1990ல் ஜெயலலிதாவை சட்டமன்றத்தில் புடவையை துரைமுருகன் உருவியதாக ஒரு செய்தி வந்தது. பின் 1996 தேர்தல் வெற்றிக்கு பிறகு திமுக ஜெயலலிதாவை ஊழல் வழக்கிற்காக சிறையில் அடைத்தது. இதில் என்ன என்று கேட்கிறீர்களா ? புடவையை உறுவிய நிகழ்சியை அதிமுகவினரும் ஜெயலலிதாவும் 1992வரை தனக்கு சாதமான ஒரு அவதூறக மேடைக்கு மேடை பேசிவந்தார்கள். அதாவது சட்டசபையில் ஒரு பெண் என்றும் பாராமல் மானபங்கம் படுத்தினார்கள் என்று. பின்னாளில் 2002ல் அதே துரைமுருகனை அதிமுகவில் சேரும்படி மறைமுக தூதும் விட்டார்கள் (நக்கீரன்)
பின்னால் என்ன நடந்தது, இதே ஜெயலலிதா பெண் என்றும் பாராமல் ஐபிஎஸ் சந்திரலேக முகத்தில் ஆசிட் அடிக்க வைத்ததும் இல்லாமல் அதற்கு உதவிய மும்பை கூலிப்படையை சேர்ந்த சுர்லாவை காப்பற்ற போராடியது.
இதே பெண் முதல்வர், கவர்னர் மாளிகையில் தண்டு ஊன்றி நடந்த கவர்னர் சென்னாரெட்டி தன்னை மானபங்கம் படுத்தியதாக தான் பெண் என்பதையும், தமிழ்னாட்டின் முதல்வர் என்பதையும் மறந்து ஒரு பொய்புகாரை சொன்னார்.
சசிகலா கனவர் நடராஜனுக்கு நெருக்கமாக இருக்கிறார் என்ற காரணத்தினால் சின்ன பெண் செரினா மீது கஞ்சா வழக்கு போட்டு கோர்டுக்கு இழுத்த போது செரினாவையும் அவரது தாயரும் பெண் என்பது ஜெயலலிதாவிற்கு தெரியவில்லையா ?
தருமபுரியில் மூன்று மாணவிகளை உயிருடன் கொளுத்திய போது அந்த குற்றவாளிகளை காப்பற்ற சாட்சிகளை மிரட்டும் போதும், பாதிக்கப் பட்டவர் பெண் என்பது இந்த அம்மையாருக்கு தெரியவில்லை.
நடு இரவில் வீடு புகுந்து அரசு அலுவலர்களை அள்ளிச் சென்ற போது அவர்களுடைய மனைவிகளின் குரல் இவருக்கு பெண்குரலாக தெரியவில்லை.
வாங்கிய காசுக்கு வக்கனையாக பேசும் வைகோ இன்று சொல்கிறார், ஜெயலலிதாவை பெண் என்றும் பாராமல் அவமானப் படுத்தினார்களாம். இதே வைகோவின் தாயார் அன்று கதறியபோது, ஜெயலலிதாவிற்கு வைகோவின் தாயார் பெண் என்பது தெரியாமல் போனதை வைகோ மறந்து போனாரோ ?
பெண் என்றும் பாராமல் சிறையில் அடைத்தார்களாம், பெண் என்ற ஒரு சிறப்பு தகுதியை வைத்து கொண்டிருக்கும் ஜெயலலிதா, ஆண் அரசியல் வாதிகள் செய்த ஊழல், வஞ்சம், குள்ள நரித்தனம் எதையும் பெண் என்பதால் செய்யாமல் விட்டு வைத்திருக்கிறாரா ?
பொதுவாழ்கையில் நுழைந்த ஜெயலலிதா தன்னை பெண் என்று அடையாளப்படுத்திக் கொள்வது பரிதாபம் தேடுவதற்கு மட்டுமே. மற்ற நேரங்களில் ஒரு தாதாவைப் போல் செயல்படும் ஜெயலலிதா, தேர்தல் நேரத்தில் மட்டும் தான் பெண் என்பதை நினைவு கூறுகிறார். எல்லா நேரங்களில் காலில் விழும் வயதான ஆண்களையோ, பெண்களையோ மனிதப் பிறவிகளாக நினைப்பதும் இல்லை, மதிப்பதும் இல்லை.
13 கருத்துகள்:
//1990ல் ஜெயலலிதாவை சட்டமன்றத்தில் புடவையை துரைமுருகன் உருவியதாக ஒரு செய்தி வந்தது//
I doubt if this incident happenned at all. Perhaps it was one of the "performances".
"இரண்டு கூட்டணிகளும் தோற்க வேண்டும் என ஏன் சொல்லுகிறேன்?"
சமீப காலமாக இந்தத் தலைப்பில் கண்ட வாக்கியத்தை நான் சொல்லி வருவது கண்டு,
சிரிப்பவர் சிலர்!
சீண்டிப் பார்ப்பவர் சிலர்!
சீறுபவர் சிலர்!
சிணுங்குபவர் சிலர்!
சிந்திப்பவர் சிலர்?
இதை ஏன் சொல்லுகிறேன்?
கூட்டத்தோடு கோவிந்தா போடுவது போல இரண்டில் ஏதாவது ஒரு கூட்டணியை ஆதரித்து விட்டுப் போவதுதானே என கேலியும், கிண்டலும், கும்மாளமுமாக தமிழ்மணம் ரொம்பவே மணக்கிறது!
முப்பதாண்டுகளுக்கும் மேலாக, தமிழ் மக்கள் கடந்த 55 ஆண்டு கால குடியரசு ஆட்சிக் காலத்தில், இந்த இரு கழகங்களையும் நம்பி,
"இவர்கள் நமது நலனை மட்டுமே கருத்தில் கொண்டவர்கள்,
பிராந்தியக் கட்சியை ஆதரித்தால், நமக்கும், நம் சந்ததியருக்கும், பயன் இருக்கும்"
என மனப்பூர்வமாக நம்பி, மாறி, மாறி, இவ்விரு கழகங்களையும் நம்மை ஆளவைத்ததில், நாம் கண்ட நன்மைகள் என்ன, தீமைகள் என்னென்ன என்று பார்த்தால்,தீமைக்கணக்கே விஞ்சி நிற்கிறது!
அரிசியைக் காட்டியே ஆட்சிக்கு வந்த இந்த கபடவேடதாரிகள், இன்றும், ... 2006-இலும், ...அதே அரிசியை இன்னமும் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றால்,
எந்தப் பிரச்சினையைக் காட்டி வந்தனரோ, அந்தப் பிரச்சினை இன்னமும் சரி செய்யப் படாமல் இருக்கிறது என்றுதானே உணரப்பட வேண்டும்?
40 விழுக்காடுக்கும் மேற்பட்ட மக்களை வறுமைக்கோட்டுக்குக் கீழே வைத்திருப்பது ஒன்றே நாம் திரும்பத் திரும்ப , மாறி, மாறி ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் வழி என்னும் ஒரு எழுத்தில் இல்லா, இரகசிய உடன்படிக்கையாகவே இவ்விரு கழகங்களும் கொண்டுள்ளன என்று தெரிய வில்லையா?
மாநிலத்திலும், மத்தியிலும் தொடர்ந்து ஆட்சி, மற்றும் அமைச்சுப் பொறுப்பில் இருக்கும் வாய்ப்பினைப் பெற்றும், சொந்த தமிழ் மக்களை முன்னேற்றாமல், சொந்த மக்களை மட்டும் முன்னேற்றத் துடிக்கும் இவர்களை நம்பி மீண்டும் ஆட்சிப் பொறுப்பைக் கொடுக்க எப்படி நம் மனசாட்சி இடம் கொடுக்கும்?
10 பைசாவுக்கு வக்கில்லாமல் வாழ்க்கையைத் தொடங்கியவர்கள் எல்லாம், இன்று பல கோடி ரூபாய் சொத்துக் கணக்கு காட்டுகிறார்களெ; இதெல்லாம் எப்படி வெறும் எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் சம்பளத்தில் சாத்தியமாகும் என தமிழ்கமே, இப்போதாவது சிந்திக்க ஆரம்பி!
இலவசங்களைக் காட்டி, உன்னை பிச்சைக்காரனாய்ப் பார்க்கும் இந்த கேடு கெட்ட கழகங்களின் கோரப்பிடியினின்று நீ விடுபடும் நேரம் வந்துவிட்டது!
தனியாய் நிற்பவனும் இலவசங்களைக் காட்ட வில்லையா என , உடனே ஒரு கூட்டம் வால் பிடித்து ஓடி வரும்!
அவர்களுக்கு இதோ என் பதில்!
VK 15 கிலோ அரிசி இலவசம் என்றதும் சிரித்த அதே கூட்டம்தான் இன்று பொருளாதார ரீதியில் இது சாத்தியமே என்று கூறுவதை கேட்டு ஆர்ப்பரிக்கும் கூட்டம்!
இது சாத்தியம் என்பது உண்மையானால்,
ஏன் இன்றுவரை அ.தி.மு.க. அதைச் செய்யவில்லை?
ஏன் இந்த ஆலோசனையை, ப.சி.யும், மு.க.வும் இதுவரை கொடுக்க வில்லை?எப்படி அய்யா இது மே 9-ம் தேதிக்குப் பிறகு சாத்தியமாகும்.....இதுவரை ஏன் செய்யவில்லை?
நீங்கள் இருவரும் மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சியில் இருப்பவர்தாமே?
ஓட்டுக்காக இப்படிச் சொல்ல வெட்கமாயில்லை?
கட்சி ஆரம்பித்த 2-ம் நாளிலிருந்தெ கேப்டன் சொல்லிவருவது இதைதானே?இது முடியும் என்று சொன்னவர்தான், இப்போது ஆட்சிக்கு வந்தால் நடத்திக் காட்டுவேன் என்கிறார்.
"அளகேசா! ஆண்டது போதாதா? மக்கள் மாண்டது போதாதா?"
என்று அப்போது ஒப்பாரி வைத்து ஆட்சிக்கு வந்தவர்களைப் பார்த்துக் கேட்கிறேன்...
"கலைஞரே! ஆண்டது போதாதா? மக்கள் காய்ந்தது போதாதா?"
"அம்மாவே! ஆண்டது போதாதா? மக்கள் அலைந்தது போதாதா?"
இவர்களொடு வால் பிடித்து வளர்ந்து விட்டு, இவர்கள் தயவால் ஒரு வளர்ச்சியைப் பெற்ற பின்னர், இன்று ஆலவட்டம் ஆடும் உதிரிக் கட்சிகளுக்கு இருக்கும் வெட்கம், மானம் பற்றி யாரும் சொல்லித் தரத் தேவையில்லை.
இந்த அடிவருடிகளை மிதியடியாக்குங்கள்!
ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு நல்லவராவது இருப்பர், வேட்பாளராக!கூடியமட்டில், கட்சி வித்தியாசம் பார்க்காமல் அந்த நல்லவருக்கு ஓட்டுப் போடுங்கள்!
என்னடா! கடைசியில் இப்படி சொல்லுகிறானே என்று வியக்காதீர்கள்!நிச்சயமாக, அந்த நல்லவர் இவ்விரு கழகங்களிலும் 'பொதுவாக' இருக்க அதிகம் வாய்ப்பில்லை என்ற துணிவில் தான் அப்படிச் சொல்லுகிறேன்!
தமிழக மக்களுக்கு ஒரு வேண்டுகோள்!
வாளெடுத்தவனுக்கு வாளாலேதான் மரணம்!
அது போல,அரிசியால் ஆட்சிக்கு வந்தவர்கள்,
அதே அரிசியால் இந்தத் தேர்தலில், வீழ்வது உறுதி!
வீழ்வது இவ்விரு கழகக் கூட்டணிகளாக இருக்கட்டும்!
வெல்வது தமிழக மக்களாக இருக்கட்டும்!
நல்ல பதிவு.
////1990ல் ஜெயலலிதாவை சட்டமன்றத்தில் புடவையை துரைமுருகன் உருவியதாக ஒரு செய்தி வந்தது//
இது ஒரு திட்டமிட்ட நாடகம் என்பதை 90களில் ஜெ. வுக்கு பாதுகாப்பாய் இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் மற்றும் திருநாவுக்கரசர் போன்றவர்களால் உறுதி செய்யப்பட்டுவிட்டது.
இந்த சம்பவம் நடந்த உடன் பேட்டியில் தன் சேலையைப்பிடித்து இழுத்தார்கள் என்றும், அதிர்ச்சில் மயக்கமாகி விட்டேன் என்றும் சொன்னார். மறுநாள் துரைமுருகன் தான் இழுத்தார் என்றார்.
ஜெ என்றாலே பொய் என்றுதானே அர்த்தம்.
கண்ணன்
இதை விட கொடுமை குறித்து இன்றைக்கு செய்தி வந்துள்ளது. எம்.ஜி.ஆரின் அண்ணன் மகள் லீலாவதி (இவர் எம்.ஜி.ஆருக்கு கிட்னி தானம் செய்துள்ளார்) ஆண்டிப்பட்டிலில் வேட்பு மனுதாக்கல் செய்வதற்காக புறப்பட்டுச் சென்றபோது, வழியில் அவரை கடத்திச் சென்று நான்கு ஆட்கள் அடைத்து வைத்து சித்திரவதைப் படுத்தியுள்ளனர். எம்.ஜி.ஆரின் உண்மையான வாரிசுக்கே இந்த நிலைமை என்றால்? தமிழகம் தாங்குமா இவரது ஆட்சியை!
1989 மார்ச் 25ல் தன் புடவையை துரைமுருகன் உருவினார் என்றார் அம்மையார்.... அதையாவது நம்பலாம்....
80 வயது சென்னா ரெட்டி தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் என்றாரே.... அதைத்தான் கொஞ்சமும் ஜீரணிக்க முடியவில்லை....
பாக்காம எதயுமே நம்ப முடியாது...
எங்க வீட்டு பக்கம் பொட்டி கட வச்சி இருக்க ஒரு கிழவன் சொன்னார்..
கருணாநிதி ஒரு 18 வயசு பொண்ன கல்யாணம் பண்னிக்கிட்டாரம்..அவருக்கு இளமை திரும்ப...
அத்த நான் நம்பலியே !!!!
Ravi:
What you are telling is a third party account of what might have happenned in MK's life. But what we are talking is a ballant lie that JJ had told to mislead the public.
Cheers
D The D
சமீபத்திய தகவல்,
ஜெ 7 பேரிடம் ஆசி வாங்கினாராம்...காலில் விழுந்ததாகவும் கேள்வி..
// சமீபத்திய தகவல்,
ஜெ 7 பேரிடம் ஆசி வாங்கினாராம்...காலில் விழுந்ததாகவும் கேள்வி..//
ஏப்ரல் 1 நெருங்குகிறதே!
ஆமாம்,
அதோடு, முட்டாள்கள் தினப்பதிவு கோவியாரிடம் வரும் நாளான ஏப்ரல் 14 ம் தான்
///
RATHNESH said...
ஏப்ரல் 1 நெருங்குகிறதே!.
///
படித்து விட்டு என்ன சார் "மொழி பாஸ்கர்" மாதிரி ஆயிட்டீங்கன்னு பின்னோட்டம் இட யோசிச்சபடி தேதியைபார்த்தா..ஹி..ஹி...ஹி..ஹி (வழிசல் தான்)
// கீழை ராஸா said...
படித்து விட்டு என்ன சார் "மொழி பாஸ்கர்" மாதிரி ஆயிட்டீங்கன்னு பின்னோட்டம் இட யோசிச்சபடி தேதியைபார்த்தா..ஹி..ஹி...ஹி..ஹி (வழிசல் தான்)
//
நல்ல ஜோக்,
உண்மையிலேயே அந்த படத்தின் அந்த காட்சிகளை நினைத்துப்பார்த்தேன்
கருத்துரையிடுக