பின்பற்றுபவர்கள்

25 ஆகஸ்ட், 2007

*நட்சத்திரம்* : கருத்து உரிமைகள் (சுதந்திரம்) !

கவிதைகள் மீது எனக்கு ஈடுபாடு வந்ததற்கு முதன்மைக் காரணமாக நான் நினைப்பது கவிஞர் வாலி மற்றும் கவிஞர் வைரமுத்து. சுற்றி வளைக்காது "நச்" சென்று எழுதுவதில் இருவரும் வல்லவர்கள். பெரியவர் வாலி எதுகை மோனைக்காக கவிதைகளில் ஆங்கில சொற்களை எடுத்தாளுவார், வைரமுத்து திரைப்படப் பாடல்களில் அதைச் செய்வார். இளமை என்பது பருவமே இல்லை, அது மனம் சார்ந்த அகப்பொருள். அது என்றும் இருப்பது, இதை நான் வாலியின் கவிதைகளை (சு)வாசிக்கும் பொழுது அவருடைய எழுத்தின் துள்ளல்கள் சொல்லிக் கொடுத்த பாடம். சில ஆபாச ('எப்படி எப்படி போன்ற') பாடல்களை அவர் எழுதி இருந்தாலும் என் ஆசாபாசத்துக்குள் என்றுமே இருப்பவர் கவிஞர் வாலி. கற்பனை என்ற விடயத்தில் எழுதும் பொழுது அது கவிதையானாலும் சரி கதை ஆனாலும் சரி அதை எழுதுபவரின் கற்பனை என்ற இடத்தில் நிறுத்திப் பார்பது போதும், அதை தாண்டி இப்படி கீழ்தரமாக எழுதுபவரும் கீழ்தரமான ஆளாக இருப்பார் என்று ஒரு சிலர் (எப்போதும் அப்படியே நடந்து கொள்பவர்) தவிர்த்து மற்றவர்கள் குறித்து மிதமிஞ்சிய கற்பனைகள் தேவையற்றது என்றே கருதுகிறேன். ஏனென்றால் 'பாசிட்டீவ் திங்' என்ற வரையரைக்குள் எழுத்தாளன் இருந்தால் எந்த அவலத்தையும் எழுத்தில் கொண்டு வரமுடியாத கட்டுப்பாட்டை அது அவனுக்கு விதித்துவிடும்.

உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே செய்யும் மிகச்சிலரின் ஆக்கங்கள் தவிர்த்து...கவிதையோ, கதையோ, கட்டுரையோ அதில் சொல்லுவருபவை அல்லது கருப்பொருள் விமர்சனத்துக்கு வரலாம் ஆனால் அதை சொல்பவரின் மனமோ அல்லது அவரது தனிப்பட்ட குணமாக அவரது ஆக்கத்தை விமர்சனமாக்கக் கூடாது என்றே நினைக்கிறேன், எல்லோரும் கண்டு கேட்ட அடிப்படையிலேயே தான் எழுதுகிறார்கள் தன்(சுய) விருப்பங்களும் கற்பனையில் இருக்கும் என்பதை ஒப்புக் கொள்ளலாம். அத்தகைய விருப்பத்தை ஒருவர் எழுதும் போது எல்லோரையும் போலவும் அவர்களும் சமூக பொறுப்புணர்வுடன்தான் செயல்படுவார்கள் என்பதையும் முதலில் நம்பி அதன் பின் ஆராய்ந்தே மறுத்துரைக்கலாம். விமர்சனமே இல்லாமல் ஒன்று எழுதவேண்டுமென்றால் அது 'சுற்றுலா சென்று வந்ததைப்பற்றி சிறு குறிப்பு வரைக' என்று பள்ளிகளில் ஆசிரியர் தரும் வீட்டுப்பாடத்துக்கு எழுதப்படும் கட்டுரைகள் மட்டுமே.

பதிவுலகம் போன்ற ஊடகத்தில் 'பாசிட்டிவ் திங்கிங்' என்ற எவரும் அறிவுறுத்தினால் அவர் பரிதாபத்துக்கு உரியவர்தான். குப்பனும் - சுப்பனும் பதிவு எழுத வந்தால் அவர்களுக்கு எழுத்து வரமால் போகலாம், பொது இடத்தில் எப்படி பேசுவது என்று தெரியாமல் போகலாம், ஆனால் அவர்களுக்கு இருக்கும் கருத்தை அவர்கள் மொழியில் அவர்களால் வெளிப்படுத்தவரும், அதை எவரும் தடை போடமுடியாது, என்பதைப் புரிந்து கொண்டால், பதிவுலகம் வார இதழ்கள் போல் இல்லாமல் எல்லைகள் உடைந்து பால்வெளி போல விரிந்து இருக்கும். முகம் சுளிக்க வைக்கும் ஆபாசங்கள் எப்பொழுதும் நம்மை சுற்றி நடப்பவையே, காதில் விழுந்தாலும் அவற்றில் நாம் கவனம் செலுத்துவதில்லை. பொருட்படுத்துவதில்லை. இணையத்திலும் இதே நிலையை வைத்துக் கொண்டால் போதும் அவரவர் எண்ணத்தை எழுதுவதற்கு வரும் எதிர்வினை ஆபாசங்கள் குறித்து ஐயப்படத்தேவை இல்லை. நாம் 'சமூக பொறுப்புடன்' தான் எழுதி இருக்கிறோம் என்று 'மனசாட்சிப்படி' உணர்ந்தால், வீனான ஆபாச அர்சனைகளை பற்றி கவலைக் கொள்ளத் தேவை இல்லை.

புனிதர்பட்டம் நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளும் போது, நம்மை நம் செயல்களை புனிதமாக நினைத்து அல்லது நம்மை / நம்மை சார்ந்தோரின் கீழ்தர செயல்களை முற்றிலும் மறந்துவிட்டு மற்றவர்கள் எல்லோரும் குறையுடவர்கள் போலவும் அவர்கள் எல்லோரும் அபத்தமாக நடந்து கொள்பவர்கள் என்று தெரிவது நம் மனவியாதியே அன்றி வேறொன்றும் இல்லை. அதற்காக கருத்துக்கு எதிர்கருத்து தேவை இல்லை என்ற சொல்லவரவில்லை. அவரவர் எண்ணத்தில் அவரவர் அறிந்துள்ள எல்லைக் குட்பட்டே எழுதுகிறார்கள் என்று புரிந்து கொண்டு மறுமொழிய முன்வரவேண்டும்.

நான் இங்கு பதிவுலகம் குறித்து வரையரைகளை செய்ய முயலவில்லை, காலப்போக்கில் அதுவாகவே ஒரு வடிவத்தை பெற்றுவிடும். எனது கருத்துக்களை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

அன்புடன்,

கோவி.கண்ணன்



அடுத்து ஒரு நிறைவு இடுகையுடன், எனது நட்சத்திர வாரம் நிறைவடைகிறது !

15 கருத்துகள்:

மங்கை சொன்னது…

//அவரவர் எண்ணத்தில் அவரவர் அறிந்துள்ள எல்லைக் குட்பட்டே எழுதுகிறார்கள் என்று புரிந்து கொண்டு மறுமொழிய முன்வரவேண்டும்///

கோ வி..

அருமையா சொல்லிட்டீங்க...இதை நான் எஸ்.கே ஐயா கருத்து சொல்லும் போதும், நீங்கள் கருத்து சொல்லும் போதும் உணர்ந்து இருக்கிறேன்.. வியந்து இருக்கிறேன் என்று சொல்ல வேண்டும்..


///அவரவர் எண்ணத்தில் அவரவர் அறிந்துள்ள எல்லைக் குட்பட்டே ///

இதை உணர வேண்டும்... எங்கேயும்..எப்போதும்..ஹ்ம்ம்

சிவபாலன் சொன்னது…

உங்கள் கருத்து ஏற்புடையதே..

சில பேர், தாங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை கேள்வி கேட்கிறான் என்பதற்காகவே காழ்புணர்வுடன் எதிர்ப்பது வருந்ததக்கது. நாம் கேள்வி கேட்பதிலேயே அவர் நம்பிக்கை ஆட்டம் காணும் மாறு இருக்கிறது என்றால் அது எத்தகைய நம்பிக்கை என்பதை அவரவர் எண்ணத்திற்கே விட்டுவிடுகிறேன்.

நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//கோ வி..

அருமையா சொல்லிட்டீங்க...இதை நான் எஸ்.கே ஐயா கருத்து சொல்லும் போதும், நீங்கள் கருத்து சொல்லும் போதும் உணர்ந்து இருக்கிறேன்.. வியந்து இருக்கிறேன் என்று சொல்ல வேண்டும்..//

மங்கை,

என்னையும், எனது நண்பர் வீ.எஸ்.கே ஐயாவையும் சேர்த்தே பாராட்டியது மிக்க மகிழ்வாக இருக்கிரது நன்றி ! நாங்கள் இருவரும் கருத்தளவில் எதிர்துருவங்கள் தான் அதனாலேயே ஈர்ப்பும் உண்டு :))

கோவி.கண்ணன் சொன்னது…

//சிவபாலன் said...
உங்கள் கருத்து ஏற்புடையதே..

சில பேர், தாங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை கேள்வி கேட்கிறான் என்பதற்காகவே காழ்புணர்வுடன் எதிர்ப்பது வருந்ததக்கது. நாம் கேள்வி கேட்பதிலேயே அவர் நம்பிக்கை ஆட்டம் காணும் மாறு இருக்கிறது என்றால் அது எத்தகைய நம்பிக்கை என்பதை அவரவர் எண்ணத்திற்கே விட்டுவிடுகிறேன்.

நன்றி
//

சிபா,

நான் பதிவில் குறிப்பிட்ட படி தம்மை 'புனிதர்களாக' நினைத்துக் கொள்வதுதான் அந்த அவர்களின் குறுகிய மனப்பாண்மைக்கு காரணம்.
:(

கருத்துக்கு நன்றி !

மங்கை சொன்னது…

\\நாங்கள் இருவரும் கருத்தளவில் எதிர்துருவங்கள் தான் அதனாலேயே ஈர்ப்பும் உண்டு :)) \\\

அது தெரிஞ்சதனால தான் சொல்றேன்
அதுனால தான் வியப்பு...

பழூர் கார்த்தி சொன்னது…

//நான் இங்கு பதிவுலகம் குறித்து வரையரைகளை செய்ய முயலவில்லை, காலப்போக்கில் அதுவாகவே ஒரு வடிவத்தை பெற்றுவிடும்//

Here is a point...
மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள்..

Unknown சொன்னது…

//நாம் 'சமூக பொறுப்புடன்' தான் எழுதி இருக்கிறோம் என்று 'மனசாட்சிப்படி' உணர்ந்தால்,//
எழுதும் ஒவ்வொருவரும் தம்முடைய சமூகப்பொறுப்பை உணர்ந்து எழுதினால் எதை/யாரைப் பற்றியும் கவலை கொள்ளத் தேவையில்லை. சரியான வார்த்தைகள் ஜிகே.

கோவி.கண்ணன் சொன்னது…

//மங்கை said...

அது தெரிஞ்சதனால தான் சொல்றேன்
அதுனால தான் வியப்பு...
//
மங்கை அவர்களே,
மீண்டும் வந்து வியப்பை சொல்லி வியப்படைய வைத்துவிட்டீர்கள். மிக்க நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//பழூர் கார்த்தி said...

Here is a point...
மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள்..
//

கார்த்தி,
அதைவிடுங்க,
உங்க படம் சூப்பர் ! :))

கோவி.கண்ணன் சொன்னது…

//சுல்தான் said...
எழுதும் ஒவ்வொருவரும் தம்முடைய சமூகப்பொறுப்பை உணர்ந்து எழுதினால் எதை/யாரைப் பற்றியும் கவலை கொள்ளத் தேவையில்லை. சரியான வார்த்தைகள் ஜிகே. //

சுல்தான் ஐயா,

குறிப்பிட்டு பாராட்டுவதற்கு மிக்க நன்றி !

VSK சொன்னது…

//பதிவுலகம் போன்ற ஊடகத்தில் 'பாசிட்டிவ் திங்கிங்' என்ற எவரும் அறிவுறுத்தினால் அவர் பரிதாபத்துக்கு உரியவர்தான். //
//
புனிதர்பட்டம் நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளும் போது, நம்மை நம் செயல்களை புனிதமாக நினைத்து அல்லது நம்மை / நம்மை சார்ந்தோரின் கீழ்தர செயல்களை முற்றிலும் மறந்துவிட்டு மற்றவர்கள் எல்லோரும் குறையுடவர்கள் போலவும் அவர்கள் எல்லோரும் அபத்தமாக நடந்து கொள்பவர்கள் என்று தெரிவது நம் மனவியாதியே அன்றி வேறொன்றும் இல்லை.//

மிக அருமையான சுய விமரிசனம், கோவியாரே!
அட்டகாசமான பதிவு!
:))

VSK சொன்னது…

எவருக்கும் இது பொருந்தும்!

இதையும் அதோடு சேர்த்துக் கொள்ளுங்கள்!

கோவி.கண்ணன் சொன்னது…

// VSK said...
மிக அருமையான சுய விமரிசனம், கோவியாரே!
அட்டகாசமான பதிவு!
:)) //

நட்சத்திர இடுகைகளுக்கு வந்த உங்கள் மற்றொரு 'நொள்ளை' சர்டிபிகேட் பின்னூட்டத்திற்கு நன்றி ஐயா ! முடிந்தவரை நிர்பந்தங்கள் என எதுவும் இல்லாவிட்டாலும் உங்கள் 'கடமையை' செய்கிறீர்கள்.

பின்னூட்டத்திற்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//VSK said...
எவருக்கும் இது பொருந்தும்!

இதையும் அதோடு சேர்த்துக் கொள்ளுங்கள்!
//

வீ.எஸ்.கே ஐயா,

இது எல்லோருக்கும் பொருந்தாது, வேண்டுமென்றே, தெரிந்தே பழம்பெருமை புகழ்பாடுபவர்களும், அதற்கு ஆதரவு கொடுப்பவர்களும் இருக்கிறார்கள். பதிவை சரியாக படித்தால் டிஸ்கிகள் தனியாக தெரியும்.

:)

காரூரன் சொன்னது…

நல்ல ஆரோக்கியமான பதிவு. நாம் ஒரு பதிவை எப்படி உள்வாங்கி கொள்கின்றோம் என்பதை பொறுத்து தான் விமர்சனம் அமைகின்றது. ‍ நான் எதிர் பார்ப்பது கவிதையில் இல்லை என்று விட்டு கருத்து சொன்னால் அது விசனமாகிவிடும்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்