பின்பற்றுபவர்கள்

17 மார்ச், 2009

புனித நீராடலும், பாவ புண்ணியமும் - பகுதி 2

முதல் பகுதியில் பெரிய விவாதங்கள் நடந்தேறியதால், இரண்டாவது பகுதியும் எழுதும் ஆவல் ஏற்பட்டது. அதில் கலந்து கொண்டு கருத்துரைத்தவர்களுக்கும், வாசித்தவர்களுக்கும் நன்றி.

உலகில் உள்ள அனைத்து தத்துவங்களுமே ஐம்பூதம் (பஞ்சபூதம்) பற்றிப் பேசுகின்றன. பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருட்களுமே நீர், நிலம்(திடப்பொருள்), நெருப்பு, ஆகாயம், காற்று என ஐந்துப் பொருள்களின் பல்வேறு விழுக்காடு சேர்க்கையில் அடங்குபவை. இதைத்தவிர ஆறாவது ஒரு பொருள் உண்டு, அவை உயிர் மற்றும் அதுனடன் இணைந்த இயக்கம். உயிர்த்தன்மை இல்லை என்றால் மற்றவை அனைத்தையுமே உணரமுடியாது.

மேற்கண்ட ஐம்பூதங்களின் சேர்க்கையே நம் உடல், உடலில் உயிர்வாழ்தலுக்கு முதன்மையான தேவைகளாக கருத்தப்படுவது உணவும், நீரும் தான். உடலின் எடையில் 80 விழுக்காடு வெறும் நீர்தான். நீரின்றி அமையாது உலகு என்ற சொற்றொடரில் இருந்தே நீரின் சிறப்பு அனைவருக்குமே தெரியும். நீர் ஆதாரமின்றிப் போனால் பூமியும் கூட பிற கோள்களைப் போன்று வெறும் வாயுக் கோளம் தான். அதனால் தான் தண்ணீரை நம்முன்னோர்கள் பலவிதமாக போற்றினார்கள், அதன் புகழ்பாடினார்கள், அதனை பாதுகாத்து வைத்தார்கள்.

தண்ணீரின் தூய்மைக் கேடு வெகுவிரைவாக உடலில் மாற்றத்தையும் நோய்களையும் ஏற்படுத்திவிடும். முன்பெல்லாம் குளமின்றி எந்த கோவில்களையும் அமைத்ததே இல்லை, கோவில்கள் ஏற்பட்டதன் நோக்கம் மக்களை ஒன்றுதிரட்டுவதற்காகவும், அவர்களுக்கு களிப்புற பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தும் பொது இடம், அதையே கடவுள் பெயரால் செய்வதால் ஈடுபாட்டுடன் செய்வார்கள் என்பதே. முன்பெல்லாம் தற்பொழுது இருப்பதைப் போன்ற குளோரின் குடிநீர் கிடையாது, குடிப்பதற்கும், குளிப்பதற்கும் குளமோ, ஆறோ அந்த நீரைத்தான் பயன்படுத்த முடியும். புறந்தூய்மை நீரால் அமையும் என்பதே வள்ளுவர் வாக்கு. மக்கள் கூடும் கோவில்களில் தூய்மையை வழியுறுத்த குளித்துவிட்டு செல்லும் வசதிக்காக குளங்களை கட்டி வைத்தார்கள்.

கோவில் குள நீர், தீர்த்த (ஆற்றுத் 'துருத்தம்' என்கிற தமிழ் சொல்லின் மருவல்) நீர் மக்களின் உடல் தூய்மைக்கும், குடிநீருக்கும் ஆக இருப்பதால் அதான் தூய்மையை காக்கவேண்டியது அம்மக்களின் பொறுப்பே ஆகும். நீரை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள் என்கிற வெறும் அறிவிப்பாக இருந்தால் எவரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பதற்காகவே கோவில் குளம் மற்றும் தீர்த்தங்களில் குளிப்பது புனிதம் மற்றும் பாவம் போக்கும் என்று சொல்லப்பட்டிருக்க வேண்டும்.

அளவுக்கு மிகுதியான தண்ணீருக்கு நாம் பல்வேறு வழிகளில் தூய்மை கேடு விளைவிப்பதாலேயே இன்றைய தேதியில் சுற்றுப்புற தூய்மை மற்றும், சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு பெரும் அறைகூவலாக இருக்கிறது.

பலருக்கு பலனாக இருக்கும் பொது இட ஆற்று, குளத்து, அணை நீருக்கு தூய்மை கேடு செய்வது பாவம், அதை தூய்மை படுத்த உதவுவது புண்ணியம் என்று சொல்லலாம் :)
அப்படி இல்லாமல் வெறுமனே புராணம் கேட்டு இறங்கிக் குளிப்பதால் பாவமோ, புண்ணியமோ இல்லை

நீர்தான் நீர்தான் புரிந்து கொள்ளாத நீர்தான்,
புரிந்து கொண்டால் நீரூம் புனித(நீ)ர் தான் !


************************************************************
(நேரமின்மையால் எழுதியதும் சரி பார்க்கவில்லை, ஆங்காங்கே எழுத்துப் பிழைகள் தென்படும் பொருத்தருள்க !)

12 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

\நீர்தான் நீர்தான் புரிந்து கொள்ளாத நீர்தான்,
புரிந்து கொண்டால் நீரூம் புனித(நீ)ர் தான் ! \

மிக அருமை

வேறு கருத்துகள் சொல்லும் அளவுக்கு எனக்கு தெளிவில்லை

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

இந்த பதிவை முன்னாடியே எழுதியிருந்தா நாங்க சும்மா இருந்திருப்போம்.

எங்களையும் பின்னூட்டம் போடவைச்சு பின்னாடி இப்படி ஒரு பதிவு.

நல்லா இருக்கு ஓய் நிங்க செய்யறது.

:)

அப்பாவி முரு சொன்னது…

//தண்ணீரை நம்முன்னோர்கள் பலவிதமாக போற்றினார்கள், அதன் புகழ்பாடினார்கள், அதனை பாதுகாத்து வைத்தார்கள்.//

தாயைப் பழித்தாலும்,
தண்ணீரைப் பழிக்கதே.

என்றும் நம்முன்னோர்கள் நமக்கு தண்ணீரின் மகத்துவத்தை தாயோடு ஒப்பிட்டு உணர்த்தியுள்ளார்கள்

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//அப்படி இல்லாமல் வெறுமனே புராணம் கேட்டு இறங்கிக் குளிப்பதால் பாவமோ, புண்ணியமோ இல்லை//

மிகச் சரி! உண்மை!!

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

//நீர்தான் நீர்தான் புரிந்து கொள்ளாத நீர்தான்,
புரிந்து கொண்டால் நீரூம் புனித(நீ)ர் தான் !//

:-))))

ஆ.ஞானசேகரன் சொன்னது…

இப்படி கிராமங்களில் குடிப்பதற்காக ஒரு சிறிய குளம் வைத்திருப்பார்கள்..எங்கள் ஊரிலும் இதே போல் ஒரு குளம் உண்டு அதைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றது.. அந்த குளத்தில் நீர் செம்மண் நிறத்தில் இருக்கும்,.. இதை மண்பானையில் எடுத்து வந்து தேத்தாங் கொட்டையை(நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்) பானை அடியில் தேய்ப்பார்கள் பின் சில வினாடிகளில் தண்ணீர் கண்ணாடி போல் வரும்... சுவையும் கூடும். இது விஞ்ஞான முறைப்படி சுத்தமானதா என்று தெரியவில்லை....

கோவி.கண்ணன் சொன்னது…

//நட்புடன் ஜமால் said...


மிக அருமை

வேறு கருத்துகள் சொல்லும் அளவுக்கு எனக்கு தெளிவில்லை
//

ஜமால் பின்னூட்டக் கருத்துக்கு நன்றி. கருத்துகள் பரிமாறிக் கொள்ளும் போது தான் தெளிவு கிடைக்கும் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் said...
இந்த பதிவை முன்னாடியே எழுதியிருந்தா நாங்க சும்மா இருந்திருப்போம்.

எங்களையும் பின்னூட்டம் போடவைச்சு பின்னாடி இப்படி ஒரு பதிவு.

நல்லா இருக்கு ஓய் நிங்க செய்யறது.

:)
//

நீங்கள் அவசரப் பட்டு கொட்டினால் நான் என்ன செய்வது. காரண செயல்பாடுகளில் காரணம் மறையும் போது, இல்லாத போது செயல் (மட்டும்) ஏன் என்ற குழப்பமே வரும். முதல் பதிவு செயல், இந்த பதிவு காரணம் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//muru said...
//தண்ணீரை நம்முன்னோர்கள் பலவிதமாக போற்றினார்கள், அதன் புகழ்பாடினார்கள், அதனை பாதுகாத்து வைத்தார்கள்.//

தாயைப் பழித்தாலும்,
தண்ணீரைப் பழிக்கதே. /./

முரு, நன்றி, எழுதும் போது இந்த பழமொழி நினைவுக்கு வந்தது, தேவையில்லாமல் தாயை ஏன் பழிக்க வேண்டும் என்று நினைத்தே அதனை பதிவில் சேர்க்கவில்லை :)

//என்றும் நம்முன்னோர்கள் நமக்கு தண்ணீரின் மகத்துவத்தை தாயோடு ஒப்பிட்டு உணர்த்தியுள்ளார்கள்
//

ஒப்பிட்டு உயர்த்தி உணர்த்தினார்கள் என்று சொல்வதுதான் நீங்கள் மேற்சொன்ன பழமொழி.

கலந்து கொண்டதற்கு மிக்க அன்றி !

மணிகண்டன் சொன்னது…

me the 10th.

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

உங்களுக்கு பட்டாம்பூச்சி விருது வழங்கி இருக்கேன்.

http://vediceye.blogspot.com/2009/03/blog-post_17.html

உங்களுக்கு விருது வழங்கி நான் கெளரவம் பெருகிறேன்....!
தொடருங்கள்..
நன்றி.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

நீர்தான் நீர்தான் புரிந்து கொள்ளாத நீர்தான்,
புரிந்து கொண்டால் நீரூம் புனித(நீ)ர் தான் !/

அண்டத்தில் உள்ளது
பிண்டத்திலும் உண்டு.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்