பின்பற்றுபவர்கள்

16 அக்டோபர், 2012

மின்சாரம் இல்லைன்னா ?

இப்போதைக்கு ஏதோ டீசல் பெட்ரோல் வைத்து ஜெனரேட்டரைப் போட்டு மின்சாரம் இல்லாமல் செய்யும் வேலைகளை சமாளிக்கிறார்கள், எரிபொருளே இல்லை என்றால் மின்சார உற்பத்திக்கு வாய்ப்பே இல்லாத நிலையில்.

  • மின் தூக்கி இயங்காத நிலையில் ஒரு பயலும் அடுக்குமாடி வீட்டை வாங்க முன்வரமாட்டான்
  • மின்கலம் உற்பத்தித் திறன் ஆகியவை மின்சாரம் சார்ந்தே இருப்பதால் போதிய அளவுக்கு மின்கல உற்பத்தி செய்ய முடியாத நிலையில் அவற்றின் விலை உயர்வுகள் தவிர்க்க முடியாததாக இருக்கும்.
  • காற்றாலை மற்றும் அனுமின்சாரம் ஆகியவை அடிப்படை வசதிகளுக்கே மட்டுமே வாய்ப்பு என்ற நிலையில் மிஸ்டு காலுக்கும் கட்டணம் என்றாகி  மிஸ்டு கால் கொடுப்பதற்கு மிகவும் அதிகமாக செலவு செய்ய வேண்டி இருக்கும்,
  • பழையபடிக்கு வேப்ப மரக் காற்று தான் சிறந்த ஏசியாக இருக்கும்
  • சைக்கிள் விற்பனை படுஜோராக இருக்கும்
  • மாவாட்டும் வேலைக்கு நல்ல ஊதியம் கிடைக்கும்
  • மாட்டு வண்டி ஓட்டத் தெரிந்தவர்கள் வேலைக்கு மாடு குளிப்பாட்டும் தகுதி இருந்தால் போதும் என்று சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்
  • மாடுமேய்க்கும் வேலையையோ, பன்றி மேய்க்கும் வேலையையோ யாரும் விமர்சனம் செய்யமாட்டார்கள்
  • குதிரை வண்டிகளை, ரிக்சாக்களை பழையபடி சாலையில் பார்க்கலாம்.
  • சாலைகள் எதுவுமே புதிதாகப் போடாமல், செப்பனிடாமல் கிடக்கும்
  • நான்கு குதிரை பூட்டிய வண்டிக்கு சொந்தக்காரர் பணக்காரன்
  • மின்சாரமே இல்லை என்றால் இணையமோ, இணைய இணைப்போ இருக்காது, பழையபடிக்கு கையெழுத்து படிவங்களாக செய்திகளுக்கு பகிர்ந்து கொள்ளப்படும்
  • மின்சாரம் சார்ந்து இயங்கும் பொறியல் துறையே முடங்கிவிட பட்டப்படிப்புகளைப் படிக்க யாருமே முன்வரமாட்டார்கள்
  • விவாசயம் சார்ந்த தொழில்கள் மட்டுமே தங்கும்
  • மனித வளத்தை சார்ந்திருக்கும் நாடுகள் பொருளாதார இழப்பை சந்திக்கும்
  • புனிதப் பயணம் செய்பவர்களுக்கு ஒட்டகம், குதிரை மாட்டுவண்டிகள் தான் ஒரே பயண நண்பன், இரண்டு ஆண்டுகள் கழித்து (போக வர) புனிதபயணத்தில் இருந்து திரும்பியதாக வந்து சொல்வார்கள்.
  • வீட்டுக்கு வீடு கிணறு தோண்டுவார்கள்
  • இயற்கை வளம் மிக்க நாடுகளை பலமிக்க நாடுகள் ஆக்கிரமிக்கத் துவங்குவார்கள்
  • சினிமா சார்ந்த தொழில்கள், தொலைகாட்சி ஊடகங்கள் முற்றிலுமாக செயல்படாது
  • பொழுது போக்குக்கு பழையபடி தெருகூத்து, பொம்மலாட்டம் களைகட்டத் துவங்கும்
  • பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் அடிப்படைக் கல்வி தவிர்த்து வேறு படிக்க முன்வரமாட்டார்கள்
  • இல்லத்து ஆண்களின் துணித்துவைக்கும் வேலை கிண்டல் செய்யப்படாது
  • பலசரக்கு கடைகள், உணவு விடுதிகள் மட்டுமே நகரங்களில் வேலை வாய்ப்புள்ள நிறுவனங்களாக செயல்படும்
  • தண்ணீர் வரத்தும், ஓட்டமும் இல்லாத இடங்கள் பாலைகளாக மாறும்
  • வெள்ளைக்காரனையும், வெள்ளைத் தோலையும் பொறாமை கொள்ளத் தக்கது என்று எவரும் நினைக்கமாட்டார்கள்
  • வாழும் வாய்பிற்கு இனம் சார்ந்த குழுக்களே ஏற்பாடு செய்யும் என்ற நிலையில் இனம் சார்ந்து ஒன்று திரட்டல்கள் நிகழும்,
  • கோவில் மணி அடிக்கும் வேலைகள் ஆள் எடுப்பார்கள், கடுப்பேற்றும் மத வழிபாட்டு முழக்கங்களுக்கு ஸ்பீக்கர் இருக்காது
  • நெய்விளக்கும், ஆமணக்கு விளக்கும் தான் ஒளி உற்பத்திக்காக (பவர் சோர்ஸாக) இருக்கும் 
  • மின்சாரத்தை நம்பிய பெரு உற்பத்தி முற்றிலும் நின்று போக பட்டினிச் சாவால் மக்கள் தொகை மூன்றில் ஒரு பங்காக குறைந்து போகும்
  • பெட்ரோலுக்கே வழியில்லாத பொழுது ஏரோபிளேனுக்கு ஈத்தர் கிடைக்காது, பெரும் பாய்மரப் படகில் தான் நாடுவிட்டு நாடு பயணம்
  • நவீன மருத்துவ வசதிகள் அனைத்தையும் இழந்துவிடுவோம்
  • முடிந்த அளவுக்கு விமானப் பயணம் மற்றும் வாகனங்களை அனுசக்தி மூலம் இயக்க முயற்சிப்பார்கள், இதன் மூலம் அனுகதிர் வீச்சு, மற்றும் விபத்துகளும் மிகுதியாகும்.

நாம பகட்டு, வசதி என்று நம்பிக் கொண்டுருப்பவை நமது பொருளீட்டல் மற்றும் கல்வி சார்ந்தது மட்டுமே இல்லை, அவை எல்லாம் அறிவியல் கண்டுபிடிப்பான மின்சாரம் போடும் பிச்சையும் கூட. பெட்ரோலையும் மின்சாரத்தையும் நம்பி அம்மி கொத்துவது முதல் கைத்தரி நெசவு உள்ளிட்ட நேரடியாக செய்யும் தொழில்கள் அனைத்தையும் விட்டுவிட்டோம், நாளை மின்சார உற்பத்திக்கு வாய்பே இல்லாத நிலையில் பழைய வாழ்க்கைக்கு நம்மால் திரும்பிச் செல்லும் பொழுது கையறு நிலையில் தான் நாம் இருப்போம். தமிழ் நாட்டினர் தவிர்த்து வேறு எவரும் மின்சாரம் இல்லாமல் வாழப் பழகி இருக்கமாட்டார்கள் என்ற நிலையில் தமிழினம் என்று வீழாது என்று இறுமாப்பு கொள்வோம். :)

எல்லாவற்றையும் கடவுள் படைச்சதுன்னு சொல்லும் முட்டாள்கள் உண்டு, நமக்கு தெரிந்து மின்சாரம் கடவுள் கொடுத்த கொடையன்று, மனித அறிவின் படிப்படியான வளர்ச்சியினால் கிடைத்த நன்மையே, மின்சாரத்தை கடவுள் படைக்காவிட்டாலும் அதைப் படைக்கும் ஆற்றல் உள்ள மூளையைக் கடவுள் தான் கொடுத்தார் என்று எடக்காகக் கூறினால் அதுக்கு முன்பு வாழ்ந்தவர்களை ஏன் இருட்டுக்குள்ளே கடவுள் இருக்கவிட்டார் நாம மட்டும் என்ன ஸ்பெசல் ?

கடவுள் கத்தியையும், துப்பாக்கியையும் வெடிகுண்டுகளையும், அனுகுண்டுகளையும் படைக்காத பொழுது மின்சாரத்தைப் படைத்ததாக மட்டும் பொறுப்பேற்றலாமா ?

9 கருத்துகள்:

வவ்வால் சொன்னது…

கோவி,

//தமிழ் நாட்டினர் தவிர்த்து வேறு எவரும் மின்சாரம் இல்லாமல் வாழப் பழகி இருக்கமாட்டார்கள் என்ற நிலையில் தமிழினம் என்று வீழாது என்று இறுமாப்பு கொள்வோம். :)//

பாயிண்டு...பாயிண்டு!

மின்சாரமே இல்லாத சூழல் வராது.

குறைவாக மின்சாரம் பயன்ப்படுத்தும் நிலை வரலாம்.

சூரிய சக்தி கார்கள்,பைக்குகள் வந்துவிடும்.

பறப்பதற்கு அனைவரும் ராக்கெட் கூட பயன்ப்படுதக்கூடும் :-))

mubarak kuwait சொன்னது…

அன்பு நண்பர் கோவிக்கண்ணன் அவர்களே உங்கள் சிந்தனை நல்ல இருக்கு, ஆனால் அப்படி ஒரு நிலைமை வராது, மின்சாரம் எடுக்க மாற்று வழி நிச்சயம் கிடைக்கும்.
எனக்குள் ரொம்ப நாளாக ஒரு சிந்தனை இருக்கு, பெரிய இலைகளுடிய மரங்கள் தென்னை மரம், வாழை மரம் இவை ஒளிச்சேர்க்கையின் மூலம் தான் தனக்கு தேவையான உணவை தாயரிப்பதாக படித்திருக்கிறேன், இந்த ஒளிசெய்ற்கையின் இடத்திலிருந்து மின்சாரம் எடுக்க முடியுமா என்று பல முறை எஒசிது இருக்கிறேன், தாவரையல் படித்தவர்களும் electrical & electronics engineers கூட்டாக சேர்ந்து ஆராய்ச்சி நடத்தினால் சாத்தியமாகலாம், பொதுவாக நமது அரசு இது போன்ற ஆராய்சிகளுக்கு பணம் செல்வளிக்காது, அமெரிக்க ஜப்பான் போன்ற நாடுகள் கண்டுபிடிக்கட்டும் பின்பு அதை வாங்கி கொள்ளலாம் என்று இருக்கும்.
இன்னும் சிலிகான் செல் களில் அந்த அளவுக்கு முழுமையாக மின்சாரம் எடுக்க முடிய வில்லை மாற்று பொருள் கண்டுபிடிக்க வேண்டும் இதற்க்கு நம் அரசு மாணவர்களுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும், நம் நாட்டில் எத்தனையோ பல்கலை கழகங்கள் இருக்கு அங்கும் ஆராய்ச்சி துறை இருக்கு இது வரை எந்த பலகலை கழகமும் உருப்படியாக ஒன்றை கூட கண்டுபிடித்து கொடுத்தது இல்லை, நாம் பயன் படுத்தும் அத்தனை கருவிகளும் வெளிநாட்டின் இறக்கு மதிதான்

suvanappiriyan சொன்னது…

மின்சாரம் கம்மியானால் உடல் உழைப்பு அதிகமாகும். உடல் உழைப்பு அதிகமானால் வியாதிகள் குறையும். என்றெல்லாம் சொல்லி மனதை தேற்றிக் கொள்ள வேண்டியதுதான். :-)

ப.கந்தசாமி சொன்னது…

சோலார் செல்கள் எனப்படுபவை ஏறக்குறைய ஒளிச்சேர்க்கை மாதிரிதான் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றன. அவைகளை மலிவாகத் தயார் செய்தால் ஓரளவிற்கு மின் பற்றாக்குறையை சமாளிக்கலாம்.

Unknown சொன்னது…




/தமிழ் நாட்டினர் தவிர்த்து வேறு எவரும் மின்சாரம் இல்லாமல் வாழப் பழகி இருக்கமாட்டார்கள் என்ற நிலையில் தமிழினம் என்று வீழாது என்று இறுமாப்பு கொள்வோம். :)//

மிகவும் நாகரீகமான நையாண்டி!

Unknown சொன்னது…

வணக்கம் சகோ.

நல்ல சிந்தனைக்குறிய பதிவு,

வெய்யிலின் அருமை நிழலில் தான் தெரியும் என்பதுபோல மின்சாரத்தின் அருமை அது இல்லாதபோதுதான் தெரியும். எல்லாம் அவன் செயல் என வாய்ப்பந்தல் போடுவதில் பயனில்லை.மின்சாரத்திற்கு பதிலாகத்தான் பகலில் சூரியனை கடவுள் படைத்ததாகச் சொல்வர் பலர்,வெறும் வெளிச்சத்திற்கு மட்டுமே பகல் என்ற பயனில்லாத கருத்துக்கள் அடங்கிய புத்தகத்தை பயனுள்ளதாக காட்ட தற்காலத்தில் முயற்சிக்கிறார்கள் என்பதே உண்மை. இன்னும் ஒளியைப் படைத்தான் என்ற வெறுஞ்சொல்லை வைத்துக் கொண்டு,அதுவே மின்சாரம் என்றெல்லாம் கதைக்கப் படுவதை இன்றும் காண்கிறோம்.ஒருவர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டார் என்பதே அற்புதமாகவும்,அறிவுத்தன்மையாகவும்,சாதனையாளர் என்றும்,சிறந்தவர் என்றும் கூறிக் கொள்கின்றனர்.உண்மையில் செயலில் சாதித்தவர்களை{விஞ்ஞானிகள்}மறந்தும் மறைத்தும் விடுகிறார்கள்.சொல்வதைவிட செயலில் காண்பித்தவர்கள் அதனினும் சிறந்தவர்கள் அல்லவா?எனவே வாய்ச்சொல் வீரரான கடவுள் அறிவில் சிறந்தவனா?குறைந்தவனா? சொல்வது யாவருக்கும் எளிதுதானே!அதில் ஒருவன் தான் கடவுளோ????

இனியவன்...

மாதேவி சொன்னது…

உங்கள் துன்பம் புரிகின்றது.

ஜோ/Joe சொன்னது…

இன்னொரு பாயிண்டை உட்டுட்டீங்க...
இதை வச்சு ஒரு பதிவு ஒப்பேத்தலாம் :)

Jayadev Das சொன்னது…

குதிரை, மாடு எல்லாம் அந்த சமயத்தில உசிரோட இருக்குமா ? காத்து வாங்க ஒரு வேப்ப மரத்தையாவது விட்டு வச்சிருப்பாங்களா? கவலையா இருக்கு?!!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்