பின்பற்றுபவர்கள்

6 ஜூலை, 2006

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு ...

இது கார்த்திகை மாதம் கூட இல்லை. ஆஸ்தான சோதிடர் உன்னிக் கிருஷ்ணப் பணிக்கரின் உபயமாக ... அவர் திடீரென்று ஹாஸ்யமாக ... பிரசன்னம் ஜோஸ்யம் பார்த்து ... சாஸ்தா கோபமாக இருக்கிறார் என்று சொன்னதும் .. கோவிலுக்கு பெண்கள் செல்வது சரியா? தவறா? என்று இருமுடி எடுத்தவர்களும், ஒரு முடி கூட எடுக்காதவர்களும் (எந்த கோவிலுக்கும் சென்று மொட்டைப் போடாதவர்கள்) ... இருபக்கமும் முடியை பிய்த்து கொள்கிறார்.



நானும் சின்ன வயதில் அதாவது ஐய்யபனின் நிரந்தர வயதில் சபரிமலை சென்றிருக்கிறேன். அப்பா வழக்கமாக அண்ணனைத் தான் கூட்டிச் செல்வார். இது என்ன அடவாடியா இருக்கு ... நான் மட்டும் இளிச்ச வாயா ... என்று அடம்பிடிக்கவும் ... கழுத கழுத்தை நீட்டு என்று மாலையை மாட்டி அழைத்துச் சென்றார்கள். ஐந்து வயது முதல் நானே விரும்பி சைவமாக மாறியதால் ... விருதம் இருப்பது சிரமமான காரியமாக இருந்ததில்லை.

இந்த வயசுல இவனுக்கெல்லாம் என்ன பக்தி வேண்டி கிடக்கிறது என்று சொன்ன பெரியவர்களையெல்லாம் அப்பா அம்மா கண்டுகொள்ளவில்லை. இருமுடி கட்டி பெரிய வழியில் முதல் முறையாக சென்றேன். போகும் வழியிலேயே கால் வலிக்கிறது என்று அடம்பிடிக்க ... இருமுடியுடன் என்னையும் சேர்த்து அப்பாவும் ... அவருடைய நன்பர்களும் தூக்கி சுமந்தனர். போகும் வழியெல்லாம் ... யானை வரும் .. புலி வரும் என்று பயம் காட்டியபடியே அழைத்துச் சென்றனர்.

பம்பை நதிக் கரை வந்தது .... ஏண்டா இங்கே வந்தோம் என்பது போல அசிங்கம் ... சாமிகளின் கழிவுகள் ... திட திரவ வடிவங்களில் அந்த நதியெங்கும் ஊர்ந்து செல்ல ... அதைப் பற்றி கவலைப் படாமல் அதே குளிர் நீரில் எல்லோரும் குளிக்க ... வேறு வழியில்லாமல் நானும் குளித்தேன். இப்பொழுது பம்பை அந்த அளவு மோசமாக இல்லை என்று கேள்வி படுகிறேன். ஒரு வழியாக காந்தமலை ஜோதி தரிசனம் பார்க்கலாம் என்று கூட்டிக் கொண்டு சென்று ஒரு இடத்தில் அமர வைத்தார்கள். அந்த வருடம் காந்த மலையில் இரண்டு மூன்று இடங்களில் ஜோதி எரிந்தது ... தெரிந்தது. மலை அதிரும் படி சாமியே சரணம் ஐயப்பா கோசம் போட்டுவிட்டு மேலே ஏறினோம் ... கூட்டம் ஒரே கூட்டம் ... நான் எங்கே தொலைந்து விடுவோனோ என்று அப்பாவுக்கு பயம். ஒரு வழியாக பதினெட்டாம் படியை அடைந்தோம். திருப்பதியை விட பல மடங்கு 'ஜருகண்டி' போல படியில் கால் வைத்ததுமே தன்னிச்சையாக தள்ள தள்ள மேலே சென்று தரிசனம் செய்தோம்.

வீடு திரும்பியதும் பம்பை காட்சிகளை நான் அதிகம் விளக்கியதால் ... அந்த ஆண்டு முதல் அப்பா என்னையும் அண்ணனையும் வெட்டி விட்டு தனியாக செல்ல ஆரம்பித்தார். முதல் முறை மாலை போட்டது முதல் ... குடும்பத்தினர் அனைவரும் அம்மா வரை எல்லோருமே அப்பாவை அப்பா என்று கூப்பிடுவதே மாற்றி 'சாமி', 'சாமி' என்று கூப்பிட ஆரம்பித்து சாமி ஆகும் வரை அவரை 'சாமி சாமி' என்றே கூப்பிட்டோம். அப்பாவும் எங்கள் எல்லோரையும் மற்றும் ... ஐந்து வயது சிறுவன் முதல் முதியவர் வரை சாமி சாமி என்றே எல்லோரையும் மற்ற நாட்களிலும் கூப்பிடுவார். அப்பாவின் பெயர் தெரிந்தும் எல்லோருமே சாமி சாமி என்றே மற்ற நாட்களிலும் கூப்பிட்டு 'சாமி' என்ற பெயரே அப்பாவுக்கு கடைசி வரை நிலைத்திருந்தது.

^அது சொந்த கதை.

இது நடக்கும் கதை ....

ராமரிடம் சாபவிமோசனம் பெற்ற சபரி என்ற பெண் பெயரில் தானே சபரிமலை இருக்கிறது. மகிஷி என்ற பெண் அரக்கியை ஐயப்பன் அடக்கியதாக அருகிலேயே அவளுக்கான கோவிலும் இருக்கிறது. முதல் முறை கோவிலுக்கு செல்லும் கன்னி சாமிகள் அங்கு சென்று 'சரம் குத்தி' என்ற குச்சி ஒன்றை குத்திவிட்டு வருவார்கள். இப்படி ஏற்கனவே இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். மேலும் அய்யப்பன் மத நம்பிக்கைப் படி பாலகன் தானே . அய்யப்பன் என்றும் 12 வயது ... பனிரென்டு வயது பாலகனுக்கு அதுவும் தெய்வத்திற்கு பெண்கள் சகோதரிகளாகவும், அன்னையாகவும் தானே தெரிவார்கள். ஏன் பெண்கள் கோவிலுக்கு செல்லக் கூடாது ? அதற்காக கூறப்படும் காரணங்கள் நேரிடையாக போக்கு வரத்து உள்ள இன்றைய காலத்தில் ஏற்கத்தக்கதா ?

Pictures : thanks to http://www.hindu.dk

12 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

சாதா சாமிகள் பதிவு எழுதுவதற்கும் மலைக்கு போய்ட்டு வந்த சாமி பதிவு எழுதுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

நடத்துங்க நடத்துங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//விடாதுகறுப்பு said...
சாதா சாமிகள் பதிவு எழுதுவதற்கும் மலைக்கு போய்ட்டு வந்த சாமி பதிவு எழுதுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

நடத்துங்க நடத்துங்க.
//
கறுப்பு அவர்களே,
ஐயப்ப சாமி பதிவா போயி தேடி தேடி படிச்சுட்டு சரணம் போட்டுட்டு வருகிறீர் ஒன்னும் புரியலை. நான் சொன்னது மாதிரி கறுப்பு சாமி ஆகிவிட்டீர் போல் தெரிகிறது. கறுப்பண்ண சாமியே சரணம் ஐயப்பா !

பெயரில்லா சொன்னது…

கோவி.கண்ணன். உங்கள் சபரிமலை யாத்திரை அனுபவத்தை நன்றாக விவரித்திருக்கிறீர்கள். கடைசியில் உங்கள் விருப்பத்தையும் கோரிக்கை போல் வைத்திருக்கிறீர்கள். நன்று நன்று.

கோவி.கண்ணன் சொன்னது…

//கடைசியில் உங்கள் விருப்பத்தையும் கோரிக்கை போல் வைத்திருக்கிறீர்கள்//
திரு குமரன்,
பொது பிரச்சனையில் விருப்பம் / விருப்பமின்மை மனதில் வைத்துக் கொண்டு பேசினால் அது ஒரு தலைப் பட்சமாக இருக்கும்.

என்னுடைய விருப்பம்/விரும்பாமை பற்றி சொல்லவில்லை ... எண்ணங்கள் மட்டுமே பகிர்ந்து கொண்டேன்.

பெயரில்லா சொன்னது…

கோவி.கண்ணன் அவர்களே, உங்கள் நேரடி அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. நானும் வருடாவருடம் செல்பவன் தான். இந்த controversy தேவையில்லாதது. கேரளாவில் சபரிமலை தவிர எருமேலி, ஆர்யாங்காவு என நிறைய சாஸ்தா கோவில்கள் உள்ளன. இங்கெல்லாம் பெண்கள் வழிபட எந்த தடையும் இல்லை. சபரிமலையிலும் தமிழ்மாதப் பிறப்புகளுக்கு திறக்கும் காலங்களில் தடை இல்லை. மண்டலபூஜை எனப்படும் கார்த்திகை மாத சமயத்திலும், மகரஜோதிக்காக திறக்கப் படும் நாட்களிலும் மட்டுமே இந்தக் கட்டுப்பாடு. அந்த சமயத்திலும் வயதானவருக்கும் சிறுமியருக்கும் தடை யில்லை. இவை கடுமையான விரதமிருக்கும் சாமிகளுக்காகவே அன்றி அய்யப்பசாமிக்காக இல்லை. மலைக்கு வரும் அனைவரையும் சாமி என்று அவரது அடையாளங்களை தொலைக்கும் இக்கோவிலில் தீண்டாமை எண்ணம் வந்திருக்குமா ? அனைத்து மதத்தினரும் வழிபடுவதும் கேரள கோவில்களில் மேற்சட்டையுடன் சன்னதிக்கு செல்லக்கூடியதுமான முற்போக்கு கோவிலில் பிற்போக்கு வாதங்களா ? மதத்தை மறுத்தோருக்கும் இந்து மதத்தை சாடுவோருக்கும் என்னிடம் பதில் இல்லை.
மண்டல நாள் வழக்கங்கள் கேரள வனவாசிகளின் பழக்கங்களே. காலத்தின் கட்டாயத்தால் மாற்றங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளது. இன்னும் மாறும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//மண்டல நாள் வழக்கங்கள் கேரள வனவாசிகளின் பழக்கங்களே. காலத்தின் கட்டாயத்தால் மாற்றங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளது. இன்னும் மாறும்.
//
திரு மணியன்... மணியான கருத்துக்களைத் தந்திருக்கிறீர்கள் ... இந்து மதம் பல்வேறு மாற்றத்தை ஏற்கொண்டு இருப்பது தான் அதன் சிறப்பு.

பெயரில்லா சொன்னது…

மணியன் அவர்களுடைய கருத்துக்கள் மிகச்சரியானவை. அவற்றுடன் உடன்படுகின்றேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//At 10:45 PM, மலைநாடான் said…

மணியன் அவர்களுடைய கருத்துக்கள் மிகச்சரியானவை. அவற்றுடன் உடன்படுகின்றேன்.
//
மலைநாடன் உங்கள் கருத்துக்கு நன்றி !

பெயரில்லா சொன்னது…

சுவாமியே சரணம் ஐயப்பா!

மணியன் அருமையான கருத்துகளை தந்து உள்ளார். நீங்கள் கூறியது போல் இந்து மதம் அந்த அந்த காலக் கட்டத்தில் சில மாற்றகளை ஏற்கொண்டு பொலிவு பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது. மாற்றம் சிறிது சிறிதாக நடந்தால் தான் சிறப்பாக(வலுவாக) இருக்கும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நாகை சிவா said...
சுவாமியே சரணம் ஐயப்பா!//
சாமி சரணம் ஐயப்ப சரணம் :)

பித்தனின் வாக்கு சொன்னது…

மண்டல பூஜை காலங்களிலும், மகர விளக்கு காலங்களிலும் நாம் கூட்டத்தில் மாட்டினாலே கண்ணு பிதுங்கி வெளிய வந்துவிடும். இதுல பெண்கள் மாட்டினா எப்படி. ஆதலால் மற்ற மாச நடை திறக்கும் காலங்களில் அவர்களை அனுமதிக்கலாம் என்பது எனது கருத்து. மற்றபடி பெண்களை அனுமதிப்புக்கு நானும் ஆதரவாளன் தான்.
1991ல் நான் போன போது அழுதை மற்றும் பம்பையில் தண்ணீர் மல வாசத்துடனும், அழுக்காகவும் இருந்தது. ஆதல்லால் நான் மண்டல பூஜை ஆரம்பத்திலேயே சென்று விடுவேன். ஆனால் 2007ல் நான் பெரு வழியில் சென்ற போது அழுதையும் சரி பம்பையும் சரி தூய்மைய்டனுன் சரியாக பராமரிக்கப் படுகின்றது. இரு இடங்களிலும் நிறைய கட்டன கழிப்பிடங்களைக் கட்டி குறைந்த கட்டனம் வசூலித்து ஆற்றை நல்லா பராமரிக்கின்றார்கள். நன்றி கோ.வி. ஆர்.

கோவி.கண்ணன் சொன்னது…

//பித்தனின் வாக்கு said...
மண்டல பூஜை காலங்களிலும், மகர விளக்கு காலங்களிலும் நாம் கூட்டத்தில் மாட்டினாலே கண்ணு பிதுங்கி வெளிய வந்துவிடும். இதுல பெண்கள் மாட்டினா எப்படி. ஆதலால் மற்ற மாச நடை திறக்கும் காலங்களில் அவர்களை அனுமதிக்கலாம் என்பது எனது கருத்து. மற்றபடி பெண்களை அனுமதிப்புக்கு நானும் ஆதரவாளன் தான்.

//

திருப்பதியிலும் கூட்டம் குறைவு இல்லை, அங்கெல்லாம் வழியை முறைபடுத்தி அனுமதிக்கிறார்கள்.

//1991ல் நான் போன போது அழுதை மற்றும் பம்பையில் தண்ணீர் மல வாசத்துடனும், அழுக்காகவும் இருந்தது.//

'இருப்பது' தானே !

// ஆதல்லால் நான் மண்டல பூஜை ஆரம்பத்திலேயே சென்று விடுவேன். ஆனால் 2007ல் நான் பெரு வழியில் சென்ற போது அழுதையும் சரி பம்பையும் சரி தூய்மைய்டனுன் சரியாக பராமரிக்கப் படுகின்றது. இரு இடங்களிலும் நிறைய கட்டன கழிப்பிடங்களைக் கட்டி குறைந்த கட்டனம் வசூலித்து ஆற்றை நல்லா பராமரிக்கின்றார்கள். நன்றி கோ.வி. ஆர்.//

எங்கே 'இருந்தாலும்' கழுவ ஆற்றுக்கு தானே போகனும் !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்