பின்பற்றுபவர்கள்

5 ஏப்ரல், 2008

கருணாநிதி 'பேசாமல்' எதிர்கட்சியிடம் ஒப்படைத்துவிடலாம் !

ஒகனேக்கல் விவாகாரம் கர்நாடகத்தைப் பொருத்து முழுக்க முழுக்க ஓட்டுப் பொறுக்கி அரசியலைச் சேர்ந்தது என்பதை பிறந்ந்த குழந்தைக் கூட சொல்லும். இந்திய அரசியிலில் படுகேவலத்தனத்தின் / பொறுக்கித்தனத்தின் முதல் மாதிரியாக திகழும் கர்நாடக அரசியல் அராஜாகங்களுக்கும் அருவெருப்புக்கு தமிழகம் பாடம் கொடுக்க வேண்டும். இதன் மூலம் அரசியலில் சிறிதேனும் நாகரீகம் இருக்கிறது என்று காட்ட தமிழக அரசியல் கட்சிகளுக்கும் குறிப்பாக ஆளும் கட்சி திமுகவிற்கு பொன்னான வாய்ப்பு.

அதாவது ஒக்கனேக்கல் குடிநீர் திட்ட கர்நாடக எதிர்ப்பை மீறி திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று தமிழக அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து முடிவெடுத்து அதற்கென ஒரு குழுவை அமைத்து, எதிர்கட்சித் தலைவி ஜெயலலிதாவை அதற்கு தலைமை ஏற்கச் செய்யவேண்டும். இதைச் செய்தால் ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனமும் ஆதரவும் பெற்று திட்டம் விரைவில் நிறைவேறும், நமது ஒற்றுமையைப் பார்த்து கன்னட வெறியர்கள் கதிகலங்குவார்கள், அங்குள்ள தமிழனைக் கண்டால் பதுங்கி ஒதுங்கி செல்வார்கள்.

வெறும் அறிக்கைகளும், உணர்வை தூண்டுவதுமட்டுமே எந்த செயலை முடித்துவிடாது, அதில் உயிரிழப்புகள் இருபக்கமும் கூடுதலாக இருந்து வரலாற்றில் இரத்தக் கரையையும், மறக்கமுடியாத காயங்களை ஏற்படுத்திவிடும். முடிந்த அளவுக்கு தமிழக அரசியல்வாதிகள் தேவையற்ற தூண்டுதல்களை தவிர்த்துவிட்டு, ஒற்றுமையில் இதை சாதிக்க முயற்சிக்க வேண்டும், இதைச் செய்தால் தமிழகத்தில் வாழும் கர்நாடகத்தைச் சேர்ந்த கன்னடர்களே பெங்களூர் கன்னடர்களை அடக்கி வைப்பார்கள். கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் எதுவுமே மோசமான விளைவையே தரும். தமிழகத்தில் இயக்குங்கும் கன்னட வங்கிகளையும் (மைசூர் பேங்க், கனரா வங்கி), நிறுவனங்களையும் தமிழக மக்கள் புறக்கணித்தாலே போதும்.

குட்டிக் கொண்டு இருப்பவன் தன்னை மடையன் என்று சொல்லிக் கொண்டு தான் குட்டிக் கொண்டு இருக்கிறான், தற்போது குட்ட குட்ட குனிபவன் தான் மடையனல்ல.. வாங்கப் பிறந்தவர்களல்ல கொடுக்கவும் தெரியும் என்று காட்ட வேண்டும். அரசியல் காழ்புணர்வுகளை மறந்து கலைஞர் தலைமையிலான திமுக அரசு உடனடியாக எதிர்கட்சி தலைமையில் குழுவை அமைத்து செயல்பட்டால் வெறும் கண்ணீர் சிந்தாமல், நல்ல காரியம் ஆற்றினார் என்ற பெருமை அவருக்கு கிடைக்கலாம். எல்லாம் அரசியல் நோக்கில் செய்து பழக்கப்பட்ட தமிழக அரசியல் வாதிகள் இந்த முறையாவது மக்கள் நலனுக்காக ஒன்று சேர்ந்து செயல்பட்டால், தமிழக அரசியல் வாதிகள் மீது உள்ள அருவெருப்பு நீங்கும். மக்கள் உணர்வுகளைத் தூண்டுவதை விட மக்களின் கவனைத்தைப் பெற்றால் பேராதரவுடன் இந்த திட்டம் வெற்றிபெறும், கன்னட நிறுவனங்களை புறக்கணிப்பு செய்வதன் மூலம் நாம் இருக்கிறோம் என்ற நம்பிக்கையை நமது ஒற்றுமையின் வழிகாட்டினால் பெங்களூர் வாழ் தமிழகளுக்கு போதிய பலம் கிடைக்கும், கன்னட வெறியர்களுக்கு அவர்களின் இடத்திலேயே மரண அடி கொடுக்க தமிழர்களின் மக்கள் தொகை அங்கு போதுமான அளவில் தான் இருக்கிறது.

ஆளுங்கட்சி இந்த பிரச்சனையை எதிர்கட்சிகளிடம் விட்டுவிட்டு போதிய அளவு அரசு ஆதரவு கொடுத்தால், எந்த எதிர்ப்பையும் மீறி நாம் சாதிக்க முடியும். கலைஞர் பேசுவதுதான் பிரச்சனை என்பது போல் செய்திகள் பரபரப்பாகாது.

12 கருத்துகள்:

Thekkikattan|தெகா சொன்னது…

நியாயமான ஆசைதான், கோவியாரே. ஆனால், செய்வார்களா? இந்த முறை என்னவோ எல்லா தரப்பினரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து சேர்த்தது மாதிரித்தான் தெரியுது.

சூட்டோட சூடா, ஓட்டு மொத்த எல்லா மாநில நதி நீர் குறித்தான பிரச்சினைகளுக்கும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி ஒரு தீர்வு கிடைச்சா நல்லதுதான். பார்ப்போம் என்ன பண்றாங்கன்னு.

உடன்பிறப்பு சொன்னது…

ஜெயலலிதா ஆரம்பம் முதலே காவிரி மற்றும் கர்நாடகா பற்றிய எந்த பிரச்சினையிலுமே கலந்து கொள்ளாமல் மவுனம் சாதித்து பேசாமல் இருக்கிறார். அவரிடம் 'பேசாமல்' இந்த பொறுப்பை ஒப்படைத்தால் மொத்தமும் கெட்டுப் போய்விடும். ரொம்ப குறும்பு தான் உங்களுக்கு

ஜமாலன் சொன்னது…

பத்த வச்சிட்டியே பரட்ட..

ஜேவும் பாஜாகா வும் கூட்டுக் களவானி திட்டத்தில் இருக்கிறார்கள். அம்மாவுக்கு (ரெட்டியூர) அப்பா எம்எல்ஏ சீட்டு 3 கொடுக்ககப் போவதாக கேள்வி. அதனால் ஒரு கருத்துக் கணிப்புவேறு தனது ஆசையை வெளியிட்டுள்ளது. இக்கூட்டணி விட்டால் அமேரிக்காவை கைப்பற்றும் என்று. கருத்துக் கணிப்பு என்பது உண்மை அல்ல தனது ஆசையை அரசியல் உள் நோக்கத்தை மக்களிடம் உருவாக்க முனையும் ஒரு நவீன புள்ளிவிபர பொய ஏற்பாடே. இந்த ஏற்பாடுகள் குறித்தே எழுத வேண்டும் தனியாக. அது போகட்டும். தற்சமயம் உங்கள் நிலைபாடு சரியான பத்தவைப்புதான். அம்மா தலைமையில் அமைத்துவிட்டால் அம்மாவின் தமிழ் பற்றை தெரிந்துகொள்ளலாம். எது தெரிந்து என்ன? நடிகர் போராட்டததில் போய் ரஜனிக்கு கைதட்டிய மானங்கெட்ட கூட்டததை வைத்தக்கொண்டு ஒரே ஒரு வியபாரம் மட்டுமே செய்யலாம். அதை சொல்ல வேண்டாம்.
ரஜனி போராட்டததை ஒரு 'இது ஒரு வித்தியாசமான சந்திப்பு என்றுதான் சொல்ல வேண்டும்'. என்கிறார் அதற்கும் சொரணைகெட்ட கூட்டம் கைதட்டுகிறது. என்ன செய்ய? போராட்டத்தை சந்திப்பு என்கிற பிக்னிக் மனநிலையல் வந்து கலந்து கொண்டு எந்த பாதிப்பும் இல்லாமல் திரும்ப முடிகிறது. ஆனால் சிவாஜிய பிடிக்கும் என்றதற்காக சாய்குமார் என்கிற கன்னட நடிகரை அடிக்கிறது கன்னட வெறிக்கூட்டம். இனி பேசிப் பயனில்லை. நம்மை சுற்றி உள்ள தமிழனை எந்தவிதத்தில் தலைகுனிய வைககலாம் என்று திரிகிற உள்ளுர் கூட்டம் ஒன்று சந்தோஷத்தில் கொப்பளிக்கிறது. திரும்ப திரும்ப மனச்சோர்வைதான் உருவாக்குகிறது. அடிமைத்தனத்தை சந்தோஷமாக ஏற்றுக்கொண்ட ஒரு கூட்டமாக தமிழினம் தாழ்நதவிட்டது என்பதை மீண்டும் ஒருமுறை கர்நாடக வெறிக்கும்பல் நிரூபித்துள்ளது அவ்வளவே.
அதனால் தலைவியை தலைவியாக்கி உங்கள் ஆலோசனைப்படி கலைஞர் கூப்பிட்டால் அம்மாவின் முகத்திரை கிழியும். உடனே இங்கு உள்ள ஒரு தமிழ்விரோதக் கூட்டம் கலைஞர் பயந்து பின் பதுங்கி ஜெ தலைமையில் தந்துவிட்டார் ஆள லாயக்கில்லை ஆட்சியை கலை அம்மாவை ஏற்று என்று குதிக்கும். அதற்கு 'சோ'-க்காளிக் கூட்டமும் தயாராக இருக்கும். நம்மை நினைத்து நாமே நொந்துக்கொள்வதைத்தவிர வேறுவழியி்ல்லை.

"தமிழ் வாழ்க தமிழன் ஒழிக!" -என்பது சரிதானோ எனத் தோன்றுகிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

ஜமலான், மிகச்சரியாக பதிவின் நாடியை பிடித்துவிட்டீர்கள்.

பாராட்டுகள் வியப்பாகத்தான் இருக்கு.

நான் ஜெவின் தமிழ்பற்று பற்று தெரிந்து கொள்ள நினைக்கவில்லை. சொல்லி இருப்பது நடந்தால் ஜெ - இதில் எந்த அளவுக்கு அக்கரைக்காட்டுகிறார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்துவிடும். நம் அரசியல் வாதிகளுக்கும் மக்கள் பிரச்சனைகளில் உண்மையிலேயே பற்று இருக்கிறதா, எல்லாம் வெறும் அரசியல் ஸ்டெண்ட் தானா ? என்று நாமும் தெரிந்து கொள்ள முடியும்.

கோவை சிபி சொன்னது…

//ரஜனிக்கு கைதட்டிய மானங்கெட்ட கூட்டததை வைத்தக்கொண்டு ஒரே ஒரு வியபாரம் மட்டுமே செய்யலாம்//
இதை குறிப்பிட்டு சத்யராசு உணர்வுப்பூர்வமாக பேசினார்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

நல்ல யோசனை. நடப்பதற்கு 100 சதவீதம் வாய்ப்பு இல்லை. இந்தம்மாவைக் கண்டு கனடா மன்னிக்கவும் அது நாடு இல்ல, கர்நாடகா அரசியல்வாதிகள் பயப்படக்கூடும். (கிருஷ்ணா, கௌடா குடும்பம், இடையுரப்பா எல்லோரும்) ஏன் அத்துவானியே அலறுவார். சரிதானுங்களே?

அன்புடன்,
ஜோதிபாரதி.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

சத்தியராஜின் சபாஷ் பேச்சு இதோ,
நான் யார் பெயரைச் சொன்னால் எனக்குக் கை தட்டல் கிடக்குமோ, அந்த பெயரை சொல்வதை விட என் நாக்கைப் புடுங்கிக் கொள்ளலாம். (பக்கத்தில் ரஜினி அமர்ந்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.)

அன்புடன்,
ஜோதிபாரதி.

கோவி.கண்ணன் சொன்னது…

ஜோதி,

சத்தியராஜின் பேச்சில் எனக்கு முழு உடன்பாடு, அது அரசியல் மேடை அல்ல என்பதை எவரும் புரிந்து கொள்ளாமல் போனது எதிர்பார்த்தது தான். ஹூம். ஜமாலன் கொடுத்திருக்கும் சாட்டையடியை பாருங்க.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

எனக்கு சிலவற்றில் உடன்பாடு இருந்தாலும், சிலவற்றில் உடன்பாடு கிடையாது என்பதை வெளிப்படையாகத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தம்மா, தஞ்சை மாவட்டத்தில் பயிர்கள் பட்டு காய்ந்து சருகானபோது, எங்கள் ஊருக்கும் பக்கத்துக் கிராமம் "விக்கிரமம்" அங்கு வந்து கருகிய பயிகளை புடுங்கி எடுத்துக் கொண்டு, நேரடியாக தில்லி பேச்சுவார்த்தைக்குச் சென்றார். நரசிமராவ் தலைமையில் நடந்தது. பேச்சுவார்த்தை நமக்கு சாதகமில்லை என்று தெரிந்தவுடன் வெளிநடப்பு செய்தார். எந்த முதல்வரும் பிரதமருடனான பேச்சுவார்த்தையில் செய்யத் துணியாதது. உடனே ராவ் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டார். அந்த இடத்தில் வேறு முதல்வரை வைத்துப் பாருங்கள் என்ன நடந்திருக்கும்.

அன்புடன்,
ஜோதிபாரதி.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

அப்போது,
இந்த,
வாட்டாளுக்கு வாய் அடைக்கப் பட்டது.

நஞ்சுண்ட சாமி நைந்து போனார்.

நஞ்சைய்ய கௌட நையப் புடைக்கப் பட்டார்.

இப்போது நடக்குமா?

பெரியாறு பிரச்ச்சனைக்கே இன்னும் பேசலாம் என்கிறார் கலைஞர்.

பிரேமச்சந்திரன் மிரட்டுகிறார்.

அடப்பாவமே!

எங்கே போய் முடியுமோ இது?


அன்புடன்,
ஜோதிபாரதி.

கோவி.கண்ணன் சொன்னது…

பாலா,

உங்களின் அற்பத்தனமான பின்னூட்டம் ரிஜெக்டட்,
வெளி வருமென்று காத்திருக்க வேண்டாம் என்ற தகவலுக்காக இதைச் சொல்கிறேன்.

பிறைநதிபுரத்தான் சொன்னது…

காலத்திற்கேற்ற பதிவு தந்த கோவியாருக்கு நன்றி,

தமிழகத்தின் தார்மீக உரிமையை தட்டிக்கேட்க- இந்நாள் முதல்வருக்குத்தான் முன்னுரிமை இருக்கிறது.

கர்நாடக தேர்தல் முடியும் வரை இந்தப் பிரச்சினைப்பற்றி ஜெ- வாயை திறக்கமாட்டார். வரப்போகும் தேர்தலில்
கர்நாடகத்தில் பா.ஜ.க வின் வெற்றி - தமிழகத்தின் இன்றைய-எதிர்கால நலனைவிட அதி முக்கியம்.

நக்குற நாய்க்கு செக்குக்கும்..சிவலிங்கத்திற்கும்
வேறுபாடு தெரியாது என்பார்களே அதுபோல, நடிகர்கள் கூட்டத்தில் -ரசிகர்களாக குழுமியிருந்தால் கைதட்டலும் - விசில் சத்தமும்தான் கேட்கும்.

'பஞ்சராகி' போன நடிகர்கள் பேசுவதையெல்லாம் - ‘பஞ்ச்' டயாலாக்காக பார்க்கிறதுகளுக்கு -
நடிகர் சத்யராஜின் - பேச்சு செருப்படியாக விழுந்திருக்கும்

தமிழன் தன்னை ரசிகன்- தொண்டன் என்பதை மறந்து பகுத்தறிவுள்ளவன் என்று கருதும் நாள் வரை - இந்த இழிநிலை நீடிக்கும்.

'நச்' பின்னூட்டமிட்ட ஜமாலனுக்கு வாழ்த்துக்கள்.. .

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்