பின்பற்றுபவர்கள்

8 பிப்ரவரி, 2009

திருப்பூர் குமரர்கள் !

அண்ணாச்சியிடம் விடைபெற்று பல்லடம் வழியாக திருப்பூர் பேருந்தில் ஏறும் போது மணி மாலை 2:30 ஆகி இருந்தது. கோவையின் இதமான குளிர்காற்று கண் அயர்த்தினாலும், பேருந்தில் போட்ட 'உன்னாலே உன்னாலே' திரைப்படத்தில் ஒலியில் தூங்க முடியவில்லை. அரைமணிநேரம் 'விழித்தேன்' பிறகு அயர்ந்தேன். திருப்பூரை நெருங்கும் போது விழிப்புவர இறங்கும் போது மணி 4:00 ஆகி இருந்தது.

பரிசல்காரன் மற்றும் வெயிலான் ராமேஷுடனான மதிய உணவு நேரம் தப்பியதற்கு கோவையில் இருந்தே வருத்தம் தெரிவித்து இருந்தேன். திருப்பூரில் ஏற்கனவே தொலைபேசியில் அழைத்து அங்குவரச் சொல்லி இருந்த, எங்கள் வீட்டில் வளர்ந்த, அப்பாவின் நண்பரின் மகன் காத்திருந்தான், அவனிடம் உரையாடிக் கொண்டிருந்த போதே, பரிசல்காரனிடம் திருப்பூர் வந்து சேர்ந்ததை உறுதிபடுத்த... 5 நிமிடத்திற்கெல்லாம் பைக்கில் வந்து சேர்ந்தார் பரிசல்.


கிருஷ்ணாவின் முகம் ஏற்கனவே புகைப்படங்கள் மூலம் நன்கு அறிமுகமானதாலும், இருவருக்கும் நட்பு பிணைப்பு முன்பே ஏற்பட்டிருந்ததாலும் ஒருவருக்கொருவர் புதியவர் அல்ல, கைக்குலுக்களுடன் ஒரு தழுவல், அதன் பிறகு தனது இருசக்கர வாகனத்தில் என்னை ஏற்றிக் கொண்டு வெயிலான் ராமேஷ் அறையை நோக்கி பயணித்தார். இடையே 'புழுதிக்காடு' அருணும் சேர்ந்து கொள்ள சுமார் மாலை நான்கு மணிக்கு (28 புதன் ஜன 2009) ரமேஷின் அறைக்குச் சென்று சேர்ந்தோம். ரமேஷ் எனக்கு பிறகு தமிழ்மண நட்சத்திரவாரத்தில் எழுதியவர் மற்றும் ஓரளவு இருவரும் ஒருவரை ஒருவர் அறிவோம் என்பதால் இவரும் புதியவராக தெரியவில்லை. பரிசல் 'யாரைப் பார்த்தாலும் நாங்களெல்லாம் தழுவிக் கொள்வோம்' என்றார். ரமேஷின் 'தேகம்' கட்டியணைக்க முடியுமா ? சந்தேகம் !!!. பரிசலிடம் 'சிரமம் தான்' சொல்லி இருந்தாலும். அந்த அளவுக்கெல்லாம் இல்லை. ஒருவழியாக நேரில் பார்த்த போது... முடிந்தது ! :) நம்புங்கப்பா !

ரமேஷ் ஹார்லிக்ஸை அப்படியே சாப்பிடுபவர் என்பதை பார்த்ததும் தெரிந்து கொள்ளலாம். எனக்கு தேநீர் தான் கிடைத்தது :(



ரமேஷ் தன் அறை நண்பரிடம் சொல்லி அனைவருக்கும் தேநீர் வழங்கினார். அதன்பிறகு கிருஷ்ணா தன் முழுத்திறமையையும் வெளிப்படுத்தி நிழல்படங்களை சுட்டுத் தள்ளினார்.


(இவர் ரமேஷின் அறை நண்பர்)


(பரிசல் தரையில் படுத்துக் கொண்டு எடுத்தப்படம்)


(பரிசல் தரையில் நின்று எடுத்தப்படம்)





(இதெல்லாம் யாருடையதுன்னு சொல்லமாட்ட்டேன்... நிழல்படம் எடுப்பது அறிந்து அருகே காய்ந்து கொண்டிருந்த XXXL ஜட்டிகள் படத்தில் விழுவதை தவிர்பதற்காக உடனடியாக அகற்றப்பட்டதா என்பதையும் சொல்லமாட்டேன்)

மூவரின் கலகல பேச்சின் நடுவே கார்க்கி, தாமிரா லக்கிலுக் ஆகியோர் அலைபேசியில் பரிசல் / பரிசலை தொடர்பு கொள்ள என்னிடமும் பேசினார்கள்.



(இப்படி படம் எடுத்தால்...கீழே உள்ள காட்சி கிடைக்கும்)



புழுத்திகாடு அருணும் இயல்பாக பேசினார். 28 வயதாம், திருமணம் இன்னும் செய்து கொள்ளவில்லை. ஒல்லிய, மெல்லிய உடல்வாகு, நல்ல உயரம் (திருப்பூரில் வரன் இருக்கா ?).


வெயிலான் ரமேஷ் காலனி வீட்டில் வாடகைக்கு வசிக்கிறார் (சொந்த ஊர் விருதுநகர், தற்பொழுது திருப்பூர் தொழில் அதிபர், அப்படித்தான் கிருஷ்ணா சொன்னார்) அறை வாடகை ரூ5000மாம், ஓரு ஹால், ஒரு கிச்சன், ஒரு பெட்ரூம், மற்றும் அட்டாச்ட் குளியல் அறை, துணி உளர்த்த ஒரு சிறிய இடம், ரூ5000 வாடகை இதே அளவு சென்னை விடுகளைவிட மிகுதியோ என்று தோன்றியது.

தாமிரா ஏற்கனவே கொடுத்திருந்த திருநெல்வேலி அல்வாவை ரமேஷ் சபை நடுவே வைத்தார்.

(அல்வா இல்லாமல் சந்திப்பு தித்திப்பா ?)

தாமிராவுக்கு ஒரு 'ஓ' போட்டுவிட்டு அல்வாவை சுவைத்தோம். கலகல பேச்சு தொடர்ந்து கொண்டிருந்தது. மாலை 5:20 ஆகி இருந்தது. 'நான் கிளம்புறேன்' என்றேன். 'இருங்க நம்ம ஈரவெங்காயம்' 5:30 மணிக்கு வருவதாகச் சொன்னார் என்றார் ரமேஷ். 5:40 இருக்கும், ஈரவெங்காயம் வந்து சேர்ந்தார். பெயர் சாமி நாதன். புன்னகையை சிந்த தயாராக இருக்கும் முகம், சராசரி உயரம். எளிதில் பழகிவிடும் குணம்.

சாமி நாதனை இதற்கும் மேல் வரூணித்தால் கூச்சப்படுவார். போதும் ! சுவாமி நாதனுடன் சேர்ந்து நாங்கள் ஐவர் ஆனோம் (திஸ் ஈஸ் டூ மச்!!!) அவரும் சேர்ந்து கொள்ள மேலும் கலகல பேச்சுகள். மற்ற தனிப்பட்ட தகவல்கள் என அறிந்து கொண்டோம். அன்றுதான் அருண் மற்றும் சுவாமிநாதன் மற்ற இருவரை நேரடியாக சந்தித்தார்களாம்.


மணி மாலை 6 ஐ நெருங்கவே செல்ல வேண்டிய அடுத்த நிலையம் நினைவுக்குவர ... ம் கிளம்புவோம் என்று அரை மனதாகச் சொல்ல, (அப்பாடா கிளம்புறான்யா) , ஐவரும் கிளம்பினோம். வழியில் ரமேஷ் தனது அலுவலகம் எதிரே விடைபெற்றார்.

அதன் பிறகு திருப்பூர் குமரன் நினைவகம் இருக்குமிடத்தில் உள்ள உணவு விடுதியில் நால்வரும் பஜ்ஜி, காஃபி சுவைத்துவிட்டு.



அங்கு பஜ்ஜி மிகச் சுவையாக இருந்தது (திருப்பூர் போனால் சென்று... தின்று வாருங்கள், பில்லை கிருஷ்ணாவுக்கு அனுப்பி பெட்டிகேஷ் பெற்றுக் கொள்ளுங்கள், அன்று தொகை செலுத்தியது சாமி நாதன்),

சாமிநாதனும், அருணும் விடை பெற, அருகில் இருந்த திருப்பூர் குமரன் நினைவகத்தின் எதிரில் நிறுத்தி எனக்கு நிழல்படம் வாய்பளித்தார் கிருஷ்ணா. அதன் பிறகு திருப்பூர் குமரன் கொடியுடன் சரிந்து உயிர்நீத்த இடத்திற்கு அழைத்துச் சென்றார்.



பின்னர் பேருந்து நிலையத்தினுள்ளே விட்டுவிட்டு விடைபெற்றார். அன்றைய நாள் முழுவதும் (28 ஜன 2009 பார்ததவர்கள் ஸ்வாமி ஓம்கார், வடகரை வேலன் அண்ணாச்சி, திருப்பூர் பதிவர்களின் முகம் நினைவில் மாறி மாறி வந்து கொண்டிருக்க, அருகே மதுரை செல்லும் பேருந்து புறப்பட ஆயத்தமாக நின்று கொண்டிருந்தது.

தொடரும் ....

41 கருத்துகள்:

தமிழ் உதயன் சொன்னது…

அன்பரே,

அடுத்தமுறை வரும் போது கண்டிப்பாக என்னை தொடர்ப்பு கொள்ளவும், நானும் உங்களுடன் கலந்து கொள்ள விருப்பம் கொள்ளுகிறேன்.... நான் கலைஞர் மற்றும் ஈழ விடயங்கள் பற்றி கதைத்து உங்களை கொடுமைப்படுத்த மாட்டேன். இது உறுதி,.

நன்றி

தமிழ் உதயன்

சரவணகுமரன் சொன்னது…

உங்க பயணம் எனக்கு சோர்வை கொடுக்கிறது. இடைவிடாத வெற்றிக்கரமான பயணத்திற்கு வாழ்த்துக்கள்.

குசும்பன் சொன்னது…

//(இப்படி படம் எடுத்தால்...கீழே உள்ள காட்சி கிடைக்கும்)//

வேண்டாம் சின்னபுள்ளைங்க பயந்துடும்!:)

******தனி தனியாக படிக்கவும்******
ஜட்டி வேற கொடியில் காய்கிறது என்று குறிப்பா சொல்லி இருக்கீங்க!

கிரி சொன்னது…

//பேருந்தில் போட்ட 'உன்னாலே உன்னாலே' திரைப்படத்தில் ஒலியில் தூங்க முடியவில்லை//

எங்க ஊருல பட்டை போட்டு நொறுக்கி தள்ளுவாங்க :-))

//ரமேஷ் ஹார்லிக்ஸை அப்படியே சாப்பிடுபவர் என்பதை பார்த்ததும் தெரிந்து கொள்ளலாம்//

காம்ப்ளான் பாய் ;-)

//வாடைக்கு வசிக்கிறார் //

எச்சுச்மி வாடையா வாடகையா

பரிசல் தலையில என்ன? இதற்கும் வெயிலான் துணி காய போட்ட கொடிக்கும் எதுவும் சம்பந்தம் உண்டா! ஹா ஹா ஹா

கோவி.கண்ணன் சொன்னது…

//தமிழ் உதயன் said...
அன்பரே,

அடுத்தமுறை வரும் போது கண்டிப்பாக என்னை தொடர்ப்பு கொள்ளவும், நானும் உங்களுடன் கலந்து கொள்ள விருப்பம் கொள்ளுகிறேன்.... நான் கலைஞர் மற்றும் ஈழ விடயங்கள் பற்றி கதைத்து உங்களை கொடுமைப்படுத்த மாட்டேன். இது உறுதி,.

நன்றி

தமிழ் உதயன்
//

கண்டிப்பாக தொடர்பு கொள்கிறேன்.

தமிழ் உதயன் C/O பூமி பந்து தானே உங்கள் முகவரி. :)

கோவி.கண்ணன் சொன்னது…

//சரவணகுமரன் said...
உங்க பயணம் எனக்கு சோர்வை கொடுக்கிறது. இடைவிடாத வெற்றிக்கரமான பயணத்திற்கு வாழ்த்துக்கள்.
//

சரவணகுமரன்,
பயணம் எல்லாம் முடிந்தது. வாழ்த்துக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//கிரி said...
//பேருந்தில் போட்ட 'உன்னாலே உன்னாலே' திரைப்படத்தில் ஒலியில் தூங்க முடியவில்லை//

எங்க ஊருல பட்டை போட்டு நொறுக்கி தள்ளுவாங்க :-))//

மிகப் பெரிய எரிச்சல், தொடக்க காலத்தில் நாகை தஞ்சாவூர் பக்கங்களிலும் வீடியோ போடுவது வழக்கம், இப்பொழுதெல்லாம் யாரும் விரும்புவதில்லை, வீடியோ பொட்டி இருக்கும் இடத்தில் டிவி இருப்பதில்லை. உங்க பக்கத்து மக்களை திருந்த சொல்லுங்கோ.


////வாடைக்கு வசிக்கிறார் //

எச்சுச்மி வாடையா வாடகையா

பரிசல் தலையில என்ன? இதற்கும் வெயிலான் துணி காய போட்ட கொடிக்கும் எதுவும் சம்பந்தம் உண்டா! ஹா ஹா ஹா
//

யோவ்.....ஏன்யா கொல்லுறிய,

எழுத்துபிழை...தூக்க கலக்கத்தில் தட்டச்சினேன். விட்டுப்புடிங்கோ !

கோவி.கண்ணன் சொன்னது…

//குசும்பன் said...
//(இப்படி படம் எடுத்தால்...கீழே உள்ள காட்சி கிடைக்கும்)//

வேண்டாம் சின்னபுள்ளைங்க பயந்துடும்!:) //

சரவணவேலுவைப் பார்த்த புள்ளங்களுக்கே இன்னும் மயக்கம் தெளியலையாமே. :)

//******தனி தனியாக படிக்கவும்******
ஜட்டி வேற கொடியில் காய்கிறது என்று குறிப்பா சொல்லி இருக்கீங்க!
//

அதை நான் சொல்லவில்லை, நீ தான் சொல்லுறே. பரிசல் தான் உறுதிபடுத்தனும்.

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

//சுவாமி நாதனுடன் சேர்ந்து நாங்கள் ஐவர் ஆனோம் //

ஐயர் ஆனிங்களா? :)))

கோவி.கண்ணன் சொன்னது…

//VIKNESHWARAN said...
//சுவாமி நாதனுடன் சேர்ந்து நாங்கள் ஐவர் ஆனோம் //

ஐயர் ஆனிங்களா? :)))
//

விக்கி, நீ கம்ப இராமாயணம் படிக்கல !
:)

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

கலக்குங்க..

திருப்பூர்காரங்க அல்வா கொடுத்துட்டாங்களா ;)?


ஒரே நாளில் அதிக பதிவர்கள் சந்தித்த பட்டியலில் நீங்கள் முதலிடத்தில் இருக்கிறீர்கள்.

இது தான் சூராவளி சுற்று பயணமா?
(ஆகாவழி அல்ல-சூராவளி என படிக்கவும் ;) )

பெருசு சொன்னது…

பரிசலு ரீசர்ட் குடுத்தாரா இல்லியா

பரிசல்காரன் சொன்னது…

விடுமுறையில் வந்து இப்படி எங்களையெல்லாம் சிரமப்பட்டு சந்தித்துச் சென்றது எங்களை மிகவும் கௌரவப் படுத்தியது கோவி-ஜி.

நெகிழ்ச்சியாய் உணர்ந்தோம் அன்று!!

வால்பையன் சொன்னது…

கொங்கு மண்டலம்னாலே இப்படிதான் எலாரும் பாசக்கார பசங்க!
திகட்ட திகட்ட அன்பு காட்டுவாங்க!

அடுத்த முறை உங்களின் பயண லிஸ்ட்டில் ஈரோடும் இருக்கட்டும்,
பெரியார் நினைவிடத்துக்கு அழைத்து செல்கிறேன்

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//அண்ணாச்சியிடம் விடைபெற்று பல்லடம் வழியாக திருப்பூர் பேருந்தில் ஏறும் போது மணி மாலை 2:30 ஆகி இருந்தது.//

பல்லடம் வழியா போனியளா?
அங்க சோழர் பரம்பரையின் ஒரே எம்.எல்.ஏ வைப் பாத்தியளா? அதான் அந்த அல்வா கொடுக்குற பையன்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

பதிவர்களைப் படம் எடுத்து அழகாக அறிமுகம் செய்து அனுபவங்களைப் பகிர்ந்து கொட்ண்டதற்கு நன்றி!

தமிழ் அமுதன் சொன்னது…

நல்ல கோர்வை,,,,நல்ல விறுவிறுப்பு

படிக்கும் போது நாங்களும் உடனிப்பதை போல

ஒரு உணர்வு..
மறுபடி சென்னை விஜயம் உண்டா?

☼ வெயிலான் சொன்னது…

படங்களுடனான, பதிவர் அறிமுகங்களும் அருமை.

என் பேர் ரமேஷ். துணைக்கு ஒரு எழுத்தை சேர்த்திட்டீங்க ;)

வெண்பூ சொன்னது…

இங்கயே இருக்கோம், சொந்த ஊரும் சேலம்தான், ஆனால் இதுவரை இவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை, அங்க இருந்து வந்து ஒரே வாரத்துல எல்லாரையும் பாத்துட்டீங்க.. (கொஞ்சம் பொறாமையுடன்) பாராட்டுகள்

துளசி கோபால் சொன்னது…

திக் விஜயம் அருமை.

என்னங்க, புழுதிக்காடு இவ்வளோ ஒல்லி......புழுதிக்காத்து அடிச்சுக்கிட்டுப் போயிறப்போகுது:-)))))

Saminathan சொன்னது…

என்ன அண்ணே..
படம் போட்டு கதை எல்லாம் சொல்லிருக்கீங்க...
நன்றி...

கொங்கு மண்டலம்னாலே இப்படிதான் எலாரும் பாசக்கார பசங்க!
திகட்ட திகட்ட அன்பு காட்டுவாங்க..

வாலை வழி மொழிகிறேன்..

தமிழ் உதயன் சொன்னது…

///தமிழ் உதயன் said...
அன்பரே,

அடுத்தமுறை வரும் போது கண்டிப்பாக என்னை தொடர்ப்பு கொள்ளவும், நானும் உங்களுடன் கலந்து கொள்ள விருப்பம் கொள்ளுகிறேன்.... நான் கலைஞர் மற்றும் ஈழ விடயங்கள் பற்றி கதைத்து உங்களை கொடுமைப்படுத்த மாட்டேன். இது உறுதி,.

நன்றி

தமிழ் உதயன்
//

கண்டிப்பாக தொடர்பு கொள்கிறேன்.

தமிழ் உதயன் C/O பூமி பந்து தானே உங்கள் முகவரி. :)//


பூமிபந்தின் ஒரு முனையின், கோடியில் ஒரு பங்கில் உள்ளேன்
நீங்கள் மறுமுறை திருப்பூர் வரும்போது கண்டிப்பாக உங்களை சந்திப்பேன்..
மற்றபடி பரிசிலாரிடம் விபரம் கேட்டு கொள்ளுகிறேன்..
நன்றி

தமிழ் உதயன்

நட்புடன் ஜமால் சொன்னது…

அட-டா பெரும் புள்ளிகளின் அறிமுகங்கள்

நன்றி அண்ணே

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

கிரி said...
//பேருந்தில் போட்ட 'உன்னாலே உன்னாலே' திரைப்படத்தில் ஒலியில் தூங்க முடியவில்லை//

எங்க ஊருல பட்டை போட்டு நொறுக்கி தள்ளுவாங்க :-))//

அண்ணே, உங்க எழுத்துப்பிழைய சொன்ன கிரி பாட்டை போட்டுன்னு எழுதாம பட்டை போட்டுன்னு எழுதியிருக்காரு பாருங்க.

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

பதிவர்கள சந்திக்கன்னே போனமாதிரி இருக்கு உங்க இந்தியப் பயணம்.
என்னாலயெல்லாம் இப்டி சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய முடியாதுண்ணே.
கலக்கிட்டேள் போங்கோ.

கோவி.கண்ணன் சொன்னது…

//VIKNESHWARAN said...
//சுவாமி நாதனுடன் சேர்ந்து நாங்கள் ஐவர் ஆனோம் //

ஐயர் ஆனிங்களா? :)))
//

வாய்யா வா...வந்து பூணூல் மாட்டிவிட்டு போ !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் said...
கலக்குங்க..

திருப்பூர்காரங்க அல்வா கொடுத்துட்டாங்களா ;)?//

பஜ்ஜியும் கொடுத்தாங்க !


//ஒரே நாளில் அதிக பதிவர்கள் சந்தித்த பட்டியலில் நீங்கள் முதலிடத்தில் இருக்கிறீர்கள்.//

ஒருபதிவர் சந்திப்பில் ஒரே நாளில் 30 பேர் வரை சந்திக்கலாம், ஆனால் அதில் புதியவர்கள் 5வர் மட்டுமே நினைவிருக்கும். இங்கு தனித்தனியாக சந்தித்தேன், அவ்வளவே.

//இது தான் சூராவளி சுற்று பயணமா?
(ஆகாவழி அல்ல-சூராவளி என படிக்கவும் ;) )
//

சூராவளி ஊருக்குள் சுற்றுப் பயணம் செய்தால் அவ்வளவு தான். :)

கோவி.கண்ணன் சொன்னது…

//பெருசு said...
பரிசலு ரீசர்ட் குடுத்தாரா இல்லியா
//

ரமேஷும் கொடுக்கவில்லை

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் said...
விடுமுறையில் வந்து இப்படி எங்களையெல்லாம் சிரமப்பட்டு சந்தித்துச் சென்றது எங்களை மிகவும் கௌரவப் படுத்தியது கோவி-ஜி.

நெகிழ்ச்சியாய் உணர்ந்தோம் அன்று!!
//

அலுவலக வேலை நாளில் நீங்கள் அனைவருமே சிரமம் பார்க்கமல் வந்ததற்கு நானும் மகிழ்ச்சியடைகிறேன் பரிசல்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...
கொங்கு மண்டலம்னாலே இப்படிதான் எலாரும் பாசக்கார பசங்க!
திகட்ட திகட்ட அன்பு காட்டுவாங்க!//

:)

//அடுத்த முறை உங்களின் பயண லிஸ்ட்டில் ஈரோடும் இருக்கட்டும்,
பெரியார் நினைவிடத்துக்கு அழைத்து செல்கிறேன்
//
அழைப்புக்கு நன்றி ! வந்துவிட்டால் போகுது.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
பதிவர்களைப் படம் எடுத்து அழகாக அறிமுகம் செய்து அனுபவங்களைப் பகிர்ந்து கொட்ண்டதற்கு நன்றி!
//

ஜோதிபாரதி பாராட்டுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜீவன் said...
நல்ல கோர்வை,,,,நல்ல விறுவிறுப்பு

படிக்கும் போது நாங்களும் உடனிப்பதை போல
ஒரு உணர்வு..
//

ஜீவன் பாராட்டுக்கு நன்றி !

//மறுபடி சென்னை விஜயம் உண்டா?
//

சென்னை வழியாக செல்லும் போதெல்லாம் சென்னை வருகை உண்டு

கோவி.கண்ணன் சொன்னது…

//வெயிலான் said...
படங்களுடனான, பதிவர் அறிமுகங்களும் அருமை.//

பாராட்டுக்கு நன்றி !

என் பேர் ரமேஷ். துணைக்கு ஒரு எழுத்தை சேர்த்திட்டீங்க ;)
//

'என் பேர் ரமேஷ்' என்ற தலைப்பில் யாராவது சிறுகதை எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//வெண்பூ said...
இங்கயே இருக்கோம், சொந்த ஊரும் சேலம்தான், ஆனால் இதுவரை இவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை, அங்க இருந்து வந்து ஒரே வாரத்துல எல்லாரையும் பாத்துட்டீங்க.. (கொஞ்சம் பொறாமையுடன்) பாராட்டுகள்
//

அதுக்கு காரணமும் உண்டு, ஒருவாரம் தொடர்ச்சியாக அங்கு விடுமுறை எடுக்க முடியாது. ஓரிரண்டு நாள் செல்வதற்குக் கூட நிறைய திட்டமிடனும். பதிவர் சந்திப்பு போட்டு புதிய புதிய பதிவர்களை நீங்கள் சந்திக்கிறீர்களே.

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
திக் விஜயம் அருமை.

என்னங்க, புழுதிக்காடு இவ்வளோ ஒல்லி......புழுதிக்காத்து அடிச்சுக்கிட்டுப் போயிறப்போகுது:-)))))
//

அம்மா...ஆண்கள் 30 வயதுக்கு மேல் தான் அழகு ! பெண்களுக்கு அப்படியே மாறும் !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//பூமிபந்தின் ஒரு முனையின், கோடியில் ஒரு பங்கில் உள்ளேன்
நீங்கள் மறுமுறை திருப்பூர் வரும்போது கண்டிப்பாக உங்களை சந்திப்பேன்..
மற்றபடி பரிசிலாரிடம் விபரம் கேட்டு கொள்ளுகிறேன்..
நன்றி

தமிழ் உதயன்

4:27 PM, February 09, 2009
//

நீங்களும் திருப்பூரா...அடுத்த முறை சந்திக்கலாம்

கோவி.கண்ணன் சொன்னது…

// ஜோசப் பால்ராஜ் said...
கிரி said...
//பேருந்தில் போட்ட 'உன்னாலே உன்னாலே' திரைப்படத்தில் ஒலியில் தூங்க முடியவில்லை//

எங்க ஊருல பட்டை போட்டு நொறுக்கி தள்ளுவாங்க :-))//

அண்ணே, உங்க எழுத்துப்பிழைய சொன்ன கிரி பாட்டை போட்டுன்னு எழுதாம பட்டை போட்டுன்னு எழுதியிருக்காரு பாருங்க
//

கிரி ரஜினி ரசிகர் அதுக்கு மேல விளக்கம் கேட்காதிங்க ஐயங்காரே.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...
பதிவர்கள சந்திக்கன்னே போனமாதிரி இருக்கு உங்க இந்தியப் பயணம்.
என்னாலயெல்லாம் இப்டி சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய முடியாதுண்ணே.
கலக்கிட்டேள் போங்கோ.
//

சூறாவளி முடியாவிட்டால் ஆடிகாற்று, பருவகாற்று முயற்சி செய்யவும் !
:)

வெண்பூ சொன்னது…

//
கோவி.கண்ணன் said...
அலுவலக வேலை நாளில் நீங்கள் அனைவருமே சிரமம் பார்க்கமல் வந்ததற்கு நானும் மகிழ்ச்சியடைகிறேன் பரிசல்.
//

அலுவலக வேலை நாளில் அனைவருமே வேலை பார்க்கமல் வந்ததற்கு அவரது எம் டி மகிழ்ச்சியடையவில்லை கோவி. :)))

கிரி சொன்னது…

//அண்ணே, உங்க எழுத்துப்பிழைய சொன்ன கிரி பாட்டை போட்டுன்னு எழுதாம பட்டை போட்டுன்னு எழுதியிருக்காரு பாருங்க//

ஜோசப் பால்ராஜ் மறுபடியும் இவர் தூங்கிட்டே பார்த்து இருக்கிறார் போல ஹா ஹா

//கிரி ரஜினி ரசிகர் அதுக்கு மேல விளக்கம் கேட்காதிங்க ஐயங்காரே.//

அட! ரமா! யோவ்! என்ன டெர்ரர் ஆக்காதீங்க...சும்மா ஒன்னுக்கு போனா கூட அதுக்கும் ரஜினி பேர இழுத்துடுவீங்க போல..

இதுக்கும் ரஜினிக்கும் என்னய்யா சம்பந்தம்..

ஏம்பா! எங்கெங்கயோ குண்டு வைக்கறாங்க.. ... ..ஹி ஹி ஹி

கிரி சொன்னது…

//கோவி.கண்ணன் said...
//பரிசல்காரன் said...
விடுமுறையில் வந்து இப்படி எங்களையெல்லாம் சிரமப்பட்டு சந்தித்துச் சென்றது எங்களை மிகவும் கௌரவப் படுத்தியது கோவி-ஜி.

நெகிழ்ச்சியாய் உணர்ந்தோம் அன்று!!
//

அலுவலக வேலை நாளில் நீங்கள் அனைவருமே சிரமம் பார்க்கமல் வந்ததற்கு நானும் மகிழ்ச்சியடைகிறேன் பரிசல்.//

போதும் போதும் சும்மா இரண்டு பேரும் வாசிச்சுட்டு இருக்கீங்க .. :-))))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்