பின்பற்றுபவர்கள்

10 பிப்ரவரி, 2009

மதுரை திருக்காட்சி பகுதி 2

மீனாட்சிக் கோவிலில் பாதுகாப்பு கெடுபிடிகள் இருந்தன, தளவாட சோதனை (மெட்டல் டிடெக்டர்) செய்தே உள்ளே அனுப்பினார்கள். எல்லா வயதினருக்கும் பிடித்த விலங்கு என்றால் யானைதான், யானையுடன் படம் எடுத்துவிட்டு பொற்தாமரை குளம் இருக்கும் பகுதிக்கு வந்தேன்.

பச்சை வண்ண நீரில் பொற்தாமரை, பச்சை வண்ண மேனியாள் மீனாட்சி அம்மை நடுஇரவில் நீராடுவதால் அந்த குளம் பச்சையாக காட்சி அளிக்கிறது என்று பச்சைப் பொய்யை யாராவது சொன்னால் நம்பாதிங்க, நீர் பாசிதான், சரியான பராமரிப்பு இல்லாததால் பாசிபடிந்து இருக்கிறது, பொற் தாமரையின் அடிப்பகுதி தெரியும் அளவுக்கு நீர் வற்றி இருந்தது.

(தாமரை இதழில் குருவி ஓய்வெடுப்பது தெரிகிறதா ?, க்ளிக் செய்து பெரிதாக பார்க்கவும்)

பொற்தாமரை தான் தோன்றி (சுயம்பு) என்று சொல்வதையும் நம்புவதற்கு இல்லை. பல கதைகள் அதில் ஒரு (நக்கீரன்) கதையை மெய்பிக்கும் விதமாக குளத்தில் வேலைபாடுகளுடன் பொற் தாமரையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். குளத்திற்குள் வெறும் பூவாக நிற்பதற்காகவே ஒரு தாமரையை தோன்ற வைக்க முடியுமென்றால், இறை சித்தத்தால் நாட்டில் பசி, பினி, வறுமை இல்லாமலேயே செய்ய முடியும். அதையெல்லாம் கண்டு கொள்ளமால் அற்புதம் நிகழ்த்த தாமரையை தோன்ற வைத்தார் இறைவன் என்று சொல்வதெல்லாம் ஆன்மீகத்திற்குமே ஏளனமானவை. (பகுத்தறிவு பகுதியை அப்பறம் வைத்துக் கொள்கிறேன்)

கோயில் புதுப்பிப்பு பணிகள் நடந்தேறிக் கொண்டு இருந்தது, கோபுரங்களில் கூரை வேயப்பட்டு இருந்தன, எப்பொழுது குடமுழுக்கு என்று தெரியவில்லை. அங்கு சில நிழல்படங்களை எடுத்துவிட்டு, மீனாட்சி கோயிலுக்கு வந்தேன். வியாழன் நடுப்பொழுது என்றாலும் கூட்டத்திற்கு குறைவில்லை, வரிசையில் சென்று கொண்டிருந்தார்கள், அந்த வரிசையில் உள்ளவர்ளை குறிவைத்து 'அம்மனுக்கு சாத்திய புடவை' என்று கூறி அம்மன் செண்டிமெண்ட் ஏல வியாபரம் நன்றாக நடந்து கொண்டிருந்தது.




(படங்களின் மீது எலியை அழுத்தி பெரிதாக பார்க்கவும்)

அந்த பகுதியில் மேல்கூரையில் ஓவியங்களை புதுப்பித்துக் கொண்டு இருந்தார்கள், மிகவும் கடினமான பணி, நேர்த்தியாக செய்ய வேண்டும்,


கையை மேலே உயர்த்தி ஒட்டடை அடித்தாலே நமக்கெல்லாம் மறுநாள் கையை தூக்க முடிவதில்லை. வரிசையில் சென்றே மினாட்சி கோயிலுக்குள் சென்றுவந்தேன். பிறமதத்தினர் உள்ளே நுழையக்கூடாது என்ற அறிவிப்பு இருந்தது, நாத்திகர் நுழையக் கூடாது என்றில்லை :) பணம் படைத்தவர்களுக்காக குறுக்கு வழியென சிறப்பு வழியும் இருந்தது. பிறகு அனுமதி சீட்டு பெற்று வியப்பூட்டும் ஆயிரங்கால் மண்டபம் சென்றேன், சில முறை கோயிலுக்குச் சென்றிருந்தாலும் இந்த முறைதான் இந்த பகுதிக்குச் சென்றேன்.


(படங்களின் மீது எலியை அழுத்தி பெரிதாக பார்க்கவும்) உள்ளே நல்ல குளுமை. சொக்கநாதரைப் பார்க்க நேரமில்லை. உள்ளே சென்ற வழி திரும்பும் போது குழப்பியதால் வெளியேறும் போது பெரிய சுற்று சுற்றி வரவேண்டியதாகிவிட்டது. துளசி அம்மா சொல்றாங்க 'ஆகா அம்மன் பிரகாரம் சுத்த வச்சிட்டா பாத்திங்களா' :) மணி 2 ஆகி இருந்தது.

*****

1 மணி வாக்கில் அலுவலகத்தில் சந்திக்கிறேன் என்று சீனா ஐயாவிடம் சொல்லி இருந்தேன். இடையில் ஒருமுறை அழைத்திருந்தார். திரும்பவும் அழைத்து 2:30 ஆகும் என்று சொன்னேன். 'வாங்க வாங்க ஒண்ணும் பிரச்சனை இல்லை' என்றார். அன்று மாலை 4 மணிக்கு அவருடன் தான் மீனாட்சி கோவிலுக்கு செல்வதாக திட்டமிட்டு அவரிடம் சொல்லி இருந்தேன், அழைத்துச் செல்கிறேன் என்றார். நாயக்கர் மஹாலுக்கு அருகிலேயே இருப்பதை அறிந்து அவரையும் அலைச்சலுக்கு ஆளாக்கவேண்டாமேயென்று நானாகவே சென்று வந்தேன். ஐயாவுக்கு வருத்தம் ஏற்பட்டதா என்று தெரியவில்லை. சீனா ஐயா அலுவலகத்தை அடையும் போது மணி 2:30க்கு மேல் ஆகிவிட்டது. அவரது அலுவலக அறையின் குளிரில் சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டு, கிளம்பினோம்.

அலுவலக கீழ்தளத்தை புதுப்பித்து இருந்தார்கள், அதற்கு பல லட்சம் செலவு ஆகியதாம், சுற்றிக் காட்டினார். முதன் முதலில் இந்தியாவில் இவர் பணிபுரியும் வங்கியில் தான் கணினியை அறிமுகப்படுத்தி, அதன் பிறகே பிற கிளைகளையும் கணினி மயம் செய்தார்களாம், அதற்காக ஐயா பிற மாநிலங்களுக்கும் சென்று செய்து கொடுத்து வந்திருக்கிறார். அலுவலக மகிழுந்து ஓட்டுனரை அழைத்து மகிழுந்தில் அடுக்குமாடி குடியிருப்பில் அமைந்த அவரது இல்லத்திறகு அழைத்துச் சென்றார்.


பதிவர் செல்வி ஷங்கரின் பதிவுகளைப் பலர் படித்திருப்பீர்கள், அவர் யார் என்று பதிவர்கள் பலருக்கும் தெரியாது. ஒரு சில பெண் பதிவர்களுக்குத் தெரியும், அவர்கள் குறிப்பிட்டு இருந்தனர் அதை வைத்து எனக்கு தெரியும், அதாவது பதிவர் திருமதி செல்வி ஷங்கர் வலைச்சரம் பேராசிரியர் சீனா ஐயாவின் இல்லத்தரசி என்பது பலருக்கும் தெரியாது. சீனா ஐயாவும் செல்விஷங்கர் அம்மாவும் தமிழ்மணம் மற்றும் பிற திரட்டிகள் வழியாகவும் தொடர்ந்து எழுதிவருகின்றனர்.

இல்லத்திற்கு சென்றதும் ஐயாவும் அம்மாவும் சேர்ந்து சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

உணவை மேசையில் ஆயத்தமாக வைத்திருந்தார்கள். பெசண்ட் நகரை நினைவு படுத்திய அறுசுவை உணவு. தீரத்தீர அம்மாவின் கையால் இங்கேயும் கிடைத்தது. உணவிற்கு பிறகு பச்சரிசி பாயாசம், மிதமான இனிப்பில் சுவையாக இருந்தது செய்முறை கேட்டுக் கொண்டேன்.

இங்கே அம்மாவைப் பற்றி சொல்லியாகவேண்டும்.

அம்மா எப்போதுமே தேங்காய் கீற்று அளவிற்கு திருநீற்றுடன் இருக்கிறார். அம்மா இருக்கும் நிழல் படங்கள் அனைத்திலும் அவ்வாறே இருக்கிறார். அம்மா எந்த ஒரு இமேஜைப் பற்றியும் கவலைப்படாது தொலைவில் இருந்தே தெரியும் அளவுக்கு திருநீற்று நெற்றியுடனே இருகிறார். ஐயாவும் அப்படியே, இருவரையும் திருநீறின்றி பார்பது அரிதென்றே நினைக்கிறேன். அம்மா மேல்நிலை ஆசிரியராக சென்னையில் சவுக்கார் பேட்டையில் ஒரு சேட்டு பள்ளியில் பணியாற்றியவராம், தமிழ் ஆர்வம் காரணமாக இந்தியைக் கற்றுக் கொள்ளாமல் சேட்டு மாணவிகளுக்கு தமிழை சொல்லிக் கொடுத்து கற்றுக் கொள்ள வைத்திருக்கிறார். அவர்களின் இல்லத்தினர் அனைவருமே பாரதிமீது பெரும் பற்றுக் கொண்டவர்கள். அம்மா தமிழறிவும், இலக்கிய அறிவும் மிக்கவர். அம்மா தட்டச்சும் பதிவுகளை ஐயாதான் பதிவேற்றுகிறார். ஐயாவிடம் பழகும் போது ஒரு 10 வயது குழந்தையுடன் பழகும் மனநிலை கிடைக்கும்.


வீட்டில் இருக்கும் ஆல்பங்களை ஐயாவும் அம்மாவும் காட்டி விளக்கினார்கள். பல செய்தித்தாள்களில் வங்கி சேவையில் ஐயாவின் பங்கு குறித்த புகைப்பட துண்டுகள் மற்றும், பொதுமக்களுடனான விழாக்களில் மேடையில் அமர்ந்த, உரையாற்றிய புகைப்படங்கள் இருந்தன. இவர்களின் இளைய மகள் தமிழார்வம் மிக்கவர், போட்டிகளில் ஆயத்தமின்றி கலந்து கொண்டு, கமலஹாசன் போன்ற பிரபலங்கள் கையால் பரிசுகள் பல பெற்றவர், மேலும் திருமணத்திற்கு முன்பு வரை பொதிகை தொலைகாட்சியில் நிகழ்சிகள் நடத்தியவர் என்பதையெல்லாம் தெரிந்து கொண்டேன்


அதன் பிறகு அம்மாவும் ஐயாவும் சேர்ந்து நிற்கச் சொல்லி ஒரு புகைப்படத்தை எடுத்தேன், முதன்முறையாக பதிவர்களுக்கும் செல்வி ஷங்கர் அம்மாவின் நிழல்படத்தை காண்பிப்பது எனக்கும் பெருமையாக இருக்கிறது. சீனா ஐயாவின் இயற்பெயர் சிதம்பரம், கோயிலினுள் சொக்கனாதரைப் பார்க்காவிடிலும் சிதம்பரம் ஐயா, செல்வி அம்மா இருவரும் சேர்ந்து நின்று எனக்கு ஆசி வழங்கிய போது... நல்லில்லறம் நடத்திக் கொண்டு இருக்கும் சொக்கனாதர் - மீனாட்சி தெய்வீக தம்பதிகளாகத்தான் தெரிந்தார்கள்.


'நீங்கள் இருவரும் தம்பதிகள் என்று சொல்லாமல் மர்மமாக எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்...ஏன்' - குசும்பாக கேட்டேன்

'மர்மம் எல்லாம் ஒண்ணும் இல்லை கோவி, யாரும் கேட்கல... தம்பதிகள் எழுதுறோம் என்று விளம்பர படுத்த ஒண்ணும் இல்லையே...இருவரும் எழுதுகிறோம்' என்றார் அம்மா

அதன் பிறகு ஐயாவை அலுவலகம் செல்லச் சொல்லிவிட்டு, நான் விடுதியில் மாலை வரை ஓய்வெடுக்கப் போவதாக விடைபெற்றேன்.

தருமி ஐயா வந்தாரா இல்லையா ? இரவு 8:30 மணிக்கு வைகையில் வந்த பதிவர் நண்பர் யார் ?

தொடரும் ....

22 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

ஆஹா...... சீனா & செல்வி அவர்களின் புதுவீட்டுக்குப் போன முதல் பதிவர் நீங்கதான்!!!!!

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
ஆஹா...... சீனா & செல்வி அவர்களின் புதுவீட்டுக்குப் போன முதல் பதிவர் நீங்கதான்!!!!!
//

துளசி அம்மா,
அடுத்த பதிவர் நீங்க தான், நீங்க மதுரைக்குப் போவதை தமுக்கம் மைதானத்தில் நின்னு தமுக்கடிச்சி சொல்லிட்டு வந்திருக்கிறேன்.

முகவை மைந்தன் சொன்னது…

//நல்லில்லறம் நடத்திக் கொண்டு இருக்கும் சொக்கனாதர் - மீனாட்சி தெய்வீக தம்பதிகளாகத்தான் தெரிந்தார்கள்.//

மகிழ்ச்சி.

பொறாமையாத்தான் இருக்கு :-))

முகவை மைந்தன் சொன்னது…

உங்களைப் பாத்துன்னு சொல்ல வந்தேன்.

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

//தாமரை இதழில் குருவி ஓய்வெடுப்பது தெரிகிறதா ?, க்ளிக் செய்து பெரிதாக பார்க்கவும்//


தீர்த்த யாத்திரைக்கு வந்திருக்கும்....

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

திரு கோவி.கண்ணன்..

உங்கள் பணி பாராட்டுக்குரியது.

பதிவர்களை சென்று சந்திப்பதை மட்டும் செய்யாமல் அவர்களின் பதிவையும் பிரபலப்படுத்துகிறீர்கள்.

வாழ்க உங்கள் கொற்றம், வாழ்க உங்கள் செம்பணி :)

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

சுதந்திர சிட்டுக் குருவியாய் வட்டமிட்டு வந்திருக்கும் கோவியார் வாழ்க்க :P

வால்பையன் சொன்னது…

//தருமி ஐயா வந்தாரா இல்லையா ? இரவு 8:30 மணிக்கு வைகையில் வந்த பதிவர் நண்பர் யார் ?//

எங்க வச்சாரு பாருங்க டுவிஸ்ட்ட!

வால்பையன் சொன்னது…

சீனா ஐயா வீட்டுக்கு போகும் வாய்ப்பு எனக்கு முன்னரே கிடைத்தது,
அவரது பேத்தியின் பிறந்தநாளன்று நான் தீடிரென போன் செய்தேன்.
அவரும் வீட்டுக்கு வரத்தான் சொன்னார்.
தீடீர் விருந்தாளியாக சென்றால் என்னை கவனிப்பதா? மற்ற உறவினர்களை கவனிப்பாத என குழப்பம் ஏற்ப்படும் அதனால் இன்னொரு நாள் வருகிறேன் என்று சொல்லிவிட்டேன்.
கோவிகண்ணன் கேப்பில் கெடா வெட்டிவிட்டார்

வடுவூர் குமார் சொன்னது…

தம்பதியர் போட்டாவில் பிள்ளையார் பிரகாசிக்கிறாரா அல்லது உங்களுக்கு அருள் பாவிக்கிறாரா என்று தெரியவில்லை. :-)

மதுரை போனால் பார்க்க ஒருவர் இருக்கிறார்.

நீங்களும் ஏதாவது திரட்டி ஆரம்பிக்க போகிறீர்களா? நிறைய பேரை சந்திக்க ஆரம்பித்துவிட்டிர்கள். :-))

கோவி.கண்ணன் சொன்னது…

கோவி.கண்ணன் said...
//முகவை மைந்தன் said...


மகிழ்ச்சி.

பொறாமையாத்தான் இருக்கு :-))
//

நல்லா பொறாமை படுங்க !

கோவி.கண்ணன் சொன்னது…

//VIKNESHWARAN said...
//தாமரை இதழில் குருவி ஓய்வெடுப்பது தெரிகிறதா ?, க்ளிக் செய்து பெரிதாக பார்க்கவும்//


தீர்த்த யாத்திரைக்கு வந்திருக்கும்....
//

தாகசாந்திக்கு வந்து ஓய்வெடுத்தது போலும்

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் said...
திரு கோவி.கண்ணன்..

உங்கள் பணி பாராட்டுக்குரியது.
//

ஸ்வாமி பாராட்டுக்கு நன்றி !


//பதிவர்களை சென்று சந்திப்பதை மட்டும் செய்யாமல் அவர்களின் பதிவையும் பிரபலப்படுத்துகிறீர்கள்.//

எல்லோருடைய பதிவும் பலரால் அறியப்பட்டவைதாம். அவர்களின் தனிப்பட்ட குணநலன்களை பகிர்ந்து கொள்கிறேன்

//வாழ்க உங்கள் கொற்றம், வாழ்க உங்கள் செம்பணி :)
//

கொற்றம் கொடைக்கு நான் மன்னன் அல்ல, சுற்றம் மட்டுமே உண்டு !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...
//தருமி ஐயா வந்தாரா இல்லையா ? இரவு 8:30 மணிக்கு வைகையில் வந்த பதிவர் நண்பர் யார் ?//

எங்க வச்சாரு பாருங்க டுவிஸ்ட்ட!
//

பின்னே அடுத்த பகுதியிலும் சரக்கு இருக்கு என்று காட்டினால் தானே வியாபாரம் நடக்கும் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...
சீனா ஐயா வீட்டுக்கு போகும் வாய்ப்பு எனக்கு முன்னரே கிடைத்தது,
அவரது பேத்தியின் பிறந்தநாளன்று நான் தீடிரென போன் செய்தேன்.
அவரும் வீட்டுக்கு வரத்தான் சொன்னார்.
தீடீர் விருந்தாளியாக சென்றால் என்னை கவனிப்பதா? மற்ற உறவினர்களை கவனிப்பாத என குழப்பம் ஏற்ப்படும் அதனால் இன்னொரு நாள் வருகிறேன் என்று சொல்லிவிட்டேன்.//

இதெல்லாம் ஓவரு ! உறவினர்கள் தான் அப்படியெல்லாம் நினைப்பாங்க, உங்களை கவனிப்பது முக்கியமா ? சென்று பார்த்து ஒரு காஃபி போதாதா.

//கோவிகண்ணன் கேப்பில் கெடா வெட்டிவிட்டார்
//

அதுசரி

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
தம்பதியர் போட்டாவில் பிள்ளையார் பிரகாசிக்கிறாரா அல்லது உங்களுக்கு அருள் பாவிக்கிறாரா என்று தெரியவில்லை. :-)
//

குமார் அண்ணன்,
அவர்கள் வீட்டில் எங்கும் பிள்ளையார் மயம். அதுல ஒண்ணுதான் நீங்க பார்த்தது.

//மதுரை போனால் பார்க்க ஒருவர் இருக்கிறார்.//

இரண்டு பேருன்னு சொல்லுங்க.

//நீங்களும் ஏதாவது திரட்டி ஆரம்பிக்க போகிறீர்களா? நிறைய பேரை சந்திக்க ஆரம்பித்துவிட்டிர்கள். :-))
//

திரட்டி ஆரம்பித்தவர்கள் பலரை சந்தித்து வந்தவர்களா ?

சி தயாளன் சொன்னது…

//பிறமதத்தினர் உள்ளே நுழையக்கூடாது என்ற அறிவிப்பு இருந்தது, //

எப்படி இதை அமுல்படுத்துகிறார்கள்..? எனக்கு தெரிந்து என் நாட்டு அமைச்சர்கள், தலைவர்கள் சிலர் சென்றுள்ளனர்..

நான் போனபோது மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பதிலாக சுந்தரேஸ்வரர் கோயிலை சுற்றி வந்து விட்டு..மூலக்கிரகத்தில் அம்மனைக் காணவில்லையே என்ற என் கேள்வியை அடுத்து மறுபடியும் தேடி, மீனாட்சி அம்மன் மூலஸ்தானம் சென்றோம்...:-))

குமரன் (Kumaran) சொன்னது…

எனக்கு நினைவு தெரிந்து தான் பொற்றாமரையை செய்து வைத்தார்கள். அங்கே இருக்கும் பொற்றாமரை தான் தோன்றி என்று உங்களுக்கு யாரோ தவறாகச் சொல்லியிருக்கிறார்கள்.

செல்வி அம்மா சீனா ஐயாவின் துணைவியார் என்று தெரிந்திருந்தது. ஐயாவின் படத்தை முன்பு பார்த்திருக்கிறேன். இன்று அம்மாவையும் பார்த்தேன். நன்றி கோவி.கண்ணன்.

பெயரில்லா சொன்னது…

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

தமிழ் சொன்னது…

பல பதிவாளர்களைப் பற்றி
அறிந்துக் கொள்ள முடிகிறது
தங்களின் இடுகையின் வாயிலாக

வாழ்த்துகள்

வெண்பூ சொன்னது…

சூறாவளி சுற்றுப்பயணத்துக்கு நடுவுலயும் சுடச்சுட பதிவு போடும் அண்ணன் கோவி வாழ்க..

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

கோவியாரே,
குடு குடு பயணத்தில் மதுரை முக்கூடல் நகர்வலம் வந்திருக்கிறீர்கள். பதிவர்களை பாங்குடன் அறிமுகம் செய்து சிறப்பு சேர்ப்பது நெகிழ்ச்சியை அளிக்கிறது. மதுரையைப் பற்றிய தகவல்கள், வலைச்சரம் திரு சீனா ஐயா, அவரது துணைவியார் பற்றிய அறிமுகம் அருமையாக செய்திருக்கிறீர்கள். இதெல்லாம் மையினால் கிட்டிய மகிமை அல்ல. பொட்டி தட்டியதால் வந்த புகழ்!
கலைஞரை சந்தித்து உடல் நலம் விசாரிக்காமல் வந்ததில் எங்களுக்கெல்லாம் வருத்தம் தான்!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்