பின்பற்றுபவர்கள்

5 பிப்ரவரி, 2009

தமிழர்களை உயிரினும் மேலாக நேசிக்கும் காங்கிரஸ் ஆ(ட்)ச்சி !

சோனியா அம்மா அனுப்ப பிரியங்கா அம்மா ( அதுவும் சோனியாவான்னு கேட்காதிங்க) நளினியை சிறையில் சந்தித்து வந்தாங்க. 'ஆகா கொலையாளிகளை மன்னிக்கும் மற்றொரு தெரசாவும் எங்க நாட்டில் தான் வந்து வாழுறாங்க' காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் டீக்கடை தோறும் பேசிக் கொண்டார்கள்.

அதாவது நாங்கள் யாரையும் எதிரியாக நினைப்பதில்லை என்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு. காங்கிரஸ் ஆட்சியின் கரங்கள் இலங்கையுடன் சேர்ந்து கொண்டது. காங்கிரசுக்கு குறிப்பாக சோனியா அம்மாவிற்கு விடுதலைப் புலிகளை அழித்து ஒழிக்கனும். ராசபக்சேவுக்கு தமிழர்களையே அழிக்கனும். இருவருமே தீவிரவாதிகளை அழிப்பதாகக் கூறிக் கொண்டு அப்பாவிகளைத் தான் கொன்று வருதாக அன்றாடம் ஊடகங்களில் கண்ணீர் செய்திகள் வருகிறது.

நாங்க நட்பு நாடுகள் தான், இலங்கையில் போரா ? அது உள் நாட்டு விவகாரமில்லையா ? அதுல எப்படி தலையிடுவது ? இலங்கை வீரர்கள் உற்சாகம் குன்றாமல் இருக்கட்டும், கிரிக்கெட் ஆடுவோம். என்று ஒருபக்கம் இந்திய வீரர்களை அனுப்பி வைத்து ஆசிர்வதிக்கிறார்கள்.

தமிழகத்திற்கு போர் விமான பயிற்சிக்கு வந்த இலங்கை வீரர்களை கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று திருப்பி அழைத்துக் கொண்டார்களாம். "காங்கிரஸ் ஆ(ட்)ச்சிக்குத் தான் தமிழர்கள் மீது என்ன பாசம். அதுவும் பாசத்தோடு 'பாதர் பாதர்' என்று தன்னால் அழைக்கப்படும் கருணாநிதி பதறினால் (பதர் இல்லை) சோனியா அம்மா கேட்கமாட்டாரா என்ன ?" காங்கிரஸ் காரர்கள் இப்படித்தான் பேசிக் கொண்டு இருப்பார்கள்.

போச்.....

தமிழனுக்கு எப்படா ஆப்பு அடிப்போம் என்று நினைக்கும் வெறி'பிடித்த' கன்னடர்கள் பலர் இருக்கும் பெங்களூருக்கு இலங்கை வீரர்களை விமான பயிற்சிக்கு அனுப்பினால் தமிழர்களின் போராட்டம் அங்கே செல்லுபடியாகதே. ஏற்கனவே பகையுணர்வில் இருக்கும் கன்னடர் - தமிழர் உணர்வு வெப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு கங்கிரஸ் ஆ(ட்)ச்சி நன்றாகவே குளிர்காய்கிறது. 'இங்கே பயிற்சி எடுத்துங்க...1000 பேர் தீக்குளிச்சாலும் பாதகமில்லை...தமிழன் ஒருத்தனும் மயித்தைக் கூட பிடிங்கிப் போடமுடியாதபடி வாட்டாள் குரூப் நல்லா பார்த்துக்கும்... என்று ஆசீர்வதித்து இருப்பார்கள் போலும்

வாழ்க காங்கிரஸ், வாழ்க அவர்களது தமிழர் பற்று !

2 கருத்துகள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

-:(((::))):-

ராவணன் சொன்னது…

இத்தாலி சோனியாவிடம் தமிழர்களின் மானத்தை அடகு வைத்த "கோமாளி கருணாநிதி"யின் தமிழ் பற்று மெய்சிலிர்க்க வைக்கின்றது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்