பின்பற்றுபவர்கள்

10 ஏப்ரல், 2006

தமிழில் அர்சனை போராட்டம் தேவையா ?

ஒருவன் வெளிநாட்டிற்கு நிரந்தரமாக செல்கிறான் என்றால் போகின்ற நாட்டின் மொழி அவனுக்கு தெரிந்திருக்க வேண்டியது அவசியம். அப்படி இல்லை யென்றால் ஒரு 5 ஆண்டோ அல்லது 10 ஆண்டோ அவன் சிரமபட்டு அவர்களுடைய மொழியை கற்றுக்கொண்டு அவர்களுடன் உரையாடுவதற்கு தயார்படுத்திக்கொள்ளுவான். ஒருவேளை அவனுடைய முன்னோர்களோ அல்லது சக இனத்தாரோ அங்கு இருக்கும் பொழுது அவனுடைய மொழி ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் இருக்க மட்டும் பயன்படும். அவன் அந்நாட்டின் உயர்பதவியை அடையவேண்டுமென்றால் அவர்களுடைய மொழியை, காலாச்சாரத்தை அவன் கற்றுக்கொள்வது இன்றியமையாதது ஆகிறது. அப்பொழுதுதான் அந்த நாட்டின் குடிமகனாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுவான்.
இடம்பெயரும் கடவுள் விசயத்தில் இவற்றை நாம் மறந்துவிட்டோம், எங்கங்கோ இருந்து குடிபெயர்ந்த கடவுள்களும், கடவுள் கொள்கையும் இந்த தமிழ் மண்ணிற்கு எப்பொழுதோ வந்து இன்றும் தத்தம் மொழியையே விரும்புவதாக அதனைச் சார்ந்தவர்கள் சொல்லுகிறார்கள். இவற்றை கண்மூடிக்கொண்டு கேட்டுக்கொள்வதுமில்லாமல் ஏற்றுக்கொள்கிறோம். நமக்கு என்று தெய்வம் இல்லாமல் இருந்து, நம் தமிழ்குடிமக்கள் இறைமறுப்பாளர்களாக காலம் காலமாக இருந்து வந்தார்களா ?. எங்கே போனார்கள் நம் தமிழ்கடவுள்கள் ?. தமிழ்கடவுள்கள் பாமரர்கள் உணரமுடியாத ஒரு மொழியைக் கற்றுக்கொண்டு இடைத்தரகர்களை ஏற்படுத்திக் கொண்டார்களா ? அல்லது நம் தெய்வங்கள் அடகுவைக்கப்பட்டதா அல்லது ஒரு மொழிக்கு அடிமை ஆக்கப்பட்டதா ?
வந்தேரிகள் - அவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்கள் ஆனாலும் சரி, நம் தமிழ் அவர்களுடைய கடவுளுக்கு புரியாது என்று சொன்னால் அத்தகைய கடவுள்களால் நமக்கும் நம் சமுகத்திற்கும் எந்த வித நன்மையும் ஏற்படப்போவதில்லை. நாம் நம் தமிழில் வழிபாடு செய்ய எத்தனையோ முத்தமிழ் நூல்கள் இருந்தும், குடமுழுக்கு செய்ய ஆகமங்கள் இருந்தும் அவற்றை புறக்கணிப்பவர்களிடம் நம் காசுகளை உண்டியலில் நிரப்பிவிட்டு, தமிழில் அர்சணை செய்யச் சொல்லி கெஞ்சி கெஞ்சி போராட்டம் நடத்துவதும், கெஞ்சுவதும் மகா கேவலம். அவைகளை விடுத்து மாற்று மொழி பேசும் கடவுள்களை புறக்கணிப்போம். அப்போது அத்தகைய கடவுள்களுக்கு வேறுவழியிருக்காது. நிச்சயமாக தமிழ்கற்றுக் கொண்டு வழிபாடு செய்ய அவைகள் நம்மை வேண்டும்.

22 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//அவைகளை விடுத்து மாற்று மொழி பேசும் கடவுள்களை புறக்கணிப்போம்..//

கடவுள் எங்கே பேசறார்? மனுஷந்தானே பேசறான்.

'கடவுளுக்கும்' மொழி பிரச்சனை இருக்குமா என்ன? அடக் கடவுளே!

பெயரில்லா சொன்னது…

அய்யோ! அய்யோ!!
ஆண்டவனும் தமிழ் கற்றுக்கொள்ளும் காலம் வந்து விட்டதே!
எங்கே போவது தமிழ்ப் பள்ளிக்கு? இப்பொழுதெல்லாம் மடிக்குழைப் பள்ளியில்(NURSERY) படித்தால்தான் மதிப்பு. அங்கே ஆங்கிலம் தவிர மற்ற மொழியில் பேசினால் "ஏண்டா? தமிழ் பேசும் நாயே!" என உதைதான் விழும். ஆண்டவனும் படட்டுமே நாம் படும் பாட்டை.
"இறைவன் மனிதனாகப் பிறக்கவேண்டும்;
பிறந்து மடிக்குழைப் பள்ளியில் படிக்கவேண்டும்;
அரை குறை பண்ணித் தமிழில் பேசவேண்டும்;"
அப்பொழுதுதான் அவனும் சேர்ந்து தமிழ் மொழியை அழிக்கமுடியும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//'கடவுளுக்கும்' மொழி பிரச்சனை இருக்குமா என்ன? அடக் கடவுளே! //

து.கோ இது தானே எல்லோருக்கும் புரியவில்லை.

ஐயா ஞானவெட்டியார்,
உங்கள் ஆதங்கம் புரிகிறது. தாயின் மேல் உள்ள பழிச்சொல்லை தம்மக்கள் தானே போக்க வேண்டும் !

பெயரில்லா சொன்னது…

நல்ல பதிவு. நானும் எழுதி இருந்தேன் இது குறித்து.

கோவி.கண்ணன் சொன்னது…

//விடாதுகறுப்பு சைட்...
நல்ல பதிவு. நானும் எழுதி இருந்தேன் இது குறித்து.
//
வி.க உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. உங்கள் பதிவும் அருமை

பெயரில்லா சொன்னது…

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடவோ, காக்க காக்க கனகவேல் காக்க என்று அவன் மருகனைப் பாடவோ தமிழுக்கு அருகதை இல்லையெனில் வேறு எந்த மொழிக்கு உண்டு?

திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது தமிழின் ஓசை நயத்தால் நமது எண்ண அலைகளில் ஏற்படும் மாறுதலால்தானே ஏற்பட்டது.

ஆக, வட மொழி ஸ்லோகங்களில் உண்டாகும் அதிர்வுகள் தமிழிலும் முடியும். அது முடியாது என்று கூறுபவர்கள், யாராயினும் சரி, தமிழையும் அறியவில்லை, வடமொழி கூட அவர்களுக்கு நன்கு தெரிந்திருக்குமா என்பதும் சந்தேகமே.

இந்தப் பின்னூட்டத்தை உண்மையான டோண்டு ராகவனே இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை என்னுடைய "இருவழி ஒக்குஞ்சொல்" என்னும் இந்தப் பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/palindrome.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

பெயரில்லா சொன்னது…

மதுரை மீனாட்சி கோவிலில் கோடி அர்ச்சனை நல்ல சுத்தத் தமிழில் காலை 7-30 முதல் 8-30 முடிய( 60-70களில்) முன்பு நடந்து வந்தது. தற்சமயம் தெரியவில்லை. ஆனால் முக்கியமான எல்லாக் கோவில்களிலும் அர்ச்சனைச் சீட்டுக் கொடுக்கும் இடத்தில் இங்கு தமிழிலும் அர்ச்சனை செய்யப் படும் என்ற அறிவிப்பைப் பார்க்கலாம். எத்தனை பேர் அதைப் பயன் படுத்துகிறார்கள் என்று தெரியாது. ஆகவே இது மக்கள் கேட்டுக் கொண்டால் செய்யப் படும் ஒரு விஷயம் தானே தவிர வேறு ஒன்றும் இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆக, வட மொழி ஸ்லோகங்களில் உண்டாகும் அதிர்வுகள் தமிழிலும் முடியும். அது முடியாது என்று கூறுபவர்கள், யாராயினும் சரி, தமிழையும் அறியவில்லை, வடமொழி கூட அவர்களுக்கு நன்கு தெரிந்திருக்குமா என்பதும் சந்தேகமே.//

டோன்டு அவர்களே உங்கள் பின்னூட்ட விளக்கங்களுக்கு நன்றி. பல மொழிகள் அறிந்த உங்களிடம் ஒரு விண்ணப்பம், பாரதி போல் நீங்கள் சொல்லூவீர்களா ? யாமரிந்த மொழிகளிலே .. என்று ?

////Geetha Sambasivam said...
மதுரை மீனாட்சி கோவிலில் கோடி//

நம்மிடையே பல புல்லுறுவிகள் இருக்கிறார்கள், அவர்கள் அறிய வேண்டும் என்று தான் இப்பதிவு

பெயரில்லா சொன்னது…

"டோண்டு அவர்களே உங்கள் பின்னூட்ட விளக்கங்களுக்கு நன்றி. பல மொழிகள் அறிந்த உங்களிடம் ஒரு விண்ணப்பம், பாரதி போல் நீங்கள் சொல்லுவீர்களா ? யாமறிந்த மொழிகளிலே .. என்று ?"

பலமுறை கூறியிருக்கிறேனே, யாமறிந்த ஆறு மொழிகளில் தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் என்று.

இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காண உங்களுக்கு இந்த முறை என் தனிப்பதிவிலும் இடப்படும் பின்னூட்டம் தேவையில்லை என்று முடிவு செய்ததால் அவ்வாறு செய்யவில்லை.

போட்டோ மற்றும் ப்ளாக்கர் எண் ஒத்துப் போகின்றனவா என்பதை மட்டும் பார்த்து என்னுடைய இந்தப் பின்னூட்டத்தை மட்டுறுத்தவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பெயரில்லா சொன்னது…

//ஆனால் முக்கியமான எல்லாக் கோவில்களிலும் அர்ச்சனைச் சீட்டுக் கொடுக்கும் இடத்தில் இங்கு தமிழிலும் அர்ச்சனை செய்யப் படும் என்ற அறிவிப்பைப் பார்க்கலாம். எத்தனை பேர் அதைப் பயன் படுத்துகிறார்கள் என்று தெரியாது. //

This is the issue. why they choose தமிழிலும். Why cant they make it default.

When the sivacharyas conducted the kuda-muzhukku in tamil in karur some time back the archagars performed special poojas to remove the "theettu".

Even irulneeki subbu was against using tamil in temples.

I have read news a article from vikatan or J.vikatan about the incident in chidambaram. The deekshidars hit one of the guy who sang devaram or something like that inside the temple.

பெயரில்லா சொன்னது…

நாம்; சிந்திக்க வேண்டிய விடயம்; 90 ல் உண்மையாக நடந்த சம்பவம்;பாரிசில் சைவ மத குருக்கள் இல்லாத காலத்தில்,;ஒரு மொறீசியஸ் நாட்டு சைவத் தமிழர் திருமணம் ஒன்று பார்க்கக்கிடைத்தது.அதை மொறீசியஸ் நாட்டு சைவ மத குரு நடத்தி வைத்தார். அவர் மந்திரமெனச் சொன்னது, நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!....திருவாசகம்; மற்றும் தேவாரம்; கந்தசஸ்டி கவசம்;இதில் வேடிக்கை;;;;திருமணவீட்டார் எவருக்குமே! தமிழ் தெரியாது. அவர்கள் அந்தக் குரு சொன்னதை சமஸ்கிருத் மந்திரம் என்றே எண்ணியிருந்தார்கள்.தமிழர்கள் என்றாலே எங்கும் புரியாததைக் கேட்பவர்கள் என்ற நிலை வருந்தத் தக்கதே!!!!எங்கள் ஈழத்தில் 85./. சைவ மத குருக்கள் பொருள் தெரிந்து மந்திரம் கூறுவதில்லை. வெறுமனே பாடமாக்கல்.....விளையாட்டு...சொல்லிய பாட்டில் பொருளுணர்ந்து சொல்லுவதே இல்லை..;; அவர்களில் பலர்.அவர்கள் உச்சரிப்பு சரியா? என்பது கூட ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்.ஈழத்தில் இன்று புரியக்கூடியவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.எல்லோரும் ஒத்து ஒரு முடிபு எடுக்க வேண்டிய விடயம்.
நன்றி
யோகன்
பாரிஸ்

கோவி.கண்ணன் சொன்னது…

//பலமுறை கூறியிருக்கிறேனே, யாமறிந்த ஆறு மொழிகளில் தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் என்று.//

டோண்டு அவர்களே பல முறை கூறியிருக்கிறீர்களா ! பாராட்டுக்கள், சிலர் என்ன சொன்னாலும் கேட்காத காதை வைத்துக்கொண்டு வாயிடிக்கிறார்கள் அவர்கள் புரிந்து கொள்ளட்டம்.

//அவர்கள் அந்தக் குரு சொன்னதை சமஸ்கிருத் மந்திரம் என்றே எண்ணியிருந்தார்கள்//

பார்வை அவர்களே உங்களின் பின்னூட்டம் கலகலப்பாக இருக்கிறது, சமஸ்கிரதமே தமிழுக்கு மூலம் என்று சொல்வது பேரன் பாட்டனை பெற்றான் என்பது போன்ற புரட்டு மாபெரும் என்று தமிழறிஞர்கள் சொல்கிறார்கள்.

TBCD சொன்னது…

//
ஆக, வட மொழி ஸ்லோகங்களில் உண்டாகும் அதிர்வுகள் தமிழிலும் முடியும்.
//

இந்த அதிர்வுகளுக்கு யார் மெட்டுப் போட்டு, ஆர்கஸ்டரா போடுறா...?

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
//
ஆக, வட மொழி ஸ்லோகங்களில் உண்டாகும் அதிர்வுகள் தமிழிலும் முடியும்.
//

இந்த அதிர்வுகளுக்கு யார் மெட்டுப் போட்டு, ஆர்கஸ்டரா போடுறா...?
//

டிபிசிடி ஐயா,
தவளைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்து தருகிறீர்களா ?
:)

இறக்குவானை நிர்ஷன் சொன்னது…

ஒன்றுமே தேவையில்லை. வாய்மூடி பூஜை செய்தால்... இறைவனுக்கு மெளனமொழியால் அபிஷேகம் செய்தால் ஏற்றுக்கொள்ள மாட்டாரா என்ன?

கோவி.கண்ணன் சொன்னது…

//இறக்குவானை நிர்ஷன் said...
ஒன்றுமே தேவையில்லை. வாய்மூடி பூஜை செய்தால்... இறைவனுக்கு மெளனமொழியால் அபிஷேகம் செய்தால் ஏற்றுக்கொள்ள மாட்டாரா என்ன?
//

கண்டிப்பாக...மனதால் நினைத்தாலே போதும்.

நெஞ்சகமே கோவில்
:)

சீனு சொன்னது…

//'கடவுளுக்கும்' மொழி பிரச்சனை இருக்குமா என்ன? அடக் கடவுளே!//

(கடவுள் இருக்கும் பட்சத்தில்) அவர்கள் டெலிபதி மூலமாகவே பேசிக்கொள்ள வேண்டும்...

bala சொன்னது…

கோவி.மு.கண்ணன் அய்யா,

டி பி ஸி டி தான் உங்க தெலுங்கு மாமியார்னு பரபரப்பா ஒரு வதந்தி வருகிறதே?அது மெய்யா?உண்மையாக இருக்கும் பட்சத்தில் எந்த டி பி ஸி டி உங்க தெலுங்கு மாமியார்?0, 1 or 2?
மக்களெல்லாம் சஸ்பென்ஸ் தாங்க முடியாம திணறறாங்கய்யா.சீக்கிரம் சொல்லிடுங்க.

பாலா

கோவி.கண்ணன் சொன்னது…

bala said...
//கோவி.மு.கண்ணன் அய்யா,

டி பி ஸி டி தான் உங்க தெலுங்கு மாமியார்னு பரபரப்பா ஒரு வதந்தி வருகிறதே?அது மெய்யா?உண்மையாக இருக்கும் பட்சத்தில் எந்த டி பி ஸி டி உங்க தெலுங்கு மாமியார்?0, 1 or 2?
மக்களெல்லாம் சஸ்பென்ஸ் தாங்க முடியாம திணறறாங்கய்யா.சீக்கிரம் சொல்லிடுங்க.

பாலா
//

திணறலா ? மூச்சு திணறலாகி...
பைத்தியம் பிடித்தால் பாயை பிராண்டவும் (BHOY யை அல்ல... அப்பறம் நான் பொறுப்பு இல்லை)

bala சொன்னது…

//(BHOY யை அல்ல... அப்பறம் நான் பொறுப்பு இல்லை)//

கோவி.மு.கண்ணன் அய்யா,

BHOY ??? இது யாருங்க?இன்னொரு மாமியாரா?அய்யய்யோ என்னங்க இது?உங்க கதை ஒரு முக்கோண காதல் கதைன்னு பாத்தா ஏகப்பட்ட கோணங்கள் கதையில வருதே?எதுக்கும் பாத்து நடந்துக்கோங்க.கொல்ட்டி மாமியார்களே ஒரு மாதிரின்னு கேள்விப் பட்டிருக்கேன்.ஏதாவது இசகு பிசகா செஞ்சுடப் போறாரு.

பாலா

கோவி.கண்ணன் சொன்னது…

// bala said...


கோவி.மு.கண்ணன் அய்யா,

BHOY ??? இது யாருங்க?இன்னொரு மாமியாரா?அய்யய்யோ என்னங்க இது?உங்க கதை ஒரு முக்கோண காதல் கதைன்னு பாத்தா ஏகப்பட்ட கோணங்கள் கதையில வருதே?எதுக்கும் பாத்து நடந்துக்கோங்க.கொல்ட்டி மாமியார்களே ஒரு மாதிரின்னு கேள்விப் பட்டிருக்கேன்.ஏதாவது இசகு பிசகா செஞ்சுடப் போறாரு.

பாலா
//

என்ன ஜயராமன் சார் இது ?

எப்போதோ சிவபாலன் பின்னூட்டம் போட்டதெல்லாம் தெரிந்து இருக்கு, bohy தெரியாதா ? சரிதான். 'சல்மா' வைத்(தெரிந்)திருந்தால் பாய் தெரிந்திருக்கலாம். நான் நம்புகிறேன். நீங்க அவரு இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

டிபிசிடி ஐயா,

"தமிழில் அர்சனை போராட்டம் தேவையா ?" என்கிற பதிவுக்கு பலமொழிகள் கலந்து அர்சனை செய்கிறீர்கள்.

பெரியார் கொள்கைபடி ராமனை தாக்கு தாக்குன்னு ...
:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்