(ஓரு கற்பனை)
செந்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய, ரத்ததின் ரத்தங்களின் தோளில் அமர்ந்து வருகிறார், நிறைய மாலை அணிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வழியாக வந்த கவுண்டமணி தூரத்தில் இருந்து அதை கவினித்துவிடுகிறார்.
கவுண்டமணி (மனசுக்குள்) : அடப்பாவி, இவன் நம்ப ஆளு இல்லே, அதுக்குள்ள போயி சேந்துட்டானே ? அது... சரி ... எதுக்கு இவனை இத்தனை போரு தூக்கிட்டு வர்ராங்க ? கிட்ட வரட்டும் என்னான்னு பார்ப்போம் ...
கூட்டம் நெருங்க, செந்திலின் கைகால் அசைவு தெரிகிறது.
கவுண்டமணி (மனசுக்குள்) : கொக்கா மக்க, பய இன்னும் சாகலை ... இவன் நம்பள போட்டுதள்ளமா செத்துடுவானா என்ன ?
(கூட்டம் நெருங்கிவர செந்தில், கவுண்டமணியை கவனித்து விடுகிறார்.)
செந்தில் : நிறுத்துங்க நிறுத்துங்கப்பா, எங்க அண்ணன் நிக்கிறாரு.
செந்தில் : அண்ணே என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கண்ணே ! (என்று காலில் விழுகிறார்)
கவுண்டமணி : டேய், ஏந்திரி, என்ன கூட்டமா ? அதுவும் ரோடு ரோலர ஜீப்ல ஏத்திக்கிட்டு ...? எங்கேயாச்சும் ரோடுபோடப் போறியா ?
செந்தில் : ரோடு ரோலர் இல்லெண்ணே, தெரியலையா இவன் நம்ப குண்டு கல்யாணம். அதவுடுங்கண்னே, நான் மந்திரியாக போறேன் ஆசிர்வாதம் பண்ணமாட்டிங்களா ?
கவுண்டமணி மனதுதுக்குள் 'இவனுக்கு சீட்டே கெடக்கல , என்னுமோ சீன்டி பாக்கனும்னு நெனெக்கிறான், சரி என்னான்னு பார்போம்' என்று நினைத்துவிட்டு.
கவுண்டமணி : எ... என்னது நீ மந்திரியா ? பாருங்க மகா ஜெனங்களே, இந்த பன்னிவாயன் மந்திரியாக போறானாம் ? ஏன்டா, கட்டுச் சோத்துக்குள்ள பெருச்சாளி கேள்விப் பட்டுருக்கேன், நீ போறேன்னு சொல்றது சட்ட சபைடா, சட்டசபை உனக்கு கட்டுச்சோறாடா ? அங்கல்லாம் போனா நெறையா பேசனும்டா, கரிச்சட்டி தலையா ! அரசியல சாக்கடைன்னு எவனோ சொன்னத வெச்சிக்கிட்டு, இந்த பன்னி போயி எறங்க ஆசை பட்டுடுச்சி !
செந்தில் : அண்ண ரொம்ப பேசாதிங்க, பின்னாடி வருத்தப்படுவிங்க ?
கவுண்டமணி : பின்னாடி என்னடா பின்னாடி, ஏன் என் முதுவுக்கு பின்னால வெடிகுண்டு வெச்சிருக்கியா ?
செந்தில் : அண்ண நீங்க கவுண்டமணின்னா, நான் கவுன்ட் டவுன் மணி ?
கவுண்டமணி : அது என்ன எழுவு மணிடா, யாரவது கவுன் போட்டவங்க கிட்டேர்ந்து திருடிக்கிட்டு ஓடியாந்திட்டியா ?
செந்தில் : அது இல்லண்ணே, எலக்சன் வரப்போவுது, நான் மந்திரியாகரத்துக்கு கவுன்ட் டவுன் ஆரம்பிச்சி மணியடிச்சிடுச்சிண்னே, அதான் சொன்னேன்
கவுண்டமணி : அப்படி வெவரமா சொல்லுடா என் ராஜா. ஆமாம் நாட்டுல எவன் எவனோ மந்திரியாவுராங்க, நீ ஆவரது ஒன்னும் பெரிய தப்பில்ல தான்.
செந்தில் : அண்ணே, வேட்பு மனு தாக்கல் செய்ய இன்னும் கொஞ்சம் நேரம் இருக்குண்ணே, சின்னதா ஒரு வெளெயாட்டு வெளெயாடலாமாண்னே ?
கவுண்டமணி : ஏண்டா, மந்திரியா ஆகப்போறேன்னு சொல்ற நீ, வெளெயாடப்போறியா ... ? ஆமாம், நாட்டுல அரசியல் வாதிங்க வெளெயாடுரதை வீடவா நீ வெளயாடப்போறே ?
மனதுக்குள்
'அந்த அம்மா எத எப்படி மாத்துன்னு தெரியலயே, பன்னீர மொதல்வராக்குனது , இந்த பன்னிய மந்திரியா ஆக்குனாலும் ஆக்கும்' எதுக்கும் இவன் சொல்றத கேட்போம், பின்னாடி மந்திரியாடிட்ட நம்பள நல்லா கவனிச்சிக்குவான்'
செந்தில் : ஆமாண்ணே, அரசியல்ல வெளெயாடரத்துக்கு முன்னாடி கொஞ்சம் தயார்படுத்திக்க வேணாம்மா ?
கவுண்டமணி : எலேய்... என்ன வெளயாட்டு வேனும்னாலும் வெளெயாடு, டிக்கிலோனா மட்டும் வெளெயாட வேணாம், குனிஞ்சி நிமிரக்கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டாரு ஆமாம்.
செந்தில் : இது கஷ்டமில்லாத வெளெயாட்டுண்ணே, இப்ப நான் என்னோட கண்ண கட்டிக்குவேன், நீங்க வெரல காட்டனும், நீங்க எந்த நம்பரை காட்டுறீங்கன்னு நான் கரட்டா சொல்லனும், இதான் வெளயாட்டு
கவுண்டமணி : ப்பூ... கண்ணாமூச்சி வெளயாட்டு, என்னெ கண்ணை மூட சொல்லிட்டு எங்க காலை வாரி வீட்டுட்டு ஓடிடுவேன்னு கொஞ்சம் பயந்துட்டேன், நீ கண்ணை மூடிக்கிறேன்னு சொல்றதால ஒத்துக்குறேன்.
கவுண்டமணி (மனசுக்குள்) : பய மாறிட்டான், என்ன இருந்தாலும் மந்திரியாகப் போறான்ல்ல, நான் தான் ஒருவேளை தப்பா புரிஞ்சிக்கிட்டேனோ ?
கவுண்டமணி : சரிடா நீ கண்ண மூடிக்க,
(செந்தில் கண்ணை துணியால மூடிக்கொண்டு, இடுக்கு வழியாக கவுண்டமணியின் விரலைப் கவனமாக பார்த்துக்கொண்டிருக்கிறார். )
செந்தில் : அண்ணே, நான் ரெடி
ஒரு விரலை காட்டிய கவுண்டமணி,
கவுண்டமணி : இது என்ன சொல்லு ?
செந்தில் யோசிப்பது மாதிரி பாவ்லா காட்டி,
செந்தில் : அண்ணே ஒன்னு
கவுண்டமணி : இப்ப என்ன சொல்லு ?
செந்தில் : அண்ணே நாலு
கவுண்டமணி : இது என்ன சொல்லு ?
செந்தில் கண் கட்டுகளை வேகமாக அவிழ்த்து எறிந்துவிட்டு, கூட்டத்தினரை பார்த்து உற்சாகமாக சொல்கிறார்
செந்தில் : அண்ணன் வாழ்க, அண்ணன் வாழ்க
கவுண்டமணி (புரியாமல்) : இவ்வளவு நேரம் நல்லாதானே, இருந்தான் பய ? ... டேய் நிறுத்துடா, எதுக்கு இப்ப திடீர்னு வாழ்க கோசம் போடுற ?
செந்தில் : என்னண்னே, இது கூட புரியாம ? அண்ணே, நீங்க ரெண்டு விரலை காண்பிச்சி, ரெட்லைக்கு வோட்டு கேட்டுடிங்க ! அண்ணன் வாழ்க, அண்ணன் வாழ்க
கவுண்டமணி : அட நாயே, அரசியல்ல சேர்ந்து இப்படி மாறிட்டியே, ஏண்டா ? நான் இரண்டுவெரல காட்டி, ரெட்டலைக்கு ஓட்டு கேட்டேனா ? அட பண்ணாடை, என்னெ திட்டம் போட்டு மாட்டிடியேடா , வெரலு வெளயாட்டை வெவகாரமா ஆக்கிட்டியே, டேய் நீ இப்படியே போயி, அந்தோ தெரியுதுபாரு கக்கூசு, அங்க போயி நில்லு, நெறையெ பேரு இரண்டு வெரல காட்டிக்கிட்டு வருவாங்க.
செந்தில் கெ கெ ... என சிரித்துக்கெண்டே,
செந்தில் : அரசியல்ல இதல்லாம் சகஜமண்னே ! இப்பவாச்சும் ஒத்துகிறிங்களா நான் அறிவாளிதான்னு ?
கவுண்டமணி : நான் சொன்னத வெச்சு எனக்கே ஆப்பா ? டேய், ஒன்ன மடையன்னு நெனெச்சிருந்தேன், நீ பக்கா அரசியல் வாதியாயிட்டே, பொழைச்சிக்குவ, ஒன்ன வெச்சு ஒன் கட்சியும் பொழச்சுக்கும், நல்லாயிரு. ஆனா நாட்டெ நெனெச்சாதான் எனக்கு கவலை யாயிருக்கு.
செந்தில் : அண்ணன் கவுண்டர் வாழ்க, அம்மா வாழ்க ! அம்மா வாழ்க !
என்று சொல்லிவிட்டு கூட்டத்தினருடன் செல்கிறார். கவுண்டமணி நொந்தபடி திரும்புகிறார்
பின்பற்றுபவர்கள்
7 ஏப்ரல், 2006
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
5 கருத்துகள்:
நல்ல காமெடி..Ha ha ha..
அச்சிச்சோ..இதையும் யாரும் கண்டுக்கவே இல்லை...
//TBCD said...
அச்சிச்சோ..இதையும் யாரும் கண்டுக்கவே இல்லை...
//
டிபிசிடி ஐயா,
பதிவே எழுதவில்லை என்றாலும் எனது பதிவின் ரேட்டிங் உயர்த்தித்தர திட்டம் வச்சிருக்கிங்களா ?
சொல்லவே இல்லை.
:)
கோவி.மு.கண்ணன் அய்யா,
உங்களுக்கு சூப்பர் ஜல்லி அடிக்கும் திராவிட தீவிரவாதி சிவபாலன் அய்யாவை ரொம்ப நாளா காணோம்;எங்கேயாவது பதுங்கி இருக்காரா?ஆனாக்க உங்களுக்கு கவலையில்லை;அந்த இடத்தை 3 திராவிட தீவிரவாதிகள் நிரப்பி இருக்கிறார்களே.நான் சொல்வது டி பி ஸி டி 0,1,,2 அய்யாமார்களை.சும்மா சொல்லக் கூடாது;நல்லாவே ஜல்லி அடிக்கறாங்க.வாழ்க வாழ்க.
பாலா
//bala said...
கோவி.மு.கண்ணன் அய்யா,
உங்களுக்கு சூப்பர் ஜல்லி அடிக்கும் திராவிட தீவிரவாதி சிவபாலன் அய்யாவை ரொம்ப நாளா காணோம்;எங்கேயாவது பதுங்கி இருக்காரா?ஆனாக்க உங்களுக்கு கவலையில்லை;அந்த இடத்தை 3 திராவிட தீவிரவாதிகள் நிரப்பி இருக்கிறார்களே.நான் சொல்வது டி பி ஸி டி 0,1,,2 அய்யாமார்களை.சும்மா சொல்லக் கூடாது;நல்லாவே ஜல்லி அடிக்கறாங்க.வாழ்க வாழ்க.
பாலா
//
வாங்க ஜயராமன் சார்,
ரொம்ப நாளாக ஆளைக்கானும், தெய்வமகனாக ஆகி மறைஞ்சுட்டிங்களா ?
நல்லா இருக்கிங்களா ?
சார்,
உங்களை நான் ஜயராமன் என்று செல்லமாகக் கூப்பிடுவதில் பலருக்கு வருத்தமாம். நீங்கள் 'அந்த' ஜயராமன் என்று நான் சொன்னதே இல்லை. அவர்கள் அப்படி புரிந்து கொண்டார்கள் போல இருக்கு.
பின்னூட்ட ஆதரவுக்கு நன்றி !
கருத்துரையிடுக