திருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம் (காதல் திருமணம்) இருந்ததாக இலக்கிய குறிப்புகள் சொல்லுகின்றன. முருகன் வள்ளியம்மையை வளைத்தது களவு மணமாம்.
வருணம் (சாதி பேதம்) செழித்து வளர்ந்த பின்புதான் சாதிக்குள் திருமணமும், அதுவும் பெற்றோரால் பார்த்து வைக்கப்பட்டதாகவும் மாறி இருக்கிறது. குடும்ப வழக்கம் (சம்பிரதாயம்)என மாறிவிட்ட திருமண நிகழ்வை மனம் போல் மாங்கல்யம் என்பதெல்லாம் பெயரளவுக்குச் சொல்வதுதான். நமக்கு முன்னோர்களும் பெற்றோர்களாலேயே திருமணம் செய்து கொண்டுள்ளதால் இளையர்களும் அது தான் முறையானது என்று திருமண முறைகளை ஏற்றுக் கொண்டு, இது இந்திய வழக்கம் என்ற பரிணாமத்தை அடைந்துள்ளது.
பெற்றோர் பார்த்துவைக்கும் திருமணங்களை இந்துக்கள் மட்டுமா கடைபிடிக்கிறார்கள் ? இல்லையே இந்தியர் அனைவருமே தத்தம் மதக் கோட்பாட்டுக்கு ஏற்றவாறு பெற்றோர் நடத்தி வைக்கும் திருமண முறைகளையே பின்பற்றுகின்றனர்.
வரதட்சனை வாங்கும் பழக்கம் தமிழக இஸ்லாமியர்களிடம் இருக்கிறது என்பதை இஸ்லாமிய நண்பர்கள் மறுக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். பொதுவாக நமக்கு அடுத்து இரண்டு வயது குறைவாக இருந்தால் தங்கைக்கு மணம் முடித்துவிட்டுதான் அண்ணனாக இருக்கும் நாம் திருமணம் செய்து கொள்வது வழக்கம். பெரும்பாலும் இப்படித்தான். சில சமயம் சூழ்நிலையின் காரணமாக அண்ணனுக்கு திருமணம் முதலில் ஆவதும் உண்டு. கீழக்கரையைச் சேர்ந்த எனது இஸ்லாமிய நண்பர் ஒருவர் தமது தங்கைக்கு திருமணம் விரைவில் முடிக்க வேண்டும் அதற்காக தாம் உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் பெண் தேடிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார். எனக்கு வியப்பாக போய்விட்டது. அதற்கும் இதற்கும் என்ன தொடர்போ ? என்றேன். அவர் சொன்னார், பெண்விட்டில் கொடுக்கும் பணத்தை வைத்துதான் எனது தங்கை திருமணத்தை நடத்த முடியும் அதனால் தான் நான் இப்போது திருமணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன் என்றார். கீழக்கரை போன்ற ஊர்களில் இஸ்லாமிய மணமகனுக்கு அவர் குறைவாக சம்பாதிப்பவராக இருந்தாலும் சுமார் 5 லட்சம் வரை கொடுப்பார்களாம்.
இந்த வேண்டாத பழக்கத்தை இந்துக்களிடமிருந்தே தமிழக இஸ்லாமியர்கள் பின்பற்றி இருக்க வேண்டும். இன்னும் இது அவர்களிடையே நடைமுறையில் இருக்கிறதா என்று தெரியவில்லை.
இது பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணங்களால் ஏற்பாடும் ஒரு சிக்கல் என்பதற்க்காக இதை இங்கு குறிப்பிட்டேன்.
பதிவின் தலைப்புக்கு வருவோம்.
இந்துக்களில் மாமன் மகள் / மகனை மணந்து கொள்ளும் பழக்கம் இருக்கிறது. இங்கு பெரும்பாலும் சொல்வது 'மாமன்' என்ற உறவு முறையை மட்டும் தான். மாமன் என்பவர் யார் ? அம்மாவுடன் பிறந்த அண்ணனோ, தம்பியோ தான். அக்கா - தம்பி உறவுகள் அவர்களின் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பதன் மூலம் தொடருகிறது என்பது ஒருபக்கம் இருந்தாலும் சொத்துக்கள் பிரிந்துவிடக் கூடாது என்பதுதான் பரவலாக இவ்வகை திருமணங்களின் காரணிகளாக அமைகின்றன. பெருளற்றாருக்கு இவ்வுலகம் இல்லை. காசு இல்லாத மாமன் கடன்காரனுக்குச் சமம். ஏழ்மையாக இருக்கும் உறவு முறை என்னதான் நெருக்கமாக இருந்தாலும் உறவு முறை திருமணம் அங்கு கேள்விக்குறிதான்.
இங்கு கவனிக்கப்பட வேண்டியது தங்கை - அண்ணன் ஒரே இரத்தம். மாமன் மகளோ மகனோ மாமனைப் (அம்மாவின் தம்பி / அண்ணன் ) போலவே தோற்றம் கொண்டவர்களாகவும் ( கிட்டதட்ட நம்முடன் பிறந்தவர்களைப் போலவே) இருப்பார்கள், ஆனாலும் திருமணத்திற்கு தடையில்லை ஏனென்றால் இங்கு திருமண ஒப்பிற்கு காரணம் மாமனின் மனைவி வேறு குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பது மட்டும் தான். இது முறையான திருமணம் ?
அடுத்து இஸ்லாமிய சமூகத்தில் அண்ணன் - தம்பி சம்பந்திகளாவதற்கு மதத்தில் தடையில்லை. எனது நெருங்கிய நண்பர் கூட பெரியப்பாவின் மகளை மணந்திருக்கிறார்.
இங்கும் பெரியப்பாவின் அல்லது சித்தப்பாவின் மனைவி வேறு ஒருவர் தானே ?
பெரியப்பாவின் பிள்ளைகள் அவரது மனைவியின் தோற்றத்தைக் கொண்டிருந்தாலும் திருமணம் செய்து கொண்டால் முறையற்றதா ?
மாமன் மகளை ( அம்மாவின் தம்பி / அண்ணன் மகளை) மணப்பதும், பெரியப்பா / சித்தப்பா மகளை மணப்பதும் ஒன்று போலத்தான், ஒரே இரத்தம் தொடர்புடையது. பெரியப்பா மகளை மணப்பது சரி இல்லை முறையற்றது என்றால் அம்மாவின் தம்பி / அண்ணனின் மகளை/ மகனை மணப்பதும் கூட முறையற்றதே.
அப்பாவின் அண்ணனை பெரியப்பா என்று சொல்வது போல் அப்பாவின் அக்காவை பெரியம்மா என்று சொல்வதில்லை என்பதால் ஒன்றை முறையானதாகவும் மற்றொன்றை முறையற்றதாகவும் சொல்கிறார்கள். அப்பாவுடன் பிறந்தவர்கள் பெரியப்பாவாக இருந்தாலும் அத்தையாக இருந்தாலும் இதெல்லாம் உறவுமுறையின் பெயர்கள் தான். அதற்கும் திருமண சம்பந்ததிற்கும் உள்ள தொடர்பை நாமகவே வலிய ஏற்படுத்திக் கொண்டது தான். சித்தப்பாவிற்கு / பெரியப்பாவிற்கு மீசை இல்லாதிருந்தால் அத்தை ஆகி இருப்பாரே. :))
அத்தைக்கு மீசை இருந்தால் சித்தப்பாவோ / பெரியப்பாவோ தானே :))
மாமன் மகளை (அக்காவின் மகள் / அம்மாவின் அண்ணன்/தம்பியின் மகள்) மணப்பதும் சித்தப்பா / பெரியப்பாவின் மகளை (முறைப்படி தங்கை) மணப்பதும் ஒன்றே. இரண்டுமே ஒரே குடும்ப இரத்த சம்பந்தம் தான். இதில் அவரவர் ஏற்றுக் கொண்டுள்ள மத வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள். ஒன்று முறையற்றது என்று சொலவதற்கு அறிவு ரீதியான காரணங்கள் எதுவும் இல்லை. வெறும் உறவு முறை காரணங்கள் மட்டுமே. அதுவும் நாம் பின்பற்றும் மதத்தில் சொல்லப்படும் காரணங்கள் எநத வேதத்தில் இருக்கிறது என்று தெரியவில்லை.
அம்மாவின் தம்பியின் வீட்டில் சம்பந்தம் கொள்வதும், அப்பாவின் தம்பியின் வீட்டில் சம்பந்தம் கொள்வதும் ஒன்றே ! இதில் அப்பாவின் தம்பியின் வீட்டில் சம்பந்தம் கொள்வது முறையற்றது என்று சொல்வதற்கான பின்புலம் என்ன வென்று பார்த்தால் ஒழுங்கீனமாக காட்டவும், வேண்டுமென்றே வலியுறுத்தியும் , தங்கை முறை உள்ளவர்களை திருமணம் செய்வர் உறவு முறை தெரியாதவர்கள் என்று சிறுபாண்மையினரை சுட்டி சொல்லப்படுவதும் அவர்களை எள்ளுவதற்காக ஏற்படுத்திக் கொண்ட காரணம் மட்டுமே வேறு ஒன்றும் இல்லை. இதற்கு தமிழினத்தை நண்பர் ஹரிஹரன் இழுப்பது சிரிப்பை வரவழைக்கிறது. இவர் தாம் விரும்பி பரிமாறும் சனாதன தயிர்சாத புளிப்பை மறைப்பதற்கு அவ்வப்போது போது தமிழினத்தை ஊறுகாயாக கொண்டு வந்து தூக்கி (து)வைப்பார்.
என்னைப் பொருத்தும், மருத்துவ உலகத்தைப் பொருத்தும் உறவு முறைக்குள் திருமணம் செய்வதுதான் முறையற்றது. பரம்பரை வழி நோய்களும், நோஞ்சான் பிள்ளைகளும், உடல் குறையுடன் பிறப்பதற்கும் உறவு முறை திருமணங்கள் வழிகோளுகின்றன.
காதல் திருமணங்களே சமுக நல்லிணக்கத்துக்கும், சந்ததிகளுக்கும் நல்லது !
பின்பற்றுபவர்கள்
6 செப்டம்பர், 2007
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
68 கருத்துகள்:
நல்ல பதிவு.
//காதல் திருமணங்களே சமுக நல்லிணக்கத்துக்கும், சந்ததிகளுக்கும் நல்லது !//
மெத்தச் சரி. அதைத்தான் 33 வருசத்துக்கு முன்னாடி நடத்திக்கிட்டோம்.
இந்துக்கள் என்று சொல்வதைவிட, திராவிட கலாச்சாரம் அதாவது தெற்கில் மட்டுமே இந்த உறவு முறையில் திருமணம் செய்வது உள்ளது. வடக்கில் கிடையவே கிடையாது. கசின்கள் சொந்த உடன்பிறப்புக்களாய் பார்க்கிறார்கள். ஈழத்தில் கூட இந்த உறவு முறையில் மணப்பது இல்லை என்று நினைக்கிறேன்.
//காதல் திருமணங்களே சமுக நல்லிணக்கத்துக்கும், சந்ததிகளுக்கும் நல்லது //
குடும்பத்துக்கு நல்லதா? இன்னொரு பதிவு போடவும். டீச்சர் அங்கே வாங்க, கச்சேரி இருக்கு,
இது கொஞ்சம்..சுத்து விடுறா மாதிரி இருக்கு...
இதுல பாத்தீங்கன்னா..ஒரு சில மக்களிடம், குலம், கோத்திரம் அப்படின்னு உட்பிரிவு இருக்கும்..அதுல.இந்த கோத்திரத்துக்கு, இந்த கோத்திரம் தான் திருமணம் செய்யலாம் அப்படின்னு இருக்கும்..
பெண்கள்..திருமணம் ஆனதும், அவங்க வேற கோத்திரம் ஆகிடுறாஙக..அதுனால, அவங்க சம்பந்தி ஆகலாம்...
அண்ணன் தம்பிக்கு திருமணம் ஆனாலும் கோத்திரம் மாறுவதில்லை...அதனால அவர்கள்..சம்பந்தி ஆக முடியாது
இது gene pool மிக்ஸ் ஆகாம oru அளவுக்கு தடுக்கும்...
இதுல..முக்கியமான விசய்ம, இந்த உட்பிரிவு எல்லா சாதியிலும் இருக்கும் என்று நினைக்கிறேன்...
சரியா தெரியல்ல....தெரிஞ்சவங்க சொல்லலாம்...
குடும்பத்துக்கு வெளியே காதல் திருமணம் என்பது...ரொம்ப சேஃப் தான்..
ஆனா முழுக்க முழுக்க காதல் திருமணங்களை ஆதரிப்பதில் எனக்கு கருத்து வேறு பாடு உண்டு..
நல்ல பதிவு.
மாமன் மகளை மணந்து கொள்ளும் இந்து ,கிறிஸ்தவர்கள் (சில நேரங்களில்) சித்தி மகளை மணந்து கொள்வதை மட்டும் குறை சொல்லுவது ஏற்க முடியாதது .இரண்டுமே ஒன்று தான் என்பது என் கருத்தும்.
கோவி. இந்த தந்தை வழி உறவுகளை சகோதர சகோதரியாகத்தான் பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொள்வதற்கு வேறு சில காரணங்கள் கூட இருக்கலாம்.
இந்து சமுதாயத்தில் பொதுவாக பார்த்தீர்களானால், ஆரம்ப காலங்களில் கூட்டுக் குடும்பம் என்ற அமைப்பே இருந்து வந்தது. இவ்வகைப்பட்ட குடும்ப அமைப்புகளில் தந்தை வழி உறவுகள் ஒரே வீட்டிலோ அல்லது பக்கத்து பக்கத்து வீடுகளிலோ வசிப்பவர்களாகத்தான் இருந்து வந்திருக்கின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில், மணம் புரிய உங்களுக்கும் உரிமையுள்ளது என்று சொல்லி வளர்க்கப் படும் சின்னஞ் சிறிசுகள் சலனப் பட அதிக வாய்ப்பிருக்கிறது என்பதால் கூட நீங்கள் சகோதர சகோதரிகளாக வாழ கடமைப் பட்டவர்கள் என்று ஆரம்பத்திலிருந்தே சொல்லி வளர்க்கப் பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது.
இது யூகமே....
http://blog.nandhaonline.com
//நந்தா said...
கோவி. இந்த தந்தை வழி உறவுகளை சகோதர சகோதரியாகத்தான் பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொள்வதற்கு வேறு சில காரணங்கள் கூட இருக்கலாம்.
//
நந்தா,
பெரியப்பா சித்தப்பா வாரிசுகளை மணக்கலாம் என்று நான் சொல்லவரவில்லை. அப்படி மணக்கும் மதத்துக்காரர்கள் எதோ மனித உறவுகளுக்கு மாறானவர்கள் போல் சித்தரித்து சிலர் காட்டுவதை
இங்கு குறிப்பிட்டு இருக்கிறேன்.
அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா அல்லது பெரியப்பா !
:)
//பெரியப்பா சித்தப்பா வாரிசுகளை மணக்கலாம் என்று நான் சொல்லவரவில்லை. அப்படி மணக்கும் மதத்துக்காரர்கள் எதோ மனித உறவுகளுக்கு மாறானவர்கள் போல் சித்தரித்து சிலர் காட்டுவதை
இங்கு குறிப்பிட்டு இருக்கிறேன்.
அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா அல்லது பெரியப்பா !
:)//
நியாயம்தான்.
// ILA(a)இளா said...
நல்ல பதிவு. //
பதிவை படிக்காமால் நல்ல பதிவு போடுவதற்கு ஒரு நாள் உங்கள் நண்பர்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளத்தான் போகிறீர்கள் இளா !
:)
//துளசி கோபால் said...
மெத்தச் சரி. அதைத்தான் 33 வருசத்துக்கு முன்னாடி நடத்திக்கிட்டோம்.
12:13 PM, September 06, 2007
//
கோபால் ஐயாவிடம் கேட்கனும். யார் யாரை முதலில் கவர்ந்தாங்க என்று !
:)
//ramachandranusha(உஷா) said...
இந்துக்கள் என்று சொல்வதைவிட, திராவிட கலாச்சாரம் அதாவது தெற்கில் மட்டுமே இந்த உறவு முறையில் திருமணம் செய்வது உள்ளது. வடக்கில் கிடையவே கிடையாது. கசின்கள் சொந்த உடன்பிறப்புக்களாய் பார்க்கிறார்கள். ஈழத்தில் கூட இந்த உறவு முறையில் மணப்பது இல்லை என்று நினைக்கிறேன்.
//
வாங்க உசா,
அதுதான் ஹரிஹரன் சரியாக திராவிட பெத்தடின் தமிழினத்தின் கலாச்சாரம் என்று சொல்லி இருக்கார் போல இருக்கு.
:)
//ILA(a)இளா said...
குடும்பத்துக்கு நல்லதா? இன்னொரு பதிவு போடவும். டீச்சர் அங்கே வாங்க, கச்சேரி இருக்கு, //
குடும்பத்துக்கு நல்லதா ? மாமியார் மருமகளைப் பார்த்து மகனை மயக்கியதாக குறை சொல்லவில்லை என்றால் குடும்பத்துக்கு நல்லதுதான்.
//குடும்பத்துக்கு வெளியே காதல் திருமணம் என்பது...ரொம்ப சேஃப் தான்..
ஆனா முழுக்க முழுக்க காதல் திருமணங்களை ஆதரிப்பதில் எனக்கு கருத்து வேறு பாடு உண்டு.. //
உங்க அனுபவம் அப்படி சொல்லுது போல மாவு கட்டு போட்டுக் கொள்ளுங்க. வெறும் கால் கட்டு பத்தாது.
//ஜோ / Joe said...
நல்ல பதிவு.
மாமன் மகளை மணந்து கொள்ளும் இந்து ,கிறிஸ்தவர்கள் (சில நேரங்களில்) சித்தி மகளை மணந்து கொள்வதை மட்டும் குறை சொல்லுவது ஏற்க முடியாதது .இரண்டுமே ஒன்று தான் என்பது என் கருத்தும்.
1:05 PM, September 06, 2007
//
பதிவுன் கருத்தை வலியுறுத்தும் 'ஜோ' வுக்கு 'ஓ !
:)
நடுத்தர மற்றும் பணக்கார மேல் சாதிகளில்தான் இது போன்ற கண்றாவிகளெல்லாம்.
சொத்து வெளியே போகக்கூடாதுன்னு பிள்ளைகளை பகடைகாயா வெச்சி வெளையாடுற விளையாட்டுதானுங்க இது.
இரத்த நெருக்கம் ரொம்பவும் கிட்ட இருந்தா பொறக்குற கொழந்தைகளுக்கு ஏதாவது கட்டாயம் தீர்க்க முடியாத வாழ்நாள் ஊனம் இருக்க வாய்ப்புண்டு.
//வெறும் உறவு முறை காரணங்கள் மட்டுமே. அதுவும் நாம் பின்பற்றும் மதத்தில் சொல்லப்படும் காரணங்கள் எந்த வேதத்தில் இருக்கிறது என்று தெரியவில்லை/
நல்ல பதிவு. திருமணமுறைக் குறித்து உங்கள் பதிவு எனக்குள் பலவித எண்ண ஒட்டங்களை ஏற்படுத்தி பின்னோட்டமே ஒரு பெரும் கட்டுரையாக மாறிவிட்டது. அதனால் அதை எனது பதிவில் ஒரு கட்டுரையாக இட்டுவிட்டேன்.
http://tamilbodypolitics.blogspot.com/2007/09/blog-post.html
இவ்விணைப்பில் தாங்கள் அதைவாசித்து உங்கள் கருத்தை பின்னோட்டமிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். (உங்கள் முந்தைய பதிவில் குறிப்பிட்டதைப்போல இது ஆள்பிடிக்கும் வேலையில்லை. ஆரொக்கிமான கருத்தாடலுக்கே)
//பெண்கள்..திருமணம் ஆனதும், அவங்க வேற கோத்திரம் ஆகிடுறாஙக..அதுனால, அவங்க சம்பந்தி ஆகலாம்...//
நான் அறிந்தவரை கோத்திரம் என்பது பிராமணர்கள் மத்தியில் மட்டுமே நிலவும் ஒரு உடட்பிரிவு. அதாவது ஒரு குறிப்பிட்ட முனிவரின் கால்வழியாக தங்களத வம்சத்தை கர்த்துக் கொண்ட பிராமணர்கள் அம்முனிவரின் பெயரால் தங்களை அகத்திய கோத்திரம் பரத்வாஜ கோத்திரம் என அழைத்துக் கொள்கிறார்கள். அதற்குள் பிறமணக் குழுமுறையை பின்பற்றுகிறார்கள். ஒரே கோத்திரத்தில் மணம் முடிப்பதில்லை. நன்று நமக்கு தீது பிறருக்குத்தானே..
URavukkuL thirumaNam mudikkak koodaathu
enbathaRku niRaiya eduththukkaatukaL
itukkinRana.
Arokkiyamaana maaRRu sinthanai veeNdum.
nalla pathivu Kannan.
கிறிஸ்துவ குடும்பங்களில் (கத்தோலிக்கர்கள்)தாய் மாமன் மகனையோ மகளையோ திருமணம் புரிய தேவாலயத்தில் அத்தனை எளிதில் அனுமதி கிடைக்காது. எந்த சூழலில் இது தேவைப்படுகிறது என்றெல்லாம் விசாரித்துத்தான் அனுமதிப்பார்கள். இந்த சூழலில் சித்தி மகன்/மகள் என்ற கேள்விக்கே இடமில்லை.
நெருங்கிய உறவினர்களுக்குள் (அதாவது தாய் வழி, தந்தை வழி இன்னும் சொல்லப் போனால் ரத்த சம்பந்தம் உள்ளவர்கள்) நடக்கும் திருமண பந்தத்தினால் பிறக்கும் குழந்தைகளுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகும் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு என்கிற உடல்/உள்ள ரீதியான காரணங்களுக்காகவே இத்தகைய திருமணங்கள் தடைசெய்யப்படவில்லையானாலும் வரவேற்கப்படுவதில்லை.
மற்றபடி இதற்கு மாற்று காதல் திருமணம்தான் என்றில்லை. என்னுடைய குடும்பத்தில் என்னுடைய எந்த சகோதரருக்கும் சொந்தத்தில் பெண் எடுத்ததில்லை. எவ்வித உறவும் இல்லாத குடும்பங்களிலிருந்துதான். ஆகவே காதல் இல்லாமலே இத்தகைய திருமணங்கள் சாத்தியம்.
வர வர என் பதிவுகளின் நீளம் உண்மைத் தமிழனின் பதிவு நீளத்துக்கு போட்டு போடுவதாக சாட்டில் ஒருவர வதைக்கிறார்.
:)
//இந்த உட்பிரிவு எல்லா சாதியிலும் இருக்கும் என்று நினைக்கிறேன்.//
பிராமணர்களில் கோத்திரம் என்ற அமைப்பிருப்பது போல செட்டியார்களில் அவர்களின் குலதெய்வக் கோவிலை பொறுத்து வம்சாவளியை கணக்கிடுவார்கள். நகரத்தார்களுக்கு முக்கியமான 9 கோவில்கள் உண்டு. அதில் ஏதேனும் ஒன்றிற்கு உட்பட்டவர்களாய்த்தான் ஒவ்வொரு குடும்பமும் இருக்கும். ஒரே கோவிலைச் சேர்ந்தவர்கள் பெண் கொடுக்க/எடுக்க மாட்டார்கள்.
இந்து சமுதாயம் பொதுவாய் ஆண்வழிச் சமுதாயமாக இருந்து வருகிறது. அதனால் பெண் திருமணம் செய்து கொண்டு இன்னொரு வீட்டிற்கு சென்று விடுகிறாள். அவளுக்குப் பிறந்த மகனுக்கு இங்கிருந்து பெண் கொடுப்பதோ அவரது மகளை தன் மகனுக்குத் திருமணம் செய்வதோ தவறில்லையென்று ஒரு எண்ணம் நமக்கு. அவ்வளவே. எனவே அப்பாவோடு பிறந்த அண்ணன் மகளையும், அக்கா மகளையும் ஒன்றாய் கருத முடிவதில்லை - இந்த சிந்தனை நம் சமுதாய அமைப்பின் காரணமாய் ஏற்படுவதேயன்றி வேறில்லை. சில குடும்பங்களில் தன் சொந்த அக்காள் மகளையே மாமனுக்கு மணமுடிப்பதும் உண்டு. அங்கும் அதே தத்துவம்தான் - அக்கா திருமணமாகி வேறு வீடு சென்றவள். வருகின்ற பெண் தன் அத்தானின் மகளேயன்றி நம் வீட்டுப் பெண்ணில்லை என்று எண்ணத் தோன்றுகிறது(இப்படி பாட்டி வீட்டிற்கே திருமணமாகிப் போன பெண்களில் சிலரும் தன் பாட்டியோடே மாமியார்-மருமகள் சண்டை போடும் காமெடியும் நடப்பது உண்டு :) ).
பெரும்பாலும் இதற்கு இரண்டு காரணங்களிருக்கும் - ஒன்று சொத்து வெளியே போய்விடக்கூடாதென்பது. இன்னொன்று தன் சொந்தத்தில் கொடுத்தால் மகள் கண்ணெதிரே இருப்பாள், பார்த்துக் கொள்ளலாம் என்பது. தெரிந்த பேய் தெரியாத தேவதையை விட மேலானது என்பது போல :) அத்தோடு சகோதரி ஏழ்மையில் இருப்பதற்காக செலவு அதிகம் செய்யாது என் மகனுக்கே கொடுத்துவிடு என்று செய்து கொள்ளும் தாய் மாமன்களும் உண்டு. நன்றிக் கடனுக்காக நடந்த சில திருமணங்களும் உண்டு - தன்னை படிக்க வைத்த அக்கா கணவன் இப்போது நொடித்து போன நிலையில் இருக்க, அக்கா மகளை தன் மகனுக்குத் தன் சொந்த செலவிலேயே திருமணம் செய்து கொண்டு நன்றிக் கடன் தீர்த்த ஒருவரை அறிவேன் நான். எனவே சொத்துக்காக மட்டுந்தான் இவ்வகைக் கல்யாணங்கள் நடக்கும் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல - சொத்தில்லாததாலும் கூட நடக்கும்.
இப்படி ஆயிரம் சமூகவியல் - மனவியல் காரணங்களிருக்கலாம். எது தகும் தகாது என்பதற்கான வரையரை ஒவ்வொரு மதத்திற்கும் வேறு வேறாயிருக்கலாம். அதற்காக நான் செய்வது மட்டுமே சரி, நீ செய்வது தவறு என்று சொல்வது நகைப்புக்குரியது - அதிலும் இருவர் செய்வதுமே அறிவியல் ரீதியாகத் தவறு என்று ஏற்பட்டுவிட்ட இந்நாளில் அதை சொல்வது இன்னமும் மோசம்.... ஹ்ம்ம்... சிலர் திருந்த மாட்டாங்க, விடுங்க.
//கோவி.கண்ணன் said...
வர வர என் பதிவுகளின் நீளம் உண்மைத் தமிழனின் பதிவு நீளத்துக்கு போட்டு போடுவதாக சாட்டில் ஒருவர வதைக்கிறார்.:)//
இதெல்லாம் உங்களுக்கே நியாயமா கோவி ஸார்.. இம்புட்டு நீளத்துக்குப் போடுறதுன்னு நீங்களே முடிவு பண்ணீட்டிங்க.. சமாளிக்கிறதுக்கு என்னைக் கை காட்டுறீங்களா.. சரி.. பொழைச்சுப் போங்க..
//இந்த வேண்டாத பழக்கத்தை இந்துக்களிடமிருந்தே தமிழக இஸ்லாமியர்கள் பின்பற்றி இருக்க வேண்டும். இன்னும் இது அவர்களிடையே நடைமுறையில் இருக்கிறதா என்று தெரியவில்லை.//
(பெண்ணுக்கு திருமணக் கொடை கொடுக்க சொல்லும்) இஸ்லாத்திற்கு எதிரான இந்த வரதட்சணை பழக்கம் சுமார் இருபதாண்டுகளாக கடுமையாக இஸ்லாமிய மேடைதோறும் கண்டிக்கப் படுவதால் கணிசமாக குறைந்திருக்கிறது எனச் சொல்லலாம். ஆனால் இன்னும் இஸ்லாமியரிடமிருந்து முழுதுமாக ஒழிந்த பாடில்லை.
//நான் அறிந்தவரை கோத்திரம் என்பது பிராமணர்கள் மத்தியில் மட்டுமே நிலவும் ஒரு உடட்பிரிவு. அதாவது ஒரு குறிப்பிட்ட முனிவரின் கால்வழியாக தங்களத வம்சத்தை கர்த்துக் கொண்ட பிராமணர்கள் அம்முனிவரின் பெயரால் தங்களை அகத்திய கோத்திரம் பரத்வாஜ கோத்திரம் என அழைத்துக் கொள்கிறார்கள். //
தவறு... பல்வேறு சாதிகளிலும் இந்த கோத்திர அமைப்பு உள்ளது. இந்த கோத்திர அமைப்பின் கீழ் ஏதாவது அறிவியல்பூர்வமான விளக்கம் இருக்குமா என் அறிய ஆசை...
இதுக்கு என்ன அர்த்தம்..?
/* நன்று நமக்கு தீது பிறருக்குத்தானே..*/
மருத்துவ ரீதியாக இது பிரச்சினைகளை உண்டாக்கும்.
ஆனால் compatibility என்று பார்த்தால் இங்கு
இருவரும் ஒரே குடும்பத்திலிருந்து வருவதால் பிரச்சினை
இருக்காது. மாமியார் மருமகள் பிரச்சினை கூட இருக்காது.
யாரும் தம்பி மகளை வேறு வீட்டு பெண் போல நடத்த
மாட்டார்கள்.
தமிழ்நாட்டில் தாய் மாமனை திருமணம் செய்வார்கள்
என்று சொன்னதற்கு ஒரு நாயர் பெண்மணி அய்யோ
அம்மாவான் தந்தை போல,அது எப்படி திருமணம் செய்யலாம்
என்று சண்டைக்கு வந்துவிட்டார். அதே போல நாயர்
குடும்பத்து வழக்கங்கள் தமிழ்நாட்டில் சொன்னால் எடுபடாது.ஊருக்கு ஊர் பழக்கம் வேறுபடும்.எது சரி தவறு என்று எப்படி
சொல்வது?
இன்றைய மருத்துவம் இப்படி உறவு முறைகளின் படி திருமணம் செய்து கொள்வது தவறு; பிறக்கும் குழந்தைகள் ஊனத்துடன் பிறக்கும் என்று சொல்வதால் பல இடங்களில் உறவு முறைத் திருமணங்கள் வரவேற்கப்படாமல் இருக்கின்றன என்பதைப் பார்த்திருக்கிறேன். என் திருமணப் பேச்சு எடுக்கப்பட்ட போது கூட பலர் உறவிலிருந்து பெண் கொடுக்க முன் வந்தார்கள்; உறவில் அவர்கள் எவ்வளவு தூரத்து உறவாக இருந்தாலும் மணக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டதால் வெளியிலிருந்து பார்த்து திருமணம் செய்தார்கள்.
மருத்துவ அறிவியல் இப்படி சொல்கிறது என்ற விழிப்புணர்ச்சி இருந்தாலும் சமுதாய நடைமுறை என்ற அளவில லக்ஷ்மி சொன்னது போல் பல வித காரணங்களால் உறவு முறையில் திருமணங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
கல்லூரியில் படிக்கும் போது வத்திராயிருப்பு நூலகத்தில் இருந்து வாங்கிப் படித்த இந்து திருமணச்சட்டம் பல செய்திகளைச் சொன்னது. இந்து திருமணச்சட்டத்தின் படி சபிண்ட முறை என்று சொல்லி பல விதமான கசின்களைத் திருமணம் செய்து கொள்வது தடைப்படுத்தப்பட்டுள்ளது. அப்பாவின் உடன்பிறந்தோர் (ஆண், பெண் இருவரும்), அவர்களின் பிள்ளைகள், அம்மாவின் உடன்பிறந்தோர் (ஆண், பெண் இருவரும்), அவர்களின் பிள்ளைகள் என்று எல்லோரும் இந்த சபிண்ட முறையில் அடக்கம் - இவர்களிடையே திருமண உறவு கூடாது என்று சொல்கிறது இந்து திருமணச் சட்டம். ஆகா, இப்படி இருக்கிறதே என்று படித்துக் கொண்டு வந்தால் கடைசியில் இந்த உறவு முறைகளுக்குள் திருமணம் செய்து கொள்வது சமுதாயப் பழக்கமாக இருந்தால் அது சட்டப்படி செல்லும் என்று சொல்லிவிட்டது. திருமணச்சட்டம் எவ்வளவு தெளிவாக இருக்கிறது என்று அப்போது சிரித்துக் கொண்டேன். பல சட்டங்களும் இப்படித் தான் வழிகாட்டும் கைட்லைன்ஸாகத் தான் இருக்கும் போல் இருக்கிறது. கட்டுப்படுத்தும் சட்டங்களாக இல்லை போலும்.
சட்டத்தில் ஏன் தடை செய்து விட்டுப் பின்னர் தளர்த்தி இருக்கிறார்கள் என்று தேடிப்பார்த்ததில் தான் தெரிந்தது வடக்கே இந்த முறைகளில் திருமணம் செய்வதில்லை என்று - அதனால் அங்கே எல்லோரும் கசின் பிரதர் கசின் சிஸ்டர் தான். நம்மூர் மாதிரி சித்தப்பா பெரியப்பா பிள்ளைகளை கசின் பிரதர் சிஸ்டர் என்று சொல்லிவிட்டு அத்தைப் பிள்ளைகள், மாமன் பிள்ளைகளை வெறும் கசின் என்பதோடு நிறுத்துவதில்லை. அமெரிக்காவில் இந்த சபிண்ட முறையில் வருபவர்களை எல்லாம் பர்ஸ்ட் கசின் என்று சொல்லி அவர்களிடையே திருமணம் மறுக்கப்பட்டிருக்கிறது.
பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் எல்லா காலத்திலும் தமிழகத்தில் இருந்ததாகத் தான் தெரிகின்றது. களவு மணம், கற்பு மணம் என்று இரண்டையும் பேசுகின்றன இலக்கியங்கள். இன்றைய திரைப்படங்களில் காதல் திருமணமே அதிகம் காட்டப்படுவதால் வருங்காலத்தில் திரைப்படங்களைத் தரவாகக் கொள்பவர்கள் இன்றைய காலகட்டத்தில் காதல் திருமணங்களே இருந்தன; பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததில்லை என்று சொல்வார்கள் போலும். கற்பு திருமணம் விதியாகவும் களவு திருமணம் விதிவிலக்காகவும் இருந்ததால் அவற்றையே காவியங்கள் மிகுதியாகப் பேசின என்றும் ஒரு வாதத்தை வைக்கலாம் - வாதத்திற்கு மட்டுமே; அறுதியிட்டுச் சொல்லவில்லை. :-)
வரதட்சிணை வாங்கும் பழக்கம் ஒரு மதத்திற்குள் மட்டுமே இருப்பதாகத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்து நிறைய கிறிஸ்தவர்கள் லட்சக்கணக்கில் வரதட்சிணை தந்து திருமணம் செய்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் தாய்மாமன், அத்தைப் பிள்ளைகள், மாமன் பிள்ளைகள் இவர்களை மணப்பதும், மற்ற மதத்தில் சித்தப்பா பெரியப்பா குழந்தைகளை மணப்பதும் இரண்டுமே ஒரே வகையைச் சேர்ந்தது தான். இடுகையிலும் பின்னூட்டத்திலும் பலர் சொன்னது போல் இவற்றில் ஒன்று சரி; ஒன்று தவறு என்பதெல்லாம் குமுக வரைமுறைகளுக்கு உட்பட்டவை; இவற்றைக் கொண்டு அரசியல் செய்ய முனைவது நகைப்பிற்குரியது. தேவையில்லாத அரசியல்.
GK,
நல்ல பதிவு!
பகிர்வுக்கு நன்றி!
//மாசிலா said...
நடுத்தர மற்றும் பணக்கார மேல் சாதிகளில்தான் இது போன்ற கண்றாவிகளெல்லாம்.
சொத்து வெளியே போகக்கூடாதுன்னு பிள்ளைகளை பகடைகாயா வெச்சி வெளையாடுற விளையாட்டுதானுங்க இது.
இரத்த நெருக்கம் ரொம்பவும் கிட்ட இருந்தா பொறக்குற கொழந்தைகளுக்கு ஏதாவது கட்டாயம் தீர்க்க முடியாத வாழ்நாள் ஊனம் இருக்க வாய்ப்புண்டு.
//
வாங்க மாசிலா, தோழி தமிழச்சியுடன் நீங்கள் பெரியார் கொள்ளை விளக்கத்தில் பங்கு பெற்றதில் மகிழ்பவர்களில் நானும் ஒருவன். உங்களுக்கு பாராட்டுக்கள். பின்னூட்ட கருத்துக்களுக்கு நன்றி !
//அதற்குள் பிறமணக் குழுமுறையை பின்பற்றுகிறார்கள். ஒரே கோத்திரத்தில் மணம் முடிப்பதில்லை. நன்று நமக்கு தீது பிறருக்குத்தானே.. //
ஜெமிலன்,
சாதிக்குள் காதல் திருமணத்தில் இந்த கட்டுப்பாடுகள் இல்லை என்றே நினைக்கிறேன். ஐயரோ, ஐயங்காரோ பிராமணர் என்று வட்டத்துக்குள் இருந்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள். மேற்கத்திய கலச்சார தாக்கத்தால் எதிர்காலத்தில் எல்லைகள் உடையும்.
வல்லிசிம்ஹன் said...
//URavukkuL thirumaNam mudikkak koodaathu
enbathaRku niRaiya eduththukkaatukaL
itukkinRana.
Arokkiyamaana maaRRu sinthanai veeNdum.
nalla pathivu Kannan.
//
வல்லியம்மா,
பதிவை பாராட்டுவதற்கு மிக்க நன்றி அம்மா.
//tbr.joseph said...
கிறிஸ்துவ குடும்பங்களில் (கத்தோலிக்கர்கள்)தாய் மாமன் மகனையோ மகளையோ திருமணம் புரிய தேவாலயத்தில் அத்தனை எளிதில் அனுமதி கிடைக்காது. எந்த சூழலில் இது தேவைப்படுகிறது என்றெல்லாம் விசாரித்துத்தான் அனுமதிப்பார்கள். இந்த சூழலில் சித்தி மகன்/மகள் என்ற கேள்விக்கே இடமில்லை.
//
ஜோசப் ஐயா,
கிறித்துவ மதத்தில் தங்கை முறை உள்ளவர்களை மணக்கிறார்களா என்பது தெரியாது. ஜோ சொல்லி இருக்கிறார். ஒரு சில நேரங்களில் மிகச் சிலரிடம் இந்த பழக்கம் இருப்பதாக.
காதல் திருமணங்களும், கலப்புத் திருமணங்களும், பெற்றோர்களால் பார்த்து வைக்கும் புதிய உறவு திருமணங்களும் உடல் ஆரோக்கியதற்கு பங்கம் விழைவிக்காது.
உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். கருத்துக்கு நன்றி !
//லக்ஷ்மி said...
இப்படி ஆயிரம் சமூகவியல் - மனவியல் காரணங்களிருக்கலாம். எது தகும் தகாது என்பதற்கான வரையரை ஒவ்வொரு மதத்திற்கும் வேறு வேறாயிருக்கலாம். அதற்காக நான் செய்வது மட்டுமே சரி, நீ செய்வது தவறு என்று சொல்வது நகைப்புக்குரியது - அதிலும் இருவர் செய்வதுமே அறிவியல் ரீதியாகத் தவறு என்று ஏற்பட்டுவிட்ட இந்நாளில் அதை சொல்வது இன்னமும் மோசம்.... ஹ்ம்ம்... சிலர் திருந்த மாட்டாங்க, விடுங்க.
//
லக்ஷ்மி அம்மா,
(சகோதரிகளைக் கூட அம்மா என்று தான் விளிப்பது வழக்கம்)
நெடிய பின்னூட்டத்தில் மிக அழகாக காரண காரியங்களைச் சொல்லி இருக்கிறீர்கள். ஏழ்மையும் ஒரு காரணம் என்பது புரிகிறது.
தங்கை முறை உள்ளவர்களை மணப்பது சமுக அவலம் என்பது போன்று கருத்து எல்லோர் மனதிலும் இருக்கிறது. அதை மறுக்கவும், இது போன்று எந்த சொந்தமாக இருந்தாலும் உறவு மூறைக்குள் திருமணம் செய்வதே தவறு என்று சொல்ல முயன்றேன். சொந்தத்துக்குள் திருமணத்தை பலரும் தவிர்ப்பதை பார்க்கிறோம். வரவேற்போம்.
பின்னூட்ட கருத்துக்களுக்கு நன்றி !
//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
இதெல்லாம் உங்களுக்கே நியாயமா கோவி ஸார்.. இம்புட்டு நீளத்துக்குப் போடுறதுன்னு நீங்களே முடிவு பண்ணீட்டிங்க.. சமாளிக்கிறதுக்கு என்னைக் கை காட்டுறீங்களா.. சரி.. பொழைச்சுப் போங்க..
6:07 PM, September 06, 2007 //
உண்மை தமிழன் சார்,
சின்ன காமடிதான் சரியாக புரிஞ்சிக்கிட்டிங்க. நன்றி ! தவறாக நினைக்கவில்லை என்று உங்கள் பின்னூட்டம் சொல்லுது. மீண்டும் நன்றி
:)))
//குமரன் (Kumaran) said...
இன்றைய மருத்துவம் இப்படி உறவு முறைகளின் படி திருமணம் செய்து கொள்வது தவறு; பிறக்கும் குழந்தைகள் ஊனத்துடன் பிறக்கும் என்று சொல்வதால் பல இடங்களில் உறவு முறைத் திருமணங்கள் வரவேற்கப்படாமல் இருக்கின்றன என்பதைப் பார்த்திருக்கிறேன். என் திருமணப் பேச்சு எடுக்கப்பட்ட போது கூட பலர் உறவிலிருந்து பெண் கொடுக்க முன் வந்தார்கள்; உறவில் அவர்கள் எவ்வளவு தூரத்து உறவாக இருந்தாலும் மணக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டதால் வெளியிலிருந்து பார்த்து திருமணம் செய்தார்கள். //
நண்பர் குமரன் அவர்களே,
நல்ல தகவல், பெற்றோர்களின் வழிமுறைகளில் இருந்து விலகி முதல் அடி எடுத்து வைத்து முன்னோயியாக இருன்ந்திருக்கிறீர்கள் பாராட்டுக்கள்.
//மருத்துவ அறிவியல் இப்படி சொல்கிறது என்ற விழிப்புணர்ச்சி இருந்தாலும் சமுதாய நடைமுறை என்ற அளவில லக்ஷ்மி சொன்னது போல் பல வித காரணங்களால் உறவு முறையில் திருமணங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
கல்லூரியில் படிக்கும் போது வத்திராயிருப்பு நூலகத்தில் இருந்து வாங்கிப் படித்த இந்து திருமணச்சட்டம் பல செய்திகளைச் சொன்னது. இந்து திருமணச்சட்டத்தின் படி சபிண்ட முறை என்று சொல்லி பல விதமான கசின்களைத் திருமணம் செய்து கொள்வது தடைப்படுத்தப்பட்டுள்ளது. அப்பாவின் உடன்பிறந்தோர் (ஆண், பெண் இருவரும்), அவர்களின் பிள்ளைகள், அம்மாவின் உடன்பிறந்தோர் (ஆண், பெண் இருவரும்), அவர்களின் பிள்ளைகள் என்று எல்லோரும் இந்த சபிண்ட முறையில் அடக்கம் - இவர்களிடையே திருமண உறவு கூடாது என்று சொல்கிறது இந்து திருமணச் சட்டம். ஆகா, இப்படி இருக்கிறதே என்று படித்துக் கொண்டு வந்தால் கடைசியில் இந்த உறவு முறைகளுக்குள் திருமணம் செய்து கொள்வது சமுதாயப் பழக்கமாக இருந்தால் அது சட்டப்படி செல்லும் என்று சொல்லிவிட்டது. திருமணச்சட்டம் எவ்வளவு தெளிவாக இருக்கிறது என்று அப்போது சிரித்துக் கொண்டேன். பல சட்டங்களும் இப்படித் தான் வழிகாட்டும் கைட்லைன்ஸாகத் தான் இருக்கும் போல் இருக்கிறது. கட்டுப்படுத்தும் சட்டங்களாக இல்லை போலும். //
சட்டத்தில் இருக்கும் ஓட்டைகள்... நல்ல அலசல். சுவையான தகவல்.
//சட்டத்தில் ஏன் தடை செய்து விட்டுப் பின்னர் தளர்த்தி இருக்கிறார்கள் என்று தேடிப்பார்த்ததில் தான் தெரிந்தது வடக்கே இந்த முறைகளில் திருமணம் செய்வதில்லை என்று - அதனால் அங்கே எல்லோரும் கசின் பிரதர் கசின் சிஸ்டர் தான். நம்மூர் மாதிரி சித்தப்பா பெரியப்பா பிள்ளைகளை கசின் பிரதர் சிஸ்டர் என்று சொல்லிவிட்டு அத்தைப் பிள்ளைகள், மாமன் பிள்ளைகளை வெறும் கசின் என்பதோடு நிறுத்துவதில்லை. அமெரிக்காவில் இந்த சபிண்ட முறையில் வருபவர்களை எல்லாம் பர்ஸ்ட் கசின் என்று சொல்லி அவர்களிடையே திருமணம் மறுக்கப்பட்டிருக்கிறது. //
இந்தியா போன்ற பண்முக பண்பாட்டு வெளிகளில பொது சிவில் சட்டம் இருக்கவோ, அதை வலியுறுத்தவோ முடியாது. வடவர்கள் இன்றைய நமக்கு முன்னோடியாக இருக்கிறார்கள் என்பது பாராட்டக்கூடிய ஒன்று. தகவலுக்கு நன்றி
//பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் எல்லா காலத்திலும் தமிழகத்தில் இருந்ததாகத் தான் தெரிகின்றது. களவு மணம், கற்பு மணம் என்று இரண்டையும் பேசுகின்றன இலக்கியங்கள். இன்றைய திரைப்படங்களில் காதல் திருமணமே அதிகம் காட்டப்படுவதால் வருங்காலத்தில் திரைப்படங்களைத் தரவாகக் கொள்பவர்கள் இன்றைய காலகட்டத்தில் காதல் திருமணங்களே இருந்தன; பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததில்லை என்று சொல்வார்கள் போலும். கற்பு திருமணம் விதியாகவும் களவு திருமணம் விதிவிலக்காகவும் இருந்ததால் அவற்றையே காவியங்கள் மிகுதியாகப் பேசின என்றும் ஒரு வாதத்தை வைக்கலாம் - வாதத்திற்கு மட்டுமே; அறுதியிட்டுச் சொல்லவில்லை. :-)//
நீங்கள் சொல்வதில் முற்றிலும் உடன் படுகிறேன். மேலும் களவு மணம், கற்பு மணம் குறித்து ஜிரா பதிவில் விவாதம் செய்ததும் நினைவிருக்கிறது.
:)
//வரதட்சிணை வாங்கும் பழக்கம் ஒரு மதத்திற்குள் மட்டுமே இருப்பதாகத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்து நிறைய கிறிஸ்தவர்கள் லட்சக்கணக்கில் வரதட்சிணை தந்து திருமணம் செய்திருக்கிறார்கள். //
இந்திய பிரமதத்தினர் வெளிநாட்டில் இருந்துவரவில்லை அவர்கள் முன்னால் இந்திய சமயத்தினர். எனவே வரதட்சனை வாங்கும் பழக்கம் அவர்களிடத்தில் இருப்பது வியப்பளிக்கவில்லை. சுல்தான் ஐயா சொல்வது போல் பெண்ணுக்கு மகர் கொடுப்பது போன்றவைகள் மறைந்து வரதட்சனை பெறும் பழக்கம் பரவலாக இருக்கிறது.
//தமிழகத்தில் தாய்மாமன், அத்தைப் பிள்ளைகள், மாமன் பிள்ளைகள் இவர்களை மணப்பதும், மற்ற மதத்தில் சித்தப்பா பெரியப்பா குழந்தைகளை மணப்பதும் இரண்டுமே ஒரே வகையைச் சேர்ந்தது தான். இடுகையிலும் பின்னூட்டத்திலும் பலர் சொன்னது போல் இவற்றில் ஒன்று சரி; ஒன்று தவறு என்பதெல்லாம் குமுக வரைமுறைகளுக்கு உட்பட்டவை; இவற்றைக் கொண்டு அரசியல் செய்ய முனைவது நகைப்பிற்குரியது. தேவையில்லாத அரசியல்.
//
அதே தான், ஒருவர் இதை வைத்து அரசியல் செய்தார். :))
உங்களது நெடிய பின்னூட்டம் குமரன். தனிப்பதிவாக இட்டு இருந்தீர்கள் என்றால் பலரும் படிப்பார்கள். எனது பெரும்பாலன இடுகைகளில் பேசப்படும் பொருள் மாறுபடுவதால் பதிவுக்கு ஆத்திக நண்பர்கள் வருகிறார்களா என்றே தெரியவில்லை. அதனால் தான் சொன்னேன்.
:))
மிக்க நன்றி !
//சிவபாலன் said...
GK,
நல்ல பதிவு!
பகிர்வுக்கு நன்றி!
//
சிபா,
பாராட்டுதலுக்கு உங்களுக்கும் நன்றி !
//எனது பெரும்பாலன இடுகைகளில் பேசப்படும் பொருள் மாறுபடுவதால் பதிவுக்கு ஆத்திக நண்பர்கள் வருகிறார்களா என்றே தெரியவில்லை.//
நான் பெரும்பாலான இடுகைகளைப் படிக்கிறேன். என் கூகுள் ரீடரில் உங்கள் பதிவு இருக்கிறது. அதனால் எல்லா இடுகைகளும் அதில் வந்துவிடும். பலவற்றிற்குப் பின்னர் பின்னூட்டமோ இடுகையோ இட்டுக்கொள்ளலாம் என்று விட்டுவிடுகிறேன். இடுகைகள் இட நேரம் தான் கிடைப்பதில்லை. :-)
திருமணத்தில் அனானி ஆப்சனே சிறந்த ஆப்சன். :)
மை கன்ஃபியூசன் ஈஸ் இயர்...
http://araiblade.blogspot.com/2007/09/blog-post_06.html
கோவி,
நீங்கள் நல்லப்பதிவை இட்டு இருக்கிறீர்கள். பதிவுக்கு தொடர்பில்லாத ஒன்றை இங்கே சொல்லிக்கொள்கிறேன் மன்னிக்கவும். ஆனால் இது அத்யாவசியம் என்பதால் தவிர்க்க இயலவில்லை.
//"இந்துக்கள் என்று சொல்வதைவிட, திராவிட கலாச்சாரம்" அதாவது தெற்கில் மட்டுமே இந்த உறவு முறையில் திருமணம் செய்வது உள்ளது. வடக்கில் கிடையவே கிடையாது//
உஷா அவர்களின் பின்னூட்டம் படித்ததும் எனக்கு பழைய நினைவுகள் எழுந்தன,கூடவே சிரிப்பும் வந்தது :-))
தமிழ் நாட்டில் இருப்போர் திராவிடர்கள் எனவே அவர்கள் இந்துக்கள் ஆக கருதக்கூடாது என்கிறார்.(இப்படி கல்யாணம் செய்வதாக சொன்னால் இந்துக்கள் பெயர் கெடும் போலும், இப்போது காப்பார்றிவிட்டார் !)
அதைத்தானே இத்தனை நாளும் பல தமிழ் ஆர்வலர்கள் சொல்லி வருகிறார்கள், அப்போது எல்லாம் இல்லை திராவிடர்களும் இந்துக்கள் தான் என சொல்லி ஒரே அடியாக கும்மினார்களே,
தமிழ் நாட்டுக் திராவிடர்களின் கோயில்களில் மட்டும் அப்புறம் ஏன் தமிழ் வேண்டாம் என்கிறார்கள் , சமஸ்கிருதம் எதற்கு திராவிடர்களின் கோவிலுக்கு தமிழ் போதும் என வாழவிடலாமே.
தமிழ் நாட்டில் ஊடுருவியவர்களும் தமிழர்கள் தான் என சொல்லிக்கொள்வார்கள் , ஆனால் ஏதேனும் வந்தால் தமிழர்கள் மட்டும் தான் திராவிடர்கள் என்பார்கள் , மற்றவர்கள் இந்துக்கள் என்பார்கள் , என்னமா குழப்புறாங்கப்பா :-))
மாசிலா போன்றவர்களும் இந்த நுணுக்கமான வார்த்தை விளையாட்டை கவனிக்காமல் போய்விட்டாரே!
//குமரன் (Kumaran) said...
நான் பெரும்பாலான இடுகைகளைப் படிக்கிறேன். என் கூகுள் ரீடரில் உங்கள் பதிவு இருக்கிறது. அதனால் எல்லா இடுகைகளும் அதில் வந்துவிடும். பலவற்றிற்குப் பின்னர் பின்னூட்டமோ இடுகையோ இட்டுக்கொள்ளலாம் என்று விட்டுவிடுகிறேன். இடுகைகள் இட நேரம் தான் கிடைப்பதில்லை. :-) //
குமரன்,
நன்றி. நான் கூகுள் ரீடரை இன்னும் பயன்படுத்திப் பார்க்கவில்லை. எல்லாவற்றையும் அதில் போட்டால் திரட்டி போல் மாறிவிடும். பெரும்பாலும் 30 விழுக்காட்டிற்கு மேல் தமிழ்மண பதிவுகளை படிப்பதால் அங்கேயே படித்துக் கொள்கிறேன். :)
//அரை பிளேடு said...
திருமணத்தில் அனானி ஆப்சனே சிறந்த ஆப்சன். :)
மை கன்ஃபியூசன் ஈஸ் இயர்...
http://araiblade.blogspot.com/2007/09/blog-post_06.html
//
அரை பிளேடு ஐயா,
தங்கள் ஆராய்ச்சி அலசலைப் பார்த்தேன் இன்னும் பின்னூட்டவில்லை.
:)
வவ்வால், உஷா சொன்னதை நான் இப்படி புரிந்து கொள்கிறேன் - இந்துக்கள் எல்லோரும் இப்படி செய்வதில்லை, அதில் திராவிடர்கள் அதாவது தெற்கிலிருப்பவர் மட்டுமே இப்படியான உறவு முறை மணங்களைச் செய்கிறார்கள் என்று.
//திராவிட கலாச்சாரம் அதாவது தெற்கில் மட்டுமே// இதில் தெளிவாக திராவிடர்கள் என்று அவர் சொல்ல வருவது தெற்கிலிருக்கும் அனைவரையும் என்று புரியவில்லையா? தெற்கிலிருக்கும் பிராமண குடும்பங்களிலுமே இப்படி அத்தை/மாமன் பெண்களை மணப்பது வழக்கிலுண்டு. அதைத்தான் உஷா குறிப்பிடுவதாக நான் உணர்கிறேன். இதிலெதற்கு இந்த தேவையில்லாத திசை திருப்பல்?
//தெற்கிலிருக்கும் பிராமண குடும்பங்களிலுமே இப்படி அத்தை/மாமன் பெண்களை
மணப்பது வழக்கிலுண்//
s s s
சைடில் ஒரு சந்தேகம். வீட்டுக்கு யாராவது வந்தால் "மாமாவுக்கு
சாக்லெட் குடும்மா" என்று சொல்வார்கள். ஏன் "சித்தப்பாக்கு
சாக்லெட் குடும்மா" என்று சொல்வதில்லை ?
உஷா சொன்னதை லக்ஷ்மியின் புரிதலைப் போல் தான் நானும் புரிந்து கொண்டேன் வவ்வால். உங்கள் விளக்கம் தவறான புரிதல் என்பது என் எண்ணம்.
வவ்வால் ஐயா, திராவிடம் என்பதற்கு நான் தெரிந்துக் கொண்ட பொருள் தமிழ் நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா அதனால் இங்கெல்லாம் மாமன், அத்தை மக்களையும், மாமாவையும் கட்டும் பழக்கம் உண்டு என்று ஏதோ எனக்கு
தெரிந்ததை சொன்னேன். இதில் திசை திருப்பல் போன்ற வார்த்தை எல்லாம்.. :-(
//அதுதான் ஹரிஹரன் சரியாக திராவிட பெத்தடின் தமிழினத்தின் கலாச்சாரம் என்று சொல்லி இருக்கார் போல இருக்கு.//
கோவி சார், ஆளை விடுங்க.
லஷ்மீ! நான் பார்த்தவரையில் இந்த உறவு முறை திருமணங்கள் தெற்கில் பெரும்பாலான சாதிகளில் உள்ளன.
மன்னிக்கவும் லஷ்மி அவர்களே,
உஷா சொன்னதை தெளிவாக பூதக்கண்ணாடி வைத்தாவது படிக்க முயர்சி செய்யுங்கள் ...
//இந்துக்கள் என்று சொல்வதைவிட, திராவிட கலாச்சாரம் அதாவது தெற்கில் மட்டுமே இந்த உறவு முறையில் திருமணம் செய்வது உள்ளது. வடக்கில் கிடையவே கிடையாது//
அவர்கள் சொன்னது தெளிவாக ஹிந்துக்கள் என்று சொல்லாதீர்கள் அது திராவிட கலாச்சாரம் என்று அர்த்தம் தான் வருகிறது , நான் திசை திருப்பவில்லை , ஆனால் நீங்கள் தான் முழு பூசணிக்காயை சோற்றில் இல்லை காற்றில் மறைக்கப்பார்க்கிறீர்ள்! உங்கள் விளக்கத்தை கேட்டால் பச்சப்புள்ள கூட சிரிக்கும்! உங்களுக்கு தமிழில் சரிவர படிக்க வராது என்றால் வீணாக என்னை திசை திருப்பல் என்று சொல்லி செல்வது ஏனோ?
--------------
குமரன் ,
அப்படி பார்க்கும் வண்ணம் இல்லாத போது நான் கற்பனையில் அப்படி எல்லாம் பார்க்க மாட்டேன்!உள்ளதை உள்ளபடி பார்த்தேன், தெரிவித்தேன், வேறு எதுவும் நான் அறியேன்!
ஏன் இந்துக்கள் என்று சொல்வதை மறுக்கும் வண்ணம் அவர் அப்படி சொல்கிறார் என்று எதாவது விளக்கம் இருக்கிறதா.தெற்கில் இருப்பவர்கள் ,திராவிடர்கள் அவர்கள் இந்துக்கள் அல்ல என்ற தொனியை தவிர அதில் வேறு எதுவும் இல்லையே.
கூடுதல் நகைச்சுவை
//தெற்கிலிருக்கும் பிராமண குடும்பங்களிலுமே இப்படி அத்தை/மாமன் பெண்களை மணப்பது வழக்கிலுண்டு. //
பிராமணர்களை திராவிடர்கள் என்று எங்கே யார் சொன்னது! சரி அப்படியே திராவிடர்கள் தான் , அந்த உரிமை வேண்டும் என்றால் வாங்கிகொள்ளட்டும் , பின்னர் ஏன் இந்துக்கள் என்று பொதுவாக சொல்வதை மறுத்து அப்படி சொல்ல வேண்டும். எப்படி பார்த்தாலும் இடிக்கும் ஒரு வாதம் இது!
தென்னிந்தியாவில் மட்டும் இருக்கிறது என்று பொதுவாக சொல்லிவிட்டு போய் இருக்கலாமே!
நான் ரொம்ப பேசினால் அப்புறம் பெண்களுக்கு எதிரானவன்னு முத்திரை குத்துதல் தான் இங்கு நடக்கும் எனவே இத்தோடு இதனை முடித்துக்கொள்கிறேன்!
லக்ஷ்மி, குமரன், வவ்வால்,
இது குறித்து தோழி உஷா தான் விளக்கம் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன். அவர் 'திராவிட கலாச்சாரம்' என்று சொல்லி இருப்பதால் அதில் அவர் பார்வையில் தென்னக பிராமணர்கள் அடக்கமா என்று அவர் தான் தெளிவுபடுத்த வேண்டும்.
கோவி சார்! நேற்று ஒரு விளக்கம் போட்டேன், அதை நீங்கள் போடவில்லையே! மாடரேஷனில் மாட்டியிருக்கிறதா என்றுப்
பார்க்கவும்.
வவ்வால் ஐயா! திராவிடர்கள் என்று என் அரைகுறை அறிவில் பட்டத்து தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் வாழும் மக்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறேன். இதில் பிராமணர்கள், கிருஸ்துவர்கள், முஸ்லீம்கள் உட்பட நெருங்கிய உறவில் திருமணம் செய்துக் கொள்வதை கேட்டு, பார்த்திருப்பதால் சொன்னேன். மற்றப்படி நீங்கள் இப்பொழுது அனுப்பிய பின்னுட்டம் பார்த்தேன். உங்கள் கருத்து உங்களுக்கு!
//ramachandranusha(உஷா) said...
கோவி சார்! நேற்று ஒரு விளக்கம் போட்டேன், அதை நீங்கள் போடவில்லையே! மாடரேஷனில் மாட்டியிருக்கிறதா என்றுப்
பார்க்கவும்.
வவ்வால் ஐயா! திராவிடர்கள் என்று என் அரைகுறை அறிவில் பட்டத்து தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் வாழும் மக்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறேன். இதில் பிராமணர்கள், கிருஸ்துவர்கள், முஸ்லீம்கள் உட்பட நெருங்கிய உறவில் திருமணம் செய்துக் கொள்வதை கேட்டு, பார்த்திருப்பதால் சொன்னேன். மற்றப்படி நீங்கள் இப்பொழுது அனுப்பிய பின்னுட்டம் பார்த்தேன். உங்கள் கருத்து உங்களுக்கு!
//
தோழி உஷா,
தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள், தாங்கள் இதற்கு முன்பு அனுப்பிய பின்னூட்டம் கவனிக்க தவறிவிட்டேன். நான் ஜிமெயில் வழியாக பின்னூட்டம் வெளியிடுவதால் இந்த தவறு நடந்துவிட்டது.
நீங்கள் நீண்டகாலமாக இணையத்தில் இருப்பதால் 'திராவிட கலாச்சாரம்' என்பதை சரியாக பயன்படுத்தி இருப்பீர்கள் என்று என்னைப் போல் பலரும் கருத வாய்ப்பு இருக்கிறது. அதற்குத்தான் நீங்கள் விளக்கம் அளித்தால் தான் அதுபற்றி முடிவுக்கு வரவேண்டும் என்று கடைசியாக குறிப்பிட்டேன். நான் உங்களுக்கான மறுமொழியில் ஹரிஹரனின் திராவிட பெத்தடின் பற்றி குறிப்பிட்டது என் கருத்து மட்டுமே. உங்களை அதற்கு பொறுப்பேற்றுக் கொள்ளச் சொல்லவில்லை. :))) எனவே தவறாக நினைக்காதீர்கள்.
மீண்டும் வந்து தெளிவுபடுத்திச் சென்றதற்கு நன்றி தோழி உஷா அவர்களே.
கோவி,
இதை வளர்த்துக்கொண்டு செல்வதில்லை எனக்கும் விருப்பம் இல்லை, ஆனால் தெரிந்தோ தெரியாமலோ அபத்தமாக அவர்கள் சொல்லியுள்ளார்கள் என்பது மட்டும் நிதர்சனம். எனவே மேலும் ஒரே ஒரு விளக்கம் , அத்துடன் மங்களம் பாடிவிடுகிறேன்.
//வவ்வால் ஐயா! திராவிடர்கள் என்று என் அரைகுறை அறிவில் பட்டத்து தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் வாழும் மக்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறேன். இதில் பிராமணர்கள், கிருஸ்துவர்கள், முஸ்லீம்கள் உட்பட நெருங்கிய உறவில் திருமணம் செய்துக் கொள்வதை கேட்டு, பார்த்திருப்பதால் சொன்னேன்//
நீங்கள் வெறுமனே தென்னிந்தியர்கள் என்று சொல்லி இருக்கலாம் , இருக்க வேண்டும் என்ற்ய் முன்னரே சொல்லி இருக்கிறேன், மேலும் ஹிந்துக்கள் என்று சொல்வதை தவிர்க்க காட்டிய ஆர்வம் , திராவிடர்கள் தான் அப்படி செய்வார்கள் என ஒரு அழுத்தம் கொடுக்க காட்டிய ஆர்வம் தான் என்னை இதில் கேள்விக்கேட்க வைத்தது. மற்றபடி இதில் தனிப்பட்ட விருப்பம் எதுவும் இல்லை.
நீங்கள் வலைப்பதிவிற்கு ரொம்ப புதியவர் ஆக இருந்திருந்தால் பரவாயில்லை அப்படி சொன்னேன் எனலாம் , இப்போதும் கூட பாருங்கள் நீங்கள் சொல்வதை சரி என சாதிக்கும் ஆர்வம் தான் தெரிகிறது, திராவிடர்கள் என்றும் சொல்வீர்களாம் ,அப்புறம் பிராமணர்கள் என்றும் சேர்த்துக்கொள்வீர்களாம் , அப்புறம் திராவிடர்கள் என்பது தெற்கில் உள்ளவர்கள் என்று சொன்னேன் என்பீர்களாம்... முடியலை.... ஸ்..ஸ் அப்பா... என்ன ஒரு தத்துவம்.
யாராவது பிராமணர்கள் திராவிடர்கள் தான் என்பதை ஏற்றுக்கொள்ளும்படி விளக்கம் வைத்து இருந்தால் வாருங்கள்! :-))
தோழி உஷா,
நீங்கள் பெரியார் எழுத்துக்களைப் படித்தவர் என்பது நன்கு தெரியும், எனவே நான் திசைத்திருப்பல் என்ற நோக்கில் எனது மறுமொழி இல்லை என்பதை எழுதியவன் நான் என்பதால் என்னால் சொல்ல முடியும். :)
மற்றவர்களின் கற்பனை அவர்களுக்கே.
நீங்கள் எழுதிய மறுமொழிகளில் திராவிடர் என்றால் தென்னிந்திய மக்கள் என்று சொல்லி இருப்பதில் எந்த குழப்பமும் இல்லை. அதில் அனைவருமே அடக்கம். ஆனால் தென்னிந்தியர் அனைவருமே குறிப்பாக திராவிடர்கள் பிராமனர் என்பது அருவெருப்பான சொல்லாக கருதுவது போலவே பிராமனர்களும் திராவிட என்ற சொல்லை அருவெருப்பாக கருதுகிறார்கள். அதாவது ஆரிய என்ற சொல்லுக்கு எதிர் சொல் போலத்தான் கருதுகிறார்கள். எனவே திராவிட என்ற உள்ளடக்கத்தில் பிராமனர்கள் இல்லை என்று நண்பர் வவ்வால் கருதி இருக்கக் கூடும்.
உங்கள் கருத்துக்களை அரசியலாக்குகிறேன் என்று நினைக்காதீர்கள் உங்கள் மீது எனக்கு எப்போதுமே மதிப்பு உண்டு.
****************
நண்பர் வவ்வால் அவர்களே,
தோழி உஷா அவர்கள் அந்த கருத்தில் சொல்லவில்லை என்று அவரே சொல்லும் போது மீண்டும் மீண்டும் வேறுவிதமாக புரிந்து கொள்ளாமல் விட்டுவிடலாம். :))
கோவிச்சிக்காதிங்க !
நல்ல பதிவு. உங்களின் பின்னூட்டம் வழி இப்பதிவை கண்டேன்.
பார்ப்பனீயத்தை தூக்கிப் பிடிக்க அதற்கு கொடி பிடிக்கும் சகோதரர் ஹரிஹரனுக்கு வேறு தலைப்பே கிடைக்கவில்லை போலிருக்கிறது.
பெரியார் "தமிழனுக்கு சிறந்தது இஸ்லாமே" எனக் கூறியதன் காரணத்தையும் "கடவுள் இல்லை என்ற கருத்தைக் கொண்ட பெரியாரிசத்தையும் இஸ்லாத்தையும் ஒரு புள்ளியில் இணைத்தது எது என்பதையும் தோண்டிப்பார்த்தால் தமிழகத்தில் வந்தேறி பார்ப்புக்கள் அடித்த நால் வர்ண கொட்டத்தின் அழுகிய கதைகள் வெளிவரும்.
எனவே தான் ஹரிஹரர் திருமண முறை, தமிழர் பண்பாடு, பகுத்தறிவு என அவாள்களுக்கு நாவில் நுழையாத விஷயங்களைக் குறித்தெல்லாம் போட்டு குழப்பிக் கொண்டார்.
பாவம் மனுசன்!
இறை நேசன்.
//இறை நேசன் said...
நல்ல பதிவு. உங்களின் பின்னூட்டம் வழி இப்பதிவை கண்டேன்.
//
மிக்க நன்றி !
மிகவும் காலம்தாழ்த்திய மறுமொழிக்கு மன்னிக்கவும்.
யாரோ இன்றைக்கு இந்த இடுகையை படித்திருக்கிறார்கள்.
எனக்கு இந்த உறவு முறைகளைப் பற்றிய போதிய தெளிவுஇல்லை.எனக்கு ஒரு சிறிய சந்தேகம். என் நண்பன் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். சமீபத்தில் தான் அந்தப் பெண் ஒரு புறத்தில் தந்தை வழியில் மாமன் மகள்(தந்தையின் மச்சானின் மகள்) என்பதும் நேரடியாகப் பார்க்கும் போது தன் மச்சானின் மகள்(அதாவது அத்தையின் மகனின் மகள்) என்பதும் தெரிய வந்தது. இந்தத் திருமணம் சாத்தியமா?? விஞ்ஞான ரீதியான காரணங்களைத் தவிர்த்து இது முறையற்றதா முறையானதா என்பதை முதலில் விரைந்து கூறவும்.
//tamilinfo said...
எனக்கு இந்த உறவு முறைகளைப் பற்றிய போதிய தெளிவுஇல்லை.எனக்கு ஒரு சிறிய சந்தேகம். என் நண்பன் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். சமீபத்தில் தான் அந்தப் பெண் ஒரு புறத்தில் தந்தை வழியில் மாமன் மகள்(தந்தையின் மச்சானின் மகள்) என்பதும் நேரடியாகப் பார்க்கும் போது தன் மச்சானின் மகள்(அதாவது அத்தையின் மகனின் மகள்) என்பதும் தெரிய வந்தது. இந்தத் திருமணம் சாத்தியமா?? விஞ்ஞான ரீதியான காரணங்களைத் தவிர்த்து இது முறையற்றதா முறையானதா என்பதை முதலில் விரைந்து கூறவும்.
2:43 AM, February 11, 2012//
தூறத்து சொந்தம் ஆனால் சித்தி முறைவருது என்று சொல்லி திருமணம் செய்து கொண்டவர்களை பார்த்திருக்கிறேன், உடன் பிறவாதவர்கள் தவிர்த்து எவரையும் மணந்து கொள்வது பலவரலான பழக்கம் தான், இந்துக்களில் அண்ணன் - தம்பிகள் சம்பந்தி ஆகமாட்டாங்க, அக்கா - தம்பி மாமியார் மருமகன் ஆவதுண்டு. அண்ணன் தங்கை சம்பந்தி ஆகுவதுண்டு. இஸ்லாமியர்களில் அண்ணன் தம்பிகள் சம்பந்தி ஆவதில் சிக்கல் இல்லை. திருமண உறவு முறை என்பதில் அனுமதிக்கப்பட்டவை என்று பார்த்தால் அவை சமாதானங்கள் மட்டுமே, ஒரு சிலரின் வரம்புகள் பிறரால் கேலி செய்யப்படும். இரத்த உறவுகளுக்கு திருமணம் சந்ததிகளுக்கு உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதே உண்மை.
ஐயா கோவிக் கண்ணன் நான் கேட்டது உங்களுக்கு புரியவில்லை போலும்.உடல் ரீதியான பிரச்சினைகள் அடுத்த சந்ததிக்கு வருமா வராதா என நான் கேட்கவில்லை. அதைப் பற்றி நான் அவனிடம் ஏற்கனவே பேசி விட்டேன். என்ன செய்வது யாரென அறியும் முன்னரே காதலித்து தொலைத்து விட்டானே!! எனக்கு தெரிய வேண்டியது அந்தப் பெண் அவனுக்கு என்ன உறவு?அவர்களின் திருமணம் சமூகத்தால் தவறாக புரிந்து கொள்ளப்படுமா? ஒருவேளை நீங்கள் அவர்கள் எந்த சமூகம்(மதம்) என்று கேட்கிறீர்களோ தெரியவில்லை. அவர்கள் இந்து சமூகம். நீங்கள் அந்தப் பெண் என் நண்பனுக்கு என்ன உறவு என்று மட்டும் கூறுங்கள்.
நீங்கள் சொல்வது படிபார்த்தால் அத்தை மகளை மணக்க தடை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
மாமம், மச்சான் இவர்களின் குழந்தைகளை மணந்து கொள்வது வழக்கமாக இருக்கிறது இன்னும் சில இடங்களில்.
நன்றி கோவிக்கண்ணன். ஒரு சிறிய விடயம். உறவுமுறைகளுக்குள் திருமணம் செய்தால் பரம்பரை ரீதியான நோய்கள் வருவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் என்ற உங்களின் கருத்துடன் நான் ஒத்துப் போகிறேன். ஆனால் உறவுமுறைத் திருமணத்தால் மட்டுமே பரம்பரை நோய்கள் வரும் என்பதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். நானும் ஒரு பரம்பரை நோயுடன் வாழ்பவனே!
எனது தாயும் தந்தையும் காதலித்து திருமணம் செய்தவர்களே. இருவரும் எந்த விதத்திலும் உறவினர்கள் அல்ல. ஆனால் நானும் என் சகோதரனும் இப்போது பரம்பரை ரீதியான அந்த நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இப்போது என்னை ஒருத்தி விரும்பி திருமணம் முடிப்பாள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. காரணம் இப்போது காதல் என்பது அப்பியரன்சா? அப்ரோச்சா? என்ற ரீதியில் போய்க் கொண்டிருக்கிறது. எம்மைப் போன்றவர்களை உறவுக்குள் யாராவது ஒரு பெண் மணம் முடித்தால் தான் உண்டு.நீங்கள் ஏதோ எழுந்தமானமாக உறவுக்குள் திருமணம் முடிப்பவரெல்லாம் ஏதோ சொத்து வெளியே போகக் கூடாது என்பதற்காகவே திருமணம் செய்கின்றனர் என்று கூறுகின்றீர்.சில சந்தர்ப்பங்களில் உறவுக்குள் திருமணம் என்பதே நல்லது.
--நன்றி--
ஒரு சிறிய விடயம் கோவிக் கண்ணன். சொத்து வெளியே செல்லக் கூடாது என்று ஒருவர் குறிப்பிட்டிருந்தார் அவருக்காகவே எனது விடயத்தைக் கூறினேன்.
--நன்றி--
//ஒரு சிறிய விடயம் கோவிக் கண்ணன். சொத்து வெளியே செல்லக் கூடாது என்று ஒருவர் குறிப்பிட்டிருந்தார் அவருக்காகவே எனது விடயத்தைக் கூறினேன்.
--நன்றி--//
நீங்கள் முந்தைய பின்னூட்டத்தில் குறிப்பிட்டவை சரிதான். என்னுடன் படித்த நண்பன் ஒருவர் கால் போலியாவால் ஊனமுற்றவர், அவரும் வருத்தப்பட்டு சொல்லுவார், 'என்னையெல்லாம் உறவுக்காரர்கள் திருமணம் செய்தால் தான் உண்டு' அவர் சொல்வதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது, உறவுக்காரர்களும் போதிய அளவுக்கு சொத்து இருந்தால் தான் திருமணம் செய்து கொள்வார்கள். எந்தப் பெற்றோரும் திருமணத்திற்கு பிறகு தனது வாரிசுகள் துன்பப்படக் கூடாது என்று நினைப்பது இயல்பு தானே.
என் பெயர் முருகன் நான் இந்து மதத்தில் பிறந்தவன். நானும் எனது சித்தி பெண்னும எட்டு வருடங்களாக காதலித்து வரும்நிலையில் திருமணம் செய்ய சட்டத்தில் இடம் உன்டா இது சாத்தியமா?
விலஙகுகள் மனிதளாக பெயர் கொணடதால் சரவமும் விவாதமாகிறது.வாழவேணடியது இதில் மதஙகள் சமபபநதம் படடது ஏனோ
உங்கள் சித்தி மகளை மணம்முடித்தீர்களா முருகன்.
நானும் எனது சித்தி மகளும் விரும்புகின்றோம்,நாங்கள் திருமணம் செய்துகொண்டால் இந்து திருமணம் சட்டம் எங்களுக்கு தண்டனை அளிக்குமா
பண்டைய தமிழரின் மரபில் அக்கா மகளை திருமணம் செய்யும் வழக்கம் இல்லை.
தமிழர்களின் சரியான திருமண உறவுமுறை பற்றி விளக்கும் வீடியோவை காணுங்கள்.
https://youtu.be/SWEaj8xJIo4
Bro.... Kalyanam.. Panitingala..... Sattathula.. Idam. Irukaaa???
கருத்துரையிடுக