பின்பற்றுபவர்கள்

5 பிப்ரவரி, 2008

ஆந்தையாரின் அருங்காட்சி !

நேற்று முந்தைய நாள் (ஞாயிறு அன்று) காலை 10 மணி அளவில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே இறங்கினேன். 'கீச் கீச்' என்ற மைனா குருவிகளின் சத்தம். மழைவேறு லேசாக தூறிக் கொண்டிருந்தது. என்னவென்று பார்த்தால் அவைகள் ஆந்தையார் ஒருவரை துறத்திக் கொண்டிருந்தன. ஆந்தையாருக்கு பகலில் கண் சரியாக தெரியவில்லை. இருந்தாலும் அருகில் சென்றால் உடனே இறக்கை விரித்து பத்தடி தொலைவுக்கு பறந்து சென்று அமர்ந்து கொண்டார். ஆந்தையார் எங்காவது மரக்கிளையில் அமர்ந்துவிட்டால் திரும்பிவிடலாம், அவருக்கும் பாதுகாப்பாக இருக்கும் என்று விடாமல் நானும் துறத்தி துறத்திப் போனேன்.


விதவிதமாக போஸ் கொடுக்க அத்தனையும் கையில் இருந்த கேமரா செல்பேசியில் சிக்கியது. சென்றவாரம் பதிவில் ஆந்தையாரைப் பற்றி எழுதிய நேரமோ ? தெரியவில்லை. :) அன்று ஆந்தையார் நேரில் வந்து காட்சி கொடுத்தது மனதிற்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. மிக அருகில் சென்றதும் ஒருவழியாக கொஞ்சம் உயரமாக பறந்து மரக்கிளையில் அமர்ந்து கொண்டார். திரும்பிவந்துவிட்டேன்.
கையில் படம்பிடிக்கும் செல்பேசி இருந்தால் எப்படியெல்லாம் பயன் அளிக்கிறது.

மணி காலை பத்து தான் ஆகிறது இன்னும் 8 மணி நேரம் எப்படி போக்குவது ? :(
மனிதர்கள் முகத்தில் விழித்தால் பாவம், அதான் திரும்பிக் கொண்டேன்.
பகலில் கண்ணுதான் தெரியாது ஆனால் பறக்க தெரியுமே.
இந்த இடம் எனக்கு பாதுகாப்பாக இருக்குமா ?
முகம் வட்டமாகத்தான் இருக்கு PIT போட்டிக்கு அனுப்புறியா ?
தைரியம் இருந்தால், இரவு பணிரெண்டு மணிக்கு ஒண்டிக்கு ஒண்டி வர்ரீயா ?
இரவு பணிரெண்டு மணி வேண்டாம், மாலை ஆறுமணிக்கு வரமுடியுமா?
கோவம் வருவதற்குள் மரியாதையாக போடா!!!

8 கருத்துகள்:

கோவி.கண்ணன் சொன்னது…

சீன புத்தாண்டு விடுமுறையைத் தொடர்ந்து ஒருவாரம் பதிவும் எதுவும் போடப் போவதில்லை.
:)

TBCD சொன்னது…

ஆந்தையார் பதிவுலகச் சேதி சொல்வார் என்று எதிர்ப்பார்த்தேன்..

வடுவூர் குமார் சொன்னது…

பாவங்க,முறைக்குது பாருங்க,விட்டுவிடுங்கள்.
சோனி w950i யா?படம் நல்லாத்தான் இருக்கு.

பாச மலர் / Paasa Malar சொன்னது…

சும்மா விரட்டி விரட்டிப் படம் புடிச்சிருக்கீங்க...ஆந்தை ஸ்பெஷல் வாரம்...

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
ஆந்தையார் பதிவுலகச் சேதி சொல்வார் என்று எதிர்ப்பார்த்தேன்..
//

பதிவுலக செய்தி சொல்றவங்க கழுகார், சாம்பு எல்லாம் காணாமல் போய்டாங்க.
அவதாரம் எடுக்கிறீர்களா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
பாவங்க,முறைக்குது பாருங்க,விட்டுவிடுங்கள்.
சோனி w950i யா?படம் நல்லாத்தான் இருக்கு.
//

குமார்,

அதை அப்போதே விட்டாச்சு.

சோனி எரிக்சன் W810i தான் நான் வைத்திருக்கிறேன். வெளிச்சம் இருந்தால் படம் தெளிவாக இருக்கும் 2 மெகபிக்சல் என்று போட்டு இருக்கிறான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//பாச மலர் said...
சும்மா விரட்டி விரட்டிப் படம் புடிச்சிருக்கீங்க...ஆந்தை ஸ்பெஷல் வாரம்...
//

பாசமலர்,

நான் விரட்ட வில்லை, அது தான் நெருங்கியதும் பயந்து பயந்து பறந்தது.

bala சொன்னது…

கோவி.மு.கண்ணன் அய்யா,

அடப் பாவி,
கடைசி ஃபோட்டோவில இருக்கற ஆந்தை அசப்புல பாத்தாக்க நம்ம வரவனையான் அய்யா மாதிரி இருக்கே.ஆனாலும் இந்த ஆந்தை "சினேகா சினேகா"ன்னு கதறுவது கொஞ்சம் ஓவர் தான்.

பாலா

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்