பின்பற்றுபவர்கள்

19 ஏப்ரல், 2006

வா(ய்)க்கு அரிசி !

அரசியலா அல்லது அரிசியலா என்று தேர்தல் திருவிழா நன்றாக களைகட்டியிருக்கிறது. இரண்டு ரூபாய்க்கு சாத்தியம் இல்லை என்று சத்தியம் செய்த அதிமுக தரப்பு 10கிலோ வாங்கினால், கிலோ வீதம் ரூ 3.50 வாங்கினால் 10 கிலோ இலவசம் என ஒரு திடீர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்த கணக்கை பார்த்தால் கிலோ 1.75க்கு கொடுப்பதாக அதிமுக மறைமுக தெரிவித்திருப்பது தோல்வி பயத்தையே காட்டினாலும் இரண்டு ரூபாய்க்கு வரவேற்பு இருந்ததை காட்டுகிறது.

2001ல் ஆட்சிக்கு வந்த அதிமுக முந்தைய ஆட்சியில் திமுக விட்டுச் சென்றதெல்லாம் அரிசி மூட்டைகள் எல்லாம் புழுத்த அரிசிகள் என்று கூறி குழி தோன்டி புதைத்தது. கிடங்குக்கு சென்று திடீர் சோதனை செய்த பொன்முடி சிறையில் அடைக்கப்பட்டார். ஒருவேளை திமுக ஆட்சிக்கு வந்து, சொன்னபடி 2ரூபாய் அரிசி கொடுக்காவிட்டால், இதே நாடகம் திரும்ப நடக்க வாய்பு இருக்கலாம் என்று அதிமுக கருதுவதாக தெரிகிறது. அதற்கு வாய்பு அளிக்க கூடாது என்பதாலும், திமுக அரிசி பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அரசியின் அரசியலில் அரிசியலை அள்ளி தெளித்துள்ளார்.

வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிக்கும் இதே மாதிரி அறிவிப்புகள் வரலாம், அதிமுக ஆட்சிக்கு வந்தால் வண்ணத் தொலைக்காட்சி பெட்டியுடன் இலவசமாக விசிடியோ அல்லது டிவிடி இயங்கி கொடுக்கப்பட்டு ஐந்தாண்டு இலவச பாரமாரிப்புக்கும் உத்தரவாதம் அளிப்பதாக விரைவில் அறிவிப்பு வரலாம்.

வாக்கு பதிவு செய்துவிட்டு ஐந்தாண்டுக்கு மோட்டுவளையை வெறித்துப் பார்பவர்களுக்கு ஏதோ கிடைக்கப் போகிறது என்றவகையில் மகிழ்ச்சியாக இருந்தாலும், அதனை தேர்தல் நேர வாக்குறுதியாக பேசப்படுவதால் வாக்காளர்கள் விழிப்புடன் இருந்து வாக்கு சீட்டை தவறான வேட்பாளர்களுக்கு வாய்க்கு அரிசியாக போட்டு விரட்ட வேண்டும். (கருத்து சொல்றேங்க, கோவிசுக்காதிங்க)

சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகளாக அரிசிக்கு அல்லாடும் நிலையில் மக்களை வைத்திருப்பதும் இல்லாமல், அதை ஆதாயமாக வைத்து அரசியல் கட்சிகள் விளையாடுவது வெட்ககேடு.

ஒருநாள் லஞ்சமாக 100 ரூபாய்க்கு வாக்கு பதித்த மக்கள், நீண்ட கால லஞ்சமான அரிசி, வண்ணத் தொலைக்காட்சிக்கு மயங்குவது மாதிரி தெரிவதால், மக்கள் சிந்திக்க தொடங்கிவிட்டார்கள் எனலாம். இந்த விசயத்தில் தமிழக தேர்தல் மற்ற மானில தேர்தலுக்கு முன்னோடியாக இருப்பதும் தெரியவருகிறது. இனி எந்த மானிலத்தில் சட்டசபை தேர்தல் நடந்தாலும் தமிழக இலவச அறிவிப்புகள் அங்கும் எதிரொலிக்கப் போவது தின்னம்.

வாழ்க திராவிடக் கட்சிகள்.

5 கருத்துகள்:

TBCD சொன்னது…

உண்மை உண்மை...

//சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகளாக அரிசிக்கு அல்லாடும் நிலையில் மக்களை வைத்திருப்பதும் இல்லாமல், அதை ஆதாயமாக வைத்து அரசியல் கட்சிகள் விளையாடுவது வெட்ககேடு. //

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
உண்மை உண்மை...
//

அண்ணே உங்களுக்கு மனசு பெரிசண்ணே.

வடுவூர் குமார் சொன்னது…

இந்த “இலவசத்தை” முதலில் நிறுத்தவேண்டும்.மக்களை கெடுப்பதில் இதுவும் ஒன்று.
இனிவரும் காலங்களில் தேர்தல் வந்தாலே இந்த முறை என்னென்ன கிடைக்கும் என்ற எதிர்பார்புகளுக்கு மக்களை தள்ளும் என்பது நிச்சயம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
இந்த “இலவசத்தை” முதலில் நிறுத்தவேண்டும்.மக்களை கெடுப்பதில் இதுவும் ஒன்று.
இனிவரும் காலங்களில் தேர்தல் வந்தாலே இந்த முறை என்னென்ன கிடைக்கும் என்ற எதிர்பார்புகளுக்கு மக்களை தள்ளும் என்பது நிச்சயம்.
//

குமார்,

நீங்கள் மக்கள் திருந்தவேண்டும் என்ற ஆதங்கத்தில் சொல்லி இருக்கிறீர்கள் வரவேற்கத்தக்கது.

ஐந்தாண்டுக்கு ஒருமுறை தொகுதியை எட்டிப்பார்க்கும் எம் எல் ஏக்களிடம் குறைந்த அளவாக இலவசங்களைத்தானே மக்கள் கறக்க முடியும். எதுமே கிடைக்காமல் போவதற்கு தேர்தல் கால (வாக்குறுதிகளால்) மறைமுக நன்மை இல்லையா ?

ஏனென்றால் எப்போதும் அரசியல் வாதிகள் திருந்தபோவது இல்லை.
:)

RATHNESH சொன்னது…

பின்னூட்டமாக இந்தப் பதிவினை இணைக்கிறேன்:

http://rathnesh.blogspot.com/2007/08/blog-post_1057.html

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்