பின்பற்றுபவர்கள்

26 ஏப்ரல், 2006

தேர்தல் முடிவு 2:

மே 10. கடந்த மே 8ல் நடந்த தமிழக சட்ட சபை தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றிருந்த போதிலும், முக்கிய கட்சியான திமுக விற்கு 102 இடங்களே கிடைத்துள்ளன. அதன் தலைவர் திரு மு.கருணாநிதி திமுக ஆட்சி அமைக்க அதன் கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதாக தெரிகிறது. இந்த வெற்றி பற்றி திரு கருணாநிதி, இது தான் முன்னமே எதிர்பார்த தென்றும், ஜெயலலிதாவை விரட்டுவதில் தமிழ்மக்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

மே 11. திமுகவிற்கு ஆதரவு தெரிவிக்காமல் பாமக தொடர்ந்து மவுனம் சாதிக்கிறது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய பேச்சாளரான திரு இளங்கோவன், காங்ரஸ் தமிழக அமைச்சரவையில் பங்கெடுக்க முயற்சிக்க வேண்டும் என்று சோனிய காந்திக்கு பேக்ஸ் அனுப்பியுள்ளார். அதிமுக தலைமை அலுவலகத்தில் காணப்படும் ஒரு சில தொண்டர்கள் கடும் சோகத்துடன் காணப்படுகிறார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது.

திரு வைகோ தனது பேட்டியின் போது, கருணாநிதி, 2ரூபாய்க்கு அரிசியும், இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டியும் தருவதாக ஏழை எளிய மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் தன்னை பொடாவில் அடைத்த ஜெயலலிதாவை தான் மண்ணித்தாலும், ஊழல் பெருச்சாளி ஜெயலலிதாவை மக்கள் மண்ணிக்கவில்லை என்று இப்பொழுது உணர்ந்து கொண்டதாகவும், அதனால் தான் தனது கட்சிக்கு சிறு பின்னடைவு ஏற்பட்டதாகவும் தெரிவித்த அவர், சென்ற சட்டமன்ற தேர்தலைக் காட்டிலும் மதிமுக ஒரு லெட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வளர்ந்திருப்பதையே இந்த தேர்தல் காட்டுவதால் இது தனது கட்சியின் வெற்றியாக கருதுவதாகவும் தெரிவித்தார்.

மே. 12 திமுக ஆட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் தெரிவித்திருக்கும் நிலையில், கருணாநிதி இன்று தேர்ந்தெடுக்கப் பட்ட 102 திமுக சட்டசபை உறுப்பினர்களுடன் , கம்யூனிஸ்ட் கட்சி சட்டசபை உறுப்பினர்களுடன் சென்று ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுனரை கோருகிறார்.

மே. 13 தங்கள் கோரிக்கையான கூட்டணி ஆட்சியை திமுக நிராகரித்தால், திமுகவிற்கு காங்ரஸ் கட்சியும், பாமகவும் வெளியில் இருந்து ஆதரவு தெரிவிப்பதாகவும் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கப் போவதாகவும் முன்னதாக தெரிவித்தன. இதைப் பற்றி கருத்து தெரிவிக்க மறுத்த கருணாநிதி 5 வது முறையாக இன்று முதல்வரானார்.

மே 14. ஹைத்ராபாத்தை நோக்கி, போயாஸ் தோட்டத்திலிருந்து 20 கன்டய்னர் லாரிகளில் பொருள்கள் ஏற்றப்பட்டு சென்றதாக தெரிகிறது. மேலும் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா ஒரு மாத காலம் தனது திராட்சை தோட்டத்தில் ஓய்வு எடுத்த பின்பே தமிழ்னாட்டுக்கு திரும்ப போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் முடிவு 3: தொடரும்...

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

/////ஹைத்ராபாத்தை நோக்கி, போயாஸ் தோட்டத்திலிருந்து 20 கன்டய்னர் லாரிகளில் பொருள்கள் ஏற்றப்பட்டு சென்றதாக தெரிகிறது. மேலும் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா ஒரு மாத காலம் தனது திராட்சை தோட்டத்தில் ஓய்வு எடுத்த பின்பே தமிழ்னாட்டுக்கு திரும்ப போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.////

நீங்கள் ஒரு தீர்க்கதரிசி என மே 13ஆம் தேதி தமிழக மக்கள் உணரத்தான் போகிறார்கள்.....

பெயரில்லா சொன்னது…

எங்க தி மு க ஜெயிக்கறது. கலைஞர் வாய வச்சுட்டு சும்மா இருக்க மாட்டிகாரே. நேத்து பாருங்க

மிருக சாதிக்குள் சன்டை வந்தா நான் என்ன செய்ய முடியும்னு கேட்டிருக்கிறார்.

இவர் குறிப்பிட்ட ஜாதிக்காரவுக ஒண்ணு சேர்ந்தா மண்ணுதான். தெககத்தி சைடுல 1 கூட தேராது.

இவரே இன்னொரு மிட் நைட் மசாலவுக்கு ஏற்பாடு பண்ணிருவாரு போல.

கோவி.கண்ணன் சொன்னது…

//இவரே இன்னொரு மிட் நைட் மசாலவுக்கு ஏற்பாடு பண்ணிருவாரு போல. //

உங்க பின்னூட்டம் சிரிப்பை வரவளைத்தது. கருணாநிதியின் நடு இரவு கைதை தானே குறிப்பிடுகிறீர்கள்.

சாதிபற்று உள்ளவர்கள் மட்டுமா ஓட்டுபோடுகிறார்கள். முக துப்பியதை வைகோ அவுலாக்கி மெல்வார் அவளவுதான் நடக்கும், பெரிதாக பாதிப்பு இல்லை, சாதிப் பற்று உள்ளவர்கள் யார் சொல்லியும் கேட்கப் போவதில்லை, அவர்கள் வாக்கு அவர்கள் முடிவு செய்பவர்களுக்கே.

TBCD சொன்னது…

மீண்டும் அருள் வாக்கு அண்ணாச்சி..

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்