பின்பற்றுபவர்கள்

5 அக்டோபர், 2007

குமாரசாமி பிஜேபிக்கு வைத்த ஆப்பு ?

கூட்டணி ஆட்சிகள் விரைவிலேயே சந்திக்கு வரும் என்பதற்கு கர்நாடகாவில் நடைபெற்றுவரும் அரசே சாட்சி. கர்நாடகவில் நடந்த கடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பாண்மை இல்லாததால், ஆட்சியை 'பங்கிட்டு' கொள்வதில் உடன்பாடு ஏற்பட்டு மதச்சார்பற்ற ஜெனதா தளமும், மதச்சார்புள்ள பிஜேபியும் கைகோர்த்தன ( சார்பு இல்லாதவங்க எப்படி சார்பை சாருவாங்க ? :)

20 மாதத்துக்கு ஒருமுறை சுழற்சி முறையில் 'பங்கிட்டு'க் 'கொள்ளலாம் என்ற ஒப்பந்த கொள்கை அடிப்படையில் குமாரசாமி அரியணை ஏறினார். 20 மாதங்கள் ஆயிற்று. ஒப்படைக்கச் சொல்லி பிஜேபி நெருக்குவதைத் தொடர்ந்து, குமாரசாமிக்கு திடிரென்று பிஜேபி மதவாத கட்சி என்று ஞானோதயம் பிறந்திருக்கிறது. அதன்படி பிஜேபிக்கு 'கேசரி' கொடுத்துவிட்டார், நம்ம ஊரில் தான் அல்வா :) உறுதிமொழியை காப்பாற்றவில்லை என்று பிஜேபி குமாரசாமியை குற்றம் சொல்லி தமது அமைச்சர்களை பதவி விலக சொல்லிவிட்டது.


குமாரசாமி அதிரடியாக,

"கொடுத்த உறுதிமொழியை நான் காப்பாற்றவில்லை என பாஜக சொல்கிறது. அவர்கள் மட்டும் உறுதிமொழியை காப்பாற்றினார்களா. பாபர் மசூதியை இடிக்க விடமாட்டோம் என உச்ச நீதிமன்றத்தில் உறுதிமொழி தந்தது யார். பாஜக தான். அதே பாஜக தான் மசூதியையும் இடித்துத் தள்ளியது. இதனால் உறுதிமொழி பற்றியெல்லாம் பேச பாஜகவுக்கு எந்த அருகதையும் கிடையாது".

அந்தர்பல்டி அடித்திருக்கிறார். கவனிக்க வேண்டியது பாபர் மசூதி இடிக்கப்பட்டு 15 வருடங்கள் ஆகிறது. தற்போது 20 மாதங்கள் பதவியை அனுபவித்துவிட்டு, பிஜேபி மீது இருக்கும் பழைய குற்றத்தைச் சுமத்தி சந்தர்பவாத அரசியல் நடத்துகிறார்.

தனது பதவியை தக்கவைத்துக் கொள்ள, காங்கிரசுடன் கைகோர்த்துக் கொண்டு...கலைஞர் கருணாநிதியின் மகள் இல்லத்தை தாக்கியதையும் சாக்கிட்டு "சமீபத்தில் ராமர் பிரச்சனையை முன் வைத்து தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் வீட்டின் மீது பாஜகவும் அதைச் சார்ந்த அமைப்பினரும் தாக்குதல் நடத்தியுள்ளனர். தமிழக பஸ்ஸை எரித்து இரு அப்பாவிகளை எரித்துக் கொன்றுள்ளனர்." என்பதையும் குறிப்பிடுகிறார்.


மங்களூரில் மதக் கலவரத்தைத் தூண்டிவிட்டுள்ளனர். இந்த விவகாரங்களில் கைதான அனைவருமே பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தான். இந் நிலையில் இவர்களிடம் ஆட்சியைத் தந்தால் சிறுபான்மையினருக்கும் தலித்களுக்கும் என்ன பாதுகாப்பு இருக்கும் என்பதை பாஜக தெளிவுபடுத்த வேண்டும்... என்றும் வெடிகுண்டு வீசியுள்ளார்.


பிஜேபிக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. குமாரசாமியின் சந்தர்பவாத அரசியல் எப்படியெல்லாம் பேசவைக்கிறது என்று நினைக்க வேண்டி இருக்கிறது.

குமாரசாமி செய்வது அராஜகம் என்றாலும் மதவாத அரசியல் பற்றி கர்நாடக மாநிலத்தவருக்கு விழிப்புணர்வு தருவதற்கு அவரை பாராட்டத்தான் வேண்டும்.

தம்மை புனிதராக காட்டிக் 'கொல்ல'.. அரசியல்வாதிகள் திடிரென்று விழித்துக் கொள்வது போல் பேசுவது எப்போதும் நடப்பதுதான். திமுகவும் முன்பு பிஜேபி ஆட்சியில் 'பங்கு' பெற்றது என்று நமக்குத் தெரிவதால். 'இதெல்லாம் அரசியலில் சகஜம்பா' என்று தேற்றிக் கொள்ளலாம்.
:)

12 கருத்துகள்:

மருதநாயகம் சொன்னது…

ஒங்க பதிவுல உள்குத்து ஓவர இருக்கே

கோவி.கண்ணன் சொன்னது…

//மருதநாயகம் said...
ஒங்க பதிவுல உள்குத்து ஓவர இருக்கே
//

மருதநாயகம்,

எனக்கு ஒன்று தெரியவந்தால்...அதனுடன் தொடர்பு உள்ள பழசெல்லாம் கூட நினைவுவரும். :)

G.Ragavan சொன்னது…

இந்தப் பதிவோட கருத்துகளோட முழுக்க முழுக்க ஒத்துப்போறேன்.

பி.ஜே.பி நல்ல கட்சி இல்லைன்னே வெச்சுக்குவோம். ஆனா மத்தபயகளும் அப்படித்தான்னு வெச்சுக்கோங்களேன். எல்லாம் ஒரே குட்டைல ஊறுன மட்டைகதான். எதக் காட்டி வியாபரம் செய்றாங்கங்குறதுதான் மாறுபடும்.

தேர்தல் முடிஞ்சதும் பி.ஜே.பி+ஜ.த கூட்டணி அமையலை. மொதல் கூட்டணி காங்கிரசு+ஜ.த. அதுல மகன விட்டே கட்சிய ஒடைக்கச் சொல்லி...தனக்கும் அதுக்கும் தொடர்பில்லைன்னு சொல்லி காங்கிரசுக்குப் பால்பாயாசம் குடுத்துட்டுதான் பி.ஜே.பியோட கைகோர்த்தாங்க. ஒப்பந்தப்படி பதவியைக் குடுக்கனுமே.....மனசில்லை. ஆச யார விட்டது. ஒடனே குண்டக்கமண்டக்க பேசுறாரு. இந்தத் திடீர் போதிமரம் எங்கயிருக்குன்னு சொன்னா அதுக்கடியில எல்லாரும் உக்காந்திருந்திட்டு வரலாம். கர்நாடகால நிலையான ஆட்சீங்குறது ரொம்ப ரொம்பக் கஷ்டம். எஸ்.எம்.கிருஷ்ணா ஒருத்தர்தான் அஞ்சு வருசம் உக்காந்து ஆட்சி செஞ்சாரு.

தமிழ்நாட்டுலயும் கேட்டீங்கன்னா..எனக்கு எல்லாம் ஒரே குட்டை..ஒரே மட்டையாத்தான் தெரியுது. ஒன்னை எதுக்குறதால இன்னோன்ன ஆதரிக்க வேண்டிய நெலமை நெறையப் பேருக்கு. அட...எதுக்க வேண்டியதுன்னா ரெண்டையும் எதுப்பமேன்னு இருக்குறது என்னோட நெலமை. ஆனா ஒன்னு எல்லா அரசியல்வாதிகளும் புஷ் மாதிரிதான் பேசுறாங்க. "எங்க கூட இல்லைன்னா நீ துரோகி"ன்னு.

PPattian சொன்னது…

ராமரை வச்சி கட்சி வளத்தவங்களுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்..

குமாரசாமி காமெடி பண்ணினாலும், நல்லதே பண்றார்..

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆனா ஒன்னு எல்லா அரசியல்வாதிகளும் புஷ் மாதிரிதான் பேசுறாங்க. "எங்க கூட இல்லைன்னா நீ துரோகி"ன்னு.//

ஜிரா,

சூப்பரு :)

நம்ம வலைப்பதிவிலையும் இதே பாலிடிக்ஸ் நடக்குது.
:)

ரவி சொன்னது…

கோவியாரே...நீங்கள் மறந்தது ஒரே ஒரு பெயரை மட்டும்தான்...

அவர்தான் திரு. தேவே.கவுடா...

குமாரசாமி வெறும் பொம்மை...அவரை பின்னால் இருந்து ஆட்டுவிப்பது திரு. தேவே.கவுடா அவர்கள்தான்..

இதுபற்றி ஏற்கனவே நான் பதிவிட்டுள்ளேன்..

கொஞ்சம் கர்நாடக அரசியல் பார்ப்போமா ? என்று

இங்கே அமுக்கவும்

RATHNESH சொன்னது…

மகாபாரதத்தில் கௌரவர்கள் பக்கத்தில் ஒவ்வொருவரையும் வஞ்சகமாக அழித்த பிறகு, கிருஷ்ணன் சொன்ன விளக்கங்களை விட குமாரசாமியின் விளக்கங்களில் சந்தர்ப்பவாதம் கம்மி தான் என்பது என் கருத்து. பாஜக-வை அவர்கள் போற்றும் இதிகாச பாணியிலேயே கையாண்டு வெற்றி கண்டிருக்கிறார் குமாரசாமி என்று தான் சொல்ல வேண்டும். மத சார்பற்ற ஜனதா தளம் என்கிற பெயர் உள்ள கட்சி பாஜக-வுடன் கூட்டணி வைத்த போதே கேள்வி எழுந்து விட்டதே, ஏமாளிகள் தேவகௌடா கட்சிக்கு ஓட்டளித்தவர்களா அல்லது பாஜகவிற்கு ஓட்டளித்தவர்களா என்று. பாஜக தலைமை மட்டுமே என்று நிரூபித்திருக்கிறார் குமாரசாமி.

RATHNESH

மாசிலா சொன்னது…

ச்சீ!
//தேவே.கவுடா...//
இந்த வார்த்தை எங்கண்ணுல வேற மாதிரி பட்டுச்சி! சமாளிச்சி எழுந்துட்டேன்!
;-D

ரவி சொன்னது…

மாசிலா...

உம்ம குசும்புக்கு அளவே இல்லை...!!

Muthu சொன்னது…

கோவி,

இந்த நீ பாதி நான் பாதி அக்ரிமெண்ட் எங்கயுமே முழுசா நடந்ததில்லை என்று நினைக்கிறேன்.

அதுவும் பாரதீய ஜனதா கட்சி இதை ஒத்துக்கிட்டதுக்கு காரணமே எதோ ஒரு வகையில் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றவேண்டும் என்பதுதான்.

ஒண்ணும் குடி முழுகி போகலை.எல்லாருக்கும் தெரியும் இப்படி தான் ஆகும்னு.

உங்க பின்னூட்டத்தில் ஒரு உள்ள்ள்ள்குத்து இருந்துச்சோ???

Muthu சொன்னது…

ராகவன் சொல்றமாதிரி எல்லாரையுமே எதிர்த்துக்கிட்ட போனா நம்மளை தவிர யாரும் ஆளக்கூடாதுன்ற முடிவுக்கு தான் வரணும்..

ராகவா சும்மா தமாசுக்கு :))

G.Ragavan சொன்னது…

// முத்து தமிழினி said...
ராகவன் சொல்றமாதிரி எல்லாரையுமே எதிர்த்துக்கிட்ட போனா நம்மளை தவிர யாரும் ஆளக்கூடாதுன்ற முடிவுக்கு தான் வரணும்..

ராகவா சும்மா தமாசுக்கு :))//

அட முத்து தமிழினி...வாங்க. எவ்ளோ நாளாச்சு. எப்படி இருக்கீங்க?

ஐயா, நீங்க தமாசுங்குறீங்க. நான் வயித்தெரிச்சலுங்குறேன். செய்றது நல்லதா இருந்தா ஏன் எதுக்குறோம்? தப்புன்னு மனசுக்குப் பட்ட எதுக்குறோம். சரின்னு பட்டா ஆதரிக்கிறோம். ஆனா ஒரு குறிப்பிட்ட கட்சியோ தலைவரோ நல்லது செஞ்சிருக்காங்கங்குறதுக்காக அவங்களை எதுத்து எதுவுமே சொல்லக் கூடாதுன்னா எப்படி? அதத்தான் சொல்ல வாரேன். தப்புன்னு சொல்றதும் சரீன்னு சொல்றதும் கட்சிய வெச்சும் தலைவர வெச்சும் சொல்ல முடியாது. அதப் புரிஞ்சிக்காம புஷ்ஷிசம் பேசுனாத்தான் எரிச்சல் வருது. அதத்தான் நான் சுட்டிக் காட்டுனேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்