பின்பற்றுபவர்கள்

8 அக்டோபர், 2012

கேபிள் சங்கருடன் பொன் மாலைப் பொழுது !


கேபிள் சங்கர் தற்பொழுது சிங்கையில் இருக்கிறார், தனது சினிமா துறை தொடர்பில் ஒரு தயாரிப்பாளரை சந்தித்து உரையாட சிங்கை வந்துள்ளார்,  நேற்று காலையில் விமான நிலையம் செல்ல இயலாத நிலையில் மாலையில் சந்திக்கலாம் என்று பிரியமுடன் பிரபு அழைக்க கேபிளை சந்திக்க மாலை 6 மணி வாக்கில் குட்டி இந்தியா சென்றேன், அங்கே ஏற்கனவே தமிழ்வெளி நிறுவனர் குழலியுடன் உரையாடிக் கொண்டிருந்தார், கட்டித் தழுவலுடன் ஒரு வரவேற்பைக் கொடுத்துவிட்டு கொஞ்சம் அளவளாவிட்டு, திரைப்படம் குறித்து பேச்சு வந்தவுடன் 'இங்கிலிஸ் விங்கிலிஸ்' பார்க்க விரும்புவதாக கேபிள் சொன்னார். அதுக்கென்ன கிளம்பிடுவோம் என்று திரையரங்கையும் காட்சி விபரங்களையும் தெரிந்து கொள்ளும் பொழுது அடுத்த 30 நிமிடத்தில் தெம்பனீஸ் ஜீவி திரையரங்கிற்குச் சென்றால் பார்க்க முடியும், கிளம்புங்க கிளம்புங்க என்று நால்வரும் கிளம்பி வாடகை வாகனம் எடுத்து கிளம்பினோம், 6:40க்கு திரையரங்கிற்குள் நுழைந்து 5 நிமிடம் வரிசையில் நின்று நுழைவுச் சீட்டு வாங்கி உள்ளே செல்லும் முன்பே முன் இருக்கை தான் என்று உறுதியாக தெரிந்த நிலையில் 45 டிகிரி கோணத்தில் திரை தெரிய படம் பார்த்தோம், திரைக்கு மிக அருகில் இருந்து பார்க்க கொஞ்சம் கழுத்து வலிக்கத் தான் செய்தது.

அடுத்த வாரிசு படத்தின் பிறகு தமிழில் ஶ்ரீதேவியின் (அரவிந்தசாமியுடன் நடித்தது அல்ல)  ரஜினியுடன் நான் அடிமை அல்ல, அதன் பிறகு தமிழ் பக்கம் ஒதுங்கவும் இல்லை, ஶ்ரீதேவியை திரையில் பார்க்க ஆவலுடன் இருந்தேன், குரல் முன்பு போல் (சற்று மூக்கால் பேசுவது போன்ற கொஞ்சும் குரலாக )இல்லாமல் கொஞ்சம் கரகரப்பு கூடி இருந்தது, பார்த்தது இந்திப் படம் என்பதால் ஶ்ரீதேவி குரல் பழக்கப்பட்ட குரல் போலும் தெரியவில்லை, எனக்கு சற்று ஏமாற்றமே, மற்றபடி ஶ்ரீதேவியின் தோற்றம் நடிப்பு சூப்பரோ சூப்பர், திரைப்படம் பற்றி விமர்சனங்களை கேபிள் எழுதிவிட்டார், அவரைவிட சிறப்பாக எழுத என்னால் முடியாது, எனவே விமர்சனங்களைத் தவிர்க்கிறேன். ரஜினி, சில்க், ஶ்ரீதேவி, அஜித் ஆகியோரைத் தான் பிரேமுக்கு பிரேம் ரசிப்பேன் என்பதால் ஶ்ரீதேவி வரும் காட்சிகள் அனைத்தையும் விழிக் கொட்டாமல் பார்த்தேன். 

கொஞ்சம் கூட சொதப்பல் இல்லாமல் ஒவ்வொரு காட்சியிலும் ஶ்ரீதேவியின் உணர்வு பூர்வமான நடிப்பு பாராட்டச் சொற்கள் இல்லை, நடிகர்கள் தவிர்த்து சென்ற தலைமுறை நடிகை ஒருவர் படம் முழுவதும் ஆக்கிரமித்து நடித்திருப்பது எனக்கு தெரிந்து ஶ்ரீதேவி ஒருவர் தான். முகத்தின் சுருக்கங்களை மேக்கப் சரிசெய்ததைவிட அவரது கண்கள் மிகுதியாகவே சரி செய்ததிருந்ததால் அதிர்ச்சி அளிக்கும் அளவுக்கு ஶ்ரீதேவியின் தோற்றம் மாறாமல் இருப்பதும் இந்தப் படத்தில் சிறப்பு, ஹார்லிக்ஸ், காம்ப்ளான் அம்மாக்களைப் போன்று படத்திற்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார்.

ரொம்பவும் முடிச்சுகள் இல்லாமல் கான்வெண்ட் செல்லும் பிள்ளைகள் இருக்கும் இல்லத்தில் நடக்கும் இயல்பான கதை. ஶ்ரீதேவி ரசிகர்களுக்கு மிகவும் அருமையான திரைவிருந்து.

*****

படம் முடிந்து வெளியே வந்து ஸ்டார்பக்ஸில் ஆளுக்கு ஒரு காபி குடித்துக் கொண்டே படத்தைப் பற்றிப் பேசிவிட்டு இரவு 10 மணி வாக்கில் அவரவர் கிளம்பினோம்,  வலைப்பதிவர் நண்பராக மிகவும் இயல்பாக, அன்பாகப் பேசக் கூடியவர்கள் மிகச் சிலரே, கேபிள் சங்கர் பிரபலபதிவர் என்றாலும் பெரிய இயக்குனர் ஆக ஆனாலும் இப்படித்தான் இருப்பார் என்றே நினைக்கிறேன். இது போன்ற நண்பர்கள் நம் இருக்கும் இடத்திற்கு வருகிறார்கள் என்றால் நாம பார்க்காமல் விட்டால் நமக்கும் நட்டமே. 

எழுத்து, தனிமனித பழக்க வழக்கம் இவற்றில் குழப்பிக் கொள்ள ஒன்றும் இல்லை என்று மிகத் தெளிவான புரிந்துணர்வுகள் கொண்டவர்கள் மிகச் சிலரே, அதில் கேபிள் சங்கரும் ஒருவர்.  மிகவும் வெளிப்படையாக பகட்டில்லாமல் பேசும் கேபிள்ஜி த கிரேட். அவருடன் சேர்ந்து ஶ்ரீதேவி நடித்த திரைப்படம் பார்த்த அனுபவமும் மறக்க இயலாத ஒன்று.

கேபிள் சங்கர் வரும் வியாழன் 11 அக்டோபர் வரை சிங்கையில் இருப்பார், தொடர்பு கொள்ள +65 82037082

20 கருத்துகள்:

Jayadev Das சொன்னது…

\அவருடன் சேர்ந்து ஶ்ரீதேவி நடித்த திரைப்படம் பார்த்த அனுபவமும் மறக்க இயலாத ஒன்று.\\ ஸ்ரீதேவி நடித்த படத்தை அவருடன் சேர்ந்து பார்த்த.............. என்று எழுதினால் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்!! :))

கோவி.கண்ணன் சொன்னது…

நான் அவருடன் சேர்ந்து - என்று வரனும் ஜெயதேவ்
:)

விருச்சிகன் சொன்னது…

\\எழுத்து, தனிமனித பழக்க வழக்கம் இவற்றில் குழப்பிக் கொள்ள ஒன்றும் இல்லை என்று மிகத் தெளிவான புரிந்துணர்வுகள் கொண்டவர்கள் மிகச் சிலரே\\

இப்போ பதிவுலகத்துல நடந்து கொண்டிருக்கிற தனி மனித தாக்குதல்களுக்கு, இது ஒரு நல்ல பதில் என்று நினைக்கிறேன்.

தகவலுக்கு நன்றி கோவி சார். கேபிள்-ஜிக்கு போன் பண்ணி பேசற அளவுக்கு நான் இன்னும் பெரிய பதிவர் ஆகலை. எனவே... அடுத்த முறை பார்ப்போம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//தகவலுக்கு நன்றி கோவி சார். கேபிள்-ஜிக்கு போன் பண்ணி பேசற அளவுக்கு நான் இன்னும் பெரிய பதிவர் ஆகலை. எனவே... அடுத்த முறை பார்ப்போம்.//


அவரை சந்திக்க விரும்புகிறவர் எவரையும் அவர் ரொம்பவும் மகிழ்ச்சியாகத் தான் எதிர்நோக்கிப் பேசுகிறார். நம்மீது வைத்திருக்கும் மரியாதை மற்றும் அன்பு காரணமாக சந்திக்கவருகிறார்கள் என்பது புரிந்துணர்வு என்பதால் நீங்கள் தயங்கத் தேவை இல்லை

பொன். வாசுதேவன் சொன்னது…

அவருடன் சேர்ந்து ஶ்ரீதேவி நடித்த திரைப்படம் பார்த்த அனுபவமும் மறக்க இயலாத ஒன்று.


அருமை. தொடருங்கள். கடைசி வரி சிந்திக்க வைக்கிறது.

பொன். வாசுதேவன் சொன்னது…

அண்ணா, மன்னிக்கணும். நான் சொன்னதை ஏற்கனவே யாரோ சொல்லி விட்டார்கள் போல. கவனிக்கவில்லை. கோவி அண்ணா,

கார்த்திக் சரவணன் சொன்னது…

கேபிள் அண்ணன் அவர்களுடைய நண்பருக்கு என் நண்பர் நண்பர்.... (புரிந்ததா?) நாங்கள் கேட்டுக்கொண்டதற்காக என் நண்பருடைய தகரக் கொட்டகையில் அமர்ந்து சுமார் இரண்டு மணிநேரம் பேசியிருக்கிறார்... Such a simple man...

அஜீம்பாஷா சொன்னது…

என்ன கண்ணன்ஜீ இவ்வளவு ஒல்லியா இருக்கிங்க இப்போதான் உங்கள் முழு அளவு போட்டோ பார்க்கிறேன், டயட் கண்ட்ரோலா.

துளசி கோபால் சொன்னது…

@ அஜீம்பாஷா,

அது ஒன்னுமில்லைங்க. நம்ம கேபிளார் அருகில் இருப்பதால் நம் கண்ணுக்கு ஏற்படும் தோற்றம்:-))))

நானும் போனவாரம் கண்ணனைப் பார்த்து திக்கிச்சுப்போனேன். உண்மைக்குமே அரை உடம்பா ஆகி இருக்கார்.

உடல்நலம் பேணவேண்டும் என்ற என் என் 2 பைசாவைச் சொல்லிட்டு வந்தேன்.

nagoreismail சொன்னது…

Will try to call him, thanks

பெயரில்லா சொன்னது…

கலக்குங்க பாஸ் ! ஒரே அஜால் குஜால் தானா ? ஸ்ரீதேவியின் படம் நல்லாருக்கா ? !

Unknown சொன்னது…

கண்ணன்! நான்கூட உங்களை நேரில் பார்த்த போது கேட்க வேண்டும் என்று நினைத்தேன் ஏதோ சற்று இளைத்திருப்பது போல் தோன்றினாலும் தங்கள் உடல்வாகு அப்படித்தானோ என்று கருதினேன்! ஒரு வேளை உணவுக்கட்டுப்பாடு என்றால் சற்று தளர்த்திக் கொள்வது நலம்! மே மாதம் மீண்டும் சந்திப்போம் சங்கர் அவர்கள் பழகுதற்கு எளிய, இனிய மனிதர்!

அஞ்சான் சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
கோவி.கண்ணன் சொன்னது…

அஞ்சாநஞ்சன்,

குறுந்தாடியோ, குல்லாவோ கீழே விழுந்துவிட்டது பொறுக்கி எடுத்துச் செல்லவும்

மாதேவி சொன்னது…

'பொன்மாலைப் பொழுது' கலந்துகொண்டோம்.

அஞ்சான் சொன்னது…

The Sedition Act is in Chapter 290 of the Statutes of Singapore. It was last revised in 1985. In September 2005, the Sedition Act was first used on individuals for making racist remarks on blog site seditious and inflammatory racist comments on the Internet. இத்தே பட்சிட்டு அலிச்ச்சுருங்கோ. முந்திமுந்தி ப்லாக்ல கம்மென்ட்ல மத்தவங்க ப்லாக் கம்மமென்ட்ல உள்ளதேல்லாம் அலிக்கமுடியாது .உப்பைதின்னவன் தன்னி குடிச்சாகனுமாம்.சிங்க‌ப்பூர் அரசுக்கு ஒரு ராயல் சல்யூட்டு. வாழ்க சிங்கப்பூர் ஜனநாயகம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அஞ்சான் கூறியது...
The Sedition Act is in Chapter 290 of the Statutes of Singapore. It was last revised in 1985. In September 2005, the Sedition Act was first used on individuals for making racist remarks on blog site seditious and inflammatory racist comments on the Internet. இத்தே பட்சிட்டு அலிச்ச்சுருங்கோ. முந்திமுந்தி ப்லாக்ல கம்மென்ட்ல மத்தவங்க ப்லாக் கம்மமென்ட்ல உள்ளதேல்லாம் அலிக்கமுடியாது .உப்பைதின்னவன் தன்னி குடிச்சாகனுமாம்.சிங்க‌ப்பூர் அரசுக்கு ஒரு ராயல் சல்யூட்டு. வாழ்க சிங்கப்பூர் ஜனநாயகம்.//

அப்பறம் எத்தினி பேரு இதுபோல் கிளம்பி இருக்கிங்க ?

துபாய் ராஜா சொன்னது…

// வலைப்பதிவர் நண்பராக மிகவும் இயல்பாக, அன்பாகப் பேசக் கூடியவர்கள் மிகச் சிலரே, கேபிள் சங்கர் பிரபலபதிவர் என்றாலும் பெரிய இயக்குனர் ஆக ஆனாலும் இப்படித்தான் இருப்பார் என்றே நினைக்கிறேன். இது போன்ற நண்பர்கள் நம் இருக்கும் இடத்திற்கு வருகிறார்கள் என்றால் நாம பார்க்காமல் விட்டால் நமக்கும் நட்டமே.
எழுத்து, தனிமனித பழக்க வழக்கம் இவற்றில் குழப்பிக் கொள்ள ஒன்றும் இல்லை என்று மிகத் தெளிவான புரிந்துணர்வுகள் கொண்டவர்கள் மிகச் சிலரே, அதில் கேபிள் சங்கரும் ஒருவர். மிகவும் வெளிப்படையாக பகட்டில்லாமல் பேசும் கேபிள்ஜி த கிரேட்.//

//அவரை சந்திக்க விரும்புகிறவர் எவரையும் அவர் ரொம்பவும் மகிழ்ச்சியாகத் தான் எதிர்நோக்கிப் பேசுகிறார். நம்மீது வைத்திருக்கும் மரியாதை மற்றும் அன்பு காரணமாக சந்திக்கவருகிறார்கள் என்பது புரிந்துணர்வு என்பதால் நீங்கள் தயங்கத் தேவை இல்லை.//

உண்மையான உண்மை கோவியாரே.
போலித்தனமில்லாமல்,எளிமையாக, உண்மையாக, வெளிப்படையாக, குழந்தைகள் போல் இயல்பான வெள்ளை சிரிப்போடும், திறந்த மனதோடும் பழகும் கேபிளார் வாழ்வில் பல வெற்றிகள் பெறுவது உறுதி என்பதை அவருடன் கழித்த இரண்டு பொன்மாலைப் பொழுதுகளிலும் உணர்ந்தேன். தங்களையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

பொதுவாக பிரபலமானவர்களை சந்திக்க மிகவும் தயங்கி தவிர்ப்பேன்.நாம் எதிர்பார்த்தது போல் இல்லாமல் நேர்மாறாக இருந்தால் ஏமாற்றமாக இருக்குமே என்பதுதான் காரணம். ஆனால் கேபிளாரும்,தாங்களும் என் எண்ணத்தை அடியோடு மாற்றிவிட்டீர்கள். உங்கள் மூலம் மற்ற சிங்கை பதிவர் நண்பர்களையும் சந்திக்க ஆவலாய் உள்ளேன்.

Cable சங்கர் சொன்னது…

நன்றி தலைவரே...!!

வேகநரி சொன்னது…

//இக்பால் செல்வன் சொன்னது…கலக்குங்க பாஸ் ! ஒரே அஜால் குஜால் தானா ? ஸ்ரீதேவியின் படம் நல்லாருக்கா ? !//

சகோ இக்பால் செல்வன்,
நீங்க இந்த படம் பார்த்தீர்களா?
நான் பார்க்கவில்லை. எனக்கு சினிமா அறிவு மிக குறைவு.அல்லது இல்லை. ஆனா தமிழ் சினினிமா அடிக்கடி பார்க்கும் ஒரு நம்பத்தகுந்தவர் சொன்னது என்னான்னா விஜய், அஜித் என்று பல சினிமா ரசிகருக்கு பிடிக்கிற மாதிரி ஒரு நடிகையையும் சிலருக்கு பிடிக்குமாம். அந்த நடிகை எவ்வளவோ காலத்துக்கு பின்பு இப்போ தான் மறுபடியும் நடித்ததால் அவாவின் இரசிகர்கள் அவருக்காக இங்கிலிஸ் விங்கிலிஸ் படத்தை கண் மண் தெரியாம கண்ணை மூடிக்கிட்டு புகழ்கிறாங்க. மற்றும் படி படம் ஒரு சரியான போறிங்.

எனது கவலைகள்யாவும் பூனை மதத்தின் இறைதூதராகவர இருக்கும் பெரியவர் ஒருவரும் இந்த படம் பார்க்க போய் இதற்க்குள் மாட்டுபட்டு கொண்டது தான்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்