1992க்கு பிறகு ஆனித்தரமாகவும், அதற்கு முன்பும் காங்கிரஸ் - திராவிடக்கட்சிக் கூட்டனிகளே தமிழகத்தில் வெற்றியை சுவைத்திருக்கின்றன. 1992ல் ஜெ தலைமையிலான அ.தி.மு.க அரசும், பிறகு 1996ல் மூப்பனார் த.ம.க மற்றும் திமுக கலைஞர் கருணாநிதியின் தலைமையிலான கூட்டனியும், 2001ல் மூப்பனார் / ஜெ தலைமையிலான கூட்டனியும் வெற்றிப் பெற்றுருக்கின்றன.
முன்பு அதிகம் இடங்களை கேட்டுவங்கிய காங்கிரஸ் இன்று 50க்கும் குறைவான இடங்களில் நிற்பது, யானை தன் பலத்தை உணராது போன்ற அவர்களின் பலவீனம். இதற்கு கலைஞர் நன்றாகவே வைகோவை வைத்து காய் நகர்த்தியுள்ளார். அதிக கட்சிகளை தன் கட்சியில் சேர்ப்பது போல்காட்டி விட்டு காங்கிரஸ் தொகுதிகளை குறைத்துவிட்டு, பின்பு வைகோவை கழட்டியவுடன் ஒன்றோ இரண்டோ அதிகம் தருவது போல் ஒரு கணக்கை மிகவும் சாமர்த்தியமாக சரிசெய்தது கலைஞரின் இராஜதந்திரம். இதன் மூலம் ம.தி.மு.கவிற்கு நன்றாக செக் வைத்தார். இவரது கணக்கு சரியானால் தேர்தலுக்கு பின் மதிமுக காணமல் போவது உறுதி.
அ.தி.மு.க வைப் போலவே அடிப்படை ஓட்டுக்கள் காங்கிரசுக்கும் உண்டு. அவர்கள் தனித்து போட்டியிட்ட போது 25 இடங்களை கைப்பற்றியுள்ளனர். இதை தமிழக திராவிடக்கட்சிகள் நன்கு உணர்ந்திருக்கின்றன, அதுவும் கருணாநிதி நன்கு உணர்ந்துள்ளார். ஜெ அனாவசியமாக சோனியாவை திட்டிவிட்டு பின்பு எவ்வளவோ தரிகனத்தோம் போட்டும் காங்கிரசை அவரால் நெருங்க முடியவில்லை. இந்த பார்முலாவை நன்கு உணர்ந்ததால் தான் மருத்துவர் ராமதாஸ் தன் நிலையை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
ம.தி.மு.க - அ.தி.மு.க கூட்டனிக்கு இத்தேர்தலில் பெரும் பின்னடைவே. கொள்கையிலும் கூட்டனியிலும் சந்தர்பவாதமே அதிகம் உள்ளதை ஊடகங்கள் மூலமும் வைகோ வின் வாய் ஜாலத்திலும் பொதுமக்கள் நன்றாக உணர்ந்துள்ளார்கள்.
கலைஞரின் கலர் டிவியும், இரண்டு ரூபாய் அரிசியும் இந்த தேர்தலில் மிகப்பெரிய சக்தி. இவைகள் ஏழை எளியோரை மிகவும் கவர்ந்துள்ளதாகவே தெரிகிறது. அவற்றை சமாளிக்க அ.தி.மு.க சொல்லும் புகார்களும் அவற்றை நிருபிப்பது போலவே உள்ளது.
தேர்தலில் தி.மு.க கூட்டணி ஜெயித்தாலும், ஆட்சியமைக்க கண்டிப்பாக காங்கிரசின் கையை எதிர்ப்பார்க்கும் விதமாக அமையும். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மத்தியில் தி.மு.க கூட்டனி ஆட்சி கேட்டது போல் கேட்குமா, அல்லது விட்டுக்கொடுக்குமா ? பார்ப்போம் ! கொடுக்குமா கையா அல்லது இணைந்த கையா? தேர்தலுக்கு பின் தெரியும்.
- கோவி.கண்ணன்
2 கருத்துகள்:
கை கொடுத்தக் கை...
//TBCD said...
கை கொடுத்தக் கை...
//
உங்களுக்கு(ம்) அல்லக்கை பட்டம் கிடைக்க வாழ்த்துக்கள் !
:)
கருத்துரையிடுக