பின்பற்றுபவர்கள்

9 அக்டோபர், 2007

இயலாமை என்ன செய்ய முடியும் ?

இன்று தட்ஸ் தமிழை திறந்ததும் அதன் பின்னூட்ட பகுதி தடை செய்யப்பட்டதாக அறிவித்திருந்தனர். அதற்கான காரணம் வழக்கம் போல் ஆபாச விமர்சனங்கள் தான். கருத்து தெரிவிப்பதற்கு ஒரு வழியாகத்தான் பின்னூட்ட பெட்டிகள் இருக்கின்றன. நிகழ்வுகளை, வரலாறுகளை, அரசியல்கள் ஆகியவற்றை பற்றி எவருக்குமே கருத்துக்கள் இருக்க முடியும், அவை ஒத்தக் கருத்துக்களாகவோ அல்லது எதிர்கருத்துக்களாவோ தான் இருக்கும். ஒரு நிகழ்வை சுட்டும் போது அவற்றிற்கான எதிர்வினை என்பது அந்த நிகழ்வைக் குறித்த விமர்சனம் என்றால் அது ஆரோக்யமான விவாதத்திற்கு இட்டுச் செல்லும். அதைத் தவிர்த்து அந்த எதிர்வினையானது ஆபாச அர்சனையாக மாறினால் அந்த நிகழ்வு மிக வலுவான மறுக்க முடியாத கருத்தைக் கொண்டிருக்க வேண்டும். அல்லது அந்த நிகழ்வின் மூலம் சிலர் பாதிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

இணையத்தில் கருத்துக்கள் எவரும் கூற முடியும் என்ற நிலை இருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் ஒத்த கருத்துக்கள் அல்லது எதிர்கருத்துக்களின் விழுக்காடு அதிகமாக இருக்கிறதென்பதை அளவுகோளாக்கி ஒரு முடிவுக்கு வர முடியாது. ஏனென்றால் பல சமயம் இந்த விழுக்காட்டு அளவு உயர்வு என்பது இயல்பாக அமைந்திருப்பதைவிட, விருப்போ, எதிர்ப்போ வேண்டுமென்றே விழுக்காட்டை உயர்த்தப்பட செய்யும் உத்திகளே அதிகம். அதாவது இணைய வாக்கெடுப்பு என்பதில் கண்காணிப்பு இல்லாததால் எதாவது ஒரு உத்தியில் முனைப்புடனே அதனை உயர்த்த விரும்பும் குழு அதனை செய்யும்.

இது வாக்கெடுப்பு தவிர்த்து விரும்பியவற்றை பதிவு செய்வது அல்லது எதிர்ப்பை தெரிவித்து அது பலரை சென்றடைய வேண்டுமென்றால் அந்த கருத்தாக்கம் நன்கு செறிவுடனும் ஆதாரத்தடனும் எழுதப்பட்டு இருக்கவேண்டும். அதனை பலரும் ஆதரிப்பார்கள். இதனைச் செய்வது எளிதன்று ஒரு கருத்தை மறுப்பதற்கு பொது அறிவு இன்றி அமையாது ஆனால் வரலாற்று ரீதியாக நடக்கும் மோசடிகளை அம்பலப்படுத்தும் போது அதற்குதகுந்த ஆதாரங்கள் தேவைப்படும், அதனை மறுப்பவர்களும் அத்தகையதை முன் வைக்க வேண்டும். இதற்கு அவகாசமோ, பொறுமையோ, ஏற்றுக் கொள்ளும் மனநிலையோ இல்லாதவர்கள் உடனடியாக செய்வது தான் ஆபாச அர்சனை.

ஆபாச கருத்துக்களாக வரும் எதிர்வினைகள் யாவும் ஒரு கருத்தின் வலிமையை மறைமுகமாக அவை சரிதான் என ஒப்புக் கொண்டவற்றின் காரணமாக... ஏற்க மனமுமின்றி, எதிர்க்க வழியுமின்றி இருக்கும் போது ஏற்படும் இயலாமையின் வெளிப்பாடே.

3 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

(-:

SurveySan சொன்னது…

எல்லாரும் எல்லா விதமாவும் சொல்லியும் திருந்தலன்னா என்னதான் பண்ண முடியும்.

மனிதர்கள் பலவிதம்
ஒவ்வொன்றும்
ஒருவிதம்.

ஜமாலன் சொன்னது…

வழக்கம்போல் ஒரு அவசியமான கருத்தை முன்வைத்து எழுதப்பட்டுள்ள பதிவு. இப்பதிவின் அனைத்துக் கருத்துக்களுடனும் முழுமையான உடன்பாடு எனக்கு உண்டு. வாழ்த்துக்கள்.

இது திருத்திக் கொள்ளும் பிரச்சனை அல்ல. தெரிந்தே எதிர்கருத்தை எழுதியவரை உளவியல்ரீதியாக இயங்கவிடாமல் செய்யும் ஒருவகை மிரட்டல்தான் இது. அவர்களால் பதில அளிக்க முடியாதபோது.. இப்படியாக எழுதுபவரை தடை செய்ய முயலும்மோசமான ஆரோக்கியமற்ற நடவடிக்கை இது. தவிரவுவும் பதிவுலகிற்குள் நிலவும் குழு மனப்பான்மை மற்றும் லாபிகள் உருவாக்கி செயல்படும் நிலை ஆகியவை வருந்த தக்கது. ஒத்த கருத்துள்ளவர்கள ஒரு குழுவாக செயல்படுவதும் ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுப்பதும் இருவருக்குமே அவசியமானது. நன்றி.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்