பின்பற்றுபவர்கள்

4 மே, 2007

தமிழ்தான் இந்தியாவின் வேர் - ஜெயகாந்தன் !

இந்திய இலக்கியத்தின் வேர் தமிழகத்தில்தான் உள்ளது. இந்தியில் வருவது மட்டுமே இலக்கியம் அல்ல என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் கூறியுள்ளார்.

கவிஞர் மு.மேத்தாவுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. அவர் எழுதிய ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்ற கவிதைத் தொகுதிக்காக இந்த விருது கிடைத்துள்ளது.

இதையொட்டி மேத்தாவுக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. நர்மதா பதிப்பகம், திருமகள் பதிப்பகம், கவிதா பதிப்பகம், குமரன் பதிப்பகம் ஆகியவை இணைந்து இந்த பாராட்டு விழாவை நடத்தின.

இதில் ஞான பீட விருது பெற்ற ஜெயகாந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். வழக்கம் போல அணலும், ஆணித்தரமும் தெறிக்கப் பேசினார் ஜெயகாந்தன்.

இந்தி இலக்கியங்கள் மட்டுமே இந்திய இலக்கியங்கள் என்று கூறுவோர் வடக்கில் அதிகம் உள்ளனர். ஆனால் அது தவறு. இந்தியாவின் வேர் தெற்கில் தான் உள்ளது. குறிப்பாக தமிழத்தில்தான் உள்ளது.

இமய மலையையும், கங்கை நதியையும் தெற்கில் உள்ளவர்கள் போன்று யாரும் பாடியதில்லை. இவ்வளவு ஏன், இமயமலை அடிவாரத்தில் உள்ளவன் கூட அதைப் பற்றி கவிதை பாடி இருக்க மாட்டேன். ஆனால் நம் பாரதியோ மண்ணும் இமயமலை எங்கள் மாமலையே என்று பாடினான்.

சில விருதுகளால் பெறுபவர்களுக்கு பெருமை. சில நபர்களால் அந்த விருதிற்கு பெருமை. அப்படி விருதிற்கு பெருமை சேர்க்கக் கூடியவராக மேத்தா விளக்குகிறார்.

முன்பு நான், இவர்கள் எல்லாம் புதுக்கவிதை என்ற பேரில் அசட்டுத்தனம் செய்கிறார்கள் என்று கூறியதுண்டு. ஆனால் அக்கருத்தை இன்று நான் மாற்றிக் கொள்கிறேன்.

இங்கே நிறைய கவிஞர்கள் வந்துள்ளனர். எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் தமிழால் நாங்கள் இணைந்துள்ளோம் என்றார் ஜெயகாந்தன்.

நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வாலி, மு.மேத்தா எழுதிய நபிகள் நாயகத்தின் வரலாறு என்ற புதுக்கவிதை நூலை வாசித்த பின்பு தான், எனக்கு ஒரு உந்துதல் ஏற்பட்டு அவதார புருஷன் என்று ராமபிரானை பற்றி புதுக்கவிதை வடிவில் எழுதினேன் என்றார்.

கவிஞர்கள் முத்துலிங்கம், சிற்பி, பாலா, பழனிபாரதி, பா.விஜய் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

'தமிழர்கள் தங்களுக்கு தானே நக்கிக் கொள்ளும் நாய்கள்' - பொன் மொழி புகழ் ஜெயகாந்தனுக்கு ஞானம் கிடைத்து இருக்கிறது. இன்னும் தமிழ் நாட்டில் பலருக்கும் கிடைக்கனும் !

6 கருத்துகள்:

jeevagv சொன்னது…

எழுத்துப்பிழைகளை சரிசெய்வதில் கொஞ்சம் கவனம் செலுத்தலாமே கோவியாரே?

Thamizhan சொன்னது…

சில சமயங்களில் சில உந்துத்லில் உளறிவிடுவார்.சில மனிதர்களின் அருகே இருப்பதுங் காரணமாக இருந்திருக்கலாம்.
அதையெல்லாம் நினைத்துத்தான் கலைஞரும் இவருக்கு முரசொலி விருது கொடுத்து மன்னித்திருக்கிறார்.

இனி தமிழுணர்வுடன் இருந்தால் சரி.

சதுக்க பூதம் சொன்னது…

If the meeting is organised by Iyer, then he will tell Sanskrit is the greatest language and tamil is not an ancient one.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜீவா (Jeeva Venkataraman) said...
எழுத்துப்பிழைகளை சரிசெய்வதில் கொஞ்சம் கவனம் செலுத்தலாமே கோவியாரே?
//

ஜீவ்...தட்ஸ்தமிழ் செய்தி இது அப்படியே போட்டேன்...என்னுடைய கட்டுரைகளிலும் எழுத்துப்பிழை இருக்கவே செய்கிறது. கவனக்குறைவும், தவறான ஊகமாகவும் இது நடந்துவிடுகிறது.

எவ்வளவு பிழை இருக்கிறதோ அவ்வளவு .....
:))))) நாகேஷ் வசனம் - திருவிளையாடல் படம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Thamizhan said...
சில சமயங்களில் சில உந்துத்லில் உளறிவிடுவார்.சில மனிதர்களின் அருகே இருப்பதுங் காரணமாக இருந்திருக்கலாம்.
அதையெல்லாம் நினைத்துத்தான் கலைஞரும் இவருக்கு முரசொலி விருது கொடுத்து மன்னித்திருக்கிறார்.

இனி தமிழுணர்வுடன் இருந்தால் சரி.
//

அறிவு ஜீவியாக இருப்பவர்களில் மிகச் சிலர் தாந்தோன்றித் தனமாக சில சமயங்களில் பேசிவிடுவதுண்டு. இப்பொழுதாவது உணர்வுடன் நடந்து கொள்கிறாரே - பாராட்டுவோம்

கோவி.கண்ணன் சொன்னது…

//சதுக்க பூதம் said...
If the meeting is organised by Iyer, then he will tell Sanskrit is the greatest language and tamil is not an ancient one.
//

சாகித்ய அகடாமி விருது வாங்கும் போது இந்திய அளவில் புகழ்பெற முன்பு அப்படி தூற்றினாரோ !
:(

சதுக்க பூதம் அவர்களே நன்றி !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்