பின்பற்றுபவர்கள்

5 அக்டோபர், 2012

ஆர்காடு நவாபுகளால் உருவான இந்தியா !


ஆர்காடு நவாப்புகள் யார் ? தமிழகத்தில் இவர்கள் எப்படி கால் ஊன்றினார்கள் என்று தகவல்களைத் தேடிப் பார்க்கும் பொழுது, வரலாற்றில் கொடுங்கோலன் மற்றும் கடைசி காலத்தில் கையால் குரான் எழுதி தன்னை திருந்தியவன் என்று காட்டிக் கொள்ள முயன்றவன் என்றெல்லாம் வருணீக்கப்படும் பேரரசர் ஒவுரங்க சீப் தென்னிந்தியாவில் தனது ஆட்சி அதிகாரத்தை விரிவு படுத்த முயற்சித்தன் விளைவாக கிபி 1692ல் வரிவசூல் செய்ய தென்னிந்தியாவிற்கு அனுப்பட்டவர்களே நவாப்புகள்.  அவ்வாறு முதலாவதாக  தென்னிந்தியாவிற்கு வந்த நவாப் சுல்பிகர் அலி  என்பவர், இவர் விஜய்நகர மற்றும் மராட்டிய அரசுகளை முறியடித்து கிபி 1736ல் மதுரைவரை முகலாய அரசை விரிவுபடுத்தினார் என்கிறது வரலாற்று குறிப்புகள். சுல்பிகர் அலிக்கு  பிறகு பொறுப்பேற்றவர் அலி வாலாஜா, சுல்பிகரின் ஆட்சி காலம் 1732 - 1740 வரையில் 8 ஆண்டுகள் நீடித்து பின்னர் 1749 ஆம் ஆண்டு அலி வாலாஜா பொறுப்பெற்க இடைபட்ட 9 ஆண்டுகள் என்ன நடந்தது என்று தெரியவில்லை

அலி வாலாஜா ஓரளவு நேர்மையான ஆட்சி நடத்தினார் என்றும் அனைத்து மதத்தினரையும் மதித்தார், கிடைத்த வரி வருமானங்களில் இருந்து இந்து கோவில்களுக்கும் மானியம் வழங்கினர் என்றும் சொல்லப்படுகிறது. இவர் 1765ல் மொகலாய பேரரசிற்கு கப்பம் கட்ட மறுத்து தென்னிந்திய பகுதிகளை தனியாக ஆளுவதற்காக இவரது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை நவாப்பு அரசாகவும், சுதந்திரம் பெற்றதாகவும் அறிவித்தார், இவரது ஆட்சி ஆர்காட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டதால் பின்னர் வந்த நவாப்புகள் ஆர்காடு நவாப்புகள் என்று பெயர் பெற்றனர், இவர்களது ஆட்சி கர்நாடகம் கிருஷ்ணா ஆறுவரை உட்பட்ட பகுதிகளாக இருந்தது.  இடையே பிரஞ்சுகாரர்களும் ஆங்கிலேயர்களும் உள்ளே நுழைய இருவருக்கும் மைசூரில் போர் மூண்ட சூழலில் மைசூர் மற்றும் திண்டுகல் பகுதியை விஜய நகர அரசுகளுடன் இணைந்து ஆண்டு வந்த ஹைதர் அலி பிரஞ்சுகாரர்களுக்கு போரில் உதவ, நவாப்புகள் ஆங்கிலேயர்களுக்கு ஆதாரவுடன் செயல்பட்டனர். பின்னர் தமது ஆளுமைகளுக்கு உட்பட்ட சமஸ்தானங்களை கட்டுப்படுத்த ஆங்கிலேய படைகளை நவாப்புகள் பயன்படுத்த அதுவே அவர்களுக்கு ஆப்பாக அமைந்ததாம். இதன் காரணமாக ஆங்கிலேயர்களிடம் தனது ஆளுமைகளை கொஞ்சம் கொஞமாக இழந்ததுடன் வெள்ளைக்காரர்கள் இந்தியாவில் ஆழமாக கால் ஊன்ற காரணமாக இருந்தவர்கள் என்பதுடன் தேச நலனுக்கு எதிராக செயல்பட்டவர்கள் என்ற பெயரை நவாபுகள் பெற்றனராம்.

"இதன் பிறகு பதிமூன்றாவது நவாபாக ஆட்சிக்கு வந்த குலாம் முகம்மது கவுஸ் காண் ( 1825 - 1855 ) தனக்கு பிறகு வாரிசு இல்லாமல் இறந்தார். இதனால் அவரது ஆட்சி ஆங்கிலேய அரசின் கீழ் சென்றது. இதன் பிறகு 1867-ல் குலாம் முகம்மது கவுஸ் கானின் சிறிய தந்தை ஆஸிம் ஜா, பிரித்தானிய மகாராணி விக்டோரியாவிடம் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டார். அதன்படி நவாப் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரி வசூல் செய்யும் உரிமையை ஆங்கிலேயர் பெற்றனர். அதற்கு பகரமாக வரிவசூலில் ஒரு பகுதியை ஓய்வுதியமாக ஆஸிம் ஜா பெற்றார். மேலும் ஆர்காடு இளவரசர் என்றும் அங்கிகரிக்கப்பட்டார். 
இவரது பரம்பரையில் வந்தவர்கள் இன்றும் சென்னை நகரில் ஆர்காடு இளவரசர் என்ற பட்டத்துடன் வாழ்ந்து வருகின்றனர். சுதந்திர இந்தியாவும் இவர்களது பட்டத்தை அங்கீகரித்து, அரச குடும்பத்தினருக்கான ஓய்வுதியத்தை அளித்து வருகின்றது. இவர்களில் நடப்பு கடைசி ஆர்காடு இளவரசரான முகம்மது அப்துல் அலி ஆஸிம் ஜா ஜுலை 1994-ல் பட்டத்துக்கு வந்தார்".

- விக்கிப் பீடியா


******

இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி ஏற்பட்டு இருக்காவிட்டாலும், பல்வேறு நாடுகளில் நடந்தது போல் காலத்தின் கட்டாயம் என்ற அளவில் மன்னர் ஆட்சிகள் ஒழிந்திருக்கும், ஆனால் இந்தியா என்கிற ஒரே நாடாக இருந்திருக்குமா ? காங்கிரசு அரசு போன்ற ஒற்றைத் தலைமைக்கு மொத்த மாநிலங்களும் கட்டுப்பட்டு இருக்குமா என்பது ஐயமே.

இந்தியா என்கிற நாடு உருவாக ஆங்கிலேயர்களும் அவர்களுடன் கைகோர்த்த  நவாப்புகளுமே காரணம், மொகலாய அரசர்கள் இந்தியாவெங்கும் ஆட்சியை விரிவுபடுத்தினார்கள் என்பதைவிட இந்தியாவின் பகுதிகளில் வரி வசூல் செய்யும் பொறுப்புகளை ஒப்படைத்திருந்தனர் என்பதும் பிறகு அதுவே அவர்களது ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்ககாரணமாக அமைந்ததும் வரலாறாக ஆகி இருக்கிறது.

வியாபாரம், வேட்டை என்ற அடிப்படையில் வெள்ளைக்காரர்கள் கிடைத்த வரை சுருட்டிக் கொண்டு திரும்பச் சென்றிருந்தாலும் மொகலாய மன்னர்கள் அவ்வாறு திரும்பிச் செல்லவில்லை, முகலாயர்கள் இடம் பெயர்ந்து வந்தவர்கள் என்ற அடைப்படையில் அவர்களுக்கு திரும்பிச் செல்ல வாய்ப்பும் இருக்கவில்லை என்பது உண்மை, 

ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்தவர்கள் என்று போற்றபடுகிறார்கள், மைசூரில் இன்றும் கொண்டாடப்படுகிறார்கள், நாவாப்புகளின் வாரிசுகளை  இளவரசர்கள் என்ற அங்கீகாரம் மட்டுமே அளித்து அவர்களுக்கு மானியம் வழங்குகிறது இந்திய அரசு, சொல்லப் போனால் மொகலாய ஆட்சியை துடைத்தொழித்த வெள்ளைக்காரர்கள் காலூன்ற காரணமாக இருந்து, இந்தியா என்ற நாடு உருவாக காரணமாக இருந்தவர்கள் நவாப்புகள், இதன்காரணமாக தமது ஆட்சியையும் இழந்து இவர்கள் இந்துக்களால் போற்றப்பட வேண்டியவர்கள், தமிழகத்தின் அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்தியவர்கள் என்ற முறையில் நவாப்புகள் தமிழக மக்களால் நன்றியுடன் நினைத்துப் பார்க்கத் தக்கவர்கள்.

அமீர் மஹால், சென்னை

இணைப்புகள் : (விக்கி)

39 கருத்துகள்:

வவ்வால் சொன்னது…

கோவி,

விக்கி பீடியா வரலாறு தவறானது, ஏற்கனவே ஆர்காட் நவாப்களைப்பற்றி ,யூசப்கான் பற்றிய பதிவில் கொஞ்சம் சொல்லி இருக்கேன்.

//பேரரசர் ஒவுரங்க சீப் தென்னிந்தியாவில் தனது ஆட்சி அதிகாரத்தை விரிவு படுத்த முயற்சித்தன் விளைவாக கிபி 1692ல் வரிவசூல் செய்ய தென்னிந்தியாவிற்கு அனுப்பட்டவர்களே நவாப்புகள். அவ்வாறு முதலாவதாக தென்னிந்தியாவிற்கு வந்த நவாப் சுல்பிகர் அலி என்பவர்,//
அவுரன்ங்க சீப் ஹைதராபாத்திற்கு நிசாம்களை நியமித்தார்,அவர்கள் தென்னிந்தியா முழுவதும் பார்த்து கொண்டார்கள்.

அவுரங்க சீப் 1707 இல் இறந்த பின் எல்லா நிசாம்,சுல்தான்களும் தன்னாட்சி பெற்றவர்களாக அறிவித்து கொண்டார்கள்.

1717 இல் ஃபரூக் சிய்யார் ,வட இந்தியாவில் வெள்ளைக்காரனுக்கு அனைத்து வியாபார ,வரி உரிமை என எழுதி கொடுக்கவே, அதன் பின்னர், பெங்கால், ஹைதராபாத் என கிளம்பினார்கள்,அப்புரம் அங்கே இருக்கும் நிசாம்களுடனும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டார்கள், ஆனால் அப்படிப்போட்ட ஒப்பந்தத்தினை அதன் செயல்ப்படுத்த மீண்டும் நிசாம் கீழே இருக்கும் நவாப்புகளுக்கு பணம் கொடுத்து ஒரு ஒப்பந்தம் என கதை போகிறது.

ஹைதராபாத்திற்கு நிசாம் ஆக ஜாபர் ஜங்க் இருந்தார், அவர் தான் ஆர்காட்டுக்கு நவாப்களை நியமித்தார்.


மேலும் விரிவாக இப்பொழுது எழுதும் திரும்பிப்பார் தொடரில் சொல்லலாம்னு இருக்கிறேன்.

ஆர்காட் நவாப் முகமது அலி வெள்ளைக்காரர்களிடம் வாங்கிய கடனுக்கு (சூதாடவும்,குடிக்கவும் வாங்கியது)பதிலாக வரி வசூலிக்கும் உரிமையை கொடுத்துவிட்டார்,அப்படித்தான் ,வெள்ளையர் கையில் ஆட்சி போனது.

ஹைதர் அலி வரிவசூலிக்கும் தணாக்காரர் என்றப்பதவியில் தான் திண்டுக்கல்லில் இருந்தார், மைசூர் உடையார் உடையார் ஆட்சியின் போதே சிறுவனை வாரிசாக விட்டுவிட்டு இறந்துவிடவே ,திவான் நஞ்சுண்டா ,ஆட்சியை கைப்பற்றிக்கொண்டு உடையார் குடும்பத்தினரை வீட்டுக்காவலில் வைத்துவிட்டார்.

நஞ்சுண்டாவை வீழ்த்தி ஹைதர் அலி மைசூர் ராஜாவாக அறிவித்துக்கொண்டார்.

ஆர்காட் நவாப்புக்கு கீழ் மைசூர் என்பதால் வெள்ளைக்காரர்கள் ,மைசூரை இணைக்க ,ஹைதருடன் சண்டை.

அதற்கு முன்னர் ஹைதராபாத் நிசாம் ,ஆர்காட்டுக்கு அதிபர், ஆனால் ஆர்காட் நவாப் ,நிசாமுக்கு அடிப்பணிய மாட்டேன் என வெள்ளையருடன் கூட்டணி வைத்து ,நிசாமுடன் சண்டை.

வெள்ளைக்காரர்கள், ஆர்காட்டு நவாப்பு உதவுவது போல உதவி மற்ற ஆட்சியாளர்களை வீழ்த்திவிட்டு தமிழகம் முழுவதையும் பிடித்துக்கொண்டார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

வவ்வால், தகவல் களஞ்சியமாக இருக்கிறீர்கள். தகவல்களுக்கு நன்றி

naren சொன்னது…

ஆற்காடு நவாபுகள், ஷியா முஸ்லிம்கள் என நினைக்கிறேன் (அப்படியென்றால் அவர்கள் முஸ்லிம்கள் கிடையாதா?). கொஹரம் பண்டிகைக்கு அவர்கள் முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.

மன்னர் மான்யங்களும், அரசு அங்கீகார அளிக்கபட்ட பட்டங்களும், 1971 ஆண்டு இந்திரா காந்தியால் நீக்கப்பட்டது. அப்போது ஆர்காடு நவாப்புகளுக்கு அளிக்கப்பட்ட மான்யங்களும் நீக்கபட்டிருக்க வேண்டும்.

”ஆர்காடு நவாப்பு” என்ற பட்டம் ஆங்கிலேயர்களால் தனி சட்டமாக அளிக்கப்பட்டதால், இந்தியா அரசாங்கம் பட்டங்களை ஒழிக்கும்போது அந்த சட்டத்தை நீக்க மறந்துவிட்டார்கள். அதனால், அரசுபூர்வமாக ஆர்காடு நவாப் என்று அழைக்கப்படுகிறார்கள். அதனால் இந்தியாவில் அரசு பட்டம் உள்ள ஒரே பதவி ஆர்காடு நவாப் என்ற நிலைமை இருக்கிறது.

வவ்வால் சொன்னது…

கோவி,

ஏதோ கொஞ்சம் நமக்கு தெரிந்ததை சொல்லி வைப்பது தான்.

வரலாற்றினை எத்தனை முறை படித்தாலும் ஆர்வமாக இருக்கும், காரணம் கொஞ்ச காலத்திலே மறந்துவிடுவது தான் :-))

மேலும் பல நூல்களும் பல வகையான நோக்கத்தினை காட்டும்.

வெள்ளைக்காரனிடம் ஹைதர் அலி, திப்பு சுல்தான் படைகள் தோற்க முக்கியமான ஒரு காரணம், அவர்கள் நேரடியான ஆட்சி உரிமை பெற்றவர்கள் அல்ல, குறுக்கு வழியில் வந்தவர்கள்,எனவே பெரும்பான்மை மக்கள் ஆதரவு இல்லை.

உடையார் வம்சத்தின் ராணி (அஞ்சம்மாவோ,நஞ்சம்மாவோ) நேரடியாக பிரஞ்ச், பிரிடீஷ் க்கு கடிதம் போட்டு ஹைதர் அலியை விரட்டினால் ,உங்களுக்கு வரி செலுத்தி ,உங்கள் ஆட்சியை ஏற்றுக்கொள்கிறேன் என ஒப்பந்தம் போட்டாச்சு, மேலும், ஆர்காட் நவாப்பும் ஹைதர் அலியை ஒரு ஆட்சியாளர் என ஒப்புக்கொள்ளாமல் வெள்ளைக்காரர்களை படை எடுக்கலாம் என சொல்லியது.

ஹைதர் அலி/திப்பு மலபார் இந்து மன்னர் மீது படை எடுத்தது, மேலும் இந்து சமஸ்தானங்களை கோபப்ப்டுத்தியது.

ஹைதர் அலி பலரும் சொல்வது போல வெள்ளைக்காரர்களை எதிர்க்க ஆசை எல்லாம் படவில்லை, என்னை ஆட்சியாளராக அங்கிகரிக்கவும்னு கடிதம் எழுதிக்கொடுத்த கதை எல்லாம் இருக்கு.

கிழக்கிந்திய கம்பெனி ஹைதர் அலியை அதிகாரப்பூர்வ ஆட்சியாளராக அங்கிகரிக்காததால் தான் சண்டையே.

வெள்ளைக்காரன் ஹைதர் அலியை அங்கிகரித்து இருந்தால் ,இன்னேரம் அவங்க பரம்பரை தான் ,விஜய் மல்லையாவுகு பதிலா பீர் தயாரித்து இருக்கும் :-))

ஹைதர் அலி கதையில் பாக்தாத் திருடனில் வருவது போல கதை இருக்கு.
----------

நரேன்,

நவாப் என்ற பட்டம் வெள்ளைக்காரன் கொடுத்தது அல்ல, முகலாய வழக்கம்.

ஜங்,நிசாம்,நவாப், ஜமீந்தார், சுபேதார், மஜும்தார், ஜாஹிதார்,தாஷில்தார் என ,நில வரி, ஆட்சி எனப்பதிகள் உருவாக்கி வைத்திருந்தார்கள்,அது அப்படியே வெள்ளைக்காரன் காலத்திலும் தொடர்ந்தது.

நவாப், ஜமிந்தார் என்பதை எல்லாம் அதிகாரப்பூர்வ பெயர் இல்லை, ஒரு வழக்கமாக பயன்ப்படுத்தி வருகிறார்கள்.

நவாப்புக்கு எல்லாம் மாநியம் கொடுக்கலைனு நினைக்கிறேன் ஏன் எனில் அவர்களை மன்னர்களாக கருதவில்லை.ஆனாலும் மன்னர் என அமீர் என்று சொல்லிக்கொள்வது உண்டு
--------

இப்போ இருக்கிற ஆர்காட் நவாப் ,ஒரிஜினல் இல்லை, இவர் நவாப் கிடையாதுனு வழக்கு நடக்கிறது.இப்போ இருக்கிற நவாப் ஒரிஜினல் நவாப்பின் தம்பியின் மருமகனின் வழி வந்தவங்க,உள்ளார ஏகப்பட்ட வாரிசு குழப்பங்கள் இருக்கு.

suvanappiriyan சொன்னது…

சில புதிய தகவல்களை தெரிந்து கொண்டேன்.

அஜீம்பாஷா சொன்னது…

அருமையான பல புதிய(எனக்கு)தகவல்களை பகிர்ந்து கொண்ட சகோ.வவ்வால் அவர்களுக்கும்,இதை பதிவாக இட்ட சகோ.கண்ணன் அவர்களுக்கும் நன்றி.

குட்டிபிசாசு சொன்னது…

நேப்போலியனுக்கும் ஹைதருக்கும் இடையே உடன்படிக்கை உண்டு. நேப்போலியன் எகிப்தை கைப்பற்ற காரணம் அதன்வழியாக கடல் மூலம் இந்தியா வருவதாக ஒரு திட்டம் இருந்ததாம். இதுகூட ஆங்கிலேயர்கள் ஹைதர் மீது வெறுப்பு கொள்ள ஒரு காரணமாக இருக்கலாம். ஆங்கிலேயர்களை எதிர்த்த எல்லா மன்னர்களுக்கும் எதோ ஒரு வகையில் டச்சு, பிரெஞ்சு, போர்ச்சுகிஸியர்களின் தொடர்பு இருந்தது. கட்டபொம்முவுக்குக் கூட டச்சுகளின் தொடர்பு உண்டு.

ஹைதர் அலி மலபார் மீது படையெடுத்தது, மலபார் மன்னர்கள் (பழசிராஜா கூட இவர்களில் ஒருவர்)ஆங்கிலேயர் பக்கம் சேர காரணமாயிருந்தது எனலாம். பிறகு மலபார் மன்னர்களுக்கும் ஆங்கிலேயருக்குமே சண்டை மூண்டது.

சார்வாகன் சொன்னது…

வணக்கம் சகோ,

இந்தியா என்பது மொகலாயர்களலேயே சமீப சில நூற்றாண்டுகளாக ஒரே நாடாக ஆளப்பட்டதும், அப்படியே அது பிரிட்டிசாரால் தொடரப்பட்டது.

மொகலாயர்,வெள்ளையைரை எதிர்த்த அரசர்கள் அனைவருக்குமே தன் நாட்டை [அதாவது ஆட்சிக்கு உட்பட்ட சிறு நிலப் பரப்பை]இருவரும் ஆக்கிரமிக்கிறார் என்ற எண்ணம் தாண்டி இந்திய விடுதலை என்ற எண்ணம் இருக்க வாய்ப்பில்லை. அத்னால் ஒன்றுபடவில்லை என்பதே உண்மை.

இந்த அரசர்களில் பெரும்பான்மைமியோர் சாதி அடக்குமுறை கொண்டவர்களாகவும், மக்களின் மீது வரிச்சுமை விதிப்பவர்களாகவுமே இருந்ததால் மக்கள் "எவன் ஆண்டால் எனக்கென்ன என் கஷ்டம் மாறப்போவது இல்லை" என்வே இருந்தனர்.

பிரிட்டிஷ்,ஃப்ரென்சு,டச்சு,போர்த்துக்கிசிய ஆகிரமிப்பு அரசியலில் பிரிட்டனுடன் ஒத்துழைத்த அரசர் குழுவிற்கு சில சலுகைகள் கிடைத்தன. ஒருவேளை வேறு நாடு வெற்றி பெற்று இருந்தால் வரலாறு வேறு மாதிரி ஆகி இருக்கும்.

வரலாற்றில் தே பக்தியாளன், தேசத்துரோகி என்றெல்லாம் கிடையாது. அவனுடைய அர்சாட்சியை தக்க வைக்க ஒவ்வொரு அரசனும் முயன்றான். அதற்கு சிலருக்கு கூட்டணி பலன் அளித்தது,சிலருக்கு பலன் அளிக்கவில்லை.

இபோது பெரும்பான்மை மக்க்ள் எதையும் கண்டு கொள்ளாமல் பிழைப்புவாதம்[ அவர்களை சொல்லி குற்றமில்லை பாவம்!] செய்கிறார்களோ அதே போலவே அரசர்கள்,மொகலாயர்கள்,வெள்ளையர்கள் கால்த்திலும் இருந்தனர் என்பது ஊகிப்பது எளிதே.
************

சகோ வவ்வால் வழக்கம் போல் கலக்கல் தகவல்கள்.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

நன்றி



? சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
? சொன்னது…

@வவ்வால்
1672-ல் ஹைதாராத் நிஜாம் அவுரங்கசேபால் நியமிக்கப்பட்டார். 1689-ல் ஜூல்ஃபிகர் அலி கான் மராத்தியர்களை அடக்க அனுப்பட்டார், ஆனால் மராத்தியர்கள் ஜூல்ஃபிகர்க்கு ஆப்பு வைத்துவிட்டார்கள். இருந்தாலும் அவுரங்கசேப் அவரை, தக்காணத்தின் சுபேதாரான ஹைதாராத் நிசாமிற்கு கீழ்பட்டவராக, கர்நாடக நவாப்பாக நியமித்தார். பிறகு ஒருவழியாக படைதிரட்டி 1697ல் மராத்தியர்களை வென்றாராம் ஜூல்ஃபிகர்.இவர்களின் பரம்பரையில் வந்த 5வது நவாபான சஃபர் அலியை அவரது மச்சானான முர்தாசா அலி போட்டுத் தள்ள அகால மரணமடைந்தார், இவரது வாரிசான முகம்மது சையதுவும் சிறுவயதிலேயே அல்லாவிடம் அனுப்பட்டதால் முதலாம் ஆற்காடு நவாப் வம்சம் 1942 முடிவுக்கு வந்தது.

1744-முதலாம் ஹைதாராத் நிஜாமான ஆசஃப் ஜா தனது அள்ளக்கையான அன்வருத்தீன் முகம்மது கானை ஆற்காடு நவாபாக நியமித்தார்.இவருடன் இரண்டாம் ஆற்காடு நவாப் வம்சம் தொடங்குகிறது. இவர் ஆற்காடு போர்களில் முக்கிய பங்காற்றியவர். ஆங்கிலேயர்களுக்கும் பிரஞ்சுகாரன்களுக்கும் நடந்த அதிகார போட்டியில் ஆங்கிலேயருக்கு உதவி அவர்களிடம் உதவி பெற்று நிசாமிடமிருந்து விடுதலை பெற்று ஓரளவிற்கு சுதந்திர ஆற்காடு நவாப் வம்சத்தினை உருவாக்கியவர்.ஆக நான் சொல்ல வந்தது என்னவெனில் நீங்க சொல்வது சரி ஆனான விக்கிபீடியா இந்த விடயத்தில் தப்பு என்பது தவறு!

மன்னர் மான்யம் ஒழிக்கப்பட்டாலும் இவர்களை ஆற்காடு இளவரசர்கள் என அங்கீகரித்து இந்திய அரசு மக்களின் வரிபணத்தை இவர்களுக்கு தண்டமாக அளிக்கிறது. எவ்வளவு தருகிறது என்பது ரகசியமாம்! மூப்பனார் குடும்பத்தைப்போல் வெள்ளைக்காரனின் ஜால்ரா அடித்துவிட்டு சுதந்திர இந்தியாவையும் சுரண்டும் குடும்பங்களுள் நவாப் குடும்பமும் ஒன்று. சுதந்திரத்திற்கு போரடிய தியாகிகள் எவ்வளவு பெரிய இளிச்சவாயன்கள்!

இவர்கள் ஆற்காடு/செஞ்சி பகுதியில் 30க்கும் மேற்பட்ட கோவில்களை இடித்து தள்ளி மசூதி கட்டியதாக குற்றச்சாட்டு உண்டு. ஆனால் வாலாஜா இந்து கிருத்துவ கோவில்களுக்கு உதவி செய்துள்ளார். போர்த்துகீசியார்கள் கபாலிஸ்வரர் கோவிலை இடித்துவிட்டு சாந்தோம் சர்ச் கட்டினார்கள். பிறகு வேறு இடத்தில் அமைக்கப்பட்ட கபாலிஸ்வரர் கோவிலுக்கு குளம் வெட்ட வாலாஜா இடம் வழங்கியுள்ளார். இதனால் இன்றும் முகரம் பண்டிகையின் 10வது நாளில் பஞ்சாவை அமிழ்த்த அக்குளத்தண்ணீரை இந்துக்கள் அளிக்கிறார்களாம்.மொகலாயர்களில் அக்பரும் ஒளரங்கஜேப் போல இருவகை நவாப்புகள் இருந்திருகிறார்கள் போல.

ஆனால் இவர்கள் செய்த ஒரே உருப்படியான காரியம் தமிழ்நாட்டுக்கு ஆம்பூர் பிரயாணியை அளித்ததுதான் என நினைக்கிறேன். சுத்தமான நெய்யில் முந்திரியெல்லாம் போட்டு ஐயர் ஆத்து சூவிட் மாதிரி ரிச்சாக இருக்கும் நவாப்புகளுக்காக செய்யப்பட ஆரம்பித்த ஆம்பூர் மட்டன் பிரியாணி!

? சொன்னது…

//முதலாம் ஆற்காடு நவாப் வம்சம் 1942 முடிவுக்கு வந்தது.//

சரியான ஆண்டு 1744. 5வது நவாபான சஃபர் அலி சுவனம் சென்றது 1742-ல்.

வவ்வால் சொன்னது…

சார்வாகன்,அசீம் பாஷா,நன்றி!

---------

நந்தவனம்,

ஹி..ஹி நானும் அதான் சொல்லி இருந்தேன்.

//1867-ல் குலாம் முகம்மது கவுஸ் கானின் சிறிய தந்தை ஆஸிம் ஜா, பிரித்தானிய மகாராணி விக்டோரியாவிடம் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டார். அதன்படி நவாப் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரி வசூல் செய்யும் உரிமையை ஆங்கிலேயர் பெற்றனர்.//

கோவியின் பதிவில் இப்படி போட்டு ,விக்கி என சொல்லியிருந்தார்.

எனவே அது தவறு என சொன்னேன், நான் விக்கியை பார்க்காமல் சொன்னது.

வெள்ளையர்கள் விக்டோரியா ராணியின் அறிக்கைக்கு முன்னரே வரி வசூலிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.பிளாசி யுத்தத்தில் இருந்து ஆரம்பம்.

கட்ட பொம்மன் எல்லாம் எப்போவோ ஏன் வரி ,வட்டி கிஸ்தி, என டயலாக் பேசியாச்சு :-))

ஹிஸ்டரி ஆஃப் தின்னவேலி-ராபர்ட் கால்டு வெல் பாருங்க ஆர்காட் நவாப்புடன் ,கிழக்கிந்திய கம்பெனி போட்ட ஒப்பந்தம் எல்லாம் வரும்.

கிழக்கிந்திய கம்பெனிக்கு என இங்கிலாந்து அரசர் போட்ட கட்டுப்பாடுகளும் ஏராளம்.

கிழக்கிந்திய கம்பெனியா இருந்த போது ,அவர்க்ள் உள்நாட்டு விவகாரத்தில் நேரடியாக தலையிடக்கூடாது என்பதும் ஒரு விதி.சார்ட்டர் ஆஃப் ஈஸ்ட் இந்தியா கம்பெனின்னு ,இங்கிலாந்து அரசர் ஒரு அறிக்கை வெளியிட்டு இருப்பார்.

உலகத்திலேயே மிக பழமையான பதிவு செய்யப்பட்ட கம்பெனின்னு பேரு,இன்னும் இங்கிலாந்தில் இருக்கு,ஆனால் இப்போ அதன் ஓனர் இந்தியர் :-))

கட்ட பொம்மனை தூக்கில் போட்டதற்காக கார்ன்வாலிஸ் மீது விசாரணைக்கமிஷன் வைத்தார்கள்.லஞ்சம் கொடுத்து கார்ன்வாலிஸ் தப்பினார்.

ஈஸ்ட் இந்தியா கம்பெனிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம் இன்னும் இந்தியாவில் இயங்குது...EID parry sugar mills,nellikkuppam,cuddalore.

EID=east india distilaries.

thomas parry, ஆரம்பிச்சவர்,பாரிஸ் கார்னர் இவர் பேரால் தான்.

குட்டிபிசாசு சொன்னது…

//இபோது பெரும்பான்மை மக்க்ள் எதையும் கண்டு கொள்ளாமல் பிழைப்புவாதம்[ அவர்களை சொல்லி குற்றமில்லை பாவம்!] செய்கிறார்களோ அதே போலவே அரசர்கள்,மொகலாயர்கள்,வெள்ளையர்கள் கால்த்திலும் இருந்தனர் என்பது ஊகிப்பது எளிதே.//

இப்போது இருப்பது போல தொலைத்தொடர்போ, அறிவியல் வளர்ச்சியோ இல்லாத காலத்தில் பெரும்பான்மையான மக்கள் எதோ சோத்தை தின்னோமா, திண்ணையில படுத்தோமா என இருந்திருப்பார்கள்.

? சொன்னது…

வவ்வால், ஆற்காடு நவாப்கள் கொடுங்கோலனான ஒளரங்சீப்பால் நேரடி நியமனம் செய்யப்படவில்லை எனும் பொருள் தெனிக்க நீங்கள் எழுதியிருந்ததாலேயே ஒளரங்கசேப்பால் நேரடியாக நியமனம் பெற்ற முதலாம் வம்சம் மற்றும் நிஜாம் நியமித்த இரண்டாம் வம்சம் பற்றி எழுதினேன்.

காரன்வாலிஸ் பற்றி நீங்கள் எழுதியது பற்றி படித்ததும் ஏல் ஞாபகத்துக்கு வருகிறார். இவர் ஜுபிகருக்கு எதிராக நடந்த புரட்சியை அடக்க உதவியவராம்.ஏல் அக்காலத்தில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் கவர்னர், கிழந்திந்தய கம்பனியின் ஊழியர். இவர் தனியாக ஏகமாக பணம் சுருட்டியதால் வேலையைவிட்டு அனுப்பட்டாரம். அமெரிக்காவில் பாஸ்டனில் பிறந்தவர் இவர், அமெரிக்க அப்போது இங்கிலாந்தின் காலனி.ஏல் சென்னையில் சுருட்டிய பணத்தில் சிறிதினை நிதி உதவியாக பெற்றே கானெக்டிகெட் மாகாணத்தில் ஏல் கல்லூரி துவக்கப்பட்டது. பின்பு ஐவி லீக்கில் ஒன்றான ஏல் பல்கலைகழகமாக மாறியது. இந்த விட்ட குறை தொட்டகுறை உறவிலே என்னவோ அண்ணாவிற்கு டாக்டர் பட்டமும் அளித்தது. இங்குதான் பெப்சியின் தற்போதைய நிர்வாகியான பெசன்ட் நகரை சேர்ந்த இந்திரா நூயி படித்தார் என்பது நினைவுகூறத்தக்கது.

suvanappiriyan சொன்னது…

//கொடுங்கோலனான ஒளரங்சீப்பால்//

:-)))))))))))))))))))))))))))))))

? சொன்னது…

//கொடுங்கோலனான ஒளரங்சீப்பால்//

:-))))))))))))))))))))))))))))))//

அவுரங்கசீங் ஒரு மதவெறியன் இல்லை என்று நீங்கள் எப்போதும் மறுக்கத்தான் போகிறீர்கள் என்றாலும் அவன் ஒரு இரத்த வெறிகண்ட ஒநாய் என்பதிற்கான சில ஆதாரங்களை அள்ளிவிடுவோம் என்றுதான் திரும்பி வந்திருக்கிறேன்.

இதில் கோவி சொன்னாற்போல இந்தியாவில் முகலாய சாம்ராஜ்யம் ஒழிந்தது கொண்டாப்படவேண்டிய விடயமே. கிபி 1000-1500 ஆண்டுகளுக்குள் நடந்த முசுலிம் படையெடுப்பினால் மட்டும் 8 கோடி இந்துக்கள் கொல்லப்பட்டிருப்பதாக விக்கிபீடியா கூறுகிறது(http://goo.gl/Id5TF). இதில் ஓளரங்கஜேப் ஓநாயால் கொல்லப்பட்டவர் மட்டும் 46 லட்சம் பேர், இது உலகின் முதன் 100 கொலைகார பட்டியல் உள்ளது (http://goo.gl/shXyh). இவன் செய்த அநியாயங்கள் குறித்து மொகலாயர் காலத்திய ஆவணங்களை இந்த பதிவில் பார்க்கலாம் (http://goo.gl/aTG27).ஆவணங்களில் இசுலாமியர் ஜகாத் வரியிலிருந்து விலக்கம் அளித்தது, இந்துகளுக்கு விதிக்கப்பட்ட ஜசியா வரி, அவன் இடிக்க சொன்ன கோவில்கள் பற்றிய விபரம், மதம் மாற மறுத்தோருக்கு அளிக்கப்பட்ட தண்டனை பற்றிய விபரங்கள் உள்ளன.

இவன் குரானை காப்பி பண்ணி விற்று எளிய வாழ்வு நடத்தினான் என பல முஸ்லிம்கள் எழுதுவார்கள். இது குறித்து ஒரு பாகிஸ்தான் எழுத்தாளரே (மன்சூர் இஜாஸ்) கிண்டல் அடித்திருந்தார்." மிகப் பெரிய அரண்மனை, அதில் பல ஆசைநாயகிகள், காஷ்மீரில் ஓய்வு அரண்மனை என ஜாலியாக வாழ இந்த காசு எப்படி ஓளரங்கசீப்புக்கு போதுமானதாக இருந்தது?"
இவன் இந்துக்களை மட்டுமல்ல ஷியாக்களையும் படாதபாடு படுத்தி காஷ்மீருக்கு விரட்டிவிட்டானாம் (இந்த ஒரு காரணம் போதும், சுபிக்கு அவனை பிடிச்சு போயிரும்).ஒரு தடவை இந்து பொதுமக்கள் கூட்டம் வரியை குறைக்க சொன்ன போது அவர்கள் மீதே தனது யானையை விட்டானாம். இவனுக்கும் ஒரு வீக்னஸ் இருந்தது. பலரை மதம் மாற சொன்னாலும் தனது கடைசி மனைவியிடம் ஜொள்ளு விட்டு மயங்கி கிடந்த இவன் அவளை மட்டும் மதம் மாற சொல்லவே இல்லையாம்,அவள் ஒரு இந்து! இவையெல்லாம் அவர் எழுதியதுதான். பல நல்ல முசுலிம்களும் இருக்கதான் செய்கிறார்கள் என்ற நம்பிக்கை அளிக்கிறார் இஜாஸ்!

Unknown சொன்னது…

கோவி,
அனைத்தும் அருமை கடைசி வரி தவிர.
பாவம் தமிழ்மக்கள்
வெள்ளைக்கரன் முதலாக எல்லாரும் சுரண்டியும் இந்தியாவின் பெரும்பான்மை மாநில மக்கள் மொழி இன வழி பிழைக்கும் வழி தெரிந்து கொண்டனர்.
அந்தோ தமிழர்கள். விடிவெள்ளி வரும் என்ற வெளிச்சம் கூடத் தெரியவில்லை.
கோவியின் சிந்தனைக்கு நன்றி.
கடைசிவரியை மாற்றுங்கள். காலம் தவறான வழி தெரிவிக்கக் கூடாது.
அன்பன்

Unknown சொன்னது…



கோவி,
அனைத்தும் அருமை கடைசி வரி தவிர.
பாவம் தமிழ்மக்கள்
வெள்ளைக்காரன் முதலாக எல்லாரும் சுரண்டியும் இந்தியாவின் பெரும்பான்மை மாநில மக்கள் மொழி இன வழி பிழைக்கும் வழி தெரிந்து கொண்டனர்.
அந்தோ தமிழர்கள். விடிவெள்ளி வரும் என்ற வெளிச்சம் கூடத் தெரியவில்லை.
கோவியின் சிந்தனைக்கு நன்றி.
கடைசிவரியை மாற்றுங்கள். காலம் தவறான வழி தெரிவிக்கக் கூடாது.
அன்பன்

Unknown சொன்னது…

கோவி,
அனைத்தும் அருமை கடைசி வரி தவிர.
பாவம் தமிழ்மக்கள்
வெள்ளைக்காரன் முதலாக எல்லாரும் சுரண்டியும் இந்தியாவின் பெரும்பான்மை மாநில மக்கள் மொழி இன வழி பிழைக்கும் வழி தெரிந்து கொண்டனர்.
அந்தோ தமிழர்கள். விடிவெள்ளி வரும் என்ற வெளிச்சம் கூடத் தெரியவில்லை.
கோவியின் சிந்தனைக்கு நன்றி.
கடைசிவரியை மாற்றுங்கள். காலம் தவறான வழி தெரிவிக்கக் கூடாது.
அன்பன்

suvanappiriyan சொன்னது…

//அவுரங்கசீங் ஒரு மதவெறியன் இல்லை என்று நீங்கள் எப்போதும் மறுக்கத்தான் போகிறீர்கள் என்றாலும் அவன் ஒரு இரத்த வெறிகண்ட ஒநாய் என்பதிற்கான சில ஆதாரங்களை அள்ளிவிடுவோம் என்றுதான் திரும்பி வந்திருக்கிறேன்.//

பூணூல் அநியாயத்துக்கு அப்பட்டமாக வெளியில் தெரிகிறது. :-))))))))))))

வவ்வால் சொன்னது…

நந்தவனம்,

நான் பின்னூட்டமிடும் போது ரெபெர் செய்வதே இல்லை, விக்டோரியா மாகாராணி நாவபை நியமித்தார் என வந்ததில் இருந்து தொடர்ந்தேன்.

இப்பவும் கூட ,அவுரங்கசீப் நவாபை நியமித்தாரா என எனக்கு சந்தேகமாக தான் இருக்கிறது.

ஏன் எனில் இதற்கு முன் அப்படி பார்த்த நினைவு இல்லை, ஆனாலும் பரவாயில்லை, விக்டோரியா மகாராணிக்கு முன்னரே நவாப்பிடம் வரி வசூலிக்கும் உரிமையை முன்னரே வெள்ளையர் பெற்றுவிட்டனர் ,என்பது தான் செய்தி.

அவுரங்க சீப்பை உத்தமர்னு ஒத்துக்கலைனா சு.பி சுவாமிகள் உங்களை விட மாட்டார் போல இருக்கே :-))

-----------

சு.பி.சுவாமிகள் ,பூநூல் உங்க கண்ணுக்கு மட்டும் தெரியுதா? அப்போ நீங்க ஏன் தொப்பி போட்டுக்கிறிங்க, அதுவும் மத அடையாளம் தானே?

அவுரங்க சீப்பை கொடுங்கோலன் சொன்னால் பூநூல், நீங்க அக்பரை கொடுங்கோலன் சொல்றிங்களே அப்போ நீங்களும் பூநூல் தானா?

வகாபி என்ற சொல்லே குரானில் இல்லை, இஸ்லாத்தில் இல்லை அப்புறம் எப்படி நீங்களா ,வகாபின்னு சொல்லிக்கிறிங்க?

மொகமது இபின் அப்துல் அல் வகாபி 18 ஆம் நூற்றாண்டு ,அப்போ இது வேற மதமா?(மார்க்கமா)

இஸ்லாத்துக்கு எதிராக புதிய மார்க்கம் பேசும் உங்களுக்கு சுவனம் எப்படி கிடைக்கும்?

இனிமே வகாபின்னு சொல்லாதிங்க :-))

? சொன்னது…


//பூணூல் அநியாயத்துக்கு அப்பட்டமாக வெளியில் தெரிகிறது. :-)))))))))))) //

இங்கு அமெரிக்காவில் இன்டர்நெட் விவாதத்தில் எதிராளி வலுவான வாதத்தின் மூலம் வாயை அடைத்துவிடம் போது உடனே அவனை நாஜி என திட்டி அவன் வாயை அடைத்துவிடு என்பார்கள். உமக்கும் உமது அள்ளக்கை மாமாவுக்கும் என்னிடம் திருப்பி சொல்லி பாயிண்ட் இல்லைனா நான் பார்ப்பான். எத்தனை ஆதாரம் தந்திருக்கிறேன் எதுக்காவது பதில் உண்டா? உடனே பார்ப்பானாம். நான் பார்ப்பான்தான் இப்ப என்னா அதுக்கு? ஒளரங்கசீப் இரத்தவெறி கண்ட ஓநாயா என்பதுதான் கேள்வி.

பார்ப்பான் துலக்கனா மாறுனா மாத்திரம் அது என்னவோ இசுலாமின் வெற்றி, பிராமணர்களே எங்க குரூப்புக்கு வரான்னு எழுதுவீங்க. மத்த நேரம் அவனை பார்ப்பான்ன்னு திட்டுவீங்க! நீங்க தானே ஒரு முசுலிம் பெண்ணின் புகுந்த வீட்டார் பிராமணர்கள் அவங்க அப்பெண்ணை முசுலிமாக இருக்க விட்டிருக்கார்கள், பிராமணர்கள் சிறந்தவர்கள்ன்னு எழுதினீர்? அவங்க பார்ப்பான் இல்லையா என்ன?


இன்னோரு கேள்வி... பாகிஸதான்காரனான மன்சூர் இஜாஸசும் பார்ப்பானா?

நீர் என்னை பார்ப்பான் என்றாலும் துலுக்கன்னு திட்டினாலும் என்னைப் பொருத்தவரையில் ஒளரங்கசீப் மதவெறியன், கொலைகாரன். நீர் என்ன திட்டினாலும் நான் உம்மீது தனிநபர் தாக்குதலில் ஈடுபடப்போவதில்லை. படிப்பவர் முடிவு செய்யட்டும் யார் சொல்வது உண்மை என!

///

? சொன்னது…

@வவ்வால்

புரிகிறது. இத்தனை விடயங்கள் மனதில் வைத்து எழுதுவது கடினமே. ஆனால் என்னடா இவன் எப்பப் பார்த்தாலும் கரெக்ட் பண்ண வந்துடறான்னு நினைச்சுகாதீங்க (நோ டபுள் மீனிங், பிளீஸ்). உங்களுக்கு ஏகப்பட்ட விடயங்கள் தெரிந்தாலும் எங்களுக்கும் ஒண்ணு ரெண்டு தெரியும்ன்னு எழுதுறதுதான், நம்ம சகோ குபி வார்த்தையில சொல்லறதுண்ணா... 'அண்ணே ஒரு விளம்பரம்!'

குட்டிபிசாசு சொன்னது…

//நீர் என்ன திட்டினாலும் நான் உம்மீது தனிநபர் தாக்குதலில் ஈடுபடப்போவதில்லை. படிப்பவர் முடிவு செய்யட்டும் யார் சொல்வது உண்மை என!//

சுபி: பச்சை கலர் அண்டர்வேர் அநியாயத்துக்கு அப்பட்டமாக வெளியே தெரிகிறது.:)))

வருண் சொன்னது…

***உமக்கும் உமது அள்ளக்கை மாமாவுக்கும் என்னிடம் திருப்பி சொல்லி பாயிண்ட் இல்லைனா நான் பார்ப்பான்.***

யார் அது, நந்து சார்???

இப்போ உமக்கு பாயிண்ட் இல்லைனு இப்படி பேசுறீரா?

சு பிக்கு உமக்கும்தானே வாதம்??

It is unwarranted and unnecessary, imho!

வருண் சொன்னது…

I am not in this discussion. Dont bring me up! Thanks! :-)

கோவி.கண்ணன் சொன்னது…

//I am not in this discussion. Dont bring me up! Thanks! :-)//

அவரு உங்களை மாமா ன்னு அழைப்பது உங்களுக்கு ஒப்புதல் இல்லை என்றால் பதில் சொல்லாமல் புறக்கணிக்கலாமே. நீங்க வந்து பதில் சொல்லவில்லை என்றால் படிப்பவர்களுக்கு அவர் உங்களைத் தான் சொல்கிறார் என்று தெரியாது.

நீங்க உங்களை திட்டுபவர்களை நேரடியாகவே பதிலுக்கு திட்டுபவர் என்ற அடிப்படையில் நான் இது போன்ற பின்னூட்டங்களை அனுமதிக்கிறேன்.

வருண் சொன்னது…

kovi: நான் உங்களை, மட்டுறுத்தலை எதுவும் தப்பு சொல்லவில்லை. நந்தவனத்தான் சு பி மேலே மட்டும்தான் பாயனும்னு சொல்ல வந்தேன். இங்கே அவருக்கும் சு பி க்கும்தானே பிரச்சினை? நான் இதை கண்டுக்காமப் போகலாம்தான். ஆனால் நான் சொல்லலைனா இது தொடரும். நந்துக்கு சொன்னால் புரியும்னு நெனைக்கிறேன். :-)

? சொன்னது…

//மொதல்ல உங்க தளத்தில் "மாமா" "டபுள் மீனிங்" ல பேசுற பொறுக்கிகள் பின்னூட்டங்களை மட்டுறுத்த கத்துக்கிட்டு அதை ஒழுங்கா செய்ங்க//.

வருண், மன்னிக்க இது உங்களின் தளத்தில் நீங்க போட்ட பின்னூட்டம் நம்ம பிரச்சனை முடிந்து 2-3 கழித்து போட்ட பின்னூட்டம், உங்க அனுமதி இல்லாம எடுத்துகிட்டேன்.

இதுல குறிப்பிடப்பிடப்படும் ஆள் நான் இல்லை எனில் இங்கு நான் குறிப்பிட்ட ஆளும் நீங்கள் இல்லை. புரிந்திருக்கும் என நினைக்கிறேன். கருத்து வேறுபாடு வருவது சகஜம். ஆனால் நாகரிகமாக பேசுவது நம் கையில் தான் உள்ளது. நீங்கள் இனி நாகரீகமாக எழுதும் பட்சத்தில் உம்மிடம் எமக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அடிப்படை நாகரீகத்துடனே எனது எதிர் கருத்து கொண்டோரிடம் உரையாட விரும்புகிறேன். நன்றி.

வருண் சொன்னது…

I am just requesting you not to bring me up here. If u feel what you did is correct, fine!

? சொன்னது…

I am requesting you stop mudslinging. I will reciprocate. Thank you!

Robin சொன்னது…

//பூணூல் அநியாயத்துக்கு அப்பட்டமாக வெளியில் தெரிகிறது. :-))))))))))))//
அவுரங்கசீப் நல்லவன் என்று சொல்லும்போது குல்லா வெளியில் தெரிந்தது :)

கோவி.கண்ணன் சொன்னது…

//அவுரங்கசீப் நல்லவன் என்று சொல்லும்போது குல்லா வெளியில் தெரிந்தது :)//

இஸ்லாமிய தாடி தெரிவதில்லையா ?

அண்ணன் சுபி தாடிக்கு சாயம் பூசி இருப்பாரா ?

:)

கோவி.கண்ணன் சொன்னது…

இறைவன் சொல்கிறான்,

ஆண் ஆடுகளுக்கும் ஆண்களுக்கும் நாமே தாடியைப் படைத்தோம், சிந்திப்பவர்களுக்கு அத்தாட்சி இருக்கும்.

:)

வவ்வால் சொன்னது…

நந்தவனம்,

//இதுல குறிப்பிடப்பிடப்படும் ஆள் நான் இல்லை எனில் இங்கு நான் குறிப்பிட்ட ஆளும் நீங்கள் இல்லை. //

சு.பி சுவாமிகள் பூநூல் உபநயனம் செய்தாலும் செய்தார் விசு போலவே பேசுரீர் :-))

இப்போ மாமா யாரு என்பது கேள்வியா? யாரு சொன்னா என்பது கேள்வியா?

எனக்கு தெரிஞ்சு சில மாம்ஸ் இருக்காங்கோ, அதுல ஒரு மாம்ஸ் ரொம்ப பாசக்காரரு :-))

நான் பொதுவாத்தேன் சொல்லுறேன்!

கோவி.கண்ணன் சொன்னது…

வவ்வால் இந்தவாரமும் வீக் எண்ட் கும்மியா ? நடத்துங்கோ

:)

வவ்வால் சொன்னது…

கோவியாரே,

//ஆண் ஆடுகளுக்கும் ஆண்களுக்கும் நாமே தாடியைப் படைத்தோம், சிந்திப்பவர்களுக்கு அத்தாட்சி இருக்கும்.//

ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையா?

இதை அண்ணா அல்லது மஞ்சதுண்டு சொன்னதா நினைவு?

ஏன் இறைவன் இதை போல சொல்ல கூடாதா?

ஹி...ஹி அரசியலும் பேசணும்ல :-))

(இப்போ இதுக்கும்,பதிவுக்கும் என்ன சம்பந்தம்னு ஆராயப்படாது , கருத்து சொல்லணும்னு தோணிச்சு சொன்னேன்)

வவ்வால் சொன்னது…

கோவியாரே,

//வவ்வால் இந்தவாரமும் வீக் எண்ட் கும்மியா ? நடத்துங்கோ
//

கும்ம வேண்டாம்னு தான் பார்த்தேன்,ஆனால் விட மாட்டேங்கிறாங்க மார்க்க பந்துக்கள்.

நீங்க பச்சை விளக்க எல்லா பதிவிலும் எரிய விட்டிங்கன்னா...மிச்சத்த நாங்க பார்த்துகிறோம்.

கோவி.கண்ணன் சொன்னது…

என் பதிவில் (உங்களை) வம்பிலுப்பவர்கள் தவிர்த்து (அவர்களைத் தாக்குவது உங்கள் உரிமை என்ற அளவில்) பிற யாரையும் மிக மோசமாக தனிமனித தாக்குதல் செய்யாவிட்டால் கும்மிகள் (எப்போதும்) வரவேற்கப்படுகின்றன

நாமலும் ப்ராக்கெட் போட்டு எழுதி பழகிட்டோம்ல

எல்லாத்துக்கும் சரியாக பிராகெட் போட்டு எழுது நண்பர் சுவனப்பிரியன் ஏன் வலக்கரத்தை பெண் (பாலியல் இச்சைக்கான) அடிமைகள் என்று பிராக்கெட் போட்டு புரியும்படி எழுதுவதில்லை,

:)

:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்