பின்பற்றுபவர்கள்

5 ஏப்ரல், 2006

காலங்கள்


வலைப்பூ வண்டுகளே! எல்லாம் ஜோரா ஒருதடவை கீ...போர்டை தட்டுங்க. அதாங்க பின்னூட்டம் போடுங்கன்னு பொடிவச்சு சொல்றேன்.

வலைப்பூவுக்கு தலைப்பு கொடுக்கவேண்டும் என்று சிந்தித்து, சிந்தித்து காலம் கடந்ததுதான் மிச்சம். ஆ ... காலம் என்று வைத்தால் என்ன ? நன்றாகத்தான் இருக்கிறது. வாழ்க்கை என்ற சொல்லை வழிநடத்துவது காலம்தான். பல்வேறு காலகட்டங்களில் நாம் நாமாகவே இருக்கிறோம் என்பது உண்மை என்றாலும். காலம் நம்மை வேறுறொருவராக உடலளவிலும் மனதளவிலும் மாற்றிக் கொண்டுவருகிறது.
கருவில் இருந்து தொடங்கும் இந்தகாலம் கல்லறையில் முடிவதாக கணக்கு. அங்கும் விடுவதில்லை. எப்படி என்றால். 'அவுரு செத்து ஒரு பத்துவருச காலம் இருக்கும்' என்று தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த வாழ்க்கை என்பது கட்டிடம் எழுப்புவது மாதிரி. மொத்த வாழ்க்கை என்பது 'நேற்றைய அஸ்திவாரத்தில் நாளைக்கு நிற்கவேண்டிய கட்டடத்திற்கு தேவையான இன்றைய கட்டுமானமாக' இருக்கிறது. கட்டடம் நிறைவு பெறும் அங்கு நிற்பது வெறும் நினைவுச்சின்னமே.

நினைவு தெரிந்த நாள் முதலாய் ... சின்ன வயசிலேர்ந்து நான் ...எனக்கு புரியாத வயசில ... அப்பெல்லம் எங்க அம்மா சொல்லுவாங்க ... அவுரு ஆடுன ஆட்டம் என்ன ? ... என்னைக்கும் இதுமாதிரியே இருந்துடுவேன்னு நினைக்காதே... என்று காலத்தை பல்வேறு காலகட்டங்களில் இடத்துக்கு ஏற்றார் போல் பயன்படுத்துகிறோம்.

மாற்றம் என்ற சொல்லுக்கு வடிவு கொடுப்பது காலம். நாம் விருப்பம் இல்லாமல் எல்லாவற்றையும் மாற்றிக்காட்டுவது காலம். இன்றைய காலகட்டங்களில் அரசியல் வாதிகள் இப்படித்தான் மாறியிருக்கிறார்கள்.

வரலாறு என்று பார்தோமேயானல், எஞ்சி இருப்பது பல்வேறு இறந்தகாலங்கள் தான். தோல்விகள் வெற்றிகள் எல்லாமே அனுபவ பாடங்கள் என்ற அளவில் முடிவுறுகிறது. மண் கோபுரம் ஆனதும், கோபுரங்கள் இடிந்து மண்ணானதும் வெவ்வேறு காலகட்டங்களில் நடந்த மாற்றங்கள்.

எதிரிகள் நண்பர்கள் ஆவதும், நம்பிக்கையாளர்கள் துரோகிகள் ஆவதும் காலத்தின் கையில். அவை அப்படியே இருந்துவிடுமா என்ற கேள்வியும் பதிலும் காலத்தின் கையில்.

பருவத்தே பயிர்செய் என்ற நம் தமிழ் பழமொழியும், டைம் மேனேஜ்மென்ட் என்று ஆங்காங்கே நடக்கும் பட்டரை பயிற்சி வகுப்புகளும் (வொர்க் ஷாப்) காலத்தின் பயனை நமக்கு உணர்த்துகிறது.

உங்கள் நேரத்தை வீணக்கக் கூடாது என்பதால், நீங்கள் எல்லாம் நேரம் தான், காலக்கொடுமை தான் என்று சொல்லும் முன் இப்போதைக்கு தற்காலிக ஒரு சின்ன துண்டிப்பு.

பி.கு: எனது வலைப்பதிவிகளில் கதைகள், கவிதைகள், கிண்டல் கேலிகள் மற்றும் அரசியல்கள் இருக்கும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்


-கோவி.கண்ணன்

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//இந்த வாழ்க்கை என்பது கட்டிடம் எழுப்புவது மாதிரி. மொத்த வாழ்க்கை என்பது 'நேற்றைய அஸ்திவாரத்தில் நாளைக்கு நிற்கவேண்டிய கட்டடத்திற்கு தேவையான இன்றைய கட்டுமானமாக' இருக்கிறது. கட்டடம் நிறைவு பெறும் அங்கு நிற்பது வெறும் நினைவுச்சின்னமே./----

சிந்திக்கத் தூண்டிய வரிகள்...சொல்ல வருவதை எளிமையான வார்த்தகளினால் சொல்லும் லாவகம் உங்களிடம் நிறையவே தெரிகிறது. நிறைய எழுதுங்கள் நண்பரே! வாழ்த்துக்கள்

TBCD சொன்னது…

ஏன் இந்தப் பதிவை யாருமே கண்டுக்கல...

அதுனால என்ன நான் கண்டுக்கிறேன்..

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
ஏன் இந்தப் பதிவை யாருமே கண்டுக்கல...

அதுனால என்ன நான் கண்டுக்கிறேன்..
//

டிபிசிடி ஐயா,
முதல் பதிவு எழுதிய போது நான் மூத்த பதிவர் இல்லை.
:)

உங்கள் முதல் பதிவை எடுத்துப்பாருங்கள் அதே நிலமை தான் இருக்கும். அது சரிதான்.

ஓடுகிற குதிரை மீதுதான் பந்தயமே.

ஜோதிஜி சொன்னது…

இன்று தான் தொடக்க பயணத்தை பார்க்க வந்தேன். தொடங்கும் போதே ஆழமாக எழுதியிருக்கீங்க.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்