பின்பற்றுபவர்கள்

25 மார்ச், 2009

ஆளும் கட்சிகள் செய்யும் தேர்தல் கால தவறுகள் !

தேர்தல் ஆணையம் தானியங்கி நிறுவனம் என்றாலும் அரசுடன் ஒத்துழைப்புடன் நடந்து கொள்ளவில்லை என்றால் ஆணைய வளர்ச்சிகள், வசதிகள் இவற்றை அரசும் கண்டுகொள்ளாது, எனவே எழுதப்படாத ஒப்பந்தமாக அரசுசார்(ந்த) நிறுவனங்கள் எதுவென்றாலும் அதில் அரசியலும், ஆளும் அரசியல்வாதிகளின் நலனும் கலந்தே இருக்கும், டி என் சேசனுக்கு முன் தேர்தல் ஆணையம் ஒன்று இருப்பதே யாருக்கும் தெரியாது. தேர்தல் ஆணையம் என்பது ஆளும்கட்சியை சார்ந்த நிறுவனம் அல்ல தனித்து செயல்படும் அரசு நிறுவனம் என்று பொதுமக்கள் அறிந்து கொண்டது டி.என்.சேஷனால் தான். தேர்தல் ஆணையத்தின் மீது அரசியல்வாதிகளுக்கு பயமும், அவர்களால் விமர்சனமும் செய்யும் அளவுக்கு கொண்டு சென்ற பெருமை டி.என்.சேஷனையே சாரும். அதில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு அவரது அரசியல் நடவடிக்கைகளுக்கு பெரிய அளவில் ஆதரவு இல்லை என்பது வேறு தகவல்கள்.

தேர்தலுக்கு முன் தேர்தல் எப்போது நடத்துவது என்பதை எழுதப்படாத மரியாதை நிமித்தமாக ஆளும்கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் கலந்து முடிவெடுப்பது வழக்கம், குறிப்பாக புதிய அரசு தலைமைகள் மாறும் போது தேர்தல் ஆணையர்கள் சென்று அந்த அரசியல் தலைமைகளை சந்தித்து வருவதும் வழக்கமாம், அதை தமிழக தேர்தல் ஆணையர் செய்யவில்லை என்று கலைஞர் அண்மையில் மனம் புழுங்கி இருந்தார். அப்படி செய்வது எங்களுக்கு ஆணை வழியாக வழியுறுத்திச் சொல்லப்படவில்லை என்று ஆணையரும் பதில் சொல்லி இருந்தார். இருவரும் போட்டி போட்டு செய்தி இதழ்களில் பேட்டிக் கொடுத்தார்கள். மக்கள் தலைவர்களை அரசு உயர் அலுவலர்கள் மதிப்பதற்கு தயாராக இருப்பதில்லை என்பதாகத் தான் விளங்கிக் கொண்டேன். இதுவே வேலை தகுதி மேம்பாடு (ப்ரமோஷன்) கிடைக்கும் வாய்பென்றால் ஆளும் அரசியல் வாதிகளை காக்கைகள் கூட்டம் போல் அரசு உயர் அலுவலர்கள் மொய்திருப்பார்கள். சரி.... சொல்ல வந்தது வேறு

தேர்தல்கால திருவிழாவாக கருத்து கணிப்புகளை செய்தி இதழ்கள் வெளி இடுவது முந்தைய வழக்கம், பெரும்பாலும் கருத்துக் கணிப்புகள் ஆளும் கட்சிக்கு எதிரானவையாகவே இருக்கும், இந்தியா ஒளிருகிறது என்று கோடிக்கணக்கில் அரசு பணத்தை செலவு செய்து அடுத்த தேர்தலிலும் கொழிக்கலாம் என்று நினைத்த பாஜவுக்கு அப்போதைய கருத்து கணிப்புகள் பெரும் தலைவலியாக இருந்தன. வேறு வழியின்றி கருத்து கணிப்புகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் என்கிற திரைமறைவு கோரிக்கையை பரிசீலனை செய்து 'கருத்து கணிப்புகளை வெளி இடுவது, மக்களை சுயமாக முடிவெடிக்க முடியாமல் செய்துவிடும் தவறான உத்திகள்....அவற்றில் உள்நோக்கம் கொண்டவையும் தவறான கருத்துக்கணிப்புகளும் கூட இருக்கலாம்' என்று தேர்தல் ஆணையம் லாஜிக்காக விளக்கம் கொடுத்து கருத்து கணிப்புகளை வெளி இட ஊடகங்களுக்கு தடைவிதித்தது.

தற்பொழுது ஈழத்தமிழர்கள் படும் துயரங்களை மக்கள் முன் கொண்டு சென்று ஆளும் காங்கிரசுக்கு எதிராக பெரிய எதிர்ப்பலையை ஏற்படுத்த ஈழநல அமைப்புகள் திட்டமிட்டு இருந்தன, இதிலும் தேர்தல் ஆணையம் மூக்கை நுழைத்து அதற்கும் தடை விதித்திருப்பதாக அறிய முடிகிறது, இதில் காங்கிரசின் தலையீடுகளே இருக்காது என்று எவரும் சொன்னால் அவரின் நம்பகத் தன்மை எத்தகையதாக இருக்கும் என்பதை யாரும் சொல்லி தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. தேர்தல் காலங்களை மக்கள் திருவிழா போலவே கொண்டாடினார்கள், இப்போதெல்லாம் இரவு 10 மணிக்கு மேல் பேசக்கூடாது........முதல் ஏகப்பட்ட கூடாதுகளை தேர்தல் ஆணையம் விதித்திருக்கிறது, அவை ஒழுங்கு முறை நடவடிக்கையா ? தேர்தல் ஆணையத்தின் அதிகார வெறியா என்கிற ஆராய்ச்சிக்கு நான் செல்லவில்லை. சட்டத்தில் அனுமதி இருந்தால் கொலை கூட ஞாயமானதே என்பதாகவே புரிந்து கொள்ளப்படும், பேசப்படும், வழியுறுத்தப்படும்.

ஈழத்தமிழர்களின் அவலங்களையும், ஈழம் தொடர்பானவற்றையும் தேர்தலில் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லும் தேர்தல் ஆணையம் வரும் காலத்தில் (அகால) மரணம் அடையும் தலைவர்களின் பிணங்களைக் கட்டி மக்களிடம் அனுதாபம் அலையை ஏற்படுத்த முயன்றால் அதனையும் தடுக்க முயற்சி எடுக்கவேண்டும்.

யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொள்வது போல் ஆளும் கட்சியாக இருக்கும் போது தேர்தல் ஆணையத்திடம் ரகசிய ஆணை பிறப்பிக்கும், கோரிக்கை வைக்கும் அரசியல் கட்சிகள் அதற்கான எதிர்பலனை எதிர்கட்சியாக இருக்கும் போது அடைகின்றன

8 கருத்துகள்:

அப்பாவி முரு சொன்னது…

//(அகால) மரணம் அடையும் தலைவர்களின் பிணங்களைக் கட்டி மக்களிடம் அனுதாபம் அலையை ஏற்படுத்த முயன்றால் அதனையும் தடுக்க முயற்சி எடுக்கவேண்டும்//

சரியான கோரிக்கை.

இதுமட்டும் 1991-லேயே புழக்கத்தில் இருந்திருந்தால் நாமெல்லாம் அம்மா இல்லாமல் அனாதையாகியிருப்போம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//சரியான கோரிக்கை.

இதுமட்டும் 1991-லேயே புழக்கத்தில் இருந்திருந்தால் நாமெல்லாம் அம்மா இல்லாமல் அனாதையாகியிருப்போம்.//

இந்தியாவும் 'அன்னை' இல்லாமல் அனாதையாகி இருக்கும் !
:))

அப்பாவி முரு சொன்னது…

// கோவி.கண்ணன் said...
//சரியான கோரிக்கை.

இதுமட்டும் 1991-லேயே புழக்கத்தில் இருந்திருந்தால் நாமெல்லாம் அம்மா இல்லாமல் அனாதையாகியிருப்போம்.//

இந்தியாவும் 'அன்னை' இல்லாமல் அனாதையாகி இருக்கும் !
:))//

ஐய்யோ.,அப்ப இந்த கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.

அம்மாவும் இல்லாம், அன்னையும் இல்லாம இந்தியாவில் எவ்வாறு அரசியல் நடக்கும்.

டீ பார்ட்டி இருக்காது, இலங்கையில் பிரச்சனை இருக்காது இப்பிடியே போனா வாழ்க்கையில் சுவாரசியம் இருக்காது...

ஷங்கர் Shankar சொன்னது…

\\ தற்பொழுது ஈழத்தமிழர்கள் படும் துயரங்களை மக்கள் முன் கொண்டு சென்று ஆளும் காங்கிரசுக்கு எதிராக பெரிய எதிர்ப்பலையை ஏற்படுத்த ஈழநல அமைப்புகள் திட்டமிட்டு இருந்தன, \\

இதுவரைக்கும் யாருமே ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுத்தாக தெரியவில்லை

நையாண்டி நைனா சொன்னது…

ப்ரெசென்ட் சார்.

உங்கள் தேர்தல் நேர அலுப்பு போக, நம்ம கடைக்கு கொஞ்சம் வாங்க....

அக்னி பார்வை சொன்னது…

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

ராஜ நடராஜன் சொன்னது…

//தேர்தல் ஆணையம் என்பது ஆளும்கட்சியை சார்ந்த நிறுவனம் அல்ல தனித்து செயல்படும் அரசு நிறுவனம் என்று பொதுமக்கள் அறிந்து கொண்டது டி.என்.சேஷனால் தான்.//

பொதுமக்கள் மட்டுமல்ல!அரசியல்வாதிகள் கூட!ஏன்னா அவர்காலத்தில் தான் அரசியல்வாதிகளுக்கு ஆப்புகள் ஆரம்பமாகின.

ராஜ நடராஜன் சொன்னது…

//ஈழத்தமிழர்களின் அவலங்களையும், ஈழம் தொடர்பானவற்றையும் தேர்தலில் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லும் தேர்தல் ஆணையம்//

இந்த தேர்தலின் தமிழக மையமே இதுதான்.அதுக்கும் ஆப்பு வச்சிட்டாங்களா?இந்த தைரியத்தில்தான் கலைஞர் இந்த தேர்தலில் ஈழம் குறித்த வெளிப்பாடுகள் தேர்தலை பாதிக்காது என்று அறிக்கை விட்டாரா?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்