பின்பற்றுபவர்கள்

28 பிப்ரவரி, 2009

இறையாண்மை நாட்டாமை வெங்காயம் !

சீமான் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதால் இந்தியாவின் இறையாண்மை பாதிக்கப்பட்டுவிட்டதாம் நாட்டாமைகள் பஞ்சாயத்து செய்து சீமானை குண்டர் சட்டத்தில் அடைத்திருக்கிறார்கள்.

அடேங்கப்பா...ஒரு மாநிலத்திற்கான ஒக்கனேக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிராக கருநாடக அரசியல் ரவுடிகள் ரகளை செய்தபோதும், காவேரி ஆணையத்திற்கு எதிராக தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட மறுத்துவருவதற்கும், முல்லை பெரியார் அணை விவகாரத்தில் மலையாளிகள் பொய்யுரைகளை பரப்பிவருவதற்கும், 'தேசிய' இந்தியாவில் மும்பையில் சிவசேனை ரவுடி கும்பல் பிறமாநிலத்தினரின் உடமைகளைப் பறித்து துறத்தியதற்கும், இந்த ஆமைகள் இதுவரை எந்த கண்டனத்தையும் தெரிவித்ததே இல்லை. அதுமட்டுமா ?


கார்கில் போரில் 1000க் கணக்கான இராணுவ வீரர்களை இழந்ததையெல்லாம் மறந்து அவர்களின் சமாதி ஈரம்காயும் முன் அதற்கு காரணமாக முஷாரப்புக்கு சிவப்பு கம்பளவரவேற்பு கொடுத்து பள்ளிச் சிறார்களையும் அழைத்து நிகழ்ச்சி நடத்தி முஷாரைப்பை குஷி படுத்திய போதும் இந்த ஆமைகள் கூட்டுக்குள் ஒடுங்கிதான் இருந்தன. அப்போதெல்லாம் ஆவி மன்னிக்காது என்ற செண்டிமண்ட் வசனங்களையெல்லாம் பேசியது இல்லை. இறந்து போன வீரர்கள் அனைவருமே சாதாரண குடிமக்கள் தானே அவர்களுக்கெல்லாம் ஆவியாவது மயிராவது என்று ஒடுங்கியே இருந்தன இந்த ஆமைகள்.

இவர்களைப் பார்த்து சீமான் கேட்கிறார். 'அடேய் வெண்ணைகளா, தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவு கொடுப்பது நீங்கள் போட்ட சட்டப்படி தப்புதான், ஆனால் அதே இயக்கத்தைப் பற்றி தூற்றலாம் என்று அந்த சட்டம் எங்காவது சொல்லி இருக்கிறதா ? உனக்கு தூற்றுவதற்கு அனுமதி இருக்கும் போது, ஆதரவு கொடுப்பதற்கு மட்டும் நான் ஏன் உங்கள் அனுமதியை எதிர்பார்க்க வேண்டும், முதலில் சட்டத்தை மதித்து விடுதலை புலிகள் பற்றி நீங்கள் தூற்றுவதற்காக பேசுவதை நிறுத்துங்கள்' என்கிறார்

சீமான் சொல்வது ஞாயம் தானே, தடைசெய்யப்பட்ட இயக்கம் பற்றி தாறுமாறாக அவதூறு செய்ய மட்டும் இவர்களுக்கு சட்டம் அனுமதி கொடுக்கிறதா ?


(இலங்கை, இந்திய இறையாண்மைகள் இப்படியெல்லாம் காக்கப்படுகிறது)


தமிழர் நலனுக்கு எதிராக அரசியல் செய்யும் இவர்களை தமிழர் வரலாறு மன்னிக்காது, ஈழத்தமிழர் விடுதலைக்கு யார் யாரெல்லாம் தடையாக இருந்தார்கள் என்று விடுதலையாகும் ஈழத்தில் எழுதப்படும் வரலாற்றில், இவர்கள் பெயர் உலக வரலாற்றில் நீரோ மன்னனுக்கும், இடியமீனுக்கும், ஹிட்லருக்கும் கொடுத்திருக்கும் இடங்களையே இவர்களுக்கு ஈழத்தமிழர்கள் கொடுப்பார்கள்.

அனுமான் தன்வாலில் தீவைத்துக் கொண்டாலும் அது இலங்கையை எப்படி அழித்ததோ... முத்துகுமார் வைத்துக் கொண்ட தீ ? இதற்கு மேலும் சொல்ல வேண்டுமா ? நடந்து கொண்டுதானே இருக்கிறது !

10 கருத்துகள்:

Unknown சொன்னது…

//முத்துகுமார் வைத்துக் கொண்ட தீ ?//

அந்த தீ என்ன செய்தது.. அந்த தீயை அரசியல்வாதிகள் ஊதி ஊதி விட்டதால் அடுத்து 8 பேரை அழித்துள்ளது.. அது தாண்டி?????
முத்துக்குமார் தியாகி என, உரெல்லாம் போஸ்டர், அவரின் இறுதி ஊர்வலத்தில் அனைத்து அரசியல் தலைகள்.. பல ஆயிரம் பேருடன் இறுதி ஊர்வலம்.. பெரிய அஞ்சலி கூட்டம்.... மற்றவர்களுக்கு எப்படி நடந்து என்று சொல்லவும் வேண்டுமோ??? காரணம். முத்துக்குமார், இவர்களுக்கு பிடிக்காத சில கட்சிகள் பற்றி கடிதம் எழுதிவைத்தார்.. இவர்கள் அரசியல் ரீதியாக கொண்டாடினர்

Unknown சொன்னது…

நம் அரசியல்வாதிகள் மற்றவரை சீண்ட கூட இல்லையே..
இரண்டாவது தியாகிக்கு.. சென்று உடலை வாங்கி , மேடை போட்டு தியாகி பட்டம்
மூண்றாவதுக்கு - சென்று இறுதி மரியாதை
4,5,6,7,8 - ஒரு அறிக்கை மட்டும்..
இதை ஆரம்பத்திலேயே இந்த அரசியல் நாய்கள் செய்திருந்தால்.. உசுப்பப்பட்டு 8 உயிர்கள் போயிருக்காதுய்யா.. அரசியல்வியாதிகள் , தங்கள் சுகத்துக்காக ஓவர் ரியாக்ட் செய்து விட்டார்களே.. அநியாயமாக 9 உயிர் போச்சு

நட்புடன் ஜமால் சொன்னது…

கொடுமையா இருக்கு ...

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

வேதனையான குமுறலைக் கொட்டியிருக்கிறீர்கள். எனக்கும் அந்தக் கோபம் கனன்று கொண்டுதான் இருக்கிறது. சீமான் பெரிதாக நம்பியவர்களே இன்று அவரைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி கைது செய்திருக்கிறார்கள். இதே நல்ல மனிதர்கள் தான் வைகோ சிறையில் இருந்த போது வெளியே விடச்சொல்லி நடையாய் நடந்தார்களாம். (வெளி மப்புக்கு). வைகோ எதுக்கு உள்ள போனாருன்னு கேக்கிறேன்????? பாகிஸ்தானுக்கு சப்போர்ட் பண்ணுனத்துக்கா?
என்னமோ சொல்லுவாங்க. கேப்பையில நெய்யி வடியுதுன்னா கேப்பாருக்கு புத்தி எங்க போச்சுன்னு? அரசியல் வாதிகளைப் பற்றி சீமான் போன்ற தமிழ் உணர்வாளர்களுக்கு ஒன்றும் தெரியவில்லையா? அல்லது வேறு வழி இல்லையா என்று தெரியவில்லை. சீமான், சுப.வீ, பாரதிராஜா, போன்றவர்கள் எல்லாம் இனியாவது சிந்திக்கவேண்டும். சீமானின் ஆழ்மனசு என்ன நினைக்கும் என்பது நமக்குத் தெரிகிறது.

அப்பாவி முரு சொன்னது…

கஷ்டமா இருக்கு அண்ணா...

என்னைக்கு அண்ணாத்துரை அவர்கள்., ”வீடு இருந்தால் தான் கூரை இருக்கும்” என்று இணைந்தாரோ அன்றே நம் வாழ்வில் பலவற்றை இழந்துவிட்டோம்.

அதில் இதுவும் ஒன்று.

அத்திரி சொன்னது…

சொல்வதற்கு ஒன்றும் இல்லை .......கோவியாரே...... ராஜபக் ஷே எழுதி கொடுத்த அறிக்கையைத்தான்பிரணாப் மக்களவையில் வாசித்தாரம் அதில் வன்னி மற்றும் புதுக்குடியிருப்பில் 70 ஆயிரம் மக்கள் தான் இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது... ஆனால் செஞ்சிலுவைச்சங்கம் மற்றும் சிங்கள தமிழ் பத்திரிக்கயாளைகளின் கூற்றுப்ப்டை அங்கு கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் இருக்கிறார்களாம்... அறிக்கையே ராஜபக் ஷே சொல்படி ந்டக்கும் போது இறை ஆமையை என்ன சொல்ல

ராம்.CM சொன்னது…

நாட்டிலே என்னதான் நட‌க்குதோ..?

அது சரி(18185106603874041862) சொன்னது…

கோவி,
இன வெறி பிடித்த இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இது எதுவும் உறைக்கப் போவதில்லை..

ராஜ பக்ஷே ஹிட்லர் என்றால், சோனியாவும், பிரணாப் முகர்ஜியும் முசோலினி போல் ஒத்து ஊதுகிறார்கள்...உண்மையில், இந்தியாவும், பிரணாப் முகர்ஜியும் கொடுத்த தைரியத்தின் பேரிலேயே ராஜ பக்ஷே செயல்படுவதாக தெரிகிறது...

தமிழர்கள் சாவுக்கு ராஜ பக்ஷேயை விட, சோனியாவும், பிரணாப் முகர்ஜியும், இந்திய அரசும் தான் முக்கிய காரணம்.

நாற்பதையும் நமதாக்குவோம் என்ற கனவில் இருப்பவர்கள் நாசமாய் போகட்டும்!

வால்பையன் சொன்னது…

வரும் தேர்தல் பதில் சொல்லும்.

nTamil சொன்னது…

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்