பின்பற்றுபவர்கள்

15 பிப்ரவரி, 2009

வழக்கொழிந்த சொற்கள் !

வழக்கொழிந்த சொற்கள் பற்றி எழுதும் படி வெளிச்சப் பதிவரின் வேண்டிகோளை ஏற்று இந்த இடுகை. தமிழ் பேச்சு வழக்கில் பிறமொழி கலப்பென்பது இயல்பு. தொழில் தொடர்பில் (இதைதான் 'வியாபார நிமித்தம்' என்பார்கள்) பிற இன, மொழி மக்களுடன் உரையாடுபவர்களே பெரும்பாலும் மொழிக் கலப்பை (அறியாமல்) செய்பவர்களாக இருந்து வந்திருக்கின்றனர். இன்றைய தேதியில் தொலைக் காட்சி பெட்டிகளே அதைச் செய்கின்றன.

100க்கும் மேற்பட்ட ஒளிவழிகளில் பல்வேறு மொழியில் தொலைகாட்சி சேவைகள் ஒவ்வொரு வீட்டிக்குள்ளும் இருப்பதால், மொழிகலப்புகளுக்கான மூலம் வீட்டிக்குள்ளேயேயும் கூட தொடங்குகிறது எனலாம். ஒளிவழி என்றால் என்ன ? சிங்கை தமிழ் தொலைகாட்சி மற்றும் வானொலியில் Channel க்கு பயன்படுத்தும் சொல். ஒலிவழி ? ஒளி வழியா ? எதுசரி ? நிறப்பிரிகையின் (Spectrum of Light -உடனே ஊழலை நினைத்துவிடாதீர்கள்) குறியீட்டில் உள்ள அலைவரிசையே ஒளி/ஒலி பரப்புக்கு பயன்படுத்துவதால் ஒளிவழி என்று சொல்வது பொருத்தமானது.

மூன்றாவதாக அரைகுறை மொழிப்பேச்சாளர்களால் கலப்பு மிகுதியாக ஏற்படும், எது அரைகுறை பேச்சு ? தாய்மொழியல்லாத எந்த ஒரு மொழியையும் கற்றுக் கொண்டு பேசத் தொடங்கும் முன் அம்மொழியில் உள்ள அறிந்திராத சொற்களுக்கு மாற்றாக தாய்மொழியில் உள்ள சொற்களைப் பயன்படுத்திப் பேசுவார்கள், அது தவறு அல்ல. ஆனால் அவர்களிடம் உரையாடுபவர்கள் வழியாக அந்த கலப்பு மொழிகளின் மீது ஏற்றப்படும். சவுக்கார் பேட்டை சேட்டுகளின் தமிழ் இத்தகையவையே, அவர்களிடம் பணியில் இருப்பவர்களிடம் அவர்கள் பேச, அவர்கள் கலந்து பேசும் இந்தி மொழியில் அடிக்கடிக்கடி புழங்கும் சொற்கள் தமிழுக்குள் நுழைந்துவிடும். ஜல்தி (விரைவு), அதிகம் (மிகுதி), கம்மி (குறை-குறைவு) போன்ற பண்பு பெயர் சொற்கள் இப்படியாக நுழைந்தவையே.

சும்மா கெடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி. இப்பழமொழிக்கும் மொழிக்கலப்பிற்கும் உள்ள தொடர்பைப் பார்ப்போம். பயன்பாடில்லா, வெறும், அசைவற்று என்கிற ஒரு நிலையில் இருந்த ஒன்றை தொடர்பு படுத்தி சொல்ல பயன்பட்டு வருவது 'சும்மா' இந்தி சொல். சும்மா கிடத்தல் என்பது கவனிப்பாரின்றி கிடத்தல், சும்மா என்பது பண்பு பெயர் என்ற நிலையில், கவனிப்பாரின்றிய, அசைவற்ற என்கிற பண்பைப் குறிக்க பயன்படுத்தப்படும் சொல்லாக சும்மா என்பதைப் பயன்படுத்துகிறார்கள். சும்மா கிடைக்கிறதே என்று நாமும் இதுபோல் பலசொற்களை பயன்படுத்தி மொழியை கெடுக்கிறோம். சும்மா கிடைக்கிற பிறமொழிச் சொற்கள் யாவும் மற்றொருமொழிக்கு சுமையே. குரங்கு கை பூமாலை என்பதின் மாற்றுவடிவம் தான் சும்மா கெடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி என்கிற பழமொழியும். நல்ல நிலையில் இருந்த ஒன்றை வீனாக்குவது.

மொழிக்கலப்பு என்பது இயல்பு தான். ஆனால் அதை அப்படியே விட்டுவிட்டால் மொழி உருக்குலைந்துவிடும். அங்கிலம் எல்லா மொழிகளையும் ஏற்கவில்லையா ? ஆங்கிலம் எல்லா மொழிச் சொற்களையும் ஏற்கும், அதிலிருக்கும் 2 லடசத்திற்கும் மிகுதியான சொற்கள் அனைத்தையுமே சொல்விளக்க அகரமுதலி (அகராதி) இல்லாமல் ஒருவருமே அறியமுடியாது. அதுமட்டுமின்றி ஆங்கிலம் பயற்சி இன்றி கற்றுக் கொள்ளும் அளவுக்கு எளிதான மொழியல்ல, இருப்பினும் வட்டார வழக்கு போல் ஆங்கிலம் சில நாடுகளில் பேசப்பட்டு வருகிறது சிங்கை, மலேசிய ஆங்கிலம் இத்தகையதுதான். எந்த ஒரு இலக்கணத்திலும் அடங்காமல் ஒரு கலவை மொழி போலத்தான் ஆங்கிலம் இப்பகுதியில் பேசப்படுகிறது. ஆங்கிலத்தில் அமைந்திருக்கும் நீதிமன்ற தீர்பாணை மிக எளிதாக ஆங்கிலம் அறிந்த அணைவருக்குமே புரிந்துவிடுமா ? அது தவறாக புரிந்து கொள்ளப் பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே தனியாக விளக்கமெல்லாம் எழுதப்படும். மொழிக்கலப்பை ஏற்பதால் மொழி வளரும் என்பது மொழி வரலாறுகள் அறியாதவர்களின் பிதற்றல்கள்.

கிரேக்கம், லத்தீன், இப்ரோ போன்ற ஐரோப்பிய மொழிகள் ஒன்றுக் கொண்டு மிகுதியாக கலந்ததால் உருவான புதிய மொழியே ஆங்கிலம் ஏறக்குறைய அதே காலத்தில் தான் உருதும் சமஸ்கிரதமும் கலந்து 'இந்தி' உருவானது, ஆங்கிலேயர்களைப் போல் 'இந்தி'யர்களும் வெளிநாடுகளைக் கைப்பற்றி இருந்தால் அங்கிலத்திற்கு பதில் இந்தி பரவி இருக்கும். ஆங்கிலம் பரவியதற்கு அதன் மொழி வளம் மட்டுமே காரணம் என்பதை விட அரசியல் காரணமே மிகுதி.

மொழிக்கலப்பை தவிர்க்க என்ன செய்யலாம் ? மிக எளிதானவையே, இருவரும் தமிழர்கள், இருவருக்குமே தமிழ் நன்றாக தெரியும் என்று இருவருமே அறிந்தால் தமிழிலேயே பேசலாமே,

அண்மையில் சென்னையில் நண்பர் வீட்டுக்குச் சென்றேன். நண்பர் வீட்டுக்கு மேல் மாடியில் இருந்த தமிழர் நண்பரிடம், எதோ ஒன்று குறித்து பேசும் போது

'யூ நோ வாட் ஐ டிட்...' என தனது ஆங்கிலப் புலமையைக் காட்டிக் கொண்டிருந்தார். எரிச்சலாக இருந்தது. பத்து உரையாடல் வரிகளில் ஆறில் ஆங்கிலமே பேசினார்

வெள்ளைக்காரன் நாட்டை விட்டுவிட்டுச் சென்றாலும் அவனது மொழியையே தங்களுக்குள் பேசி அவனது அடிமையாக தொடர்ந்து இருப்பதையே பலரும் பெருமையாக கருதுகிறார்கள்.

வழக்கொழிந்தது எது ? சென்னைப் போன்ற பெருநகரங்களில் இருக்கும் தமிழர்கள் தங்களுக்குள் தமிழில் தொடர்பு கொள்வது வழக்கொழிந்தது வருகிறது. பணி தொடர்பில் இல்லாது மற்ற நேரங்களிலும் ஆங்கிலத்தில் உரையாற்றும் தமிழர்களிடம் வெட்கப்படாமல் தமிழிலேயே பேசச் சொல்லுங்கள்.

24 கருத்துகள்:

வெண்பூ சொன்னது…

நாந்தான் முதல்ல.. எப்படி, தமிழ்ல சொன்னேனா?

வெண்பூ சொன்னது…

நல்ல கருத்துகள் கோவி.. தமிழை பேசுறதுக்கு நிறைய பேர் தயங்குவது கண்கூடா தெரியுது, முக்கியமா மேல்தட்டு மக்கள்கிட்ட + மேல்தட்டா தங்களை நினைச்சுக்கிற நடுத்தர மக்கள்கிட்டயும்.. உங்கள் கருத்துக்களை முழு மனசோட வழி மொழியுறேன்..

ஆளவந்தான் சொன்னது…

//
இருவருக்குமே தமிழ் நன்றாக தெரியும் என்று இருவருமே அறிந்தால் தமிழிலேயே பேசலாமே
//
ஆங்கிலம் தெரிந்தவர்கள் எல்லாம் புத்திசாலிகள் என்ற மாயை ஒழிந்தாலே போது..

ஆமா இப்போ எத்துனை பேர், தம் பிள்ளைகள் தமிழ் படிக்க வைக்கிறார்கள் தமிழ்நாட்டில்? ”ஆரம்ப”பள்ளிளுக்கு ”இறுதி”விழா எடுத்து ரொம்ப நாளாச்சு..

கண்ணாடி வாங்க, பார்வையை இழக்கிறார்கள், வருத்தபடற தவிர வேற ஒன்னும் சொல்றதுக்கில்ல

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

அழைப்பை ஏற்று அழகிய இடுகையிட்டதற்கு முதலில் நன்றி!

தங்களுக்கு இருக்கும் ஆதங்கங்கள் எனக்கும் உண்டு, ஒரு சில தமிழ் நிகழ்ச்சிகளுக்குப் போகும் போது, அந்த செந்தமிழ் நிகழ்ச்சியை நடத்துபவரோ, அல்லது தொகுத்து வழங்குபவரோ நம்மிடமோ அல்லது மற்ற தமிழர்களிடமோ ஆங்கிலத்தில் உரையாட முற்பட்டால் எனக்கு சீ என்று வருவதை விட கடும் கோபம் தான் வரும், அந்த வேலைக்கு பதிலாக அவர் வெள்ளைக்காரனின் கபேயில் மேசை துடைத்தால் அவனுடன் தினமும் ஆங்கிலத்தில் பேசலாம் என்று நினைப்பதுண்டு.

சவுக்கார் பேட்டைஎல்லாம் தொட்டு சவுக்கால் அடிக்கிறீங்க கோவியாரே!

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

பதிவு நன்றாக இருக்கிறது

நட்புடன் ஜமால் சொன்னது…

\\அவர்களிடம் உரையாடுபவர்கள் வழியாக அந்த கலப்பு மொழிகளின் மீது ஏற்றப்படும். சவுக்கார் பேட்டை சேட்டுகளின் தமிழ் இத்தகையவையே\\

ஓஹ்! இதுதான் மேட்டரா

(ஆங்கில கலப்பு)

தமிழ் சொன்னது…

Channel எனபதற்கு எப்படி தமிழில் சொல்வது அறியாமல் இருந்தேன்.
சிங்கை வந்தப் பின் அறிந்த கொண்ட சொல்.

/ஒளிவழி என்றால் என்ன ? சிங்கை தமிழ் தொலைகாட்சி மற்றும் வானொலியில் Channel க்கு பயன்படுத்தும் சொல். ஒலிவழி ? ஒளி வழியா ? எதுசரி ? நிறப்பிரிகையின் (Spectrum of Light -உடனே ஊழலை நினைத்துவிடாதீர்கள்) குறியீட்டில் உள்ள அலைவரிசையே ஒளி/ஒலி பரப்புக்கு பயன்படுத்துவதால் ஒளிவழி என்று சொல்வது பொருத்தமானது.
/

விளக்கம் அருமை

/ஜல்தி (விரைவு), அதிகம் (மிகுதி), கம்மி (குறை-குறைவு) போன்ற பண்பு பெயர் சொற்கள் இப்படியாக நுழைந்தவையே. /

எனக்கு என்னவோ அதிகம் , கம்மி என்பது அழகான தமிழ் சொல்லாக தான் தோன்றுகிறது.

/மொழிக்கலப்பை தவிர்க்க என்ன செய்யலாம் ? மிக எளிதானவையே, இருவரும் தமிழர்கள், இருவருக்குமே தமிழ் நன்றாக தெரியும் என்று இருவருமே அறிந்தால் தமிழிலேயே பேசலாமே,/

உண்மை

/பணி தொடர்பில் இல்லாது மற்ற நேரங்களிலும் ஆங்கிலத்தில் உரையாற்றும் தமிழர்களிடம் வெட்கப்படாமல் தமிழிலேயே பேசச் சொல்லுங்கள்./

சரியாகச் சொன்னீர்கள்

அழைப்பு யாருக்கும் இல்லையா ?

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

/பணி தொடர்பில் இல்லாது மற்ற நேரங்களிலும் ஆங்கிலத்தில் உரையாற்றும் தமிழர்களிடம் வெட்கப்படாமல் தமிழிலேயே பேசச் சொல்லுங்கள்./


அது :)

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

இணைந்த கைகள் ! (100)

//

வாழ்த்துகள் :)

ஆ.ஞானசேகரன் சொன்னது…

அந்த "சும்மா" வை சும்மா விடுவதாயில்லை
http://aammaappa.blogspot.com/2009/02/blog-post_09.html

மறத் தமிழன் சொன்னது…

தமிழ்மொழியில் இப்படி வேற்று வார்த்தைகள் சேர்ந்தமைக்கு காரணம்...

தமிழர்கள்தான்....

எடுத்துக்காட்டாக இன்று சுத்த தமிழில் பேசினால் யார் மதிக்கின்றார்கள்...

முகவை மைந்தன் சொன்னது…

அருமையான கட்டுரை! தமிழில் (மட்டுமே) பேசுவது குறித்த சில சிந்தனைகளை எளிமையான மேற்கோள்களோடு குறிப்பிட்டிருக்கீங்க! இந்தத் தொடரில் எழுதப் பட வேண்டிய கருத்துக்கள். அட்டகாசம். (தமிழான்னு தெரியலையே!)

//'சும்மா' இந்தி சொல்//
சும்மாடுன்னா என்னங்க?
சுமக்க எதுவும் இல்லாத போது சும்மா(டு) சுமப்பது தாங்க! ஏன் தமிழ்ல இருந்து இந்திக்குப் போயிருக்கக் கூடாது. மெதுவடாங்கற மாதிரி.

ஆனா, இந்தில சும்மாங்கிற சொல் முத்தத்தைக் குறிக்கும்னு கேள்விப் பட்டிருக்கேன்.

anna சொன்னது…

தமிழ் சமையல்
Profiles Planet
Residence Collection
Dotnet Best
Chronicle Time
Cingara Chennai
Free Crackers

பெயரில்லா சொன்னது…

நல்ல பதிவு. இன்றைய சூழலில் இன்றியமையாத கருத்து என்று நான் கருதுவது.
வாழ்த்துகள்

கோவி.கண்ணன் சொன்னது…

//முகவை மைந்தன் 12:51 PM, February 16, 2009
அருமையான கட்டுரை! தமிழில் (மட்டுமே) பேசுவது குறித்த சில சிந்தனைகளை எளிமையான மேற்கோள்களோடு குறிப்பிட்டிருக்கீங்க! இந்தத் தொடரில் எழுதப் பட வேண்டிய கருத்துக்கள். அட்டகாசம். (தமிழான்னு தெரியலையே!)//

பாராட்டுக்கு நன்றி முகவை,

அட்டகாசம் - சாகசம் போல் வடசொல் என்றே நினைக்கிறேன்.
மிக அருமை என்பதற்கு பதிலாக அட்டகாசம் வருகிறது.


//'சும்மா' இந்தி சொல்//
சும்மாடுன்னா என்னங்க?
சுமக்க எதுவும் இல்லாத போது சும்மா(டு) சுமப்பது தாங்க! ஏன் தமிழ்ல இருந்து இந்திக்குப் போயிருக்கக் கூடாது. மெதுவடாங்கற மாதிரி.//

இருக்கலாம், சும்மாடு விளக்கம் அருமை

//ஆனா, இந்தில சும்மாங்கிற சொல் முத்தத்தைக் குறிக்கும்னு கேள்விப் பட்டிருக்கேன்.
//

உம்மா கொடுங்கங்கிறத்துக்கு பதிலாக சும்மா தீஜியே ம்பாங்களா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//மறத் தமிழன் said...
தமிழ்மொழியில் இப்படி வேற்று வார்த்தைகள் சேர்ந்தமைக்கு காரணம்...

தமிழர்கள்தான்....//

மறத்தமிழன், உங்கள் ஆர்வத்திற்கும் மொழி பற்றிற்கும் பாராட்டுகள்.

வார்த்தை - இதுவும் வடசொல் தான். வார்த்தே என்ற வட சொல்லில் இருந்து வார்த்தை என்று சொல் திரிந்து வழங்கிவருகிறது. வார்த்தே என்ற சொல்லின் பொருள் 'செய்தி'

நாம் சொற்கள் அல்லது வரிகள் என்று சொல்லலாம். நல்ல சொற்கள் இருக்கும் பொழுது தேவையற்ற 'வார்த்தைகளை' குறைத்துக் கொள்ளுவோம்.

//எடுத்துக்காட்டாக இன்று சுத்த தமிழில் பேசினால் யார் மதிக்கின்றார்கள்...
//

"சுத்த தமிழ்" என்ற சொல்லே தமிழில் உள்ள கலப்பை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அந்த அளவுக்கு வடசொல் இரண்டர கலந்துள்ளது.

சுத்தம் என்பது வடசொல்லாகும்.

தூய தமிழ் என்று சொல்வதே செந்தமிழாகும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//கங்கை கொண்டான் said...
நல்ல பதிவு. இன்றைய சூழலில் இன்றியமையாத கருத்து என்று நான் கருதுவது.
வாழ்த்துகள்
//

வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

கோவி.கண்ணன் சொன்னது…

//திகழ்மிளிர் said...

எனக்கு என்னவோ அதிகம் , கம்மி என்பது அழகான தமிழ் சொல்லாக தான் தோன்றுகிறது.//

திகழ்மிளிர்,
அப்படி தெரிவதற்கு காரணம் இவற்றில் ஜ,ஹ,ஷ,ஸ போன்ற வட எழுத்துக்கள் இல்லாததே. வட எழுத்துக்கள் உள்ளவையே வடசொல் என்று பலர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்

//அழைப்பு யாருக்கும் இல்லையா ?//

தொடர்பதிவு அழைப்பை யாரும் விரும்புவதில்லை என்பதே வெளிப்படையான காரணம்

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆ.ஞானசேகரன் said...
அந்த "சும்மா" வை சும்மா விடுவதாயில்லை
http://aammaappa.blogspot.com/2009/02/blog-post_09.html
//

உங்க பதிவை இன்னிக்கு பார்த்திடுறேன் !

கோவி.கண்ணன் சொன்னது…

//நட்புடன் ஜமால் said...
\\அவர்களிடம் உரையாடுபவர்கள் வழியாக அந்த கலப்பு மொழிகளின் மீது ஏற்றப்படும். சவுக்கார் பேட்டை சேட்டுகளின் தமிழ் இத்தகையவையே\\

ஓஹ்! இதுதான் மேட்டரா

(ஆங்கில கலப்பு)
//

விடிய விடிய குரான் கேட்டுன்னு எதாவது பழமொழி இருக்கா ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

இராதாகிருஷ்ணன் ஐயா,

அப்துல்லா

நன்றி நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
அழைப்பை ஏற்று அழகிய இடுகையிட்டதற்கு முதலில் நன்றி!

//

அழைப்புக்கும் இங்கே நன்றி கூறிக் கொள்கிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆளவந்தான் said...
ஆங்கிலம் தெரிந்தவர்கள் எல்லாம் புத்திசாலிகள் என்ற மாயை ஒழிந்தாலே போது..//

சரிதான்.

புத்திசாலி என்பதை தமிழில் அறிவாளி என்று சொல்லலாம் !
:)

//ஆமா இப்போ எத்துனை பேர், தம் பிள்ளைகள் தமிழ் படிக்க வைக்கிறார்கள் தமிழ்நாட்டில்? ”ஆரம்ப”பள்ளிளுக்கு ”இறுதி”விழா எடுத்து ரொம்ப நாளாச்சு.. //

மிகச் சரியாக சொல்லி இருக்கிங்க.

'ஆரம்ப' இதற்கு தமிழில் சரியான மாற்றுச் சொல் 'தொடக்கம்' அல்லது 'துவக்கம்'

கண்ணாடி வாங்க, பார்வையை இழக்கிறார்கள், வருத்தபடற தவிர வேற ஒன்னும் சொல்றதுக்கில்ல
//

கோவி.கண்ணன் சொன்னது…

//வெண்பூ said...
நல்ல கருத்துகள் கோவி.. தமிழை பேசுறதுக்கு நிறைய பேர் தயங்குவது கண்கூடா தெரியுது, முக்கியமா மேல்தட்டு மக்கள்கிட்ட + மேல்தட்டா தங்களை நினைச்சுக்கிற நடுத்தர மக்கள்கிட்டயும்.. உங்கள் கருத்துக்களை முழு மனசோட வழி மொழியுறேன்..
//

ஆங்கிலம் மட்டுமே நாகரீக மொழி என்று சிந்தையில் படிந்துவிட்டதால் அப்படி நடந்து கொள்கிறார்கள்.

கருத்துக்கு நன்றி வெண்பூ !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்