பின்பற்றுபவர்கள்

30 மே, 2007

இடஒதுக்கீடும், தேசிய'வாத' ஜல்லிகளும் !

இடஒதுக்கீடு - என்பது நடைமுறையில் இருப்பது ஒன்று. இடஒதுக்கீடு இருப்பதால் தான் பாதிக்கப்படாவிட்டாலும் தான் சார்ந்துள்ள சமூகம் பாதிக்கப்பட்டுவிடும் என்பதற்காக சிலர் திடீர் தேசிய வாதிகள் ஆகுகிறார்கள்.

எப்படி ?

அதாவது இட ஒதுக்கீடு அடிப்படையில் படித்து வந்தால் அவர்கள் வேலைக்குச் செல்லும் போது திறமை அவ்வளாக இருக்காது, வேலையில் சோபிக்க மாட்டார்கள், உற்பத்தி திறன் குறையும், இந்திய பொருளாதாரம் சரியும், இந்தியா ஏழை நாடாகவே இருக்கும். :)) - என்ற குற்றச் சாட்டுகளைச் சொல்கிறார்கள். எதோ இதெல்லாம் இல்லாதபோது சுபிக்ஷ்மாக இருந்தது போலவும் இப்பொழுது நலிந்துவிட்டது போலவும் ஒரு தோற்றத்தை உருவாக்க முயல்கிறார்கள். முயற்சி தானே செய்யட்டுமே ! :)

எனது கல்லூரியில் பிற்பட்ட பிரிவில் இருந்து இடம் கிடைத்து படித்தவர்தான் கோல்ட் மெடல் வாங்கினார். பள்ளியில் படிக்கும் கிடைக்கும் படிப்பில் மதிபெண்கள் தகுதியை நிர்ணயம் செய்துவிட முடியுமா ? வேலைக்குச் செல்லும் போது நேரடித் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களும் போட்டி போட்டுதானே வருகிறார்கள் ? பெண்களைவிட ஆண்கள் குறைந்த மதிப்பெண் பெற்றுவருகிறார்கள், தேர்வு விகிதமும் குறைவு. அதனால் ஆண்களின் வேலை திறமை குறைந்து போய்விட்டதா ?

இட ஒதுக்கீடு சாதி அடிப்படையில் இருக்கக் கூடாதாம், சாதி எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டது என்று விளக்கினால் நன்றாக இருக்கும். பழமை வாதம் பேசாதே ! ன்னு கொஞ்சம் சத்தமாக சொல்லுறாங்க. சரி...? மதம் மாறுவது போல் தங்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்று அழைத்துக் கொள்ள எந்த உயர்ந்த சமூகம் தயாராக இருக்கிறது?..முனிசிபல் கொசுமருந்து இயந்திரத்தை எங்களுக்கும் கொடுங்க, நாங்களும் தோலில் மாட்டிக் கொண்டு கொசுமருந்து அடிக்கிறோம் என்று சொல்லத்தயாராக இருக்கிறார்களா ? அப்போது பொருளாதாரவாதிகள் ஆகிவிடுகிறார்கள்ள். யார் யார் டேபிள் துடைக்கிறார்கள், யார் யார் சமையல் செய்கிறார்கள் என்று ஒரு லிஸ்டை காட்டி பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்கிறார்கள்.

50 ரூபாய்க்கு 500 ரூபாய் மாதவருமானம் என்று சான்றிதழ் கிடைக்காதா ? இதுபோல் ஆண்டாண்டு காலமாக ஆண்டைகளுக்கு அடிமையாக இருந்த சமூகம் எழுவுதற்கு கொஞ்சம் கொடுத்தால் என்ன ? உயர்ந்த சமூகமாகவும் மற்றவர்களை தாழ்ந்த சமூகமாகவும் காலடிக்கு கீழ் அறிவித்து வைத்திருந்த பாட்டன் சொத்தில் மட்டும் உரிமை வேண்டும்...பாட்டன் சேர்த்துவைத்த பாவத்தில் பங்கு வேண்டாமோ ? வசதி படைத்த உயர்ந்த சமூகமே தங்கள் சாதியில் வசதி குறைந்து உள்ளவர்களுக்கு இலவசமாக எல்லாமும் கொடுக்க வேண்டியதுதானே யார் தடுக்கப் போகிறார்கள் ? இதைவிட சாதி சங்களால் உருப்படியாக வேறெதும் செய்ய முடியாது!

என்னைக் கேட்டால் அனைத்து சாதிகளுக்கும் இட ஒதுக்கீடு கட்டாயமாக்கப் படவேண்டும் என்று சொல்வேன். அதாவது மொத்தம் 100% இடம் இருந்தால் சாதிகளுக்கு இருக்கும் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு இட ஒதுக்கீடு வழங்கலாம். அப்போதுதான் எல்லோரும் எல்லாமும் பெறலாம். ஒட்டுமொத்த கொள்ளையை சாதிப்பற்றுள்ள மேலதிகாரிகள் மூலம் சாதித்துக் கொள்வதை தடுக்க முடியும். தேசிய வாதிகள் ஸிந்திப்பார்களா ? தன் சமூகம் பாதிக்கபடுவதாக உணர்ந்தாலே போதும் எல்லோரும் தேசியவாதிகள் தான். அங்கு பேசப்படுவதும் தேஸ நலன்தான்.

சொல்லுங்க! சொல்லுங்க !! கேட்டுக் கொள்கிறோம் !!!

32 கருத்துகள்:

மருதநாயகம் சொன்னது…

//பெண்களைவிட ஆண்கள் குறைந்த மதிப்பெண் பெற்றுவருகிறார்கள், தேர்வு விகிதமும் குறைவு. அதனால் ஆண்களின் வேலை திறமை குறைந்து போய்விட்டதா ?
//

உட்கார்ந்து யோசிப்பீங்களோ?

கோவி.கண்ணன் சொன்னது…

//மருதநாயகம் said...
உட்கார்ந்து யோசிப்பீங்களோ?//

ஆமாம் !

ஆனால் எங்கே என்று கேட்கக்கூடாது !

இடக்கரடக்கல் !
:)

பெயரில்லா சொன்னது…

//ஆமாம் !

ஆனால் எங்கே என்று கேட்கக்கூடாது !//

ஜிகே அய்யா,

நீங்க எங்கேன்னு சொல்லலைன்னாக்க கூட,என்னைப் போன்ற உங்களின் உண்மையான தொண்டனுக்கு தெரியாதா என்ன?

பாலா

பெயரில்லா சொன்னது…

ஜிகே அய்யா,

நீங்க இப்படி சொல்றீங்க.ஆனா, சிலர்,இட ஒதுக்கீடும்,சாதி வெறி பிடித்து அலையும் ஆதிக்க சக்திகளான,க்ரீமி லேயர் ஓ பி சி அயோக்யத்தனமும்னு சொல்றாங்களே'அதுக்கு நாம என்ன பதில் செம்மையா சொல்லலாம்னு விளக்குங்கய்யா.உதாரணத்துக்கு, நீங்க கூட இப்படி உழைக்காம,எல்லா வசதிகள் இருந்தும்,இட ஒதுக்கீட்டின் மூலம் ஓசியில் பயனடையத் துடிக்கும் ஒரு டிபிகல் க்ரீமி லேயர் ஓ பி சி தான்னு சொல்றாங்களே.அதான் மனசுக்கு கஷ்டமா இருக்கு.

பாலா

பெயரில்லா சொன்னது…

//50 ரூபாய்க்கு 500 ரூபாய் மாதவருமானம் என்று சான்றிதழ் கிடைக்காதா ?//

நீங்க சொல்வது போல ஒரு ஐந்நூறோஆயிரமோ கொடுத்து பிசி, எம்பிசி,எச்சி, எச்டி சர்டிபிகடெ வாங்கிட முடியாதா, அங்க இங்க மோசடி நடக்கத்தான் செய்யும் அதுக்காக திட்டமே வேனாம்னு சொல்வது நீங்கள் குற்றம் சொல்லும் இந்த மனநிலையின் எதிர்.
அதாவது
//தான் பாதிக்கப்படாவிட்டாலும் தான் சார்ந்துள்ள சமூகம் பாதிக்கப்பட்டுவிடும் //
இதன் எதிர்

என் சமூகம் பாதிக்கபட்டாலும் பரவயில்லை என் மகனுக்கு சலுகை கிடைக்க வேண்டும், மாற்று சாதி ஏழைக்கு எந்த சலுகையும் கிடைத்து முன்னேறி விடக்கூடாது. என்கிற மனநிலை
---

//அதாவது மொத்தம் 100% இடம் இருந்தால் சாதிகளுக்கு இருக்கும் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு இட ஒதுக்கீடு வழங்கலாம்//

---

ஒவ்வொரு சாதியும் போட்டி போட்டு மக்கள் தொகையை பெருக்கத்தான் இது வழி வகை செய்யும்.

----


அனைவருக்கும் திறனுக்கேற்ற (திறமை இல்லை aptitiude)விரும்பிய கல்வி ந்யாயமான கட்டணத்தில் தந்தாலே போதும்.
திறனுகேற்ற கல்வியை கற்பவனுக்கு தானாக வேலை கிடைக்கும்.

இது தான் தீர்வு, ஆனால் இதனை யாரும் செய்ய மாட்டார்கள், முயற்சி கூட மேற்கொள்ளாமாட்டார்கள்.

இரா.சுகுமாரன் சொன்னது…

வகுப்பு வாரி இட ஒதுக்கீட்டைத்தான் பெரியார் முன் வைத்தார். இதுதான் சரியான தீர்வு.

பிற்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு வேண்டும் என்று தான் கேட்கிறார்கள். அதில் அவர்களுக்குள் என்ன வகையான ஒதுக்கீடு வேண்டும் என்பதை பிற்படுத்தப்பட்டவர்கள் முடிவு செய்யப்பட வேண்டிய ஒன்று.

பொதுப்பிரிவில் பணக்கார பார்ப்பனர்கள் ஏழைப் பார்ப்பனர்களுக்கு இடங்களை விட்டுக் கொடுத்துவிட்டு அவர்களுக்குள் ஏன் பொருளாதார அளவுகோல்களை பின்பற்றுவதில்லை? அத்தகைய கோரிக்கைகளைக்கூட ஏன் எந்தப் பார்ப்பனர்களளும் வைப்பதில்லை?.
வசதி படைத்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று இவர்கள் பேசுவது ஏமாற்று வேலை.

இதில் தான் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//மஸ்கிட்டோ மணி said...
நீங்க சொல்வது போல ஒரு ஐந்நூறோஆயிரமோ கொடுத்து பிசி, எம்பிசி,எச்சி, எச்டி சர்டிபிகடெ வாங்கிட முடியாதா, அங்க இங்க மோசடி நடக்கத்தான் செய்யும் அதுக்காக திட்டமே வேனாம்னு சொல்வது நீங்கள் குற்றம் சொல்லும் இந்த மனநிலையின் எதிர். //

சாதி சான்றிதழில் போர்ஜரி பண்ணவே முடியாது அப்படி பண்ணினால் விஏஓ விலிருந்து தாசில்தார் வரைக்கும் மாட்டுவாங்க. :)))
கிறித்துவ தலித் இந்து தலித் என்று கூட வாங்க முடியுதுங்க.

//
என் சமூகம் பாதிக்கபட்டாலும் பரவயில்லை என் மகனுக்கு சலுகை கிடைக்க வேண்டும், மாற்று சாதி ஏழைக்கு எந்த சலுகையும் கிடைத்து முன்னேறி விடக்கூடாது. என்கிற மனநிலை//

மகனும் சமூகத்தில் தானே இருக்கான் ? மாற்று சாதி ஏழைகளை அந்த சாதியில் முன்னேறியவர்கள் ஏன் ஏற்றிவிடக் கூடாது ?


//
ஒவ்வொரு சாதியும் போட்டி போட்டு மக்கள் தொகையை பெருக்கத்தான் இது வழி வகை செய்யும். //

போட்டி போட்டுக் கொண்டு பெருக்கலாம் ஆனால் சோறு யாரு போடுவது. யாரும் 2க்கு மேல் போறதில்லிங்கோ !
:)

//அனைவருக்கும் திறனுக்கேற்ற (திறமை இல்லை aptitiude)விரும்பிய கல்வி ந்யாயமான கட்டணத்தில் தந்தாலே போதும்.
திறனுகேற்ற கல்வியை கற்பவனுக்கு தானாக வேலை கிடைக்கும்.

இது தான் தீர்வு, ஆனால் இதனை யாரும் செய்ய மாட்டார்கள், முயற்சி கூட மேற்கொள்ளாமாட்டார்கள்.
//

திறனுக்கு ஏற்ற வேலை ? படிக்கும் நேரம் போக வேலை செய்தால் படிக்க முடியும் என இருப்பவனையும், படிப்பது மட்டுமே வேலையாக இருப்பவனின் திறணையும் எடைபோடனுமா ?

நல்ல நியாயம். மனுநீதி !

கோவி.கண்ணன் சொன்னது…

//இரா.சுகுமாரன் said...
வகுப்பு வாரி இட ஒதுக்கீட்டைத்தான் பெரியார் முன் வைத்தார். இதுதான் சரியான தீர்வு.

பிற்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு வேண்டும் என்று தான் கேட்கிறார்கள். அதில் அவர்களுக்குள் என்ன வகையான ஒதுக்கீடு வேண்டும் என்பதை பிற்படுத்தப்பட்டவர்கள் முடிவு செய்யப்பட வேண்டிய ஒன்று.

பொதுப்பிரிவில் பணக்கார பார்ப்பனர்கள் ஏழைப் பார்ப்பனர்களுக்கு இடங்களை விட்டுக் கொடுத்துவிட்டு அவர்களுக்குள் ஏன் பொருளாதார அளவுகோல்களை பின்பற்றுவதில்லை? அத்தகைய கோரிக்கைகளைக்கூட ஏன் எந்தப் பார்ப்பனர்களளும் வைப்பதில்லை?.
வசதி படைத்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று இவர்கள் பேசுவது ஏமாற்று வேலை.

இதில் தான் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
//


தெளிவான கருத்துக்கள் !

நன்றி சுகுமாரன் ஐயா !

பெயரில்லா சொன்னது…

//சாதி சான்றிதழில் போர்ஜரி பண்ணவே முடியாது அப்படி பண்ணினால் விஏஓ விலிருந்து தாசில்தார் வரைக்கும் மாட்டுவாங்க. :)))
//

அப்ப்டீங்களா, நம்பிட்டேனுங்க, இந்தியாவில தாசில்தார் ,விஏஓ எல்லாம் ரொம்ப நேர்மையானவங்க.

//கிறித்துவ தலித் இந்து தலித் என்று கூட வாங்க முடியுதுங்க//
அப்படி வாங்கிய நெறய பேர எனக்கே தெரியுமுங்க.
இந்தியாவுல மோசடி பண்றது ஒரு பெரிய விஷயமே இல்லீங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்ப்டீங்களா, நம்பிட்டேனுங்க, இந்தியாவில தாசில்தார் ,விஏஓ எல்லாம் ரொம்ப நேர்மையானவங்க.//

உங்களுக்கு இதுபற்றி தெரியலை என்றால் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். நான் சொல்வதை நம்ம சொல்லவில்லை.

//அப்படி வாங்கிய நெறய பேர எனக்கே தெரியுமுங்க.
இந்தியாவுல மோசடி பண்றது ஒரு பெரிய விஷயமே இல்லீங்க.//

உங்களுக்கு தெரிந்தது தலித் கிறித்துவர்களுக்கு தெரியாது போனதால் இடஒதுக்கீடு கேட்டு போராடுறாங்க...உங்களுக்கு தெரிந்த பிராடு தாசில் தாருக்கிட்ட போய் சாதி மாற்று சான்றிதழ் வாங்கு வதற்கு அவங்களுக்கு நீங்க உதவலாமே.

பெயரில்லா சொன்னது…

//தெளிவான கருத்துக்கள் !

நன்றி சுகுமாரன் ஐயா//


ஜிகே அய்யா,

ஆமாங்கய்யா.நீங்களும்,சுகுமாரன் அய்யாவும், ஜாதி வெறி பிடித்து,வசதி இருந்தும் உழைக்காமல் ஓசி அடிக்கத்துடிக்கும் டிபிகல் க்ரீமி லேயர் ஒ பி சி கும்பல் என்பது தெளிவாகத் தெரிகிறது.

பாலா

பெயரில்லா சொன்னது…

//உங்களுக்கு இதுபற்றி தெரியலை என்றால் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். நான் சொல்வதை நம்ம சொல்லவில்லை.//

எனக்கு தெரிஞ்ச ஒரு யாதவ (சாதி பெயரை வெளியிடுவது உங்கள் இஷ்டம் வேணும்னா xxx போட்டுகோங்க) ஆட்டோ டிரைவர் தன்னோட பொண்ணுக்கு எஸ் சீ சர்டிபிகாடெ வாங்கி அப்பறம் சீட் வாங்கினாருங்க , படிச்சு முடிச்சு இப்போ வேலைக்கும் போயாச்சுங்க அந்த பொண்ணு, இதெல்லாம் சகஜமுங்க

//உங்களுக்கு தெரிந்தது தலித் கிறித்துவர்களுக்கு தெரியாது போனதால் இடஒதுக்கீடு கேட்டு போராடுறாங்க...உங்களுக்கு தெரிந்த பிராடு தாசில் தாருக்கிட்ட போய் சாதி மாற்று சான்றிதழ் வாங்கு வதற்கு அவங்களுக்கு நீங்க உதவலாமே.
//

நிறைய பேர் நேர்மையா சலுகை கிடைக்க போராடராங்க , சில பேர் குறுக்கு வழில போறாங்க. நான் என்ன பண்ண முடியும்? பொய் சர்டிபிகடெ வாங்கினவனுங்க மேல எல்லம் போலிஸுல புகார் கொடுக்க சொல்றிங்களா? நான் உயிரோட இருக்க வேணாமா?


எப்படி வருமான சான்றிதழ் லஞ்சம் கொடுத்து வாங்கறது சுலபமோ அதே போல டூப்பு சாதி சான்றிதழ் வாங்கறது கூட சுலபம் தாங்க. மொத்தல இத தானுங்க நான் சொல்ல வந்தது.

மோசடி நடக்கலாம் அப்படீன்னு சொல்லி திட்டத்தையே ஃபனால் ஆக்க கூடாதுங்க, 100 பயனாளிங்க இருந்தா 10 புல்லுறுவிங்க இருக்கதானுங்க செய்வாங்க.

இரா.சுகுமாரன் சொன்னது…

//மஸ்கிட்டோ மணி said...

நீங்க சொல்வது போல ஒரு ஐந்நூறோ ஆயிரமோ கொடுத்து பிசி, எம்பிசி,எச்சி, எச்டி சர்டிபிகடெ வாங்கிட முடியாதா, அங்க இங்க மோசடி நடக்கத்தான் செய்யும்//

உச்ச அநீதிமன்றத்தில் அடிக்கடி தடைபோட்டு மோசடி செய்வது போல இது ஒரு வகை மோசடி.

இதுவும் நடக்கும் அதனாலேயும் தான் இந்த பொருளாதார அளவு கோல் வேண்டாம் என்கிறோம்.

இரா.சுகுமாரன் சொன்னது…

மஸ்கிட்டோ மணி அவர்களே!

////அதாவது மொத்தம் 100% இடம் இருந்தால் சாதிகளுக்கு இருக்கும் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு இட ஒதுக்கீடு வழங்கலாம்//

---

ஒவ்வொரு சாதியும் போட்டி போட்டு மக்கள் தொகையை பெருக்கத்தான் இது வழி வகை செய்யும்.////

ஆகா என்ன கண்டுபிடிப்பு இடஒதுக்கீடு வாங்குவதற்காக தனது குடும்ப எண்ணிக்கையை உயர்த்துவதாக என்ன கற்பனை.

உங்களுக்கு என்ன பரிசு தரலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

குழப்ப வேண்டாம் நண்பரே.

பெயரில்லா சொன்னது…

பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்பதே மோசடி. கோடி ரூபாய் சம்பாதிப்பவர்கள், கல்லூரி நடத்துபவர்கள், ஐஏஸ் அதிகாரிகள் பிற்பட்டவர்களா. இதில் மக்கள் தொகையில் ஜாதியின்
விகிதாச்சாரப்படிக் கொடுத்தால் நாட்டில் மக்கள் தொகை கூடலாம், பிரச்சினை குறையாது.
உயர் நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 50 , ஆனால் இங்கு ஜாதிக்களின்
எண்ணிக்கை பல நூறுகளில் இருக்கும் போது ஜாதிவாரியாக எப்படி பிரித்துக் கொடுப்பது. பெரியார் எதையாவது உளறினால் அதையெல்லாம் நடைமுறையில் கொண்டுவர முடியுமா. ஒரு ஜாதிக்கு ஒரு நாள் முதல்வர் என்ற அடிப்படையில் முதல்வர் பதவியை பங்கிடலாம் :). எல்லாப் பதவியையும் அப்படி பங்கிட முடியுமா, உங்களின் முட்டாள்தனத்திற்கும், சாதி வெறிக்கும் அளவில்லை.

பெயரில்லா சொன்னது…

போட்டி போட்டுக் கொண்டு பெருக்கலாம் ஆனால் சோறு யாரு போடுவது. யாரும் 2க்கு மேல் போறதில்லிங்கோ !

வீரமணி, கலைஞரிடம் கேளுங்கள், அதிகம் பிள்ளைகள் பெறும் பிற்பட்ட சாதி குடும்பங்களுக்கு மட்டும் இலவச சோறு போடுவார்கள்.அதையும் ஒரு கூட்டம் ஆதரிக்கும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜிகே அய்யா,

ஆமாங்கய்யா.நீங்களும்,சுகுமாரன் அய்யாவும், ஜாதி வெறி பிடித்து,வசதி இருந்தும் உழைக்காமல் ஓசி அடிக்கத்துடிக்கும் டிபிகல் க்ரீமி லேயர் ஒ பி சி கும்பல் என்பது தெளிவாகத் தெரிகிறது.

பாலா//

பாலா பெயரில் கமெண்ட் போட பாலாவுக்கு மட்டுமே சிறப்பு அனுமதி.
:))

ஒரிஜினல் பாலாவாக இருந்தால் LOG ON பண்ணி போடவும், அனானியாக பாலா பெயரில் வந்தால் வெளியிடப் படமாட்டாது.

இரா.சுகுமாரன் சொன்னது…

//Anonymous said... ஆமாங்கய்யா.நீங்களும்,சுகுமாரன் அய்யாவும், ஜாதி வெறி பிடித்து,வசதி இருந்தும் உழைக்காமல் ஓசி அடிக்கத்துடிக்கும் டிபிகல் க்ரீமி லேயர் ஒ பி சி கும்பல் என்பது தெளிவாகத் தெரிகிறது.//

கும்பல் என்று கொச்சைப்படுத்துவது சரியில்லை. என்னாலும் எழுத இயலும்.

தைரியமாக பெயர் போட்டு எழுத வேண்டியது தானே! ஏன் ஓடி ஒளிகிறீர்கள்?.

சமூக நீதி சமத்துவம் என்றெல்லாம் யாரும் பேசிவிடக்கூடாது அப்படி பேசினால் அவர்கள் சாதி வெறியர்கள் அவாள் மற்றும் இவர்களைப்போன்ற சிலர் எல்லாரும் சமத்துவ வாதிகள்.

இப்படி ஏதேனும் முத்திரைக்குத்தி தனிமைப் படுத்த முயற்சிப்பது நியாயம் பற்றி பேசாமல் திசை திருப்பும் முயற்சி.

இரா.சுகுமாரன் சொன்னது…

Anonymous said...
//பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்பதே மோசடி. கோடி ரூபாய் சம்பாதிப்பவர்கள், கல்லூரி நடத்துபவர்கள், ஐஏஸ் அதிகாரிகள் பிற்பட்டவர்களா. இதில் மக்கள் தொகையில் ஜாதியின்
விகிதாச்சாரப்படிக் கொடுத்தால் நாட்டில் மக்கள் தொகை கூடலாம், பிரச்சினை குறையாது.//

இதுவெல்லாம் மோசடி போல்தான் உங்களுக்குத் தெரியும்,
ஒரு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஒருவன் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்தாலும் மிகப்பெரிய பணக்காரனாக இருந்தாலும் தைரியமாக ஒரு பார்ப்பனர் அல்லது முற்பட்ட சாதி இந்துக்கள் வீட்டில் பெண் கேட்க முடியுமா?.

அம்பேத்கார் மிகப்பெரிய அறிவாளியாக இருந்த போதிலும் அவர் இந்திய அரசியல் சட்டத்தை எழுதும் அளவு திறமை பெற்றிருந்தாலும் அவரை எந்த பார்ப்பான் மதித்தான்? எனவே, முன்னேற்றம் என்பது பொருளாதாரம் என்ற அளவு கோல் மட்டும் வைத்துப் பார்க்க இயலாது. இட ஒதுக்கீடு என்பது பொருளாதாரம் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல அது சமூக ரீதீயான பிரச்சனையும் கூட. பிற்படுத்தப்பட்டவர்கள் சாதிரீதியாகவும், சமூக ரீதியாகவும் பிற்படுத்தப் பட்டிருக்கிறார்கள்

நன்றாகப் பாருங்கள் " பிற்பட்டோர் என அழைக்கப்படுவதில்லை" பிற்படுத்தப்பட்டவர்கள் என்று சொல்கிறார்கள், தாழ்ந்தவர்கள் என்று சொல்வதில்லை, தாழ்த்தப்பட்டவர்கள் என்று தான் சொல்கிறார்கள் அப்படியானால் இவர்களைத் தாழ்த்தியவர்கள் யார்?.

அவர்களின் வாரிசுகள் தான் இந்த இடஒதுக்கிட்டை எதிர்க்கிறார்கள்.

இரா.சுகுமாரன் சொன்னது…

//Anonymous said...

உயர் நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 50 , ஆனால் இங்கு ஜாதிக்களின்
எண்ணிக்கை பல நூறுகளில் இருக்கும் போது ஜாதிவாரியாக எப்படி பிரித்துக் கொடுப்பது. பெரியார் எதையாவது உளறினால் அதையெல்லாம் நடைமுறையில் கொண்டுவர முடியுமா. ஒரு ஜாதிக்கு ஒரு நாள் முதல்வர் என்ற அடிப்படையில் முதல்வர் பதவியை பங்கிடலாம் :). எல்லாப் பதவியையும் அப்படி பங்கிட முடியுமா, உங்களின் முட்டாள்தனத்திற்கும், சாதி வெறிக்கும் அளவில்லை.//

3 சதவீத பாப்பனர்கள் மட்டும் உச்சநீதிமன்றத்தில் மிக அதிகப்படியான இடங்களை பங்கிடும் போது இப்படியெல்லாம் பேசினால் இப்படித்தான் உங்களைப் போன்றவர்களுக்கு கோபம் வருகிறது.

சாதியை உண்டாக்கி அக்கிரகாரத்தில் ஒளிந்து கொண்டவர்கள் தான் இப்போது மற்றவர்களைப் பார்த்து "சாதி வெறியன்" "முட்டாள்" என்று பேசுகின்றனர்.

விவாதங்களை நேரில் வையுங்கள். பின்னால் ஒளிந்து கொண்டு உங்களைப் போன்றவர்களின் உளரல்களுக்கு பதில் அளிக்கக் கூடாது என்று நினைக்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

இவ்வளவு நியாயம் பேசும் நீங்க இடஒதுக்கீட்டில் படித்த நீங்க ஏன் சிங்கப்பூரில் இருக்கீங்க. வாங்க இந்தியாவுக்கு வந்து நாட்டை திருத்த பாருங்க. வந்துட்டாரு இவரு பெரிய நாட்டாமை.

பெயரில்லா சொன்னது…

//இதுவெல்லாம் மோசடி போல்தான் உங்களுக்குத் தெரியும்,
ஒரு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஒருவன் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்தாலும் மிகப்பெரிய பணக்காரனாக இருந்தாலும் தைரியமாக ஒரு பார்ப்பனர் அல்லது முற்பட்ட சாதி இந்துக்கள் வீட்டில் பெண் கேட்க முடியுமா//

உம் மாஜி தலைவர் பொண்ணு கண்ணாலம் கட்டி இருப்பது பார்பானை.
கருணாநிதி குடும்பத்தில் இருக்கும் பார்பண பெண்கள் பல.
பூனை கண்ணை மூடிகிச்சாம் உலகம் இருண்டு போச்சுன்னு சொல்லிச்சாம்.

பெயரில்லா சொன்னது…

அண்ணே, நம்ம பின்னூட்டம் ஒன்னு இன்னும் ரிலீஸ் ஆவல, நேத்திக்கு போட்டது, அதை ரிலீஸ் பண்ணீங்கண்ணா நல்லாருக்கும். வரவே இல்லன்னா சொல்லுங்க, திரும்பி தட்டி அனுப்பறேன்.

பெயரில்லா சொன்னது…

//அப்படியானால் இவர்களைத் தாழ்த்தியவர்கள் யார்?./

வேற யாரு?தங்களை வெட்கமில்லாமல் ஓ பி சி என்று வர்ணித்துக் கொள்ளும் உங்களைப் போன்ற கிருமி லேயர் அதிகார ஆதிக்க சக்திகள் தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Anonymous said...
//அப்படியானால் இவர்களைத் தாழ்த்தியவர்கள் யார்?./

வேற யாரு?தங்களை வெட்கமில்லாமல் ஓ பி சி என்று வர்ணித்துக் கொள்ளும் உங்களைப் போன்ற கிருமி லேயர் அதிகார ஆதிக்க சக்திகள் தான்.
//

அப்போ வெட்கத்தோடு முகத்தை மறைத்துக் கொண்டு பின்னூட்டம் போடுகிறவர்கள் இல்லையே ?

சரிங்க ஐயா, நிங்க உபதேசித்தால் உண்மையாகத்தானுங்க இருக்கும். பதிவிலேயே நிறைய இடத்தில் சொல்லி இருக்கேனுங்க..

சொல்லுங்க சொல்லுங்க கேட்டுக்கொள்கிறோம்!
:)

கோவி.கண்ணன் சொன்னது…

சுகுமாரன் ஐயா,

அனானியாக வந்து கேட்பவர்கள் பொருளில்லாது கேட்பவர்கள். இவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி எனர்ஜியை வீணாக்க வேண்டாம்.

எந்த அளவுக்கு காழ்பு உணர்வுகள் வெளிப்படுகிறது என்று அறிந்து கொள்ளவே அனானி கமெண்ட் அனுமதிக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//மஸ்கிட்டோ மணி said...
அண்ணே, நம்ம பின்னூட்டம் ஒன்னு இன்னும் ரிலீஸ் ஆவல, நேத்திக்கு போட்டது, அதை ரிலீஸ் பண்ணீங்கண்ணா நல்லாருக்கும். வரவே இல்லன்னா சொல்லுங்க, திரும்பி தட்டி அனுப்பறேன்.
//

எல்லாமும் போட்டாச்சு

கோவி.கண்ணன் சொன்னது…

//Anonymous said...
இவ்வளவு நியாயம் பேசும் நீங்க இடஒதுக்கீட்டில் படித்த நீங்க ஏன் சிங்கப்பூரில் இருக்கீங்க. வாங்க இந்தியாவுக்கு வந்து நாட்டை திருத்த பாருங்க. வந்துட்டாரு இவரு பெரிய நாட்டாமை.
//

வாங்க...!

அமெரிக்காவில் இருந்தாலும் அண்டார்டிக்காவில் இருந்தாலும் சாதி பாசத்தால் புத்தி மாறாது இணையபக்கங்களில் பொய்பரப்புகிறார்களே அதுபோலத்தான்.

கூல் டவுன் மேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//மஸ்கிட்டோ மணி said...
எனக்கு தெரிஞ்ச ஒரு யாதவ (சாதி பெயரை வெளியிடுவது உங்கள் இஷ்டம் வேணும்னா xxx போட்டுகோங்க) ஆட்டோ டிரைவர் தன்னோட பொண்ணுக்கு எஸ் சீ சர்டிபிகாடெ வாங்கி அப்பறம் சீட் வாங்கினாருங்க , படிச்சு முடிச்சு இப்போ வேலைக்கும் போயாச்சுங்க அந்த பொண்ணு, இதெல்லாம் சகஜமுங்க நிறைய பேர் நேர்மையா சலுகை கிடைக்க போராடராங்க , சில பேர் குறுக்கு வழில போறாங்க. நான் என்ன பண்ண முடியும்? பொய் சர்டிபிகடெ வாங்கினவனுங்க மேல எல்லம் போலிஸுல புகார் கொடுக்க சொல்றிங்களா? நான் உயிரோட இருக்க வேணாமா?
////

அப்போ எதுக்கு போராடுறாங்க... எஸ்சின்னு ஈசியா சர்டிபிகேட் வாங்கிட்டுப் போக வேண்டயது தானே.. ஓ சர்டிபிகேட்டில் கூட தாழ்த்தப்பட்ட சாதி என்று சொல்வதில் அருவருப்பா ? அல்லது உன்னதமான நேர்மையா ?

ஜெயம் படம் வசனம் நினைவுக்கு வருது.

//எப்படி வருமான சான்றிதழ் லஞ்சம் கொடுத்து வாங்கறது சுலபமோ அதே போல டூப்பு சாதி சான்றிதழ் வாங்கறது கூட சுலபம் தாங்க. மொத்தல இத தானுங்க நான் சொல்ல வந்தது.

மோசடி நடக்கலாம் அப்படீன்னு சொல்லி திட்டத்தையே ஃபனால் ஆக்க கூடாதுங்க, 100 பயனாளிங்க இருந்தா 10 புல்லுறுவிங்க இருக்கதானுங்க செய்வாங்க. //

ஒரு குறிப்பிட்ட சாதி மாத்திரம் அறிவு திறமையால் இந்திய அரசின் வங்கி முழுவதும் ஆக்கிரமித்து இருப்பதாக நினைக்கிறீங்களோ.

ஜெயம் வசனம் தான் !

இரா.சுகுமாரன் சொன்னது…

///Anonymous said...

உம் மாஜி தலைவர் பொண்ணு கண்ணாலம் கட்டி இருப்பது பார்பானை.
கருணாநிதி குடும்பத்தில் இருக்கும் பார்பண பெண்கள் பல.
பூனை கண்ணை மூடிகிச்சாம் உலகம் இருண்டு போச்சுன்னு சொல்லிச்சாம்.///

பார்ப்பனர்கள் இப்படி கயவாளித்தனம் செய்து அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சி இப்போது மட்டுமா நடக்கிறது.

ஆரியம் கவிழ்த்த ஆட்சி பீடங்கள் என்ற நூலைப் படியுங்கள் அந்த நூலில் எந்தெந்த பார்பனர்கள் எவன் எவன் பொண்டாட்டிய, எவன் எவன் தங்கச்சிய மன்னர்கள் கிட்ட அனுப்பி அப்பரமா எப்படி ஆட்சிய கவிழ்த்தாங்கன்னு அப்படின்னு எழுதியிருக்காங்க படிங்க

அப்பரமா ஏன் கருணாநிதி வீட்டில இந்த பாப்பாத்திங்க புகுந்தாங்கன்னு உங்களுக்கு புரியும்.

இரா.சுகுமாரன் சொன்னது…

/////Anonymous said...
//அப்படியானால் இவர்களைத் தாழ்த்தியவர்கள் யார்?./

வேற யாரு?தங்களை வெட்கமில்லாமல் ஓ பி சி என்று வர்ணித்துக் கொள்ளும் உங்களைப் போன்ற கிருமி லேயர் அதிகார ஆதிக்க சக்திகள் தான். /////

வரலாறும் தெரியாம ஒரு மண்ணும் தெரியாம எதாவது உளர வேண்டியது தான்.

பார்ப்பனன், வைசியன், சத்திரியன், சூத்திரன் என்று சாதிகளை பிரித்து அதன் பின் அய்ந்தாம் சாதி என தாழ்த்தப் பட்டவர்களை பிரித்து மேலே உள்ள நான்கு சாதிக்கும் சேவை செய்பவன் என சொன்னது பாரதி சொன்னது போல " தெண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு ஒரு நீதி " என்று தனக்கு மட்டும் ஒரு நீதி வைத்துக் கொண்டவன்.

தருமி சொன்னது…

கோவி.க., சுகுமாரன்
இரண்டு பேரிடமும் இரு வேண்டுகோள்கள்:
1. இது பொதுவில் வைத்த என் பழைய வேண்டுகோள். இப்போது உங்களுக்குத் தனியாக.
2. ஏன் உங்கள் சக்தியை இப்படி விரயம் செய்கிறீர்கள்? ஒதுங்கிப் போங்களேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்