பின்பற்றுபவர்கள்

20 பிப்ரவரி, 2009

சிவனறிவானா ?

புராண இதிகாச கதைகளில் எனக்கு பெரிய ஈடுபாடோ, நம்பிக்கையோ கிடையாது, எனவே அவற்றைப் பற்றி அறிந்தாலும் அதனைப் பற்றி அவ்வப்போது 'ஸந்தேகம்' கிளப்பிவருகிறேன். இதன் மூலம் இறை நம்பிக்கையை மறுபரிசீலனை செய்யச் சொல்லும் நோக்கம் எதுவும் கிடையாது. மூடநம்பிக்கையின் ஊற்றாக அவை எவ்வாறு செயல்படுகின்றன என்ற விதத்தில் மட்டுமே எழுதுவதுண்டு. இறை நம்பிக்கையும், மூட நம்பிக்கையும் ஒன்றே என்று சொல்பவர்களுக்கோ (நாத்திகர்கள்) , மூடநம்பிக்கை என்று எதுவும் கிடையாது, அது இறை நம்பிக்கையின் நீட்சி, அது மூடநம்பிக்கையாக தெரிவது உங்கள் பார்வை குறைபாடு என்ற சப்பைக் கட்டுகள் செய்பவர்களைப் (ஆத்திகர்கள்) பற்றி நான் அலட்டிக் கொள்வது இல்லை.

சைவ சமயத்தை நிலைநாட்ட தோன்றியவையே பெரிய புராணக் கதைகள், அவை நடந்ததற்கான எந்த ஆதாரமும் கிடையாது. தமிழக சைவ சமயம் என்பது சைவவேளாளர்கள் மற்றும் சைவ பார்பனர்களின் நலனை முன்னிருத்தி தோன்றிய ஒன்று. இவர்களின் திருவிளையாட்களுக்கு சிவனுக்கு திருவிளையாடல் கதைகளை எழுதி சைவ இலக்கியங்கள் படைத்துக் கொண்டார்கள். கிபி 6 ஆம் நூற்றாண்டில் இருந்தே சிவன் சைவ திருத்தலங்கள் அனைத்திலுமே பிள்ளைமார் மற்றும் பார்பனர் ஆதிக்கமே இருந்துவந்திருக்கிறது. பிற்காலத்தில் சைவர்கள் துறத்தப்படவே அல்லது செல்வாக்கு இழக்கவே, பிள்ளைமார்கள் வள்ளலார் பெயரில் இணைந்திருக்கிறார்கள். இதனால் வள்ளலாருக்கோ, அவரது கொள்கைகளுக்கோ எந்த பயனும் இல்லை, ஆனால் ஆபத்து உண்டு, பழைய அரசியல்வாதிகள் இன்றைய சாதி சங்கக் கட்டிடத்தின் வரவேற்பரையில் புகைப்படமாக சிரித்துக் கொண்டு இருப்பது போல் வள்ளலார் வெள்ளாளர்களின் வரவேற்பரைக்குள் சிறைபட்டு போகும் ஆபத்து உண்டு. அய்யா வைகுண்டர் 'நாடாராக' அடையாளப்படுத்தியதால் அய்யா வைகுண்டரின் புகழ் பரவாமலேயே போயிற்று. திரைப்படம் எடுத்து அப்படி ஒருவர் இருந்ததை காட்ட வேண்டிய,அதுவும் நாடார் குல பெருமைக்காக காட்ட வேண்டிய கட்டாயத்தில் அவருக்கான திரைப்படம் எடுக்க்கப்பட்டது. வள்ளலாருக்கு அந்த நிலமை வேண்டாம், அந்த காலத்தில் பிள்ளைப் பட்டம் போட்டுக் கொள்வது நடைமுறை என்பதால் வள்ளலாரின் இயற்பெயரில் இராமலிங்கம் பிள்ளை என்று இருந்திருக்கலாம். அவரது வரலாறுகளை படிக்கும் பொழுது சாதியை தாங்கிப் பிடித்தவராக தெரியவில்லை. பக்தியை விட ஏழைகளின் பசிப்பிணி ஆற்றுவதே இறைத்தொண்டு என்ற பெருமகன் அவர்.

*****

சைவ சமயத்தை பலரும் போற்றினார்கள் என்பறு காட்ட மூன்று பெண்கள், உட்பட பல்வேறு சாதியைச் சேர்ந்தவர்களையும், வெள்ளாளர்கள் மற்றும் பார்பனர்களில் பலரையும் நாயன்மார்களாக திருவிளையாடல் புராணக் கதை வழியாக சுட்டிக் காட்ட வேண்டிய தேவை சேக்கிழாருக்கு இருந்ததிருகிறது. அவை திருத்தொண்டர் புராணம் / திருவிளையாடல் புராணம் என்று வழங்கப்படுகிறது. அதில் ஒன்றிரண்டு பாத்திரங்கள் வாழ்ந்திருக்கலாம், சிவன் பிள்ளைக்கறி கேட்டான், நரியை பரியாக்கியது, திருநீல கண்டர் போன்ற கதைகள் நடக்கவே முடியாத கற்பனைக் கதைகள். 'சைவ' சமயத்தில் 'பிள்ளைக் கறி' (நர மாம்சம்) இருக்கமுடியாது. மிதமிஞ்சிய பக்தி என்று விட்டுத் தொலைக்கலாம். அவ்வளவெல்லாம் செய்து சைவத்தை வளர்த்து 63 நாயன்மார்களுடன் ஆகமம் செய்து உருவாக்கப்பட்டவையே சைவ திருத்தலங்கள், எல்லா கோவிலிலுமே 'திரேதா யுகத்தில் ஒரு அசுரன் கடும் தவம் செய்து.....என்று ஆரம்பித்து சிவன் தனது மகிமையால் எப்படி அழித்தார்' என்பதாகவே முடிந்து, அது அந்த இடத்தில் நடந்ததாகவும், அங்கு கோவில் எழுப்ப வேண்டும் என்று அரசனின் கனவில் தோன்றி சொல்லியதாகவே தல புராணங்கள் எழுதப்பட்டு இருக்கும்.

*****

சொல்லவந்ததின் முன்னோட்டம் நீண்டுவிட்டது.திருவிளையாடல் புராணத்தில் ஒரு நாயன்மாராக நந்தனார் கதை உண்டு, நந்தனார் எப்படி தில்லையில் ஐய்க்கியம் ஆனதைப் பற்றிய கதை. அதை மெய்பிக்கும் விதமாக நந்தனாருக்கான சிலைகள் வைக்கப்பட்டு இருந்தது. நந்தனார் குலம் புலையர். தாழ்த்தப்பட்டவர் என்பதால் 'சூத்திரனுக்கு' கோவிலுக்குள் சிலையா ?, குறுகிய மனம் படைத்த தற்கால தில்லை பார்பனர்கள் அதனை பெயர்த்து எங்கோ வீசிவிட்டார்கள். ஒரு தில்லைப் பார்பனர் வீட்டின் படிக்கட்டிற்கு கீழ் புதைக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள். தமிழுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று நினைத்து போராடிய இறை அன்பர்கள், தற்சமயம் நந்தனார் சிலை மீண்டும் கோவிலுக்குள் வைக்கப் போராடி வருகின்றனர். இதை அறிந்து கொண்ட பார்பனர், அந்த போராட்டத்தை முடக்க வேண்டும், வெற்றிபெறச் செய்யக் கூடாது என்பதற்காக, நந்தனார் பற்றிய சிறப்புக் கதைகளை எழுத ஆரம்பித்திருக்கிறார்கள்.

'நந்தன் என்பவன் வாழ்ந்தே இல்லாதா கற்பனை பாத்திரம்... இதற்காக எதற்கு வீனாக போராடுகிறீர்கள், அறிவை வேறெதுக்காவது பயன்படுத்தலாமே' என்றெல்லாம் அற(ம்)வுரை
கூறுகிறார்கள்.

புராணங்கள், இதிகாசங்கள், இராமர் பாலம் போன்றவை கற்பனை என்று சொன்னால் அவன் நாத்திகன், அதையே ஆதாயம் கருதி பார்பனர்களும் சொன்னால் அவை பக்தி வளர்ச்சிக்காக மகான்கள் புனைந்த பக்தி நெறி இலக்கியங்கள்.

யாரு ஆத்திகன் ? யாரு நாத்திகன் ? யாரு கடவுளின் பெயரால் சாதி வளர்ப்பது ?

சிவனறிவான் !

சிவன் சொத்து குல நாசம் என்று சொல்லுவார்கள். நந்தனார் சிலை கூட சிவன் சொத்து தான்.

திருச்சிற்றம்பலம் ! திருச்சிற்றம்பலம் !


*******

பிகு:ஐயா...இங்கே மற்றும் எனது கட்டுரைகளில் 'பார்பனர்கள்' என்று குறிப்பிடுவது 'லேபிளை' சுமந்து கொண்டிருக்கும், அதை பெருமை மற்றும் தான் சாதி அடிப்படையில் உயர்ந்தவன் என நினைக்கும் பார்பனர்களை மட்டுத்தான். இந்திய அரசியல் சட்டம் கூட பார்பனர்களை உயர்ந்தவர்கள் என்று சொல்லி அங்கீகாரம் எதுவும் கொடுக்கவில்லை. முன்னேறிய வகுப்பினர் என்று பிரிவில் தான் வைத்திருக்கிறார்கள்

11 கருத்துகள்:

priyamudanprabu சொன்னது…

நிறைய சொல்லுறீங்க
இனிமேல்தான் நானெல்லாம் தெரிஞ்சுக்கனும்

வாசகன் சொன்னது…

கண்ணன்,
நந்தானார் சிலை சிதம்பரத்தில் திரும்ப வைக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு அணுவளவும் மாற்றுக்கருத்து இல்லை.அதற்கான மாதவிப்பந்தல் பதிவரின் முயற்சிகளையும் பெருமளவு பாராட்டுகிறேன்.

ஆனால் உங்கள் காரியங்களில் உற்ற முரண்தான் குழப்புகிறது.

பெரியபுராணமும்,சேக்கிழார் எழுதியவைகளும் புளுகு மூட்டைகள் என்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு,நந்தனார் என்ற கேரக்டர் மட்டும் எப்படி உண்மையானது?
பெரிய புராணம் முழுதும் புளுகு என்றபோது நந்தனார் மட்டும் எப்படி உண்மையனார்?

தீட்சிதர்கள் நந்தானாரின் இருப்பை நம்பினார்கள்;எனவே அவரது சிலையை வெளியேற்றினார்கள்.

ஆனால் தலித்தியம் பேச ஏதுவான புராண விதயங்களை மட்டும் தேர்ந்தெடுத்து உண்மை;மற்றவை புளுகு என விமர்சிக்கும் உங்கள் போக்கு தீட்சிதர்களின் செயலை விட அசிங்கமாக இருக்கிறதே?????

இதை வெளியிட மாட்டீர் என்று தெரியும்.இருந்தாலும் கேட்காமல் இருக்க முடியவில்லை!

கோவி.கண்ணன் சொன்னது…

//வாசகன் said... ஆனால் உங்கள் காரியங்களில் உற்ற முரண்தான் குழப்புகிறது.

பெரியபுராணமும்,சேக்கிழார் எழுதியவைகளும் புளுகு மூட்டைகள் என்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு,நந்தனார் என்ற கேரக்டர் மட்டும் எப்படி உண்மையானது?
பெரிய புராணம் முழுதும் புளுகு என்றபோது நந்தனார் மட்டும் எப்படி உண்மையனார்?//

நந்தனார் கற்பனை பாத்திரமாக இருந்தாலும்,
நந்தனாரை தலித்துகளின் பிரதி நிதியாக, ஒரு குறியீடாகவே தான் பார்க்கிறேன். நந்தனார் சிலையை தீட்சிதர்கள் சிலைத் தீண்டாமையாக்கிருப்பது கண்டனத்துக்குறியது.

இறுப்பை மறுப்பதும், அடையாளத்தை அழித்து ஒழிப்பதும் கண்டனத்துக்குரியது.

வேறுமாதிரி சொல்ல வேண்டுமென்றால்
பாமரர்களால் நல்லவர் கெட்டவர்களை அறியமுடியாது, அவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டப்பட வேண்டும் என்று சொல்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அவர்களுடைய ஓட்டுரிமை பறிக்கச் சொல்வதாக புரிந்து கொள்கிறீர்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆனால் தலித்தியம் பேச ஏதுவான புராண விதயங்களை மட்டும் தேர்ந்தெடுத்து உண்மை;மற்றவை புளுகு என விமர்சிக்கும் உங்கள் போக்கு தீட்சிதர்களின் செயலை விட அசிங்கமாக இருக்கிறதே?????//

:)

அன்றைய காலகட்டங்களில் அக்ரகாரங்களைத் தாண்டி ஒருவர் கோவிலுக்குள் வரமுடிந்திருக்குமா அதற்கு மற்ற மூவர்ணத்தார் அனுமதித்திருப்பார்களா ? என்பதே சந்தேகம், அதன் பிறகு தான் நந்தனார் இரண்டர கலந்தாரா ? தீயில் இறங்கி பக்தியை நிரூபிக்கச் சொன்னார்களா என்பதைப் பற்றி விவாதிக்க முடியும்.

//இதை வெளியிட மாட்டீர் என்று தெரியும்.இருந்தாலும் கேட்காமல் இருக்க முடியவில்லை!//

நான் மட்டுறுத்துவதில்லை. தனிமனித தாக்குதலின்றி பின்னூட்டமிடவேண்டியவது வாசிப்பவர்களின் முடிவு.

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//அதனைப் பற்றி அவ்வப்போது 'ஸந்தேகம்' கிளப்பிவருகிறேன்//

:)))

//(ஆத்திகர்கள்) பற்றி நான் அலட்டிக் கொள்வது இல்லை//

SK ஐயா, "ஆத்திகம்" பற்றி அலட்டிக்க மாட்டாராமே கோவி அண்ணன்! கொஞ்சம் தட்டி வைங்க இவரை! :))

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//சைவ சமயத்தை நிலைநாட்ட தோன்றியவையே பெரிய புராணக் கதைகள், அவை நடந்ததற்கான எந்த ஆதாரமும் கிடையாது//

இதை மட்டும் மறுக்கிறேன் அண்ணா!
தொல்பொருள் ஆய்வுத் துறை உறுதி செய்த பல நாயன்மார்கள் வாழ்வியல் நிகழ்வுகளை பின்னொரு நாள் தனிப் பதிவாக இடுகிறேன்!

//தமிழக சைவ சமயம் என்பது சைவவேளாளர்கள் மற்றும் சைவ பார்பனர்களின் நலனை முன்னிருத்தி தோன்றிய ஒன்று//

:)
தவறு! சிலர் பின்னாளில் அதிகாரம் எடுத்துக் கொண்டிருக்கலாம்!

அதற்காகத் திருமூலர் விரித்துரைக்கும் சைவ சமயமும், சைவ சித்தாந்தமும் ஒட்டு மொத்தமாக சாதி நலனுக்காகத் தான் தோன்றியது என்பது தவறு!

ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று இன்று பகுத்தறிவாளர் பேசுவதும், ஒப்பரிய எங்கள் திருமூலர் வாக்கே! சைவ சித்தாந்தக் கருத்தே!

இடையில் பல களைகள் தோன்றினாலும்...
அப்பர் சுவாமிகள் போன்றோர் அதை களையெடுத்துக் கொண்டு தான் இருந்தார்கள்! உழவாரம் வெறும் கோயில் நிலத்தில் களை எடுப்பது மட்டுமில்லை! மனித மன வேறுபாடுகளையும் களை எடுப்பதே!

பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு
நக்கு நிற்பார் அவர் தமை நாணியே

வெறுமனே புஷ்பமும் ஜலமும் விட்டுக் கொண்டு, ஈசன் எங்கும் எனாதவர்கள் பூசையைப் பார்த்து, கருவறையில் ஈசன் ஏளனமாகச் சிரிக்கிறான் என்று அப்பர் சுவாமிகள் இடித்துரைத்துத் திருத்திய நிகழ்வுகளும் உண்டு!

அடியேனுக்கும் சைவ சமய "நடைமுறைகளில்" சில வருத்தங்கள் இருக்கு! வைணவத்திலும் இது போல தாழ்வுகள் இருந்தாலும் ஆனால் அவை கொஞ்சம் கொஞ்சமாக முனைப்பு காட்டிக் களையப்பட்டன!

அப்படி ஒரு நல் வாய்ப்பு சைவத்துக்குக் கிடைக்காதது தான் துரதிருஷ்டம் (போகூழ்)! அப்படியே தோன்றும் சில புரட்சியாளர்களும் வைணவம் பக்கமே போவதன் காரணம் தான் எனக்கும் புரியவில்லை! இராமானுசர் முதற்கொண்டு, இந்நாளைய ஐயா வைகுண்டர் வரை...இப்படித் தான் நடக்கிறது! பெரியார் வீட்டிலும், அவர் இராமானுசரைக் காட்டி, அவர் வீட்டு வைணவக் குடும்பத்தையே மடக்கியது நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது! :)

ஆனால் ஒரு சைவக் குடும்பத்தில் இருந்த வந்து, மேன்மை கொள் சைவ நீதிக்கு ஏங்கும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்!
சைவ சமயமும், சைவ சித்தாந்தமும் சாதி நலனுக்காகத் தோன்றியவை அல்ல! அல்ல! அல்ல!

திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//வள்ளலார் வெள்ளாளர்களின் வரவேற்பரைக்குள் சிறைபட்டு போகும் ஆபத்து உண்டு. அய்யா வைகுண்டர் 'நாடாராக' அடையாளப்படுத்தியதால் அய்யா வைகுண்டரின் புகழ் பரவாமலேயே போயிற்று//

ஹா ஹா ஹா!
ரொம்பவும் நிறையப் பேரைப் பார்த்து, உணர்ந்து, ஆதங்கத்துடன் சொல்லி இருக்கீங்க!

//சொல்லவந்ததின் முன்னோட்டம் நீண்டுவிட்டது//

எப்பவுமே நீங்க அப்படித் தானே அண்ணே? ஸோ, நோ பிராப்ளம்ஸ்! :)))

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//ஒரு தில்லைப் பார்பனர் வீட்டின் படிக்கட்டிற்கு கீழ் புதைக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள்//

ஆதாரம் இல்லாமல் இதெல்லாம் வேணாம்-ண்ணே!
நமக்கு இப்போது முக்கியமான பணி அடியவரான, நந்தனாரை மீண்டும் அதே இடத்தில் நிறுவி, வரும் தலைமுறைக்கும் ஒரு ஊக்கமாய் இருக்கச் செய்தல்! அவ்வளவே!

//'நந்தன் என்பவன் வாழ்ந்தே இல்லாதா கற்பனை பாத்திரம்... இதற்காக எதற்கு வீனாக போராடுகிறீர்கள், அறிவை வேறெதுக்காவது பயன்படுத்தலாமே'//

நந்தனின் முதலாளியைத் தான் கோபால கிருஷ்ண பாரதியார் நாடகத்தில் வரும் கற்பனைப் பாத்திரம் என்று மறைந்த காஞ்சிப் பெரியவர்கள் சொல்லியுள்ளார்கள்!

அதற்கும் நந்தன் சிலைக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை! அந்த அனானி வேண்டுமென்றே கிளப்பி விடப் பார்த்தார்! காஞ்சிப் பெரியவர் பேரைச் சொல்லி ஏதாச்சும் சொன்னால், அடங்கி விடுவோம் என்ற அவர் நினைப்பாக இருக்கலாம்! ஆனால் அது நடவாது! :)

//சிவன் சொத்து குல நாசம் என்று சொல்லுவார்கள். நந்தனார் சிலை கூட சிவன் சொத்து தான்//

:)
சிவோஹம்! சிவோஹம்!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

ஏனுங்க சாமி!
புராணத்தை பத்தி பேசுறீங்களா சாமி!
நான் தூரத்துல நின்னு பாத்துட்டு போறேனுங்கோ!
புராணத்துல விவகாரமெல்லாம் இருக்குமுன்னு பேசிக்கிராக சாமியோவ்!

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

நாயன்மார்களில் அனைத்து சமூகத்தினரும் உள்ளனர்.நந்தனார்,வேடன் கண்ணப்பன்,செம்படவர் அதிபத்தி நாயனார்,வண்ணான் வேலை செய்த திருக்குறிப்பு நாயனார், குயவரான திருநீீலகண்டர்..தவிர சேர,சோழ,பாண்டிய,பல்லவ ராஜாக்கள்.63 நாயன்மார்களில் 12 பேர் பார்ப்பனர்கள்

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

'ஸந்தேகம்'
:-)))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்