பின்பற்றுபவர்கள்

10 மே, 2007

மனுநீதி சோழனாக மாறுகிறார் கருணாநிதி

தினகரன்-சன் டிவி மீதான தாக்குதல்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு-கருணாநிதி

மே 10, 2007

சென்னை: மதுரையில் உள்ள தினகரன், சன் டிவி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி, 3 ஊழியர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் இன்று மதுரையில் திமுகவினர் நடத்திய வன்முறை சம்பவம் எதிரொலித்தது. அதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மான் கொண்டு வந்தனர்.

அதிமுக சார்பில் பேசிய ஜெயக்குமார், சம்பவம் நடந்தபோது காவல்துறை கை கட்டி நின்று வேடிக்கை பார்த்துள்ளது. காவல்துறை முற்றிலும் செயலிழந்து விட்டது.

கருணாநிதி குடும்பத்தில் நடக்கும் அதிகாரப் போட்டி காரணமாகவே வன்முறை நடந்துள்ளது. அரசியல் கட்சிகளிடையே சிண்டு முடியும் வேலையில், தினகரன் நாளிதழ் ஈடுபட்டுள்ளது.

அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு அடுத்த அரசியல் வாரிசு யார் என்ற கருத்துக் கணிப்பு நடத்தியபோது, அதை அதிமுக தனது அறிவு முதிர்ச்சியால் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டோம்.

அதேபோல பாமகவை அவமானப்படுத்தும் வகையில், நடத்திய கருத்துக் கணிப்பால் அக்கட்சி போராட்டம் நடத்தியது.

இப்போது திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த நடத்திய கருத்துக் கணிப்பு, வாரிசு அரசியலையே வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

தினகரன் நடத்திய தேவையில்லாத, விஷமத்தனமான கருத்துக் கணிப்பால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். காவல்துறை முற்றிலும் செயலிழந்து விட்டது. அதிமுகவினர் ஜனநாயக முறைப்படி ஆர்ப்பாட்ம் நடத்தினால் கைது செய்யும் காவல்துறை, மதுரையில் கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை. கருணாநிதியின் குடும்பத்தினர் அவரது கட்டுப்பாட்டில் இல்லை. இப்படி ஒரு நிலை இருந்தால் எதிர்க்கட்சியினருக்கும், சாதாரண பாமர மக்களுக்கும் என்ன பாதுகாப்பு இருக்கும்.

எனவே காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் கருணாநிதி உடனடியாக பதவி விலக வேண்டும். அவர் செய்யத் தவறினால் மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றார்.

பின்னர் முதல்வர் கருணாநிதி தனது பதவியை ராஜினாமா செய்யக் கோரி அதிமுகவினர் வெளிநடப்புச் செய்தனர்.

சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்களுக்குப் பதிலளித்து முதல்வர் கருணாநிதி பேசுகையில், மதுரையில் தினகரன் அலுவலகம் மீது நடந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேருந்துகளை சேதப்படுத்தியது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 82 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

கருத்துக் கணிப்பால் பிரச்சினை வரும் என்று எனக்கு முன்கூட்டியே தெரியும். எனவேதான் தினகரன் நிர்வாகத்துடன் போனிலும், நேரில் ஆட்களை அனுப்பியும் இதை வெளியிட வேண்டாம் என்றேன். இது அவசியம் இல்லாத கருத்துக் கணிப்பு. ஆனால் எனது பேச்சைக் கேட்காமல் வெளியிட்டு விட்டனர் என்றார் கருணாநிதி.

செய்தி
தட்ஸ் தமிழ்

40 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அடிச்சாருய்யா ஸ்டண்டு. அடப்பாவி. கேக்குறவன் கேணயா இருந்தா ______ பழமொழி தான் நியாபகத்துக்கு வருது.

ரோம் எரிஞ்சப்ப நீரோ பிடில் வாசிச்சானாம். அது உண்மையோ இல்லையோ, நேற்று மதுரை தீப்பிடிச்சு எரிஞ்சப்ப இந்த நீரோ மெட்ராஸிலே 5-ஸ்டார் ஓட்டலிலே பார்ட்டியிலே இருந்தாரு.

இதிலே எனக்கு பொன் விழாக்கூட்டம் வேண்டாம்னு பில்டப்பு வேற கொடுத்தாராம். எல்லாரும் கெஞ்சின உடனே சரின்னு ஒத்துகிட்டாராம். டேய்... டேய்.. டேய்.. (கவுண்டமணி ஸ்டைலில் படிக்கவும்)

G.Ragavan சொன்னது…

// கருத்துக் கணிப்பால் பிரச்சினை வரும் என்று எனக்கு முன்கூட்டியே தெரியும். எனவேதான் தினகரன் நிர்வாகத்துடன் போனிலும், நேரில் ஆட்களை அனுப்பியும் இதை வெளியிட வேண்டாம் என்றேன். இது அவசியம் இல்லாத கருத்துக் கணிப்பு. ஆனால் எனது பேச்சைக் கேட்காமல் வெளியிட்டு விட்டனர் என்றார் கருணாநிதி. //

ஓ இவரு ஏற்கனவே வெளியிட வேண்டாம்னு சொல்லியும் கேக்கலையாக்கும். ம்ம்ம்ம்..அந்த அளவுக்கு வாரிசுக்காய்ச்சல் கொதிக்குது. அவருக்குப் பிறகு பல வண்ணத்திரைப்படத் திருப்பங்கள் காணக்கிடைக்கும்.

பெயரில்லா சொன்னது…

//மனுநீதி சோழனாக மாறுகிறார் கருணாநிதி//

ஜி கே அய்யா,
நீங்க எத்தனையோ முறை மஞ்ச துண்டு அய்யாவுக்கு கேவலமா ஜல்லி அடித்தவர் தான்.ஆனாலும் இப்படி சொன்னது உங்களுக்கே ஓவரா தெரியலயா?

பாலா

பெயரில்லா சொன்னது…

பத்திரிகைச் சுதந்திரம் என்ற பெயரில் பத்திரிகையாளர்கள் இருட்டடிப்பு, பொய், மிகைப்படுத்தல், அவமானப்படுத்துதல் போன்ற மிகவும் கேவலமான செயல்களைச் செய்து வருகின்றார்கள். அவர்கள் பேனாவை ஆயுதமாக எடுத்தால் பாதிக்கப்பட்டவர்களும் கிடைக்கின்ற ஆயுதங்களை எடுக்கின்றார்கள்.
1.கருத்துக் கணிப்புக்கு என்ன அவசியம்?
2.மு.க அரசியல் வாரிசு என்றால் குடும்ப அங்கத்தவரைத் தவிர தி.மு.க‌
கட்சி அங்கத்தவர் யாரையும் ஏன் சேர்க்கவில்லை?
3. அரசியல் போட்டியில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கியிருக்கும் ஒரு மனிதனை ஏன் வம்புக்கு இழுக்க வேண்டும்.

பத்திரிகைக்காறர்கள் தங்கள் பலத்தால் மற்றவர்களை காயப்படுத்தினால், பத்திரிகைக்காறர்களைக் காயப்படுதுவதும் நியாயமானதே!
பத்திரிகைக்காறர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கு?

பெயரில்லா சொன்னது…

""பத்திரிகைக்காறர்கள் தங்கள் பலத்தால் மற்றவர்களை காயப்படுத்தினால், பத்திரிகைக்காறர்களைக் காயப்படுதுவதும் நியாயமானதே!
பத்திரிகைக்காறர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கு?""

சூப்பர் அப்பு சூப்பர்!!!

குமரன் (Kumaran) சொன்னது…

இடுகையின் தலைப்பு குழப்புகிறது கண்ணன் அண்ணா. மனுநீதி சோழனாக கலைஞர் மாறுகிறார் என்றால் அது நல்லதா கெட்டதா? மனுநீதி நல்லதா கெட்டதா?

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் (Kumaran) said...
இடுகையின் தலைப்பு குழப்புகிறது கண்ணன் அண்ணா. மனுநீதி சோழனாக கலைஞர் மாறுகிறார் என்றால் அது நல்லதா கெட்டதா? மனுநீதி நல்லதா கெட்டதா?
//

குமரன்,

வருண பேத மனுவுக்கும், மனு நீதி சோழனுக்கும் தொடர்பே இல்லை என்று படித்து இருக்கிறேன். இல்லாதபோதும் வருண பேத மனுவை சிறப்பித்துக் கூற மனு நீதி சோழனின் புகழை இணைத்துக் கூறுவது தொன்று தொட்டு நடப்பது தான்.

மனுவுக்கும் நீதிக்கும் தொடர்பு இல்லை என்னும் போது மனுவுக்கும் மனுநீதி சோழனுக்கும் என்ன தொடர்பு இருக்கப் போகிறது ? :)

கருணாநிதி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதால் இந்த தலைப்பை வைத்தேன்.

பெயரில்லா சொன்னது…

இப்படி ஒரு பதிவு போட்டதுக்கு உம்மை அட்டாக் செய்யச்சொல்லி அஞ்சா நெஞ்சன் சொல்லிட்டார். எப்போது மதுரை வரீங்க ? விமான நிலையத்துல உம்மை மதுரை அழகிரி பெட்ரோல் குண்டோட (TM) சந்திக்க எமது கொலைவெறி அணி தயார்.

கோவி.கண்ணன் சொன்னது…

குமரன்,

காலம் காலமாக தமிழகத்தில் மனுவுக்கு எதிராகத்தான் புலவர்கள் இருந்து வந்திருக்கின்றனர்.

மேலும் நம் அவ்வை பாட்டியே 'சாதி இரண்டொழிய வேறில்லை, சாற்றுங்கால், நீதிவழுவா மேதினியில் இட்டார் பெரியர், இடாதார் இழிகுலத்தோர்' என்று வருண பேதத்திற்கு செருப்படி கொடுத்து இருக்கிறார் என்று தாங்கள் அறியாததா ?

'பழங்கால சோழர்கள் ஆட்சியில் தென்னகம்' என்ற ஒரு நூலில் மனுநீதி சோழனைப் பற்றி குறிப்பு இருந்தது. அவன் பெயர் மனு என்றும் கன்றுக்கு எதிரான அநீதிக்காகாக தன் மகனை தேர் சக்கரத்தில் பலி இட்டான் என்றும் சொல்லி இருந்தது. இது போன்ற நீதிக்கும் வருண பேத மனுவுக்கும் தொடர்பு இருக்க சிறு கடுகு அளவேனும் சாத்திய கூறுகள் இருக்கிறதா ?

அப்படி ஒரு கேள்வி கேட்டதற்கு மிக்க மகிழ்கிறேன். இல்லையென்றால் நான் இவ்வளவு சொல்லி இருக்க முடியாது.
:))))))

குமரன் (Kumaran) சொன்னது…

மனு நீதியை எழுதிய மனுவிற்கும் சோழனுக்கும் எந்த தொடர்பும் இல்லை கண்ணன் அண்ணா. அதில் ஐயமே இல்லை. ஆனால் மனு நீதியின் படி அவன் நடந்தான் என்று எண்ணித் தான் அவனை மனுநீதி சோழன் என்று அழைத்தனர். அதில் ஏதேனும் ஐயம் உண்டா? மனு நீதியை நான் சிறப்பித்துக் கூறவில்லை. அப்படி ஒரு எண்ணமும் இல்லை. ஆனால் சோழனின் காலத்தில் மனு நீதியைச் சிறப்பாக எண்ணியதால் தான் அவனை அப்படி அழைத்தனர். அதில் எந்த ஐயமும் இல்லை. இப்போது மனு நீதி இந்தக் காலத்திற்கு ஒவ்வாதது மட்டுமின்றி கேவலமான நீதியைச் சொன்னது என்ற எண்ணம் வளர்ந்துவிட்டதால் மனுநீதிச் சோழனை அந்தப் பெயருடனேயே நீதிக்கு இலக்கணமாகக் காட்டுவது முரணானது. சோழன் நீதி தவறாதவனாக இருக்கலாம்; அதனால் இலக்கணம் ஆகலாம். ஆனால் மனுநீதி என்ற பட்டத்துடன் அவன் இலக்கணம் ஆக மாட்டான். அதைக் குறித்ததே என் பின்னூட்டம்.

***

பாருங்கள் காலத்தின் கோலத்தை. நான் கலைஞர் என்று எழுதுகிறேன். நீங்கள் கருணாநிதி என்று எழுதுகிறீர்கள். :-)

அவர் சிபிஐ விசாரணையைப் பரிந்துரைத்தது (உத்தரவிடவில்லை என்றே நினைக்கிறேன். அந்த அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை போலும்) கூட கண் துடைப்பு நாடகம் என்று தோன்றுகிறது. வழக்கமாக விசாரணை கமிஷன் அமைப்பார்கள்; இந்த முறை சிபிஐ விசாரணை என்று சொல்லியிருக்கிறார். நீங்கள் அவரை நீதி தவறாத மன்னன்; மகன் மேலேயே தேரினை ஏற்றி நீதியை நிலை நாட்டிய மன்னன் என்று புகழ்கிறீர்கள். :-) எல்லா நாடகமும் கண்டிருந்தும் ஏதோ ஒரு பாசம் கண்ணை மறைக்கிறது போலும். :-)

கோவி.கண்ணன் சொன்னது…

// குமரன் (Kumaran) said...
மனு நீதியை எழுதிய மனுவிற்கும் சோழனுக்கும் எந்த தொடர்பும் இல்லை கண்ணன் அண்ணா. அதில் ஐயமே இல்லை. ஆனால் மனு நீதியின் படி அவன் நடந்தான் என்று எண்ணித் தான் அவனை மனுநீதி சோழன் என்று அழைத்தனர். அதில் ஏதேனும் ஐயம் உண்டா? மனு நீதியை நான் சிறப்பித்துக் கூறவில்லை.//

இதில் இம்மியளவேனும் உண்மை இல்லை. அவன் பெயர் மனு என்பதால் மனு பேதப்படி ஆட்சி நடத்தினான் என்று பொய்யாக நம்ம வைக்கப்பட்டு வருகிறது. வருண பேத மனுவை காப்பாற்ற மனுநீதி சோழனின் கண்களில் அதை கட்டி இருக்கிறார்கள் அவ்வளவே. அது ஒரு அற்ப செயல். அதுபற்றி படித்ததால் தான் என்னால் உறுதிபட மனுவுக்கும் மனுநீதி சோழனுக்கும் தொடர்பு இல்லை என்று எழுதமுடிந்தது. விரைவில் அது தொடர்புடைய நூலில் இருந்து எடுத்து விளக்கமாகவே எழுதுகிறேன்.

மனு பேதத்தில் எங்கே இருக்கிறது நீதி ? நீங்கள் உயர்வாக சொல்லுகிறீர்கள் என்று நானும் சொல்லவில்லை நண்பரே !
:)

//பாருங்கள் காலத்தின் கோலத்தை. நான் கலைஞர் என்று எழுதுகிறேன். நீங்கள் கருணாநிதி என்று எழுதுகிறீர்கள். :-) //

கலைஞர் என்று எழுதுவது பெருமைபடுத்துவது என்றாலும்,
கருணாநிதி என்று எழுதுவதில் மரியாதை குறைவு ஒன்றும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
:)))

கோவி.கண்ணன் சொன்னது…

//அவர் சிபிஐ விசாரணையைப் பரிந்துரைத்தது (உத்தரவிடவில்லை என்றே நினைக்கிறேன். அந்த அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை போலும்) கூட கண் துடைப்பு நாடகம் என்று தோன்றுகிறது. வழக்கமாக விசாரணை கமிஷன் அமைப்பார்கள்; இந்த முறை சிபிஐ விசாரணை என்று சொல்லியிருக்கிறார். நீங்கள் அவரை நீதி தவறாத மன்னன்; மகன் மேலேயே தேரினை ஏற்றி நீதியை நிலை நாட்டிய மன்னன் என்று புகழ்கிறீர்கள். :-) எல்லா நாடகமும் கண்டிருந்தும் ஏதோ ஒரு பாசம் கண்ணை மறைக்கிறது போலும். :-)
//

குமரன்,

அவர் சிபிஐ விசாரனைக்கு 'மனு' போட சொல்லி தலைமை செயலருக்கு ஆணை பிறப்பித்தாக சட்டமன்றத்தில் தெரிவித்து இருக்கிறார். இந்து ராம் உட்பட பலரும் வரவேற்று இருக்கின்றனர்.

Boston Bala சொன்னது…

சிபிஐ... நிலுவை... மேல் முறையீடு... எவனோ ஒருவன் போய் சரண்டர்...

அம்பை எய்து தூண்டி விட்ட தினகரன் & மாறன் சகோதரர்கள்; லாபம்: பத்திரிகை விற்பனை உயர்வு; நடுநிலை என்னும் பம்மாத்துப் பெயர்.

அம்பாக புறப்பட்டு பலரின் வாழ்க்கையை கொலை செய்து தன் பலத்தை நிரூபித்த மகன் அழகிரி; லாபம்: இருப்பை உணர்த்தல்; மேலிடத்துக்கு மிரட்டல்.

காவல்துறையை ஆளுங்கட்சி ஆதரவுடன் பயன்படுத்திய கழகம்; லாபம் - மத்திய அரசு மேல் பொறுப்பை ஒப்படைத்தல்; இமேஜ் பாதுகாத்தல்.

தொடர்புடைய என்னுடைய பதிவு: Three people murdered; 15 Lakhs to shutup; A feast to celebrate « Snap Judgment

தட்ஸ்தமிழ் செய்தி படித்தேன்... உங்க கருத்து என்ன? முதலமைச்சர் + கட்சித் தலைவரால் சொந்த ஆட்சியிலே இவ்வளவு செய்தால் போதுமானது என்று நினைக்கிறீர்களா?

பெயரில்லா சொன்னது…

GK Sir,
What happened to this Manuneedhi Chozhan when Ta.Kritinan was killed? What happened to Media rights when Dinamalar paper was attacked?

Regards
Karthik

கோவி.கண்ணன் சொன்னது…

//தட்ஸ்தமிழ் செய்தி படித்தேன்... உங்க கருத்து என்ன? முதலமைச்சர் + கட்சித் தலைவரால் சொந்த ஆட்சியிலே இவ்வளவு செய்தால் போதுமானது என்று நினைக்கிறீர்களா? //

பாபா,

ரவுடி(கள்) என் கவுண்டர் செய்யப்பட வேண்டும். மகேந்திரன் பதிவிலும் குறிப்பிட்டு இருக்கிறேன். அரசு நிதியில் இருந்து குடும்பத்தாரால் கொல்லப்படுவதற்கு நிதி கொடுப்பதும் கண்டிக்கத் தக்கதே !

Boston Bala சொன்னது…

இப்பத்தான் கிழுமத்தூர் பின்னூட்டம் பார்த்தேன் கோவி. நன்றி

Unknown சொன்னது…

இதுதான் காலம் காலமாக கலைஞருக்கு கிடைக்கும் பரிசு ஆயிரம் நன்மைகள் செய்தும் இதுபோன்ற சில புல்லுறுவிகளின் செயலால் மொத்த தி,மு.க வுக்கும் அவப் பெயர், இனி இந்த வழக்கு எந்த திசையில் சென்றாலும் அது கலைஞருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவே இருக்கும், உண்மை என்றும் வெல்லும், அது வெளியாகும் வரை மாறன்களும் விடப்போவதில்லை திமுகவும் விடப்போவதில்லை,

கலைஞருக்கு ஒரே ஆலோசனைதான் சொல்ல முடியும் இனியும் தாமதிக்காது அழகிரி போன்றவர்களியும் அதற்கு உடந்தையானவர்களையும் கட்சியில் இருந்து உண்மை என்ன வென்று தெரியும் வரை விலக்குதல் தேவைப்பட்டால் நிரந்தரமாக புற்று நோய் கொண்ட மார்பை வைத்துக்கொண்டு உயிரை விடுவதை விட அதை அறுத்து எறிந்துவிடலாம்

dondu(#11168674346665545885) சொன்னது…

//கலைஞருக்கு ஒரே ஆலோசனைதான் சொல்ல முடியும் இனியும் தாமதிக்காது அழகிரி போன்றவர்களியும் அதற்கு உடந்தையானவர்களையும் கட்சியில் இருந்து உண்மை என்ன வென்று தெரியும் வரை விலக்குதல்//
அப்பக்கூட அழகிரியை கைது செய்யணும்னு ஒரு வார்த்தை கூட இல்லை. நல்லாவே ஜல்லியடிக்கிறீர்கள் மகேந்திரன்.

அய்யா கோவி. கண்ணன், கைப்பூணுக்கு கண்ணாடியா? அழகிரியை அரெஸ்ட் செஞ்சு நாலு சாத்து சாத்தாம இது என்ன விளக்கெண்ணை செயல்பாடு. இவரெல்லாம் மனுநீதிச் சோழன்? நாடு விளங்கிடும்.

இந்த நேரத்தில பொன்விழா கருமாதியெல்லாம் தேவையா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் சொன்னது…

//அய்யா கோவி. கண்ணன், கைப்பூணுக்கு கண்ணாடியா? அழகிரியை அரெஸ்ட் செஞ்சு நாலு சாத்து சாத்தாம இது என்ன விளக்கெண்ணை செயல்பாடு. இவரெல்லாம் மனுநீதிச் சோழன்? நாடு விளங்கிடும்.

இந்த நேரத்தில பொன்விழா கருமாதியெல்லாம் தேவையா?

அன்புடன்,
டோண்டு ராகவன் //

மிஸ்டர் டோண்டு,

குற்றவாளி தண்டிக்கப் படவேண்டும்...தீர்மானமாக தெரியும் போது என்கவுண்டர் கூட செய்யலாம்...

50 ஆண்டுகால சட்டமன்ற செயல்பாடுகளுக்காக ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட விழா நடப்பதற்கும் இதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. வழக்கமான திராவிட வெறுப்பு ?

மழைவெள்ள நிவாரணம் என்ற பெயரில் 100 கணக்கானோரை பலிவாங்கிய அரசும், தனிப்பட்ட குளியலுக்காக 100 கணக்கானோர் நசுங்கி செத்த மகாமகக் குள ஜலக்கிரீடையும், எரிக்கப்பட்டு இறந்த தருமபுரி மாணவிகளும் ஏனோ நினைவுக்கு வருகின்றனர். அதில் தொடர்புடையவன் கட்சிக்காரன் என்ற காரணத்தினால் 5 ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடிக்கப்பட்ட வழக்கு இவையெல்லாம் கூட தங்கள் மேலான சகிப்புத்தன்மையால் பலர் மறந்துவிட்டதற்கு காரணம் ஜெ செல்லும் செலக்டீவ் அம்னீசியா நோய்பலரை பலநேரங்களில் பீடித்து இருப்பதும் தெரிகிறது.

எனிவே பின்னூட்டத்திற்கு நன்றி !

dondu(#11168674346665545885) சொன்னது…

//குற்றவாளி தண்டிக்கப் படவேண்டும்...தீர்மானமாக தெரியும் போது என்கவுண்டர் கூட செய்யலாம்...//
அழகிரிதான் குற்றவாளிங்கறதுக்கு இன்னும் எவ்வளவு தீர்மானமா தெரிய வேண்டும் கோவி கண்ணன் அவர்களே?

//என்ன கூத்து? பையன் போட்டு தள்ளுவானாம்... அப்பங்காரன் அரசாங்கப் பணத்தைக் கொடுப்பானாம்.
:(//
அப்படீன்னு ஒத்தர் சொல்லியிருக்காரே?

//அதில் தொடர்புடையவன் கட்சிக்காரன் என்ற காரணத்தினால் 5 ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடிக்கப்பட்ட வழக்கு..//
தர்மபுரி வழக்கில் தூக்குதண்டனை கொடுக்கப்பட்டதற்காக மகிழ்ச்சியடைந்து பின்னூட்டமிட்டவர்களில் நானும் ஒருவன். மகாமக குளத்து விபரீதத்துக்கு அக்கால ஜூவியில் எதிர்த்து நான் கடிதம் போட்டு அது பிரசுரமும் ஆனது.

அதே போல எழுபதுகளின் ஆரம்பத்துலே ஒருத்தருக்கு டாக்டர் பட்டம் கொடுத்த போது நடந்த கொலையையும் எதிர்த்து (டாக்டர் பட்டத்தை எதிர்த்து அல்ல) துக்ளக்குக்கு கடிதம் எழுதினேன்.

கருத்து கணிப்பு பிரச்சினை தனக்கு முன்னமேயே தெரியும் என்று இப்போது பேசுப்வதால் கலைஞர் என்ன சாதிக்க நினைக்கிறார்?

முந்தையப் பின்னூட்டத்தை வெளியிட்டதற்கும், இப்பின்னூட்டத்தை வெளியிடப் போவதற்கும் நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் [GK] சொன்னது…

//அப்படீன்னு ஒத்தர் சொல்லியிருக்காரே? //

அது எனது கருத்துமட்டுமே...நானோ வேறு எவரோ யாரையும் குற்றவாளி என்று முடிவு செய்துவிடமுடியாது.. அதற்காக நீதிமன்றமும், காவல் துறையும் இருக்கிறது.

சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி பலர் தப்பித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

//தர்மபுரி வழக்கில் தூக்குதண்டனை கொடுக்கப்பட்டதற்காக மகிழ்ச்சியடைந்து பின்னூட்டமிட்டவர்களில் நானும் ஒருவன். மகாமக குளத்து விபரீதத்துக்கு அக்கால ஜூவியில் எதிர்த்து நான் கடிதம் போட்டு அது பிரசுரமும் ஆனது//

அம்புக்கு எதிராக பலரும் பேசுவது இயல்பு...எய்தவனை எவர் நோகத்தயராக இருக்கிறார்கள் ?

மேலும் இதுபற்றி லாவனிகளை பேச நான் தயாராக இல்லை மிஸ்டர் டோண்டு

dondu(#11168674346665545885) சொன்னது…

//மேலும் இதுபற்றி லாவனிகளை பேச நான் தயாராக இல்லை மிஸ்டர் டோண்டு//
அதாவது உங்களுக்கு அசௌகரியமான உண்மைகளைக் கூறும் லாவணிகள் உங்களுக்கு பிரியம் இல்லை என்பதை கண்டு கொண்டேன்.

//அம்புக்கு எதிராக பலரும் பேசுவது இயல்பு...எய்தவனை எவர் நோகத்தயராக இருக்கிறார்கள்?//
மகாமகக் குளத்து விஷயத்திலும் அம்பைத்தான் நொந்தேனா? தருமபுரி விஷயத்தில் ஜயலலிதாவை அப்போதே உள்ளே போட்டு முட்டிக்கு முட்டி பெண்போலீஸை விட்டு தட்டச் செய்திருக்க வேண்டும் என்பது எனது கருத்து.

//அது எனது கருத்துமட்டுமே...//
தெரியுமே. உங்களுக்கு நினைவிருக்கான்னு பார்த்தேன். மகேந்திரனது பதிவில் நீங்கள் சீற, அவர் சமாதானப்படுத்த என்று நல்ல ஜோடிதான்.
//நானோ வேறு எவரோ யாரையும் குற்றவாளி என்று முடிவு செய்துவிடமுடியாது.. அதற்காக நீதிமன்றமும், காவல் துறையும் இருக்கிறது.//
எந்தக் காவல் துறை? மதுரையில் கைக்கட்டி வேடிக்கை பார்த்ததே அதுவா? அதற்கான அமைச்சர் யார் என்பதாவது நினைவிருக்கிறதா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் [GK] சொன்னது…

//dondu(#11168674346665545885) said...
அதாவது உங்களுக்கு அசௌகரியமான உண்மைகளைக் கூறும் லாவணிகள் உங்களுக்கு பிரியம் இல்லை என்பதை கண்டு கொண்டேன்.//

மிஸ்டர் டோண்டு அடுத்தவர்களின் கற்பனைக்கு எவரும் தடைபோட முடியாது.

//மகாமகக் குளத்து விஷயத்திலும் அம்பைத்தான் நொந்தேனா? தருமபுரி விஷயத்தில் ஜயலலிதாவை அப்போதே உள்ளே போட்டு முட்டிக்கு முட்டி பெண்போலீஸை விட்டு தட்டச் செய்திருக்க வேண்டும் என்பது எனது கருத்து. //

அம்பை நொந்தீர்களா, அம்மையை நொந்தீர்களா என்று ஜீவியில் எழுதிய உங்களுக்குத்தான் தெரியும். ஜெவுக்கு மூட்டு வழியாம்...முட்டியை விட்டுவிட்டு வேறு எங்காவது தட்ட சொல்லி இருக்கலாம்.

//எந்தக் காவல் துறை? மதுரையில் கைக்கட்டி வேடிக்கை பார்த்ததே அதுவா? அதற்கான அமைச்சர் யார் என்பதாவது நினைவிருக்கிறதா?

அன்புடன்,
டோண்டு ராகவன் //

இப்போது வழக்கை சிபிஐ வசம் கொடுக்கபோவதாக சொல்லி இருக்கிறார்கள்... சிபிஐயையும் போலிஸ் செய்கிற வேலையைத் தானே செய்கிறது... நான் அங்கு குறிப்பிட்டது சிபிஐ (போலிஸ்) பற்றிதான். தமிழ்நாடு போலிஸ் எப்பவும் ஆளுங்கட்சிக்கு ஜால்ரா என்பது சிறு குழந்தைக்கூட தெரிந்த சங்கதி. என்ன இருந்தாலும் அம்மாவுக்கு எதிராக போலிசார் ஆடும் ஆட்டத்தைப் பார்க்கையில் அய்யாவுக்கு எதிராக ஆடுவது மிகமிக குறைவுதான்.

கோவி.கண்ணன் [GK] சொன்னது…

//அம்மாவுக்கு எதிராக போலிசார் ஆடும் ஆட்டத்தைப்//

எதிராக என்றால் எதிர்த்து ஆடுவது அல்ல எதிரில் நின்று ஆடுவது :)

பெயரில்லா சொன்னது…

தவறு தவறுதான்.அதை ஒத்துண்டு சி.பி.ஐ லே போட்டுட்டா.நரசிம்மனே பாராட்டியாச்சோன்னா?அப்புறம் ஏண்டா அம்பிகளே போக்கிரித் தனம் பன்றேள்?
எவனுக்கு எல்லா பிள்ளைகளும் நல்ல பிள்ளைகள்?தினமலர் ஆத்துலே கோர்ட்டிலே நிக்குறா.செல்வி சொந்தக்கார சிநேகித அசிங்கங்கள் அசடு வழியறது.மஹா மஹச் சாவு,கல்லுரி பொன்பிள்ளைகள் சாவு அங்கே என்ன வாழ்ந்தது.
ரொம்ப ஆடாதேள் அப்புறம் எல்லா சங்கதியும் மோசமாத்தான் போவும்.

dondu(#11168674346665545885) சொன்னது…

//நான் அங்கு குறிப்பிட்டது சிபிஐ (போலீஸ்) பற்றிதான்.//
ஒரு சிறு டைவர்ஷனுக்கு மன்னிக்கவும் கோவி அவர்களே.

சமீபத்தில் 1959-ல் வெளியான கல்யாண பரிசு படத்தில் ஒரு காட்சி நினைவுக்கு வந்து விட்டது.

"சரோஜாவின் மாமா: மாப்பிள்ளை என்ன பண்றார்?
தங்கவேலு: போண்டா சாப்பிடறார்.
சரோஜா: மன்னார் அண்ட் கம்பெனியில் மேனேஜரா இருக்கார்.
சரோஜாவின் மாமா: மன்னார் அண்ட் கம்பெனிக்கு நாந்தானே மேனேஜர்?
தங்கவேலுவும் ஜெமினி கணேசனும் புறைக்கேறி திணறி பிறகு ஜெமினி கணேசன் கூறுகிறார்:
நாங்க ராஜமன்னார் அண்ட் கம்பெனி சார்."

அன்புடன்,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் [GK] சொன்னது…

//சமீபத்தில் 1959-ல் வெளியான கல்யாண பரிசு படத்தில் ஒரு காட்சி நினைவுக்கு வந்து விட்டது.
நாங்க ராஜமன்னார் அண்ட் கம்பெனி சார்."
//

மிஸ்டர் டோண்டு,

அவ்வளவு சமீபமாக ஏன் செல்ல வேண்டும்...மிக சமீபத்தில் ஒரு உதாரணத்தை அதாவது முரளி மனோகருக்கும், நாடக வித்தகர் ஆர் எஸ் மனோகருக்கும் எதாவது தொடர்பு இருக்கிறதா என்று சொல்லி இருந்தால் பளிச் என்று புரிந்திருக்கும்.

பெயரில்லா சொன்னது…

Tamilmanam should use this opportunity to stop publishing all articles about Religion, Politics and Arya / Thravida articles. People like us really want read articles and not posting like what have been posted in the past few months. Earlier i always asked my friends to visit Tamizmanan and after seeing the quality of posts been posted here, i'm really afraid to introduce this site to anyone. Please stop all these items and u bloggers have some talents which can be used for writing good blogs for our future generation.

With regrets

பெயரில்லா சொன்னது…

//Anonymous said...
Tamilmanam should use this opportunity to stop publishing all articles about Religion, Politics and Arya / Thravida articles. People like us really want read articles and not posting like what have been posted in the past few months. Earlier i always asked my friends to visit Tamizmanan and after seeing the quality of posts been posted here, i'm really afraid to introduce this site to anyone. Please stop all these items and u bloggers have some talents which can be used for writing good blogs for our future generation.

With regrets
//

பிரச்சனையே வேணாம் என்கிற நீ யெல்லாம் என்ன படிச்சு என்ன சாதிக்கப் போகிறாய். என்ன விவாதிக்கப் போகிறாய் ? பேசாமல் ஆனந்தவிகடன், குமுதம், கல்கி,ராணி முத்து, பாக்கிய வாங்கி ஓரமாக உட்கார்ந்து படிக்கவும்.

பெயரில்லா சொன்னது…

கோவீ அவர்களே,

இதுவே கோபாலபுர குடும்பப் பிறப்பு ஒன்று தற்செயலாக தினகரனில் இருந்து, அழகிரி குரூப்பின் அக்கிரமத்தால் மாண்டிருந்தால்... நடமாடும் நடைபிணங்களால் பொன்விழா நடத்த மனம் வருமா? இதுபோல அரசியல் செய்ய கூடி வருமா?

உங்களுக்கு வந்த ரோஷத்தை விட உடம்பெல்லாம் உரித்தெடுத்திருக்காது?

மனுநீதியாம் மண்ணாங்கட்டியாம்...த்தூ மானங்கெட்ட...

கோவித்துக் கொள்ள வேண்டாம்.. இறந்தவர்களின் வீட்டருகே போய் பாருங்கள். வந்து விழுகும் அர்ச்சனைகளை

பரம்ஸ்

VSK சொன்னது…

நான் படித்த கதையில், ஆராய்ச்சிமணி அடித்த பசுவைப் பின்தொடர்ந்து சென்று, கையுங்களவுமாய் மகனைப் பிடித்து, அதே தேர்க்காலில் கட்டியவன் தான் மனுநீதிச் சோழன் என இருக்கிறது!

சி.பி.ஐ. விசரனைக்கே மனுநீதிச்சோழன் ரேஞ்சுக்கு உயர்த்துவது கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லை, கோவியாரே!

கோவி.கண்ணன் [GK] சொன்னது…

//VSK said...
நான் படித்த கதையில், ஆராய்ச்சிமணி அடித்த பசுவைப் பின்தொடர்ந்து சென்று, கையுங்களவுமாய் மகனைப் பிடித்து, அதே தேர்க்காலில் கட்டியவன் தான் மனுநீதிச் சோழன் என இருக்கிறது!

சி.பி.ஐ. விசரனைக்கே மனுநீதிச்சோழன் ரேஞ்சுக்கு உயர்த்துவது கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லை, கோவியாரே!
//

கதை சரிதான்... கருணாநிதி அப்படி செய்தால் கூட அதற்கும் உள்நோக்கம் கற்பிப்பவர்கள் இருக்கின்றனர்...'சொந்தமகனையே பலியிட்டு .. வயசான காலத்தில் செல்வாக்கு தேடி...பதவி ஆசை விட்டுச்சா பார் என்று கேட்கவுமே செய்வர்'
:)

கோவி.கண்ணன் [GK] சொன்னது…

//Parama Pitha said...
கோவீ அவர்களே,

இதுவே கோபாலபுர குடும்பப் பிறப்பு ஒன்று தற்செயலாக தினகரனில் இருந்து, அழகிரி குரூப்பின் அக்கிரமத்தால் மாண்டிருந்தால்... நடமாடும் நடைபிணங்களால் பொன்விழா நடத்த மனம் வருமா? இதுபோல அரசியல் செய்ய கூடி வருமா?

உங்களுக்கு வந்த ரோஷத்தை விட உடம்பெல்லாம் உரித்தெடுத்திருக்காது?

மனுநீதியாம் மண்ணாங்கட்டியாம்...த்தூ மானங்கெட்ட...

கோவித்துக் கொள்ள வேண்டாம்.. இறந்தவர்களின் வீட்டருகே போய் பாருங்கள். வந்து விழுகும் அர்ச்சனைகளை

பரம்ஸ்

12:20 PM, May 11, 2007
//

பரம்ஸ்,

எழுவு விழுந்தாவது கருணாநிதியின் பொன்விழா நிற்காதா என்று ஏங்கியவர்களுக்கு மதுரை நிகழ்ச்சி அல்வா சாப்பிடுவது மாதிரி என்று சொன்னால் இல்லையென்றா சொல்லப் போகிறீர்கள்... உங்கள் ஆசையை வெளிப்படுத்தியதற்கு பாராட்டுக்கள் !

கோவி.கண்ணன் [GK] சொன்னது…

மிஸ்டர் டோண்டு,

வெளியில் உதாரணத்துக்கு செல்வானேன் என்பதற்காக மனோகர் & கோவைக் குறிப்பிட்டேன்.. அவரு ஆபாசமாக எழுதினாரா ? ஆடை இன்றி எழுதினாரா என்பதெல்லாம் இங்கு தேவை இல்லாத செய்தி ... எனவே தங்கள் பின்னூட்டத்தை வெளியிட இயலாமைக்கு எனக்கும் வருத்தம் உண்டு.

பெயரில்லா சொன்னது…

கோபால கிருஷ்ணுடு சாரை வால்டர் வெற்றிவேல் தேடுகிறார். அங்கே அனுப்பி வையுங்கள் கோவி.கண்ணன்.

Santhosh சொன்னது…

கண்ணன்,
சிபிஜ விசாரணைக்கு கோரிக்கை தானே வைத்து இருக்கிறார். நம்ம நாட்டில் இது மாதிரி எத்தணை விசாரணை கமிஷன், சிபிஜ விசாரணை நடந்து இருக்கு உருப்படியா ஏதாவது நடந்து இருக்கா. இது கூட தெரியாதா என்ன கலைஞருக்கு. இது எல்லாம் சும்மா கண்துடைப்பு. ஒரு பையன் முதல்வர், ஒரு பொண்ணு இலக்கிய அணியில், இன்னொரு பையன் மதுரை தாதா, பேரன் மத்திய அமைச்சர் அப்படிங்கிற பெயரில் டாடா போன்ற நிறுவனங்களின் தலைவர்களை மிரட்டும் மந்திரி, இன்னொரு பேரன் டிவி/கேபில் நிறுவனம் நடத்துகிறேன் அப்படின்னு உள்ளூர் ரவுடி. அப்புறம் கொள்ளு பேரன் நடிகர்களை மிரட்டி படம் தயாரிக்கும் பட அதிபர். அவங்களுக்கு பரிந்து கொண்டு ஒரு கூட்டம் அட அட இதை தான் சனநாயகம் அப்படின்னு சொல்லுறது.

பெயரில்லா சொன்னது…

தங்கவேலு உதாரணத்திலும் போண்டா தானா ? இந்த போண்டாவை விடவே மாட்டேளா டோண்டு அங்கிள் ?

சோம.இளங்கோவன்,
கவிஞர் & சரக்கு மாஸ்டர்,
விண்டோஸ் விஸ்டா மளிகை ஸ்டோர்,
நொச்சிக்குப்பம் X ரோடு,
வசந்தமாளிகைபுரம்.

Unknown சொன்னது…

//அப்பக்கூட அழகிரியை கைது செய்யணும்னு ஒரு வார்த்தை கூட இல்லை. நல்லாவே ஜல்லியடிக்கிறீர்கள் மகேந்திரன்.
//

டோண்டு அவர்களே?
நீங்க அடிக்காத ஜல்லியா நான் அடிக்கறேன் அரெஸ்டு பன்னக் கூடாதுன்னு நான் சொல்ற மாதிறியே சொல்றீங்க? ஓசோ சரியாத்தான் சொலியிருக்காரு "வார்த்தைகளில் தொங்கிக் கொண்டிருக்கிறது உலகம்"னு..... ஒரு மாசத்துக்கு முன்னடி நீங்க அடிச்ச ஜல்லிக்கு இது எவ்வளவோ மேலுங்க.....இன்னும் எழுதலாம் ஆனா ஜிகே அடிச்சி ஆடற இந்த நேரத்தில உங்களுக்கு பதில் சொல்லி நான் என்னோட "சுய பித்தலாட்டத்தை பிரதாபமா " மாத்திக்க விருப்பம் இல்லை நான் வரட்டுங்களா?

கோவி.கண்ணன் சொன்னது…

அனானி நண்பர்களே,

அனானி பின்னூட்டம் அனுமதித்திருப்பது ப்ளாக்கர் இல்லாத சிலர் பின்னூட்டுவதற்காகவே... அனானி பெயரில் பின்னூட்டம் என்ற பெயரில் வசை பின்னூட்டங்கள் இந்த பதிவு குறித்தும், மெல்லும் பின்னூட்டியவர்கள் சிலரைக் குறித்தும் வந்திருக்கிறது. அவற்றை வெளி இட எனக்கு விருப்பமில்லை. தயவு செய்து பதிவுக்கு தொடர்பில்லாதா அனானி பின்னூட்டங்களைப் போடாதீர்கள்.

dondu(#11168674346665545885) சொன்னது…

//தங்கவேலு உதாரணத்திலும் போண்டா தானா ? இந்த போண்டாவை விடவே மாட்டேளா டோண்டு அங்கிள்?//
அனானி மருமகனே, என்ன செய்யறது சமீபத்தில் 1959-லே ஸ்ரீதருக்கு 2007 வாக்கில் டோண்டு ராகவன் வரப்போகிறான்னு தெரியவில்லையே.

இந்தப் பின்னூட்டத்தையாவது போடுவீங்களா கோவி அவர்களே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்