பின்பற்றுபவர்கள்

19 மார்ச், 2009

மனசெல்லாம் பட்டாம் பூச்சி !

வாழ்வே ஒடுங்கிவிட்டதென கூனி குறுகுபவர்களே... பட்டாம் பூச்சியைப் பாருங்கள், அதுவும் அப்படி ஒடுங்கி இருந்துதான் அழகான சிறகுடன் கூண்டைவிட்டு வெளியே வந்து சுதந்திரமாக பறக்கிறது. இந்த தன்னம்பிக்கை செய்தியை புதுக்கவிதை வரிகளாக 'அற்பப் புழுவென வாழ்வே முடங்கி விட்ட நிலையில் அழகான சிறகுடன் வெளியே வரும் பட்டாம்பூச்சி.... தன்னம்பிக்கையில் தன்னிகரற்ற உயிரினம்' என்ற பொருள்படும் வண்ணம் இரட்டை எழுத்தாளர்களான சுபா...எழுதி இருந்தை எங்கோ படித்ததும் வரிகள் நினைவு இல்லாவிட்டாலும் சொல்ல வந்த தகவல் அப்படியே படிந்துவிட்டது.

தாம் புழு இனம் தான், நம்மால் பறக்க முடியுமா ? என்று நினைத்தால் (புழு அப்படியெல்லாம் நினைக்குமான்னு கேட்கக் கூடாது) அழகான சிறகுடன் நினைத்த இடத்துக்கு பறந்து செல்லும் ஆற்றல் சிறகு பட்டாம்பூச்சிக்கு ஏற்பட்டு இருக்குமா ?




எங்கூரில் எங்கள் வீட்டில் தோட்டம் உண்டு, இப்போதெல்லாம் எதுவும் பயிர்செய்வது இல்லை. முன்பு பனிக்காலத்தில் ஏராளமான தும்பை செடிகள் தானாக்கவே முளைத்து வளரும், 100க்கு 100 வெள்ளை நிறத்தில் தும்பைப் பூக்கள் பூத்து இருக்கும், செடிகளின் இலைகளில் பன்னீர் தெளித்தது போன்று பனித்துளிகள் இருக்கும், காலை ஆறுமணியில் இருந்து சூரியன் சுள்ளென சுடும் காலை 8 மணி வரை பல்வேறு வகையிலான வண்ணத்துப் பூச்சிகள் அந்த தும்பை பூவின் மீது அமர்ந்து தேன் அருந்தும். சிறுவயது ஆசையில் ஒன்றாக அந்த வண்ணத்து பூச்சிகளை பிடித்து விளையாடும் ஆசையில் ஒரு தும்பை செடியை வேரொடு பிடிங்கி கையில் ஆயத்தமாக வைத்துக் கொண்டு...பதுங்கி பதுங்கி சென்று மற்றொரு செடியில் தேன் குடிக்கும் வண்ணத்துப் பூச்சியின் மீது கொஞ்சம் விரைவாகவும், மென்மையாகவும் அமிழ்த்த வண்ணத்துப் பூச்சி இரண்டு செடிகளின் இலைகளுக்கு இடையில் சிக்கிக் கொள்ளும், மென்மையாக வண்ணத்துப் பூச்சியை எடுக்க, விரல்களில் அதன் வண்ணம் படிந்துவிடும், பிறகு வண்ணத்துப் பூச்சியின் அடிவயிற்றுக்கு மேல் இரண்டு மீட்டர் அளவுக்கு உள்ள நூலின் நுனியைக் கட்டிவிட்டு, நூலின் மறு நுனியை கையில் பிடித்துக் கொண்டு வண்ணத்துப் பூச்சியை கையில் இருந்து விடுதலை செய்ய...நூல் அளவு உயரத்தில் அங்கும் இங்கு பறக்கும், 10 - 15 நிமிடங்களுக்கு பிறகு ஒரு அங்குலம் வண்ணத்துப் பூச்சியுடன் நூலை துண்டித்துவிட்டு ஒரேடியாக விடுதலைக் கொடுத்துவிடுவோம். மறுநாள் அதுவே வருகிறதா என்று பார்த்துக் கொண்டு இருப்போம், ஒரு நாளும் நூலோடு இணைந்த பட்டாம் பூச்சி வந்தது கிடையாது. ஒரு வேளை நூலின் இறுக்கத்தால் மடிந்திருக்கலாம்.

பட்டாம்பூச்சி பருவம் என்றால் நமக்கு, எனக்கு சின்ன வயது பருவம் தான் நினைவுக்கு வருகிறது. பட்டாம் பூச்சி பிடித்த காலத்தில் எந்த கவலையும், மனச் சோர்வும், குழப்பமும் இல்லாமல் பட்டாம் பூச்சி போன்றே திரிந்தோம்.

இயற்கை வியப்புகளில் வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளின் வண்ணமும் ஒன்று. தொடும் போது ஒட்டிக் கொள்ளும் அவ்வளவு மென்மையான வண்ணம் சிறகுகள் அடித்து பறக்கும் போது உதிராமல் இருப்பது வியப்புதானே.

வண்ணத்துப் பூச்சி:





இரகசியமாய் யாரும் பார்க்கா வண்ணம்,
இரசித்து யாரும் வியக்கும் வண்ணம்,
இருசிறகுகளுக்கு மேற்ற வண்ணம், கூட்டிற்குள்
தீட்டிக் கொள்ளும் நவீன உடல் ஓவியர்கள் !
(Tatooist)







ஸ்வாமி ஓம்கார் எனக்கு கொடுத்த விருதுக்கு நன்றி கூறிவிட்டு, பட்டாம்பூச்சி விருதை மூன்று பேருக்குக் கொடுத்து அழைக்கனும் என்பது விதி(யாம்,) யாரை விட்டது ? யாரைக் கூப்பிடுவது. அகவையாம் ஐம்பதைக் கடந்தவர்கள்...ஆனால் எண்ணங்களில் பட்டாம்பூச்சி துள்ளல்.

வாலிபமே வா...வா... :)

வீஎஸ்கே : இவரப் பற்றி என்ன சொல்வது ?எல்லோருக்கும் தெரிந்தவர்தான். புதியவர்கள் அறிந்து கொள்ள, அவரது இயற்பெயர்.....வீ சங்கர் குமார்.

அமெரிக்காவில் வட கரோலினா மானிலத்தில் மருத்துவராக பணி புரிகிறார். கண்ணை மூடிக் கொண்டு ஆன்மிகம் எழுதுபவர். ஐ மீன் ஒரு தியானம் போல் ஆன்மிகம் எழுதுபவர். மாறுபட்ட அரசியல் பார்வை கொண்டவர். நல்லவர் வல்லவர்...எனக்கு மிக வேண்டியவர், விருப்பம் உள்ளவர்கள் அவரது பாலியல் கேள்வி பதில்கள் பதிவை படிங்க, உங்களுக்கும் எதும் குழப்பம் இருந்தால் அவரிடம் பின்னூட்டத்தில் (வெட்கப்பட்டால் அனானியாக) கேளுங்க.

சீனா : சிதம்பரம் (சீனா) ஐயா வலைச்சரம் பேராசிரியராக அனைவருக்குமே நன்கு அறிமுகம் ஆனவர் தான்.

மூன்று மாதங்களுக்கு முன்பு இவருடன் பழக தொடங்கி இருந்தாலும், முப்பது ஆண்டுகாலம் பழகியதைப் போன்ற உணர்வு எனக்கு வந்தது போல் எவருக்கும் வரும்

TV இராதா கிருஷ்ணன் : செளமிய தியேட்டர் என்ற பெயரில் மேடை நாடகங்கள் நடத்துபவர். எல்லோருக்கும் நன்கு அறிமுகமானவர். அரசியல் பகடி (பகடி அரசியல்னு மாற்றி படிச்சிடாதிங்க) செய்வதில் வல்லவர்.

குறைந்த காலத்தில் சுமார் ஓராண்டுக்குள்ளேயே 600 க்கும் மேற்பட்ட பதிவுகள் எழுதிய சாதனையாளர். சூடான இடுகையில் பெரும்பாலும் இருப்பவர்... எனக்கு மிக வேண்டியவர்



பட்டாம் பூச்சியை எப்படி விடுதலை செய்யலாம் ?



1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)
2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)
3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)
4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)
5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)

15 கருத்துகள்:

cheena (சீனா) சொன்னது…

ஹா ஹா ஹா - பட்டாம்பூச்சியைப் பற்றிய அருமையான பதிவு - நல்ல பார்வை - சிறுவயட்தில் செய்ததை நினைவு கூறும் கொசுவத்தி

ஆமா பதிவே போடாதா எனக்கூ விருதா - சிப்பு சிப்பா வர்து - இருப்பினும் என் படித்ததில் பிடித்தது என்ற வலைப்ப்பூவினை ரசித்து விருது கொடுத்தமைக்கு மிக்க நன்றி அருமை நண்ப

நண்பர்கள் வீஎஸ்கே மற்றும் டிவீஆர் அவர்களுக்கும் நல்வாழ்த்துகள்

இனி நான் மூவரைத்தேட வேண்டுமா - கடினமான செயல் அல்லவா - பதிவர் மூவாயிரம் பேரையும் அறிவேன் - முத்துக்குளித்து மூவரைத் தேட வேண்டுமா ........

நன்றி கோவி நல்வாழ்ழ்த்துகள்

நட்புடன் ஜமால் சொன்னது…

அடடடே அண்ணேன் முந்திக்கிட்டாரே

அழகாய் படபடகின்றன வார்த்தை பட்டாம்பூச்சிகள் ...

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

நன்றி கோவி

வால்பையன் சொன்னது…

வாழ்த்துக்கள்

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

பட்டாம் பூச்சியை அழகாக அறிமுகப் படுத்திய முத்தப் பதிவருக்கு வாழ்த்துகள்!
விருது பெற்ற விஎஸ்கே ஐயா, சீனா ஐயா, டிவிஆர் ஐயா ஆகியோருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்!

சி தயாளன் சொன்னது…

பட்டாம் பூச்சி பற்றி விபரமாக தத்துவங்களை உதித்து விட்டு விருது வாங்கின கதை சொன்ன விதம்..அழகு,,

படங்கள் அழகோ அழகு..

விருதுக்கும் வாழ்த்துகள்..

உந்த பட்டாம் பூச்சி விருது புதியவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுவது என்று கேள்விப்பட்டேன்..

உங்களுக்கு தருவதென்றால் அதில் ஏதோ நுண்ணரசியல் இருக்கோ,,.? :-))))

Mahesh சொன்னது…

பதிவு அருமை... அறிமுகங்கள் அதைவிட அருமை !!

கோவி.கண்ணன் சொன்னது…

சீனா ஐயா,

விருதேற்புக்கு நன்றி, இப்படியெல்லாம் விருது கொடுத்தாவது பதிவு எழுத வச்சிடுவோம் ல்லே.......:)

கோவி.கண்ணன் சொன்னது…

//நட்புடன் ஜமால் said...
அடடடே அண்ணேன் முந்திக்கிட்டாரே
//

தம்பி, என்ன முந்திட்டேன் ? என்னைச் சொன்னிங்களா ? மீ த பர்ஸ்டாக பின்னூட்டம் போட்ட சீனா ஐயாவைச் சொன்னிங்களா ? புதசெவி.

//அழகாய் படபடகின்றன வார்த்தை பட்டாம்பூச்சிகள் ...
//
நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//T.V.Radhakrishnan said...
நன்றி கோவி
//

ஏற்புக்கு நன்றி, பதிவை எதிர்பார்க்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

// வால்பையன் said...
வாழ்த்துக்கள்
//

நன்றி நண்பரே !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
பட்டாம் பூச்சியை அழகாக அறிமுகப் படுத்திய முத்தப் பதிவருக்கு வாழ்த்துகள்!
விருது பெற்ற விஎஸ்கே ஐயா, சீனா ஐயா, டிவிஆர் ஐயா ஆகியோருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்!
//

அது என்ன முத்தப் பதிவர் ? எழுத்துப் பிழையா ? வாழ்த்துக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//’டொன்’ லீ said...
பட்டாம் பூச்சி பற்றி விபரமாக தத்துவங்களை உதித்து விட்டு விருது வாங்கின கதை சொன்ன விதம்..அழகு,,//

உண்மையைச் சொல்லப் போனால் அதில் இந்த விருது குறித்து என்ன எழுத வேண்டும் என்றே தெரியவில்லை. கேஆர்எஸ் பதிவைப் பார்த்தேன் பட்டாம் பூச்சு பற்றி எழுதி இருந்தார், நானும்...:)

//படங்கள் அழகோ அழகு..

விருதுக்கும் வாழ்த்துகள்..//

நன்றி !

//உந்த பட்டாம் பூச்சி விருது புதியவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுவது என்று கேள்விப்பட்டேன்..
//

ஈழத்தமிழில் உந்த என்றால் 'இந்த' என்ற பொருளா ? சொல் கேள்விப்பட்டு இருக்கிறேன், எங்கே பயன்படுத்துவது என்பதில் எப்போதும் குழப்பம் தான், தொலைவில் உள்ளதை 'உந்த' என்று குறிப்பார்கள் தானே ?

//உங்களுக்கு தருவதென்றால் அதில் ஏதோ நுண்ணரசியல் இருக்கோ,,.? :-))))
//

ஸ்வாமியைத்தான் கேட்கனும், அவரைக் கேட்டால் கே.ஆர்.எஸ்ஸைக் காட்டுவார், ஏனென்றால் கேஆர்எஸ் புதியவர் அல்லர்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// Mahesh said...
பதிவு அருமை... அறிமுகங்கள் அதைவிட அருமை !!
//

மகேஷ், பாராட்டுக்கு நன்றி.

அருகருகேதான் இருக்கிறோம், பார்க்கத் தான் முடியவில்லை.

cheena (சீனா) சொன்னது…

இன்று பட்டாம்பூச்சி தொடர் விருது அளிக்கப்படுகிறது

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்