பின்பற்றுபவர்கள்

7 அக்டோபர், 2007

செல்பேசியில் பேசிக் கொண்டே...

கைக்குள் உலகம் - செல்பேசி தொழில் நுட்பத்த்தின் வளர்ச்சி. கைக்குள் உலகம் இருப்பதால் வெளி உலகம் சிலருக்கு மறந்துவிடும். முன்பெல்லாம் தொலைபேசி அழைப்பு என்றால் வீட்டுக்கு உள்ளேயே பேசி முடித்துவிடுவோம். ஆனால் கைதொலைபேசி வந்ததும் கழிவரையில் கூட அதனையும் எடுத்துச் செல்வது வரை பலரும் இணை பிரியாதிருக்கிறார்கள். இருமுறை எனது செல்பேசி பேன்ட் பாக்கெட்டில் இருந்து நழுவியதிலிருந்து ஸ்ட்ராப் போட்டு கழுத்தில் தொங்கவிட்டுக் கொள்வது வழக்கம். அதற்காகவே வடிவில் சிறியதாக வாங்குவேன். அப்படியும் ஒரு முறை குனிந்து மீன் அருங்காட்சியகத்தில் மீன்தொட்டி மீனை கையால் பிடிக்கும் போது செல்பேசியும் சேர்ந்து நீருக்குள் இறங்கிவிட்டது. :)

சாப்பிடும் போது தொலைகாட்சி பார்பது போலவே அனிச்சை செயலை அனுகூலமாக எடுத்துக் கொண்டுள்ளதால் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுவது மற்றும் சாலையில் குறுக்கே நடப்பது போன்றவற்றால் பல விபத்துக்கள் ஏற்பட்டு இருக்கின்றன.

அண்மையில் "டான்சஸ்" படத்தில் நடித்து தன்னம்பிக்கையை பறைசாற்றிய ஒற்றைக் கால் நடிகர் குட்டி செல்பேசியில் பேசிக் கொண்டே எதிர்பாராவிதமாக கீழே விழுந்து மாண்டார். அது போலவே தற்போது இளைஞர் ஒருவர் நான்காவது மாடியில் நடந்தபடி செல்பேசிக் கொண்டிருந்தவர் தடுமாறி கிழே நின்ற தள்ளுவண்டியில் முறுக்கு வியாபாரம் செய்து கொண்டிருந்த 70 வயது முதியவர் மீது விழுந்திருக்கிறார். இதில் அந்த முதியவர் படுகாயமடைந்து இறந்து போய் இருக்கிறார்ர். இளைஞரின் காலும் உடைந்ததாம்.


எல்லோரிடமும் செல்பேசி இருக்கிறது. செல்பேசியில் பேசிக் கொண்டிருக்கும் போது எதிரில் மறைந்திருக்கும் ஆபத்துக்களைக் குறித்து விழிப்புணர்வுடன் இருப்பது தேவை. பொதுச் சாலைகளில் அல்லது வாகனம் செல்லும் இடங்களில் நடந்து கொண்டே பேசுவதை தவிர்கலாம். மொட்டை மாடியிலோ அல்லது தடுப்பு இல்லாத விளிம்பு உள்ள உயரமான இடங்களில் செல்பேசுவதை தவிர்கலாம். குறிப்பாக வாகனம் ஓட்டும் போது முற்றிலும் தவிர்பது மிக நல்லது. உடனடியாக செயலாற்றவேண்டிய காரணங்கள் இருந்தால் பாதுகாப்பான இடத்தில் வாகனத்தை நிறுத்துவிட்டு பேசலாம். முடிந்தவரை நடந்து கொண்டே பேசுவதை தவிர்க்க வேண்டும். 'கரணம் தப்பினால் மரணம்' என்பது சர்கஸ் பழமொழி. தற்காலத்தில் செல்பேசியில் 'பேசும் போது கவனம் தப்பினால் மரணம்' என்று நடந்துவிடும்அன்புடன்,

கோவி.கண்ணன்

கருத்துகள் இல்லை:

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்