பின்பற்றுபவர்கள்

25 மே, 2007

வாஜ்பேயி மற்றும் அடுத்த ஜனாதிபதி பற்றி...

அடுத்த ஜனாதிபதி யார் என்று கேள்வி எழும் போது வாஜ்பேயின் பெயரும் அடிபட்டு இருக்கிறது.

சோபனா ரவி ? நிர்மலா பெரியசாமி ? - வாஜ்'பேயி' ன்னு அழுத்தமாக செய்திகளில் சொல்லுவாங்க :) அவர் பேயெல்லாம் இல்லை. முன்னால் பிரதமர் என்பதில் மதிப்பும் மரியாதையும் இருக்கிறது.

அவருக்கு அப்படி ஒரு ஆசை இருக்கிறதா என்று தெரியவில்லை ? பிஜேபி கூட்டனி கட்சியினர் அவரை வழிமொழிகிறார்கள்ள். பிரதமராக சில ஆண்டுகள் அவர் இருந்தாகிவிட்டது. ஏற்கனவே முட்டுவலி, முழங்கால் ஆபரேசன் என தளர்வாக இருக்கிறார் என்ற உடலியல் காரணங்களை ஏன் இவர் கருத்தில் கொள்ள வில்லை ?

வாஜ்பாய் பாஜகவை சேர்ந்தவர், மிதவாத இந்துத்துவாவாதி என்று மதச் சார்ர்பு உடையவர். ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுபவர் ஒரு மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் மதவாதிகளாக இருப்பது அந்தபதவிக்கு ஏற்றதல்ல என நினைக்கிறேன். ஏனென்றால் எதைச் செய்தாலும் விமர்சனம் வரும்.

தேசிய அளவில் ஆன பிஜேபி கட்சியில் வாஜ்பாயிக்கு மாற்று என்று சொல்லக் கூடிய அளவுக்கு மிதவாதிகள் இல்லை என்பதைத்தான் அவர்கள் வாஜ்பாயை முன்னிறுத்துவது காட்டுகிறது.

ஜனாதிபதி பதவி நாட்டின் உயரிய பதவி அந்த பதவியை அடைய ஏற்கனவே இருந்தவர் மீண்டும் நல்லவர், வல்லவர் என்பதற்காக மீண்டும் அவர்களையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொல்லும் கோரிக்கையை வைப்பவர்கள் சற்றும் யோசிப்பதே இல்லை. முன்பு கே.ஆர்.நாராயணன் மீண்டும் வரவேண்டும் என்றார்கள், இன்று பலர் அப்துல் கலாம் மீண்டும் வரவேண்டும் என்கிறார்கள். இப்படி சொல்பவர்களிடம் நான் கேட்க விரும்புவது,

மான்புமிகு கலாம் மிகச்சிறப்பாக தன் பணியை செய்திருக்கிறார் என்று பாராட்டலாம். அதில் எவருக்கும் மாற்று கருத்து இல்லை.

100 கோடி இந்தியர்களில் அந்த பதவியை அடைய தகுதியானவர்கள் எவருமே இல்லையா ? உயர்பதவி என்றாலும் அதில் அவர்களுக்கு கிடைக்கும் அதே போன்று மதிப்பும் மரியாதையும் மற்றோரு இந்தியனுக்கு கிடைக்க வேண்டாமா ? ஏற்கனவே இருந்தவர்களே மீண்டும் வரும் போது அப்படி ஒரு நல் வாய்ப்பு எவரோ ஒரு நல்ல இந்தியனுக்கு மறுக்கப்படுவதாக நினைக்கிறேன். அதாவது கேஆர்நாராயணனே மீண்டும் வந்திருந்தால் அப்துல் கலாமுக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது. நற்செயல்பாடுகளால் அவர்களே மீண்டும் வரவேண்டும் என்று சொல்பவர்கள் யோசிக்க வேண்டும்.


கருத்து ?

10 கருத்துகள்:

குமரன் (Kumaran) சொன்னது…

புதியவர்கள் வந்தால் நல்லது தான். கருத்துடன் ஒத்துப் போகிறேன்.

வாஜ்பேயி? ஹும் சிந்திக்க வேண்டும். நல்ல தலைவர் தான் ஆனால் விமரிசனத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் (Kumaran) said...
புதியவர்கள் வந்தால் நல்லது தான். கருத்துடன் ஒத்துப் போகிறேன்.

வாஜ்பேயி? ஹும் சிந்திக்க வேண்டும். நல்ல தலைவர் தான் ஆனால் விமரிசனத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லை.
//

குமரன்,

இன்றைக்கு கோகுலாஷ்டமியா ??

கால்பட்டதற்கும் கருத்துக்கும் நான் புன்னியம் செய்திருக்க வேண்டும்.

ஒத்த கருத்து நன்றி !

Unknown சொன்னது…

வாஜ்பேயி? நல்ல காமெடி ஒருவேளை விஜயகாந்த் ஆதரவு கொடுத்தா வரலாம் :)

Unknown சொன்னது…

வாஜ்பேயி? நல்ல காமெடி ஒருவேளை விஜயகாந்த் ஆதரவு கொடுத்தா வரலாம் :)

Adirai Media சொன்னது…

அதுவும் சரிதான். நீங்களோ நானோ இப் பதவிக்கு போட்டி இட முடியுமா? அப்துல்கலாம் போன்ற விஞ்ஞானிகளை இது போன்ற பதவிகளில் போட்டு அவரது விஞ்ஞான சேவையை இந்த நாடு இழந்துக்கொண்டிருக்கிறது என்னை பொறுத்த வரையில் இப்பதவிக்கு வருபவர்கள் அப்துல் கலாம் மாதிரி எந்த அரசியல் கட்ச்சியையும் சாராதவராக இருக்க வேண்டும் அப்பொழுதுதான் இப்பதவிக்கு பெருமை.

Unknown சொன்னது…

Indian President should be like wife of Ceser, Beyond doubt, comment, and remark

வாசகன் சொன்னது…

ஜி.கே ஐயா,

வரவிருக்கும் முதன்மை குடிமகன்
...அப்துல்கலாமை ப் போல அரசியலுக்குப் புதியவராக இருந்தால் நல்லது.

....அப்துல்கலாமைப் போல கட்சி, இன பரிவுகளுக்கும் காழ்ப்புக்கும் அப்பாற்பட்டவராயிருத்தல் அதனினும் நல்லது.

எனினும், அப்துல்கலாம் போன்ற துறை வல்லுநர்களை கு.தலைவராக்குவதால் நாடு பெருமையடைந்தாலும் அந்த குறிப்பிட்ட துறையில் அது இழப்பாகத்தான் அமையும்.

அதாவது, அப்துல் கலாமை 'முஸ்லிம்' தாஜாவுக்காக கு.தலைவராக்கிய பாஜக, அதன் மூலம் ஒரு எழுதுகோலை கைகளுக்குத்தராமல், கோட் பாக்கெட்டில் 'அழகுற' மாட்டி வைத்த அவலத்தை செய்தது எனலாம்

கோவி.கண்ணன் சொன்னது…

//மகேந்திரன்.பெ said...
வாஜ்பேயி? நல்ல காமெடி ஒருவேளை விஜயகாந்த் ஆதரவு கொடுத்தா வரலாம் :)
//

விஜயகாந்த் ஆதரவு சரி கொடுத்தாவராலாமா ? இது என்ன காஷ்மீர் சண்டையா ? விஜயகாந்த் வாஜ்பாயை காப்பாத்துவார் என்பதற்கு ?

மகி உங்க கூட டமாசு !

கோவி.கண்ணன் சொன்னது…

//அதிரை புதியவன் said...
அதுவும் சரிதான். நீங்களோ நானோ இப் பதவிக்கு போட்டி இட முடியுமா? அப்துல்கலாம் போன்ற விஞ்ஞானிகளை இது போன்ற பதவிகளில் போட்டு அவரது விஞ்ஞான சேவையை இந்த நாடு இழந்துக்கொண்டிருக்கிறது என்னை பொறுத்த வரையில் இப்பதவிக்கு வருபவர்கள் அப்துல் கலாம் மாதிரி எந்த அரசியல் கட்ச்சியையும் சாராதவராக இருக்க வேண்டும் அப்பொழுதுதான் இப்பதவிக்கு பெருமை.
//

கலாமுக்கு வயசாகிவிட்டது அவருக்கும் ஓய்வு தேவை. விஞ்ஞானியாக சிறப்பாக செயல்பட்டதற்குத்தான் அவருக்கு ஜனதிபதிபதிவி கிடைத்தது என்றாலும் அவர் அந்த பதவிக்கு தகுதியானவரே.

கோவி.கண்ணன் சொன்னது…

//Saravanaraj said...
Indian President should be like wife of Ceser, Beyond doubt, comment, and remark
//

Saravanaraj,
நம்ம முன்னாள் ஜனாதிபதி ஆர்வி மாதிரி சுத்தமானவராக இருக்கனும் னு சொல்லுறிங்க - புரியுது

நன்றி

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்