இராஜன் விவகாரம் ஊதி வெடித்தப் பிறகு டிவிட்டரில் முனைப்பாக செயல்பட்ட டிவிட்டர்கள் கணக்கை மூடிவிட்டு ஓடிவிட்டனர். எனக்கு நெருங்கிய டிவிட்டர்/பதிவர் ஒருவரிடம் கேட்டேன், 'இங்கே இந்தியாவில் கருத்து சுதந்திரம் இல்லைண்ணே அதனால் மூடிவிட்டேன்' என்கிறார், பெரும்பாலனவர்கள் டிவிட்டரில் ஆபாச மொழி நடை என்கிற பெயரில் குற்றம் சுமத்தப்பட்ட சாக்கில் கருத்து சுதந்திரத்தில் கை வைத்திருப்பதாகவே நினைக்கின்றனர். ஆபாச மொழி நடை என்பதன் மொழி நடையை வரையறுப்பதன் சிக்கல்களும், அவற்றின் மீதான தவறான புரிந்துணர்வுகள் ஆபாச மொழி நடைகளைவிட ஆபாத்தானவை என்கிற கருத்தாக்கம் வலுப்பெறத் துவங்கியுள்ளது, உதாரணத்திற்கு சென்னையில் வெகு சாதாரணமான மொழி நடை மற்றும் பதிவர் ஜாக்கி சேகர் பயன்படுத்தும் **த்தா என்பது கேட்பதற்கு ஆபாசம் என்றாலும் அதன் வீச்சு மிகக் குறைவு, தென் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் சென்னைக் காரர் தன்னை **த்தா என்று திட்டிவிட்டார் என்று வருத்தப்பட்டால் அவரை வட்டார வழக்கு புரிந்துணர்வு அற்றவர் என்று தான் முதலில் புரிந்து கொள்ள முடியும், பிறகு தான் அந்த சொல் அவரை ஏன் காயப்படுத்தியது என்று ஆராய்ச்சிக்கு செல்ல முடியும்.
பார்பனர்களிடையே அன்றாடம் பயன்படுத்தப்படும் சூத்திரவா என்பதன் பொருள் மிகவும் கீழ்த்தரமான பொருள் கொண்டதாகவே சொல்லப்படுகிறது, சூத்திரன் என்றாலும் அடுத்த ஐந்தாம் பிரிவான பஞ்சமன் என்பதன் பொருளும் கிட்டதட்ட வேசி மக்கள் என்பதன் பொருள் கொண்டதாம், பார்பனர் ஒருவர் உங்களை சூத்திரன் என்று சொல்லாவிட்டாலும் தன்னைத் பிராமணன் என்று கூறிக் கொண்டாலே எதிரே உள்ளவர் பார்பனர் அல்லாதவர் அல்லது அவர் உங்களை மறைமுகமாக சூத்திரன் என்று வரையறுக்கிறார் என்றே பொருள், இதை உணர்ந்து தான் மொழி நடைகளில் பிராமணர் என்று சொல்லுதல் நல்லதற்கில்லை என்பதற்காகவே பாரதி போன்றோர் 'பார்பனர்' என்கிற சொல்லாடலைப் பயன்படுத்தி வந்தனர் என்பது கவனிக்கத் தக்கது. பொதுவெளியில் தன்னை பிராமணர் என்று பிரகடனப்படுத்திக் கொள்பவர் மற்றவர்களை சூதிரனாக சித்தரிக்கிறார் என்று குற்றம் சாட்டினால் அதற்கான எந்த விளக்கங்களும் ஏற்கத்தக்கதல்ல.
இந்தியாவில் கருத்து சுதந்திரம் இருக்கிறதா ? பிரபலங்களிடம் அவை இருக்கிறது, ஏனெனில் அவர்களை சட்டம் எந்த விதத்திலும் தண்டிக்காது, ஆளும் காங்கிரசை பாஜாகவினர் பாராளுமன்றத்தில் தேச துரோகிகள் என்று ஊழல் குறித்த குற்றச்சாட்டுகளின் குறியீடாகச் சொல்கின்றனர், அதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்டது போலவும் தெரியவில்லை, சட்டமன்றத்தில் ஜெ கருணாநிதியை விமர்சிக்கின்றார், கருணாநிதி ஜெவை விமர்சிக்கின்றார் விஜயகாந்தும் ஜெ-வும் பலமுறை மேடைகளில் தனித் தாக்குதல்கள் நடத்திக் கொள்கின்றனர், இதற்கெல்லாம் எந்த அவதூறு வழக்குகள் கிடையாது, நன்றாக வாசிக்கக் கூடியவர் என்று சாதிய அடிப்படையில் கருணாநிதியை கிண்டல் அடித்தவர் தானே இளங்கோவன், இவையெல்லாம் மேடை நாகரீகமாகவும், அரசியல் ரீதியான கருத்து சுதந்திரமாகப் பார்க்கப்படுவதை செய்தித்தாள்களின் படிக்கும் எவரும் தமக்கும் அந்த உரிமை இருப்பதாக நினைத்து கொண்டு இருக்கின்றனர், அரசியல்வாதிகள், திரைப்படத் துறையினர் பற்றிய அன்றாட அநாகரீக விமர்சனங்கள் என்றும் நடக்கத்தான் செய்கிறது, ஆனால் அவற்றை எழுத்து சாட்சியாக இணையங்களில் செய்யும் பொழுது பிரபலங்களின் மீதான மானப் பிரச்சனையாக ஓட்டு எந்திரங்கள் தண்டிக்கப்படுகின்றனர். இத்தகைய தண்டனைகள் காயம்பட்டவர்களுக்கான வலி நிவாரணியா என்று பார்த்தால் அப்படி ஒன்றும் இல்லை, இத்தகைய ஆபாசத்தாக்குதல்கள் பெருங்கடலில் விழுந்த காக்கையின் எச்சம் போன்று கரையக் கூடியது என்றே அவர்கள் உணர்ந்திருந்தாலும் சாமனியனுக்கு பெற்றுத்தரும் தண்டனைகள் தனது ஆளுமையைப் பற்றி பயம் கொடுக்கச் செய்யும் என்றே நம்புகிறார்கள்.
இணையத்தளங்களில் ஆபாசங்களுக்கு தண்டனைக் கொடுக்க வேண்டுமென்றால் ஜெயமோகனை கீழ்தரமாக, ஆபாசமாக எழுதும் சாரு போன்றவர்களும் விதி விலக்குகளாக இருக்க என்ன இருக்கிறது. ஆனால் அதே சாருவே இதுபற்றி மாற்றுகருத்தாக இணையங்களில் ஆபாசம் தண்டனைக்குரியது என்று திருவாய்மலர்கிறார், ஆக இவர்களின் ஆபாசம் குறித்த அலறல்கள், சாதரணவர்கள் பிரபலங்கள் மீது செய்துவிடக் கூடாது என்கிற எச்சரிக்கை மற்றும் மறைமுக மிரட்டல்களாகவே நினைக்க முடிகிறது.
எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் பற்றிய எல்லைகளை அதிகார வர்க்கம் முடிவு செய்யும் நிலையில் அவைப்பற்றிய அடிப்படை புரிந்துணர்வு இல்லாமல் எழுதிவிட்டு கருத்து சுதந்திரத்தில் கைவைத்தாக நாம் புலம்புவது பொருளற்றதாகவே உள்ளது. பெண் சுதந்திரம் என்பது ஆண்வர்க்கம் விருப்பப்பட்டு இடும் பிச்சை என்று பலர் நினைப்பது போல் எழுத்து சுதந்திரம் என்பவை அதிகார வர்க்கம் கண்டுகாணாமலும் விட்டு வைத்திருக்கும் பிச்சை என்று தான் நினைக்க முடிகிறது. எழுத்து சுதந்திரத்தின் எல்லைகள் பற்றி எந்த ஒரு கருத்தும் வரையறுக்கப்படாத நிலையில் டிவிட்டர்கள் கணக்கை மூடிவிட்டுச் செல்வது வரவேற்க்கத் தக்கது தான்.
பிரபலத்தை எதிர்ப்பது குற்றம், ஆபாசமாகப் பேசுவது குற்றம் இதற்காக சிறைச் சாலைக் கதவுகள் திறந்தே இருக்கும் பிரபலத்தை எதிர்க்க மற்றொரு பிரபலமாக இருக்க வேண்டும் இங்கு தகுதிகள் தான் எதிர்பவரையும் எதிர்க்கப்படுவரையும் முடிவு செய்கிறது.
16 கருத்துகள்:
சுதந்திரம் என்பதற்கு வரையறை தரவும்.
அதன் எல்லைகள் தான் என்ன?
//பிரபலத்தை எதிர்ப்பது குற்றம், ஆபாசமாகப் பேசுவது குற்றம் இதற்காக சிறைச் சாலைக் கதவுகள் திறந்தே இருக்கும் பிரபலத்தை எதிர்க்க மற்றொரு பிரபலமாக இருக்க வேண்டும் இங்கு தகுதிகள் தான் எதிர்பவரையும் எதிர்க்கப்படுவரையும் முடிவு செய்கிறது//
Nice
//ஜோதிஜி திருப்பூர் கூறியது...
சுதந்திரம் என்பதற்கு வரையறை தரவும்.
அதன் எல்லைகள் தான் என்ன?//
எல்லைகள்?????????????????????????
||தென் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் சென்னைக் காரர் தன்னை **த்தா என்று திட்டிவிட்டார் என்று வருத்தப்பட்டால் அவரை வட்டார வழக்கு புரிந்துணர்வு அற்றவர் என்று தான் முதலில் புரிந்து கொள்ள முடியும், பிறகு தான் அந்த சொல் அவரை ஏன் காயப்படுத்தியது என்று ஆராய்ச்சிக்கு செல்ல முடியும்.||
சிறிது கூட ஒத்துக் கொள்ள முடியாத வாக்கியம். கோத்தா என்றால் தாயைக் கீழ்த்தரமாக சுட்டும் என்பது தமிழகத்தில் அனைவருக்கும் தெரியும்.சென்னையில் இருப்பவர்களுக்கு அப்படி மற்றவரை விளிப்பதற்கு யாரும் காப்புரிமை கொடுத்து விடவில்லை !
|| பார்பனர்களிடையே அன்றாடம் பயன்படுத்தப்படும் சூத்திரவா என்பதன் பொருள் மிகவும் கீழ்த்தரமான பொருள் கொண்டதாகவே சொல்லப்படுகிறது, சூத்திரன் என்றாலும் அடுத்த ஐந்தாம் பிரிவான பஞ்சமன் என்பதன் பொருளும் கிட்டதட்ட வேசி மக்கள் என்பதன் பொருள் கொண்டதாம்,||
இதுவும் திரிபு வாதம்.
பஞ்சமர் என்பது ஐந்தாம் வர்ணத்தவர், உடல் உழைப்பவர் என்ற பொருள் தரும் வார்த்தையே. சூத்திரவா என்ற சொல் பஞ்சமர் என்ற குறிப்பை வேண்டுமானால் தரலாம். வேசி மக்கள் என்பது நீங்கள் வலிந்து தரும் பொருள் !
|| பொதுவெளியில் தன்னை பிராமணர் என்று பிரகடனப்படுத்திக் கொள்பவர் மற்றவர்களை சூதிரனாக சித்தரிக்கிறார் என்று குற்றம் சாட்டினால் அதற்கான எந்த விளக்கங்களும் ஏற்கத்தக்கதல்ல. ||
பொதுவெளியில் தன்னை தலித் என்று பிரகடனப் படுத்தும் ஒருவர், மற்றவர்கள் அனைவரையும் 'நீங்கள் எல்லோரும் என்னை விட உயர்ந்தவர்' என்று சித்தரிக்கிறார் என்று சொல்வது எவ்வளவு கவைக்குதவாத வாதமோ, அவ்வளவு பொருளற்றது நீங்கள் முன் வைக்கும் வாதம் !
சின்மயி விவகாரத்தில் அவருக்கு சமூகப் புரிதல்கள் இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகவே தெரிகிறது. அதற்காக அவரது அம்மாவை வைத்துக் கொள்ளலாம்' என்ற அளவுக்கு எழுதப்பட்ட மறுமொழிகள் நிச்சயம் திமிரினால் எழுந்தவை. அந்தத் திமிர் அடக்கப் படவேண்டியதே.
சின்மயி'க்கு இருக்கும் சமூகக் கொள்கை உள்ளீடற்ற முட்டாள்தனத்தை எதிர்கொள்ளும் விதம் அதுவல்ல; ஆனால் இதுவரை அப்படிப்பட்ட எதிர்வினைதான் சரி என்ற கருத்தாக்கம் இருந்தது.இப்போதும் சிலரால் அது முன்வைக்கப்படுகிறது!அது இனிமோல் குறையும் அல்லது மட்டுப் படும் என்ற வகையில் இந்த நடவடிக்கை வேண்டியதே.
பகடி எப்போதும் அடுத்தவரை நிந்திக்கலாம்;ஆனால் காயப்படுத்தக் கூடாது.
வாசகன்
//பஞ்சமர் என்பது ஐந்தாம் வர்ணத்தவர், உடல் உழைப்பவர் என்ற பொருள் தரும் வார்த்தையே. சூத்திரவா என்ற சொல் பஞ்சமர் என்ற குறிப்பை வேண்டுமானால் தரலாம். வேசி மக்கள் என்பது நீங்கள் வலிந்து தரும் பொருள் !//
சூத்திரவா, பஞ்சமர் என்பனவற்றுக்கு சரியான, 'முழுமையான அர்த்தத்தை' நீங்கள்தான் கூறுங்களேன்
//சூத்திரவா, பஞ்சமர் என்பனவற்றுக்கு சரியான, 'முழுமையான அர்த்தத்தை' நீங்கள்தான் கூறுங்களேன்//
உடல் உழைப்பாளிக்கு இன்னார் இன்னார் வேதம் படித்த இன்னார் சூத்திரன் என்று பெயர் வைத்திருக்கிறார்கள் என்று தான் அவருக்கு தெரியும். அவர் அறிந்த அகராதிபடி அவர் ஒருவேளை பார்பனர் அல்லாதவராக இருந்தால் சூத்திரன் என்று அவரை யாரேனும் விளித்தால் ஏற்றுக் கொள்வார் போல.
இன்னுமா நமக்கு சூத்திரப் பட்டம்?
http://viduthalai.periyar.org.in/20100321/news24.html
//பொதுவெளியில் தன்னை தலித் என்று பிரகடனப் படுத்தும் ஒருவர், மற்றவர்கள் அனைவரையும் 'நீங்கள் எல்லோரும் என்னை விட உயர்ந்தவர்' என்று சித்தரிக்கிறார் என்று சொல்வது எவ்வளவு கவைக்குதவாத வாதமோ, அவ்வளவு பொருளற்றது நீங்கள் முன் வைக்கும் வாதம் !//
பொதுவெளியில் எத்தனை பேர் தங்கள் சாதிய அடையாளங்களை வெளிப்படுத்துகின்றனர் ?
பார்பனர் அல்லாதோர் தத்தம் நண்பர்களுக்குள் என்ன சாதி என்றே தெரியாமல் கேட்காமல் பழகும் பண்புகள் குறித்து கேள்விப்பட்டதே இல்லையா ?
//ஜோதிஜி திருப்பூர் கூறியது...
சுதந்திரம் என்பதற்கு வரையறை தரவும்.
அதன் எல்லைகள் தான் என்ன?//
தனிமனித சுதந்திரங்கள் பாத்ரூம் எல்லைகளைக் கடந்தது இல்லை என்ற வரையில் மட்டுமே தெரியும்.
:)
ட்விட்டர், முகநூல் போன்றவை கருத்துக்களங்கள், தளங்கள் (ப்ளாக்ஸ்) போன்றவையைவிட ரொம்ப பர்சனலாகவும், தூய்மை காக்கப்படுவதாகவும் தோணுது.
தளங்கள், கருத்துக்களங்களுக்கு கருத்துச் சுதந்திரம் அதிகமாகக் கொடுக்கப் படுவதுபோல எனக்குத் தோணுது.
இது உண்மையா இல்லை என் கற்பனையா வென்ரு தெரியவில்லை
பிரபலங்கள் தங்கள் தளங்களில் வரும் பின்னூட்டங்களை வடிகட்டித்தான் வெளியிடுறாங்க. அதனால் அவங்க தளங்களில் யாரும் அவமானப் படுத்த முடியாது. மற்றதளங்களில் அவமானப் படுத்துவதை பொதுவாக கண்டுக்கிரது இல்லை. ஆனால் ட்விட்டர், முகநூல் போன்றவைகளில் அவங்க அவமானப்படுத்தப் படும்போது ஓவெர் ரியாக்ட் செய்றாங்க. அதை ரொம்ப பர்சனலாகவும், தன் பேரைக் கெடுப்பதாகவும் எதுக்கிறாங்க.
ராஜன் ப்ளாக்ல சின்மயி சண்டை போடவில்லை. ட்விட்டர், மற்றும் முகநூல்லதான் சண்டை போட்டாங்க.அதுக்குத்தான் ரொம்ப சென்சிட்டிவா இருக்காங்க.
@ ஜோதிஜி திருப்பூர் - // சுதந்திரம் என்பதற்கு வரையறை தரவும்.
அதன் எல்லைகள் தான் என்ன? //
விருந்துக்கு போகின்றீர்கள், உங்களுக்கு ஒரு இட்லி வைக்கிறாங்க, எனக்கு ரெண்டு இட்லி வைக்கிறாங்க.. எனக்கு சாம்பார் ஊத்துறாங்க, நான் சாப்பிட ஆரம்பிச்சிடுறேன் .. ஆனால் உங்களுக்கு சாம்பார் ஊத்தவில்லை, வெறும் இட்லியில் கை வைக்கவும் கூடாதுனு சொல்லிட்டாங்க... ! நீங்க அந்த இடத்தில் எதனை எதிர்ப்பார்ப்பீர்கள் .. !!!
அது தான் பதில் !!!
ட்விட்டர் சமூக தளமாகவும், அதே சமயம் கருத்துச் சொல்லும் தளமாகவும் இருக்கு ! வருண் சொன்னது போல ட்விட்டர் ஒன்றும் பெர்சனலான ஒன்றல்ல.. அவரவர் வெளியிடும் இரண்டு வரி பத்திரிக்கை போலத் தான். அது. அவற்றில் சொல்லப் படும் கருத்துக்கு விவாதம் வந்தால் வாதம் செய்ய வேண்டும், இல்லை என்றால் ஜகா வாங்க வேண்டும் .. !
இங்கே பதில் போட்ட வாசகன் என்பவர் எதிர்வினை கடுமையானதும் சொல்லாமல் ஓடிபுட்டார். வந்து பதில் சொல்லுங்கன்ன
சாரு போன்றவர்கள் சின்மயிக்கு வக்காலத்தும் என்னைப்போன்றவர்கள் ராஜனுக்கு பரிதாபம் கொள்வதை பின்னூட்டமிட பின்னூட்டமிடத்தான் புரிந்து கொள்ள முடிந்தது.
வீட்டுக்குள் கொசுக்கடிக்குதுன்னு இன்னும் அதிகமாய் கொய்ன்னு சத்தம் போடற இடத்தில் போய் படுத்துகிட்ட மாதிரி இருக்குது ட்விட்டரை பூட்டி விட்டுப் போய்விட்டேன் என்று நண்பர் சொல்வது:)
கொசுக்களை விரட்டறதுக்கு வழி சொல்லுங்ண்ணா!
//பொதுவெளியில் எத்தனை பேர் தங்கள் சாதிய அடையாளங்களை வெளிப்படுத்துகின்றனர் ?
பார்பனர் அல்லாதோர் தத்தம் நண்பர்களுக்குள் என்ன சாதி என்றே தெரியாமல் கேட்காமல் பழகும் பண்புகள் குறித்து கேள்விப்பட்டதே இல்லையா ?//
ஹி ஹி...:-)
கோவி,
இன்னுமா நமக்கு சூத்திரபட்டம்னு கேட்கும் கேள்வி சரியே, ஆனால் அதற்கு பதில் கொடுக்க ஒரு சுட்டி கொடுத்து இருக்கீங்க அதில என்ன விவரம் இருக்கு, மொன்னையா , சூத்திரப்பட்டத்தை எதிர்ப்போம்னு இருக்கு, அதை தானே இப்போவும் சொல்கிறோம்.
சூத்திரன் என்பதனை கட்டமைத்த வரலாற்றினை அறிவீர்களா?
நான் சில நூல்களை படித்துள்ளேன், நாம அதை சொல்லப்போனால் , நாலு பேர் சண்டைக்கு வருவான், என்னைப்போல அனாமதேயத்துக்கு எவன் குரல் கொடுப்பான் , பார்ப்பனர்களை இழிவு படுத்தினேன் என கேஸ் போட்டு உள்ள தான் தள்ளுவான்.
ஏற்கனவே நான் இஸ்லாமிய மார்க்கப்பந்துக்களை கேள்வி கேட்டதை மோகன் குமார்னு ஒருத்தருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதும், இஸ்லாமியர்களை இழிவு படுத்துறிங்க, அதை வைத்து கேஸ் போடுவேன்னு என்னை மிரட்டினார், அட இந்தாளு கூட கருத்து வேறுபாடு ஏற்பட்டா அதை தானே சொல்லணும் ஏன் இன்னொரு மேட்டரை இழுக்கிறார்னு எவனும் கேட்கலை :-))
சும்மா வெறும் மொக்கை பதிவு போடும் மோகன் குமாருக்கே அம்புட்டு தெனாவெட்டுனா , பிராபல்ய பாடகின்னா சும்மாவா...
எனவே இந்தியாவில் சராசரி வாழ்க்கை வாழும், மாத சம்பளம் வாங்கிக்கொண்டு , வேறு பின் புலம் இல்லாதவர்கள் எல்லாம் இணையத்தினை விட்டு ஓடி விடலாம் :-))
(இதான் இப்போ அனைவருக்கும் சொல்லப்படும் நீதி)
எனக்கு கொழுப்பு அதிகம் ..எனவே உலாவுகிறேன் ,எவன்/எவள் வழக்கு போடுவேன்னு மிரட்டுகிறார்களோ, அவர்களை ... வருக வருக என அழைக்கிறேன் :-))
இழப்பதற்கு எதுவும் இல்லை ஆனால் அடைவதற்கு ஒரு லட்சியம் இருக்கிறது!
கருத்துரையிடுக