பின்பற்றுபவர்கள்

13 ஏப்ரல், 2008

வாழ்த்துகள், நல்வாழ்த்துகள், புத்தாண்டு வாழ்த்துகள் மற்றும் முட்டாள் நாள் வாழ்த்துகள் !

"பழையன கழிதலும் புதியன புகு(த்)தலும்
வழுவல கால வகையி னானே"

இது நன்னூலில் தமிழ் இலக்கண மாறுதல் விதியாக சொல்லப்பட்டு இருப்பது என்று எடுத்துக் கொண்டாலும், இவை மக்கள், மொழி, பண்பாடு எல்லாவற்றிக்கும் பொருந்தும், காலம் மாறும் போது, மேற்கத்திய தாக்கம் போல் இயல்பாக புதியன புகும், சில வேளைகளில் புகுத்தப்படும், புகுவது இயல்பானது, புகுத்தப்படுவது ? புகுத்தப்பட்டது என்று அறியாமல் கலந்துவிட காலம் எடுக்கும்.

தமிழர்கள் எப்பொழுது தீபாவளி கொண்டாட தொடங்கினார்கள் என்பது சரியாக தெரியவில்லை, கண்டிப்பாக 18 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு கொண்டாடி இருக்க மாட்டார்கள், அது போலவே சித்திரையையும் அறுபது வடமொழி பெயர்களில் புத்தாண்டாக பிறக்கிறது என்ற வழக்கமும் என்று தொடங்கியது என்று தெரியவில்லை. கம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களில் சித்திரை ஆண்டு பிறப்பாக கொண்டாடப் பட்டதற்கான குறிப்பு இல்லை.

கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் களப்பிரர் ஆட்சியை அகற்றியதும் சைவம், வைணவம் என்ற பெயர்களில் தமிழ் கடவுள்கள் வடமொழியார் கடவுளுடன் இணைக்கப்பட்டன, தமிழர் தம் சுடலைமாடன் சிவனென்றும், முருகன் அவன் மகனென்றும், கொற்றவை முதலிய பெண் தெய்வங்கள் அம்பாள் (அம்பேல் அல்ல) ஆகியது, மாயோன் விஷ்னுவானான். பக்தி இயக்கம் என்ற பெயரில் கிறுக்கியது, மொழியாக்கம் செய்யப் பட்டதெல்லாம் புகுத்தப்பட்டன. சித்திரையும் அதை ஒட்டி நாரதர் விஷ்ணுவுடன் கூடி பெற்றுக் கொண்டதாக அருவெறுப்பு கதை சொல்லப்பட்டு, அந்தக்கதைகள் காலத்துக்கும் அழியாவண்ணம் புத்தாண்டுக்குள் புத்தாண்டின் பெயராகவும் (பிரபவ முதல் - குரோதன வரை, இவற்றை தமிழ் பெயர்கள் என்றே நானும் சிறுவயதில் அறுபது ஆண்டுகளின் பெயரையும், நட்சத்திர, ராசி பெயர்களையெல்லாம் மனப்பாடம் செய்திருக்கிறேன், இன்றும் அவற்றை வரியாக சொல்ல முடியும்), திங்கள் (மாத) பெயர்கள் புகுத்தப்பட்டது போல் தமிழுடன், தமிழர்களுடன் ஒன்றிணைந்தன (ஐக்கியமாயின).

இன்றைக்கும் பல கிராமங்களில் பழைய பழக்கத்தின் காரணமாக பொங்கலே சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது, தீபாவளி கொண்டாடாத கிரமங்கள் தமிழகத்தில் உண்டு, ஏனென்றால் தீபாவளிக்கான கதைகளோ, தீபாவளி கொண்டாடத்தக்கது என்றோ அவர்களுக்குத் தெரியாது.

மன மென்மை, மேன்மைகளை செம்மைப்படுத்துவதாக கருத்தப்படும் (நம்பிக்கையாளர்களின் கூற்றுப்படி) 'இறை நம்பிக்கை' உடையவர் தமிழர்கள் என்பதால், பக்தியின் பெயரால் எதைப் புகுத்தினாலும் தமிழன் தலையில் மிளகாய் அரைக்க முடியும், இன்றைய காலகட்டங்களில் எண்கணிதம், வாஸ்து என்ற புதிய மிளகாய் அரைப்பு எந்திரங்களெல்லாம் வீட்டு கழிவரையின் வாயில் எந்த திசை நோக்கி இருக்கவேண்டும், அதை பயன்படுத்தும் போது எந்த திசை நோக்கி உட்கார்ந்து 'இருக்க' வேண்டுமென்றெல்லாம் சொல்லிவிட்டு (எல்லா திசையிலும் ஒவ்வொரு சாமி இருக்கிறது, சனி மூலையில் சனீஸ்வரன் இருக்கிறான், அவர்களை நோக்கி அமரக் கூடாதாம், வடமேற்கு, தென்மேற்கு பரவாயில்லை) முன்பு இருந்தவை சரியில்லை அதற்கு ஈடுசெய்ய (பரிகாரமாம்) இன்னின்ன செய்ய வேண்டுமென்றால்லாம் சொல்லி பணத்தை கறந்து கொண்டிருக்கின்றனர். அட்சய திருதியை 10 ஆண்டுகளுக்கு முன்பு நான் கேள்வி பட்டதேயில்லை. இவையெல்லாம் புகுந்ததா ? புகுத்தப்பட்டதா ?

எந்த ஒரு நம்பிக்கையையும் எவரும் அறியா வண்ணம் சீர்குலைக்கலாம், மாற்றலாம், ஏற்படுத்தலாம் அதெற்கெல்லாம் கேள்வியே எழாது. ஆனால் பலரும் தெரியும் படி, பலரும் அறியும் வண்ணம் மாற்றினால் 'வழிவழி வந்ததை மாற்றாதே, உணர்வு, நம்பிக்கை கெடுகிறது' என்ற ஓலம் பெரிதாகவே எழுகிறது.

***********

கலைஞர் தமிழ்புத்தாண்டின் திங்களை மாற்றியதைத் தொடர்ந்து சின்னத்திரை ஊடகங்கள் தமிழ்புத்தாண்டு என்று சொல்லாமல் சித்திரை நாள் என்ற பெயரில் நிகழ்ச்சிகளை படைத்துவருகின்றன. அரசு அறிவிப்புக்கு மதிப்பு கொடுத்து அவர்களுக்கு ஏற்றவண்ணம் மாற்றிக் கொண்டார்கள், பல ஜூனியர், சீனியர் பத்திரிக்கைகள் ( தமிழில் செய்தி இதழகள்) இன்னும் புத்தாண்டு சிறப்பு மலர் என்று அறிவிப்பை வெளி இடுகின்றன. இவை தமிழ்பற்றுக்கான அளவு கோலாக நான் பார்க்கவில்லை. தமிழக அரசின் அறிவிப்பு மதிக்கப்பட வில்லை என்ற அளவில் மட்டுமே கொள்கிறேன்.

கலைஞர் செய்தது பாராட்டும் வண்ணம் இருந்தாலும், இவற்றிற்கான அறிவிப்பை ஓராண்டுக்கு முன்னரே செய்திருந்தால் பலதரப்பு குழப்பம் வராமல் இருக்கும், அது மட்டுமல்ல, தமிழின தலைவர் என்று (திமுக) சொல்லுவதாலும், தமிழக முதல்வராக இருப்பதாலும் அவரால் இந்த அறிவிப்பை செய்ய முடிந்திருக்கிறது. ஆனால் இது போன்ற அறிவிப்புகளில் மற்ற நாடுகளில் வாழும் தமிழர்களின், ஈழத்தமிழர்களின், புலம் பெயர்ந்து அங்கேயே தங்கிவிட்ட மலேசிய, சிங்கை தமிழர்களின் முன்னிலையாளர்கள் (பிரதிநிதிகளை) கலந்து பேசி முடிவு செய்திருக்க வேண்டும். அவர்களும் தமிழர்கள் தானே, மாற்றத்தில் விருப்பம் உள்ளவர்கள் தான், தமிழ்வளர்ச்சியில் ஆர்வம் காட்டுபவர்கள், தமிழக முதல்வராக இருந்து அறிவிப்பு வெளி இட்டால் அது தமிழகம் சார்ந்தவையாக இருந்தால் எவருக்கும் கேள்வி வராது, தமிழ் தமிழகத்துக்குள் முடங்கிவிடவில்லை.

தமிழர்கள் தமிழ் பேசுகிறார்கள், இவை தமிழ்சார்ந்த அறிவிப்பு என்றாலும் அனைத்துத் தமிழர்களின் ஆதரவைப் பெற்று அறிவித்து இருக்க வேண்டிய ஒன்றை கலைஞர் தன்னிச்சையாக அறிவித்ததால், சிங்கை மலேசிய தமிழர்களுக்கு தமிழ்புத்தாண்டின் தேதி / திங்கள் மாற்றம் குறித்த விழிப்புணர்வு எட்டப்படவில்லை. ஓராண்டுக்கு முன்பே அறிவித்து ஒப்புதால் வேண்டும் என்று நற்காரணங்களைச் சொல்லி இருந்தால் பலதரப்பட்ட தமிழர்களின் புரிந்துணர்வோடு புத்தாண்டு மாற்றம் இயல்பாகவே புகுந்தது ஆகி இருக்கும். அப்படி செய்யாததால், இன்னும் சில ஆண்டுகளுக்கு, 'வரலாற்றில் தன் பெயரை இடம் பெறச் செய்ய கருணாநிதி 'பேர்'ஆசையால் இதைச் செய்துவிட்டார்' என்று நான்கு பேர் உறுப்பினராகக் கொண்டு பாரதியின் பெயரில் சங்கம் வைத்து பாரதியின் பெயரையும், தமிழையும் கெடுத்துக் கொண்டு இருப்பவர்கள் இடறிக் கொண்டு இருக்கிறார்கள். கருணாநிதியின் பெயர்... தமிழர், தமிழ் வரலாற்றில் அவர் முதல் முறை முதல்வரான போது கூட அல்ல, பராசக்தி வசனம் எழுதிய போதே பொறிக்கப்பட்டு விட்டது.

இந்த புத்தாண்டு செய்தியுடன் தொடர்புடையவர்கள் நான்குவகையினர்,

1. மாற்றம் குறித்து மகிழ்பவர்கள், அதை நடை முறைபடுத்தியவர்கள்

2. மாற்றத்தை ஏற்றுக் கொண்டு நடை முறைபடுத்தினாலும், பழைய சித்திரை புத்தாண்டை சித்திரை நன்னாள் என்று மாற்றிக் கொண்டவர்கள்.

3. மாற்றம் பற்றி அறியாதவர்கள் (புலம்பெயர்ந்தவர்கள், வெளிநாட்டு குடிமக்களாக மாறிய தமிழர்கள்) இவர்கள் இன்றும் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள்

4. மாற்றம் தெரிந்தாலும் அதை மறுத்து ஏளனம் செய்வதற்காகவே வேண்டுமென்றே, சித்திரை 1 ஆம் நாளே தமிழ் புத்தாண்டு என்று சொல்லிக் கொண்டாடுபவர்கள்

இவர்களுக்கு முறையே வாழ்த்துகளையும், நல்வாழ்த்துகளையும், புத்தாண்டு வாழ்த்துகளையும், முட்டாள் நாள் வாழ்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

38 கருத்துகள்:

Thamizhan சொன்னது…

விஷ்ணுவும் நாரதரும் பெற்றெடுத்த அறுபது செல்வர்களில் ஒருவரது பிறந்த நாளைக் கொண்டாடும் அருமைத்
தமிழ்ச் செல்வங்களுக்கு அருமையான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளீர்கள்.

இதில் தமிழ்,தமிழினம் என்றாலே முகத்தைச் சுழித்து ஆனால் தமிழாலும்,தமிழர்களாலும் பிழைப்பை நடத்திக் கொண்டு ஏமாற்றுபவர்களுக்கு முதன்மை பாராட்டைத் தெரிவித்துக் கொல்ல (கொள்ள அல்ல) வேண்டும்.

-L-L-D-a-s-u சொன்னது…

வழிமொழிகிறேன் ..

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

எனது பதிவில் நான் தெரிவித்திருந்த ஆதங்கங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

http://jothibharathi.blogspot.com/2008/04/blog-post_05.html

நான் தெரிவித்த அச்சம். தமிழ்ப் புத்தாண்டில் குழப்பம் ஏற்ப்படும் என்று. அதுதான் இன்று நடந்தேறியிருக்கிறது. யார் நம்மைக் குழப்பியது என்று கேட்டிருந்தேன் அதை விரவரமகத் தெரிவித்திருக்கிறீர்கள்.

இன்னொரு செய்தி: கலைஞர் பேரன் தயாரிக்கும் குருவி என்ற திரைப்படம் சித்திரை ஒன்று தமிழ்ப் புத்தாண்டன்று வெளிவருகிறதென்று ஒரு பதிவில் பார்த்தேன். அப்போது நினைத்தேன் ஊருக்கு தான் உபதேசமா என்று?

அன்புடன்,
ஜோதிபாரதி.

TBCD சொன்னது…

மறுக்காச் சொல்லேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

///
இந்த புத்தாண்டு செய்தியுடன் தொடர்புடையவர்கள் நான்குவகையினர்,

1. மாற்றம் குறித்து மகிழ்பவர்கள், அதை நடை முறைபடுத்தியவர்கள்

2. மாற்றத்தை ஏற்றுக் கொண்டு நடை முறைபடுத்தினாலும், பழைய சித்திரை புத்தாண்டை சித்திரை நன்னாள் என்று மாற்றிக் கொண்டவர்கள்.

3. மாற்றம் பற்றி அறியாதவர்கள் (புலம்பெயர்ந்தவர்கள், வெளிநாட்டு குடிமக்களாக மாறிய தமிழர்கள்) இவர்கள் இன்றும் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள்

4. மாற்றம் தெரிந்தாலும் அதை மறுத்து ஏளனம் செய்வதற்காகவே வேண்டுமென்றே, சித்திரை 1 ஆம் நாளே தமிழ் புத்தாண்டு என்று சொல்லிக் கொண்டாடுபவர்கள்

இவர்களுக்கு முறையே வாழ்த்துகளையும், நல்வாழ்த்துகளையும், புத்தாண்டு வாழ்த்துகளையும், முட்டாள் நாள் வாழ்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
///

ஜெகதீசன் சொன்னது…

//
மறுக்காச் சொல்லேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

//
மறுக்காச் சொல்லேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

வவ்வால் சொன்னது…

கோவி,
கலக்கிப்புட்டிங்க!

//4. மாற்றம் தெரிந்தாலும் அதை மறுத்து ஏளனம் செய்வதற்காகவே வேண்டுமென்றே, சித்திரை 1 ஆம் நாளே தமிழ் புத்தாண்டு என்று சொல்லிக் கொண்டாடுபவர்கள்
//

இவர்களுக்கு "சிறப்பு கூமூட்டை தின வாழ்த்துகள்!"

வெற்றி சொன்னது…

கோ. க,

/* தமிழர்கள் எப்பொழுது தீபாவளி கொண்டாட தொடங்கினார்கள் என்பது சரியாக தெரியவில்லை, கண்டிப்பாக 18 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு கொண்டாடி இருக்க மாட்டார்கள்,
...

தீபாவளி கொண்டாடாத கிரமங்கள் தமிழகத்தில் உண்டு, ஏனென்றால் தீபாவளிக்கான கதைகளோ, தீபாவளி கொண்டாடத்தக்கது என்றோ அவர்களுக்குத் தெரியாது. */

தீபாவளி தமிழர்கள் திருநாள்த்தான். ஆனால் தீபாவளி பிறந்த கதையாகச் சொல்லப்படும் திரிக்கப்பட்ட கதைதான் தவறானது என்கிறார் தமிழ்க் கடல், சைவப் பழம் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்கள்.

போன வருசம் திருமுருக கிருபானந்த வாரியாரின் புத்தகத்தைப் படிக்கும் வரை நானும் பலரைப் போல தீபாவளிக்கான தவறான விளக்கத்தையே கொண்டிருந்தேன்.

தீபாவளி குறிச்சு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் எழுதிய கட்டுரையைப் பலரும் வாசிக்கக் கூடிய வகையில் என் தளத்தில் ஒரு பதிவாகப் போட்டிருந்தேன்.

அக் கட்டுரையின் சுட்டி இதோ. நேரம் கிடைக்கும் போது வாசித்துப் பாருங்கள்.

http://vettrikandaswamy.blogspot.com/2006/09/blog-post_16.html

சாலிசம்பர் சொன்னது…

கோவியாரே,
சித்திரைத்திருநாளுக்கும் சரவெடி போடுவீங்களா?:-)).

//மறுக்காச் சொல்லேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்//
டிபிசிடி,ஆரம்பத்தில் உங்க தமிழைப் பார்த்து பலரும் கிலியானாங்க,ஆனா இப்பநீங்க தமிழ்ப் புலியாகிட்டீங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

டிபிசிடி ஐயா,

கீழே ஜாலி ஜம்பர் உங்களைக் குறித்துச் சொல்லி இருக்கிறார், அதை நானும் வழிமொழிகிறேன்,
மகிழ்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

// -L-L-D-a-s-u said...
//

தாஸ் நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
எனது பதிவில் நான் தெரிவித்திருந்த ஆதங்கங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

http://jothibharathi.blogspot.com/2008/04/blog-post_05.html

நான் தெரிவித்த அச்சம். தமிழ்ப் புத்தாண்டில் குழப்பம் ஏற்ப்படும் என்று. அதுதான் இன்று நடந்தேறியிருக்கிறது. யார் நம்மைக் குழப்பியது என்று கேட்டிருந்தேன் அதை விரவரமகத் தெரிவித்திருக்கிறீர்கள்.

இன்னொரு செய்தி: கலைஞர் பேரன் தயாரிக்கும் குருவி என்ற திரைப்படம் சித்திரை ஒன்று தமிழ்ப் புத்தாண்டன்று வெளிவருகிறதென்று ஒரு பதிவில் பார்த்தேன். அப்போது நினைத்தேன் ஊருக்கு தான் உபதேசமா என்று?

அன்புடன்,
ஜோதிபாரதி.
//

ஜோதி,

கலைஞர் பேரனின் குருவி படம் தமிழ்புத்தாண்டுக்கு (ஏப்ரல் 13,14) வெளிவரும் என்று பொங்கலுக்கு (பொங்கல் புத்தாண்டு அறிவிப்புக்கு) முன்பே பூசை போட்டபோதே அறிவித்தார்களாம்.
:)

இப்படிச் சொன்னால் சப்பைக்கட்டா ?
நான் திமுககாரன் இல்லை.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

ஜெகதீசனாரே,

மி(க்)க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//வவ்வால் said...
கோவி,
கலக்கிப்புட்டிங்க!
//

வவ்ஸ்,

எல்லாம் நீங்கள் உடன் இருக்கும் மன உறுதியினால் (தைரியம்) தான்.

கொஞ்சம் சறுக்கினேன் என்றாலும் வந்து சரி செய்து காப்பாற்றிவிடுவீர்கள் என்ற நம்பிக்கைதான்.

மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

வெற்றி said...
கோ. க,
......................................................

அக் கட்டுரையின் சுட்டி இதோ. நேரம் கிடைக்கும் போது வாசித்துப் பாருங்கள்.

http://vettrikandaswamy.blogspot.com/2006/09/blog-post_16.html
//

வெற்றி,

அந்த இடுகையை கண்டிப்பாக படிக்கிறேன்.
தீபாவளி கொண்டாடும் வழக்கம் சமணர்கள் ஏற்படுத்தியது என்ற கருத்தும் உண்டு. ஆமணக்கு எண்ணை விளக்கெறிக்க பயன்படுத்த தொடங்கியதன் காரணமாக தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறதாம், அதற்கு முன்புவரை நெய்விளக்கு தான் பயன்படுத்தினார்களாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜாலிஜம்பர் said...
கோவியாரே,
சித்திரைத்திருநாளுக்கும் சரவெடி போடுவீங்களா?:-)).
//

கலைஞரின் (தம்)மக்கள் அரசியல் குறித்தும் அவ்வப்போது திரிகொளுத்துவது உண்டு
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//Thamizhan said...
விஷ்ணுவும் நாரதரும் பெற்றெடுத்த அறுபது செல்வர்களில்...
//

நாரதர் நாரயணனின் ஒர் அமைப்பாம் (அம்சமாம்), ஒரு செல் உயிரி அமீபா தனக்குத்தானே 60 குழந்தை பெற்றுக் கொண்டால் இந்த பெயர்களை வைத்தால் பெயர் தட்டுபாடு இருக்காது.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

// கோவி.கண்ணன் said...

//ஜோதிபாரதி said...
எனது பதிவில் நான் தெரிவித்திருந்த ஆதங்கங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

http://jothibharathi.blogspot.com/2008/04/blog-post_05.html

நான் தெரிவித்த அச்சம். தமிழ்ப் புத்தாண்டில் குழப்பம் ஏற்ப்படும் என்று. அதுதான் இன்று நடந்தேறியிருக்கிறது. யார் நம்மைக் குழப்பியது என்று கேட்டிருந்தேன் அதை விரவரமகத் தெரிவித்திருக்கிறீர்கள்.

இன்னொரு செய்தி: கலைஞர் பேரன் தயாரிக்கும் குருவி என்ற திரைப்படம் சித்திரை ஒன்று தமிழ்ப் புத்தாண்டன்று வெளிவருகிறதென்று ஒரு பதிவில் பார்த்தேன். அப்போது நினைத்தேன் ஊருக்கு தான் உபதேசமா என்று?

அன்புடன்,
ஜோதிபாரதி.
//

ஜோதி,

கலைஞர் பேரனின் குருவி படம் தமிழ்புத்தாண்டுக்கு (ஏப்ரல் 13,14) வெளிவரும் என்று பொங்கலுக்கு (பொங்கல் புத்தாண்டு அறிவிப்புக்கு) முன்பே பூசை போட்டபோதே அறிவித்தார்களாம்.
:)

இப்படிச் சொன்னால் சப்பைக்கட்டா ?
நான் திமுககாரன் இல்லை.
:) //

சற்றுமுன் நான் தேக்கா சென்றேன். தமிழ்முரசு ஒன்று கொடுங்கள் என்றேன். கொடுத்தார்கள். காசு கொடுப்பதற்கு எடுக்கும் போது, வேண்டாம் இன்றைக்கு இலவசம் என்றார்கள், எதற்கு இலவசம் என்றேன். இன்றைக்குப் புத்தாண்டுங்க தெரியாதா? என்று கேட்டார்(தமிழகத்தைச் சேர்ந்தவர் போல் தெரிந்தது) அப்ப தை ஒன்று! என்றேன்? அவருக்கு இந்த விடயமே தெரியவில்லை. தி.மு.க காரர்களும் புத்தாண்டான இன்று கோவிலுக்குச் செல்கிறேன் என்று சொல்வதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். தாங்கள் தி.மு.க காரர் என்று நான் ஒருபோது யூகம் செய்து கொண்டதில்லை என்பதை உறுதியாகப் பதிவு செய்கிறேன். பொதுவான கருத்துக்களையே பெரும்பாலும் தங்களுடைய பாணியில் சிறப்பாக எடுத்துவைக்கிறீர்கள். சில சர்ச்சைக்குரிய விடயங்களையும் சிறப்பாக கையாளுகிறீர்கள்.

திரு.கோ.சா அவர்களின் தமிழ்முரசுவே புத்தாண்டு கொண்டாடுகிறது இன்று. கலைஞரின் அறிவிப்பு ஒரு சிறிய கட்டத்தில் வெளியாகியுள்ளது.
சிலரிடம் ஒலி வாங்கியைப் பிடிக்கும் போது, கலைஞரின் அறிவிப்பு ஏட்டளவிலேயே இருக்கிறது என்பது புலனாகிறது.

அன்புடன்,
ஜோதிபாரதி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

அப்போ!! எதைத்தான் கொண்டாடுவது,காலையில் இருந்து தொலைபேசியில் வாழ்த்துகிறார்களே!!
அதனால்'"வாழ்த்துகள், நல்வாழ்த்துகள், புத்தாண்டு வாழ்த்துகள் மற்றும் முட்டாள் நாள் வாழ்த்துகள் !"
அதே!!

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said..

கலைஞரின் அறிவிப்பு ஏட்டளவிலேயே இருக்கிறது என்பது புலனாகிறது.

அன்புடன்,
ஜோதிபாரதி.//

ஜோதிபாரதி,

நீங்கள் சொல்வது ஓரளவு சரிதான், இன்னும் சில ஆண்டுகள் போகட்டும், நிலமை மாறலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
அப்போ!! எதைத்தான் கொண்டாடுவது,காலையில் இருந்து தொலைபேசியில் வாழ்த்துகிறார்களே!!
அதனால்'"வாழ்த்துகள், நல்வாழ்த்துகள், புத்தாண்டு வாழ்த்துகள் மற்றும் முட்டாள் நாள் வாழ்த்துகள் !"
அதே!!
//

யோகன் ஐயா,

இப்போ உங்களுக்கு என்ன வாழ்த்துகள் சொல்வது என்று குழப்பமாக இருக்கு, பொருத்தமானதை எடுத்துக் கொள்ளுங்கள். :)

வஜ்ரா சொன்னது…

தமிழகத்தைப் பொருத்தவரை தை முதல் நாள் சமத்துவப் பொங்கலுடன் சமத்துவ முட்டாள்கள் தினமும் கொண்டாடப் பட்டுவிட்டது. Belated wishes.

கோவி.கண்ணன் சொன்னது…

//Vajra said...
தமிழகத்தைப் பொருத்தவரை தை முதல் நாள் சமத்துவப் பொங்கலுடன் சமத்துவ முட்டாள்கள் தினமும் கொண்டாடப் பட்டுவிட்டது. Belated wishes.
//

சமத்துவம், தமிழ் புத்தாண்டும், உங்களைப் போல் பிறப்பின் வழி அறிவாளிகளுக்கு முட்டாள் நாளாகத்தான் இருக்கும் என்பதில் வியப்படைபவர் எவரும் இல்லை.

முட்டாள்களில் நாளில் உங்களுக்கு ஏன் அக்கறை ?

ILA (a) இளா சொன்னது…

//1. மாற்றம் குறித்து மகிழ்பவர்கள், அதை நடை முறைபடுத்தியவர்கள்//
அடுத்த மாற்றம் எப்போ வரும்?

கோவி.கண்ணன் சொன்னது…

ILA(a)இளா said...
//1. மாற்றம் குறித்து மகிழ்பவர்கள், அதை நடை முறைபடுத்தியவர்கள்//
அடுத்த மாற்றம் எப்போ வரும்?

இளா,
மாற்றத்தை வரவேற்பவர்களுக்கு எப்போதும் எதோ மாற்றம் வரும், தடுமாற்றம் உள்ளவர்களுக்கு என்றும் வரா.
:)

சென்ஷி சொன்னது…

//TBCD said...
மறுக்காச் சொல்லேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
//

தமிழில் புதிய வார்த்தையை கண்டுபிடித்த டிபிசிடிக்கு வாழ்த்துக்கள்... :))

ezhil arasu சொன்னது…

அடுத்த தேர்தலுக்கு( தமிழக) அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இந்த புத்தாண்டு மாற்றம் தான் கதாநயகன் போல் தெரிகிறது.(super star ரஜினி அரசியலில் ( இமயமலை யோகி பாபா ஜி அருளுடன்)பிரவேசிப்பதாக செய்தி மிக பலமாக அடிபடுகிறது(இந்த முறை கொஞ்சம் double strong உறுதியுடன்-கர்நாடகத்தின் (அதி தீவிர ஆர்வலர்கள்)காவிரி நீர் கொடா முயற்சியை எதிர்த்து ரஜினியின் உண்மையான உணர்வுப் பேச்சு)

ILA (a) இளா சொன்னது…

//தடுமாற்றம் உள்ளவர்களுக்கு என்றும் வரா.//
அப்போ சித்திரை 1 தான் புத்தாண்டா? புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

கோவி.கண்ணன் சொன்னது…

//ILA(a)இளா said...
//தடுமாற்றம் உள்ளவர்களுக்கு என்றும் வரா.//
அப்போ சித்திரை 1 தான் புத்தாண்டா? புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
//
இளா,
ஒருவர் தன்னை நடுநிலையாளராகக் காட்ட நிறைய தமாஸ் பண்ண வேண்டுமா ?

நையாண்டி நைனா சொன்னது…

நல்ல பதிவு. பாராட்டுகிறேன்.

பெரியாரின் பெரிய போராட்டத் திற்கே இன்னும் போராடி கொண்டிருக்கிறோம்.
ஒற்றை செய்தி வரியில் திருந்தி விடுவார்களா என்ன?
நித்தம் செய்தி போலி பைநான்சு கம்பனிகள் பற்றி திருந்தியவர்கள் எத்தனை பேரு.
இன்னும் நாம் அரச மரத்தையும், போலி சாமியாரையும் சுற்றி வந்து தானே பிள்ளை வரம் கேக்கிறோம்.
ராகு-கேது பார்த்து தானே ராமர் சேது கால்வாய்/பாலம் கட்டுகிறோம்/இடிக்கிறோம்.
ஜெயலலிதா யாரோ? எங்களுக்கு தெரியாது? நாங்கள் ஜெயலலிதாவிற்கு ஒட்டு போடவில்லை, ஆனால் நாங்கள் ரெட்டை இலைக்கு தான் ஒட்டு போட்டோம், என்று "ஆராய்ந்து" பதில் சொல்பவர்கள் தானே இங்கு ஆட்சியை நிர்நயம் செய்கிறார்கள்.

ஐயா உங்களுக்கு நினைவு படுத்துகிறேன். நாங்கள் தமிழர்கள்.

please visit:
http://naiyaandinaina.blogspot.com/

கோவி.கண்ணன் சொன்னது…

//ezhil said...
அடுத்த தேர்தலுக்கு( தமிழக) அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இந்த புத்தாண்டு மாற்றம் தான் கதாநயகன் போல் தெரிகிறது.(super star ரஜினி அரசியலில் ( இமயமலை யோகி பாபா ஜி அருளுடன்)பிரவேசிப்பதாக செய்தி மிக பலமாக அடிபடுகிறது(இந்த முறை கொஞ்சம் double strong உறுதியுடன்-கர்நாடகத்தின் (அதி தீவிர ஆர்வலர்கள்)காவிரி நீர் கொடா முயற்சியை எதிர்த்து ரஜினியின் உண்மையான உணர்வுப் பேச்சு)
//

எழில்,

ரஜினியின் பேச்சு உண்மையில் உணர்வு பூர்வமாக இருந்தது, பின்னே சம்மந்தியின் மாநிலத்தை விட்டுக் கொடுப்பாரா ? :)

ரஜினி அரசியலுக்கு வரப் போகிறாரா ?
விஜயகாந்துதான் கவலைப்படனும் !

கோவி.கண்ணன் சொன்னது…

//சென்ஷி said...
தமிழில் புதிய வார்த்தையை கண்டுபிடித்த டிபிசிடிக்கு வாழ்த்துக்கள்... :))

11:41 PM, April 13, 2008//

மறுக்காச் சொல்லேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
நல்ல பதிவு. பாராட்டுகிறேன்.

பெரியாரின் பெரிய போராட்டத் திற்கே இன்னும் போராடி கொண்டிருக்கிறோம்.
ஒற்றை செய்தி வரியில் திருந்தி விடுவார்களா என்ன?
நித்தம் செய்தி போலி பைநான்சு கம்பனிகள் பற்றி திருந்தியவர்கள் எத்தனை பேரு.
இன்னும் நாம் அரச மரத்தையும், போலி சாமியாரையும் சுற்றி வந்து தானே பிள்ளை வரம் கேக்கிறோம்.
ராகு-கேது பார்த்து தானே ராமர் சேது கால்வாய்/பாலம் கட்டுகிறோம்/இடிக்கிறோம்.
ஜெயலலிதா யாரோ? எங்களுக்கு தெரியாது? நாங்கள் ஜெயலலிதாவிற்கு ஒட்டு போடவில்லை, ஆனால் நாங்கள் ரெட்டை இலைக்கு தான் ஒட்டு போட்டோம், என்று "ஆராய்ந்து" பதில் சொல்பவர்கள் தானே இங்கு ஆட்சியை நிர்நயம் செய்கிறார்கள்.

ஐயா உங்களுக்கு நினைவு படுத்துகிறேன். நாங்கள் தமிழர்கள்.

please visit:
http://naiyaandinaina.blogspot.com/
//

நைனாவின் பின்னூட்டம் நன்று ! நன்றி !
:)

ஒரு ஒருவாரமாக ஆள் அப்ஸ்காண்ட் ஆனது மாதிரி இருந்தது. ஆணி ? இது சித்திரையாச்சே !

வஜ்ரா சொன்னது…

//
சமத்துவம், தமிழ் புத்தாண்டும், உங்களைப் போல் பிறப்பின் வழி அறிவாளிகளுக்கு முட்டாள் நாளாகத்தான் இருக்கும் என்பதில் வியப்படைபவர் எவரும் இல்லை.
//

நான் உங்களை முட்டாள் என்று சொல்லாத போது, என் பிறப்பைப் பற்றியும், என் அறிவைப் பற்றியும் பேசுகிறீர்கள்.

எதற்கு இந்த வெறி ?

நான் பிறப்பினால் அறிவாளியும் அல்ல, நீங்கள் முட்டாளும் அல்ல, எல்லாம் வளர்ச்சியில் தான் உள்ளது.

சுய புத்தியை உபயோகிப்பதில்ம் கொஞ்சம் உள்ளது. தலைவர் சொன்னார் நான் கொண்டாடுகிறேன் என்பது அறிவாளித்தனம் என்றால் நான் முட்டாள் என்று ஒத்துக் கொள்கிறேன்.

TBCD சொன்னது…

ஆம்பிளையும் ஆம்பிளையும் கூடி 60 பிள்ளை பெத்தாங்க என்றுச் சொன்னால் கேள்வியே கேட்காமல் நம்பனும், அண்ணாச்சி..அது தான் புத்திசாலித்தனம்..

இப்படி மக்காவே இருக்கீங்களே..

திருந்துங்க.....

கோவி.கண்ணன் சொன்னது…

//Vajra said...
நான் உங்களை முட்டாள் என்று சொல்லாத போது, என் பிறப்பைப் பற்றியும், என் அறிவைப் பற்றியும் பேசுகிறீர்கள். //

//எதற்கு இந்த வெறி ?

நான் பிறப்பினால் அறிவாளியும் அல்ல, நீங்கள் முட்டாளும் அல்ல, எல்லாம் வளர்ச்சியில் தான் உள்ளது.//

வஜ்ரா ஐயா,

உங்கள் மேல் வெறி வந்து நான் என்ன பண்ணப் போகிறேன் ?
நல்லது, எல்லோருக்கும் எல்லாம் உள்ளது என்று ஒப்புக் கொண்டமைக்கு. நன்றி ! சமத்துவ முட்டாள்கள் என்று ஏளனம் செய்ததால் சொல்ல வேண்டியதாயிற்று.

//சுய புத்தியை உபயோகிப்பதில்ம் கொஞ்சம் உள்ளது. தலைவர் சொன்னார் நான் கொண்டாடுகிறேன் என்பது அறிவாளித்தனம் என்றால் நான் முட்டாள் என்று ஒத்துக் கொள்கிறேன்.

11:14 PM, April 14, 2008
//

அப்படியா? "பால்தாக்ரே அண்ட் கோ மற்றும் ஸ்ரீமான் மோடியின் ப(க)டைகள் மட்டுமே சுய புத்தியுடன் இருக்கிறார்கள்" என்று சொல்பவர்கள் தங்களை அறிவாளிகள் என்றே சொல்லிக் கொள்ளலாம் என்றும் தாங்கள் சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும்.

நந்தா சொன்னது…

கோவி கலக்கல் பதிவு.

இன்று அலுவலகத்தில் ஒரு மணி நேரம் இந்த தமிழ் புத்தாண்டின் பின்னாலிருக்கும் பல உண்மைகளைச் சொல்லி தை தான் உண்மையான தமிழ் வருடப் பிறப்பு என்று போராடியும் ஒரு சிலரை என்னால் மாற்ற முடிய வில்லை. அவ்ர்கள் திரும்ப திரும்ப சொல்லும் காரணங்களும் இதேதான். "மக்களின் நம்பிக்கைகளில் ஏன் கை வைக்கிறீர்கள்? கருணாநிதி உத்தரவு போட்டா நான் கேட்க வேண்டுமா? யோவ் தை மாசமோ, சித்திரை மாசமோ இப்ப இப்படி மாத்துறதனால மட்டும் என்ன பெரிசா நடந்திடப் போகுது?????"

ஆட்டு மந்தைகளாய் இருப்பதில்தான் எம் மக்களுக்கு எவ்வளவு பிரியமாய் இருக்கிறது....

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) சொன்னது…

மாற்றம் என்பது முன்னேற்றதிற்கானதாக இருந்தால் ஒத்துக் கொள்ளலாம். இப்படி எல்லாவற்றையும் ஒரு வீம்புக்கு மாற்றுவது கொஞ்சம் பயத்தை அளிக்கிறது. கீழ்கண்டவாறு எல்லாம் அறிவிப்புகள் வெளியானால் எவ்வாறு இருக்கும். சற்று நகைச்சுவை உணர்வுடன் படியுங்கள். (அவற்றில் நகைச்சுவை இருப்பதாக தெரியவில்லை என்றாலும்! :) )

வேட்டி தான் தமிழனின் பாரம்பரிய உடை என்று அறிவித்து அனைத்து அரசு அலுவலகங்களிலும் வேட்டி கட்டிக் கொண்டு வரச் செய்யலாம், சத்யராஜ் சொன்னது போல தமிழ் கடவுள்களை மட்டும் தமிழன் வழிபட வேண்டும் என்று உத்திரவு இடலாம்.
படங்களுக்கு தமிழ் பெயர் சூட்டினால் வரி விலக்கு அளிப்பது போல தமிழ் மக்கள் தம் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைத்தால் அவர்களுக்கு மூன்று சக்கர வாகனம் இலவசம் என்று அறிவிக்கலாம். (ஆனால், தமிழினத் தலைவர் தம் பெயரை அன்புச்செல்வம் என்றும் கூட்டணித் தலைவரின் பெயரை
இராமஅடியான் என்றும் மாற்றிக் கொள்ள வேண்டும் முதலில்!)

கல் தோன்றி மண் தோன்ற காலத்தே மூத்த குடி தமிழ் குடி. உணவு, உடை, பழக்க வழக்கம், திருவிழா, மொழி - இவற்றில் எதுவும் கலப்பில்லாமல் வணிகம் என்று ஒன்று தோன்றுவதற்கு முன்பிருந்த மூத்தகுடி தமிழன் மட்டுமே இருந்திருக்க முடியும். ஆக அந்த ஆதி தமிழன் பயன்படுத்திய பொருட்களை, வாழ்க்கை முறையை தொல்பொருள் ஆராய்ச்சி மூலம் கண்டுணர்ந்து அவ்வாறு வாழ தலைப்பட வேண்டும் என்று அறிவுறுத்தலாம்.

எனக்கு புத்தாண்டு எப்பொழுது கொண்டாடினாலும் என்ன? வருத்தம் என்னவென்றால் முன்பு பொங்கலுக்கு ஒருநாள் , தமிழ் வருடப் பிறப்பிற்கு ஒருநாள் என இரண்டு விடுமுறைகள் வரும். நல்ல விருந்து உணவு கிடைக்கும். புது படங்கள் வெளியாகும். இப்படி எல்லாவற்றையும் ஒன்றாக்கி விட்டால்! எதாவது புது பண்டிகைகள் உருவாக்கலாம். இன்று சோழர் காலத்தில் குடவோலை முறை துவக்கிய நாள். பாண்டிய மன்னன் சங்கம் வைத்த தினம், பல்லவன் புலிகேசியை வென்ற தினம். இப்படி.... இதை விட்டு விட்டு...!! :( நான் சொல்வது சரியா இல்லையா, நீங்களே சொல்லுங்கள் கோவியாரே!

வஜ்ரா சொன்னது…

//
அப்படியா? "பால்தாக்ரே அண்ட் கோ மற்றும் ஸ்ரீமான் மோடியின் ப(க)டைகள் மட்டுமே சுய புத்தியுடன் இருக்கிறார்கள்" என்று சொல்பவர்கள் தங்களை அறிவாளிகள் என்றே சொல்லிக் கொள்ளலாம் என்றும் தாங்கள் சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும்.
//

இந்துத் தமிழர்களைப் பாதிக்கும் வகையில் மட்டுமே எடுக்கப்படும் முடிவுகள் தான் சமத்துவம் என்றால் அத்தகய சமத்துவம் தேவையே இல்லை.

அத்தகய சமத்துவப் பொங்கலைச் சமைப்பதே வாடிக்கை என்பவர்களுக்கு சமய அடிப்படைவாதம் தான் பதில் கொடுக்கும்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை

"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்