பின்பற்றுபவர்கள்

10 அக்டோபர், 2007

நீதிபதிகள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களா ?

நீதிபதிகள் தீர்ப்பு வாசிப்பதென்பதோ சட்டம் என்ற அரசு விதிகளை ஒட்டித்தான் என்று சொல்லிக் கொள்கிறார்கள். பலவழக்குகள் கீழ்கோர்ட் 'நோ' சொல்ல மேல் கோர்டில் 'யெஸ்' சொல்லப்படுகிறது, அதற்கு சிறந்த உதாரணம் ஜெயலலிதாவின் 'டான்சி' வழக்கு. கீழ்கோர்டில் தண்டனை பெற்று தேர்தலில் நிற்கமுடியாமல் போனவர், மேல்கோர்ட் உத்தரவில் பன்னீருக்கு 'கல்தா' கொடுத்து மீண்டு(ம்) வந்தார். ஜெயலலிதா போன்ற செல்வாக்கு உள்ளவர்களால் பணம் செலவு பண்ண முடிகிறது. ஆனால் ஒரு சாமானியனால் டெல்லிக்கு அலைந்து கொண்டிருக்க முடியுமா ?

அண்மையில் ஒரே வழக்கிற்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்சில் இரு நீதிபதிகளும் வெவ்வேறு கருத்தை சொல்லி இருக்கிறார்கள். இருவரும் படித்தது ஒரே சட்ட புத்தகம் தானே ? பின்பு கருத்து வேற்றுமை எப்படி வரும் ?

நீதிபதிகளோ, தீர்ப்போ விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது என்றால் ஒரு நீதிபதி லஞ்சம் பெற்றுக் கொண்டு ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு பிடிவாரண்ட் கொடுத்த கதையெல்லாம் நடந்தேறி இருக்கிறது. உச்சமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கும் கடவுளாக இருந்திருந்தால், பதவியை தவறாக பயன்பாடுத்தியதற்காக, நம்பிக்கை துரோகம் செய்ததாக லஞ்ச நீதிபதியை தூக்கில் போட பரிந்துரை செய்திருக்க வேண்டும் செய்தார்களா ? வேண்டுமென்றே இழுத்தடிக்கப்படும் பல வழக்குகளை ஒரு சில நீதிபதிகள் தவிர்த்து மற்றவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் வாய்தா கொடுத்து அனுப்பவதாகத் தான் சொல்லப்படுகிறது.

நீதிமன்றங்கள் என்பது சட்ட விதிகளை மீறுவதாக எவரும் வழக்கு தொடுக்க வரும் போது அவற்றின் தரப்புகளை நன்கு கேட்டறிந்து ஆவணங்களை சரிபார்த்து தீர்ப்பு வழங்கும் அமைப்பு மட்டுமே. அந்த கல்வி தகுதி உள்ளவர்களே அந்த பதவிக்கு வரமுடியும். சுறுக்கமாக சொல்லப்போனால் நீதிபதிகளும் அரசு ஊழியர்களே. மக்கள் பிரதிநிதிகள் அல்ல.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பை கலைக்கச் சொல்ல, பரிந்துரைக்க நீதிமன்றத்திற்கு, அங்குள்ள நீதிபதிகள் அவர்கள் தன்னிச்சையாக சொல்ல எந்த அதிகாரமும் இல்லை என்றே நினைக்கிறேன். நீதிபதியாக பதவி வகிப்பவர் அத்தகைய்ய கருத்துக்களைச் சொல்ல விரும்பினால் நீதிமன்றத்துக்கு வெளியே பொதுமக்களில் ஒருவனாக, அரசியல் விமர்சகனாக சொல்ல உரிமை உண்டு, ஆனால் நீதிபதி என்ற இடத்தில் அமர்ந்து கொண்டு சொல்வது என்பது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது ஆகும் என்றே நினைக்கிறேன். இது அரசியல் சட்டத்தையே அவமதிக்கும் செயலாகும். நீதிபதிகளுக்குத் தான் கடமை இருப்பது போல் காட்டிக் கொண்டு ஜனாதிபதியின் அதிகாரத்தை பரிகாசம் செய்வது போன்ற செயலாகும் என்று கருதவேண்டி இருக்கிறது.

சட்டத்தை மதிக்கிறோம் என்று சமூகமாக வாழும் ஒரு நாட்டின் குடிமகனாக இருப்பவருக்கு, சட்டவழி பெறப்படும் நீதிபதிகளின் தீர்ப்புகள் வேண்டுமானால் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம். ஆனால் அந்த நீதிபதிகள் மூன்றாம் தர அரசியல்வாதிகள், மேடை பேச்சாளர் போல் சட்டதிட்டதிற்கு அப்பாற்பட்டு உதிர்ப்பவற்றை விமர்சனம் செய்வதிலோ, கண்டனம் தெரிவிப்பதிலோ தவறு இருப்பதாக தெரியவில்லை என்று கருதுகிறேன். 'யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே !' நீதிபதிகளுக்கும் பொருந்துதானே !

11 கருத்துகள்:

வடுவூர் குமார் சொன்னது…

இவர்கள் எந்த வட்டத்துக்குள் இருக்கவேண்டும் என்று சட்டம் சொல்லுமே!!
பிரபு ராஜதுரை போன்றோர் விளக்கினால் நன்றாக இருக்கும்.
"சோ" வோட மின்னஞ்சல் முகவரி தெரியாது ,இருந்தால் அனுப்பி விளக்கம் கேட்கலாம்.
எனக்கென்னவோ துக்ளக்கில் இதைப்பற்றிய விளக்கம் சில வருடங்களுக்கு முன்பு வந்ததாக எண்ணம்.

அருண்மொழி சொன்னது…

//ஆனால் ஒரு சாமானியனால் டெல்லிக்கு அலைந்து கொண்டிருக்க முடியுமா ?
//

நிச்சயமாக முடியும். டிராபிக் ராமசாமி அடிக்கடி supreme courtவரை சென்று கேஸ் போடுகின்றார்.

//நீதிமன்றங்கள் என்பது சட்ட விதிகளை மீறுவதாக எவரும் வழக்கு தொடுக்க வரும் போது அவற்றின் தரப்புகளை நன்கு கேட்டறிந்து ஆவணங்களை சரிபார்த்து தீர்ப்பு வழங்கும் அமைப்பு மட்டுமே. //

இது உங்களின் வாதம். அரசாங்க முடிவை பாராளமன்றத்தில் விவாதிக்கும் முன்பு எங்களிடம் குடுக்க வேண்டும் என்று நீதிபதி சொல்கின்றார். So according to them - they are above everyone else.

//மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பை கலைக்கச் சொல்ல, பரிந்துரைக்க நீதிமன்றத்திற்கு, அங்குள்ள நீதிபதிகள் அவர்கள் தன்னிச்சையாக சொல்ல எந்த அதிகாரமும் இல்லை என்றே நினைக்கிறேன்.//

The latest case is just an outburst. Looks like he cannot control his emotions. அவர்களும் மனிதர்கள்தானே!!!.

தி.மு.க அரசை கலைக்கவேண்டும் என்று உளறிய வார்த்தைகளுக்கு எந்த மரியாதையும் இல்லை. "The Hindu" reported that "Oral observations made from the bench during the course of hearings have no relevance in law."

இந்த நிகழ்ச்சியை விட மிக முக்கியமான நிகழ்வு mid-day வழக்கு. முன்னாள் தலைமை நீதிபதி மீது சுமத்தப்பட்ட ஊழல் வழக்கு. அதன் முடிவு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

எதற்கும் ஜாக்கிரதையாக இருக்கவும். உங்களின் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு என்று சில சட்ட வல்லுனர்கள் பின்னூட்டம் இடுவார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அருண்மொழி said...
The latest case is just an outburst. Looks like he cannot control his emotions. அவர்களும் மனிதர்கள்தானே!!!.//

:))

//எதற்கும் ஜாக்கிரதையாக இருக்கவும். உங்களின் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு என்று சில சட்ட வல்லுனர்கள் பின்னூட்டம் இடுவார்கள்.//

அருண்மொழி ஐயா,

இங்கு 'குறிப்பிட்டு' எதையும் விமர்சிக்கவில்லை. சட்டத்திற்கு அப்பாற்பட்டு வாய்மொழி உத்தரவு விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதா ? என்றுதான் இங்கும் விவாதிக்கிறோம். :)

லக்கிலுக் சொன்னது…

முதலில் உயர்நீதி, உச்சநீதி என்று நீதிக்கே வர்க்கம் பிரித்திருக்கும் முறையையே நான் வெறுக்கிறேன். உயர்நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்ட ஒருவர் உச்சநீதிமன்றத்தில் தண்டனை பெறுகிறார் என்று எடுத்துக் கொண்டால் உயர்நீதிமன்ற நீதிபதி பொட்டி வாங்கிவிட்டாரா? அப்படி வாங்கியிருந்தால் அவர் மீதான நடவடிக்கை என்ன?

ஜமாலன் சொன்னது…

ஜனநாயக நடைமுறையில் யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல.

//நீதிபதிகளும் அரசு ஊழியர்களே. மக்கள் பிரதிநிதிகள் அல்ல.//

சரியாக சொன்னீர்கள். பொதுவாக இறையாண்மை என்கிற சொல் கடவுள் பற்றிய அரசின் கோட்பாட்டிலிருந்துதான் வந்துள்ளது. அதனால் நீதி அரசர்கள் தங்களை அரசர்களாக அல்லது கடவுளாக எண்ணிக் கொள்வதால் வரும் விளைவு இவை.

பல நீதிமன்றங்கள் இருப்பதின் அடிப்படையே நீதி என்பது நீதிபதியின் தற்சார்புடன் உறவுடையதாக இருப்பதால்தான். இத்தற்சார்புநிலை சமீப காலங்களில் மிக அதிகமாக உள்ளது என்பதே வருந்ததக்கது.

SnackDragon சொன்னது…

நீதிபதிகளும் சரி , சட்டங்களும் சரி எதுவானாலும் மக்களால் மக்களின் உருமைகளை காப்பதற்கும், நல வாழ்வினை ஏற்படுதிக்கொடுக்கவும், சமூக அநீதிகளை ஒழித்துக்கட்டவுமே உச்ச வரம்பு அதிகாரங்களோடு ஏற்படுத்தபடுகின்றன. எப்போது சுநலமும், புரட்டும் சுரண்டலும் கலக்கின்றனவோ
அப்போதே எந்த அதிகாரங்களும் சட்டங்களும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை என்பதிலிருந்து மாறி உருவாக்கப்பட்ட குறிக்கோளை அடைவதர்கு மீண்டும் அவை சரிசெய்யப்படுதல் அவசியம். பிரச்சினை இப்படி மீளுருவாக்கலுக்கு சனநாயகத்தில் எளிமையான வழி ஒன்றை எப்போதும் ஏற்படுத்த முடியாது. அந்த முகமூடிகளின் அடியிலே இந்த சக்திகள் குளிர்காய்ந்து த‌த்தம் சுயரூபம் வெளிப்படாமல் சுரண்டலையும் ஆதிக்கத்தையும் நிலைநாட்டுகின்றன. :‍(((
அப்படியான உச்ச அதிகாரங்களை எவரும் ஏசுதல் கூடாது என்பதற்காக அவற்றினை பாதுகாக்கும் சட்டங்களும் (உதாரணமாக) இயற்றப்பட்டுள்ளன. ஆனால் அவ்வதிகாரங்களே தம்மை கேலிக்கூத்தாக்கி கொள்ளும் போதும் மக்கள் அதையே ஏற்றுக்கொள்ளவேண்டியுள்ளதே சனநாயக‌த்தின் பெரும் கேள்விக்குறி.

PRABHU RAJADURAI சொன்னது…

இப்படி ஒரேடியாகப் போட்டு கும்மினால், எப்படி பதில் சொல்வது...

சில பொருமல்களுக்கு என்னுடைய பதிவில் பதில் உள்ளது,கலாமுக்கு வாரண்ட் அனுப்பிய விவகாரம் உட்பட

appeal is a concession given to the fallibility of human nature...

கோவி.கண்ணன் சொன்னது…

//பிரபு ராஜதுரை said...
இப்படி ஒரேடியாகப் போட்டு கும்மினால், எப்படி பதில் சொல்வது...

சில பொருமல்களுக்கு என்னுடைய பதிவில் பதில் உள்ளது,கலாமுக்கு வாரண்ட் அனுப்பிய விவகாரம் உட்பட

appeal is a concession given to the fallibility of human nature...
//

பிரபு ராஜதுரை சார்,

உங்களின் அந்த நடுநிலையான இடுகையைப் படித்தேன்.

Thamizhan சொன்னது…

இந்திய உச்ச நீதி மன்றத்திலே சாதி வெறியும் மத வெறியும் தாண்டவமாடுவதை மறைக்கவோ,மழுப்பவோ முயற்சிப்பது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போலத்தான்.

சாமியார்கள் வழக்குகள் ஆனாலும் சரி,ஆசாமிகள் வழக்குகள் ஆனாலும் சரி இந்த வெறி வெட்ட வெளிச்சம்!

சொல்லரசன் சொன்னது…

அருண்மொழி said.
//எதற்கும் ஜாக்கிரதையாக இருக்கவும். உங்களின் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு என்று சில சட்ட வல்லுனர்கள் பின்னூட்டம் இடுவார்கள்.//

இதையே சொல்லி சொல்லி மக்களை மடையர் ஆக்கியுள்ளீர்

சொல்லரசன் சொன்னது…

பூனைக்கு மணிகட்டிய பதிவு
வாழ்த்துகள் கோவி.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்