பின்பற்றுபவர்கள்

3 அக்டோபர், 2007

நினைவு தடங்க'ல்' !

எதிர்ப்பார்பில் விளைவதல்ல
நட்பும், காதலும் !
காதலுக்கென்று கூட எதிர்ப்பார்ப்பு
இருக்கிறது, கைகூடினால்
காமமாம்.

நட்பு ?
கொடுக்கல் வாங்கலல்ல நட்பு
என்று புனிதம் பேசினாலும்
ஒருகை தட்டி ஓசை
வரவைக்க முடியுமா ?

எனக்கு உன்னைப் பிடிக்கிறதென்பதற்காகவே
நீ வேண்டுமென்றே
சொல்லுவது 'குற்றமே' என்றாலும்
அதையும் ஏற்றுக் கொள்வேன்
என்று என்மீது 'சுமத்துவது' தான் நட்பா ?

நட்பின் அளவுகோள்
எதையும் ஏற்றுக் கொள்வதா ?
அப்படி என்றால் நான்
ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை
நீ ஏன் ஏற்கவில்லை ?
என்ற என் எதிர்கேள்வியில்
தொலைந்து போனது
நட்பு.

நினைவில் மறந்தாலும், அடிக்கடி
என் இரவு கனவை நிறப்பிவிட்டுச்
செல்கிறது அந்த நட்பு !
--
அன்புடன்,

கோவி.கண்ணன்




எனது கவிதைகள் வலைப்பூ ஸ்பேம் என்று தகவல் வருது, அதனால் எதையும் அதில் போட முடியவில்லை.
:(((

WARNING
This blog has been locked by Blogger's spam-prevention robots. You will not be able to publish your posts, but you will be able to save them as drafts.

Save your post as a draft or click here for more about what's going on and how to get your blog unlocked.

12 கருத்துகள்:

ILA (a) இளா சொன்னது…

ஒரு தனி போட ஒரு சுட்டி குடுத்து இருப்பாங்க, அதை சொடுக்கி மடல் போட்டீங்கன்னா சரி செஞ்சுருவாங்க.

ரொம்ப நாள் திறக்காத பதிவுகளுக்கு இது நடக்கிறது ஒன்னும் புதுசு இல்லே.
ம்மஹி, சிபி.. இப்படி பெரிய லிஸ்ட்டே இருக்க இப்படியா சின்ன கொழந்தையாட்டம் புலம்புறது..

ஜமாலன் சொன்னது…

உங்கள் கவிதைகள் உளிமையாகவும் அர்த்தச் செறிவுடனும் உள்ளன. கவிஞராகவும் கலக்குகிறீர்கள். பாராட்டுக்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜமாலன் said...
உங்கள் கவிதைகள் உளிமையாகவும் அர்த்தச் செறிவுடனும் உள்ளன. கவிஞராகவும் கலக்குகிறீர்கள். பாராட்டுக்கள்.
//

நண்பர் ஜமாலன்,

கவிதைகளை கிறுக்க ஆரம்பித்து கிறுகிறுத்துப் போனதால் கட்டுரைக்கு மாறிவிட்டேன். இருந்தாலும் அவ்வப்போது எழுதுவண்டு.

சில இங்கே இருக்கும் !

பாராட்டுக்கு மிக்க நன்றி !

SP.VR. SUBBIAH சொன்னது…

நன்நினைவு என்றும் தடமாகும்
பொன்நினைவு அதில் பூவாகும்
உன்(ம்)மனதில் தடங்கலது என்றானால்
நன்றான சிந்தனைவழி செல்க நாளூம்!

இராம்/Raam சொன்னது…

கண்ணன்'ண்ணே,

வாசிக்க நன்றாக இருந்தது.... :)

VSK சொன்னது…

எதிர்பார்ப்பெனும் ஒன்று வரும்போதே
செத்துவிடுகிறது நட்பும் காதலும்.

இரண்டுமே உள்ளில் விளைவன.

நட்பென்பது உரிமை
நட்பென்பது உடைமை
நட்பென்பது ஓசை பொறுத்ததல்ல!

இதை ஏன் உணர மறுத்தாய் நண்பனே!

பிடிப்பதென்பதால் வருவதல்ல நட்பு.
உள்ளத்துள் விளைவது.
விட்டுப்போனாலும் விலகி நின்று வாழ்த்தும்!

அளவுகோல் வைக்கும் போதே நட்பங்கே சாகிறது.
அவரவரை அப்படியே அவரவர் நட்பென்பதாலேயே எற்பதே நட்பு!

நீ ஏற்கவில்லை நான் ஏற்றேன் எனும் சொல்லுக்கே அதில் இடமில்லை.

கனவில் வருவதல்ல நட்பு.
நனவோடு கூடி நிற்பது!

எப்போதும்!
எந்தநிலையிலும்!
எது வரினும்!
எது சொலினும்!

"உறவுகள் விளைந்தது எனக்குள்ளே- அதில்
பிரிவுகள் என்பது இருக்காதே"
[நன்றி. டி.ஆர்.]

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH said...
நன்நினைவு என்றும் தடமாகும்
பொன்நினைவு அதில் பூவாகும்
உன்(ம்)மனதில் தடங்கலது என்றானால்
நன்றான சிந்தனைவழி செல்க நாளூம்!

8:13 PM, October 03, 2007
//

சுப்பையை ஐயா,
நற்சொல் !

கழுத்தில் விழுந்த மாலைகளைவிட, அடிபட்ட காயத் தழும்புகள் தானே என்றுமே உறுத்துபவை.

கோவி.கண்ணன் சொன்னது…

//இராம்/Raam said...
கண்ணன்'ண்ணே,

வாசிக்க நன்றாக இருந்தது.... :)

9:55 PM, October 03, 2007
//

இராம்,

உணர்வுகளை எழுத்தில் கொண்டுவந்தால் வாசிக்க, சுவாசிக்க நன்றாக இருக்கும்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//VSK said...
எதிர்பார்ப்பெனும் ஒன்று வரும்போதே
செத்துவிடுகிறது நட்பும் காதலும்.

இரண்டுமே உள்ளில் விளைவன.

நட்பென்பது உரிமை
நட்பென்பது உடைமை
நட்பென்பது ஓசை பொறுத்ததல்ல!

இதை ஏன் உணர மறுத்தாய் நண்பனே!

பிடிப்பதென்பதால் வருவதல்ல நட்பு.
உள்ளத்துள் விளைவது.
விட்டுப்போனாலும் விலகி நின்று வாழ்த்தும்!

அளவுகோல் வைக்கும் போதே நட்பங்கே சாகிறது.
அவரவரை அப்படியே அவரவர் நட்பென்பதாலேயே எற்பதே நட்பு!

நீ ஏற்கவில்லை நான் ஏற்றேன் எனும் சொல்லுக்கே அதில் இடமில்லை.

கனவில் வருவதல்ல நட்பு.
நனவோடு கூடி நிற்பது!

எப்போதும்!
எந்தநிலையிலும்!
எது வரினும்!
எது சொலினும்!

"உறவுகள் விளைந்தது எனக்குள்ளே- அதில்
பிரிவுகள் என்பது இருக்காதே"
[நன்றி. டி.ஆர்.]
//

VSK ஐயா,

கருத்துக்களுக்கு நன்றி !

உறவுகள் உடைந்தாலும் ஒட்டுவதற்கு காரணம் ஒரே 'சாதி' அதனால் சேருவது இயல்பானது.

ஆனால் நட்பில் பிரிவுகள் ஏற்படுவதற்கு புரிந்துணர்வு அடிப்படை காரணம் என்றாலும்... சில சமயம் நட்பைப் பலியிட்டு சாதிபெருமையை காப்பாற்றலாம் என நினைப்பவர்களாகவே பலர் உள்ளனர்.

நான் இதை உணர்வு பூர்வமாக பல சந்தர்பங்களில் உணர்ந்திருக்கிறேன். எனது இந்த கவிதை கூட அதைப் போல ஒன்றுதான்.

கருத்துக்கு நன்றி !

VSK சொன்னது…

//சில சமயம் நட்பைப் பலியிட்டு சாதிபெருமையை காப்பாற்றலாம் என நினைப்பவர்களாகவே பலர் உள்ளனர்.//

:)))))))))))

இது எவருக்கும் பொருந்தும்!

கோவி.கண்ணன் சொன்னது…

//VSK said...
//சில சமயம் நட்பைப் பலியிட்டு சாதிபெருமையை காப்பாற்றலாம் என நினைப்பவர்களாகவே பலர் உள்ளனர்.//

:)))))))))))

இது எவருக்கும் பொருந்தும்!
//

சரிதான்...எனக்கு தெரிந்த பலருக்கு பொருந்துகிறது. அதனாலேயே பலரிடமிருந்து நான் விலகி இருக்கிறேன், அதன் பிறகு அவர்களை எதிர்பாராதவிதமாக சந்தித்தால் மட்டுமே பேசி இருக்கிறேன்.
:(

கருத்துக்கு நன்றி வீஎஸ்கே ஐயா !

அம்பாளடியாள் சொன்னது…

நினைவில் மறந்தாலும், அடிக்கடி
என் இரவு கனவை நிறப்பிவிட்டுச்
செல்கிறது அந்த நட்பு !

அருமையான கவிதை வாழ்த்துகள் .
நன்றி பகிர்வுக்கு......

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்