பின்பற்றுபவர்கள்

7 ஏப்ரல், 2006

ரஜினி வாய்ஸ் ! ஒரு கற்பனை

(ரஜினி ரசிகர்கள் மன்னிப்பார்களாக )
செய்தி : ரஜினி ரசிகர்கள் ரஜினியை வாய்ஸ் கொடுக்கச் சொல்லி போஸ்டர் யுத்தம் நடத்துகிறார்கள்.

இந்த சமயத்தில் திரு ரஜினியும், அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற தலைவருமான சத்திய நாராயணன் ரஜினியை சந்திக்கிறார்.

ரஜினி : என்ன சத்தி... இந்த அரசியல் வாதிங்களும்.... பத்திரிக்கை காரங்களும் ... வம்புக்கு இழுக்கிறாங்கன்னு பாத்தா ... நம்ம ரசிகர்களும் ... .சே புரிஞ்சிக்கவே முடியலேப்பா

சத்திய நாராயணன் : தலைவா, இந்த தேர்த்தல்ல நீங்க எதாவது சொல்லனும்னு எதிர்ப்பார்க்கிறாங்க... எல்லோரும் நீங்க ஜெ...வ ஆதரிக்கனும்னு எதிர்பார்கிறாங்க ... அப்பதான் ராமதாசுக்கு பாடம் கொடுக்க முடியுமாம் ?

ரஜினி : சத்தி ஜி ... நீங்க என்ன சொல்லவர்ரீங்க ... அது எப்டி சத்தி ஜி ...?

சத்திய நாராயணன் : நீங்க வழக்கமா சொல்ற 'தாய் தான் முக்யம்னு, தாய் சொல்றபடி கேட்கனும்னு சொன்னிங்கன்னா, நம்ப ரசிகர்கள் புத்திசாலிங்க ... அவுங்க 'அம்மா' ன்னு புரிஞ்சிக்குவாங்க ... மத்த கட்சிகாரங்க யாருக்கும் சந்தேகம் வராது ...

ரஜினி : ஐடியா நல்லாதான் இருக்கு ... ஆனா அதுக்கு அவசியமில்லேன்னு நெனெக்கிறேன்.

சத்திய நாராயணன் : தலைவா ... நீங்க கண்டிப்பா மறுபடியும் வாய்ஸ் கொடுக்கனும்.

ரஜினி : அது எப்படி சக்தி முடியும்... போன தடவே ... பாபா பிரச்சனை .. ராமதாசை எதிர்த்தோம் ... ஆன ஒன்னும் நடக்கலையே ... 40 தொகுதிலியும் எதிர்கட்சிதானே ஜெயிச்சாங்க
சத்திய நாராயணன் : என்ன தலைவா, நீங்க தான அடிக்கடி சொல்லுவிங்க ... பகவான் கீத்தையில சொல்லியிருக்காரு... இன்னிக்கு ஒனக்கு கிடக்கிறது... நாளைக்கு ஒனக்கு கிடைக்காது ... வெற்றியோ தோல்வியோ நிரந்த்தரமில்லைன்னு ...

ரஜினி : சத்தி ... நீங்க என்ன சொல்லவர்ரீங்க ?.
சத்திய நாராயணன் : அதான் நேத்திக்கு பா.ம.க ஜெயிச்சிச்சு ... இன்னிக்கு ஜெயிக்கக் கூடாது ...

கோபமாக,
ரஜினி : யோவ் ... அது வேற இது வேறய்ய்....ய்யா ...

சத்திய நாராயணன் : தலைவா ... நீங்க பெரிய மனுசன் ... மறந்திர்ரீங்க ... ஆன நம்ம ரசிகர்கள் ... இன்னும் கொதிப்பு அடங்காம தானே இருக்காங்க ...

ரஜினி : அதான் யாருக்கும் ஆதரவில்லேன்னு நான் தெளிவா சொல்லிட்டேன்ல்ல சத்தி ?

சத்திய நாராயணன் : நேத்திக்கு கட்சி ஆரம்பிச்ச விஜயகாந்த் இன்னிக்கு மாலையும் கழுத்துமா வர்ராரு பாத்திங்கல்ல... அவுரோட ரசிகர்கள் நம்ப ஆளுங்களை கேவலா பாக்கறத தாங்க முடியிலயே தலைவா

மிகக் கோபமாக,
ரஜினி : ந்நோ ... ந்நோ ... சத்தி ... மத்தவங்க கூட என்னே கம்பேர் பண்றது ... என் வழி ... என் வழி தனி வழி ... என்னோட யாரையும் கம்பேர் பண்ற ரசிகர்கள் வேண்டாம். இப்ப .. இப்ப போன போட்டு எல்லார்கிட்டயும் சொல்லிடு... இப்ப நமக்கு சிவாஜிதான் முக்யம்.

சத்திய நாராயணன் : அப்ப எலக்சன் ... வாய்ஸ் ...

ரஜினி : எலக்சன் அஞ்சு வர்சத்து ஒரு தடவே வரும்... ஆனா சிவாஜி ஒரு தடவே வந்த திரும்ம வர்ராது ...

'இன்னிக்கு வாய்ஸ் கொடுக்கலேன்'னு சொல்லுவாங்க இந்த பத்ரிக்கே காரங்க ... அதே பத்ரிக்கே காரங்க 'நாளெக்கு சும்மாருந்திருக்கலாம்' அவுங்களே சொல்லுவாங்க. நாளெக்கு அவுங்க சொல்றத நான் இன்னிக்கெ செஞ்சுடுறேன்

சத்திய நாராயணன் : அப்ப நான் ரசிகர் மன்றத்தில என்ன சொல்றது ...

ரஜினி : என்ன பெர்ரிய ரசிகனுங்க ... அவுங்க ஒழுங்கா பாத்திருந்தா பாபா போயிருக்கும். இன்னெக்கு வாய்ஸ் குடும்பாங்க ... எதாவது சொன்னால் ... அத்ல பாதிபேரு ... தலைவர் சொல்றது புடிக்கலேம்பாங்க ... அதான் போன எம்.பி எலக்சென்ல பாத்தேன்ல ...

ரஜினி சத்தியை பார்க்கிறார்
சத்திய நாராயணன் : ...

ரஜினி : அதான் சொல்லிட்டேன்ல்ல ... வேனாம் ... எல்லாத்தையும் விட்டுடுவோம் ... சிவாஜி ... இந்த பேரத்தான் நாம இப்ப நெனெக்கனும் ...
"நாம சண்டேக்கு போக மாட்டோம் ... எதிரிங்க தான் சண்டேக்கு வர்ராங்க "
"நாம பலசாலி இல்லெ ... எதிரிங்கதான் பலசாலி ... ஆன நாம புத்திசாலி "
"ஆண்டவன் எங்க.. எப்டி ... எந்த.. காய நகத்தனுமோ அங்க.. அப்டி.. நகத்திக்கிட்டே இருக்கான்"
"இந்த பதவி ... பட்டம் ... தேடிவந்தாலும் திரும்ம்பி பாக்கக்கூடாது ... அதான் நமக்கும் நல்லது ... மத்தவங்களுக்கும் நல்லது"
"நான் வாய்ஸ் கொடுத்து ... அப்புறம் சிவாஜிய... சிவ...சீன்னு சொல்லிட்டாங்கன்னா ? ... பாவாம் எ.வி.எம் சரவணனும் ... சங்கரும்"
"சிவாஜி ஜெயிக்கனும் சக்தி ... ஜெயிக்கனும். பாபா ... நான் தான் நஷ்டப்பட்டேன் ... வேறே யாரும் நஷ்டேப்படலே.."
"சிவாஜி நஸ்டம்னா ... சிவாஜி ராவுக்கு நஷ்டம் ... சிவாஜி கனேசன் பேருக்கே நஷ்டம் ... நம்ப மராட்டிய மன்னன் மாவிரன் சிவாஜி புகழுக்கே நஷ்டம்..."
"கஷ்டம் நம்மளோட இருக்கனும் ... நம்பளால யாருக்கும் கஷ்டம் இருக்க கூடாது"
"பாபாஜி பட்டம் பறக்கல .... என் கையிலேயே திரும்ப விழுந்துச்சி, சந்தரமுகி பட்டம் பறந்துச்சி ... பறந்தது மட்டுமில்லாம டீல் போட்டிச்சி ... அது மாதிரி சிவாஜி குதிரெ ஜெயிக்கனும் ... தோக்கக் கூடாது..."
"பாபா... மூலையிலே முக்காடு...ன்னு சொன்ன ராமதாஸ் ... சிவாஜி வாயிலே ஜிலேபின்னு சொல்லி ஜிஞ்சுபி பாடிட கூடாத்தில்ல"

சத்திய நாராயணன் : ... ???

ரஜினி : என்ன கொடுமை சரவணன் சார்' ன்னு ஏவிம் சரவணணை பாத்து சங்கர் சொல்லிட்டார்னா ? நாம எங்க போய் முட்டிகிறது சத்திஜி.

சத்திய நாராயணன் : சரி அதவிடுங்க தலைவா, இந்த சமயத்துல சிவாஜி பஞ்ச் டயலாக் ஒன்னு எடுத்துவுட்டிங்கன்னா, பசங்க வாய்ஸ் கேக்குறத மறந்துட்டு துள்ள ஆரம்பிச்சுடுவாங்க.

ரஜினி : சங்கர்ஜீ கோவிச்சுக்குவாரான்னு தெரியல்ல, சரி ... நான் பேசி சரிப்பண்ணிக்கிறேன்.

"காந்திஜி கையல இருந்தது கைத்தடி, இந்த சிவாஜி கொடுக்கப்போறது சவுக்கடி"

"நேதாஜி (இந்தியர்களை இணைத்து) வெள்ளக்காரங்களுக்கு காட்டுனது தண்ணி, இந்த சிவாஜி (நதிநீரை இணைத்து) தமிழ்நாட்டுக்கு காட்டப்போறதும் தண்ணி"

"பாபாஜி கை காட்டினா முத்திரை, இந்த சிவாஜி கை காட்டினா எதிரிங்களுக்கு இல்லை நித்திரை"

சத்திய நாராயணன் : சூப்பர் குத்து தலைவா, இது போதும் அடுத்த எலக்சன் வரைக்கும்.


-கோவி.கண்ணன்

3 கருத்துகள்:

சிவபாலன் சொன்னது…

Ha Ha Ha..

TBCD சொன்னது…

அடடே..இதையும் யாருமே கண்டுக்கலையா..

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
அடடே..இதையும் யாருமே கண்டுக்கலையா..
//

ஐயையோ கண்டு கொண்டதே கொடுமையாகிடும் போல இருக்கு !
:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்