பின்பற்றுபவர்கள்

26 மார்ச், 2009

நாளைய செய்தி - பாமக !

மார்ச் 27, சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாமக கட்சியின் நிறுவனரான மருத்துவர் இராமதாஸ், இலங்கை பிரச்சனையை முன்னிட்டு ஏன் காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்து விலகிக் கொள்ளவில்லை என்று கேள்விக்கு பதில் அளித்தார். அவர் கூறியதாவது. கடந்த நவம்பர் முதல் ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை பாமக நடத்திவந்தது. அதில் ஒரு கட்டமாக காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்து பாமக உறுப்பினர்கள் விலக்கவும் முடிவு செய்யப்பட்டது. பின்னர் பொதுக்குழுவை கூட்டி விவாதித்த போது, தேர்தலுக்கு ஒரு சில மாதங்களே இருப்பதால், பாமக விலகும் பட்சத்தில் காங்கிரஸ் அரசு கவிழும் வாய்ப்பு இருந்ததால் பாமக தன் முடிவை ஒத்தி வைக்க வேண்டி ஆகிற்று. 1000 கோடிகளில் தேர்தல் செலவு செய்து தேர்ந்தெடுக்கப்படும் ஒரு இந்திய அரசை கவிழ்ப்பதால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படும், எப்படியும் ஆறு மாதங்களில் பொதுத் தேர்தலை சந்திக்கும் நிலையில் இருக்கும் பொழுது இடையில் காங்கிரசின் ஆதரவை விலக்கிக் கொள்வது மத்தியில் பெரும் குழப்பத்தையே விளைவிக்கும் என்பதால் இந்திய நலனையும் கருத்தில் கொண்டு காங்கிரஸ் அவையில் தொடர்ந்தோம். அதே சமயத்தில் ஈழத்தமிழர்களுக்கு இந்த காங்கிரஸ் அரசும் அதன் தமிழக கூட்டணி தலைமையும் எதுவும் செய்துவிட வில்லை என்பதால் அந்த கூட்டணியில் இருந்து விலகுகிறோம்.

திமுக அரசு ஈழத் தமிழர்களை கண்டு கொள்ளவில்லை கைகழுவி விட்டது, அரசு மதுக்கடைகளுக்கு எதிராக நாங்கள் எவ்வளவோ போராடினோம், குறைந்த பட்சம் தமிழகத்தில் மதுவிலக்கை அமுல்படுத்தி தமிழக நலனைக் காக்கவும் திமுக முயலவில்லை, இலவசம் திட்டம் என்ற பெயரில் மக்களுக்கு இலவசங்களை வழங்கிவிட்டால் ஓட்டுக்களை தங்கள் வசம் ஆக்கமுடியும் என்று நினைத்து தவறாக செயல்படுகின்றன. திமுக அரசின் செயல்பாடுகளை நாங்கள் தொடர்ந்து எதிர்த்துவருகிறோம், திருந்துவார்கள் என்று நினைத்தோம், தற்பொழுது வேறு வழி இன்றி கூட்டணியில் இருந்து பிரிகிறோம். ஆளும் கட்சியாக இருக்கும் கருணாநிதியைவிட சகோதரி ஜெயலலிதா ஈழ நலன்களில் மிகுந்த அக்கரை காட்டுகிறார். திமுகவின் மக்கள் விரோத அரசை இந்த தேர்தலில் முற்றிலுமாக மக்கள் புறக்கணிப்பார்கள்.

நிருபர் : அதிமுகவுடன் நீங்கள் கைகோர்த்தால் ஈழபிரச்சனை உடனே தீர்ந்துவிடுமா ?

மருத்துவர் : நோ கமெண்ட்ஸ்



முழுவதும் வாசிக்க... உண்மையான பேட்டி இங்கே

19 கருத்துகள்:

S.A. நவாஸுதீன் சொன்னது…

நிருபரின் ஒரு வரிக்கேள்வி மருத்துவரின் மொத்த விளக்கங்களையும் தவிடுபொடியாகி விட்டது.

கோவி.கண்ணன் சொன்னது…

//Syed Ahamed Navasudeen said...
நிருபரின் ஒரு வரிக்கேள்வி மருத்துவரின் மொத்த விளக்கங்களையும் தவிடுபொடியாகி விட்டது.
//

சகோதரியை நம்பி என்ன பதில் அளிக்க முடியும் ?
:)))))

அப்பாவி முரு சொன்னது…

//நிருபர் : அதிமுகவுடன் நீங்கள் கைகோர்த்தால் ஈழபிரச்சனை உடனே தீர்ந்துவிடுமா ?

மருத்துவர் : நோ கமெண்ட்ஸ்//

நிருபர் : அதிமுகவுடன் நீங்கள் கைகோர்த்தால் தமிழக பிரச்சனைகள் உடனே தீர்ந்துவிடுமா ?

மருத்துவர் : நோ கமெண்ட்ஸ்

TBR. JOSPEH சொன்னது…

மருத்துவர் ஐயாகிட்ட இந்த மாதிரி கேள்விங்களையெல்லாம் கேட்டு பலன் இல்லீங்க. தேர்தல்ல ஜெயிச்சதுக்கப்புறம் ஏதாச்சும் காரணத்த சொல்லி யூபிஏ பக்கம் சாஞ்சாலும் சாய்வார். யார் கண்டா? கொள்கைன்னு ஒன்னு இருந்தாத்தான?

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

நோ கமெண்ட்ஸ்

Unknown சொன்னது…

//ஆளும் கட்சியாக இருக்கும் கருணாநிதியைவிட சகோதரி ஜெயலலிதா ஈழ நலன்களில் மிகுந்த அக்கரை காட்டுகிறார்//
என்னென்ன மாதிரி அக்கறை என்று கேட்டிருந்தாலும் 'நோ கமெண்ட்ஸ்'தான்

மணிகண்டன் சொன்னது…

நிருபர் : அதிமுகவுடன் நீங்கள் கைகோர்த்தால் தமிழக பிரச்சனைகள் உடனே தீர்ந்துவிடுமா ?

மருத்துவர் : நோ கமெண்ட்ஸ்

நிருபர் : திமுகவுடன் நீங்கள் கைகோர்த்தால் தமிழக பிரச்சனைகள் உடனே தீர்ந்துவிடுமா ?

மருத்துவர் : தீராது.

நிருபர் : காங்கிரஸ் கூட நீங்கள் கைகோர்த்தால் தமிழக பிரச்சனைகள் உடனே தீர்ந்துவிடுமா ?

மருத்துவர் : அதுக்கு தான் தம்பி திருமா இருக்காரு. அவரு பாத்துப்பாரு.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

நோ கமெண்ட்ஸ்

சி தயாளன் சொன்னது…

நோ கமெண்ட்ஸ்..

பழூர் கார்த்தி சொன்னது…

அருமையா சொல்லி இருக்கீங்க.. ஒவ்வொரு தேர்தலும் சீட்டு பேரம் பேசி அணி மாறியே பாமக வளர்ந்து விட்டது.. அதிமுக, திமுக இரண்டுமே பாமகவை கைவிட்டால், பாமக கதை முடிந்து விடும் :-))

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//தேர்தலுக்கு ஒரு சில மாதங்களே இருப்பதால், பாமக விலகும் பட்சத்தில் காங்கிரஸ் அரசு கவிழும் வாய்ப்பு இருந்ததால் பாமக தன் முடிவை ஒத்தி வைக்க வேண்டி ஆகிற்று. 1000 கோடிகளில் தேர்தல் செலவு செய்து தேர்ந்தெடுக்கப்படும் ஒரு இந்திய அரசை கவிழ்ப்பதால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படும்,//

ஆடு நனையுதேனு ஓனான் அழுவுதுங்கோஓஓஓஓஓஓஓஒ.....
என்று தனியும் இந்த அரசியல் காமடி

பெயரில்லா சொன்னது…

அரசியல் காட்சிகள் அரங்கேற ஆரம்பித்தாகியது!

தமிழர் நேசன் சொன்னது…

//சகோதரியை நம்பி என்ன பதில் அளிக்க முடியும் ?
:)))))//

முற்றிலும் உண்மை நண்பரே!! வைகோ படும் பாடு தெரியாதவரா ராமதாஸ்..

என்ன சொல்ல விதி...

தமிழர் நேசன் சொன்னது…

//டி.பி.ஆர் said...

மருத்துவர் ஐயாகிட்ட இந்த மாதிரி கேள்விங்களையெல்லாம் கேட்டு பலன் இல்லீங்க. தேர்தல்ல ஜெயிச்சதுக்கப்புறம் ஏதாச்சும் காரணத்த சொல்லி யூபிஏ பக்கம் சாஞ்சாலும் சாய்வார். யார் கண்டா? கொள்கைன்னு ஒன்னு இருந்தாத்தான?//

கொள்கைய பார்த்து மக்கள் ஓட்டு போட்ட நாடு ஏன் இப்படி இருக்குது நண்பரே!!

தமிழர் நேசன் சொன்னது…

//அருமையா சொல்லி இருக்கீங்க.. ஒவ்வொரு தேர்தலும் சீட்டு பேரம் பேசி அணி மாறியே பாமக வளர்ந்து விட்டது.. அதிமுக, திமுக இரண்டுமே பாமகவை கைவிட்டால், பாமக கதை முடிந்து விடும் :-))//

ஆம் முடிந்து விடும். ஏன் கை விட வில்லை? ஏனென்றால் தி.மு.க வும் அ.தி.மு.கா வும் இது போன்ற பல கட்சிகளை நம்பித்தான் இருக்கின்றன. மக்களின் ஓட்டு நிர்ணயம் பணத்துக்காக என்று இருக்கும் வரை எதுவும் மாறாது நண்பரே..

priyamudanprabu சொன்னது…

நானும்
நோ கமெண்ட்ஸ்..

கீழை ராஸா சொன்னது…

நேற்று முந்தினம்
அதிமுக
நேற்று
திமுக
இன்று
அதிமுக
நாளை
திமுக
நாளை மறுநாள்
அதிமுக...
எப்போது ஆகும் அது
பாமக

அப்பாவி முரு சொன்னது…

/கீழை ராஸா 4:37 AM, March 27, 2009
நேற்று முந்தினம்
அதிமுக
நேற்று
திமுக
இன்று
அதிமுக
நாளை
திமுக
நாளை மறுநாள்
அதிமுக...
எப்போது ஆகும் அது
பாமக//

சூப்பர்.

"உழவன்" "Uzhavan" சொன்னது…

//1000 கோடிகளில் தேர்தல் செலவு செய்து தேர்ந்தெடுக்கப்படும் ஒரு இந்திய அரசை கவிழ்ப்பதால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படும்//

இந்திய நலனில் பாமக வா???!!!

நிருபர்: உங்கள் கட்சி எப்போதுமே ஜெயிக்கிற கூட்டணிலதான இருக்கும். இந்த தேர்தல்ல எப்படி?

அன்புமணி: அப்படியில்ல.. நாங்க இருக்கிற கூட்டணிதான் எப்பவுமே ஜெயிக்கும்.

எல்லா நிருபர்களும் (மனதிற்குள்) : ஓஓஒ..

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்