நம் தமிழ் சொற்கள் திராவிட மொழிகள் அனைத்திலும் நீக்கமர நிறைந்திருக்கிறது என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. நான் முதன் முதலில் பெங்களூருக்கு வேலைக்கு சென்ற போது ஒரு மாதம் தடுமாற்றமாக இருந்த மொழி புரிதல், அடுத்த மாதத்தில் பேசக்கு கூடிய அளவிற்கு புரிந்து போனது. மூன்று மாதத்தில் சரளமாக பேச முடிந்தது. நம் தமிழ் வளம் எங்கும் கலந்திருப்பதால் தானோ, நம்மவர்கள் சில மாதங்களிலேயே புதிய மொழிகளை கரைத்து குடித்துவிடுகின்றனர். மலையாளிகளும் அப்படித்தான், ஆனால் அவர்கள் பேசும் போது மண்வாசனை தெரிந்துவிடும், ஆனால் நம்மவர்கள் தமிழைத்தவிர வேறு மொழிபேசும் போது வாக்கு சுத்தமாகவே பேசுகிறார்கள்.
கன்னடம் தமிழிலிருந்து ஆறாம் நூற்றாண்டிலோ அதற்கு கீழோ பிரிந்ததாக சொல்லுவார்கள். கொடும் தமிழே கன்னடமாக திரிந்தது. மலையாளத்திற்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு போல், கன்னடத்திற்கும் தமிழுக்கும் ஆழ்ந்த தொடர்பு உள்ளது. பழம் தமிழ் சொற்களும், வடமொழியும் இணைந்த கலவையே கன்னடம்.
தாய் - தாயி; தந்தை - தந்தெ; தம்பி - தம்ம; அக்காள் - அக்கா; தங்கை - தங்கெ; மக்கள் - மக்களு (குழந்தைகள், தம்மில் தம்ம்க்கள் - திருக்குறள்); மகவு - மகவுமகளிர் - மகளியர்; அவள் - அவளு; அவன் - அவனு; யார் - யாரு; யானை - ஆனே; அங்கே - ஆகே; இங்கே - ஈகே; மேல் - மேல்கட; கீழ் - கிளெகட; நான் - நானு; என் - நன்; நி - நீனு; அவர் - அவரு; கை - கையி; கால் - காலு; செவி - கிவி; வாய் - பாயி; மூக்கு - மூக்கு; கண் - கண்ணு; விரல் - பெரலு; நகம் - நக; பல் - பல்லு; ஓது - ஓது (படித்தல் - ஓதாமல் ஒரு நாளும் - ஒளவையார்); கேள் - கேளு; மனை - மனெ ( வீடு); போ - ஹோகு; வா - பா; பழம் - ஹன்னு ( கனி - என்ற சொற்திரிபு); உப்பு - உப்பு ( திராவிட மொழிகளில் பொதுவானது உப்பு); பார் - நோடு ( நோட்டம் என்ற் சொற்திரிபு); சின்ன - சன்ன; முந்தைய - முந்திகெ; இல்லை - இல்லெ; இருக்கு - இதெ; ஆகவில்லை - ஆகல்ல; வந்த - பந்த; பாடு - ஹாடு; நல்ல - ஒள்ளெ; மற்ற - மத்து; என்று - எந்து;
மேலும் ஆயிரத்திக்கு அதிகமான தமிழ் திரிச்சொற்கள் கன்னடத்தில் புழங்குகின்றன.
ஒன்றுக்கு மேற்பட்டவைகளில் நாம் 'கள்' சேர்போம், அவர்கள் 'களு' சேர்பார்கள்
குதிரைகள் - குதிரெகளு
நாய் - நாயிகளு
பூனைகள் - பூனெகளு
ஒன்று - ஒந்து ; இரண்டு - இரடு ; மூன்று - மூனு ; நான்கு - நாலகு ; ஐந்து - ஐது ; ஆறு - ஆறு, ஏழு - ஏழு; எட்டு - எண்டு; ஒன்பது - தொம்பது; பத்து - ஹத்து, பதினொன்று - பதவொந்து .... இருபது - இரவைத்து, முப்பது - மூவத்து, நாற்பது - நாவத்து, ஐம்பது - ஐவத்து, அறுபது- அறுவத்து, எழுபது - எப்பது , என்பது - எம்பத்து, தொன்னூறு - தொம்பத்து, நூறு - நூறு; ஆயிரம் - சாவிர
குறிப்பு : இந்த பதிவில் சில சொற்களில் எழுத்துப் பிழைகள் இருக்கும்.
4 கருத்துகள்:
நல்ல பதிவு கோவி கண்ணன். நானும் இதே போல் ஒரு பதிவு இட்டுள்ளேன். நேரமிருந்தால் படித்துப்பாருங்கள்.
http://valaiyilezuthu.blogspot.com/2005/12/blog-post_05.html
நல்ல பதிவு !!
நன்றி!!
I heard whereever Va used in tamil use Bha. and whereever Bha is used in tamil use Ha, it will become Kannada. Is it so ?
ஆமாவா கோவி ஐயா..
கருத்துரையிடுக