இடம் காலாடி ( ஆதிசங்கரர் பிறந்த ஊர்)
ஒரு இனிய பொழுதின் மாலை, ஆசரமகுடிலுக்கு வெளியில் உள்ள புலிதோல் மீது சங்கரர் அமர்ந்திருக்கிறார்
சிஷ்ய கோடிகள் அவருக்கு முன்னால் அமர்ந்திருக்கிறார்கள்
சங்கரர் நிஷ்டை களையும் நேரம் வந்தது, மெதுவாக கண்கள் திறந்தது, சிறிது நேர மெளனத்திற்கு பிறகு
சங்கரர் : ப்ரியமான சிஷ்யர்களே, நான் இன்று உங்களுக்கு பிரம்ம ஞானத்தை சொல்லப் போகிறேன். கவனமாக கேளுங்கள்.உங்களுக்கு தெளிவு ஏற்படவில்லை என்றால் கேள்வி எழுப்புங்கள்
சிஷ்யர்கள் : லோக குருவான ஆச்சாரியார் அவர்களே அப்படியே ஆகட்டும்.
சங்கரர் : கர்மயோகம் அனைத்தையும் கற்று தேர்ந்து...கூடுவிட்டு கூடு பாய்ந்து காமத்தையும் அறிந்த நான் உலக வாழ்வின் தன்மைகள் முழுதும் அறிந்து கொண்டேன். எனது ஆழ்ந்த யோகத்தின் வழி பிரம்ம ஞானத்தை தெரிந்து கொண்டிருக்கிறேன். பிரம்மத்தை அடைவதே நம் நோக்கம். பிரம்மம் என்பது என்ன ?
சிஷ்யர்களில் ஒருவரான சுரேஸ்வரர் : சுவாமிஜி ... ஆச்சாரியார் அவர்களே... பிரம்மம் பற்றி நம் வேத நூல்கள் கூட சொல்கிறது. பிரம்மம் என்பது ஆகயம் என்று சொல்கிறார்கள், சூரியன் என்று சொல்கிறார்கள். எங்களுக்கெல்லாம் பிரம்மம் பற்றிய புரிதல் குழப்பமாகவே இருக்கிறது.
சங்கரர் : அது ஒருவகையில் சரி ஆனால். பிரம்மம் என்பது எங்கும் நிறைந்திருப்பது, பிரம்மம் தவிர வேறு எதுவுமே இல்லை. பிரம்மம் நிரந்தரமானது, அழிவற்றது பிரம்மமே உண்மை, தினம் மாறும் இவ்வுலகமும், இவ்வாழ்கை எல்லாமும் மாயம். ஒருவன் பிரம்மத்தை அடைவதன் மூலம் பிறப்பற்றவனாகிறான். துன்பம் மிகுந்த உலகவாழ்கையில் இருந்து முற்றிலும் விடுதலை அடைகிறான். பிரம்மத்தை அடைதல் என்பது நீயே பிரம்மாக மாறிவிடுவாது. எங்கும் இருக்கும் பிரம்மத்தில் நுழையும் வாசல் இருக்கிறது. வெளியேறும் வழியில்லை. எனவே பிரம்மத்தை அடைந்தவன் பிறப்பறுக்கிறான். இன்னும் சற்று தெளிவாக சொல்ல வேண்டுமானால் 'ஏகத்துவம்' ஒரேநிலை, அசைவற்ற நிலை, உலகியலுக்கு அப்பாற்பட்ட இறுதி நிலை.
சுரேஸ்வரர் : ஓரளவுக்கு புரிகிறது. ஆச்சாரியாரே... பிரம்மத்தை அடைவது எப்படி ?
சங்கரர் : எங்குமாகி இருக்கும் பிரம்மத்தின் மீது பற்றுதல் கொள்ள வேண்டும், பிரம்மமே உயர்வு என்று எப்பொழுதும் நினைக்க வேண்டும். பிரம்மம் பிறப்பறுக்கிறது என்று உலகத்தாருக்கு உணர்த்த முயலவேண்டும். எந்த வருணத்த்தை சேர்ந்தவனாக இருந்தாலும் பிரம்மத்தை அடைவதை குறிக்கோளாக கொண்டு அதை அடைபவனே பிராமணன் ஆகிறான். உலகில் உள்ள தத்துவ ஞானங்களிலெல்லாம் உயர்நது பிரம்ம ஞானமே, மற்ற ஞானங்கள் வாழ்வியலுக்கும், இறையியலையும் பேசுகின்றன. பிரம்ம ஞானம் மட்டும் தான் விடுதலை அளிக்கிறது இதுவே அத்வைதம் அதாவது இரண்டற்ற ஒரு நிலை.
சுரேஸ்வரர் : ஆச்சாரியாரே...குடும்பஸ்தர்களிடம் சென்று பிரம்மம் பற்றி பேசினால் அவர்கள் புரிந்து கொள்வார்களா ?
சங்கரர் : அதைப் பற்றிய அச்சங்கள் தேவையில்லை. முதலில் நாம் செய்ய வேண்டியது, புத்தர் கொள்கை பரவிய பிறகு வீழ்ந்த பக்தி மார்கங்களை அதாவது சனாதன தர்மத்தை எழுச்சி பெறவைக்க வேண்டும். புத்தர் கொள்கையில் முக்கியமாக மக்களை கவருவது 'நிர்வாண' தத்துவம் - ஏதுமற்ற தன்மை மற்றும் ஆசைகளை துறப்பது. பிரம்மம் என்பது ஏதுமற்றதல்ல...எல்லாமுமாக இருப்பது... நாம் ஆசைகளை துறக்க வேண்டாம் மாறாக ஆசைகளை வெறுப்போம். எந்த அளவுக்கு உலக வாழ்கையென்னும் மாயையை வெறுக்க முயற்சிக்கிறோமோ அல்லது பற்றற்று இருக்கிறோமோ ... அந்த அளவுக்கு நாம் பிரம்மத்தை நெருங்குகிறோம். நாம் உலக வாழ்கையை வெறுத்தவர்களாக உலகாருக்கு காட்ட வேண்டும். அதே சமயத்தில் பக்திமார்கத்திற்கு வெளியில் வந்து இதை செய்ய முடியாது. மக்களை முதலில் பெளத்த கொள்கைகளிலிருந்து சனாதன தருமத்திற்கு மீட்டுக் கொண்டுவர வேண்டும். அதன் பிறகு பிரம்மம் பற்றிய பாடங்களையும், சூத்திரங்களையும் அவர்களுக்கு தெளிவிப்போம். தற்பொழுது சிலைவழிபாட்டை கேலி செய்த பெளத்தர்கள் சமணர்கள்....புத்தரையும், சமணரையும் சிலையாக வடித்திருக்கிறார்கள், சனாதன தருமத்தின் இந்திரனை ஏற்றுக் கொண்டு இந்திரவிழா நடத்துக்கிறார்கள் ... மடங்களை விட்டு விட்டு பெளத்த சன்யாசிகள் ஆடம்பர கோவில்களை அமைத்திருக்கிறார்கள் . இதன் மூலம் மக்கள் சிலை வழிபாட்டின் மீது நாட்டம் கொண்டிருக்கிறார்கள் என தெரிகிறது. நாமும் சிலை வழிப்பபட்டின் மீது மக்கள் வைத்திருக்கும் ஈடுபாட்டை பயன்படுத்திக் கொள்வோம்.
சுரேஸ்வரர் : நல்லது ஆச்சாரியார் அவர்களே...நங்களெல்லாம் பிரம்ம நிலையை அடையும் பிராமணர்கள் என்ற உறுதி மொழியை இன்று முதல் ஏற்கிறோம். தங்கள் சொல்லும் பிரம்மமே உயர்வானது.
மற்ற சிஷ்யர்களும் அவ்வாறே, பிரம்மமே உயர்வானது !. பிரம்மமே உயர்வானது !! என்று குரல் எழுப்புகிறார்கள்
சங்கரர் : முக்கியமாக நீங்கள் நினைவு கொள்ள வேண்டியது, உலக வாழ்கையை வெறுக்க வேண்டும், எந்த ஒரு பொருளையோ, விலங்கையோ, பிரம்மத்த்தை ஏற்காத அல்லது புரிந்து கொள்ளாதவர்களை 'தீண்டத்தாகதவர்களாக' நினைத்து மனதளவில் நெருங்காமல் இருக்க வேண்டும்.
சுரேஸ்வரர் : மிகவும் நன்று ஆச்சாரியார் அவர்களே...அப்படியே செய்கிறோம்
சங்கரர் : நமக்கு முக்கிய வேலை இனிமேல் தான் இருக்கிறது. பாரத தேசத்தின் நான்கு திக்குகளிலும் சங்கர மடங்களை நிறுவப்போகிறேன். அதன் மூலம் முதலில் சனாதனத்தை வளர்க்க வேண்டிய நடவடிக்கைகளை எடுப்போம். நம் பஜகோவிந்தமும், செளந்தர்யலகரியும் சிலைவழிபாட்டுக்கு உதவி பக்தி மார்கத்தாரிடம் தாக்கத்தை ஏற்படுத்தி மக்கள் சநாதனத்துக்கு திரும்புவார்கள். அதிலிருந்தபடியே அத்வைத தத்துவமான பிரம்ம தத்துவத்தை போதிப்போம்
********
நூற்றாண்டுகளுக்கு பிறகு, சுரேஸ்வர் வழிவந்த அவர் சந்ததியின்
ஒருபிரிவினர் : "நாங்கள் ஆதி சங்கரர்...சுரேஸ்வரர் வழிவந்த பிராமணர்கள், பிரம்மத்தை உணர்ந்தவர்கள், பிரம்மம் பற்றிய அறிவில்லாதவர்களை நாங்கள் தீண்டுவதில்லை".
அதன் பிறகு மனு(அ ?) தர்மம் இயற்றபெற்றது
1000 ஆண்டுகளுக்கு பிறகு
********
"நாங்கள் பிராமணர்கள், பிரம்ம ஞானத்தின் வழி பிறந்தவர்கள், மற்றவர்கள் எல்லாம் பிரமணர் அல்லாதோர் அதாவது தீண்டத்தாகதவர்கள்
******
2000 ஆண்டிலும்
இன்னும் கூட சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள் .... தீண்டாமை !
டிஸ்கி :
தீண்டாமை தோன்றிய காரணம் என்ன ?
மேலே சொன்ன 'பிரம்ம ஞானம்' அத்வைதம் தான் அதற்கு மூலம் என தெரியவருகிறது. ஒரு சில புத்தகங்களில் எழுதி இருந்த குறிப்புகளை வைத்து எழுதியது இது. பிரம்மத்தை அடைவது பற்றிய பல்வேறு விளக்கங்களைப் பார்த்த பின் எனது கருத்து பிரம்மத்தை அடைந்தவன் நிலை என்பது இருட்டு அறையில் இறந்த பிணம் எவருக்கு தெரியாமல் நிரந்தரமாக அப்படியே கிடப்பதற்கு ஒப்பானது என்று விளக்கம் சொன்னால் கூட அது சரியாகக் கூட இருக்கலாம் ஏனெனில் பிரம்மத்தை அடைவது என்பது பிறப்பறுத்த (செயல்படாத) மீளாத நிலை. இதற்கு மாற்றாக பிரம்மத்தை அடைந்த பலாபலன் அத்வைதத்தில் இருந்தால் அதுவும் இப்படித்தான் இருக்கும் ஆனால் அதற்கு மேற்பட்டதாக இருக்க முடியாது.
அவரது நோக்கம் அனைத்தையும் ஒன்றாக பார்க்கும் ஒரு நல்ல நோக்கமே. உலக வாழ்கை என்பது மாயை என்று சொன்னார். ஆனால் அத்வைதிகள் அல்லது அதில் நம்பிக்கை உடையவர்கள் மற்ற மனிதர்களை தீண்டக்கூடாது என்றெல்லாம் சொல்லவில்லை. அது உயர்ந்த ஞானம் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அதைப்பற்றி எந்த அனுபவமுமே இல்லாமல் பின்னாளில் அதில் நம்பிக்கை கொண்டிருந்தவர்கள் அதுவே உயர்ந்தது என்ற வீன் பெருமையும், மற்றவை தாழ்ந்தவை என்ற எண்ணம் கொண்டிருந்தனர். தீண்டாமை என்ற கொள்கை என்பது பின்னாளில் திரிக்கப்பட்டவைதான் அதற்கு முன்பு சநாதன தருமத்தினர் குழுக்காளாக இருந்தலும் பிறரிடம் தீண்டாமை பாராடியதற்கான இருந்தற்கான குறிப்புகள் கிடைக்கவில்லை. சங்கரரோ, அவரின் மாணாக்கர்களோ தீண்டாமை பாராட்டுவதற்காக அத்வைதக் கொள்கையை உண்டாக்கவில்லை.
எப்படியோ பிறந்துவிட்டோம்... அதன் கடமையான வாழ்க்கையை மகிழ்வுடன் நேசிப்போம். புரியாத ஒன்றை அல்லது இல்லாத ஒன்றை உயர்வாக காட்டிக் கொண்டே போனால் 'ஏற்றத் தாழ்வுகளின்' தோற்றமாக அது அமைந்துவிடும். சமூக நலன் சாராத தத்துவங்கள் எவையும் நல்வாழ்கைக்கு உதவாது என்றே கருதுகிறேன்.
ஆக்கம் எழுத உதவி குறிப்பு நூல் : "இந்திய கதை - ஏகம், அநேகம்,சாதியம்" - ஆசிரியர் நா.முத்துமோகன்"
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
9 கருத்துகள்:
ஆதி சங்கரர் குளத்திற்குச் செல்லும் போது சண்டாளனைக் கண்டு ஒதுங்கியதாக ஒரு கதை உண்டு..
அதனால், தீண்டாமை அப்பொழுதே இருந்திருக்க வேண்டும்... தெளிவுபடுத்துங்கள்
// TBCD said...
ஆதி சங்கரர் குளத்திற்குச் செல்லும் போது சண்டாளனைக் கண்டு ஒதுங்கியதாக ஒரு கதை உண்டு..
அதனால், தீண்டாமை அப்பொழுதே இருந்திருக்க வேண்டும்... தெளிவுபடுத்துங்கள்
//
சாது சன்யாசிகள் பொதுவாக யாரையும் தீட்சை கொடுப்பதற்கே மட்டுமே தொடுவர். நீங்கள் சொல்வது புலையனிடம் சங்கரர் ஞானம் பெற்ற கதை, பின்னாளில் அவர் பரமசிவனிடம் ஞானம் பெற்றதாக திரித்தார்கள். சங்கரர் எழுதிய நூலிலும் புலையனிடம் ஞானம் பெற்றதாகத்தான் குறிப்புகள் இருப்பதாக ஒரு நூலில் படித்தேன்.
அவர் அவ்வாறு செய்தது சமூகம் சார்ந்த தீண்டாமை அல்ல. சமத்துவம் போற்றிய இராமகிருஷ்ண பரமஹம்சர் கூட யாரையும் தொட்டது இல்லை. அதற்காக அவர் தீண்டாமை பாராட்டினார் என்று அதை கொள்ள முடியாது.
ஏன் தொட்டா ஒட்டிக்குமா...? தொடாமல் இருப்பது என்பது வேறு....தெரியமல் பட்டால் கூட பரபரப்பாகுவது வேறு..
அது சண்டாளன் என்றே நான் படித்ததாக நினைவு..ஏதேனும்..மேற்கோள் இருக்கிறதா உங்களிடம்..சண்டாளன் என்றால் வெட்டியான் என்று எண்ணுகிறேன்...அப்போழுதே..பிரிவினை இருந்திருக்க வேண்டும்...
ஆதிசங்கரர் "இந்து" மதத்தின் தூண்களாக கௌமாரம் (முருக வழிபாடு) உட்பட ஆறு மதங்களை "உணர்த்தியது" பற்றி இங்கே.
மேலுள்ள சுட்டியில் சொன்ன பக்கம் TSCIIல் இருக்கிறது. படிக்க இயலாதவர்களுக்காக ஒருங்குறியில் மாற்றி அளிக்கிறேன்.
-----------------------------------
ஆதிசங்கரர் (சுமார் கி.மு. 6 ம் நூற்றாண்டு), பல துர்மதங்களைத் தள்ளி, இந்து மதத்தின் தூண்கள் என்று கருதப்படும் ஆறு (ஷண்) மதங்களை உணர்த்தி, பக்தியின் அடிப்படையில் வழிபாடுகளை அமைத்துத் தந்தார்.
அந்த ஷண்மதங்கள் என்பன ...
கணபதி வழிபாடு (காணாபத்யம்)
சிவ வழிபாடு (சைவம்)
விஷணு வழிபாடு (வைஷணவம்)
சூரிய, அக்கினி வழிபாடு (செளரம்)
அம்பிகை வழிபாடு (சாக்தம்)
முருக வழிபாடு (கெளமாரம்)
ஷண்மதங்களில் ஒன்றான கெளமாரம் பிரும்ம வித்தை, ஆத்ம வித்தை, புருஷார்த்த சாதனம் என்ற மூன்று செல்வங்களை அறிய வழிகாட்டுவது. இந்த சுப்பிரமணிய உபாசனை சிவதத்துவத்தையே ஆதாரமாகக் கொண்டது. ஜோதி சுவருபமான நிர்க்குண பரப்பிரும்மத்திற்கு
சுப்பிரமணிய ... சிவம் என்று பெயர்.
(சிவனுடன் சுப்பிரமணியம் ஒன்றிவிட்டதால் பஞ்சாயதனப் பூஜையில் சிவன், விஷணு, சக்தி, கணபதி, சூரியன் ஆகியவர்கள் மட்டுமே இடம் பெருகிறார்கள்).
(திரு எஸ. நடராஜன் .. நஜன் .. எழுதிய .. முருக தரிசனம் .. நூலிலிருந்து ... பிரதிபா பிரசுரம்).
முருக வழிபாடு பெரும்பாலும் தென்னிந்திய மக்களிடம் பிரபலமாக உள்ளது. கந்தனை மிகப் பாசத்துடன் முருகன் என்று அழைக்கிறோம். குமரன் என்றால் இளைஞன். முருகன் என்றால் அழகன். என்றும் இளமையும் அழகும் நிறைந்த முருகக் கடவுளை மூலஸத்தான தெய்வமாக வழிபடுகிறோம்.
முருகனுக்குரிய இலக்கியங்களையும், பாடல்களையும், கட்டுரைகளையும் பக்தர்களுக்கிடையே பிரபலமாக்குவதற்காகவும் பக்தர்களின் அனுபவங்களை எல்லோரும் தெரிந்துகொள்வதற்காகவும் அமைக்கப்பட்டதே இந்த
... கெளமாரம் ... இணைய மையம்.
-----------------------------------
"துர்மதங்களைத் தள்ளி" என்பதில் வரும் துர்மதங்கள் என்பன எவை? அவை ஏன் தள்ளி வைக்கப்பட்டன? என்பதை உங்கள் எண்ணத்துக்கே விட்டுவிடுகிறேன். :-)
சோமபானம் அருந்தி மிருக யாகங்கள் செய்து அவ்ற்றை உண்டு நாடோடிகளாக வாழ்ந்த ஒரு கூட்டம்.
இயற்கையில் தோன்றிய நிலத்தை இயற்கையுடன் இணைந்து அந்தந்த நிலத்திற்குத் தகுந்தார் போல வாழ்க்கையின் ஒவ்வொரு உணவு,உடை,ஆட்ட பாட்டம் என்று அமைந்து ஆணும் பெண்ணும் காதலில் இணைந்து வாழ்ந்த ஒரு கூட்டம்.
இந்த இருகூட்டமும் சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம்.இருந்த நல்லவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டு,தமதாக்கி உயர்ந்தவர்களாகிறார்கள் ஒரு சிலர்.
நல்லதாக இருந்த நல்லதில் பல வற்றைத் தமதுதான் என்று கூடத் தெரியாமல் இழந்து விட்ட மந்திரத்தால் மயங்கி,மூளைகளில் இடப்பட்ட விலங்குகளை விலக்க முடியாமல் தாழ்ந்து விட்ட பெரும்பாலோனோர்.
இதன் நடுவே உள்ள சில நாடகங்களான புனைப்புகள்!
தற்போது ஒரு கவிஞர் தமிழீழ்த தம்பி பிரபாகரனை முருகன் என்று ஒரு அழகானக் கவிதை எழுதியுள்ளார்.இன்னும் பல முருகன்கள்,சிவாஜிகள் உருவாகலாம்.
துவைதம்,அத்வைதம்,நரகம்,மோட்சம்,
மறுபிறவி--
கேபிடலிசம்,சோசியலிசம்,கம்யூனிசம்-
ஜுடாயிசம்,இந்துயிசம்,கிருத்துவம்,
இசுலாமியம்---
கடைசியில்
கடவுளை மற!மனிதனை நினை!!
மனித நேயமே மகத்தான வாழ்வு!!!
//TBCD said...
ஏன் தொட்டா ஒட்டிக்குமா...? தொடாமல் இருப்பது என்பது வேறு....தெரியமல் பட்டால் கூட பரபரப்பாகுவது வேறு..
அது சண்டாளன் என்றே நான் படித்ததாக நினைவு..ஏதேனும்..மேற்கோள் இருக்கிறதா உங்களிடம்..சண்டாளன் என்றால் வெட்டியான் என்று எண்ணுகிறேன்...அப்போழுதே..பிரிவினை இருந்திருக்க வேண்டும்...
//
ஆதிசங்கரருக்கு பின்பு வந்தவர்கள் அவரது வரலாற்றை எழுதும் போது 'சண்டாளன்' என்பது பின்னாளில் புயலைக் கிளப்பும் என்றெல்லாம் நினைத்திருக்கமாட்டார்கள். அதனால் துனிந்தே எழுதியிருப்பார்கள். இன்றைக்கு காலில் இருந்து சூத்திரன் பிறந்தான் அதனால் தான் பகவானின் காலை சேவிக்கிறோம் என்ற இன்றைய காலத்தோர் சப்பை கட்டுகெளெல்லாம் கட்டுவதற்கு புராணம் எழுதியவர்களே காரணம். ஆதிக்கம் விழும், கேள்வி எழுப்புவார்கள் என்று நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.
:)
/ கோபி(Gopi) said...
ஆதிசங்கரர் "இந்து" மதத்தின் தூண்களாக கௌமாரம் (முருக வழிபாடு) உட்பட ஆறு மதங்களை "உணர்த்தியது" பற்றி இங்கே.
மேலுள்ள சுட்டியில் சொன்ன பக்கம் TSCIIல் இருக்கிறது. படிக்க இயலாதவர்களுக்காக ஒருங்குறியில் மாற்றி அளிக்கிறேன்.
//
கோபி,
நல்ல தகவல், கெளமாரம் என்ற பிரிவின் வேலையே எல்லாவற்றையும் வைதிக மயமாக்க அதற்கு புராண கதைகளை சொல்லுவதுதான் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். அதற்கு ஏற்றவாறு உங்கள் கருத்துக்கள் இருக்கிறது.
பின்னூட்டத்திற்கு நன்றி !
//Thamizhan said...
சோமபானம் அருந்தி மிருக யாகங்கள் செய்து அவ்ற்றை உண்டு நாடோடிகளாக வாழ்ந்த ஒரு கூட்டம்.
இயற்கையில் தோன்றிய நிலத்தை இயற்கையுடன் இணைந்து அந்தந்த நிலத்திற்குத் தகுந்தார் போல வாழ்க்கையின் ஒவ்வொரு உணவு,உடை,ஆட்ட பாட்டம் என்று அமைந்து ஆணும் பெண்ணும் காதலில் இணைந்து வாழ்ந்த ஒரு கூட்டம்.
//
தமிழன்,
உங்கள் கை சாட்டை எப்போதும் சரியாகவே வீசுகிறது. அதே சமயத்தில் பழமை வாதத்தில் இருந்து பலர் மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதையும் நான் சொல்லிக் கொள்கிறேன்.
காலடியில் பிறந்த சங்கரர். கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார். பாரதம் முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டார். ஷண்மதங்களை தழைத்தோங்கச் செய்தார். சிலை அமைத்து வழிபாடு செய்யும் காலத்தில் ஸ்ரீ சக்கரம் போன்ற யந்திர வழிபாட்டு முறையில் பக்தர்களை திருக்கோயில்களுக்கு வரவழைக்கும் உத்தியை கையாண்டுள்ளார். எண்ணற்ற அரியநூல்களுக்கு கிரந்தம் எழுதியுள்ளார். பாரத மண்ணில் சமஸ்கிருதம் வளர பாடுபட்ட முதல் தமிழர். இவர். வாழும் காலத்தில் திருக்குறள் வேதநூலாக அங்கீகரிக்க மறுத்துள்ளனர். வீடுபேறு என்ற அதிகாரம் இல்லாத குரளை மறைநூலாக ஏற்கவில்லை. ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களை கற்று அந்த வேதங்கள் தழைக்க நான்கு மடங்களை நிறுவினார். காஞ்சிபுரம் நகருக்கு வந்து முக்தி அடைந்தார் என்று சிலர் செல்கின்றனர். சிலர் கேதார்நாத்தில் முக்தி அடைந்தார் என்கிறார்கள். எப்படியோ.. காலடியில் பிறந்து ஈசனின் சடைமுடியாக போற்றப்படும் கேதார்நாத்தில் முக்தியடைந்து ஆதிசிவனுடன் ஐக்கியமாகியதால் ஆதிசங்கரர் ஆனார். அத்வைதம் எனும் கருத்தை பரப்பி மக்களை சனாதன தர்மத்திற்கு கொண்டு வர பாடுபட்டார். இவரது வழித்தோன்றல்கள் மீண்டும் பாடுபட்டு கிடைத்த சுதந்திரத்தை பாரதம் எப்படி திருடர்களிடம் கொடுத்து விட்டு வருந்துகிறதோ அதுபோல அத்வைதம் - துவைதமாகி, விசிஸ்டாத்வைதமாகி இந்து மதம் என்ற பேர்பெற்று இன்று கொள்ளையர்களை மதத்தலைவர்களாக்கி அழகு பார்க்கும் நிலைக்கு வந்து விட்டது.
கருத்துரையிடுக