பின்பற்றுபவர்கள்

4 ஜூலை, 2006

'அந்த' சந்தேகம் (சிறுகதை) !

தன்மகள் கல்யாணியுடன் தோழிபோல் பழகும் அலமேலு அம்மாள் அன்று ஆடிப்போனார். மாத மாதம் உபயோகிக்கும் அந்த பொருள் இரண்டு மாதமாக அப்படியே இருந்தது, இரண்டு மாதமாக உபயோகிக்கவில்லை என்று தெரிந்ததும் உடல் நடுங்கியது. தன் மகள் இதைப்பற்றி ஏன் கேட்கவோ சொல்லவோ இல்லாமல் என்னிடம் மறைத்தாள்... இந்த மனுசனுக்கு தெரிந்து போய் என்ன ? எப்படி ? என்று கேட்டால் எப்படி சொல்வது ? ... இது வெளியிலும் சுற்றி யுள்ளவர்களுக்கும் தெரிந்தால் பெருத்த அவமானமாகி விடுமோ? தன் மகளின் தோழிகள், இதை பெரிய விசயமாக்கி, தன் மகளை கின்டல் செய்தால் அவளால் பொருத்துக் கொள்ள முடியுமா ?. சொந்தகாரங்களை பற்றி கேட்கவே வேண்டாம், வெறும் வாயையே மெல்லும் அவர்களால், இந்த விசயம் கேள்வி பட்டுவிட்டால் பெருத்த அவமானமாகிவிடுமோ?



வயசுப் பொண்ணு வீட்ல இருக்கான்னு நினைப்பே இல்லையா ? மகளைப் பற்றி பொறுப்பில்லாமல் இருவரும் இருந்துவிட்டீர்கள் என்று எல்லோரும் அவமானப் படுத்துவார்கள். வெளியில தலை காட்ட முடியாது, மகளும் பயந்து கொண்டே 'அம்மா எதுக்கும் டாக்டரை பார்த்துவிட்டு வருவோம்' என்று சொன்னாள். வேறு வழியில்லை நிலைமை மோசமாவதற்கு முன் மகளைக் கூட்டிக் கொண்டு போய் ... காதும் காதும் வைத்தது மாதிரி முடிச்சிட வேண்டியது தான்' என்ற முடிவோடு அலமேலு அம்மாள் தன்னுடைய வயது வந்த மகள் கல்யாணியுடன் அந்த கிளினிக் வாசலில் நின்று, சுற்றும் முற்றும் பார்த்தபடி உள்ளே சென்றார்.

வயதுக்கு வந்த பெண்ணை வீட்டில் வைத்துக் கொண்டு இருக்கிறோமே கவனமாக இருக்க வேண்டும், கால காலத்தில அவளுக்கு ஒரு கல்யாணம் பண்ணிப் பார்கனுமேன்னு தோனாமல் தன்னோட வேலையில் மட்டும் கவனம் செலுத்தியதால், இன்னைக்கு அவளோட இங்க வந்து நிக்க வேண்டியதாகி விட்டது, எனக்கு மட்டும்தான் பொறுப்பு இருக்கா? எல்லாம் விதி என்று தன் புருஷனை நினைத்து, தன்னை நொந்து கொண்டு, இது மகளின் எதிர்காலத்தை எந்த விதத்தில் பாதிக்கும் என்று குழம்பியபடி ... கிளினிக்கின் வரவேற்பு அறைக்கு வந்துவிட்டார் ... மகளை கொஞ்சம் தள்ளி நிற்கவைத்துவிட்டு ... விசயத்தை சொல்லி முன்பதிவு பெற்று, டாக்டரின் அழைப்புக்காக அறைக்கு முன்பு தன் மகளுடன் காத்திருந்தார்.

அலமேலு அம்மாவிற்கு ஒரு மாதிரியாக இருந்தது, அவர் மகள் குழம்பிய படி, அம்மாவை வெறுமையாக பார்த்துக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் இருவரும் உள்ளே அழைக்கப் பட்டார்கள். ப்ளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட் எல்லாம் எடுத்தாகி விட்டது. 'அம்மா, உங்க மகளை கூட்டிக்கிட்டு, நீங்க போயி வெளியில் வெய்ட் பன்ணுங்க' என்று நர்ஸ் சொல்ல, ரிசல்டுக்காக வெளியில் அலமேலு அம்மாவும், அவர் மகள் கல்யாணியும் உட்கார்ந்திருந்தார்கள்.

அலமேலு அம்மாவுக்கு தன் மகளை முகம்பார்க்க கூட கூசியது, வெறுமையாகவும், பட படப்பாகவும் இருந்தது. ரிசல்ட் எப்படி இருக்குமோ, ஒரு வேளை பாதகமாகி டாக்டர் கை விரித்துவிட்டால் என்று நினைத்தபடி வரும் அழுகையை அடக்கி கொண்டு, நிமிடங்கள் கரைய, நெருப்பில் அமர்ந்த மாதிரி ஒட்கார்ந்திருந்தார்.

அந்த நிமிடம் நெருங்கியதும், நர்ஸ் வெளியில் வந்து, கல்யாணியிடம் ... 'இங்க வாம்மா, உன்னிடம் சில விசயங்களை டாக்டர் கேட்கனும்னு விரும்புகிறார், தெளிவா எல்லாத்தையும் மறைக்காமல் சொல்லு' என்று சொல்ல. அலமேலு அம்மா முகத்தில் ஈயாடவில்லை, தன் மகளை உள்ளே போகச் சொன்னார்.

டாக்டர் கல்யாணியைப் பார்த்து,

"உங்க கூட வந்திருக்காங்களே, அவுங்க யாரு?",

"என் பெயர் கல்யாணி ... அவுங்க என் அம்மா அலமேலு ... டாக்டர்" என்றாள் கல்யாணி.

"கடைசியா மாதவிலக்கு எப்போ நின்னுதுன்னு உங்களுக்கு தெரியுமா?"

"அம்மாதான் சரியாக ஞாபகம் வைத்திருப்பார்கள், இருந்தாலும் இரண்டு மாசத்திற்கு மேல் இருக்கும்னு நினைக்கிறேன்"

"கல்யாணி கவனமாக கேட்டுக்குங்கள், நீங்கள் சொல்வதை வைத்தும், இந்த ப்ளட், யூரின் டெஸ்ட் எல்லாம் பார்த்த பிறகு, ஒரு முடிவுக்கு வருகிறேன், உங்க அம்மாவுக்கு மெனோபாஸ் ஆரம்பிச்சிடுச்சி, இனிமே கொஞ்ச நாளைக்கு கோபப்படுவாங்க, சம்பந்தமில்லாமல் எரிந்து விழுவாங்க, நீங்கதான் உங்க அம்மாவிடம் அனுசரணையாகவும், ஆதரவாகவும் நடந்து கொள்ள வேண்டும், இதுல பயப்பட ஒன்றுமில்லை, இது இந்த சமயத்தில சிலருக்கு வரும் நார்மலான உணர்வுகள் தான்" என்று சொல்லி முடித்தார்.

"நானும், அதைதான் நினைச்சேன், டாக்டர் ... கன்பார்ம் பண்ணாமல் நேரிடையாக சொல்ல முடியவில்லை"

"இரண்டு மாசமாவே அம்மா குழப்பமாகவும், சோர்வாகவும் இருந்தாங்க, நான் தான் வற்புறுத்தி, எதுக்கும் ஒரு மெடிக்கல் டெஸ்ட் எடுத்து பார்த்திடலாம்னு சொன்னேன், அம்மா பலத்த யேசனைக்கு பிறகு ஒத்துக்கிட்டாங்க... டாக்டர்"

"கல்யாணி, உங்க அம்மாவை நல்லா புரிஞ்சி வைச்சிருக்கிங்க, வெரிகுட்"

"தாங்கியூ டாக்டர், நான் பொண்ணா இருக்கிறதால, இது எனக்கு நல்லா புரியுது"

"கல்யாணி, நீங்க போய் வெளியில் இருக்கும் உங்கள் அம்மாவை அனுப்பி வையுங்கள்"

என்று சொல்ல கல்யாணி விடைபெற்றுக்கொண்டு வெளியே சென்றார்.

வெளியில் வந்த மகளின் சிரித்த முகத்தை பார்த்ததும் அலமேலு அம்மாவிற்கு 'இவள் கேலியாக சிரிக்கிறாளோ ?' என்று நினைத்தாலும் சற்று தெம்பு வந்தது. கதைவை திறந்து கொண்டு டாக்டரை பார்க்க உள்ளே சென்றார்.

"அலமேலு அம்மா, பயப்படாதீர்கள், உங்களுக்கு ஒன்னுமில்லை, இது நார்மல் தான், நாற்பது வயது தாண்டி, என்றாவது ஒருநாள் மாதவிலக்கு நிற்கும், அது தான் உங்களுக்கு நடந்திருக்கு" என்று சொல்ல, அலமேலு அம்மாள் நிம்மதி பெருமூச்சு விட்டார்.

அலமேலு அம்மா வயிற்றைத் தடவிக் கொண்டு ... சங்கடமாக

"நன்றி, டாக்டர், நான் தான் ஏதேதோ, நெனெச்சிகிட்டு ரொம்ப பயந்து போயிட்டேன்"

"ம் ... எதாவது இருந்தால் சொல்லுங்கள்" என்றார் டாக்டர்

"அதெல்லாம் ஒன்னுமில்லை டாக்டர்" என்று அவசரமாக மறுத்துவிட்டாலும் அலமேலு அம்மாள் முகத்தில் வெட்கம் தெரிந்தது

டாக்டருக்கு நன்றி சொல்லி விடைபெற்றுக்கு கொண்டு வெளியில் வர, மகள் கல்யாணி தன் அம்மாவை பரிவுடன் பார்த்தாள்.

என்று இந்த கதையை கூறிய வேதாளம், இந்த கதையை படிப்பவர்கள் 'ஏன் அலமேலு அம்மாள் தன் வயிற்றை தடவிப்பார்த்துக் கொண்டார் ? ஏன் கணவரை பொறுப்பற்றவர் என்று மனதுக்குள் திட்டினார் ?' என்ற கேள்விகளுக்கு விடை தெரிந்தும் கூறாதிருந்தால் அவர்களின் பதிவுகள் மாயமாக மறையும் என்று சொல்லிவிட்டு சற்றும் தாமதிக்காமல் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது

பி.கு : பின்னூட்டத்தில் கலாய்க்க மட்டும் தான் தெரியுமா ? தமிழ் பதிவர் உலக சான்றோர் வியக்கும் வண்ணம் ஒரு கதை எழுத உன்னால் முடியுமா என்று பலரும் நகைப்பது எப்படியோ எனக்கு தெரிந்துவிட்டது... விடுவேனா ? குப்புசாமி செல்லமுத்துவின் 'அந்த' கதையை படித்தவுடன் ஏற்கனவே எழுதி தூங்கிய 'இந்த' கதை நினைவில் வந்தது.... அப்படியே எடுத்து ஒட்டிவிட்டேன். பாராட்டுபவர்கள் தட்டலாம் ... மற்றவர்கள் குட்டலாம். எழுத்துப் பிழைகள் இருக்கும் அடியேன் இன்னும் பாலர் பள்ளிதான்.

26 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//
இந்த கதையை படிப்பவர்கள் 'ஏன் அலமேலு அம்மாள் தன் வயிற்றை தடவிப்பார்த்துக் கொண்டார் ?' என்ற கேள்விக்கு விடை தெரிந்தும் கூறாதிருந்தால் அவர்களின் பதிவுகள் மாயமாக மறையும் என்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது
//

உண்மையிலேயே தெரியாது சார் ::)))

ஐய்யயோ சிரிப்பான் வேற போட்டு தொலைஞ்சிட்டேன்.

வேதாளம் கண்டுபிடிச்சிட்டா என்ன பண்னுறது ????

பெயரில்லா சொன்னது…

பரவாயில்லைங்க இது நம்ம பாக்கியராஜ் கதை மாதிரி இலை மறைவு காய் மறைவாதான் இருந்தது நம்ம வேதாளம் வர்ற வரைக்கும் :-)))))

பெயரில்லா சொன்னது…

எங்க இந்த கதை சொல்ல அந்த கதையையும் துணைக்கு அழைத்து கொள்கின்றீர்கள். இது நியாயமா, இது தர்மமா

பெயரில்லா சொன்னது…

//இதை பெரிய விசயமாக்கி, தன் மகளை கின்டல் செய்தால் அவளால் பொருத்துக் கொள்ள முடியுமா ?. //
இந்த வரியை படிச்சப்பவே கதை புரிந்து விட்டது. இந்த வரி இல்லாமல் எழுதி இருக்கலாம். நல்ல சஸ்பென்ஸாக இருந்து இருக்கும்.

ஹ்ம், ஹ்ம் அடுத்த தடவை பாக்கலாம்

பெயரில்லா சொன்னது…

கதையின் முடிச்சு நல்லா இருக்கு..

இந்த
//கொஞ்ச நாளைக்கு கோபப்படுவாங்க, சம்பந்தமில்லாமல் எரிந்து விழுவாங்க, //
உணர்வுகளை இன்னும் கொஞ்சம் விளக்கி இருக்கலாம்.. அது கதையை வெறும் குமுதம் ஸ்டைல் சஸ்பென்ஸ் கதையாக இல்லாமல் ஆக்கி இருக்கும்..

மத்தபடி, இந்த மாதிரி மறைந்திருந்த எழுத்தாளர்களின் திறமைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த குப்புவின் கதையை இத்தனை சீரியஸா எதிர்த்திருக்க வேண்டாமோன்னு குறுகுறுக்க வச்சிட்டீங்க :)

பெயரில்லா சொன்னது…

கண்ணன் கொஞ்சம் வேலை இருக்கு. முழுசாப் படிச்சுட்டு அப்புறமா கணென்ட் போடறேன்.

பெயரில்லா சொன்னது…

----கதையின் முடிச்சு நல்லா இருக்கு..

வெறும் குமுதம் ஸ்டைல் சஸ்பென்ஸ் கதையாக இல்லாமல்------

பொன்ஸை வழிமொழிகிறேன். குமுதத்தில் கூட தற்போது கிடைக்காத கதையை - பில்ட்-அப் குறையாமல், சடக் திருப்பத்துடன் கொண்டு சென்றதற்கு

பெயரில்லா சொன்னது…

கதை சுவாரஸ்யமாக இருந்தது. மகள் ஏடாகூடமாக டோண்டுவின் அறிவுரையைப் படித்து அப்படி இப்படி ஆகிவிட்டாரோ என நினைத்தேன்!:))

ஆனால் கதையை அற்புதமாக முடித்து இருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

(பின்குறிப்பு:- உங்கள் கவிதைகளை தமிழ்முரசில் படித்து இருக்கிறேன்!)

கோவி.கண்ணன் சொன்னது…

//கதை சுவாரஸ்யமாக இருந்தது. மகள் ஏடாகூடமாக டோண்டுவின் அறிவுரையைப் படித்து அப்படி இப்படி ஆகிவிட்டாரோ என நினைத்தேன்//

உங்கள் கருத்துக்கு நன்றி ... டோண்டுவை இங்கு இழுக்காமல் சொல்லியிருந்தால் சிறப்பாக இருக்கும்.
//
ஆனால் கதையை அற்புதமாக முடித்து இருக்கிறீர்கள். வாழ்த்துகள்
//
வாழ்த்துக்களுக்கு நன்றி கறுப்பு அவர்களே !
//
(பின்குறிப்பு:- உங்கள் கவிதைகளை தமிழ்முரசில் படித்து இருக்கிறேன்!)
//
சிங்கைத் தமிழ் முரசுவில் கவிதை எழுதிப் போடுவதுண்டு.

பெயரில்லா சொன்னது…

பொன்ஸக்கா லிங்க் குடுக்கலைன்னு இது எனக்கு தெரிந்திருக்காது...

யப்போவ், தமிழ் கூறும் நல்லுகுக்கு மற்றுமொரு பாக்கியராஜ்!!!

ஏற்கனவே SJ சூர்யாவின் இடத்தை குப்ஸ் கடத்திட்டதால் உங்களுக்கு ஏதோ என்னால் முடிந்த அளவு...

கோவி.கண்ணன் சொன்னது…

//மின்னுது மின்னல் said... உண்மையிலேயே தெரியாது சார் ::)))
வேதாளம் கண்டுபிடிச்சிட்டா என்ன பண்னுறது ???? //
மின்ன்னல் ... பின்னூட்டத்தை படித்தீர்களென்றால் விடை தெரியும் ... வேதாளம் நமக்கு தெரிஞ்ச வேதாளம் தான் ... அதெல்லாம் நம்ம ஆளுங்கல கண்டுக்காது

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் எண்ணம் said...
பரவாயில்லைங்க இது நம்ம பாக்கியராஜ் கதை மாதிரி இலை மறைவு காய் மறைவாதான் இருந்தது நம்ம வேதாளம் வர்ற வரைக்கும் :-)))))
//
கதை எழுதி முடித்தவுடன் எனக்கு வடிவமே கிடைக்கவில்லை ... அதன் பிறகு அங்கு அங்கு மாற்றினேன். ஹி ஹி நீங்களும் பாக்ய ராஜ் ரசிகரா ... நாங்கெல்லாம் எஸ்.ஜே சூர்யா வுக்கு மாறிட்டோம்,

கோவி.கண்ணன் சொன்னது…

//நாகை சிவா said...
எங்க இந்த கதை சொல்ல அந்த கதையையும் துணைக்கு அழைத்து கொள்கின்றீர்கள். இது நியாயமா, இது தர்மமா //
சிவா, இது எப்பவோ எழுதினது..இந்த மாதிரி கதைகளை எழுதினால் எங்க டின்னு கட்டிடுவாங்கோளோன்னு பயந்தே போடாம வெச்சிருந்தேன். குப்ஸ் கொடுத்த தைரியம் தான் போடவச்சிது.

கோவி.கண்ணன் சொன்னது…

//
நாகை சிவா said...
பொருத்துக் கொள்ள முடியுமா ?. இந்த வரியை படிச்சப்பவே கதை புரிந்து விட்டது. இந்த வரி இல்லாமல் எழுதி இருக்கலாம். நல்ல சஸ்பென்ஸாக இருந்து இருக்கும்.
//
சரி சரி யாருகிட்டயும் சொல்லாதிங்க ... சஸ்பென்ஸ் போயிடும் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//பொன்ஸ் said...
கதையின் முடிச்சு நல்லா இருக்கு..

இந்த

உணர்வுகளை இன்னும் கொஞ்சம் விளக்கி இருக்கலாம்..//

பொன்ஸ் ... விளக்கியிருக்கலாம் ... ஆனால்...ஒரு பெண்ணோட உணர்வுகளை ஒரு பெண்ணாலத்தான் புரிஞ்சிக்க முடியும். எனக்கு புரிந்தது அது மட்டும். :)

கோவி.கண்ணன் சொன்னது…

//Boston Bala said... குமுதத்தில் கூட தற்போது கிடைக்காத கதையை - பில்ட்-அப் குறையாமல், சடக் திருப்பத்துடன் கொண்டு சென்றதற்கு //

பாலா இது போற்றலா தூற்றலா :)... புரியவில்லை ! குமுதம் இப்பல்லாம் 'அப்படி' வருவதில்லை நன்றாக வருகிறது என்கிறீர்களா ?

பெயரில்லா சொன்னது…

//
மின்னல் ... பின்னூட்டத்தை படித்தீர்களென்றால் விடை தெரியும் ...
$$

சிரிப்பான் போட்டு இருந்தேன் கவனிக்கலயா...:(

$$
வேதாளம் நமக்கு தெரிஞ்ச வேதாளம் தான் ... அதெல்லாம் நம்ம ஆளுங்கல கண்டுக்காது
$$

நன்றி

பெயரில்லா சொன்னது…

குமுதத்தில் இப்பொழுது எல்லாம் கால் பக்கத்திற்கு எழுத்துக்களும், அரைப் பக்கத்திற்கு படமும், மீதத்திற்கு துணுக்கு/விளம்பரம் கொண்ட கதைகள்தான் வருகிறது (ஐம்பது வார்த்தைகளுக்கு மிகாமல் என்று கட்டளை போடாத குறை). சுருக்கத்தையும் விட்டுக் கொடுக்காமல், சிறுபத்திரிகை அளவு விரிவும் பெறாமல், 'ஹி..ஹி' திருப்பத்திற்கும் குறைவில்லாத கதை ;-)

கோவி.கண்ணன் சொன்னது…

//குமுதத்தில் இப்பொழுது எல்லாம் கால் பக்கத்திற்கு எழுத்துக்களும், அரைப் பக்கத்திற்கு படமும், மீதத்திற்கு துணுக்கு/விளம்பரம் கொண்ட கதைகள்தான் வருகிறது//
பாலாவின் விளக்கத்தை கேட்டு பாக்கியவன் ஆனேன்.

சிறுகதை.. கதைகள் எல்லாம் எப்போதோ படித்தது ... அதனால் எப்படி எழுதுவது என்று தெரியவில்லை இருந்தாலும் ஏதோ எழுதி... தமிழ் ஓவியத்திலும் ஒன்று சிலது உள்ளது. சிலது வெளியுலகத்துக்கு தெரியாமல் கம்யூட்டர் மட்டும் படித்துக் கொண்டிருக்கிறது (வெளியிடவில்லை)

பெயரில்லா சொன்னது…

குப்ஸ்க்கு இது எவ்ளவோ பெட்டர்ங்க....

பொன்ஸ் நீங்க எதிர்த்தது சரிதான்.

பெயரில்லா சொன்னது…

கோவி கண்ணன் அய்யா,

கதை நல்லாயிருக்கு.

நன்றி

பெயரில்லா சொன்னது…

//யப்போவ், தமிழ் கூறும் நல்லுகுக்கு மற்றுமொரு பாக்கியராஜ்!!!//

ஒரு சேஞ்சுக்கு, பாக்யராஜ் நேற்றைய 'கோவி'ன்னு சொல்வோமே ;-)

பெயரில்லா சொன்னது…

அஹா.....ஒரு குரூப்பாதாய்யாங் கெளம்பிருக்காங்கய்...

ஒக்காந்து யோசிப்பாங்களோ!!!!

(குப்ஸ், கோவி, வா.ம)

கோவி.கண்ணன் சொன்னது…

//manasu said...
அஹா.....ஒரு குரூப்பாதாய்யாங் கெளம்பிருக்காங்கய்...

ஒக்காந்து யோசிப்பாங்களோ!!!!

(குப்ஸ், கோவி, வா.ம)
//
வாங்க மனசு...
எப்ப அந்த கூட்டத்தோடு சேந்தோனோ ...ம் என்னத்த சொல்ல !

கோவி.கண்ணன் சொன்னது…

//Kuppusamy Chellamuthu said...
//யப்போவ், தமிழ் கூறும் நல்லுகுக்கு மற்றுமொரு பாக்கியராஜ்!!!//

ஒரு சேஞ்சுக்கு, பாக்யராஜ் நேற்றைய 'கோவி'ன்னு சொல்வோமே ;-)
//
வாங்க எஸ்.ஜே சூர்யா, சும்மா எதோ கவிதை ... நையாண்டின்னு பொழப்ப ஓட்டிக்கிட்டு இருந்தேன். 'அண்ணியின் அணைப்பில்' ஒரு கதைய போட்டு தூண்டி விட்டது இல்லாமல் ... பட்டம் வேறு குடுக்க வந்திட்டீரே ... வாரும் :)))

கோவி.கண்ணன் சொன்னது…

//Sivabalan said...
கோவி கண்ணன் அய்யா,

கதை நல்லாயிருக்கு.

நன்றி
//
சிவபாலன் நன்றி ...
சின்னப் பசங்கள நீ கெடுக்கிற அப்படின்னு ஒரு ஆள் போன் போட்டு திட்டுது

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்