பின்பற்றுபவர்கள்

20 அக்டோபர், 2007

விதிப்பயன் என்ற புண்ணாக்கு கான்செப்ட் !

உடுக்க உடையும், படுக்க இடமும் இருந்தால் 'எல்லாம் அவன் செயல்' என்று நினைத்து புலகாங்கிதம் அடையலாம். ஏனென்றால் பாதிப்பு என்றோ, பாதிப்பின் தன்மை என்றோ எதையும் அறிந்தில்லாத மனநிலையில் கடவுள் தனக்கு அருமையான வாழ்கையை கொடுத்திருக்கிறார் என்று நினைக்கலாம். கடவுள் நம்பிக்கைகள் பூசை அறையுடனோ, அல்லது கோவில் கருவறையில் இருந்தால் எவருக்கும் எந்த இடற்பாடும் இல்லை. ஆனால் மதம் என்ற பெயரில் கொள்கைகளை வைத்துக் கொண்டு ஒரு தனிமனிதனின் வாழ்கையையும் முடிவு செய்யவோ, வலியுறுத்தவோ செய்தால் அவை கொள்கைகள் அல்ல கொள்ளைகள். எந்த மதத்திலும் அதில் ஆளுமை உடையவர்களுக்கு மட்டும் ஆதாயமேயன்றி அதை பின்பற்றுபவர்களுக்கு என்று பெரிதாக பலனும் இல்லை. நம்பிக்கைகளால் பிறரை நாசம் செய்தவையே மிக்கவை.

நம்பிக்கைகள் வெறும் நம்பிக்கையாக மட்டுமே இருக்க வேண்டும், ஏழை ஏழையாக இருப்பதற்கும், ஒருவன் பள்ளனாக பிறப்பதற்கும், பார்பனாக பிறப்பதற்கும் விதிப்பயன் என்று துணிந்து சொல்கிறார்கள். அதாவது தான் பள்ளனாக பிறந்தது விதிப்பயன் என்று நினைத்து நன்கு முயற்சித்து பார்பனராக அடுத்த பிறவியில் பிறக்கவேண்டுமாம். அத்துடன் பிறவி சுழல் முடிவுக்கு வருகிறதாம். என்ன மடத்தனமான ஒரு கான்செப்ட் பாருங்கள். இனங்கள் என்பவை அந்தந்த நாட்டு சூழலுக்கு ஏற்ப உருவான நிறம் தோற்றம் குறித்ததே, ஆப்ரிக்க இனத்தினர் கருப்பாக இருப்பர், ஐரோப்பியர் வெள்ளையாக இருப்பர், சீனர்கள், ஜப்பானியர்கள் மஞ்சளாக இருப்பர். இது இயற்கை. இதில் உயர்வு தாழ்வு எங்கிருந்து வந்தது ? இதில் ஏன் ஒருவன் பள்ளனாக ( சூத்திரனாக) பிறப்பது இழிந்தது போன்றும் அவர் தம் இழிந்த நிலையில் இருப்பதை உணர்ந்து முயற்சித்து பார்பனாக பிறக்க வேண்டும் என்று சொல்வது பித்தலாட்டம் அன்றி வேறென்ன ? பார்பன் உயர்ந்த பிறவி என்பதை மதம் என்ற புண்ணாக்கை நம்புவதால் தானே ஏற்கவேண்டி இருக்கிறது ? இந்த அறிவற்ற கான்செப்டுகளை ஒதுக்கித்தள்ள மதத்தின் மீது நம்பிக்கை உடையவர்கள் முன்வரவேண்டும். இல்லை என்றால் விதி புண்ணாக்கு தத்துவங்களை சொல்லி சொல்லி 'நீ தாழ்ந்தவனாக பிறந்தது கடவுள் செயல், விதிப்பயன் என்று சொல்லி சிந்திக்க விடாமல் செய்துவிடுவர். உழைத்தால் சோறு, இதில் உயர்ந்தவன் என்ன ? தாழ்ந்தவர் என்ன ? கோவில் பிராசதத்தை உண்டவர் எத்தகையை தெய்வீக பிறவி என்றாலும் அடுத்த நாள் கோவில் பிராசதம் அவரிடமிருந்து மலமாகத்தான் வெளியேறும்.

ஜீவாவின் இடுகையில் ஒரு பின்னூட்டம் போட்டேன், ஒரு பெண் பல ஆண்களால் பலாத்காரம் செய்யப்பட்டு படும் துன்பத்தை அனுபவிக்கும் போது அது அவளின் விதிப்பயன் என்று சொல்வதற்கு துணிவு இருக்கிறதா ?

கர்மா, விதிப்பயன் இன்னும் பிற கருமங்கள் அனைத்தும் பூசை அறைக்குள் இருந்து படிக்க வேண்டியவை. அதை வைத்துக் கொண்டு அட்டூழியங்களை நியாப்படுத்துவது என்பது ஏற்புடையது அல்ல. இன்றைய பார்பனர்களின் நிலைக்கும் (டெல்லியில் கழிவரையில் வேலைபார்க்கிறார்களாம், கை ரிக்ஷா இழுக்கிறார்களாம்) , பல்வேறு தரப்பினர்கள் அவர்களை குற்றம் சொல்வதையும், அவர்கள் மீதான கருத்தியல் ரீதியில் ஆன தாக்குதல்களையும், அரசாங்கம் அவர்களை ஓபிசியில் சேர்த்ததையும் ஏன் கருமம், விதிப்பயன் மற்றும் கடவுளின் செயல் என்று எடுத்துக் கொள்ள முடியவில்லை ? இதற்கு பதில் தெரியவில்லை என்றால் பதில் சொல்வது தான் இடுகையின் தலைப்பு !

தொடர்புடைய சுட்டிகள் :

1. மனு ஸ்மிருதியின் பத்தாவது சருக்கத்தில் உள்ள அறுபத்தைந்தாவது செய்யுள் ஒரு சூத்திரன் பிராமணனின் நிலைக்கு உயர்வதும் அதேபோல் ஒரு பிராமணன் சூத்திரனின் நிலைக்குத் தாழ்வதும் சாத்தியம் என்று சொல்கிறது. சத்திரியர், வைசியர் விஷயத்திலும் இது பொருந் தும் என்று அது மேலும் விளக்குகிறது. இதிலிரு ந்து பிறவியின் பயனாக வர்ணங்கள் அமைவதில்லை, குணநலன்களின் அடிப்படையில்தான் அவை நிர்ணயிக்கப்படுகின்றன என்று மனு ஸ்மிருதி வலியுறுத்துவதாகக் கொள்ளமுடியும்.

2. தன் கர்மாவுக்கான பயன்களை அறுவடை செய்தபின், இந்த உலகுக்கு திரும்புகிறது. எப்படி கர்ம வினைகள் ஒருவருடைய செயலின் தேர்வின் அடிப்படையில் அமைகிறதோ, அதுபோலவே, அதனாலேயே, மறுபிறவியும் அவரவர் தேர்ந்தெடுப்பதுதான்

Anonymous said...
ஒரு சூத்திரன் தன் சூத்திர கடமையை செவ்வனே செய்தால் அடுத்த பிறவியில் பிராமனன் என்னும் உயர்ந்த குலத்தில் பார்பனாக பிறக்க முடியுமா ?

-----------

ஜீவா (Jeeva Venkataraman) said...
மற்றொரு அனானி நண்பரிடம் இருந்து வந்திருக்கும் மறுமொழி -
மட்டுறுத்தப்பட்டபின்:

அய்யா,

முடியும்,தாரளமாக முடியும். ****...*** பாவங்களையும் செய்யாமல் இருந்தால் கண்டிப்பாக முடியும்.முயன்று பாருங்க.


11:08 PM

17 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

G.K,
நல்ல பதிவு...

குசும்பன் சொன்னது…

ஜீவாவின் இடுகையில் ஒரு பின்னூட்டம் போட்டேன், ஒரு பெண் பல ஆண்களால் பலாத்காரம் செய்யப்பட்டு படும் துன்பத்தை அனுபவிக்கும் போது அது அவளின் விதிப்பயன் என்று சொல்வதற்கு துணிவு இருக்கிறதா ? "//////

மிக அருமையான பதிவு, மிக மிக நியாயமான கேள்வி!

jeevagv சொன்னது…

//முடியும்,தாரளமாக முடியும். ****...*** பாவங்களையும் செய்யாமல் இருந்தால் கண்டிப்பாக முடியும்.முயன்று பாருங்க./
அதற்கு நான் சொன்ன பதிலை போட வில்லையே கோ.வி.கண்ணன்?

குலத்தின் பெயரால் தாழ்வு உயர்வு சொல்லுதலும் பாவம்தான்.

உங்கள் கேள்விக்கு பதில் என் பதிவில் சொல்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜீவா (Jeeva Venkataraman) said...
அதற்கு நான் சொன்ன பதிலை போட வில்லையே கோ.வி.கண்ணன்?

குலத்தின் பெயரால் தாழ்வு உயர்வு சொல்லுதலும் பாவம்தான்.

உங்கள் கேள்விக்கு பதில் என் பதிவில் சொல்கிறேன்.
//

பாவபுண்ணியமெல்லாம் ஒருவர் தனக்கு நேர்ந்த கொடுமையில் துயருற்று இருக்கையில், அவர் அதிலிருந்து விடுபடுவார் என்று நமக்கு தெரிந்தால் எல்லாம் பொல்லாதா நேரம் என்று ஆறுதலுக்கு சொல்லமேயன்றி, உனது இந்நிலைக்கு நீ முற்பிறவியில் செய்த பாவம் என்று சொல்வது மிகவும் இழுக்கானது. இன்னின்ன சாதியில் பிறப்பதற்கு என்ன பாவ புண்ணியம் வேண்டி கிடக்கிறது ? பள்ளரில் பணக்காரன் இல்லையா ? பார்பனரில் ஏழை இல்லையா ? ஊழ்வினை அல்லது விதிப்பயன் பற்றி சொல்வதற்கும், ஒரு சமூகமே அடிமைபட்டு இருப்பதற்கும், தனிப்பட்டவரின் விதிப்பயனுக்கு என்ன தொடர்பு, ஒரு சமூகத்தில் அனைவருமே பாவம் செய்தவர்கள் என்பது என்ன வாதம் ?

கோவி.கண்ணன் சொன்னது…

//Collapse comments

ஜெகதீசன் said...
G.K,
நல்ல பதிவு...
/

ஜெகதீசன்
G.K,
நல்ல பதிவு... - இந்த பின்னூட்ட வரிகளுக்கு பேட்டர்ன் வைத்திருப்பவர், நண்பர் சிவபாலன், அவரிடம் அனுமதி பெற்றீர்களா ?
:)

jeevagv சொன்னது…

என் பதிவில் ஏற்கனவே வந்த மறுமொழிகளையும் அவற்றுக்கு நான் அளித்த பதிலகளையும் முழுதாக படித்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். படித்திருந்தால் இப்படி திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டிருக்க மாட்டீர்கள்.

அதற்கான விளக்கத்தை நான் கொடுத்த பின்பும் உடும்புப் பிடியாக நான் சொல்லாததை சொல்லுவதாக சொல்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் உங்களை என்ன செய்வது?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜீவா (Jeeva Venkataraman) said...
என் பதிவில் ஏற்கனவே வந்த மறுமொழிகளையும் அவற்றுக்கு நான் அளித்த பதிலகளையும் முழுதாக படித்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். படித்திருந்தால் இப்படி திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டிருக்க மாட்டீர்கள்.

அதற்கான விளக்கத்தை நான் கொடுத்த பின்பும் உடும்புப் பிடியாக நான் சொல்லாததை சொல்லுவதாக சொல்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் உங்களை என்ன செய்வது?
//

ஜீவா,

மறுமொழி புரியவில்லை என்றால் சுறுக்கமாக சொல்கிறேன். குலத்தாழ்ச்சி உயர்வு சொல்வது பாவம் என்று ஒற்றைச் சொல்லில் முடித்துக் கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. அவ்வாறு உயர்வு / தாழ்வு சொல்வது கடுமையான தண்டனைக்கு உரியது, கண்டனத்துக்கு உரியது. அதைத்தான் மேலே சொல்லி இருக்கிறேன்.

RATHNESH சொன்னது…

"எல்லா விஷயங்களையும் CAUSE & EFFECT என்கிற கட்டத்துக்குள் அடைக்க முயன்றால் தான் விதி, விதிவிலக்கு, சமரசம், அயோக்கியத்தனம் எல்லாம். மதங்கள் எல்லாவற்றின் அடிப்படையும் இது தான். நான் எல்லாவற்றையும் EXISTENSE என்கிற பரந்த வெளிக்குக் கொண்டு சென்று விடுகிறேன். எல்லாமே INDEPENDENT. அந்த எண்ணத்தினாலேயே எனக்கு மதம் என்கிற ஒன்று தேவைப்படவில்லை" என்பது Why I am not a Christian என்கிற தலைப்பில் போப் ஆண்டவருடன் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் நடத்திய (பிபிசி ஒலிபரப்பிய) சொற்போரில் அவருடைய பக்கம்.

"நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன்?" (நல்லது நடக்கும் போது மகிழ்கிறோம்; கெட்டது விளையும் போது ஏன் புலம்ப வேண்டும்?) என்பது வள்ளுவர் வாக்கு.

ஒரு காரணத்தோடு கோர்த்தாலன்றி நம் இன்னல்கள் குறித்த ஒப்புதல் அல்லது சமரசம் ஏற்படாத படி வளர்ந்து விட்டது நம் சிந்தனை. விதி என்கிற வார்த்தை வசதியாகி விட்டது. சொந்த உபயோகத்தில் சுகம் தரும் அவ்வார்த்தை அதையே கொண்டு அழுத்தப்படும் போது வேதனை அளிக்கிறது என்றால் பாசாங்கு எங்கே என்று சிந்திக்க வேண்டுமே.

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
"எல்லா விஷயங்களையும் CAUSE & EFFECT என்கிற கட்டத்துக்குள் அடைக்க முயன்றால் தான் விதி, விதிவிலக்கு, சமரசம், அயோக்கியத்தனம் எல்லாம். மதங்கள் எல்லாவற்றின் அடிப்படையும் இது தான். நான் எல்லாவற்றையும் EXISTENSE என்கிற பரந்த வெளிக்குக் கொண்டு சென்று விடுகிறேன். எல்லாமே INDEPENDENT. அந்த எண்ணத்தினாலேயே எனக்கு மதம் என்கிற ஒன்று தேவைப்படவில்லை" என்பது Why I am not a Christian என்கிற தலைப்பில் போப் ஆண்டவருடன் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் நடத்திய (பிபிசி ஒலிபரப்பிய) சொற்போரில் அவருடைய பக்கம்.//

ரத்னேஷ்,
நிறைய படித்திருக்கிறீர்கள், இதுகுறித்து வளமையான இடுகைகளை எழுதுவீர்கள் என நினைக்கிறேன்.

//"நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன்?" (நல்லது நடக்கும் போது மகிழ்கிறோம்; கெட்டது விளையும் போது ஏன் புலம்ப வேண்டும்?) என்பது வள்ளுவர் வாக்கு.
//

நல்லதெல்லாம் அன்பால் நமக்காக செய்யும் 'ஆண்டவன் செயல்' கெட்டதெல்லாம் 'விதிவகுத்தது'
:)

//ஒரு காரணத்தோடு கோர்த்தாலன்றி நம் இன்னல்கள் குறித்த ஒப்புதல் அல்லது சமரசம் ஏற்படாத படி வளர்ந்து விட்டது நம் சிந்தனை. விதி என்கிற வார்த்தை வசதியாகி விட்டது. சொந்த உபயோகத்தில் சுகம் தரும் அவ்வார்த்தை அதையே கொண்டு அழுத்தப்படும் போது வேதனை அளிக்கிறது என்றால் பாசாங்கு எங்கே என்று சிந்திக்க வேண்டுமே.

5:03 AM, October 21, 2007
//

ஒரு சமூகத்தை அழுத்தி வைத்திருப்பதற்கும் விதியையே காரணம் சொல்கிறார்கள். முட்டாள்தனமான வாதம், இப்போது அவர்கள் அமுங்குவதை ஏன் விதி என்று கொள்ள முடியவில்லை என்ற கேள்வி ஞாயமாக எழுவதை தவிர்க்க முடியவில்லை.
:)

ஜமாலன் சொன்னது…

ஆரோக்கியமான விவாதம் தொடருட்டும். ரத்ணேஷ் சுட்டியிருப்பவை விவாதத்தை ஆழத்திற்கு எடுத்துச் செல்லக்கூடியவை.

மனுதர்மம் பிறப்பால் வர்ணம் இல்லை என்றும் பிராமணர்கள் ஆயுதங்களை கையில் ஏடக்க்கூடாது என்றும் அவர்கள் உஞ்சவிருத்தி செய்துதான் பிழைக்க வேண்டும் என்றும் தர்மத்தையும் வேதத்தையும் காப்பதே அவர்களது கடமை என்பதால் பிற வர்ணத்தினர் அவர்களது பொருளியல் வாழ்வை பார்த்துக் கொள்ள வேண்டும என்றும் கூறுகிறது. இதனை எத்தனை பிராமணர்கள பின்பற்றுகிறார்கள். பி்ன்னாளில் பெளத்த மெளரிய அரசை அழிககவென இந்த தர்மத்தை பிராமணர்கள் ஆயதம் எடுத்த அரசைக் கைப்பற்றி தர்மதத்தை காக்கலாம் என திருத்தினார்கள் என்றும் அம்பேத்கர் தனது "பார்ப்பணீயத்தின் வெற்றி" என்கிற நூலில் குறிப்பிடுகிறார்.

தொழில் அடிப்படையான வர்ண தாமத்தை பிறப்பு அடிப்படையில் மாறிறயதுததான் அவர்களத வெற்றி என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

விதிவாதம் என்பது ஒரு எல்லையற்ற வாய்ச்சவடால். அதனை எதற்கு வேண்டுமானாலும் மாற்றிப்போட்டுக் கொள்ளலாம். காரணகாரிய தொடர்பு என்பது இந்திய தத்துவத்தின் ஒரு மிகப்பெரிய விவாதக்களன். இதைதான் விதியாக வளர்த்து எடுக்கிறார்கள்.

"விதியை நம்பி வீழ்ந்துகிடக்கும் வீணரெல்லாம் மாறனும்"

வர்ணக்கோட்பாடு குறித்த எனது பதிவொன்றின் சுட்டி.. இவவ்விவாதத்திற்கு உதவலாம்:
http://jamalantamil.blogspot.com/2007/08/blog-post_26.html

RATHNESH சொன்னது…

கோவி.கண்ணன்,

//இப்போது அவர்கள் அமுங்குவதை ஏன் விதி என்று கொள்ள முடியவில்லை//

உங்கள் ஆதங்கத்தில் வெளிப்படுவது தங்கள் இளகிய மனது. தனக்குச் சாதகமான விஷயத்தைக் கூட, சகோதரன் பாதகமாய் உணர்கிறானே என்று வேதனைப்படும் நேர்மையைக் காட்டுகிறது என்பதைத் தவிர வேறு சொல்லத் தோன்றவில்லை எனக்கு.

அவர்கள் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் காலம் கட்டாயப்படுத்தும் போது நடப்பவை நடந்தே தீரும். யாருடைய ஏற்பையும் மறுப்பையும் காலம் சட்டை செய்வதில்லையே

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜமாலன் said...
ஆரோக்கியமான விவாதம் தொடருட்டும். ரத்ணேஷ் சுட்டியிருப்பவை விவாதத்தை ஆழத்திற்கு எடுத்துச் செல்லக்கூடியவை.//

ஜமாலன் ஐயா,
ரத்தினேஷ் மிக்கவையாக தெரிந்து வைத்திருக்கிறார். இனி அவைகள் அவரது இடுகைகளில் எதிரொலிக்கும் என்று உங்களைப் போன்றே எதிர்பார்க்கிறேன்.

//
மனுதர்மம் பிறப்பால் வர்ணம் இல்லை என்றும் பிராமணர்கள் ஆயுதங்களை கையில் ஏடக்க்கூடாது என்றும் அவர்கள் உஞ்சவிருத்தி செய்துதான் பிழைக்க வேண்டும் என்றும் தர்மத்தையும் வேதத்தையும் காப்பதே அவர்களது கடமை என்பதால் பிற வர்ணத்தினர் அவர்களது பொருளியல் வாழ்வை பார்த்துக் கொள்ள வேண்டும என்றும் கூறுகிறது. இதனை எத்தனை பிராமணர்கள பின்பற்றுகிறார்கள். பி்ன்னாளில் பெளத்த மெளரிய அரசை அழிககவென இந்த தர்மத்தை பிராமணர்கள் ஆயதம் எடுத்த அரசைக் கைப்பற்றி தர்மதத்தை காக்கலாம் என திருத்தினார்கள் என்றும் அம்பேத்கர் தனது "பார்ப்பணீயத்தின் வெற்றி" என்கிற நூலில் குறிப்பிடுகிறார்.
தொழில் அடிப்படையான வர்ண தாமத்தை பிறப்பு அடிப்படையில் மாறிறயதுததான் அவர்களத வெற்றி என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

//

:)) உண்மைதான் ! அம்பேத்கார் சொன்னாலும் அண்ணல் காந்தியடிகள் சொன்னாலும் எல்லாம் உண்மைதான். அவர்கள் எதையும் படிக்காமல் பிதற்றுபவர்கள் அல்ல. அம்பேத்காரைப் போன்று இதிகாசங்களை ஆய்ந்தவர் மிகக் குறைவே.

//விதிவாதம் என்பது ஒரு எல்லையற்ற வாய்ச்சவடால். அதனை எதற்கு வேண்டுமானாலும் மாற்றிப்போட்டுக் கொள்ளலாம். காரணகாரிய தொடர்பு என்பது இந்திய தத்துவத்தின் ஒரு மிகப்பெரிய விவாதக்களன். இதைதான் விதியாக வளர்த்து எடுக்கிறார்கள்.

"விதியை நம்பி வீழ்ந்துகிடக்கும் வீணரெல்லாம் மாறனும்"

வர்ணக்கோட்பாடு குறித்த எனது பதிவொன்றின் சுட்டி.. இவவ்விவாதத்திற்கு உதவலாம்:
http://jamalantamil.blogspot.com/2007/08/blog-post_26.html
//

ஒரு சமூகத்தை அமுக்கி வைத்திருப்பதற்கும் காலில் இருந்து பிறந்தவர் கதையெல்லாம் நம்பிக் கொண்டு அவர்கள் அமிழ்ந்தே கிடப்பதற்கு விதியை காரணம் சொல்கிறார்கள். கண்டிக்கத்தகுந்ததுதானே ?

இன்றைய தேதியில் 'பிராமணர்கள் டெல்லியில் கழிவரைகளை சுத்தம் செய்வது மட்டும் விதிப்பயன் இல்லையா ?' அதற்கு மட்டும் ஏன் மூக்கு சிந்துவானேன் ? எல்லாம் விதிபயன் என்றால் அதுவும் விதிதானே ?

பதிவின் மையம் தொட்டு கருத்து கூறிய தங்களுக்கு மிக்க நன்றி !

நெற்றிக்கண் சொன்னது…

அருமையான பதிவு.!

கருப்பு சொன்னது…

மிகவும் அருமையான பதிவு கண்ணன். கிடுக்கிப்பிடி கேள்விகள்.

உங்கள் கேள்விகளுக்கு எந்த பாப்பானும் பதில் சொல்ல முன்வர மாட்டான், அவனால் சொல்லவும் முடியாது.

இன்றைக்கு பாப்பான் பக்கம் சேர்ந்து கொண்டு குரல் கொடுக்கும் சில பரதேசி திராவிட புண்ணாக்குகள் இந்த பதிவை படித்து தெளிவு பெற வேண்டும்.

நான் ஒரு பள்ளன், பறையன் என்று சந்தோஷமாக எழுதிக் கொள்ளும் நாய்களையும் சேர்த்தே சொல்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//விடாதுகருப்பு said...
மிகவும் அருமையான பதிவு கண்ணன். கிடுக்கிப்பிடி கேள்விகள்.//

பாராட்டுக்கு நன்றி !

//உங்கள் கேள்விகளுக்கு எந்த பாப்பானும் பதில் சொல்ல முன்வர மாட்டான், அவனால் சொல்லவும் முடியாது.

இன்றைக்கு பாப்பான் பக்கம் சேர்ந்து கொண்டு குரல் கொடுக்கும் சில பரதேசி திராவிட புண்ணாக்குகள் இந்த பதிவை படித்து தெளிவு பெற வேண்டும்.

நான் ஒரு பள்ளன், பறையன் என்று சந்தோஷமாக எழுதிக் கொள்ளும் நாய்களையும் சேர்த்தே சொல்கிறேன்.//

கருத்து மைனஸ் வசையாடல் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் ! முயற்சி செய்யுங்க !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//Nettrikkan said...
அருமையான பதிவு.!
//

மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

// RATHNESH said...
கோவி.கண்ணன்,

உங்கள் ஆதங்கத்தில் வெளிப்படுவது தங்கள் இளகிய மனது. தனக்குச் சாதகமான விஷயத்தைக் கூட, சகோதரன் பாதகமாய் உணர்கிறானே என்று வேதனைப்படும் நேர்மையைக் காட்டுகிறது என்பதைத் தவிர வேறு சொல்லத் தோன்றவில்லை எனக்கு.
//

பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி.
மோதிரகையால் குட்டவில்லை....முதுகை தட்டிக் கொடுக்கிறீர்கள்.


//அவர்கள் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் காலம் கட்டாயப்படுத்தும் போது நடப்பவை நடந்தே தீரும். யாருடைய ஏற்பையும் மறுப்பையும் காலம் சட்டை செய்வதில்லையே
//

'காலத்தின்' கோலம் அதுதான் !
:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்