பின்பற்றுபவர்கள்

9 மார்ச், 2009

நியூசி - சிங்கை பதிவர்கள் சந்திப்பு - அறிவிப்பு !

வருகிற ஞாயிற்றுக் கிழமை (15-Mar-2009) நமது அன்புக்குரியவரும், டீச்சர், ரீச்சர், துளசி அக்கா, துளசி அம்மா, பதிவானந்தமயி என்று பல்வேறு விளிப்புகளில் அழைக்கபபடுகின்ற ஒரே பதிவருமான துளசி தளம் - துளசி கோபல் அவர்களின் சிங்கை வருகையை முன்னிட்டு பதிவர் சந்திப்பு நடைபெற இருக்கின்றது. துளசி அம்மா அவரது கணவர் திரு கோபால் ஐயாவுடன் சந்திப்புக்கு வருகிறார்.
பதிவுலகில் நீண்டகாலமாக எழுதிவரும் துளசி கோபால் அவர்களைப் பற்றி தனியாகச் சொல்வதற்கு எதுவுமே இல்லை, ஏனெனில் பழம்பெரும் பதிவர் முதல் புதிதாக எழுதவந்தவர்கள் என அனைவருக்குமே முதன் முதல் பின்னூட்டமிட்டு அறிமுகமானவர் தான் துளசி அம்மா. சென்ற மாதம் 15 ஆம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்குச் சுற்றுப்பயணம் சென்று பதிவர்களை சந்தித்துவிட்டு சிங்கை இந்த மாதம் 15 ஆம் தேதி வருகிறார்.

அனைவரும் வருக ! அம்மாவின் ஆசியைப் பெருக ! :)

நாள் மற்றும் நேரம் : 15 மார்ச் 2009, மாலை 4 மணி முதல் மாலை 7
இடம் : ராபிள் ப்ளேஸ் எம் ஆர் டி நிலையம் அமைந்திருக்கும் இடம்
நிகழ்ச்சி நிரல் :

மாலை 4 மணி : சிங்கை நாதன் கொண்டு வரும் பாதாம் அல்வா பரிமாறுதல் மற்றும் தண்ணீர் வழங்கல்

மாலை 5 மணி : பதிவர்களின் அரட்டைகள்.
சிங்கப்பூரின் பொருளியலை மீட்சி செய்வது பற்றி முகவை இராம் தூயதமிழில் சிறப்புரை ஆற்றுவார்.

மாலை 6 மணி துளசி அம்மாவின் அருளுரை

மாலை 6:30 மணி : சிங்கை நாதன் கொண்டு வரும் கேரட் அல்வா பரிமாறுதல் மற்றும் குளிர்பானம் வழங்கல்

மாலை 7 மணி : புகைப்படம் எடுத்துக் கொள்ளுதல்

நிகழ்ச்சி தொகுப்பு : டொன்லீ

நிகழ்ச்சி படத்தொகுப்பு : ஜெகதீசன்

மேற்பார்வை (அல்லவா சரியாக கொடுக்கப்பட்டதா ?) : விஜய் ஆனந்த்

மற்றவர்கள் (தங்களுக்கு) ஏற்ற பொறுப்பை ஏற்றுக் கொள்வார்கள்.

(துளசி அம்மாவும் சிங்கை நாதனும் நீண்டகால பதிவர் நண்பர்கள் ஆதலால் சிங்கை நாதன் கொண்டுவரப் போகும் அல்வாக்களில் வெரைட்டி இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன், வழக்கமாக கொடுக்கும் சாதரண அல்வாவை எடுத்துவரமாட்டார்)

*****

இந்த முறை பதிவர் சந்திப்பை சிங்கப்பூர் ஆற்றில் கடல் சிங்கம் இருக்கும் இடத்தில் நடத்தலாம் என்று கலந்தாலோசித்தோம், சென்றவாரம் அந்த இடத்தில் பெரிய இடி விழுந்து கடல் சிங்கம் சிறிது உடைந்துவிட்டதாம்,அந்த இடம் திறந்த வெளியாக இருப்பதால் ஆபத்தான இடம் என்று சிங்கை நாதன் சொல்ல இடம் கைவிடப்பட்டு ராபிள்ப்ளேஸ் எம்ஆர்டி நிலையம் அருகில் சந்திப்பு முடிவு செய்யப்பட்டது.

- சிங்கை பதிவர் நண்பர்கள்

23 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

வந்துடுவோம் ...

வடுவூர் குமார் சொன்னது…

நான் வரமுடியாதே!

அப்பாவி முரு சொன்னது…

உள்ளேன் ஐயா!

சி தயாளன் சொன்னது…

வருகிறோம்...:-))

மழைகாலம்...மாற்று ஏற்பாடுகளை தயார் செய்யவும்.

மழைக்கு ஒதுங்க இடம் இருக்கா...?

சி தயாளன் சொன்னது…

செந்தில் நாதன் பாகற்காயில் அல்வா செய்து கொண்டு வரவேண்டும் இல்லாவிட்டால் நான் சந்திப்பை புறக்க்கணிப்பேன்..

நமது பின்நவீனத்துவவாதி கிஷோர் ஏதோ புதுவகையான அல்வா செய்ய வுள்ளதாக அறிந்தேன்...

அதே போல் ஜெகதீசனும் காளானில் அல்வா செய்யப் போவதாக உளவுத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன...

கோவி.கண்ணன் சொன்னது…

//’டொன்’ லீ 7:21 PM, March 09, 2009
வருகிறோம்...:-))

மழைகாலம்...மாற்று ஏற்பாடுகளை தயார் செய்யவும்.

மழைக்கு ஒதுங்க இடம் இருக்கா...?
//

’டொன்’ லீ,

மழை பொழிந்தால் அருகில் இருக்கும் லா பா சாட் (Lau Pau Sat) சென்றுவிடலாம். அன்று ஞாயிறு அங்கே பொதுமக்கள் கூட்டங்கள் இருக்காது

கோவி.கண்ணன் சொன்னது…

//muru said...
உள்ளேன் ஐயா!
//

சந்திப்புக்கும் வாங்க !

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
நான் வரமுடியாதே!
//

உங்களுக்கு விமான டிக்கெட் அனுப்பி நான்கு நாட்கள் ஆகிறது.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//’டொன்’ லீ said...
செந்தில் நாதன் பாகற்காயில் அல்வா செய்து கொண்டு வரவேண்டும் இல்லாவிட்டால் நான் சந்திப்பை புறக்க்கணிப்பேன்..
//

:) செந்தில் வீட்டுக்கு பக்கத்தில் பாகற்காய் விற்கலையாம்

//நமது பின்நவீனத்துவவாதி கிஷோர் ஏதோ புதுவகையான அல்வா செய்ய வுள்ளதாக அறிந்தேன்...//

வாயில போட்டால் கரைகிற அல்வா ? வாயை மூடும் அல்வா ?
:)

//அதே போல் ஜெகதீசனும் காளானில் அல்வா செய்யப் போவதாக உளவுத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன...
//
காளன் கிண்டினால் இனி குடியிருப்பு ஆணையத்திடம் பிராது கொடுக்கப் போவதாக பக்கத்து வீட்டுக்காரர்கள் மிரட்டி இருக்கிறார்களாம், ஜெகதீசன் அல்வா கொண்டுவருவது ஐயம் தான்

சிங்கை நாதன்/SingaiNathan சொன்னது…

:)

அன்புடன்
சிங்கை நாதன்

கோவி.கண்ணன் சொன்னது…

//நட்புடன் ஜமால் said...
வந்துடுவோம் ...
//

நானும் வருகிறேன் !
:)

வால்பையன் சொன்னது…

சந்திப்பு சிறப்பே நடக்க வாழ்த்துக்கள்!

அக்னி பார்வை சொன்னது…

சந்திப்பு நன்றாய் அமைய எம் வாழ்த்துக்கள்

நசரேயன் சொன்னது…

*/அம்மாவின் ஆசியைப் பெருக */

டீச்சர் எனக்கும் உங்க ஆசி வேண்டும்

பெயரில்லா சொன்னது…

உங்கள் சந்திப்பு இனிதாய் அமைய வாழ்த்துக்கள்..

அன்புடன்
நண்பன் ஷீ-நிசி

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

பதிவுலகத்தில் ஆசிய() பசிபிக் வட்டாரத்தின் மூத்த பதிவரும், பதிவானந்தமயியுமான திருமதி துளசி கோபால் அம்மா அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்!
அன்புடன்,
ஜோதிபாரதி.

பாண்டித்துரை சொன்னது…

ஆறு மணிக்கு டேங்ரோடு முருகன் கோவிலில் இருக்கணும். வருவதற்கு முயற்சிக்கிறேன் நான்கு மணிக்கு வந்தா அஞ்சு மணிக்கு எஸ் ஆயிடுவேன். பார்க்கலாம்

அபி அப்பா சொன்னது…

கோவியாரே! நான் துபாயில் இருந்து ஆதரவு கரம் நீட்டுகிறேன். மாநாடு வெற்றியடைய வாழ்த்துக்கள்!

cheena (சீனா) சொன்னது…

பதிவர் சந்திப்பு அல்ல அல்ல மாநாடு வெற்றி பெற நல்வாழ்த்துகள். கோவி

நையாண்டி நைனா சொன்னது…

அண்ணே கொஞ்சம் நம்ம வீட்டு பக்கம் வந்து உங்க மேலான கருத்தை சொல்லிட்டு போங்க......

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
அண்ணே கொஞ்சம் நம்ம வீட்டு பக்கம் வந்து உங்க மேலான கருத்தை சொல்லிட்டு போங்க......
//

நான் (Male ஆன) ஆணிய கருத்தெல்லாம் சொல்லமாட்டேன் :)

சி தயாளன் சொன்னது…

//:) செந்தில் வீட்டுக்கு பக்கத்தில் பாகற்காய் விற்கலையாம்
//

பதிவர்களே சிங்கை நாதனுக்கு ஆளுக்கொரு பாகற்காய் வாங்கி அனுப்பு புதிய ஒரு போராட்ட வரலாறு படைக்க அழைப்பு விடுக்கிறேன்..:-)

பாண்டித்துரை சொன்னது…

சனிக்கிழமை அன்று மலேசியாவில் இருந்தது சில எழுத்தாளர்கள் ஆங்மோகியோ நூலகத்தில் கலந்துகொள்ள வருகின்றனர். மறுநாள் புத்தக வெளியீட்டில் கலந்துகொள்வதாக சற்றுமுன்தான் செய்திகிடைத்த. ஞாயிறு அன்று நான் அவர்களுடன் இருக்கவேண்டும். வருவதெனில் அவர்களையும் அழைத்துவர முயற்சிக்கிறேன். இல்லையெனில் அடுத்த சந்திப்பில் சந்திக்கிறேன்.

திருமதி துளசி கோபால் அவர்களுக்கு என்னுடைய வரவேற்பு மற்றும் வாழ்த்துகள் இந்த பின்னூட்டம் வழியே

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்