பின்பற்றுபவர்கள்

23 மார்ச், 2009

சோதிடனால் சீரழிந்த சரவணபவன் இராஜகோபால் !

ஓட்டல் தொழிலுக்கு முன்னோடியாக பலரால் வியப்பும், பொறாமையும் அடையும் படி மாபெரும் வளர்ச்சி பெற்று சாதனைப் படைத்த இராஜகோபால் இன்று ஏவல் பரிவாரங்களுடன் ஆயுள்தண்டனை அடைந்து சிறைக் கம்பிகளுக்கு பின்னால் நிற்கிறார். காரணம் ஜோதிடம், தன்னை முருகனாகவே நினைத்துக் கொண்டு தன்னிடம் வேலை பார்க்கும் பெண் பார்பதற்கு அழகாக இருந்தால் தாரமாக்கிக் கொள்ளும் நிலைக்குச் சென்றதுமல்லாமல், அதிலும் சோதிடம் பார்த்து வானாளாவிய பணக்காரனாகிவிடலாம் என்ற பேராசையில் ஜீவஜோதியுடன் ஐக்கியமாகத் துடித்து அவரின் (முன்னாள்) கணவனை கொலை செய்துவிட்டு, குற்றம் நீருபணம் செய்யப்பட்டு தண்டனை பெற்று ஜாமீனில் வந்து, வழக்கை நீர்த்து போக வைக்க ஜீவஜோதியின் தாய்மாமன்களையெல்லாம் சரிகட்டி, கடைசில் எதுவும் பலனளிக்கமல் போகவே, தண்டனை அடைந்தார். கிடைத்தது 10 ஆண்டு கடும்காவலும் அபராதமும். அது போதாது என்று அரசு தரப்பில் மேல் முறையீடு செய்ய ஆயுள் தண்டனையாக உயர்த்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப் பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மாற்றான் மனைவியை கவருவென்பது தமிழ்பண்பாட்டில் ஏற்கமுடியாத ஒன்று திருவள்ளுவர் ஏனைய பலரும் அதனை வழியுறுத்தி இருக்கிறார்கள், ஏன் இராவணன் அழிந்ததற்குக் கூட மாற்றான் மனைவியை கவர்ந்ததே காரணமாகக் காட்டப்படுகிறது.

படித்தவன் பணக்காரனாக ஆனபிறகும் பாமரன் பணக்காரன் ஆனபிறகும் இருக்கும் பெரிய வேறுபாடு, பாமரனுக்கு நல்லதை எடுத்துச் சொல்ல எவருமே இருக்க மாட்டார்கள், சுற்றி இருக்கும் கூட்டம் அனைத்தும் புகழ்ந்து பேசி, அடிவருடி, ஆசைச் சொல் கூறி நிலைதடுமாற வைத்து சொத்துக்களை சுருட்டுவதற்கு ஆன எல்லா வழிகளையும் வெற்றிகரமாக ஏற்படுத்துவர். அப்படித்தான் இராஜகோபால் வீழ்ந்தார், எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு கொட்டும் பணம், சென்னையையே விலைக்கு வாங்க முடியும் என்கிற பேராசையில் சோதிடனிடம் போய் நிற்க அவன் காட்டியது தான் ஜீவஜோதியை மூன்றாம் தாரமாக மணந்து கொள்ள வேண்டும் என்ற தீய வழியை. பணம் இருக்கிறது எதையும் செய்யலாம் என்கிற துணிச்சலில் ஜீவஜோதியின் கணவன் பிரின்ஸ் சாந்தக்குமாரை கொடைக்கானலுக்கு கடத்திச் சென்று கொலை செய்யும் அளவுக்கு சென்று, எப்படியும் ஜீவஜோதியை திருமணம் செய்து சென்னையை வாங்கலாம் என்ற வெறியில் தன்னையே அழித்துக் கொண்டு நிற்கிறார் இராஜகோபால். அப்பன் தான் இப்படி என்றால் மகனும் தவறான தகவல்களைக் கொடுத்து சிலருக்கு அமெரிக்க விசா பெற்றுத் தந்த குற்றச் சாட்டில் தலைமறைவாக இருப்பதாக செய்திகள் வந்தது.

ஒருமனிதன் எவ்வளவு விரைவாக முன்னேறலாம் என்பதற்கும் எப்படி விரைவாக சீரழிந்து போகலாம் என்பதற்கு சரவணபவன் இராஜகோபால் சாட்சியாக நிற்கிறார். 50 லட்சம் நஷ்டு ஈடு பெற்று ஜீவஜோதி இரண்டாம் திருமணத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார், அவரை துறத்திய அண்ணாச்சி ஏகப்பட்ட வியாதிகளுடன் ஆயுள் தண்டனையில் எஞ்சிய வாழ்நாளை கழிக்கப் போகிறார். இந்த தண்டனையை பலரும் வரவேற்கிறார்கள். குறிப்பாக ஓட்டல் தொழிலில் சரவணபவனுக்கு போட்டியாக இருந்தவர்கள் அனைவருமே வரவேற்பார்கள். காசு கொடுத்து (அ)நீதி இழைத்துவிட முடியாது என்பதற்கு சரவணபவன் இராஜகோபாலின் தீர்பே சாட்சி.

மண்ணாசை, அடங்கா பெண்ணாசை இரண்டுமே மனிதனை மானம் மரியாதை இழக்க வைத்து முடிவில் அவனையே அழித்துவிடும். சோதிடனின் பேச்சைக் கேட்டு தன்னிறிவை இழந்து இப்படி படுகுழிக்குள் செல்வோர் பலபேர். வாழும் உதாரணங்கள் இருந்தும் ஒருவனுடைய கெரகம் அவன் எப்போதும் சோதிடம் பார்பவனாக இருந்தால் அவனை வீழ்த்தாமல் ஓயாது.

எங்கோ படித்தேன்... பிரின்ஸ் சாந்தகுமார் கொலைக்கு நீதி கிடைத்துவிட்டது. .சங்கர இராமன் கொலைக்கும் கிடைத்தால் நீதியின் மீது மக்களுக்கு மேலும் நம்பிக்கை பிறக்கும்.

38 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

\\மண்ணாசை, அடங்கா பெண்ணாசை இரண்டுமே மனிதனை மானம் மரியாதை இழக்க வைத்து முடிவில் அவனையே அழித்துவிடும்.\\

உண்மையோ உண்மை

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

அய்யன் முருகனின் பக்தன் இராஜகோபால் அவர்களுக்கு நல்ல தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் இருக்கும் வரையில், ஒரு பக்கத்தில் நீதியும் தழைத்துக் கொண்டுதான் இருக்கிறது என்பது புலனாகிறது.

தாங்கள் சொல்வது போல் சங்கரராமன் கொலை மட்டுமல்ல அதைப் போன்ற எண்ணற்ற கொலைகளைச் செய்துவிட்டு தைரியமாக திரிந்து அல்லது வாழ்ந்து கொண்டிருப்போருக்கு யார் நீதி வழங்கப் போகிறார்கள்???????????????????????

அமர பாரதி சொன்னது…

கண்ணன், எதை வைத்து இவ்வளவு ஆணித்தரமாக ஜோதிடம் தான் காரணம் என்கிறீர்கள்? நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம், ஆனால் இவ்வளவு ஆணித்தரமாக சொல்வதற்கு ஆதாரங்கள் கொடுக்கலாமல்லவா? மற்றபடி பெண்ணாசையினால் கொலை வரை போய்விட்ட இந்த மனிதர் சொன்னதாக ஜூ.வி.யில் "எல்லாவற்றையும் அந்த முருகன் பார்த்துக் கொண்டு இருக்கிறான்". என்ன கொடுமை இது?

கோவி.கண்ணன் சொன்னது…

கோவி.கண்ணன் said...
//அமர பாரதி 11:49 PM, March 23, 2009
கண்ணன், எதை வைத்து இவ்வளவு ஆணித்தரமாக ஜோதிடம் தான் காரணம் என்கிறீர்கள்? நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம், ஆனால் இவ்வளவு ஆணித்தரமாக சொல்வதற்கு ஆதாரங்கள் கொடுக்கலாமல்லவா?
//

அண்ணாச்சி ஜீவஜோதியை துறத்தியதற்குக் காரணமே இருவரின் ஜாதகத்தையும் பார்த்த ஜோதிடன் மேலும் ஓஹோன்னு வளர ஜீவஜோதியை திருமணம் செய்துக் கொள்ளச் சொன்னானாம்.

இவை கொலைக்கு தண்டனை பெற்ற பிறகு இராஜகோபாலுக்கு நெருக்கமானவர்கள் கொடுத்த தகவல் என்பதாக கட்டுரையில் நக்கீரனில் எழுதி இருந்தார்கள்

பதி சொன்னது…

//வாழும் உதாரணங்கள் இருந்தும் ஒருவனுடைய கெரகம் அவன் எப்போதும் சோதிடம் பார்பவனாக இருந்தால் அவனை வீழ்த்தாமல் ஓயாது.//

:)

//பிரின்ஸ் சாந்தகுமார் கொலைக்கு நீதி கிடைத்துவிட்டது. .சங்கர இராமன் கொலைக்கும் கிடைத்தால் நீதியின் மீது மக்களுக்கு மேலும் நம்பிக்கை பிறக்கும்.//

அன்று நம்பலாம் சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்பதை....

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

//பிரின்ஸ் சாந்தகுமார் கொலைக்கு நீதி கிடைத்துவிட்டது. .சங்கர இராமன் கொலைக்கும் கிடைத்தால் நீதியின் மீது மக்களுக்கு மேலும் நம்பிக்கை பிறக்கும்.//

நீதியின் மீது நம்பிக்கை பிறக்கும்

உதயம் சொன்னது…

சரவணா பவன் ஹோட்டலில் சாப்பிடுவதையே இப்போது நிறுத்திவிட்டேன் .இட்லியில் ஜீவஜோதியின் முகம்தான் தெரிகிறது!

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

சோதிடனால்,இராஜகோபால் மாத்திரமா? பலர் சீரழிகிறார்கள்.
ஆனால் சோதிடர் நன்கு கொழுக்கிறார்கள்.
யாவுக்கும் அடிப்படை பேராசை, இலகுவாக எதையும் அடையும் இழி மனநிலை.
இவருக்குத் தண்டனை கிடைத்து விட்டது. இன்னும் பலருக்கு தண்டனை கிடைத்து, நீதியின் மாண்பை நிலைநிறுத்துவார்கள் என நம்புவோம்.
அன்றைய பத்திரிகைகளில் இவ்வழக்குத் தொடர்பான செய்திகள், இவர் பேட்டியே தெளிவாக இவர் செயற்பாடு யாவும் விளக்கியது, சிலர் ஆதாரம் கேட்பது ஆச்சரியமாக உள்ளது.
அத்துடன் சென்னைச் சரவணபவன் சென்ற போது வாரியார் சிலை ஒன்று
கல்லாவுக்கு அருகில் கண்டேன்.
வாரியாரை இதைவிட அவமானப்படுத்த முடியாது.

Matra சொன்னது…

It is not right to say Jothidam was the cause of Saravanabhavan Rajagopal's misdeeds. It would be better to say SR's sexual weakness and arrogance was a reason and a Jothidar took this as an opportunity and mislead him. Who knows, his enemies could also have used his weaknesses to lead him to crime.

Some people like to commit wrongdoings and look for justification and look for it in things like Jothidam. They have to be blamed for their own actions.

Sankararaman's murder is still unproven and we cannot simply blame Chandrasekharendra Saraswati based on assumptions. He (SC) also had many enemies including communists, dravidians, evangelists etc .

suvanappiriyan சொன்னது…

சிந்திக்க வைத்த பதிவு.

கோவி.கண்ணன் சொன்னது…

//உதயம் 3:08 AM, March 24, 2009
சரவணா பவன் ஹோட்டலில் சாப்பிடுவதையே இப்போது நிறுத்திவிட்டேன் .இட்லியில் ஜீவஜோதியின் முகம்தான் தெரிகிறது!
//

அண்ணாச்சி கட இட்லி மாயக்கண்ணாடியா ? :)))))))

கோவி.கண்ணன் சொன்னது…

//நட்புடன் ஜமால் said...
\\மண்ணாசை, அடங்கா பெண்ணாசை இரண்டுமே மனிதனை மானம் மரியாதை இழக்க வைத்து முடிவில் அவனையே அழித்துவிடும்.\\

உண்மையோ உண்மை
//

வாங்க ஸ்வாமி

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
அய்யன் முருகனின் பக்தன் இராஜகோபால் அவர்களுக்கு நல்ல தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் இருக்கும் வரையில், ஒரு பக்கத்தில் நீதியும் தழைத்துக் கொண்டுதான் இருக்கிறது என்பது புலனாகிறது
//

எல்லாம்......அவன் செயல் !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

பதி,
நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

இராதகிருஷ்ணன் சார்,

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
சோதிடனால்,இராஜகோபால் மாத்திரமா? பலர் சீரழிகிறார்கள்.
ஆனால் சோதிடர் நன்கு கொழுக்கிறார்கள்.
யாவுக்கும் அடிப்படை பேராசை, இலகுவாக எதையும் அடையும் இழி மனநிலை.
இவருக்குத் தண்டனை கிடைத்து விட்டது. இன்னும் பலருக்கு தண்டனை கிடைத்து, நீதியின் மாண்பை நிலைநிறுத்துவார்கள் என நம்புவோம்.
அன்றைய பத்திரிகைகளில் இவ்வழக்குத் தொடர்பான செய்திகள், இவர் பேட்டியே தெளிவாக இவர் செயற்பாடு யாவும் விளக்கியது, சிலர் ஆதாரம் கேட்பது ஆச்சரியமாக உள்ளது.
அத்துடன் சென்னைச் சரவணபவன் சென்ற போது வாரியார் சிலை ஒன்று
கல்லாவுக்கு அருகில் கண்டேன்.
வாரியாரை இதைவிட அவமானப்படுத்த முடியாது.
//

யோகன் ஐயா,

நன்றி !

கார்த்திகாவுடனான இரண்டாவது திருமணத்தை வாரியார்தான் நடத்தி வைத்தார் என்றும் சொல்கிறார்கள், உண்மையா பொய்யா தெரியவில்லை

கோவி.கண்ணன் சொன்னது…

//Matra said...
It is not right to say Jothidam was the cause of Saravanabhavan Rajagopal's misdeeds. It would be better to say SR's sexual weakness and arrogance was a reason and a Jothidar took this as an opportunity and mislead him. Who knows, his enemies could also have used his weaknesses to lead him to crime. //

ஜோதிடனால் என்று சொல்லி இருக்கிறேன். ஜோதிடத்தால் என்று சொல்லவில்லை. மருத்துவன் தவறு செய்தான் என்று சொன்னால் மருத்துவம் என்கிற துறையே தவறு என்று சொல்வதாக பொருள் இல்லை

//Some people like to commit wrongdoings and look for justification and look for it in things like Jothidam. They have to be blamed for their own actions.//

நல்ல ஜோதிடர் என்றும் அவர் பார்ப்பது நல்ல ஜோதிடம் என்றும் பட்டம், பரிந்துரைவழங்க எதுவும் துறை இருக்கிறதா ?

//Sankararaman's murder is still unproven and we cannot simply blame Chandrasekharendra Saraswati based on assumptions. He (SC) also had many enemies including communists, dravidians, evangelists etc .
//

அப்பன் குதிருக்குள்ளே இல்லேங்கிற மாதிரி இருக்கு, நான் சங்கராச்சாரியர் பெயரை குறிப்பிடவே இல்லை, வழக்கில் குற்றவாளிகள் தண்டனை பெற வேண்டும் என்று தான் சொன்னேன். அதுக்குள்ளே அவசரப்பட்டு திராவிடன், கம்யூனிஸ்ட் என்னன்னவோ ஒவ்வாமையை ஒன்றாக துப்புறியளப்பு.

கோவி.கண்ணன் சொன்னது…

//சுவனப்பிரியன் said...
சிந்திக்க வைத்த பதிவு.
//

நன்றி !

பாண்டித்துரை சொன்னது…

//குறிப்பாக ஓட்டல் தொழிலில் சரவணபவனுக்கு போட்டியாக இருந்தவர்கள் அனைவருமே வரவேற்பார்கள். ///

சங்கராச்சாரியாருக்கும் கூடிய விரைவில் கிடைக்குமா?

வீரசிங்கம் சொன்னது…

மிக சரியாக சொன்னீர்கள்

Mahesh சொன்னது…

டைம்லி பதிவு... ஆனா வெளிவராத இருட்டடிக்கப்பட்ட கொலைகள் எவ்வளவோஒ இருக்கு. எல்லாத்தையும் முதல்ல போலீஸ் பார்வைக்கு கொண்டு போறதே பெரிய காரியமா இருக்கு :(

வெண்பூ சொன்னது…

//
மண்ணாசை, அடங்கா பெண்ணாசை இரண்டுமே மனிதனை மானம் மரியாதை இழக்க வைத்து முடிவில் அவனையே அழித்துவிடும்
//

சரியா சொன்னீங்க கோவி.. முழுதும் ஒத்துப்போகிறேன்..

CA Venkatesh Krishnan சொன்னது…

சரவணா பவன் ஹோட்டலில் சாப்பிடுவதையே இப்போது நிறுத்திவிட்டேன் .

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Vetri சொன்னது…

மொட்ட தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டு இருக்கீங்க...உங்களை போலவே நானும் சங்கரராமன் உண்மை கொலை குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என விரும்புகிறேன்

Vetri சொன்னது…

நீதிபதி பானுமதி பிரேமானந்தாவுக்கும் தீர்ப்பு வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

Darren சொன்னது…

தமிழ்மணம் சோதிடக்கலையை வளர்கும் நபரை எப்போதும் சூடான இடுகையில் வைத்து தன் பங்குக்கு சீரழிக்கும். உடனே அறிவியல் என்று சோதிடர்கள் கிளம்பிவிடுவார்கள்.

அறிவியலை அறிவியலில் தேடுங்கள், அதை விடுத்து அறிவியலை சோதிடத்தில் தேடுவதென்பது மலத்தில் அரிசி பொறுக்குவது போலத்தான் என்று தாடிக்கார கிழவன் சொன்னது 100% உண்மை.

இந்தியாவின் வியாதி மூடநம்பிக்ககைகள்.

கிரி சொன்னது…

//உதயம் said...
சரவணா பவன் ஹோட்டலில் சாப்பிடுவதையே இப்போது நிறுத்திவிட்டேன் .இட்லியில் ஜீவஜோதியின் முகம்தான் தெரிகிறது!//

:-))))))))))))))

அவருக்கு இருக்கிற பணத்திற்கு ......... எதுக்கு தான் இந்த வேண்டாத வேலையோ!

கோவி.கண்ணன் சொன்னது…

//Dharan said...
தமிழ்மணம் சோதிடக்கலையை வளர்கும் நபரை எப்போதும் சூடான இடுகையில் வைத்து தன் பங்குக்கு சீரழிக்கும். உடனே அறிவியல் என்று சோதிடர்கள் கிளம்பிவிடுவார்கள்.//

தரண், உங்கள் கருத்தைச் சொல்வதற்கு யாரையாவது குறிப்பிட்டு தான் சொல்ல வேண்டுமா ? யார் எதை எழுதவேண்டும், எதைப் படிக்கலாம் என்றெல்லாம் அறிவுறுத்துவது யாருடைய வேலையும் இல்லை. முடிந்தவரையில் நல்ல சூழலை உருவாக்க முயலுவோம்.

//அறிவியலை அறிவியலில் தேடுங்கள், அதை விடுத்து அறிவியலை சோதிடத்தில் தேடுவதென்பது மலத்தில் அரிசி பொறுக்குவது போலத்தான் என்று தாடிக்கார கிழவன் சொன்னது 100% உண்மை.

இந்தியாவின் வியாதி மூடநம்பிக்ககைகள்.
//
இது போல் ஜோதிடம் பற்றி உங்கள் எண்ணங்களை சொல்வதுதான் கருத்து பரிமாற்றம். மற்றதெல்லாம் தேவையற்றது.

கோவி.கண்ணன் சொன்னது…

// krishnaaleelai said...
ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாக பழகியகாலங்களில் நடக்கின்ற தவறுகளுக்கு ஏதேனும் ஒரு வழியில் இருவருமே காரணமாகிறார்கள்.அதில் அதிகம் பாதிப்புக்கு ஆண்களும் ஆதிக்க பட்சாதாபததிர்க்கு பெண்களும் ஆளாகிறார்கள் இது காலத்தின் கட்டளையாக இருகின்றது.
//

நெருப்பு சுடுகிறது என்று அருகில் செல்லும் போதே விலகுவது நல்லது, நெருங்கி கையை சுட்டுக் கொண்ட பிறகு தான் நெருப்பைப் பற்றி அறிந்தேன் என்று சொல்வது தவறுதான். ஜீவஜோதி மீது யாரும் பரிதாபப்படவில்லை அதே போல் அண்ணாச்சிக்கு கிடைத்த தண்டனையையும் யாரும் தவறு என்றும் சொல்லவில்லை

கோவி.கண்ணன் சொன்னது…

//Vetri said...
நீதிபதி பானுமதி பிரேமானந்தாவுக்கும் தீர்ப்பு வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது
//

நெத்தியடி தீர்ப்பு !

கோவி.கண்ணன் சொன்னது…

//இளைய பல்லவன் said...
சரவணா பவன் ஹோட்டலில் சாப்பிடுவதையே இப்போது நிறுத்திவிட்டேன் .
//

:) கோழி குருடா இருந்தா என்ன என்று நினைப்பது இல்லையா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//கிரி said...
//உதயம் said...
சரவணா பவன் ஹோட்டலில் சாப்பிடுவதையே இப்போது நிறுத்திவிட்டேன் .இட்லியில் ஜீவஜோதியின் முகம்தான் தெரிகிறது!//

:-))))))))))))))

அவருக்கு இருக்கிற பணத்திற்கு ......... எதுக்கு தான் இந்த வேண்டாத வேலையோ!
//

:)))

கிரி, பணம் இருந்தாலும் அவருக்கு புழலில் புழு(ங்கசோறு) கஞ்சிதான் !

கோவி.கண்ணன் சொன்னது…

//Vetri said...
மொட்ட தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டு இருக்கீங்க...உங்களை போலவே நானும் சங்கரராமன் உண்மை கொலை குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என விரும்புகிறேன்
//

இரண்டுமே கொலை, இரண்டுமே கூலிப்படையால் நடந்தது, எது மொட்டைத்தலை எது முழங்கால், புரியவில்லை தயவு செய்து விளக்கவும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வெண்பூ said...
//
மண்ணாசை, அடங்கா பெண்ணாசை இரண்டுமே மனிதனை மானம் மரியாதை இழக்க வைத்து முடிவில் அவனையே அழித்துவிடும்
//

சரியா சொன்னீங்க கோவி.. முழுதும் ஒத்துப்போகிறேன்..
//

வெண்பூ நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//Mahesh said...
டைம்லி பதிவு... ஆனா வெளிவராத இருட்டடிக்கப்பட்ட கொலைகள் எவ்வளவோஒ இருக்கு. எல்லாத்தையும் முதல்ல போலீஸ் பார்வைக்கு கொண்டு போறதே பெரிய காரியமா இருக்கு :(
//

பலநாள் திருடன் ஒருநாள் சிக்குவான் என்ற பலமொழி உண்டு, சிக்குவார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வீரசிங்கம் said...
மிக சரியாக சொன்னீர்கள்
//

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

// பாண்டித்துரை said...
//குறிப்பாக ஓட்டல் தொழிலில் சரவணபவனுக்கு போட்டியாக இருந்தவர்கள் அனைவருமே வரவேற்பார்கள். ///

சங்கராச்சாரியாருக்கும் கூடிய விரைவில் கிடைக்குமா?
//

ஸ்ரீஸ்ரீஸ்ரீ லோக குரு சம்பந்தப்பட்டு இருப்பார் என்று நீங்களும் நம்புகிறீர்களா ? லோகம் கெட்டுடுத்து, கலிமுத்திடுத்து

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்