பின்பற்றுபவர்கள்

16 மார்ச், 2009

தேர்தலுக்கு உயிர்த்தெழும் பிணம் !

செத்துப் போன தாத்தா எலக்சனுக்கு ஓட்டு போட வந்ததாக விளையாட்டாக கள்ள வாக்குகளை கிண்டல் செய்வது வழக்கம். அதில் உண்மையும் உண்டு. உயிரோடு இருப்பவர்களின் வாக்குகளையே கள்ளத்தனமாக குத்தும் போது செத்தவர்களின் வாக்குகளை விட்டு வைப்பார்களா ?

மதச்சார்பின்மை என்கிற காங்கிரசின் 'அரசியல்' முழக்கம் அப்படித்தான். மதச்சார்பின்மை - இந்த சொல்லை தந்தை பெரியாரைத் தவிர பயன்படுத்த எவருக்கும் தகுதியே கிடையாது. இந்தியாவின் மதச்சார்பின்மை காவிகளின் தலைமை பல மாநிலங்களில் ஏற்பட்ட போதே, ஏன் அதற்கு முன்பே மகாத்மா காந்தி சுட்டுக் கொள்ள பட்ட போதே அதன் கோர பற்களால் இளித்த ஒன்று. அதையும் மீறி சில வேட்பாளர்கள் வெற்றி பெற்று வருகிறார்கள் என்றால் அது அவர்களின் நன் மதிப்புக்கு கிடைத்த பரிசு என்று தான் சொல்ல முடியும்.

இந்தியாவில் பயன்படுத்தும் பெரும்பாண்மை, சிறுபாண்மைச் சொல்லாடலின் தன்மை தேர்தல் காலங்களில் தான் நன்றாக விளங்கிக் கொள்ள முடியும். ஒரு தொகுதியில் பெரும்பாண்மை மிக்க எந்த சமூகத்திலும் அவர்களுக்கு மாற்றான ஒரு சிறுபாண்மை சமூகத்தினரை தேர்தலில் நிறுத்திவிடவே முடியாது. கிறித்துவர்கள் நிறைந்திருக்கும் ஒரு தொகுதியில், இஸ்லாமியர் நிறைந்திருக்கும் ஒரு தொகுதியில் இந்து வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடியாது என்பதே இன்றைய நிலை. இப்படிதான் அனைத்து கட்சிகளுமே தங்களுக்குறிய வேட்பாளரை அந்தந்த தொகுதியில் நிறுத்துகிறார்கள். இந்துக்கள் பெரும்பாண்மையினராக இருக்கும் தொகுதிகளில் எந்த சாதிக்கு செல்வாக்கு இருக்கிறதோ, அந்த சாதியைச் சேர்ந்தவரைத் தான் ஒவ்வொரு கட்சியும் வேட்பாளராக களம் இருக்கிறது. எதிர்கட்சிக்காரன் நிறுத்தி இருக்கும் அதே சாதியைச் சார்ந்த வேறொருவரைத்தான் மாற்றுக் கட்சியும் நிறுத்துகிறது. மாறாக அங்கே ஒரு கிறித்துவரையோ, இஸ்லாமியரையோ நிறுத்துவது இல்லை. பிறகு மதச்சார்பின்மை என்கிற மண்ணாங்கட்டி எங்கிருந்து வந்தது ?

மதச்சார்பின்மையெல்லாம் நாம் எப்போதோ குழி தோண்டி புதைத்துவிட்டோம். கவர்சிகர கூட்டொலியாக (கோஷம்) காங்கிரஸ் கட்சியும், மதச்சார்பு பிஜெபியுடன் முன்பு கூட்டணியில் இருந்த திமுகவும் மதச்சார்பின்மை என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்தி வருகிறது. இந்துக்கள் நிறைந்த பகுதியில் ஒரு இஸ்லாமியரை வேட்பாளராக அறிவிக்கும் துணிவு இந்த கட்சிகளுக்கு இருக்கிறதா ? பிறகு ஏன் தாங்கள் மதச்சார்பிண்மையின் காவலர்கள் என்று இவர்கள் கூசாமல் பேசுகிறார்கள். அதுவும் தேசிய கட்சிகளின் இந்த கோசம் தமிழ்நாடு தாண்டி எடுபடவே இல்லை, அப்படி எடுபட்டிருந்தால் பக்கத்து மாநிலத்தில் பாஜக ஆட்சி ஏற்பட்டிருக்குமா ? பக்கத்து மாநிலத்திலோ அல்லது அல்லது பாஜக ஆளும் மாநிலத்திலோ உள்ளவர்கள் இந்து மதவெறியர்கள் என்று சொல்லிவிட முடியுமா ? காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளுன் போலி மதச்சார்பின்மை தோல்வியுற்றது என்று தான் சொல்லமுடியும். ஏனெனின் தமிழக திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்த போது பாஜக தமிழகத்திலும் வெற்றி பெற்று இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள, அப்படி தமிழகத்தில் முன்பு பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்தப்பட்ட இடத்தில் இருந்த வாக்காளர்கள் மதச்சார்பின்மை உடைய இந்துவெறியர்கள் என்று சொல்லிவிட முடியாது தானே. காங்கிரஸ் ஆட்சியின் போதுதான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்க, அன்றைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்ம இராவ் நினைத்திருந்தால் பாபர் மசூதி இடிப்பை துணண இராணுவம் கொண்டாவது தடுத்து இருக்க முடியும். அப்போதெல்லாம் இந்துக்களின் நண்பன் போல அமைதி காத்த காங்கிரஸ் தேர்தலுக்கு தேர்தல் மதச்சார்பின்மை பேசுவது வெட்கக் கேடான ஒன்று.

நான் இங்கே பிஜேபி பற்றி எதையும் உயர்வாக சொல்லவில்லை. நேரடியாக மதச்சார்பில் நடந்து கொள்ளும் பாஜக மக்களிடம் குழப்பம் விளைவிக்காமல் நாங்கள் மதச்சார்பாளர் என்றே சொல்வதை பாராட்டலாம், அதனை உணர்ந்தே பிடித்தவர்கள் வாக்களிக்கிறார்கள், பிடிக்காதவர்கள் மறுக்கிறார்கள். காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகளின் மதச்சார்பின்மை என்னும் முழக்கம் போலித்தனமானவை.

தொகுதியில் எந்த மதத்து வேட்பாளர் வெற்றிபெறுவார் என்று பார்த்து வேட்பாளரை நிறுத்துவது எந்த வகையில் மதச்சார்பின்மையில் அடங்கும் ? மதச்சார்பின்மை பற்றி காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் பேசுகிறார்கள் ? ஊழல் ! கட்சி பாகுபாடின்று அனைத்துக் கட்சிகளுமே ஊழல் செய்து மக்களிடம் பெயர் பெற்றுவிட்டன. அவர்களிடையே நாங்கள் யோக்கியர்கள் என்று சொல்லும் விதமாக மதச்சார்பின்மையை துருப்புச் சீட்டாக பயன்படுத்துகின்றன. இதை வாக்களர்கள் என்றோ நிராகரித்துவிட்டார்கள் ஆனால் காங்கிரஸ் போன்ற போலி மதச்சார்பின்மை கட்சிகள் அதையெல்லாம் மறந்துவிட்டு 'மதச்சார்பின்மை' என்னும் என்றோ செத்த பிணத்துக்கு உயிர் கொடுத்து ஓட்டு பிச்சை எடுக்க வைக்க முயல்கின்றன.

17 கருத்துகள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//அன்றைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்ம இராவ் நினைத்திருந்தால் பாபர் மசூதி இடிப்பை துணண இராணுவம் கொண்டாவது தடுத்து இருக்க முடியும். அப்போதெல்லாம் இந்துக்களின் நண்பன் போல அமைதி காத்த காங்கிரஸ் தேர்தலுக்கு தேர்தல் மதச்சார்பின்மை பேசுவது வெட்கக் கேடான ஒன்று.//

நூத்துல ஒரு வார்த்த சாமியோவ்!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று அப்துல் லத்தீப் நின்ற வேலூர் தொகுதியில் நாகூர் அனீபாவை எதிர்த்து முஸ்லீம் அல்லாத ஒருவரை நிறுத்தி ஜெயிக்க வைத்தார்கள்.
பட்டுக்கோட்டைத் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத பாலசுப்பிரமணியன் என்பவரை நிறுத்தி ஜெயிக்க வைத்தார்கள். அவருக்கு தமிழே ஒழுங்காகப் பேசத் தெரியாது. ஆங்கிலத்தில் தான் கதைப்பார்.
ஜாதி, மத அடிப்பையில் வேட்பாளர் நிறுத்துவது பெரும்பாலும் எடுபடுவதில்லை. வெற்றி வாய்ப்புக்கு முதலிடம் அலை, அதன் பின்னர்தான் ஜாதி மதமெல்லாம்.

பரிசல்காரன் சொன்னது…

எப்படித்தான் இப்படி சீரியஸான விஷயங்களை . விவரங்களுடன் எழுதுகிறீர்களோ....

சபாஷூ...

மணிகண்டன் சொன்னது…

விடுதலைக்கு பிறகு, இந்தியாவுல காங்கிரஸ் இல்லாம BJP (அவங்க மாதிரி )ஆட்சிக்கு வந்து இருந்தா, இத விட மத சண்டைகள் மோசமா தான் இருந்து இருக்கும். ஒருவேளை பாகிஸ்தான் மாதிரி கூட ஆகி இருக்கலாம். இன்றைய நிலையில நீங்க சொல்றது சரி தான். காங்கிரஸ் பாடறது வெறும் பஜனை தான். காங்கிரஸ் மட்டும் இல்ல, எல்லா கட்சியும் இதே தான் செய்யறாங்க.

நையாண்டி நைனா சொன்னது…

அரசியல் - நான் செய்யிற வேலையே அவங்களே செய்கிறதாலே... நான் கொஞ்சம் அமைதியா இருந்து வேடிக்கை பார்கிறேன்.

பாபு சொன்னது…

பிஜேபியின் வளர்ச்சிக்கும் நாட்டின் மதமாச்சர்யங்கள்;கலவரங்களுக்கும், ஏன் குண்டுவெடிப்புகளுக்கும் கூட நேர்விகிதப் பொருத்தம் இருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியல்லவா.

காங்கிரஸ் உடைய தவறான கொள்கைகளே பிஜேபி வளரக் காரணம் எண்டாலும் இப்பக்கி காங்கிரஸ விட்டாலும் வழி இல்லே.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று அப்துல் லத்தீப் நின்ற வேலூர் தொகுதியில் நாகூர் அனீபாவை எதிர்த்து முஸ்லீம் அல்லாத ஒருவரை நிறுத்தி ஜெயிக்க வைத்தார்கள்.
பட்டுக்கோட்டைத் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத பாலசுப்பிரமணியன் என்பவரை நிறுத்தி ஜெயிக்க வைத்தார்கள். அவருக்கு தமிழே ஒழுங்காகப் பேசத் தெரியாது. ஆங்கிலத்தில் தான் கதைப்பார்.
ஜாதி, மத அடிப்பையில் வேட்பாளர் நிறுத்துவது பெரும்பாலும் எடுபடுவதில்லை. வெற்றி வாய்ப்புக்கு முதலிடம் அலை, அதன் பின்னர்தான் ஜாதி மதமெல்லாம்.
//

அந்த தேர்தல் அலைகள் எதுவும் இல்லாதா தேர்தலான்னு சொல்லுங்க.

நான் மேலே சொல்லி இருக்கிறேன். ஒருசிலர் சொந்த செல்வாக்கால் வெற்றிபெருவாங்க. ஆனால் அனைத்து வேட்பாளர்களும் அப்படி அல்ல.

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் said...
எப்படித்தான் இப்படி சீரியஸான விஷயங்களை . விவரங்களுடன் எழுதுகிறீர்களோ....

சபாஷூ...
//

பாராட்டுக்கு நன்றி. பலவற்றை நினைவு வைத்து எழுதும் உங்கள் எழுத்தாற்றலை ஒப்பிட்டால் நான் எழுதுவது சொற்பம் தான்

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
விடுதலைக்கு பிறகு, இந்தியாவுல காங்கிரஸ் இல்லாம BJP (அவங்க மாதிரி )ஆட்சிக்கு வந்து இருந்தா, இத விட மத சண்டைகள் மோசமா தான் இருந்து இருக்கும். ஒருவேளை பாகிஸ்தான் மாதிரி கூட ஆகி இருக்கலாம். இன்றைய நிலையில நீங்க சொல்றது சரி தான். காங்கிரஸ் பாடறது வெறும் பஜனை தான். காங்கிரஸ் மட்டும் இல்ல, எல்லா கட்சியும் இதே தான் செய்யறாங்க.
//

அப்படிச் சொல்ல முடியாது. பெரும்பான்மை இந்துக்கள் உடைய நேபாளத்தில் ஆட்சி மாற்றமே நிகழ்ந்திருக்கிறது. பிஜேபியோ வேறு எந்த மதவாத கட்சியோ ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மக்கள் புரிந்து கொண்டு நிராகரிப்பார்கள், காங்கிரசை நிராகரித்ததால் தான் காங்கிரஸ் கூட்டணி போட்டுக் கொண்டு பதிவு ஆசையில் தேசிய கட்சியாக தொடர்கிறது

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
அரசியல் - நான் செய்யிற வேலையே அவங்களே செய்கிறதாலே... நான் கொஞ்சம் அமைதியா இருந்து வேடிக்கை பார்கிறேன்.
//

நீங்க என்ன செய்றிங்க, அவங்க என்ன செய்றாங்க தலயும் புரியல, விஜயும் புரியல :)

கோவி.கண்ணன் சொன்னது…

//பாபு said...
பிஜேபியின் வளர்ச்சிக்கும் நாட்டின் மதமாச்சர்யங்கள்;கலவரங்களுக்கும், ஏன் குண்டுவெடிப்புகளுக்கும் கூட நேர்விகிதப் பொருத்தம் இருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியல்லவா.//

அதுசரிதான். ஆனாலும் காங்கிரஸ் மீது வெறுப்படைந்தவர்களின் மாற்று சாய்ஸ் என்ற அளவில் தான் பிஜேபி வளர்ந்தது.

//காங்கிரஸ் உடைய தவறான கொள்கைகளே பிஜேபி வளரக் காரணம் எண்டாலும் இப்பக்கி காங்கிரஸ விட்டாலும் வழி இல்லே.
//

காங்கிரசாக இருந்தாலும் சரி பிஜேபியாக இருந்தாலும் சரி தனக்கு சாதமானவையே செய்து கொண்டார்கள்.

"உழவன்" "Uzhavan" சொன்னது…

ஓட்டுக்காக எதையாவது சொல்ல வேண்டியதுதான். ஐந்து ஆண்டு பதவி சுகத்தில ஒரு நாளைக் கூட மிஸ் பண்ண மாட்டோம்னு தான் நம்ம ஆளுங்க இருக்கிறாங்க.

//நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று அப்துல் லத்தீப் நின்ற வேலூர் தொகுதியில் நாகூர் அனீபாவை எதிர்த்து முஸ்லீம் அல்லாத ஒருவரை நிறுத்தி ஜெயிக்க வைத்தார்கள்.
பட்டுக்கோட்டைத் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத பாலசுப்பிரமணியன் என்பவரை நிறுத்தி ஜெயிக்க வைத்தார்கள். அவருக்கு தமிழே ஒழுங்காகப் பேசத் தெரியாது. ஆங்கிலத்தில் தான் கதைப்பார்.
ஜாதி, மத அடிப்பையில் வேட்பாளர் நிறுத்துவது பெரும்பாலும் எடுபடுவதில்லை. வெற்றி வாய்ப்புக்கு முதலிடம் அலை, அதன் பின்னர்தான் ஜாதி மதமெல்லாம்.//

எங்கயாவது ஒன்னு ரெண்டு இப்படி நடந்திருக்கலாம்..
ஆனா ஜாதி அடிப்படையிலதான் இங்க எல்லாக் கட்சிகளுமே வேட்பாளர்களை நிறுத்துறாங்க ஜோதிபாரதி.

சி தயாளன் சொன்னது…

அப்ப இந்த முறையும் வீட்டு கதவில் 1000 ரூபாய் இருக்குமா..?

மணிகண்டன் சொன்னது…

Tom Hanks நடிச்ச angels and demons மே 15 ரிலீஸ் ஆகுது. கொஞ்சம் முன்னாடி ரிலீசானா காங்கிரசுக்கு வசதி. அவங்க மட்டும் இல்ல, மதசார்பின்மைய பறை சாற்ற எல்லா கட்சிக்கும் ஒரு சான்ஸ். இப்ப மொத்தமும் வேஸ்ட்.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

// எதிர்கட்சிக்காரன் நிறுத்தி இருக்கும் அதே சாதியைச் சார்ந்த வேறொருவரைத்தான் மாற்றுக் கட்சியும் நிறுத்துகிறது. மாறாக அங்கே ஒரு கிறித்துவரையோ, இஸ்லாமியரையோ நிறுத்துவது இல்லை. பிறகு மதச்சார்பின்மை என்கிற மண்ணாங்கட்டி எங்கிருந்து வந்தது ?//
மதம் மற்றும் சாதியையும் பார்க்கின்றார்கள்.. அதைவிட செல்வாக்கும் பணபலமும் முக்கியம் என்பதையும் மறக்க முடியாது... மொத்ததிற்கு நல்லவர்களுக்கு அங்கு இடமில்லை.. என்னை பொருத்தவரை அரசியல்வாதிகளை விட அரசு அதிகாரிகள்தான் இந்த தேசத்தின் விரோதிகள்....இவர்களிடமிருந்து காப்பாற்றினாலே இன்னுமொரு இந்தியாவை உருவாக்க முடியும்..

priyamudanprabu சொன்னது…

////
இந்துக்கள் நிறைந்த பகுதியில் ஒரு இஸ்லாமியரை வேட்பாளராக அறிவிக்கும் துணிவு இந்த கட்சிகளுக்கு இருக்கிறதா ?
////

டெபாசிட்டு கிடைக்காது

priyamudanprabu சொன்னது…

///
’டொன்’ லீ said...
அப்ப இந்த முறையும் வீட்டு கதவில் 1000 ரூபாய் இருக்குமா..?
/////

10000 பத்தாது !?!??!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்