பின்பற்றுபவர்கள்

13 ஜூலை, 2006

வலைப்பதிவில் ஒரு தமிழாசிரியர் !

நம் எல்லோரும் பள்ளிக்கூடத்தைவிட்டு வெளியில்வந்து வெகுநாட்கள் ஆகிவிட்டது. அதனால் ஆசிரியர் என்றால் எல்லோருக்கும் இளப்பமாகவே இருக்கும். அதுவும் தமிழ் ஆசிரியர் என்றால் சொல்லவே வேண்டியதில்லை. ஆசிரியர் - பிரம்பு இந்த எந்த பயமும் இன்றி இஷ்டம் போல் எழுதித் தள்ளுகிறோம். நமது எழுத்துப் பிழைப்பில் மண்ணைப் போடும்படி ஒருவர் இப்பொழுது பரவலாக எல்லோருடைய பதிவிலும் தென்படுகிறார்.

அவர்தான் 'எழுத்துப் பிழை' என்ற பெயரில் பின்னூட்டமிடும் ஒரு தமிழாசிரியர்(?)

முன்பு செந்தழல் ரவி அவருடைய பதிவில் 'அனானியாக' வந்தார், பின்பு என்ன நினைத்தாரோ எம்போன்ற அனானி பின்னூட்ட வசதி இல்லாதவர்களுக்காக வலைப்பதிவும் ஆரம்பித்திருக்கிறார். ஆனால் அந்தபதிவில் 'புரொபைல்' இல்லை. தேவை இல்லை என்று கூட நினைத்திருக்கலாம்.

எழுத்துப் பிழை அவர்கள் இப்பொழுது அன்பாக சுட்டிக் காட்டுகிறார். போகப் போகத்தான் தெரியும் சுட்டி மட்டும் காட்டுவாரா அல்லது தலையில் குட்டியும் காட்டுவாரா என்பது. எது எப்படியோ அன்பரது தமிழ்ச்சேவை மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. சண்டைகள், சச்சரவுகளுக்கு இடையில் பதிவுகளைப் படித்து பிழைகளை சுட்டிக்காட்டும் அன்பரது சேவை எம்போன்றவர்களுக்குத் தேவை.

ஆகவே அன்பர்களே, நண்பர்களே ! நீங்கள் தமிழில் தடுமாறினால் தாங்கிப்பிடிக்க ஒருவர் இருக்கிறார் என்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அன்பரது சேவை உங்கள் பதிவுக்கு தேவை என்றால், அவருக்கு இந்த பதிவின் மூலம் அழைப்புவிடுக்கலாம். திரு குமரன் (எண்ணம்) ஏற்கனவே முதல் ஆளாக அவருக்கு அழைப்புவிடுத்திருக்கிறார். இந்த பதிவின் நோக்கம் அவருக்கு பாராட்டுத் தெரிவிப்பது மற்றும் அவரது சேவை வேண்டுவோர் அவருக்கு அழைப்புவிடுப்பதே.

எழுத்துப் பிழை அவர்களே.. ! கருத்தினைத் தவிர்த்துப் பிழைகளை திருத்துவதோடு மட்டும் நில்லாமல், கூடவே மதிப்பெண் வழங்கினால் மிகவும் சந்தோசமாக இருக்கும். தமிழில் முதல் மதிப்பெண் பெறவேண்டும் என்பதுதான் என் போன்றவரின் ஆசை. அதாவது மொத்தவரிகளில் எத்தனை வரிகளில் பிழை இருக்கிறதோ அந்த சதவிகித அடிப்படையில் மதிப்பெண் வழங்கினால் நன்று. கூடவே பிழையின்றி எழுதுவோருக்கும் பாராட்டாக 'நன்று', 'மிக நன்று' போன்ற குறிப்புகளும் இருந்தால் நல்லது.

எழுதிப் பிழைப்பவர்கள் மத்தியில் பதிவர் திருவாளர் 'எழுத்துப் பிழை' வித்தியாசமானவரே என்று கருதுகிறேன். 'எழுத்துப் பிழை' அவர்களே பாராட்டுக்கள்

28 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

கோவி.க,

உண்மையாகவா?

ஐய்யய்யோ, எனக்குத் தமிழ் சரியாத் தெரியாது.

என் பேப்பரைத் திருத்தவேணாமுன்னு சொல்லுங்கோ.

கோவி.கண்ணன் சொன்னது…

துளசியக்கா, உண்மைதான் ... சிலருடைய பதிவில் 'எழுத்துப் பிழை' பின்னூட்டமிட்டு இருந்தார்.

பெயரில்லா சொன்னது…

என் சார்பாகவும் என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நான் எல்லாம் வலைப் பூ வைத்திருப்பதே தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில்தான் ஆகவே உங்களின் சேவை எனக்கு மிகவும் தேவை. இரண்டாம் அழைப்பாக இங்கு கீழே அழைக்கிறேன்.

எழுத்துப் பிழை உங்க சேவை என்னுடைய வலைப் பதிவுக்கும் தேவை... கொஞ்சம் அப்பப்போ வந்து சொன்னீங்கன்னா என்னைப் போன்ற அரைகுறைக்கும் உபயோகமா இருக்கும்.

பெயரில்லா சொன்னது…

எ.பி சார்.

வாங்க, நம்ம பதிவிலருக்கற எ.பிகளை சுட்டிக்காட்டுங்க.

திருத்திக்கறதுக்கு உதவியாருக்கும்.

கண்ணன்,

தகவலுக்கு நன்றி.

பெயரில்லா சொன்னது…

தமிழை எழுத்து/இலக்கண பிழைகளுடன் எழுதுவது உண்மையில் எனக்கும் வருத்தம் தருவதாக உள்ளது. இதற்க்காக தமிழ் இலக்கண (பழைய)புத்தகம் ஒன்று வைத்துள்ளேன் தற்பொழுது. படிக்க வேண்டும்.

தமிழ் ஆசிரியரின் சேவை தற்போதைய வலைப்பூ உலகில் மிக மிக முக்கியமான பங்களிப்பை அளிக்கும்.

அவரது கையால் குட்டு வாங்கி எனது தாய்த் தமிழை சரியாக எழுத கற்றுக் கொள்ள மிகவும் ஆவலாக உள்ளேன்.

திரு 'எழுத்துப்பிழை'யை எனது பதிவிற்க்கும் வரவேற்கிறேன்.

நன்றி,
அசுரன்.

பெயரில்லா சொன்னது…

மிக மகிழ்ச்சியா இருக்கு...அவர் வரிக்கு வரி படிக்கிறார் என்பதோடு எழுத்துக்களை திருத்துகிறார் என்பதுதான்...

பிரச்சினை பெருசா ஓடிக்கிட்டு இருக்கும்..திம்மித்துவம், அம்மித்துவம், கம்மித்துவம், பிராமனீயம், இடஒதுக்கீடு, போலி பின்னூட்டம் என்று எல்லாம்...

அதுக்கு எல்லாம் சம்மந்தமே இல்லாமல் எழுத்துப்பிழையை மட்டும் சுட்டிக்காட்ட ரொம்ப பொறுமை வேண்டும்...

அதை செய்யும் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்...

பெயரில்லா சொன்னது…

இந்த பதிவை படித்தவுடன், திருவிளையாடல் படமும், நாகேஷ்சின் வசனமும் தான் ஞாபகத்துக்கு வருகின்றது.
உள்க்குத்து சூப்பர் கண்ணன்.

பெயரில்லா சொன்னது…

ஓ.. இன்னோரு எழுத்துப் பிழை வேறயா?!! ம்ம்..

பெயரில்லா சொன்னது…

///
உள்க்குத்து சூப்பர் கண்ணன்
///

என்ன உள்குத்துங்க அது ? :-((((((

கோவி.கண்ணன் சொன்னது…

குமரன் எண்ணம் said...
///
உள்க்குத்து சூப்பர் கண்ணன்
///
குமரன்... உள்குத்தில் 'க்' கை எக்குத்தப்பா குத்தியிருக்கிறார் என்று மட்டும் தெரிகிறது. எனக்கும் வேறு எதுவும் தெரியவில்லை :))

பெயரில்லா சொன்னது…

தமிழ் மணம் இனி நிஜமாகவே மணக்குமா?

பெயரில்லா சொன்னது…

"அந்த" ப்ளாக்குகளில் இருக்கும் எழுத்துப்பிழைகளையும் சரிபார்ப்பாரா? :-)

பெயரில்லா சொன்னது…

'எழுத்துப் பிழை' அவர்களுக்கு வாழ்த்தும் வரவேற்பும்...

கோவி சார்..இந்தப் பதிவை எத்தனை முறை சரிபார்த்து வெளியிட்டீர்கள்?
இதில் அவர் பிழை கண்டுபிடிக்கவில்லை என்றால் சரி..:))

பெயரில்லா சொன்னது…

/கோவி சார்..இந்தப் பதிவை எத்தனை முறை சரிபார்த்து வெளியிட்டீர்கள்?
இதில் அவர் பிழை கண்டுபிடிக்கவில்லை என்றால் சரி..:))//

திரு. எ.பி. வருவதற்குள் நான் சொல்லிவிடுகிறேன்!!

""எது எப்படியே அன்பரது தமிழ்ச்சேவை மிகவும் நெகிழ்சியாக இருக்கிறது.""

""எப்படியோ"" என இருக்க வேண்டும்!


:))

கோவி.கண்ணன் சொன்னது…

//திரு. எ.பி. வருவதற்குள் நான் சொல்லிவிடுகிறேன்!!//
நன்றி !:))
SK ஐயா, வாங்க ... வாங்க உங்களைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்
சிவபாலன் பதிவில் பின்னூட்டம் போட்டாகிவிட்டது :)))

பெயரில்லா சொன்னது…

நெகிழ்சியாக ????

நெகிழ்ச்சியாக

பெயரில்லா சொன்னது…

தமிழ் ஐயா அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...

தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டவும். திருத்திக் கொள்கிறேன்.

(என் பேரை மட்டும் விட்டுடுங்க!!!)

பெயரில்லா சொன்னது…

கோ. க ,
பழம் நழுவி பாலில் விழுந்தது போல இருக்கிறது இப் பதிவு.இதைத் தான் இவ்வளவு காலமும் எதிர்பார்த்தேன். கோ.க, தயவு செய்து என் பதிவுகளையும் பாருங்கோ. சொற்பிழை, எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை எல்லாம் என் பதிவுகளில் வரும். பிழைகளைச் சுட்டிக்காட்டுங்கள். நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//வெற்றி said...
கோ.க, தயவு செய்து என் பதிவுகளையும் பாருங்கோ.//

வெற்றி அவர்களே ... அது நான் இல்லிங்கோ
'எழுத்துப் பிழை' என்று ஒருவர் அவரைப் பற்றித்தான் இந்த பதிவு

பெயரில்லா சொன்னது…

எழுத்து பிழையின் பின்னூட்டங்களை பல பதிவுகளில் பார்த்துள்ளேன். எழுத்து பிழைகளை சுட்டி காட்டுவதோடு , ஆங்கில வார்த்தைகளுக்கு பதிலாக தமிழ் வார்த்தைகளையும் சுட்டி காட்டுகிறார். ஆனால் அவரை பற்றிய விபரங்களை அவர் வெளியிடவில்லை.

பெயரில்லா சொன்னது…

தமிழ் ஆசிரியரின் சேவை தற்போதைய வலைப்பூ உலகில் முக்கியமான பங்களிப்பை அளிக்கும்

திரு 'எழுத்துப்பிழை'யை எனது பதிவிற்க்கும் வரவேற்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

தமிழாசிரியருக்கு என் வரவேற்புக்கள். என்னையும் ஒரு மாணவனாக ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன். என்னுடைய பதிவுகளில் எந்த அளவு தவறினைக் கண்டுபிடிக்கிறாரோ, அந்த அளவு ஆஸிர்வாதம் பெற்றவனாவேன்.

குருவே சரணம். வரணும். வந்து அறிவு தரணும்.

பெயரில்லா சொன்னது…

எழுத்துப் பிழையே வருக வருக என்று சொல்லலாமா?! இப்படி வச்சுக்கலாமா.. எழுத்துப் பிழையாரே, வருக வருக என் பதிவுகளுக்கும்.

பெயரில்லா சொன்னது…

////////////

தலை....எங்கே ? தேடினேன் கிடைக்கவில்லை....எந்த பதிவில் என்னை தேடுறாங்க ?

பெயரில்லா சொன்னது…

எழுத்துப்பிழையாரே. என் பதிவுகளுக்கும் வந்து தங்கள் பொன்னான பிழைத்திருத்தங்களைச் சொல்லுங்கள்.

பெயரில்லா சொன்னது…

///
குமரன் (Kumaran) said...
எழுத்துப்பிழையாரே. என் பதிவுகளுக்கும் வந்து தங்கள் பொன்னான பிழைத்திருத்தங்களைச் சொல்லுங்கள்.

பொன்ஸ் said...
உண்மையில் அவர் செய்வது நல்ல செயலே. என் பதிவுக்கும் அவர் வரவேண்டும்.

///

ஏங்க உங்களுக்கு எல்லாம் தன்னடக்கம் இருக்க வேண்டியதுதான் அதுக்காக இவ்வளவு தன்னடக்கமா?

உடனே மத்தவங்க எல்லாம் கோவிச்சுக்காதீங்க இவங்க ரெண்டு பேரோட பதிவுகளுக்கும் அதிகமா போயிருக்கேன் அதனாலதான் ரெண்டு பேரையும் சொல்றேன்.

பெயரில்லா சொன்னது…

பேசாம உள்குத்து என்றே ஒரு வலையை ஆரம்பிச்சிடலாம் போல இருக்கு,

ஆமா இதுல என்ன உள்குத்து?

எழுத்து பிழையாரை அழைக்கிறேன். அப்படியே நம்ம வலைப்பக்கம் வந்து பாத்துட்டு லட்சணம் எப்படி இருக்குனு சொல்லட்டும்.

அன்புடன்
தம்பி

Unknown சொன்னது…

இவரைக் கண்டு நானும் தமிழாசிரியை என்பதில் பெருமிதம் கொள்கிறேன்......

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்