில் நீதித்துறையும் அரசியல் சட்டத்துக்கு மேலான - அல்லது உயர்வான - ஒன்றல்ல.

ஆனால், வழக்கு விசாரணையின்போது, அண்மைக்காலங்களில் சில நீதிபதிகள் கூறியுள்ள கருத்துகள் இந்த வரம்பை மீறியதாகவே உணரப்படுவது கவலைக்குரிய ஒன்று.

தலைநகர் தில்லியில், அமைச்சர்கள், எம்.பி.க்கள் முதலானோர் குடியிருப்பதற்காக ஒதுக்கப்படும் வீடுகள் பலவற்றில், அவற்றைப் பெற்று அனுபவித்த நபர்கள் பதவிக்காலம் முடிந்த பின்னரும், காலவரையறையற்ற முறையில் தொடர்ந்து வசித்து வருவது தொடர்பான ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஒருவர் "அவருக்கு தில்லியில் என்ன வேலை? அவரைத் தூக்கி எறியுங்கள்' என்று கோபத்தைக் கக்கினார். அந்த "அவர்' ஒரு முன்னாள் மத்திய அமைச்சர்; அந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நேரத்தில் ஒரு மாநிலத்தின் ஆளுநர்! நீதிபதி ஒருவர், அவரைப் போன்ற உயர் பதவியில் இருந்த ஒருவரை, தூக்கியெறிய உத்தரவிடும் அளவிற்கு அலட்சியமாகக் கருதியது வரம்புக்கு உட்பட்டதுதானா?

இன்னொரு வழக்கு: மத்திய அரசின் பொறுப்பிலுள்ள மருத்துவக் கழகம் மூன்றாண்டுகளாகப் பட்டமளிப்பு விழா நடத்தவில்லை. பட்டம் பெற முடியாமல் அவதியுற்ற மாணவர்கள் நீதிமன்றத்தை நாடியபோது, நீதிமன்றம் பட்டமளிப்பு விழாவை நடத்தி முடிக்க ஒரு காலக்கெடு விதித்திருந்தால் போதுமானது. "24 மணி நேரத்துக்குள் பட்டப்படிப்புச் சான்றிதழ்களில் கையெழுத்திடுக' என்று மத்திய அமைச்சருக்கு உத்தரவிடும் அளவுக்கு நீதிபதி சென்றது சரியான நடைமுறையா?'

நிர்வாகத்தின் தவறுகளை, சட்டமன்ற - நாடாளுமன்றங்களின் அத்துமீறல்களை தயவுதாட்சயண்மின்றிக் கடுமையாகச் சாடும் நீதிமன்றங்கள், நீதித்துறையின் உயர் பதவி வகிப்பவர்களைப் பற்றிய பிரச்னைகள் எழும்போது அதே அளவுகோலைக் கடைப்பிடிப்பதில்லையே!

குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய - மாநில அமைச்சர்கள் போன்ற உயர் பதவிகளில் இருப்போருக்கு எதிராக "பிடி வாரண்ட்' பிறப்பித்த நகைப்புக்கிடமான செயல்பாட்டில் நீதித்துறையின் ஒரு பிரிவு இறங்கியது, சில ஆண்டுகளுக்கு முன் பரபரப்புச் செய்தியானது. அதைவிட அந்தப் "பிடி வாரண்டுகள்' விலை கொடுத்து வாங்கப்பட்டவை என்றும் தகவல் வெளியானதுதான் அதிர்ச்சியானது!

நீதித்துறையின் ஒரு பிரிவு இதுபோன்ற பேரத்தில் ஈடுபட்டதைப் படம்பிடித்து ஊடகம் ஒன்று வெளியிட்ட நிகழ்வில், தவறு பேரம் பேசியதில் அல்ல; ஊடகம் படம் பிடித்ததுதான் என்று நீதிமன்றம் சினங்கொண்டதையும் நாம் பார்த்தோம்!

நீதிபதி ஒருவர் நேர்மையற்ற முறையில் செயல்பட்டதாக, மும்பை நாளேடு ஒன்று குற்றஞ்சாட்டியதோடு, அதையொட்டிய பின்னணித் தகவல்களையும் சித்திரித்து வெளியிட்டது. அதற்காக நீதிமன்ற அவமதிப்புக் குற்றஞ்சாட்டப்பட்டு அந்த நாளேட்டின் பொறுப்பாளர்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது மற்றொரு நிகழ்வு.

நீதிமன்றத்துக்கு வரும் வழியில் ஊர்வலம் ஒன்று குறுக்கிட்டதால் சில மணிநேரம் வழியில் தாமதிக்க நேரிட்ட நீதிபதி ஒருவர், கோல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனுதாரர் எவருமில்லாமலேயே தானாகவே வழக்கு ஒன்றை சிருஷ்டித்து, "வார (வேலை) நாள்கள் எதிலும் இனி ஊர்வலம் என்பதையே அனுமதிக்கக் கூடாது' என்று உத்தரவு போட்ட வானளாவிய அதிரடி அதிகாரத்தையும் நாடு கண்டது.

அண்மையில் வெளிச்சத்துக்கு வந்த இரண்டு வழக்குகளில் ஒன்று, 40 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டது; இன்னொன்று 50 ஆண்டுகள் நீடித்தது. இவற்றில் தீர்ப்பைச் சொன்ன நீதிபதிகள், "இத்தகைய காலதாமதங்கள் நீதிமன்றங்களின் மீது மக்களுக்கு இருக்க வேண்டிய நம்பிக்கையையே தகர்த்துவிடும்' என்று மிகச் சரியாகவே குறிப்பிட்டனர்.

வேறொரு நிகழ்வில் ஒரு நீதியரசர் வேதனையோடு சுட்டிக்காட்டிய விஷயம் - "நீதிமன்றங்கள் வழங்குகிற உத்தரவுகள் அமல்படுத்தப்படுவதில்லை; அதிலும் மீண்டும் அவமதிப்பு புகார் மனுவின் மீதோ அல்லது வேறுவகையிலோ நீதிமன்றம் சாட்டையை எடுக்க வேண்டியுள்ளது'' என்பதாகும்.

மேற்குறிப்பிட்ட இரண்டுமே, பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு அப்பாலும் தங்களுக்கு நியாயம் கிடைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டியுள்ளது என்ற கசப்பான உண்மையைச் சுட்டுவனவே. இந்த முயற்சிகள் ஜனநாயகப்பூர்வமாக அமைய வேண்டும்; வன்முறை கலவாததாக இருக்க வேண்டும் என்பதில் நீதித்துறைக்கு மட்டுமன்றி, நாட்டு மக்கள் அனைவருக்குமே அக்கறை உண்டு. அந்த ஜனநாயக உரிமைகளுக்கு நீதிமன்றங்களின் சொல்லும் செயலுமே குறுக்கே நிற்பதாக மக்கள் கருத நேரிட்டால், அது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

தமிழ்நாட்டில் அக்டோபர் முதல் நாளில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த "பந்த்', உயர் நீதிமன்றம் அதைச் சில நிபந்தனைகளுக்கு உட்படுத்தி தடை விதிக்க மறுத்த பின்னணி, ஞாயிற்றுக்கிழமை அவசர அவசரமாக விசேஷ அமர்வு நடத்தி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தடைஉத்தரவு, அதை, "பந்த்'துக்கு அழைப்பு விடுத்த அரசியல் கட்சிகள் உண்ணாவிரதமாக மாற்றி அறிவித்தது, நடைமுறையில் கிட்டத்தட்ட முழு அடைப்பாக மாறிக் காட்சியளித்த தமிழ்நாடு, அதையொட்டி எதிரும் புதிருமாக எழுந்த பலமான குற்றச்சாட்டுகள் - இவை, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளால் மிகுந்த பொறுமையோடும் நிதானத்தோடும் கருத்தூன்றிப் பரிசீலிக்கப்பட வேண்டியவை.

ஆனால் வழக்கில் ஒருதரப்புக்காக வாதிட்ட வழக்கறிஞர் ஒருவர் கூறியதையே வேதவாக்காக ஏற்று, "அரசியல் சட்டம் நிலை குலைவு', "மாநில அரசைக் கலைக்க உத்தரவிடுவோம்', "நீதிமன்ற அவமதிப்பு என்று புகார் மனு கொடுக்கவும்', "முதலமைச்சரையும், தலைமைச்செயலாளரையும் கொண்டு வந்து நிறுத்துவோம்' - என்றெல்லாம் நீதிபதி ஒருவர் மனம்போன போக்கில் பொறிந்து தள்ளியது எந்த வகையில் நியாயம்?

நீதித்துறையின் சின்னமே, துலாக்கோலைச் சமன்செய்து தூக்கிப்பிடித்து, கண்கள் மறைக்கப்பட்டு நிற்கும் நீதிதேவதைதான். ஒருபால் கோடாமைக்கும் சார்புநிலைக்கு அப்பால் நின்று செயல்படுவதற்குமான அடையாளங்கள் அவை! நீதித்துறை அந்த அடையாளங்களை இழந்துவிடக் கூடாது.

உச்சத்தில் அமர்ந்தாலும் தன் உயரத்தை உணர்ந்து செயல்படுவதே நீதித்துறைக்கும் உசிதமாகும்.

(கட்டுரையாளர்: தேசிய செயலர் சி.ஐ.டி.யூ.)

நன்றி : தினமணி

9 கருத்துகள்:

லக்ஷ்மி சொன்னது…

எப்படிங்க? இன்னுமா கட்டுரைய எழுதினவரும் பதிப்பிச்ச நாளிதழ்க்காரங்களும் வெளில இருக்காங்க? இவ்ளோ நேரமாவா நீதிமன்ற அவமதிப்புக்காக அவங்க மேல வழக்குப் போடாம விட்டு வச்சிருக்காங்க? ஐயோ... ஐயோ.... நாட்டுல நீதிபரிபாலனம் ரொம்ப ஆமை வேகத்துல நடக்குது போங்க...

கையேடு சொன்னது…

காலம் எந்த விதியும் அதில் அடக்கம் - நீதித்துறை உட்பட - இரண்டு கட்டுரைகளையும் பகிர்ந்ததற்கு நன்றி.

ஜமாலன் சொன்னது…

உங்களது பதிவிற்கு கருத்து சொல்லிவிட்டதால் No Repeats.

இருந்தாலும் இத்தகைய கருத்துக்கள் ஒரு பெரும் பத்திரிக்கையில் வருவது பலரைம் சென்றடையும் என்பது மகிழ்ச்சிக்கரிய செய்திதான்.

RATHNESH சொன்னது…

இந்தப் பதிவுக்கும், சென்ற பதிவின் தலைப்புக்கும் உள்சம்பந்தம் ஏதும் இல்லையே?

ஏனென்றால்,

"வெட்டப்போகும் மாட்டின் முன் சென்றால் அருவாள் நமது உடலிலும் விழலாம் என்ற பொருளிலேயே 'நந்தியின் குறுக்கே செல்லக் கூடாது' என்ற எச்சரிக்கை வழக்கும் வந்திருக்கிறது" என்கிற வரியை மறக்க முடியவில்லை.

கூடவே, முன்பொரு பதிவில் தாங்கள் எழுதி இருந்த "விமர்சனமே இல்லாமல் ஒன்று எழுதவேண்டுமென்றால் அது 'சுற்றுலா சென்று வந்ததைப்பற்றி சிறு குறிப்பு வரைக' என்று பள்ளிகளில் ஆசிரியர் தரும் வீட்டுப்பாடத்துக்கு எழுதப்படும் கட்டுரைகள் மட்டுமே" என்கிற வரியையும் மறக்க இயலவில்லை. அந்த வரிகள் நீதிபதிகளுக்கு வாசித்துக் காட்டப்பட வேண்டிய வரிகள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//லக்ஷ்மி said...
எப்படிங்க? இன்னுமா கட்டுரைய எழுதினவரும் பதிப்பிச்ச நாளிதழ்க்காரங்களும் வெளில இருக்காங்க? இவ்ளோ நேரமாவா நீதிமன்ற அவமதிப்புக்காக அவங்க மேல வழக்குப் போடாம விட்டு வச்சிருக்காங்க? ஐயோ... ஐயோ.... நாட்டுல நீதிபரிபாலனம் ரொம்ப ஆமை வேகத்துல நடக்குது போங்க...
//

லக்ஷ்மி,

"ஆமை வேகத்துல நடக்குது போங்க" இது வருத்தமா ? அல்லது குற்றச் சாட்டா ? குற்றச் சாட்டென்றால் நீங்களும் 'நீதிமன்ற அவமதிப்புக்கு' உள்ளாவீர்கள் !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

கையேடு said...
காலம் எந்த விதியும் அதில் அடக்கம் - நீதித்துறை உட்பட - இரண்டு கட்டுரைகளையும் பகிர்ந்ததற்கு நன்றி.
*********
கையேடு ஐயா,

படித்தமைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜமாலன் said...
உங்களது பதிவிற்கு கருத்து சொல்லிவிட்டதால் No Repeats.

இருந்தாலும் இத்தகைய கருத்துக்கள் ஒரு பெரும் பத்திரிக்கையில் வருவது பலரைம் சென்றடையும் என்பது மகிழ்ச்சிக்கரிய செய்திதான்.
//

ஜமாலன்,
மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி அதிகார மையம் எது என்று வரையறுக்காதவரை இது தொடரத்தான் போகிறது !
:(

TBCD சொன்னது…

Who will gaurd the gaurdian angels...?

தருமி சொன்னது…

பயிரை மேயும் வேலிகள் ..

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்