பின்பற்றுபவர்கள்

11 மார்ச், 2009

யார் யார் இந்தியன் ?

யாராவது தான் இந்தியன் என்று அறிந்து கொள்ளவேண்டுமென்றால் சத்திய மூர்த்திபவனுக்குச் சென்றால் அறிந்து கொள்ளலாம். வைகோ இந்தியனாக இருக்கத் தகுதியற்றவர் என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் தங்கபாலு. அதற்குக் காரணாமாக பின்வரும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதமாக,

கேள்வி: இலங்கையில் இந்திய வீரர்கள் முகாமிட்டு போரில் ஈடுபடுவதாக வைகோ குற்றம் சாட்டியிருக்கிறாரே?

பதில்: அவர் சொல்வது அப்பட்டமான பொய். வைகோ, முரண்பாடுகளுக்கு சொந்தமானவர். இந்திய இறையாண்மைக்கு எதிரானவர். ராஜீவ் கொலைக்கு பிறகும் 6 மாதங்கள் விடுதலைப் புலிகளுக்கு உணவும், மருந்தும் கொடுத்து காப்பாற்றியதாக ஒப்புக் கொண்டிருக்கிறார். அவர் எப்படி உண்மையான இந்தியனாக இருக்க முடியும். இந்தியன் என்று சொல்வதற்கே வைகோ தகுதி அற்றவர்.


****

பகைவனுக்கும் அருள்வாய் நெஞ்சே.... என்னும் விதமாக அன்றைய சூழலில் இந்திய இராணுவத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவும் மருந்தும் கொடுத்ததாக வைகோ ஒப்புக் கொண்டுள்ளார்
இது தேச துரோகமாம். அப்படி என்றால் சொந்த நாட்டு இராணுவத்திற்கு பீராங்கி வாங்கியதில் ஆயிரம் கோடிகளை கையூட்டாக பெற்ற போஃபர்ஸ் ஊழல் எல்லாம் என்ன கணக்கு ? குற்றம் நிரூபிக்கப் படாததால் ஒருவர் குற்றவாளி இல்லை என்று ஆகிவிடாது. போஃபர்ஸ் விசாரணைக்கு காங்கிரஸ் ஒத்துழைப்பு கொடுத்த விவரம் நாடே நாறிய ஒன்றுதான். நாட்டின் தலைமகனாக தேர்ந்தெடுக்கப்பட்டவரே பொதுமக்கள் வரிப்பணத்தில் இருந்து வாங்கும் இராணுவா தளவாடங்களுக்கு கமிசன் பெற்றுக் கொண்டதைவிட பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு வைகோ உதவியது ஒன்றும் மிகப் பெரிய இந்திய துரோகமாக தெரியவில்லை.

சென்னையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உதவுவதற்காக காங்கிரஸ் சார்பில் வரும் 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் நிவாரண பொருட்கள் திரட்டப்படும். இந்த நிவாரண உதவிகள் அனைத்தும் 15ம் தேதி சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து சேரும்


***

இலங்கைக்கு ஆயுதம் கொடுத்தது போலவே அந்த ஆயுதங்களால் வீழ்ந்தவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு முழுவதும் (மரண வலி) நிவாரண பொருட்கள் திரட்டப்படுகிறதாம். மானமுள்ள தமிழன் காங்கிரஸ் தாரும் நிவாரண பொருள்களை ஏற்பார்ர்களா என்பது வேறு விசயம்.

யார் தேச துரோகிகள் ? நாடு விடுதலை அடைந்ததும் மகாத்மா காந்திஜி காங்கிரஸின் நோக்கம் நிறைவேறிவிட்டது, இனியும் அரசியல் கட்சியாக தொடர்ந்தால் வாரிசு அரசியலும் ஊழலும் பெருகும் எனவே காங்கிரசை கலைத்துவிட வேண்டுகோள் வைக்கிறேன் என்றார். ஆதிக்க வெறியர்கள், பண்ணையார்கள் தங்களுக்கு பாதுகாப்பு கொடுத காங்கிரசை கலைக்க முன்வந்தார்களா ? நேருவில் இருந்து இராகுல் காந்திவரை வாரிசு அரசியல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

சுதந்திர போராட்டத்தைச் சொல்லி இன்றும் காங்கிரசுக்கு வாக்கு கேட்டு ஆதிக்கத்த தக்கவைத்துக் கொள்ள, அரசு பதவி அதிகார வெறியில் செயல்படுபவர்கள் தேச நலவிரும்பிகளா ? காந்தி சொன்ன போது கலைக்காவிட்டாலும் காங்கிரஸ் முதல்முறை ஆட்சியை இழந்த போதே மக்கள் செல்வாக்கு சரிந்துவிட்டது என கருதி கட்சியை கலைத்திருக்க வேண்டும். செய்யவில்லை. இழுத்துப் பிடித்துக் கொண்டு கூட்டணி ஆட்சியில் காலம் ஓட்டிக் கொண்டு, யார் இந்தியன் யார் இந்திய தேச துரோகி என்று சொல்வதற்கு காங்கிரஸ் கட்சியில் யாருக்கும் அருகதையே இல்லை.

14 கருத்துகள்:

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

//காங்கிரஸ் கட்சியில் யாருக்கும் அருகதையே இல்லை//

இவண்

சிங்கைவாழ் இந்தியன்

தமிழர் நேசன் சொன்னது…

//கேள்வி: இலங்கையில் இந்திய வீரர்கள் முகாமிட்டு போரில் ஈடுபடுவதாக வைகோ குற்றம் சாட்டியிருக்கிறாரே?
பதில்: அவர் சொல்வது அப்பட்டமான பொய். //

கல்மடுக்க் குளம் உடைக்கப்பட்ட போது, நடந்த தாக்குதலில், காயமடைந்து கொழும்பு இராணுவ மருத்துவமனையில் பத்துக்கும் மேற்ப்பட்ட இந்திய இராணுவ அதிகாரிகள் சிகிச்சை பெற்று வருவதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது, இதோ போல பல ஆதாரப்பூர்வமான தகவல்களும் ஆதாரங்களும் உள்ளன.

குறிப்பாக "கடந்த 2008 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 8 ஆம் நாள் இரவு, விடுதலைப் புலிகளின் வான்படை வான் தாக்குதல் சிங்கள இராணுவ முகாம்மீது நடத்தப்பட்டபோது, இந்திய கதுவீகளை இயக்கிய இந்தியர்களான ஏ.கே.தாகூர், சிந்தாமணி ரமட் எனும் இரண்டுபேர் படுகாயமுற்ற செய்தி வெளியானது" இது தொடர்பாக வைகோவுக்கு, மன்மோகன் எழுதிய கடிதத்தில் "இலங்கையின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க இந்தியா இராணுவ உதவி செய்துள்ளது" என்று ஒப்புக்கொண்டுள்ளார். இது போன்ற ஆதாரங்களை முன்நிலைப் படுத்தியே வைகோ குற்றம் சாட்டுகிறார். http://kottumurase.blogspot.com/2009/03/blog-post_02.html

சத்திய மூர்த்தி பவனில் உள்ளவர் எவரும் எந்த பத்திரிக்கையும் படிப்பதில்லை, உண்மைச் செய்திகளை தெரிந்து கொள்வது இல்லை. வெறுமனே யாராவது கேள்வி கேட்டால், அதற்க்கு அப்படியே மறுப்பு பேசிவிட்டு (வடிவேலு மொழியில் சொல்ல வேண்டுமென்றால் "பக்கித்தனமாக பேசிவிட்டு")ஓடிவிடுவது.. இது வரை இந்த வெண்கல பாலு வெளியிட்ட அறிக்கையில் ஏதாவது அடிப்படையோ ஆதாரமோ இருந்தால் காங்கிரஸ் காரர்கள் காண்பிக்கட்டும்.

//இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உதவுவதற்காக காங்கிரஸ் சார்பில் வரும் 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் நிவாரண பொருட்கள் திரட்டப்படும்.//

கழுத்தை அறுத்துவிட்டு கைப்புண்ணுக்கு மருத்துவம் செய்யும் மகா உத்தமர்கள் இவர்கள் தான். இன்று வரை ஒரு ஆண்டுக்கும் மேலாக தினமும் பல பத்துப்பேர், சிறுவர்கள், வயதில் முதிர்தவர்கள், வாழ்வின் எந்த சுகங்களையும் அனுபவித்திராத இளைஞர்கள், மருத்துவ மணியில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் என்று பாரபட்சம் இன்றி கொன்று குவிக்கும் போது வாயையும் இன்னும் பிறவற்றையும் பொத்திக்கொண்டு இருந்துவிட்டு தேர்தல் என்றவுடன், நல்லவர்களை போல நடித்து ஓட்டு வாங்கி பதவி சுகம் அனுபவிப்பவர்களை நீங்கள் என்னவென்று எண்ணுவீர்கள்??

காந்தியின் வழிவந்த உத்தமர்கள்!! வாழ்க!! இவர்களுக்கே இந்த மக்களும் ஓட்டு போடுவார்கள்.. தமிழனை காப்பாற்ற அந்த ஆண்டவன் வந்தாலும் முடியாது..

வால்பையன் சொன்னது…

ஆபத்துகால்த்தில் ஒருவருக்கு உதவி செய்வது மனித தன்மை!
அதற்கு இந்தியனாகவோ, நார்வேகாரனாகவோ இருக்க வேண்டும் என அவசியமில்லை!

ராசீவ் கால்த்தில் மட்டுமல்ல!
இன்றுமூழலில் மலிந்து கிடக்கிறது காங்கிரஸ் அரசு!

அவர்களுக்கு மற்றவர்களை விமர்சிக்க தகுதியில்லை!

முக்கியமாக வைகோ பாதிக்கப்படவர்களுக்கு உதவி செய்தார் என்பதை!

ஒருவேளை வைகோ புலிகளை ஊட்டி வளர்ந்திருந்தால், அது வேறு எதோ உள்நோக்கத்துடன் தான் நடந்திருக்கும்.
அதை காங்கிரஸ் சொல்லாவிட்டாலும் இந்திய அரசியல் சட்டப்படி அது தவறு!

Sathiyanarayanan சொன்னது…

நான் இந்தியன் என்பதில் வெட்கப்படுகிறேன், அசிங்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன்

ராம்.CM சொன்னது…

வேதனைப்படுகிறேன்

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//சத்திய மூர்த்தி பவனில் உள்ளவர் எவரும் எந்த பத்திரிக்கையும் படிப்பதில்லை, உண்மைச் செய்திகளை தெரிந்து கொள்வது இல்லை. வெறுமனே யாராவது கேள்வி கேட்டால், அதற்க்கு அப்படியே மறுப்பு பேசிவிட்டு (வடிவேலு மொழியில் சொல்ல வேண்டுமென்றால் "பக்கித்தனமாக பேசிவிட்டு")ஓடிவிடுவது.. இது வரை இந்த வெண்கல பாலு வெளியிட்ட அறிக்கையில் ஏதாவது அடிப்படையோ ஆதாரமோ இருந்தால் காங்கிரஸ் காரர்கள் காண்பிக்கட்டும்.//

தமிழர் நேசன் தாங்கள் சொல்வது நூறு விழுக்காடு சரியே!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//பகைவனுக்கும் அருள்வாய் நெஞ்சே.... என்னும் விதமாக அன்றைய சூழலில் இந்திய இராணுவத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவும் மருந்தும் கொடுத்ததாக வைகோ ஒப்புக் கொண்டுள்ளார்
இது தேச துரோகமாம். அப்படி என்றால் சொந்த நாட்டு இராணுவத்திற்கு பீராங்கி வாங்கியதில் ஆயிரம் கோடிகளை கையூட்டாக பெற்ற போஃபர்ஸ் ஊழல் எல்லாம் என்ன கணக்கு ? குற்றம் நிரூபிக்கப் படாததால் ஒருவர் குற்றவாளி இல்லை என்று ஆகிவிடாது. போஃபர்ஸ் விசாரணைக்கு காங்கிரஸ் ஒத்துழைப்பு கொடுத்த விவரம் நாடே நாறிய ஒன்றுதான். நாட்டின் தலைமகனாக தேர்ந்தெடுக்கப்பட்டவரே பொதுமக்கள் வரிப்பணத்தில் இருந்து வாங்கும் இராணுவா தளவாடங்களுக்கு கமிசன் பெற்றுக் கொண்டதைவிட பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு வைகோ உதவியது ஒன்றும் மிகப் பெரிய இந்திய துரோகமாக தெரியவில்லை.

சென்னையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உதவுவதற்காக காங்கிரஸ் சார்பில் வரும் 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் நிவாரண பொருட்கள் திரட்டப்படும். இந்த நிவாரண உதவிகள் அனைத்தும் 15ம் தேதி சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து சேரும்//

கோவியாரே!
ஆமா நம்ம இந்தியாவின் சம்மந்தி ஓரத்து ஆளு....! அவர் பேரென்னா? குவாட்டரோச்சியா?
குவாட்டர் ஓச்சியை வழக்குகளில் இருந்து நழுவ விட்டாங்களே! அது எவ்வளவு பெரிய தேச துரோகம். அப்போது இவர்களோட இறையாண்மை எங்கே போனது?
காங்கிரஸ் பேரியக்கத்தை சேர்ந்தவர்கள்/தலைவர்கள் பெரும்பாலோர் நாட்டு/உலக நடப்பே தெரியாம இருப்பது வாடிக்கை/வேடிக்கை.

Matra சொன்னது…

Anyone who supports Antonia Maino alias Sonia Gandhi can never be a patriotic Indian.

Let these Congress lowlife characters save their party from the Nehru dynasty before they talk about patriotism, decency in public life, corruption etc.

priyamudanprabu சொன்னது…

////
சொந்த நாட்டு இராணுவத்திற்கு பீராங்கி வாங்கியதில் ஆயிரம் கோடிகளை கையூட்டாக பெற்ற போஃபர்ஸ் ஊழல் எல்லாம் என்ன கணக்கு ?
////

எத்தனை தடவ கேட்டாலும் பதில் வராத கேள்வி

priyamudanprabu சொன்னது…

////
நாடு விடுதலை அடைந்ததும் மகாத்மா காந்திஜி காங்கிரஸின் நோக்கம் நிறைவேறிவிட்டது, இனியும் அரசியல் கட்சியாக தொடர்ந்தால் வாரிசு அரசியலும் ஊழலும் பெருகும் எனவே காங்கிரசை கலைத்துவிட வேண்டுகோள் வைக்கிறேன் என்றார்
/////

அதுக்குத்தான் மூன்று துப்பாக்கிதோட்டா பர்ரிசு தந்தானே ஒரு இந்தியன்

Sanjai Gandhi சொன்னது…

தனி நபர் கட்சி!? நடத்தும் வைகோவை எல்லாம் ஒரு பொருட்டாக நினைத்து பதில் சொன்னதற்காக தங்கபாலுவை அசிங்கமாக திட்டி பதிவு போட்டிருக்க வேண்டும். சரி அதை நான் செய்துக் கொள்கிறேன். :))

பாவம் வைகோ.. அவர் இப்போ இருக்கிற நிலைல உங்கள மாதிரி நல்ல உள்ளங்களின் ஆதரவாவது இருக்கனும்.. ரொம்பவே பரிதாபமா இருக்கு.. இப்போ எல்லாம் அவ்ரை விமர்சிக்க கூட மனசு வரலை கோவியாரே.. :((

முன்னாடி போனா செஞ்சியார் அண்ட் கோ கடிக்கிறாங்க.. பின்னாடி போனா கண்ணப்பன் அண்ட் கோ உதைக்கிறாங்க.. பாவமய்யா வைகோ.. திமுகவுல எப்டி எல்லாம் இருந்தாரு..

போர் நடந்தால் மக்கள் சாகத் தான் செய்வார்கள் என்று திருவாய் மலர்ந்த செல்வி ஜெயலலிதா கூட மேடைல உட்கார வாய்ப்பு கெடைச்சாலே பாக்கியம்னு இருக்காரே அந்த வைகோவுக்கு தானே வக்காலத்து வாங்கறிங்க?

ஒரு தலைவருக்கு மகனாக பிறந்ததாலேயே ஒருவர் அரசியலுக்கு வரக்கூடாது.. அப்டி வந்தால் அதுக்கு பேர் வாரிசு அரசிய்ல்னு சொல்றது குழந்தை தனம். அரசியலுக்கு வர எல்லாக் குடிமகனுக்கும் உரிமை இருக்கு..

ஒரு கட்சியில் யார் எங்கு இருக்க வேண்டும் என்பதை அந்த கட்சியின் தொண்டர்கள் விருப்பம்.. தொண்டர்கள் விருப்பம் இல்லாமல் எதுவும் நடக்காது.. அப்டி விருப்பம் இல்லாதவங்க வெளிய போய்டறாங்க.. அதனால வாரிசு அரசியல்னு சொல்லி குழந்தையாவே இருக்காதிங்க. வசுந்தரா ராஜே, ஜெஸ்வந்த் சிங், கல்யான் சிங், முலயம் யாதவ், ரமதாஸ், கருணாநிதி ஆகியோரின் மகன்களுக்கும் சேர்த்து தான் இந்த பதில்.. ராகுலுக்காக அல்ல. ராகுலை ஏற்ற்க் கொண்டது எங்கள் கட்சி விஷயம். அதைப் பற்றி பிறர் கவலை கொள்ள தேவை இல்லை..
நீங்கள் எதிர்த்துக் கொள்ளுங்கள். நாங்கள் ஆதரித்துக் கொள்கிறோம். எது மெஜாரிட்டியோ அது வெல்லும்.. அம்புட்டு தான் சாமியோவ்.. :)

Sanjai Gandhi சொன்னது…

// வால்பையன் said...
ஆபத்துகால்த்தில் ஒருவருக்கு உதவி செய்வது மனித தன்மை!
அதற்கு இந்தியனாகவோ, நார்வேகாரனாகவோ இருக்க வேண்டும் என அவசியமில்லை!
//

கலக்கறேள் வால்.. தலாய்லாமாவுக்கு அடைக்கலம் குடுக்கிறதுக்கும் பின்லாடனுக்கு அடைக்கலம் தரதுக்கும் வித்தியாசம் இருக்குங்க்ணோவ்.. :)

கோவி.கண்ணன் சொன்னது…

சஞ்ஜெய்,

பதிவின் மைய கருத்து வாரிசு அரசியல் பற்றியதல்ல. யார் யார் இந்தியன் என்று சொல்ல காங்கிரசுக்கு என்ன அருகதை இருக்கிறது என்பதே கேள்வி. அதற்கு பதிலே வரவில்லை. துணைக்கு பல அரசியல் கட்சிகளைச் சேர்த்து வாரிசு அரசியலுக்கு பதில் சொல்லிக் கிட்டு இருக்கிங்க. பரவாயில்லை விடுங்க. விடையில்லா கேள்விகள் என்று எதுவும் இல்லை, பதில்வரா கேள்விகளே உண்டு.

Sanjai Gandhi சொன்னது…

//பதிவின் மைய கருத்து வாரிசு அரசியல் பற்றியதல்ல.//

தலைப்பு மட்டுமே இப்படி இருக்கு.. பதிவில் பல கருத்துகள் தெரிந்தது. நானும் வாரிசு அரசியல் பத்தி மட்டுமே பேசவில்லை. அதை மட்டுமே பேசி இருந்தால் பிரபாகரன் மகன் இப்போது தலைமை ஏற்று சண்டை போடுவதையும் சொல்லி இருப்பேன். அதும் வாரிசு அரசியல் தான்.

நான் வைகோவின் பாவமான நிலையையும் சொல்லி இருக்கிறேன். வைகோவின் விஷயத்தை வைத்து காங்கிரஸ் கட்சிக்கு யார் இந்தியன்னு சொல்ல உரிமை இல்லைனு சொல்றது செம டமாஷ்.. மேலும் , இந்தியாவுக்கு முன்னுரிமை கொடுப்பவர்களே இந்தியர்கள் என்ற வகையில் கங்கிரசின் யோக்கியதை கேள்விக்கு உள்ளாகாது கோவிஜி.. :)

இந்தியாவிற்கு முன்னுரிமை.. ஈழத்திற்கு முக்கியத் துவம்.. அவ்ளோ தான்.. ஆனால் வைகோ இந்தியாவை பற்றி ஒருநாளும் கவலைபட்டது இல்லை.. அவர் கவலை எல்லாம் விடுதலைபுலிகளும் பிரபாகரனும் அதன் ப்லா ப்லாவும் தான்..அகதியாய் வந்து இருக்கும் ஈழத்தமிழருக்காக ஒரு சிறு துரும்பையும் கிள்ளி போட்டதில்லை இந்த பொய்க்கோ..

ஸோ..(சோ இல்ல:) ) வைகோ உண்மையான இந்தியனே இல்லை.. விடுதலை புலிகளின் ஏஜெண்ட்..

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்